ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மலைப்பாதையின் அழைப்பு


எந்த இடம்னு மொபைல்ல லொகேஷனைப் பார்த்தால் தெரியும்...



சரி...    பார்த்துட்டு சீக்கிரம் எனக்கும் சொல்லு...


அறிவிப்பை கவனிக்கவும்...



க்ளோஸப்ப்ல அந்தப் பொண்ணை போட்டோ புடிக்கலாம்னா வெளில பார்க்கறாங்களே...



உண்பதற்குமுன் கண்களுக்கு விருந்து 


இன்டோர் ஷூட்டிங்!


வெளிப்புறப் படப்பிடிப்பு!







குப்பைகளுக்கு பாதுகாப்பு!









மலைப்பாதையின் அழைப்பு 


கண்ணில்படும் கட்டிடங்கள்...


நம் ஊரில் மட்டும் இவ்வளவு காலி இடம் இருந்தால்...












































37 கருத்துகள்:

  1. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. கண்ணுக்கு இனிய காட்சிகள்...

    அதுசரி... பசுமையைக் காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றுத் தள்ளி இருந்ததே....!!!

      நீக்கு
    2. ஓ...

      இருந்தால் சரி...

      நான் கைப்பேசி வழியாக வருவதால்
      சரியாகத் தெரியவில்லை....

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம். இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இந்த வார ஞாயறு படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதற்கு பொருத்தமாக வாசகங்களும் எடுப்பாக உள்ளன.

    உண்பதற்கு முன்பு உங்கள் கேமரா கண்கள் கண்ட விருந்தும், வெளிப்புற படப்பிடிப்பும் எங்கள் கண்களுக்கும் விருந்தாகவே இருந்தது.

    கண்ணில் பட்ட கட்டிடங்கள் காலி இடங்களைப் பார்த்து பொறாமை கொள்ளுமோ? இல்லை, மாற்றிச் சொன்னாலும் இதற்குப் பொருத்தமாகவும் இருக்குமோ? அந்த இரண்டு (கட்டிடங்கள், காலியிடம்) மனங்களின் உணர்வுகளும் புரிந்தால்தான் அதை முழுதாக நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

    வெயிலினால் பளபளக்கும் மரங்களும், மலையடிவாரத்தில் சொகுசாக அமைந்திருக்கும் வீடும் மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சு? பதில்கள் விரிவாக இல்லாமல் மிகச் சுருக்கமாக தருகிறீர்களே! உடல்/மன நலம் ஏதும் பிரச்சனையா? அனைத்தும் அனைவருக்கும் சுமுகமாக நலமுடன் அமைய பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. உடல்நிலை இன்னமும் சரியாகவில்லை. கணினியை ரொம்ப நேரம் பார்க்க முடியலை. இன்னிக்கு நம்ம ரங்க்ஸ் கூடக் கேட்டார். கணினியை எடுக்காமல் சும்மா உட்கார்ந்திருக்கியேனு! :( சும்ம்ம்ம்ம்ம்ம்மாக் கொஞ்சம் கொஞ்சம் வந்து பார்த்துட்டுப் போறேன். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடம்பைப்பார்த்துக்கோங்க....    ரெஸ்ட் எடுங்க...

      நீக்கு
    2. அட்டா... கீசா மேடம்.. விரைவில் உடல்நிலை சரியாகட்டும். ப்ரார்த்திக்கிறேன். டிசம்பர் குளிர் என்பதாலா? Take care

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      உடல் நலமில்லையா? கவனித்துக் கொள்ளவும். தக்க ஓய்வு எடுத்துக் கொள்ளவும். பூரண குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அக்கா....

      நீக்கு
    5. அதீதக் குளிரில் expose - ஆகிவிடாமல், quilt -க்குள் பதுங்கிக்கிடக்கவும் !

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் அழகு. இன்னமும் இங்கே விட்டு நகரலை போல! ஊரும் சுற்றுப் புறமும் சுத்தம், சுத்தம், சுத்தம்! நம்ம ஊரில் இந்த மாதிரிக்குப்பை மேடு எப்படி இருக்கும்னு சொல்ல வேண்டியது இல்லை.

    பதிலளிநீக்கு
  8. மலைப்பாதையின் பசுமை அழைக்கிறது நம்மை. அழகான சுற்றுப்புறங்களில் அழகான வீடுகள்.

    பதிலளிநீக்கு
  9. இந்த மாதிரி மாடியில் அமர்ந்து சுற்றுப்புறத்தைப் பார்த்து ரசித்த வண்ணம் சாப்பிடும் வாய்ப்பு நேபாளத்திற்குச் சென்றபோது கிடைத்தது. ஆனால் அனுபவித்துச் சாப்பிட முடியாமல் குளிரோ குளிர்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவித்துச் சாப்பிட சூடான மிகாய் பஜ்ஜிகள், சுடச் சுட டீ என்று சாப்பிட உட்காரணும். நீங்க நம்ம ஊர் நினைப்பில் நேபாளத்தில் தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய் என்று உட்கார்ந்தால் என்னத்தை அனுபவிப்பது?

      நீக்கு
  10. படங்கள் அத்தனையும் அருமை. இதற்கு வார்த்தைகளே தேவையில்லை என்று நினைக்கிறேன். Outside food not allowed என்ற அறிவிப்பில் ஏதாவது பிழை இருக்கிறதா என்ன? எதற்காக அதை கவனியுங்கள் என்கிறீர்கள்? புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒன்றுமில்லை ஜோஸப் ஸார்.  சும்மா...   அவ்வளவுதான்!  நன்றி ஸார்.

      நீக்கு
  11. ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டால் 'எங்கள் பிளாக்'கும் விடுமுறை தினத்தை அனுபவிக்கிற மாதிரி ஹாயாகத் தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  12. படஙள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    சாப்பிடும் முன் கண்களுக்கு விருந்து அருமை.

    பதிலளிநீக்கு
  13. உணவு மற்றும் சீதோஷ்ண பிரச்சனைகளேதும் இருக்கவில்லையே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!