வியாழன், 18 ஜூன், 2020

நான் ஒரு மேடைப் பாடகன்...

இப்படி சென்ற வாரம் முடித்திருந்தேன்.  அனைவருக்கும் அவரவர் ஆசை நினைவுக்கு வந்திருக்கும்.  எனக்கு என்ன ஆசை என்று சொல்கிறேன்.

கையில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் ஆசை!  அல்லது கிடார் வாசிக்கும் ஆசை.கிடாரைக் கையில் வைத்து அதன் கம்பிகளைத் தட்டினாலே சங்கீதம் வந்து விடுமா என்ன!  என்னிடம்தான் ஞானம் கம்மியாச்சே...     முயற்சியும் கம்மி!  எனவே 'ப்ராக்ராஸ்ஸிவ் காம்ப்ரமைஸ்' (நன்றி சுஜாதா)  ஆக  பின்னர் கையில்  கிடார் வைத்துக்கொண்டு  ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்குத் தேய்ந்தது என் ஆசை.
சரி, வரிசையாக வருகிறேன்...

மதுரையில் நான் டியூஷன் சென்ற இடத்தில் எனக்கு இரு நண்பர்கள் அறிமுகமானார்கள். 

பிரபு, பாலா.  

இருவரும் செம தோஸ்த்.  இணை பிரியாத நண்பர்கள்.  பாலா சற்றே வசதிக்குறைந்த பையன்.  ஆனால் பெரிய மனிதன் மாதிரி தோரணை, வாட்ட சாட்டமான (அடிதடிக்கு உதவும்) தோற்றம். அந்த வயதுக்கு சற்றே அடர்ந்த மீசை.  பிரபு சற்றே வசதியான வீட்டுப் பையன்.  ஒல்லியான உருவம்.  சற்றே கருத்த உருவமாயினும் கவர்ந்திழுக்கும் சிரிப்புக்குச் சொந்தக்காரன்.  அரும்பு மீசை.

இருவருமே சேர்ந்தேதான் சைக்கிளில் சுற்றுவார்கள்.  தனித்தனி சைக்கிள்!  நானும் சைக்கிள் வைத்திருந்தேன்.

டியூஷன் முடிந்ததும் ஒருநாள் என்னையும் அவர்களுடன் டீ சாப்பிடக் கூப்பிட்டார்கள்.  டீக்கடையில் பேசியபடியே டீயைக் குடித்துக்கொண்டிருந்தோம்.  தினமும் எதிர்ப்படும் நேரத்தில் மட்டும் புன்னகை புரிந்த நிலையிலிருந்து நாங்கள் சற்றே நெருக்கமான நேரம் அது.  

"எப்படி தோஸ்த் இப்படி காலங்கார்த்தால நேரத்துக்கு வந்துடறீங்க...   ஸார்  உங்களை வச்சே எங்களை லந்தேத்தறாரு..." என்றான் பிரபு.  எப்போதுமே இந்த இருவரும் டியூஷன் ஆரம்பித்து பத்து, பதினைந்து  நிமிடங்கள் கழித்துதான் உள்ளே வருவார்கள்!

தஞ்சாவூரில் இருந்த காலம் வரை நாங்கள் ஃபிரெண்ட்..  என்று அழைத்தோ (அதுவும் எப்போதாவது),  பெரும்பாலும் அவரவர் பெயரைச் சொல்லியோ அழைத்துப் பேசிக்கொள்வோம்.  மதுரையில் எல்லோரும் நண்பர்களை தோஸ்த் என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் பயந்துட்டான் என்று சொல்ல வேண்டும் என்றால் "அவன் அப்படியே டர் ஆயிட்டான்" என்றார்கள்.  அதுமாதிரி ஒரு வார்த்தைதான் இந்த 'லந்து' என்னும் வார்த்தையும்!  நக்கல், கிண்டல் என்கிற அர்த்தத்துக்கு வரும்!  தஞ்சையிலிருந்து நான் மதுரை வந்த புதிதில் இந்த வார்த்தை மாறுதல்களால் சில கிண்டல்கள் எங்களுக்குள் நிகழும்!   சரி...  பிரபுவின் கேள்விக்கு வருகிறேன்.

"என்னால் முடிந்த ஒரே நல்ல விஷயம் அதுதான்" என்றேன்.

அடுத்து வந்த நாட்களில் தினசரி டீ குடிப்பது வழக்கமானது.  அதில் எனக்கு ஒரு சங்கடம்.  

அவர்கள் அளவு என் கையில் காசு இருக்காது.  எப்போதாவதுதான் நான் கொடுப்பேன்.  கமிஷன் அடிக்கும் கஷ்டம் எனக்கல்லவா தெரியும்!  அதுவே சினிமாவுக்குப் போவதற்கு போதாது!  சைக்கிள் செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்!  எனவே தினசரி அவன் காசில் டீ குடிக்க நான் முரண்டு பிடித்தபோது பிரபு "சரி... இனி தினமும் நீயே கொடு" என்று விட்டான் சட்டென்று!  

திகைத்துப்போன என்னைப் பார்த்துச் சிரித்த பாலா "அவனிடம் காசு இருக்கு...  கொடுக்கறான்.  நீ ஏன் சங்கடப்படறே...?  விடு"  என்றான்.  பிரபுவும் புன்னகைத்தான்.  பாலா அதிகம் பேசவே மாட்டான்.  ஆனால் இருவரும் சேர்ந்தே இருப்பார்கள்.  சைக்கிளில் அமர்ந்தவாக்கில் காலை ஊன்றி, பாரின்மீது கைகளை வைத்து குனிந்திருப்பது பாலாவின் வழக்கம்.  

இவர்கள் ஏன் என்னுடன் நெருக்கம் காட்டிப் பழகினார்கள் என்பது அப்போது எனக்குப் புரியாத புதிர்.  டியூஷன் இல்லாத  ஒருநாள் என் வீட்டு வாசலுக்கே வந்து அழைத்தார்கள்.  எனக்கு சங்கடம், சந்தேகம்.  இவர்களின் இங்கைய வருகையை சந்தேகப் பட்டதற்கு என்னிடம் காரணங்கள் உண்டு.  என் சகோதரியிடம் வம்பிழுத்த சில நபர்களை நான் டீல் செய்திருக்கிறேன்.  இவர்களும் அப்படியா என்கிற சந்தேகம்!  

ஆனால் அவ்வப்போது என்னை மறைமுகமாக மிரட்டி வந்த சிலர் பாலாவைக் கண்டு ஒதுங்கி எச்சரிக்கையானது தெரிந்தது!  காரணம் அவன் தோற்றம்! வழக்கமாக வம்பிழுக்கும் ஒருவன் இன்னொரு நண்பனுடன் எங்கள் வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது பாலாவும், பிரபுவும் அங்கிருக்க,  பாலா அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்தான்.  என் முகபாவம் கண்டதும் புன்னகைத்தவன், "தொல்லை கொடுக்கறாங்களா?  தங்கச்சியா?" என்றவன், சைக்கிளை நேராக்கி அவர்களைத் தொடர்வது போல ஒரு மூவ் கொடுத்தான்.  திரும்பிப் பார்க்காமல் வேகமாக சென்ற அவர்களை அப்பறம் நான் பார்க்கவில்லை!

ஆனால் அந்த முரட்டு பாலாவிடம் கூட நான் சந்தேகப்பட்ட மாதிரி ஒரு சிக்னலே இல்லை என்பது தெரிந்தது, உணர்ந்து கொள்ள முடிந்தது.  ஆனாலும் கேள்விக்குறியுடனே தொடர்ந்து பழகி வந்தேன்.  இவர்களுடைய வருகையால் என் ரெகுலர் நண்பர்கள் சிலரிடமிருந்து எனக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது.

ஒருநாள் டியூஷன் முடிந்ததும் "அக்கா உடனே வீட்டுக்கு வரச்சொன்னாங்க" என்று கூறி பிரபு டீக்கடைக்குச் செல்லாமல் வீடு நோக்கி கிளம்பிவிட்டான்.  வழியில் நான் என் பாதையில் சைக்கிளைத் திருப்பும் சமயம் என்னையும் வற்புறுத்தி அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டான்.  அரசுக்குடியிருப்பில் வசித்த எனக்கு தனி காம்பவுண்டில் வசித்த அவர்கள் வீடு பார்க்கும்போதே பிடித்துப் போனது.  சைக்கிளை போர்டிகோவில் வைக்கச்சொல்லிவிட்டு என்னையும் உள்ளே அழைத்துச் சென்று விட்டான்.

பாலா அந்த வீட்டின் சகஜமான வருகையாளன் என்பது தெரிந்தது.  அவன் சகஜமாக உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து அங்கிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான்.

கூச்சத்துடனும் சங்கோஜத்துடனும் (நான் எப்பவுமே அப்படிதானுங்க) உள்ளே வந்து, சோபா நுனியில் அமர்ந்திருந்த என்னை இழுத்து உள்ளே தள்ளி முரட்டுத்தனமாக சரியாக அமரவைத்துச் சிரித்தான் பாலா.

"தம்பி..  வந்துட்டியா.." என்று உள்ளேயிருந்து வந்த அவன் அக்காவிடம் என்னை அறிமுகப்படுத்தினான் பிரபு.  இரண்டு கோப்பை டீயுடன் வந்த அவன் அக்கா "இது யாரு பிரபு?  புதுத்தம்பியா இருக்கு...  சொல்லக்கூடாது?" என்று சொல்லி, "இந்தா தம்பி...   இதை நீ எடுத்துக்க...   பாலா..  இது உனக்கு..  பிரபு இருடா... உனக்கு இதோ கொண்டு வர்றேன்" என்று உள்ளே சென்றார்.  அவர் மருத்துவ இறுதி ஆண்டு மாணவி என்று பின்னர் தெரிந்தது.

இதை இவ்வளவு விளக்கமாக கதை போல ஏன் சொல்கிறேன் என்றால், நான் ஒரே ஒரு நண்பனைத்தவிர, வேறு யாரையும் உள்ளே அழைத்து உட்கார வைத்துப் பேசியதில்லை.  அந்த உள்ளே வந்த நண்பனையும் நான் அழைத்ததில்லை.  அவனே உள்ளே வந்து அமர்ந்து விடுவான்.  அவனுக்குத்தான் நான் டைப் அடித்துக் கொடுப்பது!

இந்நிலையில் இந்தக் கலாச்சாரம் எனக்கு புதிதாக இருந்தது.  ஏதோ கற்றுக் கொடுத்தது!

ரொம்ப போர் அடிக்கிறேனா என்று தெரியவில்லை.  ஜி எம் பி ஸார் "இப்போதான் கொஞ்சம் வெளியில் வந்து பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்" என்று சொன்னது(ம்) நினைவுக்கு வருகிறது!  ரொம்ப போர் அடித்தால் இதை ஸ்கிப் செய்து மற்ற பகுதிகளுக்குச் சென்று விடவும்!  

அவன் அக்கா கிளம்பிச் சென்றதும் பிரபு உள்ளே சென்று கையில் எடுத்து வந்த பொருளைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றது!


கிடார்!

=======================================================================================

பொக்கிஷம் :

இப்போ கொரோனா...   அப்போ டெங்கு!  இலை இல்லை டிங்கு!சாமா ஜோக்ஸ்...   படிக்க முடிகிறதா?பழைய செய்தி ஒன்று..     கொஞ்சம் சுவாரஸ்யமான செய்தி!

வாஷிங்டன்: பிரசவத்தின் போது கைகளை கோர்த்தபடி தாயின் கர்ப்ப பையில் இருந்த இரட்டைகுழந்தைகளை டாக்டர்கள் ஆச்சிரியமாக பார்த்தனர். அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் பில் போத் மற்றும் சாரா டிஸ்டில்தவெயிட் ஆவர். சாரா கர்ப்பமாக இருந்தார். கடந்த அன்னையர் தினத்தையொட்டி அவர் குழந்தை பெற்று கொள்ள விரும்பினார். இதை தொடர்ந்து நேற்று டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

அவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அதிசயம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை கோர்த்தபடி பிறந்து உள்ளது. குழந்தைகளுக்கு ஜில்லியன் மற்றும் ஜின்னா என பெயரிட்டு உள்ளனர். இது குறித்து சாரா கூறும் போது இது  அன்னையர் தினத்தில் எனக்கு கிடைத்த நல்ல பரிசுப் பொருள். நான் இதை நம்ப வில்லை, இது அதிசயமானது இருவரும் கைகோர்த்தபடி பிறந்து உள்ளனர். இருவரும் நல்ல நணபர்களாக இருப்பார்கள் என கூறினார். 

- தினகரன் -


ஒரு சின்னப்பறவை...!

சென்ற வாரம் அலுவலகத்தில் மின் விசிறியில் அடிபட்டு விழுந்த பறவை...   ஏதோ தங்க மீன்கொத்தி என்று சொன்னார் பூபாலன்.  அது ஏன் இங்கு வந்தது என்று தெரியவில்லை!  பின்னர் ஆட்டோவில் வைத்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார்.  இது கொஞ்ச நாட்களுக்கு முன்னால் எங்கள் (பழைய) வீட்டுக்கு வந்த அந்தப் பறவை அல்ல!=====================================================================

விளம்பரம் !!

உங்கள் அபிமான எங்கள் ப்ளாக்கில் எதிர்பாருங்கள் !!


==============================

இந்த வாரம் கதம்பப் பகுதி குறைவு என்பதால் புத்தக அறிமுகம் இன்றே வெளியிட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.  இந்தச் சுருக்கமான அறிமுகத்தில் இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார் அரவிந்த்.நம் வேர்களை அறிவோம்: இரு புத்தகங்கள் வாயிலாக.

இரா. அரவிந்த் 

அனைத்து மக்களையும் ஒரே நாகரீகக்குடையின்கீழ்க் கொண்டுவர முயலும்  வியாபாரமே கடவுளாக விளங்கும் இன்றைய  உலகமயமாக்கல் சூழலில் நம்மை நாமே அறிந்துகொண்டால்  மட்டுமே நம் பெருமையையும் நாம் இழந்துகொண்டிருக்கும் நம் சொந்த வளங்களையும் உணர்ந்து அவற்றை தற்காத்துக்கொள்ள முடியும்.

தமிழன் யார்? தமிழனுக்கு மதம் என்பது ஆரம்பகாலத்திலிருந்தே இருந்ததா? தமிழனின் சங்ககாலம் தொட்டு 20 ஆம் நூற்றாண்டுவரையிலான  வரலாறு என்ன? அவனது வாழ்வு, பண்பாட்டுக்கூறுகளும் எந்தெந்த காலங்களில் எவரெவர் வருகையால் எப்படியெல்லாம் மாற்றமடைந்துள்ளன

எவையெவை உண்மையிலேயே தமிழனின் பண்டிகைகள், எவையெவை இடையில் எப்படி புகுத்தப்பட்டுள்ளவை? ஒருகாலத்தில் உயர்ந்த இடத்தில் மதிக்கப்பட்ட பரையர், பள்ளர் போன்றோர் இன்று தாழ்ந்த சாதியினராக மாறியது எங்ஙனம் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடையே திரு கே. கே. பிள்ளை அவர்களின் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், அகழாய்வுகள், வெளிநாட்டார் குறிப்புகள், நாணயங்கள் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதமிழக வரலாறு மக்களும் பண்பாடும்நுல்.

சிறுவயதிலிருந்தே நம் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் அடிப்படைக் கேள்விகளான கடவுள் யார்? அவர் உண்மையா அல்லது மானிடரின் கற்பனை ஊன்றுகோல் மட்டும்தானா? அவரைக் குறித்த ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த விவாதங்களில் எவையெவை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத் தக்கவை

உயிர் அல்லது ஆன்மா உள்ளதா? அது இதயத்தில் உள்ளதா அல்லது மூளையில் உள்ளதா? முன்பே எழுதப்பட்ட விதி என்ற ஒன்று இருப்பின் நம் உடல் மற்றும் ஆன்ம பலம் கொண்டு நம்மை மாற்றுவது சாத்தியமா? கடவுள் வழிபாடு எப்படி ஆதிகால இயற்கை வழிபாடு முதல் இன்றைய பிரம்மாண்டமான கோயில் வழிபாடுவரை வளர்ச்சியடைந்தது? போன்றவற்றிற்கு தக்க ஆதாரங்களுடன் விடையாக வருகிறது திரு. பேரா. சுந்தர ஷண்முகனார் அவர்கள் எழுதியகடவுள் வழிபாட்டு வரலாறுநூல்.

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்நுல் மெரீனா பதிப்பகத்திலும்கடவுள் வழிபாட்டு வரலாறுநூல் "freetamilebooks.com" வலைதளத்திலும் கிடைக்கிறது.

இவ்விரு புத்தகங்களை படிப்போம், நம் வாழ்வு மற்றும் சிந்தனைகளின் வேர்களை அறிந்து நம் பகுத்தறிவை விரிவு செய்வோம்.

நட்புடன்,
இரா. அரவிந்த்.

===================================================================

157 கருத்துகள்:

 1. மிக இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். நட்புகளைப் பற்றித் தொபரவும். இன்னும் பிரபு ,பாலா நட்பு வட்டத்தில் இருக்கிறார்களா. எத்தனை இனிமையான. காலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கச்சியின் மெய்ககாப்பளனாக இருந்திருக்கிறீர்கள். ஏதோ பழைய சினிமா போலக் காட்சிகள் விரிகின்றன. கீதா ரங்கன் சொன்னது போல கரோக்கி இசையுடன் நீங்கள் பாடி பதிவு செய்யலாம் என் வேண்டுகோள.

   நீக்கு
  2. அரவிந்தன் அவர்களது எழுத்து வெகு நாட்களாகப் படித்து நெருங்கிய உணர்வுக் கொடுக்கிறது.

   நீக்கு
  3. ஜோக்குகளைக கணினியில் தான் பார்கக வேண்டும்.

   நீக்கு
  4. பொக்கிஷம் அருமை. தங்கமீன்கொத்திப் பிழைத்து பறந்ததா? பாவம்..வனத்துறையினர் கவனம் வைத்திருப்பாரகள். அப்பாதுரை எழுதப் போகிற செய்தி இனிமை. வாழ்த்துகள். கை கோர்த்துப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பற்றி கற்பனைகள் உருவாகின்றன. அப்புறம் கைகளை விடுவித்தார்களா. அதிசயம்.அருமை. மகிழ்ச்சி.

   நீக்கு
  5. எல்லா கருத்துரைகளுக்கும் நன்றி. இரசிப்புக்கு நன்றி.

   நீக்கு
  6. வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரபு, பாலா எங்கே இருக்கிறார்களோ இப்போது! இத்தனை நாட்களில் ஒரு நொடி என்னை எப்போதாவது நினைத்திருக்கக் கூடும்.

   நீக்கு
  7. // தவிர்க்க முடியாமல் அமைத்து போனது! கண்டுகொள்ளாமல் கூட விட்டிருக்கலாமோ என்னவோ!

   // கரோக்கி இசையுடன் நீங்கள் பாடி பதிவு செய்யலாம் என் வேண்டுகோள.//

   ஹா... ஹா... ஹா... பயணங்கள் முடிவதில்லை பாடல் மாதிரி ஒரே இருமல் சத்தம்தான் கேட்கும்!!!

   நீக்கு
  8. இரட்டைக் குழந்தைகள் கதையும் தங்கமீன்கொத்தி கதையும் என்னாச்சோ... தெரியவில்லை. நன்றி அம்மா - அரவிந்த் சார்பாகவும்.

   நீக்கு
 2. டெங்கு ஜோக்குகள் பிரமாதம். இப்படி குண்டாக
  மறைத்துக் கொண்டிருந்தால் விக்கெட் எடுப்பது எப்படி?ஹாஹா.

  குட்டிப் பையன் சொப்பனம் பரிதாபமாக இருக்கிறது.
  மேட்ச் நின்றுவிடும் என்று பயந்து இருப்பான்.
  குழந்தைகள் பிள்ளையாரிடம் வேண்டுவது
  நல்ல சிரிப்பு.

  இந்தக் கொரோனா போல் எந்த வியாதியும் பயமுறுத்தியது
  இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன் காலத்தில், ப்ளாக், முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்கள் கிடையாது. அவ்வளவு ஏன்? தொலைக்காட்சியே 1975 க்கு முன்பு இந்தியாவில் அவ்வளவு கிடையாது. மக்கள் செய்தித் தாள்களையும், ரேடியோவையும் கொண்டுதான் நாட்டு நடப்புகள் அறிய முடியும்.
   ஆனால், இன்று சமூக தளங்கள் பெருகிவிட்டதால், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் நிகழும் நல்லது கெட்டது எல்லாமே அடுத்த நிமிடம் உலகம் முழுவதும் தெரிந்துவிடுகிறது.
   அதனால்தான், கொரோனா பயம் இவ்வளவு பரவியிருக்கின்றது.
   பயம் ஒருபக்கம் இருந்தாலும், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவர் பரிந்துரைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று எல்லாமே சுலபமாக பரவிவிடுகின்றது. இந்த வகை தொற்று முன் காலத்தில் வந்திருந்தால், வந்த ஒரே மாதத்தில் உலக ஜனத்தொகையில் பாதி குறைந்திருக்கும். நம்முடைய நல்ல காலம், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் அது தலைகாட்டியுள்ளது. எச்சரிக்கையுடன் நாமும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, நம் சுற்றுப்புற ஜனங்களுக்கும் எடுத்துக்கூறி நடந்தோம் என்றால், நிலைமை விரைவில் சீர் ஆகும்.

   நீக்கு
  2. //வந்த ஒரே மாத்த்தில்// - அப்படி இருக்க முடியாது கேஜிஜி சார். அப்போல்லாம் இருக்கும் இடம் சார்ந்த வேலை, பொருளாதாரம். ஒரு ஊரில் வந்திருந்தால் அதைச் சுற்றியுள்ள இரண்டு மூன்று கிராமங்கள் பாதிக்கப்படும். இப்போ மாதிரி, எங்கிட்டதான் பைக் இருக்கு, கார் இருக்கு என்று ஊர் சுற்றி சக மனிதர்களுக்குப் பாதிப்பு உண்டாக்கும் குணமோ, அதற்கான வசதிகளோ அப்போ கிடையாதே

   நீக்கு
  3. ஹா ஹா ! அதுவும் சரிதான். நான் சொன்னது, சாதாரண மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள்.

   நீக்கு
  4. கேஜிஜி சொல்லி இருப்பதும் சரியே
   ... நெல்லை சொல்லி இருப்பதும் சரியே... இல்லையா?!!

   நீக்கு
  5. நீங்கள் சொல்வதும் சரியே!

   நீக்கு
  6. சரியோ சரி..

   OCD காரன் மாதிரி முயற்சி பண்ணி ஜிவாஜி படங்களைக் கடந்து இத்தனை தூரம் வந்திட்டேன்..

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் பிரச்னைகள் அனைத்தும் குறைந்து அனைவரும் நல்வாழ்வு, ஆரோக்கியமான, மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 5. உங்களுக்கு "கிடார்" எனில் எனக்கு "வீணை!. ஆனால் ஔரங்கசீபான அப்பாவை வைத்துக்கொண்டு வீட்டில் பாடல்களை முணுமுணுக்கக் கூட முடியாது! அம்மாவே அப்பா இல்லாதப்போத் தான் பாடுவார். எங்கே! புகுந்த வீட்டில் நேர்மாறாகப் பாடலாம் என்றாலும் கற்றுக்கொள்ளும் ஆசைகள் நிறைவேற வசதியும், வாய்ப்பும் இருந்ததில்லை. குடும்பவேலைகள் தவிர அடுத்தடுத்து வரும் விருந்தினரைக் கவனித்துத் திருப்தி செய்து அனுப்புவது ஒரு பெரிய வேலையாக இருந்துவிட்டது. இப்போ!!!! யாருமே வருவதில்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. " ....... புகுந்த வீட்டில் நேர்மாறாகப் பாடலாம்..... " !!!!!

   நீக்கு
  2. கீசா மேடம்... அப்போ சித்தப்பா மட்டும்தான் சாஃப்டா?

   நீக்கு
  3. ஓ... உங்களுக்கு வீணை வாசிப்பில் ஆர்வம் இருந்ததா? அட...

   நீக்கு
  4. கௌதமன் சார், புகுந்த வீட்டில் நேர்மாறான கருத்து! தாராளமாகப்பாடலாம். :))))) தவறான பொருளில் அமைந்திருப்பதை இப்போத் தான்கவனிக்கிறேன். நன்றி சுட்டிக்காட்டியதுக்கு!

   நீக்கு
  5. நெல்லை, பெரியப்பாக்கள் என வந்திருக்கணும். எனக்கு அப்பா வழியில் எல்லோரும் பெரியப்பாக்களே! அசோகமித்திரன் அம்மாவின் சொந்தத் தங்கை கணவர். அவங்கல்லாம் சிகந்திராபாதில் இருந்தப்போவே இருந்தே பாட்டு வாத்தியார், சுருதிப்பெட்டி சகிதம் பாட்டுக் கற்றவர்கள். எல்லோருமே அருமையாகப் பாடுவார்கள். சித்தப்பா தன் பிள்ளைகளுக்காக ராகங்களை வெறுமே முணுமுணுப்பார்! அதுவே இனிமையாக இருக்கும்.

   நீக்கு
  6. அடடே... பாட்டு கற்றுக் கொள்வது என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று!

   நீக்கு
 6. வணக்கம்
  ஐயா

  விமர்சனப் பார்வை சிறப்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எனக்கும் பால்ய கால சிநேகிதிகளில் இருந்து பலரை நினைவில் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்களோடு வெளியில் எல்லாம் போய் விளையாடியதோ அவங்க வீடுகளுக்குப் போனதோ இல்லை. இப்போவும் உங்கள் நண்பர்களோடு உங்களுக்குத் தொடர்பு இருந்து வருகிறதா? இருந்தாலும் சின்ன வயசில் இருந்தாப்போல் இருக்காது. அவரவர் குடும்பம் என்று ஆனபின்னால் கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்த காலத்து நண்பர்கள் தனி; வேலை பார்க்கும் கால நண்பர்கள் தனி. பள்ளிக்கூட நண்பர்கள் சில வருடங்களுக்குப் பிறகு தொடர்வது அபூர்வம். வேலை பார்க்கும் காலம் - அதுவும் இந்தக் காலம் என்றால், வாட்ஸ் அப் / முகநூல் போன்ற சாதனங்களின் மூலம் தொடர்ந்து நட்பாக நீடிக்க இயலும்.

   நீக்கு
  2. கேஜிஜி சார்.. அத்துடன் இணைய நண்பர்களைக் குறிப்பிட விட்டுவிட்டீர்களே. நண்பர்களுக்குள் வரும் தகராறுகளைப்போல முகமறியா இணைய நண்பர்களுக்குள்ளும் வருகிறதே

   நீக்கு
  3. இணைய நண்பர்களுக்கிடையில் தகராறு வந்தால், நொடியில் அவர்களை விட்டு விலகிட இயலும்.

   நீக்கு
  4. பால்ய கால நண்பர்களுடன. கொஞ்.....சமா...க தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் கூட வேறு பதிவில் சொல்லி இருந்தேன்.

   நீக்கு
  5. கேஜிஜியின் கமெண்ட்டுக்கு நெல்லையின் பதிலும், அதற்கு மறுபடி கேஜிஜி பதிலும் சூப்னர்.

   நீக்கு
 8. சாமாவின் நகைச்சுவைத்துணுக்குகளைக் கஷ்டப்பட்டுப் பார்த்துப் படித்துப் புரிந்து கொண்டேன். குட்டிப் பையனின் கனவுகள் அருமை. கிரிக்கெட் மனிதர்களை எவ்வளவு தூரம் ஆட்டி வைக்கிறது! கைகளைக் கோர்த்துக்கொண்டு பிறந்த இரட்டையரை நினைக்கையில் அப்பாதுரை எழுதிய ஓர் கதை (அதுக்கப்புறமா எழுதவே இல்லைனு நினைக்கிறேன்.) நினைவில் வருது. ஆணும் பெண்ணுமாக இரட்டையர்கள். வயிற்றிலேயே சண்டை போட்டுக்கொள்வதாகக் கதையை ஆரம்பித்திருந்தார். என்னடா இதுனு கீழே பார்த்தால் அப்பாதுரையின் எழுத்து வரப்போவதாக விளம்பரம்! எந்த நாளை ஒதுக்கி இருக்கிறீர்கள்? ஆங்கிலத்தில் ஜீல் என்று போட்டுவிட்டுத் தமிழில் ஜூல் என எழுதி இருக்கீங்க விளம்பரத்தில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. (விளம்பரம் அனுப்பியவரும் அவரே!)

   நீக்கு
  2. ஆமாம்.. சாமா ஜோக் புகைப்படம் எடுத்த வகையினால் படிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. அப்பாதுரை எழுதும் கதை விரைவில் இங்கு வெளியாகும்.

   நீக்கு
  3. ’விளம்பர’த்தில் காணப்படும் ஆங்கில வார்த்தை Jewel. அதற்கு சரியான உச்சரிப்பான ’ஜூல்’-தான் எழுதப்பட்டுள்ளது..

   சிலநாட்கள் முன்புதான் நினைத்தேன். இவர் எங்கே ஆளையே காணவில்லை என்று. வந்துட்டார்.. Welcome to Appadurai ! அந்தக்காலத்து Erle Stanley Gardener, James Hadley Chase நாவல் மாதிரி தெரிகிறது அட்டைப்படம், துப்பாக்கியும் கன்னியுமாக! டுமீல்.. டுமீல்.. என ஆரம்பமாகிறதோ!

   நீக்கு
  4. வாங்க ஏகாந்தன் ஸார்.. அப்பாதுரை எபி எடிட்டர்ஸ் வாசகர்கள் வாட்ஸாப் குழுமத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

   நீக்கு
  5. w மறைஞ்சிருக்கு அவ்ளோ தான்.

   நீக்கு
  6. கதையைச் சொல்லாம விட்டிங்களே ஏகாந்தன்!! உங்க கணிப்பு 100% சரி.. uncanny! அபாரம்!

   கதைல சொல்லியிருந்தாலும் நீங்க பிட்டு வச்சதால இங்கயும் அறிவிச்சுக்கறேன்.

   சமீபத்துல படித்த erle stanley gardner கதை, பார்த்த john wick படங்கள் இவற்றின் பாதிப்பில் எழுதின கதை.. ஜீல்.

   விளம்பரத்துக்கு நன்றி ஶ்ரீராம்.. (இருந்தாலும் இத்தனை ஜிவாஜி படங்களா.. நியாயமா?)

   நீக்கு
  7. @கீசா
   நீலன் கதையை நினைவு வச்சுருக்கீங்களா!! 🙏🏻

   நீக்கு
  8. ஆஹா.. நீங்க விசிட் அடிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா உஷாரா குறைச்சிருப்பேனே...!!!

   நீக்கு
  9. //..சமீபத்துல படித்த erle stanley gardner கதை, பார்த்த john wick படங்கள் இவற்றின் பாதிப்பில் எழுதின கதை.. ஜூல்.//

   வாங்க அப்பாதுரை! தூள் கிளப்புங்க!

   நீக்கு
 9. மீன்கொத்தியைப் பார்த்தால் எங்க அம்பத்தூர் வீட்டுக் கிணற்றுக்குள் டைவ் அடிக்கும் மீன் கொத்தியைப் போல் இருக்கு. உயிரோடு தானே இருந்தது? அதுவேறே கவலையா இருக்கும். :( விமரிசனம் நன்றாக இருந்தாலும் பதிவு நீளம் அதிகம். பதிவில் எதையானும் குறைச்சுட்டு விமரிசனத்தைச் சேர்க்கலாம். இரு புத்தகங்களும் படித்ததே இல்லை. வெள்ளிக்கிழமைகளில் வெறும் சினிமாப் பாடல் தானே வருகிறது? அன்றைய தினம் விமரிசனத்தை வைத்துக் கொண்டால் என்ன? உங்கள் வசதியையும் கவனிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் பதில் அளக்கவும் (மன்னிக்கவும்) அளிக்கவும்.

   நீக்கு
  2. அம்பத்தூர்ல கீதா சாம்பசிவம் மேடத்தின் பழைய வீட்டில் "கடல்" தவிர எல்லாம் இருந்திருக்கும் போலிருக்கு. ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஆக, நமக்குத் தெரிந்த இரண்டு பூலோக சொர்க்கங்கள், அம்பத்தூர் மற்றும் தேவக்கோட்டை!

   நீக்கு
  4. சமூகம் இப்பொழுதாவது உணர்ந்து கொண்டதே...

   நீக்கு
  5. சரி கீதா அக்கா.. இனி வெள்ளிக் கிழமைகளிலேயே பகிர்கிறேன். கேஜிஜியின் பதிலும் தேவகோட்டையாரின் பதிலும் புன்னகைக்க வைக்கின்றன.

   நீக்கு
  6. நன்றி ஸ்ரீராம், அம்பத்தூரை நான் பூலோக சொர்க்கம்னு எல்லாம் சொன்னதில்லை.சொல்லலை/சொல்லவும் மாட்டேன். ஆனால் வீடு நாங்கள் கிட்டே இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கொடுத்துக் கட்டிய மாதிரி. க்யூரிங் எல்லாம் நாங்க நாலு பேருமே செய்வோம். சாரங்களில் குழந்தைகளை மேலே ஏற்றிவிட்டு நானும், நம்ம ரங்க்ஸுமாகக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுப்போம். கூரை போட்டதும் தினம் மேலே ஏறிப் பாத்தி கட்டித் தண்ணீர் நிரப்புவோம். கூடவே எங்கள் ப்ரவுனியும் உதவிக்கு ஓடோடி வரும் தன் போலியோ கால்களால் நொண்டிக்கொண்டே!

   நீக்கு
  7. நெல்லை! எங்கள் வீட்டுக்கிணற்றடியில் இந்த மீன்கொத்தி உட்கார்ந்திருக்கையில் படம் எடுத்துப் போட்டிருக்கேன். விரைவில் சுட்டி தரேன்.

   நீக்கு
  8. https://gsambasivam.blogspot.com/2011/08/blog-post_13.html ப்ரவுன் நிற மூக்கோடு உட்கார்ந்திருக்கும் பாருங்க! கிட்டேபோனால் பறந்து விடுகிறதே என்பதால் கொஞ்சம் தள்ளி நின்றே எடுத்தது.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  உங்களின் கனவு என்னவென்று தெரிந்து கொண்டேன். உங்களின் பால்ய கால நண்பர்கள் பற்றி கூறும் பகுதியை ரசித்துப் படித்தேன். உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை,பற்று இருந்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

  சிலருக்கு இந்த மாதிரி நட்புக்கள் தொடர்ந்து நல்லவிதமாக வந்து கொண்டேயிருக்கும். அது போல் இவர்களும் இப்போது உங்கள் நட்பின் தொடர்பில் உள்ளார்களா?

  சங்கீதம் உங்களுக்கு பிடித்தமானதொன்று என்பதை வாரவாரம் வெள்ளி பாடல் பதிவின் மூலம் அறிந்து கொண்டுள்ளேன். . அந்த நண்பர் மூலமாக கிடார் வாசிக்க கற்றுக் கொண்டு உங்கள் கனவு நனவாகியிருக்குமென நினைக்கிறேன். தலைப்புக்கேற்றபடி ஆகி விட்டீர்களா..? என அடுத்த வாரத்தில் தெரிந்து கொள்ள நானும் ஆசைப்படுகிறேன்.

  எங்கள் குழந்தைகள் ஆசைப்படி எங்கள் வீட்டிலும் ஒரு கிடார் உள்ளது. அவர்களின் சந்ததிகளாவது அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... எல்லோரிக்குமே அவரவர் குடும்பத்தின் மீது ஒட்டுதல் இருக்கும்தானே.. அப்போது மிக நெருக்கமாய்ப் பழகிய பல நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது.

   ஓ.. உங்கள் வீட்டில் கிடார் உள்ளதா? வந்துடுவோம்!

   நீக்கு
 11. அடுத்த வாரம் இசை ஒலிக்கும் என்று நினைக்கிறேன்...

  இரா. அரவிந்த் அவர்களின் இரு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும்... அவரின் பார்வையில் பல கேள்விக்கான பதில்களையும் அறிய வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இசை அவரவர் மனதில் ஒலிக்கும்! ஹா... ஹா... ஹா.. நன்றி DD.

   நீக்கு
 12. திரைப்படத்தில் நடிக்கப் போனால் கிதார் வாசிப்பதுபோல் டூயட் பாடலாமே...

  லந்து வார்த்தையை உபயோகப்படுத்து மூன்று பதிவுகள் டிராப்பில் உள்ளது நாளை வெளியாகும்போது இன்று எழுதியது என்று நினைக்காதீர்கள் ஜி.

  லந்து, பங்கு இவைகள் எமது புழக்கத்தில் இருக்கிற வார்த்தைகள் (விரைவில் காப்பிரைட் வாங்கி வைக்கணும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கெல்லாம் திரையில் நடிக்க யார் சான்ஸ் தரப்போகிறார்கள்? லந்து வார்த்தைக்கு நானென்ன காபிரைட்டா வைத்திருக்கிறேன், நீங்கள் எழுதினால் ஏதும் சொல்வதற்கு? ஹா.. ஹா... ஹா.. நன்றி கில்லர் ஜி.

   நீக்கு
 13. கதம்பம் குறைவாக இருந்தாலும் மணத்திற்கு குறைவில்லை. நட்பை விவரித்த விதம் அருமை

  பதிலளிநீக்கு
 14. ஊக்குவிக்கும் அணைவருக்கும் மிக்க நன்றி.
  மேலும் பல நல்ல நூல்களை மெதுவாக அரிமுகம் செய்கிறேன்.
  பாலிய நன்பர்கள் குறித்த பதிவு சுவையானது, என் நினைவுகளை எங்கோ கொண்டு சென்றது.
  மாற்றுத்திறனாளிகளாந எங்கள் சமூகம் சிறியது எனவே, எங்கள் பாலிய கால நன்பர்கள் பெரும்பாலும் இன்னும் இணைப்பிலேயே உள்ளனர்.
  கல்லூரி நன்பர்கள் பலர் தான் காணவில்லை.

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

  கையில் கிடார் வைத்துக்கொண்டு பாடணும் என்ற ஆசை சரிதான். ஆனால் அதற்கான ஆதர்ச புகைப்படங்கள், இளைஞர்கள் கிடைக்கலையா? எல்லாம் 60+ புகைப்படங்களாக இருக்கே.

  பிறகுதான் வர இயலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை. நன்றி. அப்போது கண்ணில் பட்டு மனதில் நின்ற உருவங்கள். அது மட்டுமில்லை. அப்போது படங்களில் கிடாருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போதெல்லாம் இல்லை!

   நீக்கு
  2. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் காலேஜ் ஃபங்ஷனில் கிடார் பார்த்தேன். அக்கார்டின் வாசிப்பதையும் அதன் இனிமையையும் ரசித்தேன்.

   ஆண்டுவிழாவில் ஸ்டாஜில் மியூசிக்கோட ஒரு டான்ஸ் (கிடார், ஆண்.... அப்போ அது ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி). அந்த ஸ்பெஷல் டான்சர் ஆட ஆரம்பித்து சென்டர் ஸ்டேஜில் நல்ல உயரமா எம்புவதுபோல குதித்தார். அப்கோதைய ஃபேஷனான முழங்கால் வரை டைட் ஆன பேன்ட், அதற்குக்கீழ் லூசா இருக்கும். மேல குதித்த வேகத்தில் சென்டரில் கிழிந்துவிட்டது. பிறகு எப்படி அவரல் டான்ஸ் ஆட முடியும்? பாவம்... கஷ்டப்பட்டு தயார் நிலையில் வந்தும் ஸ்டேஜில் திறனைக் காண்பிக்க முடியலை.

   நீக்கு
  3. கிடாருடன் பாட்டு என்றவுடன் என் மனதில் ஒலிப்பது ஒருதலை ராகத்தின், வாசமில்லா மலரிது பாடல். நேயர் விருப்பத்தில் சேருங்கள்.

   நீக்கு
  4. உண்மையில் நான் ஸ்டேஜில் கிடார் வாசித்து நேரில் பார்த்ததில்லை.

   நேயர் விருப்பம்? ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 16. கிடார் - :) நினைவலைகள் நன்று. தொடரட்டும்.

  டிங்கு - :)))

  புத்தக அறிமுகம் - நண்பர் அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. டிங்கு பீதியை கிளப்பிவிட்டீர்களே இப்போது.

  பதிலளிநீக்கு
 18. உங்களின் கிட்டார் ஆசை அறிந்து கொண்டோம்.

  சாமா ஜோக்ஸ் கலக்கல்.

  அரவிந்த் புத்தக அறிமுகம் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ஜூல் - நம்ம கேஜிஜி சார் எழுதும் தொடர்கதை போலத் தோன்றுகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...அப்பாத்துரை சாரா.... 'விரைவில்'னு சொல்லியிருக்கீங்களே... எப்போ? மர்மக்கதை மன்னன் பிடி சாமி ரேஞ்சுக்கு விளம்பரம் அனுப்பியிருக்கிறாரே (படம் ரொம்ப ப்ரொஃபஷனலா தோன்றியது. அதற்கே பாராட்டணும்)

   நீக்கு
  2. எப்போ வருவாரோ எங்கள் ஜூலி எழுத!

   நீக்கு
  3. விர்....ரைவில் வருவார்தான்.. ஆனால்..

   நீக்கு
 20. //பின்னர் கையில் கிடார் வைத்துக்கொண்டு ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்குத் தேய்ந்தது என் ஆசை.//

  நண்பர் வீட்டில் கிடைத்த கிடார் மூலம் கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்தீர்களா? நண்பரிடம் கிடார் கற்றுக் கொண்டீர்களா என்பதை அறிய ஆவல்.

  மகன் கிடார் கற்றுக் கொண்ட வேளை சரியில்லை கொரோனா காலமாகி விட்டது பதியில் நிற்கிறது.

  பொக்கிஷபகிர்வில் சிறுவர்களின் பிரார்த்தனை நிறைவேற்றி இருப்பார் பிள்ளையார் என்று நினைக்கிறேன்.

  சாமா ஜோக்ஸ் படிக்க முடிகிறது , நன்றாக இருக்கிறது.

  //இருவரும் கைகோர்த்தபடி பிறந்து உள்ளனர். இருவரும் நல்ல நணபர்களாக இருப்பார்கள் என கூறினார். //

  அப்படியே இருந்து இருப்பார்கள் நண்பர்களாக என்று நம்புவோம்.

  //பின்னர் ஆட்டோவில் வைத்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார்//

  நண்பருக்கு நல்ல மனது, தங்க மீன் கொத்தி பிழைத்து இருக்கட்டும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா.. அடுத்த வாரம் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்! உங்கள் மகனும் கிடார் கற்றுக் கொண்டாரா? அதுவும் சமீபத்திலா? ஆச்சர்யமான ஒற்றுமை. அப்போது அந்த ஸீஸனில் கிரிக்கெட்டை விநாயகர் காப்பாற்றினாரா என்று தெரியவில்லை!

   நீக்கு
 21. அப்பாதுரை சாரின் கதை விளம்பரமே மர்ம நாவல் என்று சொல்கிறது.(மிரட்டுகிறது)
  அதுவும் கறுப்பு நாய் !

  பதிலளிநீக்கு
 22. இரண்டு புத்தகம் அறிமுகத்திற்கு நன்றி அரவிந் அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 23. பதிவை பொருமையுடன் படித்து என்னை ஊக்குவிக்கும் அணைவருக்கும் மிக்க நன்றி.

  என் பணிச்சூழலால் கட்டுண்டு இருப்பதன் விளைவாக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் நன்றி கூராமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. ஹா ஹா ஹா நீங்கள் ஒரு மேடைப் பாடகர் தான் ஸ்ரீராம்.. அதனாலதானே வெள்ளிக்கிழமையில் எங்கள்புளொக் மேடையில் பாடுறீங்கள்:)..

  அதுசரி அது கிடாரா? கிட்டார் ஆ?... ஏதோ கிடாய் என்பது போல ஆரம்பம் நினைத்து விட்டேன்:)...

  குடும்பத்தில் அக்கா தங்கை இருந்தால், அந்த விட்டு ஆண் எப்படி எல்லாம் நண்பர்களைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது எனத் தெரியுது ஹா ஹா ஹா. போரடிக்கவில்லை... நன்றாகத்தான் எழுதியிருக்கிறீங்கள்.. உண்மைக் கதைகள் படிச்சு போரடிக்காது எப்பவும்:)

  எங்கள் அண்ணனுக்கு ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட்.. எப்பவும் கூடவே ஒட்டியிருப்பார்கள்...

  நான் வளர்ந்து பெரியாளாக இருந்தபோது, நான் இருந்த அன்ரி வீட்டுக்கு முன்னால் அந்த ஃபிரெண்ட்டின் அக்கா வீடு, அந்தண்ணா அப்போது வெளிநாடு போய் வந்திருந்தார்.. அக்காவைப் பார்க்க வந்தவரிடம், அக்கா சொல்லியிருகிறா, உன் நண்பனின் தங்கை பின் வீட்டில் இருந்துதான் படிக்கிறா என...

  இவர் நேரே நான் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார், ஆனால் அந்நேரம் நான் வீட்டில் இருக்கவில்லை. இத்தனைக்கும் ஒருநாள்கூட சின்ன வயசிலிருந்து அவருடன் கதைத்தது கிடையாது, ஆனா நண்பனின் தங்கை எனும்போது, பல காலத்துக்குப் பின் ஒரு ஆவல் போலும்..

  பின்பு இவர் வந்து என்னை விசாரித்து விட்டுப் போனதும், அம்மாவின் கோல் வருகிறது, இப்படி அண்ணனின் நண்பர் உனக்கு தெரியும்தானே.. அவர் அங்கு வந்திருக்கிறாராம், ஆனா நீ அண்ணனுக்காகப் போய்ச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதே.. என சமாளிச்சா சொல்ல முடியாமல் அம்மா.. எனக்குப் புரிஞ்சு போச்சு.. தவிர்க்கச் சொல்லி சொல்கிறா எனபது..,

  அவர் வந்து என்னைக் கேட்டவராம் அம்மா, நான் அந்நேரம் வீட்டில் இருக்கவில்லை என்றென். சொக்ட்ட்ட்ட்ட் ஆகிட்டா அம்மா ஹா ஹா ஹா.. ஆனா பாவம் அவர், சும்மா சும்மா எல்லோரையும் சந்த்நேகப்பட்ட்டிடக்கூடாது என்பது என் எண்ணம், பார்த்தால் என்ன?, பேசினால் என்ன?.. எனத்தான் நான் நினைப்பேன்.. எங்கட அப்பாவும் அப்படித்தான் எனக்குச் சொல்வார்.

  ஆனா அவரும் சும்மா தான் பார்த்தார், பின்னர் சந்திக்கவில்லை திரும்பிப் போய் விட்டார்.[தங்கையைப் பார்க்காமல் வந்தால், என் அண்ணன் கோபிப்பாரே என்றுகூட அவர் நினைத்திருக்கலாமெல்லோ]..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரசியமான பின்னூட்டம்

   நீக்கு
  2. அதிராவும் அவர் ஃபரெண்டும் எப்பவுமே சுவாரசியமா கதைக்கிறவங்க..!

   நீக்கு
  3. வாங்க அதிரா... உங்கள் நினைவுகள் சுவாரஸ்யம். அம்மாக்கள், ஏன் அண்ணன்களும் கூட பயப்படுகிறவர்களாகவே இருப்பார்கள் போல.. ஆனால் அண்சன்கள் மட்டும் லவ் பண்ணலாம்! என்ன நியாயமோ... இல்லை?

   நீக்கு
  4. //msuzhi18 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 3:50
   சுவாரசியமான பின்னூட்டம்//

   நன்றி..

   நன்றி ஸ்ரீராம், எனக்கும் புரிவதில்லை, உயிர் நண்பன் என்பினம், ஒன்றாகவே சுத்துவார்கள் ஆனா அந்த நண்பன் தம் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரப்போவதை ஆரும் விரும்புவதில்லை ஹா ஹா ஹா இது என்ன டிசைனோ:))

   நீக்கு
  5. //ஆனா அந்த நண்பன் தம் வீட்டுக்கு// - நட்பு என்பதில் மதம், ஜாதி குறிக்கிடாது. ஜாதி பார்த்து நண்பர்களாக யாரையும் கொள்வதில்லை. அதற்கு தனி பந்தம் இருவருக்கும் இருக்கணும். திருமணம் என்பது சொந்த, சமூகத்தின் நிகழ்வு. அங்கு ஜாதி என்பது பிரதானமாக இருக்கும். இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் அவை விதிவிலக்குகள்.

   காவஸ்கரின் நண்பர் குண்டப்பா விஸ்வநாத் (இருவரும் வெவ்வேறு மாநிலம், கலாச்சாரம்), காவஸ்கரின் சகோதரியை மணமுடித்தவர். சுதந்திர காலத்தில் நண்பர்களாக இணைந்தவர்கள் இந்த மாதிரி நண்பனுக்கு சகோதரியை திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். ராஜாஜியின் பெண், காந்தியின் பையனை மணமுடித்ததுபோல (அதுவும் எனக்கு ஒரு சந்தேகம். அரசியல் மைல்ஸ்டோனுக்காக நடந்ததோ என்று ஹா ஹா)

   நீக்கு
  6. இன்னொன்று, நட்பு என்பதில், பணம், அந்தஸ்து குறிக்கிடாது. என் நண்பன் எங்கள் வீட்டைவிட அந்தஸ்தில் மிகக் குறைந்திருக்கலாம், அல்லது மிக மிக பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது அங்கு அந்தஸ்து என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

   நண்பர்களிடத்தில் ஒளிவு மறைவு இருக்காது. அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ? (ரெண்டுபேரும் சேர்ந்தே சைட் அடித்திருக்கிறோம்..இந்த இந்த தவறுகள் செய்திருக்கிறோம்..இப்படிப்பட்டவனா என் தங்கைக்கு கணவனாக வருவது என்று ஹா ஹா)

   ஒருவேளை மேற்கத்திய நாடுகளில் இந்த மாதிரியான எண்ணவோட்டங்கள் இல்லாமல் இருக்கலாம்.

   நீக்கு
  7. ஒரு மாதிரியான டிசைன் தான் ..!

   நீக்கு
  8. wஈங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள்தான் உண்மை நெ தமிழன்..
   இப்போ நண்பன் அனைத்திலும் மிக உயர்வானவர்.. பெரீஈஈஈஈஈய தொழில் எனில் விட்டிடமாட்டினமாக்கும் ஹா ஹா ஹா.. ஆனா நண்பனின் குடும்பம் திட்டு, அந்த நண்பன் தன் தங்கைக்குக் கூட்டிக் கொடுத்திட்டார் தம் மகனை என ஹையோ ஹையோ.. எப்பூடி எனினும் உதைக்கும்:))

   நீக்கு
  9. அதெப்படி..நண்பன் நல்ல நிலைல இருக்கான் என்ற உடனே தங்கையை மணமுடித்துத் தருவது? தங்கைக்கும் நண்பனுக்கும் இதில் விருப்பம் இருந்து அவங்களே ப்ரொபோஸ் செய்திருந்தால், அப்போ இரு குடும்பத்துக்கும் இதில் உடன்பாடு இருந்தால்தான் திருமணம் என்ற கட்டத்துக்குச் செல்லலாம். இல்லைனா நட்பை, வியாபாரமாக்கினான் என்ற அவப்பெயர்தான் மிஞ்சும்.

   பொதுவா இத்தகைய திருமணங்களில், நட்பு கெட்டுவிடும். நண்பர்களா இருக்கும்வரைதான் நல்லா இருக்கும். உறவு என்று வந்துவிட்டால் அங்கு பெரும்பாலும் நட்பு இறந்துவிடும்.

   நீக்கு
 25. ஜோக்ஸ் ஓகே,

  கைகோர்த்தபடி குழந்தைகள் அழகு.. எனக்கு ஒரு ஆசை நான் இரட்டைக் குழந்தையாகப் பிறந்திருக்கோணும் என:), சரி அது போய்விட்டது எனக்காவது இரட்டைக் குழந்தை கிடைக்கட்டும் என, சின்ன வயசில சொல்லுவினம், ஒட்டியதுபோல இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை கிடைக்கும் என ஹா ஹா ஹா அதை எல்லாம் பறிச்சு சாப்பிட்டிருக்கிறேன்...

  இங்கு ஸ்கொட்லாண்டில் ஏனோ தெரியவில்லை, இரட்டையர்கள் அதிகம்.. ஒரு ஸ்கூலிலேயே பல இரட்டைக் குழந்தைகளைக் காணலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரட்டைக் குழந்தை என்றால் பயப்படுகிறவர்கள் மத்தியில் நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்!

   நீக்கு
  2. இரட்டைக் குழந்தைகளில், இருவருமே நல்ல நிலையில் இருப்பதற்கு உதாரணங்கள் தர இயலுமா?

   நீக்கு
  3. உதாரணம் என எதைச் சொல்வது நெல்லைத்தமிழன், நீயா நானாவில்கூட ஒரு ஷோ நடந்ததே.. அழகாக, நன்றாக இருந்தார்கள்.. நான் பார்ப்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள், ஆனா ஒரு குழந்தைக்கு ஏதும் கடும் நொய் எனில் மற்றையதின் நிலைமையும் பயம் என்பினம்...

   இதைப் பாருங்கோ நெ தமிழன்..

   https://www.youtube.com/watch?v=MofnytFiX-Y

   நீக்கு
  4. நெல்லைத் தமிழரே, இரட்டையாகவே இருந்தாலும் ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருப்பதில்லை. திருமணம் கூட ஒருத்தருக்கு முன்னால் ஆனால் இன்னொருவருக்கு தாமதம் தான் ஆகிறது. எனக்குத் தெரிந்த ஆண் இரட்டையரில் பின்னால் பிறந்தவருக்குத் திருமணம் ஆகிச் சில வருடங்கள் கழித்தே முதலில் பிறந்தவருக்கு மிகுந்த கஷ்டத்துடன் திருமணம் ஆனது. அதுவே பெண்களில் சிலருக்கு ஆறுமாத இடைவெளியில் திருமணம் முடிகிறது. தாமதமும் ஆகிறது.

   நீக்கு
 26. ஆவ்வ்வ் என்ன ஒரு அழகிய பறவை, என்னா ஒரு கலர்...
  ஆஆஆஆஆஆஆ அப்பாத்துரை அவர்கள்.. ரிட்டேன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ:)) ஹா ஹா ஹா வரட்டும் வரட்டும்.. காணவில்லையே எங்கும் என் யோசித்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாதுரையின் எழுத்துகளுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்! எங்களையும் சேர்த்து..

   நீக்கு
 27. இரா அர்விந்த் அவர்களுக்கு[நூல் அறிமுகத்துக்கு] வாழ்த்துக்கள்...

  //உயிர் அல்லது ஆன்மா உள்ளதா? அது இதயத்தில் உள்ளதா அல்லது மூளையில் உள்ளதா? முன்பே எழுதப்பட்ட விதி என்ற ஒன்று இருப்பின் நம் உடல் மற்றும் ஆன்ம பலம் கொண்டு நம்மை மாற்றுவது சாத்தியமா?///
  இது எனக்குள்ளும் இருக்கும் கேள்விகளே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கேள்வி அநேகமாக எல்லோரிடமும் இருக்கும்.

   நன்றி அதிரா.

   நீக்கு
  2. இதற்கான பதிலை புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

   நெஞ்சுக்குழிக்கு பொதுவாகவலதுபுறம் ஒரு இஞ்ச் தூரத்தில் இருப்பதாக. இது அதற்கு எதிர்ப்புறமும் சிலருக்கு இருக்கலாமாம்.

   தலையை வெட்டியபிறகும் நகரும் உயிரினங்கள் பற்றி படித்திருப்பீங்களே. ஏன்... ஶ்ரீராமின் அனுஷ்கா படத்தில்கூட தலையை வெட்டியபின் பல அடிகள் நடப்பார்களே.

   பாம்புகளில் மாம்பா (ஆப்பிரிக்கா), தலையை வெட்டினாலும், தலை ஒரு நாளுக்கும் மேலேக உயிருடன் இருக்கும், தலை பக்கம் கை சென்றால் கடித்து விஷத்தை க்க்கைம், அதனால் இறந்த மாம்மாவை மண்ணுக்குள்ளே புதைப்பார்கள் என்று படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
  3. அது அங்கு இருப்பதாக யார் சொன்னார்கள்?

   அனுஷ் பக்கத்தில் இருந்தால் எதுவும் சாத்தியம் போல...!

   மாம்பா தகவல் படித்த நினைவு. சுவாரஸ்யம்.

   நீக்கு
  4. உயிர் என்பது இதயத்தை அண்டித்தான் இருப்பதாகச் சொல்கின்றனர்... ஆனா எப்படிக் கண்டுபிடிப்பது...

   //தலையை வெட்டியபிறகும் நகரும் உயிரினங்கள் பற்றி படித்திருப்பீங்களே//
   உண்மைதான் தலை போனபின்னரும், கொஞ்ச நேரம் கை கால் துடிக்கும் என்பார்கள்..

   //பாம்புகளில் மாம்பா (ஆப்பிரிக்கா), தலையை வெட்டினாலும், தலை ஒரு நாளுக்கும் மேலேக உயிருடன் இருக்கும்,//
   இது மாறுதலாக இருக்குதே.. தலை எப்படி உயிருடன் இருக்கும்? உடம்பெல்லோ இருக்குமென வந்திருக்கோணும்...

   //அனுஷ் பக்கத்தில் இருந்தால் எதுவும் சாத்தியம் போல...!//
   ஆமா ஸ்ரீராம் ஆமாம்:) நெ தமிழன் சொல்ல வந்தது என்னவெனில், அனுஸ்[உங்கட முறையில்:)] பக்கத்தில் போனாலே பாதி உசிறூஊஊஊஊஉ போயிடுமாம்:)) ஹா ஹா ஹா...

   நீக்கு
  5. //தலை உயிருடன்// - இதுக்கு அர்த்தம் தலை மட்டும் நகரும், பாம்பு கண் முழித்துப் பார்க்கும் என்பதல்ல. வாய் பக்கத்தில் எவனேனும் கை வைத்தால் கொத்த வேண்டும் என்ற நினைப்பு மட்டும் இருக்கும். அதாவது பல் பக்கத்தில் கை வைத்தால் கடித்துவிடும் என்பதுபோல.

   தலையை வெட்டினாலும், உடல் நடப்பது (சிறிது தூரம் பிறகு பொத்தென்று விழுந்துவிடும். பாகுபலி படத்தில் பார்த்திருப்பீர்கள்) எப்படி என்பது ஆச்சர்யம்தான். மூளை இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து, அது அவயவங்களுக்குக் கடந்து, அந்தச் சமயத்தில் தலையே இல்லாமல் போனாலும், முன்னமே கொடுத்த இன்ஸ்ட்ரக்‌ஷன் படி உடம்பு நடக்கிறதோ..பிறகு வலுவில்லாமல்-உயிர் இல்லாததால், பொத் என்று விழுகிறதோ?

   நீக்கு
 28. /
  ரொம்ப போர் அடிக்கிறேனா என்று தெரியவில்லை. ஜி எம் பி ஸார் "இப்போதான் கொஞ்சம் வெளியில் வந்து பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்" என்று சொன்னது(ம்) நினைவுக்கு வருகிறது! ரொம்ப போர் அடித்தால் இதை ஸ்கிப் செய்து மற்ற பகுதிகளுக்குச் சென்று விடவும்!/ இதை எப்படி அர்த்தம்கொள்வது என்று புரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்.. நீங்கள் என்னைப் பற்றி அவதானித்ததை நினைவு கூர்ந்தேன். கூர்ந்து, சொந்தக் கதை சொல்லி ரொம்ப போரடிக்கிறேனோ என்று கவலைப் பட்டிருக்கிறேன்!

   நீக்கு
  2. என்பதிவுகள்பெரும்பாலும் சொந்த்சகதையை சொல்பவைநான்போரடிக்கிறேனென்று அர்த்தம் கொள்ளவா

   நீக்கு
 29. அனைவருக்கும் அவரவர் ஆசை நினைவுக்கு வந்திருக்கும். //

  ஸ்ரீராம்! ஆ என்னென்னவோ நினைவுகளை எல்லாம் தட்டி எழுப்பிட்டீங்களே!! கிளப்பிட்டீங்க போங்க!!!!!!

  எனக்கும் வாய்ப்பாட்டிலிருந்து, வீணை, வயலின், கிட்டார் கற்க ஆசை இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் இரண்டடி எடுத்து வைத்தால் பல அடிகள் பின்னால் தள்ளும் அப்படி ஒரு கொடுப்பினை!!!!!!!

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…கூடவே ஒரு கிட்டார் வாசிப்பும் போட்டுருக்கலாமோ!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா... நன்றி உற்சாகமான வரவுக்கு..

   கிட்டார் நேரில் பார்க்கும்போது சினிமாவில் பார்ப்பதுபோல அவ்வளவு எளிதாக, கவர்ச்சியாக இல்லை! ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  2. //நான் இரண்டடி எடுத்து வைத்தால் பல அடிகள் பின்னால் தள்ளும் அப்படி ஒரு கொடுப்பினை!!!!!!!//

   ஹா ஹா ஹா கீதா நீங்க தனு ராசிக்காரரோ?:))

   நீக்கு
  3. ஓ.. நீங்க சோசியரோ... இந்தாங்க என் கை.. எனக்கு என்ன பலன் பார்த்துச் சொல்லுங்க...

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆஆ அடுத்த விசாளன்:) செல்வி:) போடுங்கோ ஸ்ரீராம்:)) மொத்தப் பலனையும் சொல்லிடுறேன்:))

   நீக்கு
 30. ஸ்ரீராம் அப்போல்லாம் வீட்டுலருந்து யார் வீட்டுக்கும் போகக் கூடாது. நம்ம வீட்டுல அப்படி ஒரு இ கா பாட்டி! பல சமயம் எமர்ஜென்சிதான். ஆர்மி ரூல் வேற ஹா ஹா ஹா ஹா

  நாங்க யார் வீட்டுக்காச்சும் போனா கூட எப்படியோ இ கா பாவுக்கு தெரிஞ்ந்துவிடும். யாராச்சும் போட்டுக் கொடுத்துருவாங்க.

  அது போல வீட்டுல இருக்கும் எல்லா பசங்களும் எங்க மேல ஒருநோட்டம் விட்டுட்டே இருப்பாங்க.

  பசங்க விஷயம் எங்க வீட்டுல எல்லாம் ரொம்பவே கோர்ட் சீன் நடக்கும்!!!

  இதில வேற எம் ஏ கோ எட். யாரும் நோட்ஸ் கேட்டுடக்கூடாது அம்புட்டுத்தான். வீட்டில் டண்டனக்காதான்! ஹா ஹா ஹா ஹா

  நாரோயில் பஸ்டான்ட்ல பேசினது கிராமத்துல வீட்டுல உள்ளவங்க காதுக்கு எட்டுதுனா பாருங்க அப்ப என்ன டெக்னாலஜி?!!! அதுவும் நான் வீட்டுக்கு வரதுக்குள்ள ரீச் ஆகியிருக்கும்...ஹா ஹா ஹா இது தெரியாம நான் அப்பாவியா வீட்டுக்குள்ள நுழைவேன். அப்புறம் மிருதங்கம் தான்! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டுக்கு வீடு வாசப்படி கீதா... இ கான்னா என்ன?

   நீக்கு
  2. எங்க அம்மா காலத்துல, நகை ஆசாரிகள், புடவை வியாபாரிகள் வீட்டுக்கு வந்துதான் நகை செய்வது, புடவை விற்பது எல்லாம். கல்யாணத்துக்கு புடவை எடுக்குறோம் என்றால் கடையிலிருந்து நிறைய புடவைகளை வீட்டிற்கு கொண்டுவந்து விற்பார்களாம். பெண் வெளியில் செல்வதுலாம் நினைக்க முடியாதாம்.

   என் கசின், (அவங்க வீட்டுல பெண், இரு சகோதர்ர்கள் ப்ரில்லியன்ட் டு த கோர். இன்னொரு பெண் சுமாராக படித்தவர்), டிகிரில கோல்ட் மெடலிஸ்ட், பிஜிலயும். மேல படிக்க அனுமதிக்கலை. பி ஹெச் டி முடித்து இன்னும் உயர்வா வந்திருக்க வேண்டியவர், பேராசிரியராக ஓய்வு பெற்றார்

   19ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலைமைதான். இப்போதோ, வேலை பார்க்கும் பெண்ணிற்கு அடுப்புவேலை எதற்கு என்று மாறிவிட்டது. (அதில் தவறில்லை என்பது என் எண்ணம். 50, 1 ல என்று சம்பாதிக்கறவங்க, எதுக்கு கிச்சன்ல வாழ்க்கையைக் கழிக்கணும்? சௌகரியமா இருக்கலாமே. ஆண் மட்டும்தான் வாழ்க்கையை வாழணுமா?)

   நீக்கு
  3. ///அதுவும் நான் வீட்டுக்கு வரதுக்குள்ள ரீச் ஆகியிருக்கும்//

   ஆஆஆஆஆஆஆ இந்த ரீச்:)) ஐ எப்பூடி நெல்லைத்தமிழன் கவனிக்காமல் விட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது டீச் எனச் சொல்லியிருப்பாரே கவனிச்சால்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  4. ஸ்ரீராம் இந்திரா காந்தி பாட்டி!!!!!

   கீதா

   நீக்கு
  5. ///எதுக்கு கிச்சன்ல வாழ்க்கையைக் கழிக்கணும்? சௌகரியமா இருக்கலாமே. ஆண் மட்டும்தான் வாழ்க்கையை வாழணுமா?)//

   ஹா ஹா ஹா டப்பு நெ தமிழன் டப்பூஊஊஊஉ:)) கிச்சினில் இருந்து நினைத்த நேரம் எல்லாம் வேலைக்குப் போகும் பரபரப்பில்லாமல் பாட்டுக் கேட்டுக் கொண்டு சமைப்பது என்பது எவ்வளவு பேரானந்தம் தெரியுமோ?:), வேலைக்குப் போவதுதான் கஸ்டம்:)) வீட்டில் இருப்பது பேரானந்தம் ஹா ஹா ஹா..

   எங்கள் ஃபமிலி ஃபிரெண்ட்ஸ் இருவரும் டொக்டேர்ஸ்.. இங்கு வந்த ஆரம்ப காலம், அவர் மட்டுமே வேர்க் பண்ணினார், மனைவி எக்ஸாம் முடிக்கவில்லை, அப்போ மனைவி பரபரப்பாக படிச்சுக் கொண்டிருந்தா, பாஸ் பண்ணி வேர்க் பண்ணோனும் என...

   அந்த நண்பர் சொல்லிச் சிரிப்பார்ர்.. ஆனா சீரியசாகத்தான்.. ஹையோ இவ எதுக்கு இப்படிக் கஸ்டப்படுறா வேர்க் பண்ணோனும் என.. நான் எனில் ஜாலியாக கிச்சினில் வேலை பார்ப்பேனே என்பார் ஹா ஹா ஹா...

   நீக்கு
  6. சரிதான் நெல்லை. காலம் மாறிக்கொண்டு வருகிறது.

   நீக்கு
  7. எங்க அம்மா காலத்துல, நகை ஆசாரிகள், புடவை வியாபாரிகள் வீட்டுக்கு வந்துதான் நகை செய்வது, //

   நெல்லை எங்க வீட்டுலயும் ஆசாரி கிட்டத்தான் கொடுப்பாங்க. வீட்டுக்கு வந்து வாங்கிக் கொண்டு போவார். அவர் வீடு எங்க ஊரிலேயேதான்.

   அதிரா அது கீதா சொன்னதால விட்டுப் போட்டார். பிஞ்சு சொல்லியிருந்தால் டீ அல்லோனு சொல்லியிருப்பார்!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 31. நான் தான் கற்றுக் கொள்ள முடியலை ஆனா மகன் வீணை கொஞ்சம் கற்றுக் கொண்டான். அப்புறம் தொடர முடியவில்லை. இப்போது கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம்னு யோசனை அவனுக்கு. ஏற்கனவே வீணை வாசிப்பு தெரிந்ததால் கிட்டார் வாசிப்பு ஈசின்னு ஸ்ட்ரிங்க் தானே அதனால்.

  கீதா

  பதிலளிநீக்கு
 32. ஹையோ பாவம் மீன் கொத்தி அதேதான் பாருங்க சிறகு என்ன அழகுன்னு. சரி அது உயிர் பிழைத்ததோ? ஸ்ரீராம். எனி அப்டேட்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியலை கீதா.. பூபாலனைப் பார்க்கும்போது கேட்கணும்.

   நீக்கு
 33. டெங்கு டிங்கு ஹா ஹா ஹா எதுக்கெல்லாம் தான் பிள்ளையார் அப்ளிகேஷன் பார்ப்பார்!!! பாவம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 34. டிங்கு நு அப்ப ஒரு கார்ட்டூன் வரும் இல்லையோ?

  கைகளைக் கோர்த்துப் பிறந்த குழந்தைகள் சையாமிஸ் ரெட்டையர் போல அல்லாமல் கைகளைப் பிரிக்க முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சுவாரசியமான தகவல்

  கீதா

  பதிலளிநீக்கு
 35. புத்தக விமர்சனம் அருமை. ஆனால் வியாழனில் வெளியிட்டது ரசிக்க முடியலை.

  இப்போல்லாம் வெளி கான்ட்ரிப்யூட்டர்ஸ், இருக்கும் ஸ்டான்டர்ட் பகுதிகளை நெருக்குகிறார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை மின்நிலாவில் வெளியிடலாமோ?

   நீக்கு
  2. அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் பெர்சனல் ஒபினியன், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு, தி.பதிவு, கேவாபோக தவிர, சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு மட்டுமோதான் அடிஷனல் ஸ்லாட் கொடுக்கலாம். அதிலும் தொடர்ந்து ஒரு காலமாக ஒருவருக்குக் கொடுத்தால், அப்புறம் உங்களுக்கு ஞாயிறு மட்டும்தான் இருக்கும்.

   திரைப்படம் பற்றிய அல்லது நாடகம் பற்றிய இடுகைகளுக்கு மட்டும்தான் வெள்ளி பாடலோடு பொருத்தம் இருக்க முடியும்.

   சனி, பாஸிடிவ் செய்திகளோடு எல்லா columnம் பொருந்தாது. ஞாயிறு நல்ல ஆப்ஷன். (புத்தக விமர்சனத்துக்கு). இல்லைனா, இலக்கியம் என்ற தலைப்பில் மின்னூலுக்கு ஷிஃப்ட் பண்ணிட வேண்டியதுதான்.

   நீக்கு
  3. // இருக்கும் ஸ்டாண்டர்ட் பகுதிகளை நெருக்குகிறார்களோ?..//

   அன்பின் நெல்லை அவர்களது கருத்து என் மனதிலும் படுகிறது...

   நீக்கு
 36. ஜெவெல்-ஜூல் ஆஆஆஅ அப்பாதுரைஜி யின் கதை !!! ஆஹா கொண்டாட்டம் தான்.

  என்ன ஸ்ரீராம் பட்டாசு எதுவும் கொளுத்தாம இருக்கீங்க!!!!!

  ப்ரிவ்யூ உண்டா!!! ஹா ஹா ஹா

  விளம்பர டீசரே ஷ்யூம் ஷ்யூம் போல இருக்கு!! ஸோ விறு விறு த்ரில்லர் ஆஹா மீக்கு ஃபேவரிட்.

  சீக்கிரம் அனுப்புங்க அப்பாதுரை ஜி!! ரொம்ப எதிர்பார்ப்பைக் கிளப்பிட்டீங்க...ஆரமப்த்தையே எங்க ஊர் பாணில பட்டாசு போட்டு புகை கிளப்பிடுவோம்!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 37. அரவிந்த் விமர்சனம் நல்லாருக்கு. வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் சகோதரரே

  டெங்கு டிங்குவெல்லாம் தாண்டி இந்த மக்கள் இப்ப கொரானாவுடன் வாழ பழகி வருகிறார்களே.. எப்படியென பிள்ளையாரே ஆச்சரியப்பட்டு வருகிறார்.

  "டிங்கி ஜுரத்திலே முடங்கி கிடந்து" என்ற பழைய நாகேஷ் பாட்டு நினைவுக்கு வருகிறது. படம் நினைவில்லை. டிங்கு, சிக்கன் குனியா போன்ற பாதிப்பை எங்கள் குடும்பம் (இரண்டிலும் நானும் உட்பட) அனுபவித்து விட்டோம். அப்போது மருந்து கண்டு பிடித்து விட்டதினால் பிழைத்து வந்து இப்போதைய வைரஸை கண்டு சற்றே பயந்து கொண்டு இருக்கிறேன்.

  சாமா ஜோக்ஸ் எல்லாவற்றையும் ரசித்தேன்.

  அன்னையர் தினத்தில் அதுவும் இரட்டை பெண் குழந்தைகள் கை கோர்த்தபடி பிறந்த விஷயம் சுவாரஷ்யமாக இருக்கிறது. உள்ளேயே பத்து மாதங்களும் மிகுந்த ஒற்றுமையுடன் பேசி வைத்துக் கொண்டு வந்திருக்குமோ?

  அந்தப்பறவை மிக அழகாக உள்ளது.மின் விசிறியில் அடிபட்ட அதிர்ச்சியில் மயங்கியிருக்கும் அது கண்டிப்பாக பிழைத்திருக்கும்.

  புதிய பகுதி விளம்பரம் அமர்க்களமாக உள்ளது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  இரு புத்தக விமர்சனங்கள் அருமை. சகோதரர் திரு. அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  இன்றைய கதம்பம் அருமையாக அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 39. அருமையான பதிவு, அழகான கருத்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!