செவ்வாய், 26 மார்ச், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : அகநக நட்பு - ரஞ்சனி நாராயணன்


அகநக நட்பு
ரஞ்சனி நாராயணன்


‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’

பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில் இருந்த உற்சாகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருந்தாலும் அவனை சீண்டும் குரலில் கேட்டேன்:

‘ஏண்டா! என்னைப் பார்க்க வரவில்லையா?’

‘அதில்லை பாட்டி! உன்னைப் பார்ப்பதில், உன் கை சமையலை ருசிப்பதில் எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. இந்த தடவை இவையெல்லாவற்றையும் விட சந்தோஷமான விஷயம் கரண் சென்னையில் இருக்கிறான் என்பது தான். உனக்குக் கரண் தெரியுமில்லையா?’

‘ஓ! நன்றாகத் தெரியும். உன்னோட கூடப் படித்தவன் தானே? இருவரும் எல்கேஜியிலிருந்து தோழர்கள் ஆயிற்றே!’

‘ஆமாம் பாட்டி! பத்தாம் வகுப்பு வரை நானும் அவனும் ஒரே பள்ளிக்கூடம் தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போது நானும் அவனும் வேறு வேறு ஸ்கூலில் சேர்ந்துவிட்டோம். நடுவில் ஒரே ஒரு முறை அவனை ஒரு வினாடி
வினா நிகழ்ச்சியில் பார்த்தேன். பிறகு அவனுடன் தொடர்பு விட்டே போய்விட்டது. இப்போது சமூக வலைத்தளம் மூலம் அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தாலும்,
நேரில் பார்க்கும் சந்தோஷம் வருமா?’

அவனுடைய இந்த வயதில் நட்பு என்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றுதான். நானும் இந்த வயதினை தாண்டி வந்தவள் ஆகையால் எனக்கும் அவனது உற்சாகம் புரிந்தது.  எனக்கும் பள்ளிப்பருவத்தில் நிறைய தோழிகள் உண்டு. ‘இவளைச் சுற்றி எப்பவும் பத்துபேர்! பைத்தியத்தை சுற்றி
பத்துப்பேர் என்பார்களே, அதுபோல..!’ என்று என் அக்கா என் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார் கூறும் அளவிற்கு பள்ளியில் தோழிகள். 

எல்லாம் பள்ளிவரை தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பரைச் சுற்றிக் கொண்டு புரசைவாக்கம் ‘மீனா இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ்’ போனேன் – டைப் ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் கற்றுக் கொள்ள.  அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்ஸி மற்றும் டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் தகுதி இருந்தால் ஸ்டெனோக்ராபர் வேலை எளிதாகக் கிடைத்துவிடும். எனக்கும் கிடைத்தது. பள்ளித் தோழிகள் எல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்தே போனார்கள்.

என்னுடைய பதின்மவயதுத் தோழிகள் என்று இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் இரண்டு பேர்கள்தான். ஜெயா மற்றும் ஜெயந்தி.  ஜெயா உடனான நட்பு மறைந்ததே இல்லை. இருவரும் ஒரே பள்ளி.

என்னுடன் அவளும் மீ.இ.கா –விற்கு கையில் வெள்ளைப் பேப்பருடன் வந்தவள். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. அதனால் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் நட்பு தொடர்ந்தது.
எனக்கும் அவளுக்கும் இடையே இருந்த ஆழமான புரிதலினால் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதில்லை

என்றாலும் கூட மனதிற்குள் ஒரு நெருக்கம் இருந்தது. பல மாதங்கள் பேச மாட்டோம்; சந்தித்துக் கொள்ள மாட்டோம். ஆனாலும் எப்போது தொலைபேசியில் பேசினாலும், ஏதோ நேற்றுத்தான் பேசி முடித்தது
போல இயல்பாக தொடரும் எங்கள் பேச்சு. ஒருவரையொருவர் குற்றம் சொல்லவே மாட்டோம். அவரவர் வீட்டு விசேஷங்களில் இருவரும் நிச்சயம் சந்தித்து கொள்வோம்.

ஜெயந்தி எனது பேருந்துத் தோழி. அவளது அலுவலகத்தைத் தாண்டி என் அலுவலகம். காலையில் நான் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். மாலை வேளைகளில் மட்டும் இருவரும் ஒரே பஸ்ஸில் வருவோம். இருவருக்குமே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம். நான் எந்த பேருந்தில் வருகிறேன் என்று பார்த்துவிட்டு அதில் ஏறுவாள் அவள். அவள் ஏறும் நொடியிலிருந்து பேச ஆரம்பிப்போம். புரசைவாக்கம் தாசப்ரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே அவரவர் இல்லங்களுக்குச் செல்வோம். முதலில் எங்கள் வீடு வரும். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். 

விடுமுறை நாட்களில் இருவரும் கங்காதரேச்வரர் கோவில்,
புரசைவாக்கம் டேங்க் என்று சுற்றிக் கொண்டே பேசுவோம்; பேசிக்கொண்டே சுற்றுவோம். எனது திருமணத்திற்குப் பிறகு நான் புரசைவாக்கத்திலிருந்து அசோக் நகர் போய்விட்டதால் ஜெயந்தியுடனான என் நட்பு புரசைவாக்கத்திலேயே தங்கி விட்டது.

ஆனால் என்ன அதிசயம் எங்கள் நட்பில் என்றால் 33 வருடங்களுக்குப் பிறகு எனது எழுத்தின் மூலம் அவளை மறுபடியும் சந்தித்தேன். எனது வலைத்தளத்திற்கு யதேச்சையாக வந்து படித்துவிட்டு, ‘புரசைவாக்கம் ரஞ்சனி தானே நீ?’ என்று கேட்டு எழுதியிருந்தாள். விட்டுப் போன நட்பை தொலைபேசி மூலம் தொடர்ந்தோம். நேரிலும் சந்தித்தோம்.

நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவள் அப்போது பெங்களூரில் இருந்தாள். அவளுக்கு சென்னை புதிதல்ல என்றாலும் அவள் என் வீடு வரும் வரை எனக்குப் பொறுமையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் சென்றேன்.  அவள் வரும் சதாப்தி ரயில் சென்ட்ரலில் நுழைந்ததுமே என் பரபரப்பு அதிகமானது. அவள் இறங்கும் வரை
காத்திருக்காமல் அவள் சொல்லியிருந்த கம்பார்ட்மெண்டில் நானே ஏறிப் போய்ப் பார்த்தேன். அவள் இல்லை. கடைசி நிமிடத்தில் பிரயாணத்தை ரத்து செய்துவிட்டாளோ, இல்லை வேறு ஏதாவது காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டதோ என்று மனது அலைபாயத் தொடங்கியது.

ரயிலில் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தபோது அவள் அடுத்த கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. ‘ஜெயந்தி!’ என்று கூவியவாறே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். அப்பா! அவளைப் பார்த்துவிட்டேன்!  என்ன ஒரு ஆசுவாசம்!  எங்களது 33 வருடப் பிரிவையும் அந்த ஒரே அணைப்பில் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பது போல இருவரும் அந்த அணைப்பின் இறுக்கத்தில் நெகிழ்ந்து போயிருந்தோம்.

‘என்ன பாட்டி! பழைய நினைவுகளா?’ பேரனின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். குளித்துவிட்டு வெளியில் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தான்.

சிரித்துக் கொண்டே, ‘ஆமாம்டா!’ என்றேன்.

‘கரணை அழைத்துக் கொண்டு மெரீனா பீச் போகவேண்டும்; கன்னிமாரா போக வேண்டும். அவனும் என்னை மாதிரி தான் நிறைய புத்தகங்கள் படிப்பான்......!’
என்னைப்போலவே பேரனும் தனது தோழனின் நினைவிலேயே திளைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.

‘டிபன் சாப்பிட வா முதலில். எப்போது அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாய்?’

‘அவன் அசோக் நகரில் இருக்கிறான். நான் மதிய உணவிற்கு அவனை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்....’ 

‘அசோக் நகரிலா?’

‘ஆமாம் பாட்டி? அசோக் நகர் பில்லர் அருகில் தான் அவனது அலுவலகம் இருக்கிறது……..’

நான் யோசனையுடன், ‘ஓ!..........’ என்றேன்.

‘என்ன பாட்டி! அசோக் நகரில் உன் தோழிகள் யாராவது இருக்கிறார்களா? மறுபடியும் பழைய நினைவுகளுக்குள் போய்விட்டாயா?  சரி, சாயங்காலம் நான் வரும்வரை மலரும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிரு. நான் என் சிநேகிதனைப் பார்த்துவிட்டு வருகிறேன்...’  என் பதிலுக்குக் கூட
காத்திருக்காமல் உற்சாகத்துடன் வெளியேறினான் தேஜஸ்.

திருமணம் ஆகி நான் வந்து சேர்ந்த இடம் அசோக் நகர். அங்கு எதிர்பாராதவிதமாக அம்முடுவை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. என் அக்காவின் மூலம் தான் விமலா மாமி, சதாசிவம் மாமா குடும்பம்
அசோக்நகரில் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. மாமா இல்லை. மாமி மட்டும் அம்முடுவுடன் இருக்கிறாள் என்று என் அக்கா சொன்னாள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சரியாக அக்காவிற்கும் தெரியவில்லை.

கணவருடன் வெளியே போகும்போதெல்லாம் என் கண்கள் என் பால்யகால சிநேகிதியைத் தேடும்.  திருமணத்திற்குப் பிறகு நான் நிறைய மாறிவிட்டேன். அது போலவே அவளும் மாறியிருக்கலாம், இல்லையா? இத்தனை வருடங்களுக்குப் பின் பார்த்தால் அடையாளம் தெரியுமா? நிச்சயம் தெரியும் என்று எனக்குள் ஒரு அசையாத நம்பிக்கை!

விமலா மாமியின் இரண்டாவது பெண் தான் அம்முடு என்கிற கல்யாணி. நாங்களும் அவர்களும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் பக்கத்துப் பக்கத்து போர்ஷனில் பல வருடங்கள் இருந்தோம். அவர்கள்
வீட்டில் நான்கு குழந்தைகள் - மூன்று பெண்கள் ஒரு பிள்ளை; நாங்களும் நால்வர் - இரண்டு பிள்ளைகள்;இரண்டு பெண்கள்.  நாங்கள் எல்லோருமே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி முடிந்து மாலை
நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நாங்கள் எட்டு பேரும் அடித்த லூட்டிகள் இப்போது நினைத்தாலும் இனிப்பவை.

அதுவும் அம்முடுவை யாராலும் மறக்க முடியாது. பிற்காலத்தில் சரிதாவின் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்கு அம்முடு நினைவுதான் வரும். பெரிய கண்கள். குண்டுக் கன்னங்கள்.  படபடவென்று வாய் ஓயாத பேச்சு. சரிதா போலவே சற்று இரட்டைநாடி அம்முடுவும். சுருட்டைத்
தலைமுடி. சுருட்டைத் தலைமுடி என்றால் பொதுவாக குட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அம்முடுவிற்கு முழங்காலுக்குக் கீழ் தொங்கும். அவளுக்குத் தலைவாரிப் பின்னுவது என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த 
பொழுதுபோக்கு. அதுவும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தால் என் அம்மா மணிக்கணக்கில் அவளது கூந்தலை நிதானமாக இழைய இழைய வாரி, வாரி சிக்கெடுத்து மணிமணியாகப் பின்னி விடுவாள்.

அந்தக் கூந்தலுக்காகவே சிலப்பதிகாரம் நாடகத்தில் அவள் கண்ணகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

ஆ! இந்த நாடகம் நாங்கள் போட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. 

வருடாவருடம் கோடை விடுமுறையில் எங்களைக் கட்டி மேய்ப்பது எங்கள் பெற்றோர்களுக்குப் பெரும் சவால். அதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில்
ஒருமுறை சதாசிவம் மாமா வீட்டில் இருந்த சமயம். நாங்கள் போடும் சத்தம் அவரை சற்றுக்கூட ஓய்வு எடுக்கமுடியாமல் செய்துவிட்டது. வந்து ஒரு சத்தம் போட்டார் பாருங்கள். நாங்கள் எல்லோரும் சகல நாடியும் அடங்கி உட்கார்ந்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அவரே எங்களை அழைத்தார். ‘இப்படி நேரத்தை வீணாக்கலாமா? ஏதாவது உருப்படியாகப் பண்ணுங்களேன்’ என்றார். நாங்கள் எல்லோரும் அவரே ஒரு ஐடியா கொடுக்கட்டும் என்று பேசாமல் அவர் முன்னே நின்று கொண்டிருந்தோம். இந்தக் காலம் போல சம்மர் கேம்ப், பாட்டு வகுப்பு, நடன வகுப்பு என்பதெல்லாம் அப்போது அபூர்வம்.  வீட்டிற்குள்ளேயே ரகளை செய்துகொண்டிருப்போம். மாமா சற்று நேர யோசனைக்குப் பிறகு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொன்னார். 

மாமாவே கலைத்துறையைச் சார்ந்தவர் தான். அதுவும் திரைப்படத்துறை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுபவர். அவர் நாடகம் போடுங்களேன் என்று
சொன்னதுதான் தாமதம் ‘ஓ’ என்று சந்தோஷக் கூச்சலிட்டோம்.

என்ன நாடகம் போடலாம் என்று எங்களுக்குள் பலத்த வாக்குவாதம். 

கடைசியில் ஏகமனதாக சிலப்பதிகாரம் போடலாம் என்று முடிவு செய்தோம். இந்த முடிவுக்கு வர மிகப்பெரிய காரணம் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் இந்த நாடகம் இருந்தது தான். புதிதாக நாடகம் எழுதுவது என்பது எங்கள் யாருக்குமே கை வராத கலை! என் அக்காவும், அம்முடுவின் அக்கா லல்லு என்கிற லலிதாவும் அப்போது நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்கும் காட்சி மட்டும் இருந்தது
பாடப்புத்தகத்தில்.

யார் யார் என்ன என்ன பாத்திரத்தில் நடிப்பது என்பதும் பெரிய சண்டையுடன் முடிவு செய்யப்பட்டது.

எனக்கு கண்ணகியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர்.

நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘ச்சே! நீ ரொம்ப சின்னவடி....!’ என்று ஒருமனதாக எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். எனக்கு ஒரே கோவம். என் அண்ணா என்னை சமாதானப்படுத்தினான். ‘நீ பாண்டிய ராணியாக நடி. ராணின்னா கிரீடம் வைச்சுக்கலாம்; கால்ல சிலம்பு போட்டுக்கலாம். அம்மாவோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம். கண்ணகி பாரு தலையை விரிச்சுப் போட்டுண்டு வரணும். நீ அழகா ராணியா நடி. சூப்பரா இருக்கும்’ என்றான். அந்த சமாதானத்தை என்னால் ஏற்கமுடியவில்லை என்றாலும் அம்முடுவிடமிருந்து கண்ணகி பாத்திரத்தை வாங்க முடியாது என்று தெரிந்தது. கிடைத்த வேஷத்தை ஒத்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அன்றிலிருந்து அம்முடுவைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். பேசுவதையும் நிறுத்தினேன். அந்தக் கோபதாபங்களை இப்போது
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. பாண்டிய ராஜாவாக அம்முடுவின் தம்பி குமார்.

எல்லோரும் வசனங்களை நெட்டுரு போடத்துவங்கினோம். புத்தகத்தைப் பார்த்து அவரவர் பகுதிகளை எழுதிக்கொண்டோம். அம்முடு என்னிடத்தில் வந்து ‘உன் கையெழுத்து நன்றாக இருக்குடி. எனக்கு என் வசனங்களை எழுதிக்கொடுடி’ என்று சமாதானக்கொடி காண்பித்தாள். நானும் என் கோபத்தை மறந்து அவளுக்காக இன்னும் அழகாக எழுதிக் கொடுத்தேன்.

என் அம்மா தான் இயக்குனர். எல்லோரும் வசனங்களை நெட்டுரு பண்ண ஒருவாரம் ஆயிற்று. அதிலும் அம்முடுவின் வசனங்கள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அவள் பேசுவதைப் பார்த்த போது அப்பாடி,
நான் தப்பித்தேன் என்று நினைத்துக் கொள்வேன். என் அம்மாவிடம் எல்லோரும் வசனங்களை ஒப்பித்துக் காண்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா வசனங்களும் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. நடிப்பு தான் வரவில்லை. அதுவும் முகத்தில் கோபம் வரவேண்டும்; கையை இப்படி நீட்டிப் பேசவேண்டும். தலையை திருப்பி அவ்வப்போது பார்வையாளர்களைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அம்மா எங்களுக்குப் பயிற்சி
கொடுத்த வண்ணம் இருந்தாள். முகத்தில் பாவம் வந்தால் வசனம் தடைப்பட்டுப் போகும்.  பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து செய்து பழகியதால், வசனங்களை மடமடவென்று சொல்லிக்கொண்டே போவது எல்லோருக்குமே எளிதாக இருந்தது பாவங்களுடன் பேசுவது கடினமாக
இருந்தது.

எங்களில் அம்முடுவுக்குத்தான் கடுமையான ஒத்திகை. வாயில் நுழையாத வசனங்களை முகத்தில் பாவத்துடன் பேசுவதற்கு மறுபடி மறுபடி பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒரு கையில் சிலம்பை ஏந்தியிருப்பது போல கையை வைத்துக்கொண்டு பேசும்படி எங்கள் அம்மா சொன்னாள். கடைசி காட்சியில் சிலம்பை ஓங்கி தரையில் அடிக்க வேண்டும். 

ஒருநாள் அழுது கொண்டே ‘எனக்கு கண்ணகி பாத்திரம் வேண்டாம்......!’ என்று பின்வாங்கினாள். என் அம்மாவும், அவளது அம்மாவும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தைரியமூட்டி மறுபடியும் அவளைத் தயார் செய்தனர். 

வசனங்களைப் பேசிப்பேசி அம்முடுவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. சுக்குக் கஷாயம், அதைத்தவிர டாக்டரிடம் போய் மருந்து என்று வாங்கி வந்து வேளாவேளைக்கு மருந்துகளைக் கொடுத்து அவளைச் சரி செய்தார்கள் அம்மாவும் விமலா மாமியும்.  அவளுக்கு இரண்டு நாட்கள் முழு ஓய்வும் கொடுக்கப்பட்டது.

ஒருவழியாக அந்த நல்ல நாளும் வந்தது. எங்கள் வீட்டுக் கூடம் தான் அரங்கு. சதாசிவம் மாமா தலைமை வகித்தார். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா அழகாக ஒரு மேடையைத் தயாரித்தார். எங்களுக்கு ஒப்பனையும் செய்துவிட்டார். கிரீடம், சிலம்பு, ராஜாவின் உடைவாள் எல்லாம் மாமாவின்
கைத்திறமையால் வெகு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. எந்தவிதத் தடங்கல்களும் இல்லாமல் எல்லோருமே அவரவர் பங்கைச் சரியாகச் செய்தோம். பாண்டிய ராஜா தான் நடுநடுவில் வசனங்களை மறந்து போனார்.
எனக்கும் அந்த வசனங்கள் தெரியுமாதலால் நான் அவ்வப்போது எடுத்துக் கொடுத்தேன். ராஜா சமாளித்தார்.

கண்ணகியாகவே மாறியிருந்தாள் அம்முடு. அபாரமாக நடித்தாள். கடைசி காட்சியில் அம்முடு நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டாள். அனைவரின் கைத்தட்டலும் அவளை நிஜ உலகிற்குக் கொண்டு
வந்தது. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று சொல்லி கீழே விழுந்து உயிரை விட, ராணியும் அழுது கொண்டே உயிரை விட நாடகம் சுபமாக முடிந்தது.

இந்த நாடகத்தினால் இன்னொரு பலனும் கிடைத்தது. அத்தனை நாட்கள் ஒருவருடன் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்த நானும் அம்முடுவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனோம்.

எங்களுக்கிடையே புதுவிதப் புரிதல் ஏற்பட்டிருந்தது.  நாடகத்திற்காக உதவி செய்ததை அதன் பிறகும் தொடர்ந்தோம்.  அடுத்த ஆண்டு என்ன நாடகம் போடலாம் என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தோம்.  ஆனால் நாங்கள் எங்கள் வீட்டை புரசைவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டு வந்துவிடவே, எங்கள் நட்பு திருவல்லிக்கேணியுடன் முடிந்துவிட்டது.

எத்தனை நேரம் இப்படியே பழைய நினைவுகளுடன் உட்கார்ந்திருந்தேனோ, வாசலில் மணி அடிக்கவே எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.  கூரியர் வந்திருந்தது. வாங்கி வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.  மறுபடியும் அம்முடு மனதில் வந்து நின்றாள்.

அசோக்நகரில் அவளை எங்காவது பார்ப்பேன் என்ற என் எண்ணம் பலித்தே விட்டது. ஒருநாள் 11 வது அவென்யூவில் இருக்கும் பழமுதிர்சோலைக்கு கணவருடன் சென்றிருந்தேன். காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எங்கள் எதிரில் இரண்டு பெண்மணிகள் வந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என் வயது இருந்த பெண்ணைப் பார்த்ததும் மனதில் ஒரு மின்னல். அவளும் என்னைப் பார்த்தாள். நான் சட்டென்று, ‘ஏய்! நீ அம்முடு தானே?’ என்று கேட்ட அதே நொடி அவளும், ‘நீ ரஞ்சனி தானே?’ என்றாள்.

என் மனம் முழுக்க மகிழ்ச்சி பொங்க அவள் கைகளைப் பிடித்தேன். ‘எப்படி இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து?  நீ இங்கதான் இருக்கேன்னு என் அக்கா ரமா சொன்னாள். என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு நினைத்தேன். அதேபோல இப்போது பார்த்துவிட்டேன்’.  பேசிக்கொண்டே போன என்னை ஏறஇறங்கப் பார்த்தாள். ‘என்ன நீ இப்படி குண்டாயிட்டே?’ என்றாள் முகத்தை சுளித்தபடியே. ஒரு கணம் மனம் சட்டென்று வாடியது. அம்முடு தன் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்து, ‘சித்தி! இவ ரஞ்சனி. திருவல்லிக்கேணி கானாபாக் லேனில் எங்களுடன் குடியிருந்தாளே கமலம் மாமி, நினைவிருக்கா? அந்த மாமியின் பெண்’.

அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது, அது விமலா மாமியின் தங்கை மாதவி என்று. ‘அட! மாதவி சித்தியா? அம்முடுவைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நீங்களும் அசோக் நகரில் தான் இருக்கிறீர்களா?’ என்றேன். அம்முடு என்னைப் பேசவிடாமல், ‘பாருங்களேன், எப்படிப் பெருத்துப் போயிருக்கிறாள்! சே! என்ன இப்படி ஆயிட்ட?’ என்றாள் மறுபடியும்.

‘அதைவிடு, நீ எப்படி இருக்கிறாய்? அம்மா சௌக்கியமா? அதையெல்லாம் சொல்லு’ என்றேன். அவளது பேச்சில் மனம் புண்பட்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருக்க முயன்றேன்.

கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வந்துவிடாமல் சமாளித்தேன்.

‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ ஏன் இப்படி ஆயிட்ட? என்னால நம்பவே முடியல......அதுவும் இத்தனை குண்டா......!’

பக்கத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் என் கையைப் பிடித்தார். ‘பேசுவதற்கு வேறு விஷயமில்லை என்றால் கிளம்பலாம், வா!’ அப்போதுதான் அவர் என்னுடன் இருந்ததே நினைவில்
வந்தது. பேச்சை மாற்ற அம்முடுவை அவருக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தேன்.

‘இவ.......இவ.......தான் என் சின்ன வயதுத் தோழி அம்முடு. நான் சொல்வேனே திருவல்லிக்கேணியில் நாடகம் எல்லாம் போடுவோம்னு.......’ என்றவளை மேலே பேசவிடாமல் தரதரவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

அம்முடு என்னைக் கூப்பிடுவாள் என்று அந்த நிலையிலும் ஒரு சின்ன ஆசை என் மனதில் தோன்றியதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

வீடு வரும் வரை இருவரும் மௌனமாகவே வந்தோம். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.

பலநாட்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன். மிகுந்த ஆவலுடன், எத்தனை விஷயங்கள் அவளுடன் பேச வேண்டும் என்று இந்த சந்திப்பிற்காகக் காத்திருந்தேன்! அவளுக்கு என்னைப் போன்ற ஆவலாதிகள் இருந்திருக்காதோ?

ஏன் அவள் என் உருவத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்? நான் பெருத்துவிட்டது உண்மைதான்.  ஆனால் நட்பு என்பது இதையெல்லாம் கடந்தது இல்லையோ? ஜெயாவும், ஜெயந்தியும் என் உடல் பருமன்
பற்றி பேசுவார்கள்.. ஆனால் உற்ற தோழிகளாக என் நலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாக அறிவுரை கூறுவார்கள். சென்ற தடவை ஜெயந்தி சென்னை வந்திருந்த போது எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காவிற்குப் போய் ஒருமணி நேரம் நடந்துவிட்டு வந்தோம். ‘தினமும் இதுபோல நடைப்பயிற்சி செய்.  உடம்பிற்கு நல்லது’ என்று சொன்னாளே தவிர என் உருவத்தை பற்றி ஒருநாளும் என் மனம் புண்படப் பேசியதில்லை.

ஒருவரது உருவத்தைக் கேலிசெய்வது தவறு என்று அறியாதவளா அம்முடு? அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும்போது இப்படிப் பேசுவார்களா? எனக்கு நினைக்க நினைக்க இன்றும் கூட மனம் ஆறவில்லை. சிலர் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன் என்று சொல்லுவார்கள். அம்முடுவும்
பட்பட்டென்று பேசுபவள் தான். இருக்கட்டுமே. என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.

பலவருடங்கள் கழித்து சந்திக்கும்போது என் உருவம் தான் அவள் கண்ணுக்குத் தெரிந்ததோ?  எங்களிடையே உண்மையான நட்பு இருப்பதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேனோ?  எங்களிடையே அகநக நட்பு என்றைக்குமே இருக்கவில்லையோ? வெறும் முகநக நட்பு தான் நிலவி
வந்ததோ?

என் அலைபேசி மணி என் நினைவுகளைக் கலைத்தது. என் பேரன் தேஜஸ் தான் கூப்பிடுகிறான்.  அவனக்கும் கரண் பரத்வாஜுக்கும் இடையேயான நட்பு எப்படிப் பட்டதாக இருக்கிறதோ, தெரியவில்லை.

பாவம் மிகவும் சின்னவன். இருவரது நட்பும் அகநக நட்பாகவே இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் அலைபேசியை எடுத்தேன்.

70 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை அண்ணா மற்றும் எல்லோருக்கும்

    ரஞ்சனி அக்கா கதை!!! தலைப்பே சூப்பரா இருக்கிறதே! வாசித்துவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையாக இருக்கிறது கதை.
    மலரும் நினைவில் எவ்வளவு எண்ணங்கள்!

    நினைவில் இருந்த அம்முடு வேறு, கண்முன் கண்ட அம்முடு வேறு.
    இதைத்தான் சொல்வார்களோ! நினைப்புக்கும், இருப்புக்கும் முரண்பாடு என்று.

    //என்னுடன் சுமுகமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, பிறகு இப்படியாகி விட்டாயே என்று கேட்டிருக்கலாம்.//

    ஆமாம் . முதலில் நிறைய பழைய கால நட்பைபற்றி பேசி இருக்கலாம்

    எத்தனை விஷயங்கள் இருக்கிறது பேச , அதை விட்டு . ஏமாற்றம் மனதை கஷ்டபடுத்தி விட்டது.

    பேரனின் நட்பு அகநக நட்பாய் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி. நான் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  4. வாழ்க நலம்....
    அனைவருக்கும் அன்பின் வணக்கம்....

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ரஞ்சனியின் கதையா. ஆஹா அப்படியே புரசவாக்கம் போய்விட்டேன். கூடவே அல்லிக்கேணியுமா.
    என்ன செய்வது ரஞ்சனி சில தோழிகள் இப்படித்தான். நம் மனம் மகிழ் நட்பைப் போற்றூவோம். கதை ம்கிய அழகாக் வந்திருக்கிறது.
    பசங்களுக்கு இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் வராது.
    வாழ்த்துகள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி. பசங்களுக்கு இந்த மாதிரி பிரச்னை வராது. உண்மை. நாம் தான் உணர்ச்சியால் வடிவமைக்கப்பட்டவர்கள் ஆயிற்றே! வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  6. இன்றைய கதை மிகவும் அருமை...

    தானொன்று நினைக்க அதையே நண்பனோ தோழியோ - அதுதான் உண்மையான தெய்வீக நட்பு..

    அதெல்லாம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறதோ!...

    இன்றைய உலகில் நம்பிய ஒருவனே நம்பி வந்தவனை / வந்தவளை தவறான வழி நடத்துதல் கண்கூடு....

    பலருக்கும் மனதில் பழைய நினைவுகள்
    மலரக்கூடும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் என் மலரும் நினைவுகள் தான் செல்வராஜூ. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  7. அருமை ரஞ்சனி. அதிலும் இதை நானும் அனுபவித்துக் கொண்டு இருப்பதால் உங்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் என்னைப் பார்க்கும் உறவினர் உட்பட நான் ஏதோ வாரி வளைத்துச் சாப்பிடுகிறாப்போல் பேசுவாங்க. அக்கம்பக்கம் வீடுகளில் அரிசி ஒரு மூட்டை ஆகுமா எனக் கேட்டுச் சிரிப்பார்கள். அதோடு இல்லாமல் எப்படி இவ்வளவு குண்டா ஆனே? என ஏதோ நான் பிரார்த்தனை செய்து கொண்டு ஆனாப்போல் கேட்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா சோட் தோ!!!!!!! இந்த வார்த்தைகளை எல்லாம். உங்க உருவம் எப்படி இருந்தா என்ன? உங்க மனசு குண்டா இருக்கே அதைப் பாராட்டச் சொல்லுங்க....மனசு ஒல்லியா இருந்தாதான் தப்பு...!!! இப்படிச் சொல்லறவங்க யாரும் உண்மையான அன்பு இருக்கறவங்க கிடையாது...

      இங்க எத்தனை பேர் இருக்கோம் உங்களைக் கொண்டாட எங்களை எல்லாம் நினைச்சுக்கோங்க கீதாக்கா...

      கீதா

      நீக்கு
    2. ஒரே படகில் பயணம் செய்கிறோம், கீதா. என்ன செய்வது? வழக்கமாகப் பார்க்கிறவர்கள் இப்படிக் கேட்டால் ஒதுங்கிப் போய்விடுவேன். பல வருடங்கள் கழித்துப் பார்ப்பவள் திடீரென இப்படிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டேன். வெகு நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை இப்படி ஓர் கதை மூலம் வெளியில் கொட்டிவிட்டது மனம் லேசாகிவிட்டது.

      நீக்கு
  8. அதிலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தங்கள் தலையில் ஏதோ கிரீடம் சூட்டப்பட்டது போன்றதொரு உணர்வு எப்போதும் இருக்கும் போல! அதோடு எங்க வீட்டில் எல்லா வேலைகளும் நானே செய்வேனா? அது வேறே இவங்களுக்கெல்லாம்! இத்தனை வேலை செய்தும் குண்டாகவே இருக்கியே என்பார்கள். சிரிப்பார்கள். நன்றாக உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா குண்டுக்கும் நம் உடல் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லையே....குண்டா இருந்தால் கூட நல்லா சுறுசுறுப்பா வேலை செய்வாங்க உங்களைப் போல...ஆனால் ஒல்லியா இருந்து கொண்டு உடல் நலன் இல்லாம, வேலை செய்யவும் முடியாம அதுக்கு மனசும் இல்லாம இருக்கறவங்களும் உண்டுதானே....

      உருவம் எப்படி இருந்தால் என்ன மனசு ஆரோக்கியமா இருக்கணும் முதல்ல.

      கீதா

      நீக்கு
    2. @கீதாஸ் - எனக்கு ஒல்லியா இருக்கறவங்கள்டதான் கிரேஸ். எனக்கு எப்போதுமே குண்டாக இருப்பது பிடிக்காது (நானும் அப்படி இருப்பதால்). பொதுவா குண்டா இருந்தால் வயதாகும்போது பல விதங்களில் கஷ்டம். நான் எடை குறைப்பிற்கு எடுக்காத முயற்சி இல்லை, 3 லட்சத்திற்குமேல் செலவழித்திருப்பேன். எனக்கு டக் என எதிர்பாராத நேரத்தில் கடவுள் தோன்றி, என்ன வரம் வேண்டும்னு கேட்டால், மனதுல் தோன்றுவது, "எடை குறைந்து ஒல்லியாகணும்" என்பதுதான். ஹாஹா.. நானும் உடம்பு எடை போட்டுள்ளவரைக் கண்டால், என்ன செய்யலாம் என ஆலோசனை சொல்லத் தயங்கமாட்டேன்.

      எடையை வைத்து கேலி பேசுகிறவர்கள் வெறுத்து ஒதுக்கத் தக்கவர்கள். என் அனுபவத்தில், பிறரை ஒன்றிர்க்காக குறை சொல்பவர்களை, கேலி பேசுகிறவர்களை, அந்தப் பிரச்சனையே வந்து அடைவதைக் கண்கூடாக்க் கண்டிருக்கிறேன். (பிறரை குண்டு என கேலி பேசுபவர்கள், தாங்களும் குண்டாகி விடுவதையோ, ஆரோக்யத்தை இழப்பதையோ, இந்தப் பிரிவை வெறுக்கிறேன் என்று சொல்பவர்களின் குழந்தைகள் அந்தப் பிரிவினரையே மணந்து கொள்வது போல பல உதாரணங்கள்)

      நீக்கு
    3. ஒல்லியா இருந்தாலும் பிரச்னை தான்! 2000 ஆம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க உருவமாற்றம் ஏற்படவில்லை. அதன் பின்னரே ஏற்பட்டது! அதுக்கு முன்னால் ரொம்பவே ஒல்லியாகக் காற்றடித்தால் பறந்துடுவேனோ என்னும்படி இருந்திருக்கேன். அப்போவும் வேண்டுமென்று சாப்பிடாமல் உடம்பைப் பட்டினி போட்டு இளைக்க வைச்சிருக்கா என்பார்கள்.ஆக மொத்தம் மனிதர்களுக்கு நாம் எப்படி இருந்தாலும் திருப்தி இல்லை. முன்னால் வேகமாய் நடக்கையில் அதைக் கேலி செய்திருக்காங்க.என்ன அவசரம்! என்ன கொள்ளை! என்பார்கள். இப்போ ரொம்பவே மெதுவாக நடப்பதைப் பார்த்தால் தினம் தினம் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாலோ, அல்லது கடைகளுக்கு நடந்து போனாலோ நடக்கச் சிரமமாக இருக்காது என ஆலோசனை சொல்லுவார்கள். :))))) இது உடல்நலக் குறைவு சம்பந்தப்பட்டது எனில் ஒல்லியா இருந்தாத் தான் உடம்பெல்லாம் வரும். குண்டா இருக்கிறவங்களுக்கு உடம்பு எப்படி வரும்? என்று கேட்பார்கள்/ கேட்டார்கள்/கேட்கின்றார்கள்.:))))))

      நீக்கு
  9. நீண்ட நாட்கள் கழிச்சு உங்கள் கதையைப் படித்ததற்கு சந்தோஷம். மீண்டும் உங்கள் தளத்தில் விரைவில் தொடர் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக ஆண்களின் நட்பில் இத்தகைய பேச்சு, வார்த்தைகள் கிண்டல் என இருக்காது. ஆனாலும் சிலர் உருவத்தைக் கிண்டல் அடித்துப் பேசுவதைப் பார்த்தால் பேரனின் நண்பன் உண்மையான நட்பைப் போற்றுபவனாக இருக்கட்டும் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. எனக்கும் ஆசைதான். தொடர்ந்து முன்பு போல் எழுத வேண்டும். எல்லாருடைய பதிவுகளையும் படக்க வேண்டும் என்று. வீட்டில் நிலைமை சரியில்லை. விவரமாகப் பிறகு சொல்லுகிறேன் கீதா.
      என் பேரன் ஐஐடி. கரண் இப்போது ஸிஏ. நட்பு வலுவாகவே இருக்கிறது. நன்றி கீதா.

      நீக்கு
  10. அருமை அம்மா... எனது நண்பர்கள் பல பேர்கள் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன். உங்கள் பதிவுகளின் இணைப்புகள் மின்னஞ்சலில் வருகின்றன. என்னால்தான் படிக்க முடிவதில்லை. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  11. ரஞ்சனி அக்கா கதை மனதை என்னவோ செய்துவிட்டது! கண்ணில் என்னை அறியாமல் நீர்!! நல்ல நட்பிற்கும் மேலானதோ இவை எல்லாம்? உருவம் ஒரு விஷயமா? மனது தானே முக்கியம்!

    ஆனால் பலரும் புற உருவத்திற்கும் நம் உடைக்கும் நம் அலங்காரத்திற்கும் நம் ஸ்டேட்டஸிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதிற்கும் அன்பிற்கும் கொடுப்பதில்லைதான்..

    அருமையா சொல்லிருக்கீங்க அகநக நட்பு!! முகநக நட்பு வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பேரன் தேஜஸின் நண்பன் நல்ல அகமுக நட்புடன் இருக்க வேண்டும் என்று எங்கள் மனதும் வேண்டுகிறது.

    மலரும் நினைவுகள் அந்தச் சிறிய பிராயத்து நினைவுகள், நாடகம் போட்டது, நட்புகள் என்று எல்லாமே அருமை!

    வாழ்த்துகள், பாராட்டுகள் ரஞ்சனி அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா. பேரனின் நட்பு பற்றி கீதாவிற்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். வருகைக்கும் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  13. கதையை காலையில் படித்தேன். மீண்டும் ஒருமுறை படித்தேன்.

    எனக்கு தோழி சொன்னதில் தவறில்லை என்று தோன்றியது. அவங்க மனக்கண்ணில் ஒல்லி உருவமாகப் பதிந்துபோயிருந்தவள் இவ்வளவு வருடம் கழித்து வித்தியாசமான தோற்றத்துடன் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் 'சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்' என்பதைத்தான் நினைத்தேன். மாற்றமுடியாதவைகளைப் பற்றி (இயற்கையில் அமைந்தவைபற்றி) சொல்லி என்ன பயன்? சிலர் இதுபோல, 'ஏன் இவ்வளவு கறுத்துட்ட' என்று ஏற்கனவே மனதளவில் வருத்தப்படுபவரை இன்னும் துயரத்துக்குள்ளாக்குவார்கள்.

    இது கதையா இல்லை அனுபவமா என்ற சந்தேகம் எழுந்தது. ரஞ்சனி மேடம் அனுபவமா எழுதறது எப்போதும் ரசிப்பிற்குறியதாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, தோழி மற்றதைப் பற்றி பேசாமல், இந்த நான் கேரக்டர் பழயதை நினைவு படுத்தும் வேளையில் கூட அதை மனதில் வாங்காமல், குண்டு என்று அதையே திரும்ப திரும்பச் சொல்லும் போது மனதிற்கு வருத்தம் வரலாமே அதுவும் அந்த கேரக்டர் அவரிடம் நட்பான வார்த்தைகள், பழைய நினைவுகள் என்று பேசுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது...பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது...

      குண்டு என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லையே...சரி ஒல்லியாகவே பாத்திருந்தாலும் கூட தற்போது குண்டாயிட்டான்றதுக்காக முதலில் நல்ல வார்த்தைகள் சொல்லிட்டு அப்புறம் கன்சேர்ன்டா கேட்டிருந்தா தப்பில்லைதானே நெல்லை.

      பேசுவது நம் அன்பைக் காட்டுவது என்பது ஒரு நல்ல கெஸ்ச்சர் இல்லையா?

      நான் எல்லாம் அம்முடு போன்று இப்படிப் பேசுபவர்களிடம் இருந்து எட்டவே நிற்பேன் நெல்லை...ஜஸ்ட் ஹைபை யுடன்...

      அவர் கணவரும் கூட இருக்கும் போது அவருக்கு எத்தனை மனசு கஷ்டப்பட்டிருக்கும்...

      பேசுவது என்பது ஒரு கலை! நிறையபேர் நான் நேர்மை, உண்மை, வெளிப்படையா பேசுவேன் என்று டமால் டுமீல் என்று வார்த்தைகளை ரா வாகப் பேசுவார்கள். ரா ரம்பம் போல் எதிராளியின் மனதைக் கீறும். நம் வெளிப்படைத் தன்மையையும் அழகாக வெளிப்படுத்தலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு
    2. அனுபவமும், கதையும் இணைந்த ஒரு கலவை. கதை என்று எடுத்துக் கொள்ளலாம். நினைவு கூறல் என்றும் கொள்ளலாம்.
      கீதா, என் உறவினர் தன் பெண் பற்றி சொல்லுவார்: அவள் யாரையுமே விடமாட்டாள். பிடித்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவாள்' என்று. இதெல்லாம் பிறரைச் சொல்லும்போது இனிக்கும். அம்மா அப்பாவிற்கே திரும்பும் போது உண்மையான வலி புரியும்.

      நீக்கு
  14. பொதுவா குண்டா இருப்பவங்களுக்கு மனதளவுல வருத்தம் இருந்துகொண்டே இருக்கும் (என்னைப்போல). அப்போது மத்தவங்க, என்ன கொஞ்சம் இளைக்கறார்போலத் தெரியுது என்று சொன்னாலே மகிழ்ச்சியா இருக்கும் (உண்மையிலேயே அப்படி இல்லை என்றாலும்).

    இருந்தாலும் தோழியைச் சந்தித்தது, பால் என்று நினைத்து கசப்பு மருந்து குடித்தாற்போல் மனதில் தங்கிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் தோழியைச் சந்தித்தது, பால் என்று நினைத்து கசப்பு மருந்து குடித்தாற்போல் மனதில் தங்கிவிடும்// இது இது!!!

      // என்ன கொஞ்சம் இளைக்கறார்போலத் தெரியுது என்று சொன்னாலே மகிழ்ச்சியா இருக்கும் (உண்மையிலேயே அப்படி இல்லை என்றாலும்).//

      ஹா ஹாஹ் ஆஹ் ஆ உண்மைதான்!!!!!!

      கீதா

      நீக்கு
    2. /////என்னைப்போல/////
      ஆஆஆஆஆ ஒரு பொயிண்டைப் பொறுக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்:)

      நீக்கு
    3. ஆஆஆ நெல்லைத்தமிழன் இண்டைக்கு ஶ்ரீராமைவிட மெல்லிசா இருக்கிறாரே:)... மோனிங் பஸ் எடுக்கும்போது பார்த்தேன்:)

      நீக்கு
    4. ஹலோவ் நெல்லைத்தமிழன் உங்களுக்கு இன்ஸ்டண்டா 5 கிலோ குறையனும் அது அப்படியே ஸ்கொட்லாந்து பூனைக்கு 10 கிலோவா ஏறணும் ..இதுக்கு ஒரு ஐடியா அது நீங்க அந்த உலகப்புகழ்பெற்ற குழை சாதத்தை செய்யணும்னு சொல்லுங்க அந்த நெனைப்பே உங்களை இளைக்க பண்ணிரும் ஹா அதை கேட்ட ஜலதோஷத்தில் சேசே சந்தோஷத்தில் பூனைக்கு 10 kg இன்க்ரீஸ்ட் :)))))

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் தேர் யு ஆர்!!! அப்படிப் போடுங்க!!!
      ஹையோ ரசித்தேன்...அந்த 10 கிலே ஏறின பூனை பார்க்கணுமே!!! மேஏஏஏஏஏஏஏஏஏஏ சரி சரி பூஸார் என்னை துரத்தறதுக்குள்ள ஓடிப் போறேன்...

      கீதா

      நீக்கு
    6. https://img.memecdn.com/cat-blimp_fb_658264.jpg

      இது ஜஸ்ட் நௌ :) நான் ட்ரொன் கேமெரா அனுப்பி படத்தை உங்களுக்கு காட்டறேன்

      நீக்கு
    7. //ரு பொயிண்டைப் பொறுக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்:)// - இப்படி ஒவ்வொரு பாயிண்டா கலெக்ட் செய்து ஆர்வத்தில் நீங்களே ஒரு உருவத்தை வரைஞ்சுபார்த்தீங்கன்னா, அனேகமா அது இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா மாதிரி இருக்கப்போகுது. பார்த்து... எல்லாப் பாயிண்டுகளையும் நல்லா நோட் பண்ணிக்கோங்க அதிரா.

      நீக்கு
    8. மற்ற பதில்களை நாளை எழுதுகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    9. நெல்லைத் தமிழன் குண்டு ஒல்லி பிரச்சினையை விட, நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும்போது அவளது முக சுருக்கமும், வார்த்தைகளில் இருந்த வெறுப்புமே என்னை ரொம்பவும் பாதித்தது.

      நீக்கு
    10. கதையைப் படித்ததற்கும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. நெல்லை தமிழனுக்கு தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது. ஒல்லியாக இருந்த, அப்படியே மனதில் பதிந்து விட்ட தோழி குண்டாகி விட்டதை அம்முடுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும். மேலும் அப்போது குண்டாக இருந்த அம்முடுவுக்கு ஒல்லியாக இருந்த ரஞ்சனியை அந்த காரணத்திற்காகவே மிகவும் பிடித்திருந்ததோ என்னவோ? மற்றபடி கதை ஓட்டம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் பட்டதை படபடவென்று பேசிவிடுபவள் அம்முடு. நீங்கள்தான் இதையும் எழுதி இருக்கிறீர்கள். சின்னவயதில் பார்த்த அந்த ஒல்லியான உருவத்தை மனதில் தேக்கி இருந்திருப்பாள். பேசவும் தெரிந்திருக்க வேண்டும். அம்முடுவிற்கு பேசத் தெரிந்த லக்ஷணம் இவ்வளவுதான். வேறு எதையுமே யோசிக்கத் தெரியவிடாமல் பேசினதையே பேசி இருக்கிறாள். வீட்டுக்குப் போனபிறகு அவளுக்கும் உறைத்திருக்கும்.அசட்டு அம்முடு. என்னை அவளுக்குத் தெரியாது. இல்லாவிட்டால் நீங்கள் எழுதினது ஸரிமாமி. நான் அவளைப்பார்த்துப் பேசுகிறேன் என்று பதில் போட்டு விடுவாள். கதைபடித்ததும் அனுபவம் பேசுகிறது என்று நினைத்தேன். போனமாதம் வரை எனக்கு என்னுடன் படித்த ஒரு ஸினேகிதியின் தொடர்பு இருந்தது. போனில் அவ்வளவு பேசுவோம். படித்து ரஸிக்கும்படியான பதிவு.வாழ்த்துகள். அன்புடன்

      நீக்கு
    2. பானுமதி, நீங்கள் சொல்வது போல எனக்கும் எனது பழைய தோழிகள் சிலரைப் பார்க்கும்போது தோன்றியது உண்டு. எத்தனை அழகாக இருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்று நினைத்தது உண்டு ஆனால் அவர்கள் மனம் புண்படும்படி நான் பேசியது இல்லை.

      காமாட்சிமா சொல்வதுபோல மனதில் பட்டதைப் பேசும் அம்முடுவிற்கு இத்தனை வருடங்கள் கழித்து, அதுவும் நான் என் கணவருடன் இருக்கும்போது இப்படிப் பேசலாமா என்று கூட யோசிக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம். ஒரு நட்பை இழந்து விட்டோமே என்று பலநாட்கள் வருத்தப் பட்டிருக்கிறேன். விடுங்கள். மனதில் இருப்பதை கொட்டியாகிவிட்டது. இனி மன பாரம் இல்லை.
      பானுமதிக்கும், காமாட்சிமாவிற்கும் நன்றி.

      நீக்கு
  16. பலருக்கும் பழைய நட்புகளை நினைவு படுத்தி விட்டது அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  17. அழகிய உரையாடல்கள், நிஜத்தில் நடக்கும் பல நிகழ்வுகளைக் கோர்த்து, பழைய ஞாபகங்களை உருவாக்கியிருக்கும் கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பெயரில் பின்னூட்டம் போடுவீர்களா, அதிரா? வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  18. கதை மிக அருமை அம்மா. மலரும் நினைவுகளை கிளறிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சொக்கன் சுப்பிரமணியன்.

      நீக்கு
  19. ரஞ்சனி மாடெம் எழுதிய கதை சொந்த அனுபவம் போல் இருக்கிறது. பேரன்
    தேஜஸ் மேடத்துடன் பின்குஸ் விளையாடிய பையன் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சொந்த அனுபவம் + பேரனின் சென்னை வருகை என்னும் கற்பனை சேர்ந்தது இந்தக் கதை. உங்களுடைய இரண்டு யூகங்களும் சரியே.
      வருகைக்கும், சுவாரஸ்யமான யூகங்களுக்கும் நன்றி.

      நீக்கு
  20. சில நினைவுகள் கதையாகி விட்டதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நினைவுகள் + கொஞ்சம் கற்பனை இவையிரண்டும் சேர்ந்த கலவை இந்தக் கதை. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  21. காமாட்சியம்மா மற்றும் நெல்லைத்தமிழனின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.
    சிலருக்கு எப்படி பேசுவது என்பதே தெரியவே தெரியாது .அம்முடுவும் அப்படிப்பட்ட கேரக்டர் தான் .
    கொஞ்சம் இலைச்சதும் //என்ன இப்படி காய்ந்து போயிருக்கிறான்னு சொன்னவங்களுமுண்டு ..பொதுவா மனசால் பூரண திருப்தியா சந்தோஷமா யிருக்கவங்க பூரிப்பா தான் இருப்பாங்க .ஹெல்த்துக்கு பிரச்சினை ஏதும் இல்லாதவரை உடல் அளவு பற்றி கவலைப்படவே வேண்டியதில்லை. ஆனா அம்முடு மாதிரி நிறையபேர் இருக்கத்தான் செய்றாங்க ..16 இல் இருந் மாதிரியே 40/50 இல் இருக்க முடியாது .என்னை பொறுத்தவரை நல்ல சாப்பிட்டு சந்தோஷமா இருக்கணும் அவ்ளோதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை வயதானாலும் பேசத் தெரியாத மனிதர்கள் இருக்கிறார்கள், ஏஞ்சல். என் அண்ணா சொல்லுவார்: நமக்கெல்லாம் மனசும் விசாலம்; உடம்பும் விசாலம் என்று. அப்படி நினைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது தான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  22. நல்ல கதை. பாராட்டுகள் ரஞ்சனிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  23. இன்னொரு விஷயம் சொல்லணும் .சில ஆண்டுகள் முன்னே ஊருக்கு போனப்போ ஆலயத்தில் என் கூட 6-10 வரை படித்த ஒரு தோழியை பார்த்தேன் .கிட்டப்போய் எப்படி இருக்கிறாய்னு நலம் விசாரிக்க அவளுக்கு சொல்லொணா சந்தோஷமும் ஆச்சர்யமும் .எப்படிப்பா என்னை கண்டுபுடிச்ச நான் எவ்ளோ மாறியிருக்கேன் எங்க ரிலேட்டிவ்ஸ்க்கு அடையாளம் தெரியாது இவ்ளோ வருஷம் கழிச்சி எப்பிடி கண்டுபுடிச்சேன்னு மீண்டும் மீண்டும் கேட்டா .மேலும் //நான் குண்டாயிட்டேனா அதுவா இதுவான்னு ஒரே கேள்வி :)
    .எனக்கு 8 ஆம் வகுப்பில் பார்த்த அந்த துரு துறு முகம் மட்டுமே தெரிஞ்சது அவ குண்டா இருந்தது ஒண்ணுமே தெரியலை .

    பதிலளிநீக்கு
  24. கதை மிக மிக அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஒரு சிலர் இப்படித்தான். தம் மனதில் தன் நட்பைக் குறித்த பிம்பத்திலிருந்து வெளியே வரமுடியாமல், ஒரு பிரமையில் போய் அதிலிருந்து சட்டென்று மீள முடியாமல் பேசுவது உண்டு. அந்தச் சமயத்தில் தாம் இப்படிப் பேசுகிறோமே என்றும் கூடத் தோன்றாதுதான். இருந்தாலும் வெகுகாலம் கழித்துப் பார்க்கும் நட்பிடம் ஆசையாகச் ஓரிரு வார்த்தைகளேனும் பேசியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

    அழகான பழைய நினைவுகளுடன் கோர்த்துச் சொல்லப்பட்டக் கதை.

    முடிவு மனதிய நெகிழச் செய்தது. சகோதரிக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர எனக்கு நீண்ட நாட்கள் ஆயிற்று. வருகைக்கும், பாராட்டுக்கும், வாஹ்த்துக்களுக்கும் நன்றி துளசிதரன்.

      நீக்கு
  25. நேற்று எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள், துளசிதரன்.

      இரண்டு நாட்கள் கழித்து எனது பதிலை எழுதியிருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  26. இந்தக் கதை தொடர்பாக ஒரு இனிப்பான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கதையை sirukathaigal.com என்ற தளத்தில் போட்டிருந்தேன். ஒருவாரத்திற்குப் பிறகு சிறுகதைகள் தளத்திலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சலை forward செய்திருந்தார்கள். அதன் சாராம்சம் இதுதான்: எம். ஏ ஆங்கில இலக்கியம் படிக்கும் பெண் ஒருவர் இந்தக் கதையைத் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகவும் அதற்கு கதாசிரியரைப் பற்றிய குறிப்பு வேண்டுமென்றும் கேட்டிருந்தார்.

    மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்தக் கதையைப் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் இந்தச் செய்தியை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!