செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை -  ரயில் பயணங்களில் - துரை செல்வராஜூ 



ரயில் பயணங்களில்..

துரை செல்வராஜூ 

===================

ஆவணி மாதத்துக் காற்று குளுகுளு என்றிருந்தது...

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஓடிய கரிப்புகை இஞ்ஜினின் -

கரிப் புகை இஞ்ஜினா!...

ஆமாம்...


அந்த காலத்தில் - சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கை கொழும்பு வரைக்கும் சென்ற போட் மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது கதை...

கரிப்புகை இஞ்ஜினின் பேரிரைச்சல் கடைசிப் பெட்டி வரைக்கும் கேட்டது...

ரயில் சிதம்பரத்தைக் கடந்தபோது விழித்துக் கொண்டவர்கள் அடுத்து
மாயவரத்தில் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள்...

அதற்குள் -


இன்னும் அரைத் தூக்கத்தில் இருப்பவர்கள் விழித்துக் கொள்ளட்டும் என்பது போல கொள்ளிடத்து இரும்புப் பாலத்தின் மீது தடும்.. தடும்... கடக்.. கடக்... தடும்... தடும்... என்று பெருஞ்சத்தத்துடன் வேகமாகப் பாய்ந்தது அந்தப் புகை இரதம்...

எத்தனை எத்தனையோ மனிதர்கள்...  எத்தனை எத்தனையோ நினைவுகள்.. கனவுகள்..  அவற்றையெல்லாம் சுமந்து கொண்டு ரயில் விரைந்து கொண்டிருக்க -

மஞ்சள் நிற வெளிச்சம் பரவிக் கிடந்த நடைபாதையின் ஓரத்தில் உறங்கியும் உறங்காமலும் - இரு நெஞ்சங்கள்...

இரு நெஞ்சங்கள்.. அதுவும் இள நெஞ்சங்கள்...

ஒன்று அவனுடையது... மற்றொன்று அவளுடையது...

நடைபாதையின் ஓரத்தில் என்றாலும் - அவர்களைக் கடந்து தான் -
பெட்டியின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகள் கழிவறைக்குச் செல்ல வேண்டும்...

அவனுக்கும் அவளுக்கும் சொந்தமாக பழைய தகரப் பெட்டி ஒன்றும் பிரிட்டானியா பிஸ்கட் டின் ஒன்றும்...

தகர டின்னின் மீது அவன் அமர்ந்திருக்க டிரங்க் பெட்டியின் மீது அவள் - அவனுடைய முழங்கையில் சாய்ந்தவாறு...

உனக்கு நான்... எனக்கு நீ!... - என்று அவர்களது பயணம்...

தன்மீது படிந்திருந்த அவளை நிமிர்த்தி தனது வலது கையை விடுவித்துக் கொண்டு அவளைத் தன் நெஞ்சில் வசதியாகச் சாய்த்துக் கொண்டான்...

ஈர வாடையுடன் காற்று சிலுசிலுத்தது...

எழுந்து சென்று கதவின் சன்னலைக் கீழிறக்கி விடலாம்...  ஆனால் இவளது உறக்கம் கலைந்து விடுமே.. என்பதாக எண்ணம்...

கால்கள் வலித்தன.. நீட்டிக் கொண்டான்...  அவளுக்குக் குளிராதபடிக்கு இரு கைகளாலும் முழுமையாக அவளை மூடிக் கொண்டான்...

தடும்.. தடும்... கடக்.. கடக்...  - என்ற பெருஞ்சத்தம் ஓய்ந்து விட்டது...
கொள்ளிடத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது ரயில்...

அப்போது தான் அந்தப் பெரியவர் உட்பக்கத்திலிருந்து எழுந்து வந்தார்...

'' ஏய்!... நடக்கிற பாதையில என்ன பண்றீங்க?... '' - சத்தம் போட்டார்..

'' நீங்க.. போங்க ஐயா!.. '' - பணிவுடன் கால்களை மடக்கிக் கொண்டான்...

'' கழிசடைகள்!… '' - என்றவாறு கழிவறைக்குள் புகுந்தார் பெரியவர்...

சற்று நேரத்தில் வெளியே வந்த அவர் '' கலிகாலம்!... '' - என்று வன்மத்துடன் சொல்லியவாறே தன் இருக்கைக்குத் திரும்பியபோது

எதிர் பலகையில் படுத்திருந்த அந்தப் பெண் எழுந்து அமர்ந்திருக்கக் கண்டார்...

முப்பத்தைந்து வயது இருக்கலாம்... கறுத்த தேகம்...  அகலமான நெற்றியில் அரக்கு நிறத்தில் குங்குமம்..

மூக்குத்தி, காதுகளில் பாம்படங்கள்... கழுத்தில் அட்டிகை,
ரெட்டை வடச் சங்கிலி.. கைகளில் ஒற்றை ஒற்றையாய் வளையல்கள்...

'' நீங்க அந்தப் பக்கம் போறது... ந்னா கொஞ்சம் பார்த்துப் போங்க!..   தறுதலைங்க... நெலமை தெரியாம கிடக்குதுங்க!... ''  - என்றார்...

'' ரெண்டு பெரும் எங்க வீட்டுப் புள்ளைங்க தாங்க!… ''  - என்றாள் அந்தப் பெண்..

'' என்னது!... உங்க வீட்டுப் பிள்ளைகளா?... ''

திடுக்கிட்ட அவர் -  எதிர் வசவு விடுவார்களோ?... என்று யோசித்தார்..

'' சின்னஞ்சிறுசுங்க... ஏதாவது பேசிக்கிட்டு வரட்டும்...ன்னு நாந்தான் அங்கே உட்காரச் சொன்னேன்!... ''

அவர் யோசித்த மாதிரி வசவுகள் ஏதும் வராததால் மேற்கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார்...

'' நீங்க எக்மோர்.. ல இருந்து வர்றீங்க...  நான் மாம்பலத்துல ஏறினேன்...
அப்போ இவங்க இருந்ததாத் தெரியலையே!... ''

'' அவங்க இங்கே தான் இருந்தாங்க... நீங்க தான் கவனிக்கலை!... ''

'' அப்படியா!... '' - பெரியவர் ஏகத்துக்கும் குழம்பிப் போனார்...

'' அந்தப் பையன் எங்க அக்கா மகன்... இந்தப் பொண்ணு சின்ன அண்ணன் மக..  பெரம்பூர்...ல அவங்க எல்லாம் குடித்தனமாகி பத்து வருசம் ஆச்சு…''

'' ஓ!.. ''

'' ஒரே குடித்தனமா இருந்து கடலை உருண்டை, கை முறுக்கு எல்லாம் செஞ்சு கடைக்குக் கடை போட்டுக்கிட்டு இருக்காங்க… ''

'' எங்க ஐயா... அதாவது தாத்தாவுக்கு திடீர்..ன்னு மேலுக்கு முடியாம போச்சு… ''  வீட்டுல எல்லாருமா கூடிப்பேசி பேரன் பேத்திய மாலையும் கழுத்துமா ஐயா பார்த்துடட்டும்..ன்னு சட்டு புட்டு..ன்னு கலியாணத்தை நடத்தி வைச்சோம்…
''

'' ரெண்டு மாசம் கழிச்சு ஐயா நல்லபடியாப் போய்ச் சேர்ந்தாங்க...   அத்தோட ஆடியும் வந்துடுச்சு… ''

'' புள்ளையை அண்ணன் வீட்டுல உட்டுட்டு பையனை மட்டும் தஞ்சாவூருக்கு அழைச்சுக்கிட்டு வந்துட்டேன் நான்…  இப்போ திரும்பப் போய் ஆடிசீர் வைச்சிட்டு அழைச்சுக்கிட்டு வர்றேன்..   புள்ளைங்களைக் குடித்தனம் வைக்கணுமில்லே!..''

மென்னையாகப் புன்னகைத்தவள் பேச்சோடு பேச்சாக -

'' புள்ளைய அழைச்சுக்கிட்டு இங்கே வந்து இருந்துக்க ஐயா!.. '' -  என்றாள்...

அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு வந்து நீண்டு கிடந்த பலகையில் அமர்ந்து கொண்டனர்...

'' தஞ்சாவூரா?.. மெட்ராஸ்..ன்னு சொன்னீங்க!.. '' - பெரியவர் குடைந்து எடுத்தார்...

'' என்னையக் கட்டிக் கொடுத்தது தஞ்சாவூர்..ல!... ''

'' ஓ!... உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?... ''

'' முத்து கடலை மிட்டாய், தனுஷ்கோடி சர்பத்...ன்னு மாயவரத்துக்கெல்லாம் வருதே!… ''

ஆமா!...

'' அது எங்களோடது தான்... எம்பேரு முத்துப்பேச்சி...  எங்க வீட்டுக்காரர் பேரு தனுஷ்கோடி… ''

'' மெட்ராஸ்... லயும் கடலை மிட்டாய்... தஞ்சாவூர்.. லயும் கடலை மிட்டாய்...  அதான் பரம்பரைத் தொழிலா?... ''

'' ஆமாங்க... எங்க ஐயா... பெரிய ஐயா இவுங்கள்ளாம் அந்தக் காலத்துல
பதநி, பனஞ்சக்கரை, கருப்பட்டி..ன்னு முன்னெடுத்து ஏவாரம் செஞ்சவங்க!...  நாங்க அடுத்த தலைமுறை... அதையே கொஞ்சம் மாத்தி செய்றோம்!... ''

'' அப்போ உங்களுக்குப் பூர்வீகம்?... ''

'' திருநவேலி!.. ''

'' திருநெல்வேலி...ன்னா குலதெய்வம் எல்லாம் அந்தப் பக்கம் தானே!... ''

'' ஆமாமா!... திருச்செந்தூருக்கு மூணு பக்கமும் எங்க சாமிக... தான்!..
சுயம்புலிங்கம், கருக்குவேல் ஐயனார், பத்ரகாளி, மாடசாமி, பேச்சியம்மா.. ன்னு!... ''

'' அது என்ன கருக்கு வேல்?.. ''

'' பனை மட்டையோட ரெண்டு பக்கமும் சொர சொர..ன்னு ரம்பம் மாதிரி
இருக்கும்... கையில வாட்டமாப் புடிச்சிக்கிட்டு இப்படியும் அப்படியுமா
வீசுனா எதிராளி மேலெல்லாம் ரணமாப் போவும்!... ''

'' அந்தக் காலத்துல பனை மட்டையையும் ஒரு ஆயுதமா வச்சிக்கிட்டு எதிராளிகளை அடிச்சி விரட்டியிருக்காங்க… ''

'' அதைத் தான் ஐயனாரு கையில கொடுத்து அதுக்கு மரியாதை...
கார்த்திகை கடைசி வாரம் அங்கே பெரிய திருவிழா… கடையெல்லாம் இழுத்து மூடிட்டு மூணு நாள் கோயில் வாசல்..ல தான் கிடப்போம்!... ''

'' வருமானம் வர்றதை விட்டுட்டா!?… '' - பெரியவருக்கு ஆச்சர்யம்...

'' வருமானம்... அதெல்லாம் சாமிகள் கொடுத்த வெகுமானம் தானே!..
கோயில் வாசல்... ல கிடந்து நன்றி பாராட்ட வேண்டாமா?..
கோயில் திருவிழாவை எல்லா தலைக்கட்டும் சேர்ந்து செய்வோம்… ''

'' கோயிலுக்குச் செய்யிறது செலவே இல்லீங்க...  எங்க சாமிகளுக்கு நாங்க வைக்கிற வரவு...  நோய் நொடி இல்லாம வம்பு தும்பு வாராம
எல்லாம் விருத்தியாம்சமா இருக்கணும்..ன்னு வேண்டிக்குவோம்!... ''

'' நாங்க வருசா வருசம் அன்னதானம் செஞ்சாலும் அடுத்த தலைக்கட்டுக்காரவுக செய்யிற அன்னதானத்தை வரிசையில நின்னு வாங்கிச் சாப்புடுவோம்!... ''

வேகமாக ஓடிக் கொண்டிருந்த ரயிலின் வேகம் எதற்காகவோ குறைந்தது...

அடுத்த சில நிமிடங்களில் ரயில் மீண்டும் வேகம் எடுக்க - பெரியவரின் விசாரணையும் தொடர்ந்தது...

'' அன்னதானம் வாங்கிச் சாப்புடுறதுல என்ன பெருமை?... ''

'' ஏழை பாழைங்களோட நின்னு அன்னதானம் வாங்குறப்ப அகங்காரம் அழிஞ்சு போகுது... ல்ல!... ''

'' இவ்வளவு சொல்றீங்க.. செய்றீங்க!..  ஓரளவுக்கு வசதியான கை தானே நீங்க!.. ''

'' ஆமா!... ''

'' நீங்க அட்டிகை, சங்கிலி..ன்னு போட்டு இருக்குறப்போ புதுப் பொண்ணு கழுத்துல மஞ்சக் கயிறு மட்டும் கிடக்கே!... ''

மெல்லச் சிரித்த முத்துப்பேச்சி தொடர்ந்தாள்...

'' பனை ஓலையில அட்சரம் எழுதி மஞ்ச குங்குமம் வச்சி சாமி கும்பிட்டு
அதை சுருளாக்கி மஞ்சக் கயிறுல முடிஞ்சு கட்டுறது எங்க வழக்கம்… ''

'' பனை மரத்துக்குத் தாலம்..ன்னு ஒரு பேரு இருக்கு..  அந்தப் பனை ஓலையில செஞ்சது..னால தான் தாலி..ன்னு ஆச்சு அப்படி..ன்னு எங்க ஐயா சொல்லக் கேட்டுருக்கேன்… ''

'' முகூர்த்தத்து..ல மஞ்சத் தாலி கட்டிட்டு மூணாம் நாளு தங்கக் கொடிக்கு மாற்றிடுவோம்!... ''

'' ஆனா.. ஐயா காலமாகி மூனு மாசங்கூட ஆகலை..  அதனால இன்னும் தாலி பெருக்கிப் போடலை… இந்த ஆவணியில நல்ல நாளாப் பார்த்து செஞ்சிடுவோம்!..
''

'' பையன் என்ன படிச்சிருக்கான்?... ''

'' அவன் எஸ்ஸெல்சி படிச்சிருக்கான்.. இந்தப் புள்ள எட்டாவது...  இவனை அச்சாபீஸ்...ல சேர்த்து விடலாம்..ன்னு இருக்கேன்… ''

'' இந்தப் புள்ளைய தையல் மிஷின்..ல பழக்கி விடலாம்..ன்னு யோசனை...
என்னடா செல்லம்!... ''

அன்புடன் அந்த இளம்பெண்ணை வருடிக் கொடுத்தாள்...

அவளும் புன்னகைத்தவாறு தலையை ஆட்டினாள்..

'' ஏன்?.. உங்க கடலை மிட்டாய் கம்பெனிக்கு வேணாமா!... ''

'' அந்த வேலைகளும் தெரியும்... உலகம் போற போக்குக்கு ஒருவேலைக்கு மறுவேலை தெரிஞ்சிருந்தா நல்லது தானே!.. ''

'' நல்லா சொன்னீங்க... காலம் எப்படிப் போகும்..ன்னு யாருக்கு தெரியும்?...  அது சரி... என்ன இருந்தாலும் புதுப் பொண்ணு மாப்பிள்ளை.. கையில மோதிரம் வளையல்... ந்னு ஒண்ணையும் காணோமே?... ''

பெரியவர் நிறைய கேள்விக் கணைகளை வைத்திருந்தார்...

'' ராத்திரி பயணத்துக்கு அதெல்லாம் எதுக்கு?...  விடியக் காலமா தஞ்சாவூருக்குப் போனதும் குளிச்சி முடிச்சி வீட்டுல விளக்கேத்தி வச்சி நகைய எடுத்துப் போட்டுக்க வேண்டியது தானே!... ''

'' சேதி தெரிஞ்சு நாலு மக்க மனுசங்க பொண்ணு மாப்பிள்ளையப் பார்க்க
வருவாங்க.. அந்த நேரத்துல அலங்காரமா இருந்துக்க வேண்டியது தான்..
ஊர்ப் பயணம் போறப்ப எச்சரிக்கையா இருக்கணும்..ன்னு சொல்லுவாங்க எங்க ஐயா!.. ''

பெரியவர் சிரித்துக் கொண்டார்...

'' ஏன் பையன் ஒண்ணும் பேசாம வர்றான்?... ''

'' நாந்தான் சொல்லி வச்சிருக்கேன்...  பெரியவங்க பேசறப்ப ஊடால பேசக் கூடாது..ன்னு!... ''

ரயிலின் வேகம் குறையவும் மாயவரம் வந்துடுச்சு!.. - என்று பயணிகள் இறங்குவதற்குத் தயாரானார்கள்..

பெரியவரும் எழுந்து தலைக்கு மேலிருந்த பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார்...

தஸ்.. புஸ்.. - என்று ஓடி வந்த ரயில் மெதுவாக ஊர்ந்து நின்றது...

நேரம் இரண்டரை மணி என்று நடைமேடையிலிருந்த பெரிய கடிகாரம் காட்டியது...

அந்த நேரத்திலும் மாயவரத்துக் கைப் பக்குவம் மணம் வீசியது...

'' இட்லி பொங்கல் வடேய்!... ''

'' டீய்.. காஃபே..ய்!... ''

பல விதமான குரல்களும் நடைமேடையை ஆக்ரமித்துக் கொண்டன...

'' தந்தி தினமணி கல்கி ஆனந்த விக...டேன்!... ''

'' தண்ணி.. வேணுங்களா.. அம்மா!... தண்ணி.. குடி தண்ணி!..  கூஜா இருந்தா வாங்கிக்கோங்க!...
.''

சிறு வண்டியில் பெரிய தவலையை வைத்துத் தள்ளிக் கொண்டு போனார் ஒருவர்..

'' சரி.. நான் போய்ட்டு வர்றேன்.. ஆரம்பத்துல கோபமா பேசுனதை மனசுல
வைச்சிக்காதீங்க.. பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம்!... ''

- என்றபடி பெரியவர் இறங்கினார்...

"சரிங்க ஐயா... போய்ட்டு வாங்க!.."  - கும்பிட்டாள் முத்துப் பேச்சி..

'' பசங்களா... உங்களுக்கு என்ன வேணும்?.. '' - என்றபடி இட்லியும் பொங்கலும் மூன்று பொட்டலங்கள் வாங்கினாள்..

தனியாக மூன்று வடைகளுடன் அருகிருந்த கூஜாவில் மூன்று காப்பி வாங்கிக் கொண்டு ஒண்ணே முக்கால் ரூபாயுடன் இரண்டணாவைக் கொடுத்தாள்...

வாழையில வச்சிக் கட்டுன கெட்டிச் சட்னி மிளகாப் பொடியோட நாலு இட்லி - நாலணா...

ஒரு பொட்டலம் வெண் பொங்கல் தேங்காச் சட்னியோட நாலணா..

கையகலத்துக்கு ஒரு வடை அரையணா...  கமகமக்கும் காப்பி ஒன்றரையணா

ஆறு நயா பைசா - ஒரு அணா..  பதினாறு அணா ஒரு பணம்...  தொண்ணூற்று ஆறு நயாபைசா ஒரு ரூபாய்...

இப்படியான காலகட்டம் சீக்கிரமே ஒழிஞ்சு போகும்....ன்னு அப்போ இருந்த ஜனங்களுக்குத் தெரியாமப் போனது...

நடைமேடையில் ஆரவாரம் குறைந்திருந்தது...

கூஊஊ... ஊஊ... - பெருங்கூச்சலுடன் மெல்ல நகர்ந்தது ரயில்...

கரங்... கரங்... டடங்... டடங்... கரங்... கரங்...

தண்டவாளங்களில் தடம் மாறும் சத்தத்துடன் ரயில் வேகமெடுத்தது...

கூந்தலை உதறி அள்ளி முடிந்து கொண்ட முத்துப்பேச்சி புன்னகையுடன் சொன்னாள்...

'' நீங்க யாரோ.. எவரோ எனக்குத் தெரியாது..  நான் யாரு,, என்ன...ன்னு உங்களுக்கும் தெரியாது...  ஆனா.. அக்கா மகன்... அண்ணன் மக:... ன்னு
ஒண்ணுக்கொண்ணு உறவாகிட்டோம்!... ''

'' ஏதோ ஒரு வேகத்துல மஞ்சக் கயிறைக் கட்டிக்கிட்டு ரயில் ஏறிட்டீங்க..
இருந்தாலும் போறது எங்கே?.. திக்குத் தெசை ஒன்னும் தெரியாது!.. ''

'' இனிமே பொழைக்க வழி இருக்கா?...பொங்கித் திங்க எடம் இருக்கா?..
ஆயிரத்தெட்டுக் கவலை… அத்தனையும் மனசுக்குள்ளே...  கண்ணை மூடிக்கிட்டு காட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்கீங்க!... ''

பெரியவர்கிட்ட பேசினதை வச்சி என்னப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு இருப்பீங்க.  எல்லாக் கவலையையும் தூக்கிப் போட்டுட்டு எங்கூட வாங்க!....  எம்புள்ளையோட புள்ளையா வச்சி உங்களைக் காப்பாத்தறேன்!... ''

கூஊஊ... ஊஊ...

இருட்டைக் கிழித்தபடி ரயில் ஓடிக் கொண்டிருந்தது...


ஃஃஃ

128 கருத்துகள்:

  1. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்...

    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுக்கு எங்கள் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  3. புத்தொளி பிறக்கட்டும்...
    புவியெங்கும் வாழட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களிப்பு பெருகும் கதை. அன்பு முத்துப்பேச்சி அம்மனே வந்துவிட்டாள்.
      இது போல அன்னை அவளையன்றி வேறு யார்.
      மாயவரம் ,தஞ்சாவூர்க் கதம்பம் போல,
      அந்த இட்லி,வடை,சட்டினி இங்கே சாப்பிட்டது போல உணர்கிறேன்.
      எத்தனை விவரம்!!

      கருணையின் வடிவம் அம்மா. வழி தவறிய குழந்தைகள் விளக்கொளி காட்டி
      வழி நடத்துகிறாள்.
      அந்தப் பெரியவரையும் கடியவில்லை. என்ன ஒரு பண்பு.
      அதிசயம் ஆனந்தம் என்ன சொல்லி வாழ்த்துவதென்றே
      தெரியவில்லை.நன்றி துரை நலமே வாழ்க.

      நீக்கு
    2. அம்மா தங்களுக்கு நல்வரவு...

      நல்ல மனதுடையவர்கள் தென்றல் காற்றிப் போல நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்..

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்முகளுக்கும் நன்றி கமலா அக்கா.்். நல்வரவு. வாங்க... உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அன்பின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகளுடன்....

      நீக்கு
  5. தங்களுக்கு நல்வரவு...
    தங்களது பிரார்த்தனையே அனைவருக்கும் பலம்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      நல்ல நடையுடன் அருமையான கதை. ரயில் சினேகிதம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனதில் மட்டுமே நிற்கும் என்பார்கள். ஆனால் உறவாக்கி கொண்டு வந்து முடிந்த கதையை இன்றுதான் பார்க்கிறேன். பழைய கால நினைவுகளை அப்படியே அள்ளி சேர்த்துக் கொண்டு மனதில் சுகமாக அமர்ந்து கொண்டது இந்த ரயில் பயணம்.

      இப்படி நல்ல மனம் கொண்ட முத்துப் பேச்சி போன்றவர்களால்தான் இன்னமும் இந்த உலகம் சந்தோஷத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது. நல்ல கதை. மிகவும் ரசித்து ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
      தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ளுடன் பாராட்டுகளும். இந்த அருமையான கதையை தந்தமைக்கு, தங்களுக்கும், எ. பி. ஆசிரியர்களுக்கும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. உண்மை தான்...
      முத்துப்பேச்சி போன்ற நல்லவர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. அன்பு துரை இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வரப்போகும் அனைவருக்கும்,
    இன்று பிறந்த தமிழாண்டு நல் வளம் அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய புத்தாண்டு நல.வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நோய் நொடியின்றி, வளம் பெருக வாழவேண்டும்.
      நல்லதொரு அன்புடன், துரை வழியே வந்த முத்துப்பேஷி அம்மா
      நம்மைக் காப்பாள்.

      நீக்கு
    3. அன்பின் இனிய வாழ்த்துரைகளுக்கு
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வராவு, இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள், விரைவில் நிலைமை சரியாக ஆகவும் கொரோனாவின் பிடியிலிருந்து அனைவரும் விடுதலை பெறவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா. நல்வரவு. அக்கறையான பிரார்த்தனைகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் நன்றி.

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. அக்கா அவர்களது பிரார்த்தனையுடன் நமது பிரார்த்தனைகளும்....

      நீக்கு
  8. இன்று துரையின் கதையாகத் தான் இருக்கும் என நினைத்துக்கொண்டேன். காலவெள்ளத்தில் பின்னோக்கிப் பயணிக்க வைத்து விட்டார். அருமையான கதை! பேச்சி அம்மன் அந்த இரு குழந்தைகளையும் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ வைத்திருப்பாள். சொன்னது பொய் என்றாலும் அதை ஓர் நன்மைக்காகச் சொன்ன விதம் பாராட்டுக்கு உரியது.
    " பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா... தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  10. காலத்தின் பின்னே பயணித்து பாஸஞ்சர் இரயில் பயணம், ஸ்டேஷனில் கிடைக்கும் ருசியான உணவும் அன்பும், பிஸ்கட் டின் (ஹார்லிக்ஸ் பாட்டிலை மறக்க முடியுமா)......

    மிகுந்த மன நிறைவைத் தந்த கதை. நல்ல விவரமாக கதையில் ஒன்ற வைத்துவிட்டீர்கள்.

    ஈர மனதுகள் குறைந்துவிட்டாலும் இப்போதும் நிறைய இருக்கும்.

    அந்தக் கால கட்டத்துக் கதைக்குள் பயணிக்கும்போது, இவர்கள் நாடார் சமூகம் எனவும் மனது கண்டுபிடிக்கிறது. அந்தச் சமூகம்தான் தன் மனிதர்கள் எல்லோரையும் அரவணைத்து மேலே தூக்கிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டவன் நான்.

    பாராட்டுகள் துரை செல்வராஜு சார்... மனநிறைவை அளிக்கும் கதை. ஆற்றொழுக்கு நடை். "தாலி பெருக்குதல்" என்பது போன்ற மண்வாசனை எழுத்து.

    புத்தாண்டில் கேவாபோ வை மிகச் சிறப்பாக ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      கதையோட்டத்தில் முத்துப்பேச்சி அம்மா அவர்களது உரையாடலைக் கொண்டு நாடார் சமூகத்தைக் கணித்ததற்கு மகிழ்ச்சி..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. இன்றைய கதைக்குப் பொருந்தும் குறள்

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    இதைவிட பொருத்தமான குறள் இருந்தால் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்லியதற்கும் மேல் ஒரு சொல்லும் உண்டோ...

      நீக்கு
  12. எபி ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ஒரு மரத்தின் பறவைகள் போல நம் எல்லோரின் அன்பும் நட்பும் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன்... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. @நெல்லைத்தமிழன் உங்களுக்கு ஒரு தகவல் அனுப்பியிருக்கேன் :)

      நீக்கு
    3. ///
      Angel14 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:46
      @நெல்லைத்தமிழன் உங்களுக்கு ஒரு தகவல் அனுப்பியிருக்கேன் :)///

      ஆஆஆஆஆ இதென்ன இது புயுக்கதை:)) ஆவ்வ் நான் ஜொன்னனே வட்ஸப்பில அனுப்பியிருக்கிறா:)..

      ஹையோ நான் இப்பவே போகிறேன் நெல்லைத்தமிழன் அண்ணியின் வட்சப் நெம்பரூஊஊஊஉ:)) நேக்குத் தேவை:),
      ஹையோ காண்ட்ஸும் ஓடல்ல நேக்கு லெக்ஸ்சும் ஆடல்லியே.. ஆண்டவா.. புது வருடத்தில எதுக்கப்பா எனக்கு இவ்ளோ ஓதனைகளைத் தருகிறாய் ஹா ஹா ஹா.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)) என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்:))

      நீக்கு
    4. கர்ர்ர்ர் இருங்க அந்த உங்க  பாற் பற்களை இப்போவே எடுத்து போடறேன் எல்லாருக்கும் 

      நீக்கு
    5. கொஞ்சம் இருங்க உங்களை எந்த ஊருக்கு  பார்சல் பண்ணலாம்னு யோசிக்கிறேன் ..

      நீக்கு
    6. @ ஏஞ்சலின் - இணையத்தில் நமக்கு அறிமுகமாகிறவர்கள் அனைவரும் நம் மனதுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள். அதனால்தான் ஒருவருக்கு நலமில்லை, கஷ்டம் என்பதெல்லாம் நம் மனதையும் பாதிக்கிறது. நான் யாருக்கும் பெரும்பாலும் மெயில் அனுப்புவதில்லை. எல்லோரும் நலமுடனிருக்கட்டும்.

      நீக்கு
    7. ///Angel14 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:39
      கர்ர்ர்ர் இருங்க அந்த உங்க பாற் பற்களை இப்போவே எடுத்து போடறேன் எல்லாருக்கும்

      ///
      ஐயா ஜாமீஈஈஈஈ எனக்கு என் பாற்பற்கள் முக்கியம்:))..

      https://media.giphy.com/media/Wu9zB0UNoTZyE/giphy.gif

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம்.

    மனதைத் தொட்ட கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. பழைய காலத்தில் இருப்பது போன்ற உணர்வு.

    //ஏழை பாழைங்களோட நின்னு அன்னதானம் வாங்குறப்ப அகங்காரம் அழிஞ்சு போகுதுல//

    இதுதான் வாழ்க்கை நெறிமுறை இது எத்தனை பேருக்கு தெரிகிறது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இந்த மாதிரியான வாழ்க்கை நெறிமுறை எல்லாம்
      இன்றைய தலைமுறைக்கு வேடிக்கை விஷயமாகிப் போனது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. //ஏழை பாழைங்களோட நின்னு அன்னதானம் வாங்குறப்ப அகங்காரம் அழிஞ்சு போகுது... ல்ல!... ''//

      உண்மை.


      நீக்கு
    3. அகங்காரம் அழிந்து விட்டாலே நாம் நமது வாழ்க்கையில் ஜெயித்த மாதிரி...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. செம ட்விஸ்ட் . நல்ல நடை வாழ்த்துகள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் LK..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. கதை அருமை... அனைவருக்கும் சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ளம் கொண்ட முத்துப் பேச்சி, இளையவர்களை சிறப்பாக வழி நடத்தியிருப்பார். சிறப்பு! சிறப்பு!

      நீக்கு
    2. அன்பின் தனபாலன்..

      தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. @ Bhanumathy Venkateswaran ...
      >>> அன்புள்ளம் கொண்ட முத்துப் பேச்சி, இளையவர்களை சிறப்பாக வழி நடத்தியிருப்பார். சிறப்பு! சிறப்பு!..<<<

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. good story line
    1 rupee was 100 naye paise.
    befor4 1957 1 rupee was 16 anaas x12 paise = 192 paise

    We want a lot of muthupechis among us.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்... ஒரு அணா என்பது 6 பைசாதானே... நாம ரொம்ப வருஷமா 8 அணா என்று 50 பைசா நாணயத்தையும் நாலணா என்று 25 பைசா நாணயத்தையும் சொல்வோமே.

      நீக்கு
    2. காலணா, ஓட்டைக்காலணா, மஞ்சள் அரையணா, வெள்ளை அரையணா,வெள்ளிக் காசில் நாலணா,எட்டணா, ஒரு ரூபாய் எல்லாம் உண்டு. வெள்ளி ஒரு ரூபாய் எடையில் (பத்துகிராம் காசு) நிறுத்து வாங்கப்பட்ட நாட்கள். ஆனால் இந்த போட்மெயிலில் மட்டும் பயணித்ததே இல்லை. ஆசை இருந்தது. தனுஷ்கோடி புயல் வந்து அதை அழித்து ஒழித்தது.

      நீக்கு
    3. அன்பின் KG..
      நான் சொல்ல இருந்ததை திரு நெல்லை அவர்கள் சொல்லி விட்டார்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. @ Geetha Sambasivam

      >>> காலணா, ஓட்டைக்காலணா, மஞ்சள் அரையணா, வெள்ளை அரையணா,வெள்ளிக் காசில் நாலணா,எட்டணா, ஒரு ரூபாய் எல்லாம் உண்டு...<<<

      எங்கள் வீட்டிலும் அந்தக் காசுகள் இருந்தன... பசங்கள் எடுத்து விளையாடி பலவற்றைத் தொலைத்து விட்டார்கள்... இருப்பினும் ஒரு சில மிச்சமாக இருக்கின்றன...

      அக்கா அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. //முத்து கடலை மிட்டாய், தனுஷ்கோடி சர்பத்.// கேள்விப்பட்ட பெயர்களாக இருக்கிறது.
    எங்கள் தாத்தா எழுதி வைத்திருக்கும் கணக்கு நோட்டில் ரூபாய்,அணா,பைசா என்று மூன்று காலங்கள் இருக்கும். அந்த விவரங்களை கொடுத்திருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நான்காம் வகுப்பு வரை அதில் தான் கணக்குப் போட்டிருக்கேன். அப்போத்தான் நயா பைசா என அறிமுகம். பல வருடங்களுக்கு நயா பைசா என்றே சொல்லப்பட்டது. ஜெயேந்திரரைப் புதுப் பெரியவா என்றே சொல்லிக் கொண்டிருந்தாப்போல்!

      நீக்கு
    2. அப்போல்லாம் ஒன்று முதல் பதினாறாம் வாய்ப்பாடு வரை தான். மாகாணி, வீசம் என்றெல்லாம் கணக்குப் போட்டிருக்கோம்.

      நீக்கு
    3. @ Geetha Sambasivam

      கால், அரைக்கால்,வீசம் என்றெல்லாம் வீட்டில் சொல்லிக் கொடுத்தார்கள்...
      பள்ளிக் கணக்குப் பாடம் புது நடைமுறைக்கு மாறியிருந்தது...

      >>> ஜெயேந்திரரைப் புதுப் பெரியவா என்றே சொல்லிக் கொண்டிருந்தாப்போல்!.. <<<

      பால பெரியவா... என்ற சொல்வழக்கும் இருக்கின்றதே!...

      அக்கா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  19. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு, விஷு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  20. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      வாழ்க வையகம் ... வாழ்க வளமுடன்..

      நீக்கு
    2. புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

      நீக்கு
  21. துரை அண்ணா அழகான சிறப்பான மற்றுமொரு கதை உங்களிடம் இருந்து.

    கதையை வாசித்து வரும் போதே முத்துப் பேச்சிக்குச் சொந்தமான குழந்தைகள் தானோ அவர் சொல்லுவ போல் என்று ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் இரு இடங்கள் உறுதிப் படுத்தியதுமுத்துப் பேச்சி குடும்பத்தார் இல்லை என்பது...இருந்தாலும் அவர் அவர்களுக்காக அந்தப்பெரியவரிடம் பேசியது அவரும் டவுட்டில் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க முத்துப் பேச்சியும் விடாது அழகான பதில்கள் கொடுத்து இயல்பாகப் பேசி அப்பெர்யவருக்கு டவுட்டே வராம நல்ல உரையாடல் மூலம் நகர்த்தப்பட்ட கதை. கடைசியில் முத்துப் பேச்சி அவர்களை அரவணைத்துக் கொள்வது கண்டிப்பாக அவர்களைக் காப்பார். எந்தவித தன்னலமும் இல்லாத அன்பு.

    அழகான கதை துரை அண்ணா. அன்பு பெருகட்டும். முடிவு ரொம்பப் பிடித்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> எந்தவித தன்னலமும் இல்லாத அன்பு...<<

      அத்தகைய அன்பினை அனுபவித்த காலமும் இனியொரு தரம் கிட்டுமோ!...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. மிக அருமையான மனிதநேயக் கதை.
    ரயில் சிநேகம் என்று தலைப்பு போட்டு விட்டதால் எதிர்பலகை பெண் அந்த பெரிய மனிதரிடம் சொன்னவைகள் எல்லாம் அன்பால் என்று புரிந்து விட்டது.

    அந்தக்கால ரயில் சிநேகங்கள் அற்புதமாக இருந்தது. இப்போது எல்லோர் கையிலும் அலைபேசி , இன்னும் நிறைய நவீன கருவிகள். அவர்களுக்கு யாருடனும் பேச பொழுதில்லை, பிடிக்கவும் இல்லை. புன்னகைக்கவும் மனசு இல்லை என்று இருக்கிறது.
    ஒரு சில பழைய அந்தக்கால மனிதர்கள் எந்த ஊருக்கு போகிறீர்கள்? எங்கே ஜாகை என்ற கேள்விகள் எழுப்பி ரயில் கிள்மபியதிலிருந்து இறங்கும் வரை விசாரிப்பு, பேச்சு, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி என்று இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> இப்போது எல்லோர் கையிலும் அலைபேசி , இன்னும் நிறைய நவீன கருவிகள். அவர்களுக்கு யாருடனும் பேச பொழுதில்லை, பிடிக்கவும் இல்லை. புன்னகைக்கவும் மனசு இல்லை என்று இருக்கிறது...<<<

      நிதர்சனமான உண்மை...

      இப்போதெல்லாம் சக மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்கவும் நேரமின்றிப் போய்விட்டது..

      நீக்கு
  23. முத்து கடலை மிட்டாய், தனுஷ்கோடி சர்பத்...ன்னு மாயவரத்துக்கெல்லாம் வருதே!… ''//

    மாயவரத்தில் கடலை மிட்டாய், சர்பத் எல்லாம் கோவில்பட்டியிலிருந்து வந்தவர்கள் செய்து எல்லா கடைகளிலும் போடுவார்கள் நன்றாக இருக்கும்.

    //' பனை மட்டையோட ரெண்டு பக்கமும் சொர சொர..ன்னு ரம்பம் மாதிரி
    இருக்கும்... கையில வாட்டமாப் புடிச்சிக்கிட்டு இப்படியும் அப்படியுமா
    வீசுனா எதிராளி மேலெல்லாம் ரணமாப் போவும்!... ''/

    விவரம் தெரியாதவர்களுக்கு அருமையான விளக்கம்.

    //' பனை ஓலையில அட்சரம் எழுதி மஞ்ச குங்குமம் வச்சி சாமி கும்பிட்டு
    அதை சுருளாக்கி மஞ்சக் கயிறுல முடிஞ்சு கட்டுறது எங்க வழக்கம்… ''//

    வழக்கம் மிக அருமை அதை முத்து பேச்சி அவர்கள் சொன்னது மிக அருமை.
    யாரோ எவரோ ஆனாலும் உறவு முறைசொல்லி தங்கள் வழக்கத்தையும் இணைத்து உறவாக்கி விட்டார். படித்தவுடன் கண்ணின் ஒரம் கண்ணீர் துளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> படித்தவுடன் கண்ணின் ஒரம் கண்ணீர் துளி...<<<

      என் மனமும் நெகிழ்ந்து விட்டது...
      இந்தக் கதைக்குக் கிடைத்த அன்பின் கருத்துரைகளைக் கண்டு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. ஆமாம் தனுஷ்கோடி கடல் கொள்ளும் முன் வரை தனுஷ்கோடி - தலைமன்னார் வரை கப்பல் செல்லும் காலம். அதன் பின் ராமேஸ்வரம் வரை ரயில் சென்று அங்கிருந்து தலைமன்னாருக்குக் கப்பல். எனக்கு என் கொழும்பு டு ராமேஸ்வரம், ராமேஸ்வரத்திலிருந்து ரயில் ஏறி மதுரைக்குச் செல்வது என்று மீண்டும் இதே போல கொழும்புவிற்கு என்று என் பழைய நினைவுகளை எழுப்பி விட்டது. அந்தச் சிறிய வயதிலும் நான் மிக மிக ரசித்த பயணம் என்பதாலோ என்னவோ என் நினைவு அடுக்குகளில் அப்படியே பதிந்துவிட்டது. கடல் மற்றும் பாம்பன் பாலம், அதில் வரும் போது பாட்டி என்னிடம் பைசை கொடுத்து கடலில் போடச் சொல்லுவது என்று பாம்பன் பாலத்தில் வரும் போது கடலை ரசித்தது எல்லாம் இன்னும் நினைவில். அப்புறம் அதற்காகவெ மகனை ராமேஸ்வரம் அழைத்துச் சென்றோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இப்படி தரைமூலம் கொழும்புக்கு வந்தனீங்களோ கீதா? அது 19 ம் நூ.ஆண்டின் ஆரம்பக்காலம் என்றெல்லோ நினைச்சிருந்தேன்

      நீக்கு
    2. ஆமாம்.19ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம்தான். இதை வைத்து கீதா ரங்கன் வயசெல்லாம் ஸ்காட்லாந்த் யார்ட் மாதிரி கண்டுபிடிக்கக் கூடாது.

      நீக்கு
    3. //இதை வைத்து கீதா ரங்கன் வயசெல்லாம் ஸ்காட்லாந்த் யார்ட் மாதிரி கண்டுபிடிக்கக் கூடாது.//

      ஹா ஹா ஹா தென்னை மரத்தில தேள் கொட்டினதுக்கு பனை மரத்தில நெறி ஏறின” கதையாவெல்லோ இருக்குது இக்கதை:)).. முளையிலயே கிள்ளிடோணும் இல்லை எனில், இப்பூடியே நெல்லைத்தமிழனையும் கண்டு பிடிக்கத் தொடங்கிடுவினம் எனும் முன் ஜாக்ர்ர்தைதானே:)).. ஹா ஹா ஹா அதுதான் எங்களுக்குத் தெரியுமே:)) அஞ்சூஊஊஊஊ அந்த டயறியைக் கொஞ்சம் எடுத்து வாங்கோ.. எத்தனையாம் ஆண்டில நெ தமிழன் 7 ம் வகுப்புப் படிச்சவர் என அதில நோட் பண்ணியிருக்கிறேன்:)).. ஹா ஹா ஹா ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:)) மீ ஓடிடப்போறேன்ன்:))

      நீக்கு
  25. //அந்த நேரத்திலும் மாயவரத்துக் கைப் பக்குவம் மணம் வீசியது...//

    மாயவரம் ரயில் நிலையத்திற்கு அந்தக்காலத்திலிருந்து இந்த பெருமை உண்டு. ஜானகிராமன் கதையிலும் வரும்.

    மீண்டும் வருகிறேன். ஆரம்பம் முதல் நிறைவு வரை விமர்சிக்கலாம் அவ்வளவு அருமை கதை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மீண்டும் வருகிறேன். ஆரம்பம் முதல் நிறைவு வரை விமர்சிக்கலாம்//

      ஹா ஹா ஹா எனக்கும் இதே உணர்வுதான் கோமதி அக்கா, ஆனாலும் கஸ்டப்பட்டு அடக்கிட்டேன்.. ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. ஆமாம் அதிரா ,கதை மிக நன்றாக மனதை கொள்ளை கொண்டு விட்டது.
      ஆனால் இங்கு வரவே மதியம் ஆகி விட்டது. வருடப்பிறப்பு வேலைகள் .
      வாழ்த்து சொல்லும், உறவினர்கள் , நண்பர்கள், பேரன் வந்து பேசினான் அதனால் வர முடியவில்லை. எனக்கும் சேர்த்து தங்கை அதிராவே பின்னூட்டங்கல் போட்டு உற்சாகப்படுத்தி விட்டார்.

      நீக்கு
    3. //எனக்கும் சேர்த்து தங்கை அதிராவே பின்னூட்டங்கல் போட்டு உற்சாகப்படுத்தி விட்டார்.//

      ஆவ்வ் நன்றி கோமதி அக்கா...

      நீக்கு
    4. >>> வருடப்பிறப்பு வேலைகள் .
      வாழ்த்து சொல்லும், உறவினர்கள் , நண்பர்கள், பேரன் வந்து பேசினான் அதனால் வர முடியவில்லை...<<<

      இத்தனை வேலைகளுக்கு இடையேயும் தங்களது கருத்துரைகள் மனதில் நிறைந்து விட்டன..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. //' பனை மட்டையோட ரெண்டு பக்கமும் சொர சொர..ன்னு ரம்பம் மாதிரி
    இருக்கும்... கையில வாட்டமாப் புடிச்சிக்கிட்டு இப்படியும் அப்படியுமா
    வீசுனா எதிராளி மேலெல்லாம் ரணமாப் போவும்!... ''//

    ஹையோ இது வள்ளியூரில் இருந்தப்ப பசங்க சிலர் காட்டிருக்காங்க. எனக்குப் பயமாக இருக்கும் பசங்களுக்குள் சண்டை வந்துவிட்டால் இதைப் பயன்படுத்திடுவாங்களோன்னு.

    பனை ஓலை - தாலி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கோ வாசித்த நினைவு என்றாலும் உங்கள் விளக்கம் இப்போது மீண்டும் நினைவுபடுத்தியது. அழகா சொல்லியிருக்கீங்க அண்ணா.

    செம கதை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் நினைவு வருது கீதா, ஊரில அதுவும் யாழ்ப்பாணம் எனில் பனைதானே.. பேசும்போது சொல்லுவினம், “கருக்குமட்டை அடிதான் குடுக்கோணும்” என ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //தாலி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கோ வாசித்த நினைவு//

      யேச் கீதா, கண்ணதாசன் அங்கிளின் கதையில் வருகிறது.. நான் புத்தகம் படிக்கும்போது அதைக் ஸ்கிறீன் ஷொட் எடுத்து வச்சேன், தேடோணும்.. “வனவாசத்தில்” என நினைக்கிறேன்

      நீக்கு
    3. 'தாலி' என்பதை விளக்கி எழுதியவர் ம.பொ.சிவஞானம் அவர்கள். கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார் (வனவாசத்தில் அல்ல. அந்தப் புத்தகத்தை அதிரா படித்திருக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசியல் தெரியாமல் அந்தப் புத்தகத்தை ரசிக்க முடியாது. கி.பி. 950ம் ஆண்டு நடந்த வரலாரையே இன்னும் படித்த பாட்டைக் காணோம்-பொன்னியின் செல்வன். ஹா ஹா)

      நீக்கு
    4. தெய்வத்தின் குரலிலும் பரமாசாரியார் வாயிலாகத் தாலி,"தாலபத்ரம்" பற்றிய விரிவான விளக்கம் காணலாம்.

      நீக்கு
    5. @நெ த
      //(வனவாசத்தில் அல்ல. அந்தப் புத்தகத்தை அதிரா படித்திருக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசியல் தெரியாமல் அந்தப் புத்தகத்தை ரசிக்க முடியாது.//
      ஹா ஹா ஹா நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மைதான், அதாவது அரசியல், அரசியல் போஸ்ட் என்றாலே நான் எட்டிப் பார்க்க மாட்டேன்.

      ஆனா இந்த “வனவாசம்” படியுங்கோ கண்ணதாசனின் எனச் சொன்னதே நீங்கள்தான், ஆனா அது அரசியல் கதை என நீங்க சொல்லவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனால கிண்டிலில் எடுத்துப் படிச்சு முடித்து விட்டேன். வனவாசம் என்றதும், கம்பராமாயணம் போல சூப்பராக இருக்குமென நினைச்சே அவசரமாக படிக்கத் தொடங்கினேன், போகப்போக அது அரசியல் பேசிச்சுது.. இருப்பினும் என்னில ஒரு குணம், கண்ணதாசன் அங்கிளின் கதைகளை ஒன்றும் விடாமல் படிச்சிருக்கோணும்.. எனும் ஒரு வைராக்கியத்தில் படிச்சு முடிச்சேன்.. அரசியல் புரியவில்லை, ஆனா அவர் எழுதும்போது நகைச்சுவையாகவும், பொன்மொழிகள் கலந்தும் எழுதுவார், அதனால எனக்குப் பிடிக்கும்..

      தாலி விசயம், வனவாசத்திலும் இருக்கு என்றுதான் நினைக்கிறேன்.. முன்னைய காலத்தில் தமிழர்கள் பண்பாட்டில் தாலி கட்டும் வழக்கமும் இல்லை, அதுக்கு முக்கிய பங்கும் கொடுக்கவில்லை என இருந்தது, ஆனா அதைச் சொன்னவர் யாரெனத் தெரியவில்லை...

      நீக்கு
    6. பனை மட்டை கருக்கு எல்லாம் நேருக்கு நேர் விளையாடியது...

      மறக்க வில்லை அந்த நினைவுகள் எல்லாம்...

      மற்றபடிக்கு தாலி பற்றி - ம.பொ.சி. அவர்கள் சொல்லியதையோ, காஞ்சிப் பெரியவர் அவர்கள் குறிப்பிட்டிருப்பதையோ நான் படித்ததில்லை...

      பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் வழியாக அறிந்ததும் அந்தக் காலத்தில் வீட்டுப் பெரியவர்கள் சொல்லியதும் தான் நினைவில் .. அதையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்...

      நீக்கு
  27. எங்கள் பிளாக் உறவுகளுக்கு இனிய சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்சல்..
      தங்களுக்கும் இனிய சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  28. இன்று வீட்டிலிருப்பதால் நிதானமா கதையை வாசித்து முடித்தேன் .மிகவும் அருமை அண்ணா .
    முத்துப்பேச்சி போன்ற நல்லஉள்ளங்கள் இருந்தா எத்த்னை நல்லது .அவசரப்பட்டு ஒரு ஊகத்தை உண்டாக்கி வெறுப்புமிழும் அந்த பெரியவர் போன்றோருக்கு முத்துப்பேச்சி போன்ற தெளிவா யோசித்து முடிவெடுப்பவர்கள் தேவைதான் .இளம் தம்பதியர் அதுவும் காதலித்து மணம்புரிபவர் மனநிலை வேறு அதை அழகா  புரிந்தவர் முத்துப்பேச்சி .பனையோலை தாலி பற்றிலாம் நான் அறியாதகவல்கள் .பனை ஓலை மட்டை பற்றி ஒரு இலங்கை தமிழ் அண்ணா இங்கே வலைப்பதிவில் சந்தித்தவர் அடிக்கடி சொல்வார் //கருக்குமட்டை அடி // பொல்லாத ஆயுதமா இருக்குமோ ??
    இட்லி கெட்டி சட்னின்னு பசியையும் கிளப்பி விட்டுட்டீங்க அண்ணா :)மன நிறைவா இருந்தது கதை .இந்த கதையின் கதாநாயகி முத்துப்பேச்சி உருவம்  குணம் மனதை விட்டகலாது உங்கள் வர்ணனை மூலம் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Angel14 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:55
      இன்று வீட்டிலிருப்பதால் நிதானமா கதையை வாசித்து முடித்தேன்//

      ம்ஹூம்ம்ம்.. ஏனைய நாட்களிலெல்லாம் எங்கேயாம் இருந்தா??. ஹையோ முத்துமாரி அம்மாளாச்சி எதுக்கு இன்று இப்படியெல்லாம் என் கண்ணில படுகுது:))..

      //இந்த கதையின் கதாநாயகி முத்துப்பேச்சி உருவம் குணம் மனதை விட்டகலாது //

      ஆஅவ்வ்வ்வ்வ்வ் அஞ்சுவும் மயங்கிட்டா.. எல்லாம் அந்த முத்துப்பேச்சியின் நகையைப் பார்த்து நம்பிட்டா ஹையோ ஹையோ:)).. ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. ஹலோ இப்படி யோசிங்க கதையை ..ஒருவேளை முத்துப்பேச்சி இப்படித்தான் 17 வயதில் வீட்டை விட்டு வந்து அவரை ஒரு பொன்னுபேச்சி இல்லைன்னா வைரப்பேச்சி இப்படி ஹெல்ப் பண்ணியிருக்கலாம் அதை இவர் கன்டின்யூ செய்றார்னும் நலவிதம்னா நினைக்கலாமே 

      நீக்கு
    3. கொஞ்சம் இருங்க உங்களை எந்த ஊருக்கு  பார்சல் பண்ணலாம்னு யோசிக்கிறேன் 

      நீக்கு
    4. சரி வேலைக்கு டைமாகுது எல்லாருக்கும் bye 

      நீக்கு
    5. //Angel14 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:43
      கொஞ்சம் இருங்க உங்களை எந்த ஊருக்கு பார்சல் பண்ணலாம்னு யோசிக்கிறேன் //

      சைனாவுக்கு அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) இப்போ அங்கினதானாமே சேஃப்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  29. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் புத்தம் புது வருசமும் அதுவுமா என்னை ஏமாத்திப்போட்டார் துரை அண்ணன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் நிஜம்ம்ம்மா முத்துப்பேச்சியின் கதையை 100 வீதமும் நம்பிட்டேனே ஹையோ ஆண்டவா அதிராவைக் காப்பாத்து இனிமேலாவது இப்பூடி எடுத்தோம் கவிழ்த்தோம் என நம்ப வச்சிடாதையப்பா:))..

    ஹா ஹா ஹா இப்பூடி ஒரு ருவிஸ்ட் வைப்பீங்களென நான் எதிர்பார்க்கவில்லை துரை அண்ணன்.. சே சே கையைப் பிடிச்சே கூட்டிப்போவதைப்போல போய், டமால் என பள்ளத்தில தள்ளிவிட்டதைப்போல இருந்துது ஹா ஹா ஹா.. மிக அழகிய கதை.. நில்லுங்கோ முத்துப்பேச்சி மற்றருக்கு வாறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  30. ///அந்த காலத்தில் - சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடி வழியாக இலங்கை கொழும்பு வரைக்கும் சென்ற போட் மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது கதை...
    /

    உண்மைதானாமே... தரைப்பாதை இருந்து பின்னர் கடலால் மூடப்பட்டுவிட்டதாமே.. கவலைக்குரிய விசயம்.. திரும்ப திறக்கப் போகிறார்கள் என இடையில ஒரு கதை அடிபட்டுதே..

    பதிலளிநீக்கு
  31. //'' கழிசடைகள்!… '' - என்றவாறு கழிவறைக்குள் புகுந்தார் பெரியவர்...

    சற்று நேரத்தில் வெளியே வந்த அவர் '' கலிகாலம்!... '' - என்று வன்மத்துடன் சொல்லியவாறே தன் இருக்கைக்குத் திரும்பியபோது//

    அந்தக்காலப் பெரியவர்களுக்குப் பொறாமை:)).. கோபம் ஏன் வருகிறது தெரியுமோ? இயலாமையின் வெளிப்பாடுதான், தம்மால இப்படி எல்லாம் பண்ண முடியவில்லையே எனும் பொறாமைதான் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோவ் மியாவ் நம்ம பெற்றோர் ஜெனெரேஷனே அப்படிதான் .அதை பொறாமைன்னு இயலாமைன்னு  சொல்றதை விட அவங்க பார்வை வேறுன்னும் எடுக்கலாம் 

      நீக்கு
  32. ஆஆஆ என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:)) எனக்கென்னமோ முத்துப்பேச்சியில் டவுட்டாகவே இருக்குது, அவ இப்படி நல்லவர்போல பேசி, அந்த இரு பிள்ளைகளையும் ஏதும் அடிமைத் தொழிலுக்குக் கூட்டிப் போகிறாவோ என நினைச்சு நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல.. ஹையோ வெள்ளை வைரவரே அந்த இரு பிள்ளைகளையும் காப்பாத்தப்பா முத்துப் பேச்சியிடமிருந்து.

    இப்பூடி இவ்ளோ தூரம் பொய்களை.. அசையாமல் அடுக்கி அடுக்கி விடும் முத்துப் பேச்சியை எப்படி நம்புவது?.. பெரியவர் அப்பூடி என்ன சொல்லிட்டார், ஏதோ கொஞ்சம் கோபமாக பேசினார்.. அதுக்காக இப்படிப் பதில் கொடுத்து பெரியவரை இவ்வளவு தூரம் நம்ப வைத்தது எவ்ளோ பெரிய குற்றம்.. கடவுளுக்கே அடுக்காது ஜொள்ளிட்டேன்ன்ன்:))..

    நான் என்றால், எதுக்கையா திட்டுறீங்க, பாவம் அவர்கள் என சப்போர்ட் பண்ணிப் பேசியிருப்பேனே தவிர, இவ்ளோ தூரம் இப்பூடித் தைரியமாகப் பேச எப்படி மனம் வரும்... நோ நான் இப்பவே போகிறேன் பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டுக்கு..:))..

    முத்துப் பேச்சியின் கழுத்தில இருப்பது இமிட்டேசனாக இருந்திடப்போகுதே:)) ஹா ஹா ஹா..

    முடிவாக ஒன்று சொல்லிடறேன், இவ்ளோ தூரம்.. மீ கொந்தளிக்கிறேன் எனில், அவ்ளோ தூரம் கதையை அருமையாக நகர்த்தியிருக்கிறீங்க என அர்த்தம் துரை அண்ணன்.. வாழ்த்துக்கள்.

    பாருங்கோ கொரோனாவால ஒரு நன்மையும் இருக்குது, நம்மால உங்கள் கதை படிச்சு, அலசி ஆராய நேரம் கிடைச்சிருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா... இவ்வளவு நல்ல மனிதர்களை இப்படிப் புரிந்துகொண்டுவிட்டாரே இந்த அதிரா... நல்லவேளை பொன்னியின் செல்வன் படிக்கலை. படித்திருந்தால், தன் அரியாசனத்தை திறமைக்குறைவான சித்தப்பாவிற்கு விட்டுக்கொடுத்ததற்கு, சித்தப்பா ஆண்டு மக்களுக்குப் பிடிக்காமல் புரட்சி செய்யட்டும், பிறகு தான் சுலபமாக அரியாசனைக்கு வந்துவிடலாம், அல்லது சித்தப்பா மோசமாக ஆண்டால், பிறகு தான் எப்படி ஆண்டாலும் மக்களுக்கு நல்லதாகத் தெரியும், அதுதான் காரணம்னு சொல்லுவீங்க போலிருக்கு..

      நீக்கு
    2. கனம் கோட்டார் அவர்களே!! எதிர்த்தரப்பு வக்கீல் என் வாதத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்:)), ஆனா நானோ முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன்ன் :)) ஏனெனில் நான் ஒரு சிங்கப்பேன்.. ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருங்கோ முதல்ல அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளிப்போட்டுத்தான் மிகுதி தொடர்வேன் சே சே சே ஒரு பேச்சுப் பேச முடியுதா ஒழுங்கா.. ஆ.. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈ.. ஆங்ங்ங் மீ ஒரு ஜிங்கப் பென்:)).. சே..சே.. என்னாதிது சரி எதுவும் வாணாம் மற்றருக்கு வருகிறேன்..

      கண்ணதாசன் அங்கிளின், பாரிமலைக்கொடி, சிவப்புக்கல் மூக்குத்தி, அர்த்தமுள்ள இந்துமதம்.. இப்படி எத்தனையோ பல புத்தகங்கள் இருக்க:)), அவற்றில் இருந்து உதாரணத்தை எடுத்து வந்தால், அதிரா மின்னாமலேயே முழக்கிடுவேன் எண்டு, அதிரா இன்னும் படிக்காத பொன்னியின் செல்வனில் ஒரு பாத்திரத்தைக் களமிறக்கியிருக்கிறார் நெல்லைத்தமிழன்:)).. இது அநீதி, இது அக்கிரமம்:)).. அநியாயம்... எனக்கு கை நடுங்குகிறது வாய் தடுமாறுகிறது.. ஆஆஅ அஞ்சூஊஊஊஉ ஹொட்டா ஒரு மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
  33. //பொய்களை.. அசையாமல் அடுக்கி அடுக்கி விடும் முத்துப் பேச்சியை எப்படி நம்புவது?.. //

    தாங்கள் ஒரு பிராணி  சந்தேக பிரியாணி ஸ்ஸ்ஸ் சந்தேகப்பிராணி  என்பதை இங்கே பார்க்கின்றேன் :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்தேக பிரியாணி//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா சைவமாக்கும்:)).. கண்ணதாசன் அங்கிள் என்ன ஜொள்ளியிருக்கிறார்ர்.. “நம்ப நட, நம்பி நடவாதே”[ஹையோ இதை அவர் சொல்லலியே ஆருக்கு ஜண்டைக்கு வந்திடப்போகினமே வைரவா:)]... இதில சந்தேகத்துக்கே இடமில்லை, நம்பவில்லை நான்:))

      நாம் நம் பிள்ளைகளுக்கு என்ன சொல்கிறோம், தெரியாதோரோடு பெரிசாக கதைக்கப்படாது, உணவு வாங்கி உண்ணப்பிடாது.. எனத்தானே.. அதனால அந்த ரெண்டு சிறுசுகளையும் முத்துப்பேச்சியோடு போக விடமாட்டேன்ன்... தண்டவாளத்தில ரெயில் போராட்டம் நடட்தி[நன்றி வனவாசம்:))] ரெயினை மறிப்பேன்ன்.. இது அந்த முத்துப் பேச்சியின் கழுத்தில இருக்கும் வைர அட்டியல்மீது ஜத்தியம்ம்ம்ம்:))

      நீக்கு
  34. /// பாவம் அவர்கள் என சப்போர்ட் பண்ணிப் பேசியிருப்பேனே தவிர, இவ்ளோ தூரம் இப்பூடித் தைரியமாகப் பேச எப்படி மனம் வரும்.//
    ஆஆ சிங்கப்பேன் ஸ்ஸ்ஸ் டங் ஸ்லிப் சிங்கப் பெண் காலம் இறங்கிருச்சி டோய் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆ சிங்கப்பேன் ஸ்ஸ்ஸ் டங் ஸ்லிப் சிங்கப் பெண் களம்  இறங்கிருச்சி டோய் :))

      நீக்கு
    2. //
      Angel14 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:40
      ஆஆ சிங்கப்பேன்//

      https://media.giphy.com/media/NbQgN8rgZornO/giphy.gif

      நீக்கு
    3. அன்பின் ஏஞ்சலும் அதிராவும் நெல்லையும் கருத்துக்குக் கருத்தாக சொல்லியவை அமர்க்களம்..

      முத்துப்பேச்சி சொன்னவற்றுள் -
      அந்த இளஞ்ஜோடிக்கும் தமக்கும் உறவு என்பதைத் தவிர மற்றவை எல்லாம் உண்மையே...
      அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லை...

      அன்பான கருத்துரைகள் மனம் கவர்ந்தன... மகிழ்ச்சி.. நன்றி..
      மீண்டும் சந்திப்போம்...

      நீக்கு
  35. எனக்கு புகை வண்டியில் பயணித்த அனுபவம் உண்டுஆனால் என்கண்களுக்கு நல்லவை எதுவும் தென்படாது துரை ராஜுவுக்கு நேர் எதிர்

    பதிலளிநீக்கு
  36. அனைவருக்கும் இனிய தமிழ் ஸார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள். துரை செல்வராஜ் சார், அமைதியாக இருந்துக் கொண்டு பிரம்மாதமான ஒரு உருக்கும் கதை எங்களுக்கு புத்தாண்டன்று பரிசாகக் கொடுத்தீர்கள். மிகவும் பெருமையாக இருக்கின்றது நீங்கள் எங்கள் பிளாகில் இருப்பது. முத்துபேச்சி நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவர். நாமும் அவரை பின் பற்றி நம்மால் முடிந்த அளவு மற்றவருக்கு உதவி செய்ய முயல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> நம்மால் முடிந்த அளவு மற்றவருக்கு உதவி செய்ய முயல்வோம்..<<<

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  37. காலணா, அரையணா கணக்கோட, கனகச்சிதமா ஒரு கத. பொகைவண்டிக்குள்ளே பொகயோட பொகயா இன்னும் எத்தன எத்தன கதயோ, கதகதப்போ .. ஆரு கண்டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...

      கவிதை போலொரு கருத்துரை...
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  38. அந்தக்காலத்தை கண்முன்னே கொண்டுவந்தது கதை அருமை. அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  39. இன்று எனது கதையைப் பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
    இணையம் இழுவையாகி விட்டது... பக்கங்கள் திறக்க நாழியாகின்றது..

    இன்னும் சில மணி நேரம் கழித்து வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் அரைத் தூக்கத்தில் இருப்பவர்கள் விழித்துக் கொள்ளட்டும் என்பது போல கொள்ளிடத்து இரும்புப் பாலத்தின் மீது தடும்.. தடும்... கடக்.. கடக்... தடும்... தடும்... என்று பெருஞ்சத்தத்துடன் வேகமாகப் பாய்ந்தது அந்தப் புகை இரதம்...//எத்தனையோ வருடங்கள் இதே கொள்ளிடம் பாலம், அதன் கீழே பொங்கிப் பெருகும் காவிரி
      என்று கடந்திருக்கிறோம். முத்துப்பேச்சி அம்மாவுடன், அந்த இள நெஞ்சங்களுடன் நானும் பயணித்தேன். அசராமல் பதில் சொல்லிக் கோர்வையாகக் கதை பேசி ,ஒரு அவமானத்திலிருந்து காத்த விதம் எத்தனை அழகு.

      உடல் நிலை சிறிதே கலங்கியதில்
      நிறைய பதிவுகளுக்கு வர முடியவில்லை.
      மன்னிக்கணும்.

      நீக்கு
    2. >>> அசராமல் பதில் சொல்லிக் கோர்வையாகக் கதை பேசி ,ஒரு அவமானத்திலிருந்து காத்த விதம் எத்தனை அழகு...<<<

      பதிவுக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.. நன்றி...

      தங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள் அம்மா...

      நீக்கு
  40. எளிமையான கதையுடன் இன்றைய பதிவு இனிப்பாக இருக்கிறது
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  41. சிறப்பு. அருமையான கதை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். எதிர்பாராத முடிவை வழங்கியது பாராட்டுக்குரியது. தொடருங்கள், தொடர்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  42. இந்த பதிவை சிறுகதை அல்லது இலக்கியம் என வகைப்படுத்தியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  43. அருமையான கதை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!