ஞாயிறு, 14 ஜூன், 2020

ஞாயிறு : மழையில் நனைந்த படங்கள்...



"கிளம்புங்க  கிளம்புங்க" என்று என்ன கூவினாலும் கேட்பாரில்லை



"இங்கேதான் சிக்னல் நல்லா வருது "



"இன்னும் ஒரு ஷாட் அனுப்பினா அக்ஷத்  சந்தோஷப்படுவான்"




"எந்தக் கோவிலிலும் இவ்வளவு அழகாக தரை இருந்ததில்லை"





பிரசாதம் பூ!




யாரவது ஒரு கை .......



இதோ வந்தேன் எந்தையே



காற்றும் மழையும் சற்று அதிகம் என்பது சற்று......



எப்படியும் மேலே போயிடலாம் ......


அது யாரு சலங்கை ஒலி கமலா..... இல்லை ...



கையளவு மனசு வரதராஜனா ?



இப்படி வருணனுக்கு என்ன ஆசையோ ....


வாயு பகவானுடன் சேர்ந்து ஒரே போகாட்டம்



நாம் மேலே போவதை கவுன்சில் கூட்டாமல்


ஒத்திவைக்க நேர்ந்தது


இந்த மாதிரி poor visibility  என்றால் சென்னைக்கு வரும் விமானங்கள் பெங்களூருவுக்கு அனுப்பப்படும்



ஆனால் என்ன நாம் காவிரியை தேடிப்போக.....



 அது நம்மைத் தேடி வருகிறதே



என்று வந்து மண்டபத்தில் ஒண்டிக்கொண்டோம்



காவிரிக்கு கண் தெரியுமோ?




ஏதோ, உத்தேசமாக இறங்கி வந்துவிடும் போல




குடை நாடாக் குடும்பங்கள்



இந்தப் பாட்டிக்கு இருக்கும் enthusiasm !



இதோ நம் மக்கள் திரும்பி விட்டார்கள்




துணை வந்து இணையும்வரை இந்த ஓரத்தில் காத்திருக்கலாம்...



மேலே போகும்போது பறக்க உதவி செய்த குடைகள் கீழே வரும்போது மடக்கப் பட்டு


Phone குளிச்சாச்சா?



ஆர்ட்  டைரக்டர் சொதப்பிவிட்டாரா, இல்லை  ஆக்ஷன் ஆரம்பிக்க எடுத்த நேரத்தில் எல்லாம் ஆவியாகி விட்டதோ? நம்ம தேவலோகம் இவ்வளவுதான்


சுரேஷ் கொஞ்சம் வாங்க.. மேலே எடுத்த ஷாட் மட்டும் கொஞ்சம் என் மெயில் id க்கு அனுப்பிடுங்க என்றதும் சரி என்றவர் ர் ...



prompt ஆக அன்றிரவே அனுப்பி அதை சொல்லவும் மறந்து போனார்


==================

மின்நிலா - நான்காவது இதழ் சுட்டி : MN 004

==================

69 கருத்துகள்:

  1. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல திருக்குறளை நினைவு படுத்தியதற்கு நன்றி.

      நீக்கு
    2. கண்ணுடையார் என்போர் கற்றோர் முகத்திரண்டு - என்றுனா வரும்

      நீக்கு
    3. முகத்திரண்டு புண்ணுடையர் எண்ணற்றவர் பலரை
      அகத்திலேகொண்டு அலைக்கழியும் நாடு எமது நாடு..

      நீக்கு
    4. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
      புண்ணுடையர் கல்லா தவர்
      (அதிகாரம்:கல்வி குறள் எண்:393)

      பொழிப்பு (மு வரதராசன்): கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மழை என்று ஒரு திரைப்படம் வந்தது.
    இன்று வந்த அனைத்துப்படங்களும் அருமையான
    மணிரத்னம் படம் போல அப்படியே அமைந்திருக்கிறது.:)
    மூடுபனி, மேகம், சிரிக்கும் குழந்தைகள்,
    மலையேறும் பாட்டி எல்லாமே உத்சாகம் தான்.

    தரை அழகா இருக்கு படத்தில் வருகிற பெண்ணும்
    அழகா இருக்கு.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்.  படங்களை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. மின் நிலா4 க்கான என் பின்னூட்டத்தையும்,
      சுய அறிமுகத்தையும் அனுப்பி இருக்கிறேன்:)
      நன்றி கௌதமன் ஜி,ஸ்ரீராம்.

      நீக்கு
    3. நன்றி வல்லிம்மா... பார்க்கிறோம்.

      நீக்கு
    4. நன்றி. அவசியம் பார்க்கிறோம்.

      நீக்கு
    5. உங்கள் சுய அறிமுகம், மின்நிலா 005 புத்தகத்தில் வெளியாகும். நன்றி.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சென்னையிலிருந்து இடம் பெயரும் மக்களால் தமிழகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. அனைவரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஜோசியம் உண்மையோ பொய்யோ, 21 ஆம் தேதி கிரஹணத்திற்குப் பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைய வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.என்ன தான் மனதை உற்சாகப் படுத்திக் கொண்டாலும் ஆழ் மனது கவலையில் உறைந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 21 கிரகணத்துக்குப் பிறகாவது
      பிடித்திருக்கும் நோய்க்கிருமி ஒழிந்து தொலையட்டும்...

      நம்பிக்கை வைப்போம்...

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு.  அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்.  ஜோசியங்களில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது.  ஆனாலும் என்ன செய்ய...   காத்திருப்பதைத்தவிர, வேறு வழி இல்லை.

      நீக்கு
    3. கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்.

      நீக்கு
  5. ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்...

    என்றொரு பழைய பாடல் உண்டு..

    ஞாயிறு வளி மழையில்
    ஞாயிறு குளித்து வந்தான்...

    - என்று மாற்றிக் கொள்ளலாம் போல!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ ஒரு மணி நேரத்துக்கு முன் எனக்கும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது!

      நீக்கு
    2. அந்தரங்கம் என்னும் படத்தில் இடம் பெற்ற பாடல் அந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் அந்தப் படத்தில் பாடல் காட்சிகள் மட்டும் கையில். கமல்ஹாசன், தீபா நடித்தது.

      நீக்கு
    3. கலரில் ! (கையில் அல்ல)

      நீக்கு
  6. கடைசிப் படம் மிக அழகு! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) :)))))))))))))) இந்த வாரம் படங்களுக்கான தலைப்புகள் ஸ்ரீராம் இல்லையோ? என்றாலும் ரசனையுடன் இருக்கின்றன. எல்லாப் படங்களும் அருமை எனில் மழைப்படம் மிக மிக அருமை. காற்றில் யாருடைய குடையும் தூக்கிக் கொள்ளக் காணோம்/ அல்லது கெட்டியாகப் பிடிச்சிருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எடுக்கும்போது அப்படியே நின்று விட்டது போல!!

      நீக்கு
  7. மின் நிலாவின் கடைசிப் படம் எங்க அம்பத்தூர் வீட்டுக் கிணற்றடி போல் இருக்கு. இந்த வாரப் புதிய மாற்றங்கள் நன்றாக உள்ளன. சின்னப்பாட்டி அந்தக் காலங்களில் சாவி, கடுகு ஆகியோர் எழுதிய "காரக்டர்" போல் உள்ளது. உமிக்கறி போட்டெல்லாம் பல் தேய்த்தோம் என்பதை இப்படி எழுதினால் தான் இந்தக் காலத்துக் குழந்தைகள் நம்புவார்கள். கடைசியில் பானுமதியின் பதிவுடன் அவர் குறித்த சிறு அறிமுகமும் இருந்திருக்கலாம். இதைப் போடுவது என முடிவு செய்த பின்னர் அவரிடம் கேட்டு வாங்கி இருக்கலாமோ? என்னைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத களங்கம் இல்லாத இணைய நிலா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நன்றி, நன்றி. பழைய கணக்கு ஐடியா மிகவும் லேட்டாக வந்ததால் கடைசி நேரத்தில் இணைக்கப்பட்டது. அதனால்தான் மேற்கொண்டு விவரங்கள் சேர்க்க இயலவில்லை. மன்னிக்கவும்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   நல்வரவும், வணக்கமும்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம்

    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது மிக அழகு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். படங்களுக்கு பொருத்தமாக நல்ல வாசகங்கள். எல்லாமே இன்று நன்றாக உள்ளது.

    மழையில் நனைந்த படங்கள் கண்களை மட்டுமில்லாது மனதையும் குளிர்வூட்டுகின்றன. இங்கும் குளிர்ச்சியான கிளைமேட் பரவி இருப்பதால், படங்களைப் பார்த்ததும் அந்த மழைச்சாரலில் நானே நனைவது போன்ற ஒரு கற்பனையில் படங்களை மிக ரசித்துப் பார்த்தேன்.

    மழையினால் கோவிலின் அலம்பி விட்ட தரையழகு மிகவும் நன்றாக இருக்கிறதென அந்தப் பெண்ணின் நினைப்போடு நானும் நிச்சியம் ஒத்துப்போகிறேன்.

    மழையோடு படிகள் ஏறும் போது துணையாக வந்த விரிந்த குடைகள், இறங்கும் போது "காற்றின் வேகத்தில் நான் பறந்தாலும் பறந்து விடுவேன். ஆனால் படி இறங்கும் உங்களுக்கு கால் தவறும் அபாயத்தை உண்டு பண்ண எனக்கு விருப்பமில்லை..! எனவே என்னை மடக்குவதில் தவறில்லை" என கடுமையாக எச்சரித்ததோ என்னவோ.. இறங்கி வருபவர்கள் அதன் அடங்கலுக்கு கட்டுப்பட்டு விட்டனர். ஆனால், குடை நாடா குடும்பத்திற்கு இந்த தொந்தரவேயில்லை.

    சலங்கை ஒலியையும், கையளவு மனசையும் இணைத்தது அருமை.

    எல்லா மழைப் படங்களையும் மிகவும் ரசித்தேன். இப்படி சொல்லிக் கொண்டே போனால் கருத்துரையும் உன்னால் ஒரு பதிவாகி விடுமென ஞாயறு படங்கள் என்னையும் எச்சரிக்கிறது. ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அழகு. இப்போ காற்றும் மழையும் இங்கு. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதுபோல இருக்கு.

    குளுகுளு இடத்திற்கு சுற்றுலா போலாம்போல ஶ்ரீராமுக்கு தோன்றுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நீங்க சொல்றது சரிதான். மின்விசிறியை இப்போதெல்லாம் ஆஃப் செய்துவிடுகின்றேன்.

      நீக்கு
  12. மழையை முடிந்தவரை சிறப்பாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். கேப்ஷன்கள் நன்றாக இருக்கின்றன. கடைசிப்படம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  13. //கடைசியில் பானுமதியின் பதிவுடன் அவர் குறித்த சிறு அறிமுகமும் இருந்திருக்கலாம்.//
    ???

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை...

    குடை இல்லாவிட்டால் சலங்கை ஒலி கமலே...!

    பதிலளிநீக்கு
  15. இன்றைய மழை படங்கள் நன்று.

    மின் நிலா - இனிமேல் தான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட் சார். மின்நிலா படித்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.

      நீக்கு
  16. படங்களுக்கு ஏற்ற வசனங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  17. படிகளில்...மிக அருமையான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  18. மின் நிலா இதழைக் கண்டேன். தொகுத்து, படங்களுடன் வடிவமைத்துத் தந்துள்ள விதம் சிறப்க உள்ளது. வலைப்பூவில் படிக்காமல் விடுபட்டதைப் படிக்க ஒரு வாய்ப்பாக இது அமைகிறது. அறிவித்துள்ள புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கன. முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. மழைப்படங்கள் பார்க்க சுகம்.
    பொதுவாக மழை ஆரம்பித்தவுடன் கேமராவைப் பாதுகாக்க முனைவார்கள் டூரிஸ்ட்டுகள், மூடி உள்ளே வைத்துவிட்டு நிற்பார்கள். இங்கே கேமராமேன் துணிந்து நின்று ’தட்டி’யிருக்கிறார்! பாராட்டு..

    பதிலளிநீக்கு
  20. ஞாயிறு ஒளி மழையில்!!!
    திங்கள் குளிக்க வந்தாள்!

    கீதாக்காவுக்கு மிகவும் பிடித்த !!!!!!!! ஹா ஹா ஹா ஹா உலக்கை நாயகன் குரலில் வந்த பாடல் நினைவுக்கு வந்தது இன்றைய படங்களைப் பார்த்ததும். மழைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. மின் நிலா காலையில் ஒரு முறை பார்த்துவிட்டேன் மீண்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன் கௌ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மழை.. படங்கள்.. வாசகங்கள்..

    சாரல் பதிவு!

    பதிலளிநீக்கு
  23. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன.

    தலைப்புகள் மிகவும் பொருத்தம். தேவலோகக் காட்சி போலத்தான் இருக்கிறது.

    மின்நிலா டவுன்லோட் செய்துவிட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. மழை தொடர்ந்து விட்டபாடாக இல்லை. தொடர்ந்து வருமா :))

    மழையும் இருட்டும் என காட்சிகள் நன்று.

    பதிலளிநீக்கு
  25. மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மழையும், தரையும் முக்கியத்துவப்படுத்தப் பட்ட புகைப்படங்கள். மழையின் பின்னணியில் காட்சிகள் என்பதினால் மழை காட்சிகளுக்கு தன் அழகையும் சேர்த்து வழங்கியிருக்கிறது.

    ஆனால் தரை அப்படியல்ல. மழையில் வழுக்கு தரை ஆபத்தை சுட்டுகிறது. இந்த மாதிரி தரை அமைப்புகள் வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஒத்து வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  26. பல பக்கங்கள் சொல்லும் செய்தியினை ஒரே ஒரு படம் சொல்லிவிடும் அதற்கு உங்கள் புகைப்படங்கள் சாட்சிகள். அருமையான படங்கள் அதற்கேற்ற வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  27. மழை படங்கள் எல்லாம் அழகு.
    படி மர சட்டங்கள் உள்ள படங்கள் நயாகார நீர்வீழ்ச்சிக்கு போவது போல் மழை கோட்டு அணிந்து போவது போல் உள்ளது.
    கலர் கலராக குடையும் அழகு. படங்களுக்கு கொடுக்கப்பட்ட வாசகங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. சின்னப்பாட்டி கதை அருமை.
    உமிக்கரி உப்புகலந்து பக்குவமாக ஊர் குழந்தைகளுக்கு கொடுத்தது பெரிய உபகாரம் தான்.
    உமிக்கரி அம்மா பக்குவமாக செய்வார்கள் ஒரு காலத்தில் அப்புறம் பேஸ்ட் .
    பழங்கணக்கில் மைதா பக்கோடா நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!