திங்கள், 8 ஜூன், 2020

பாகற்காய் பிட்லா/லை - கீதா ரெங்கன் ரெஸிப்பி .


பாகற்காய் பிட்லா/லை

ஹாய்! எல்லா எபி கிச்சன் ரசிகப் பெருமக்களுக்கும் எங்கள் அன்பார்ந்த வணக்கம். பாகற்காய் பிடிக்காதவங்க எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடுங்க!


ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையில். பிறந்தவிட்டுச் சமையலில் சாம்பார், தீயல், ரசம், ரசவாங்கி, தீபாவளி லேகியம் போன்ற சில பதார்த்தங்களைத் தவிர சமையலில் கொத்தமல்லிவிரையின்/தனியாவின் பங்கு குறைவு. புகுந்தவீட்டில் தனியா, தனியா இருக்காமல் எல்லாவற்றிலும் இருக்கும். பிட்லா/லை எல்லாம் செய்தது இல்லை. எனவே எனக்கு புவீ குறிப்பு தெரியவில்லை. இங்கு நான் சொல்லியிருக்கும் பிட்லா/லை கொத்தமல்லிவிரை சேர்க்காத பிவீ குறிப்பு. என் பாட்டியிடம் கற்றது…..

அம்மா கடலைப்பருப்பு எவ்வளவு போடணும்?

பாத்துக்கோ இம்புட்டு
ஒரு பெரிய ஸ்பூன்? 
இதோ இந்த ஸ்பூன் அளவு? 
ஒழுங்கா சொல்லும்மா!

அதெல்லாம் எனக்கு எங்கவிட்டி தெரியும்? இம்புட்டுதான் ஒரு விரக்கடைன்னு வைச்சுக்கோ.

ஹையோ அம்மாஆஆஆஆஆஆஆஅ நீ இப்பிடி சொன்னியானா நான் என்னத்த கத்துக்கறது? இரு. கடலைப்பருப்போடு வரேன். உன் கைல வைச்சுக் காணி.

அவர் விரக்கடை என்று சொல்லும் அளவில் பருப்பை வைத்து ஸ்பூனில் அளந்து எடுத்துக் கொண்டு எ…ழு…...ஹா ஹா ஹா ஹா போயிந்தி!!!

புகுந்த வீட்டிற்கு வரும் முன் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் பாட்டியிடம் ஒரு க்ராஷ் கோர்ஸ். எழுதியவை கலாட்டாவில் எங்கு போச்சோ? அப்புறம் என்ன? பேக் டு ஸ்கொயர் 1. கண்ணளவு, இம்புட்டு, விரக்கடை! இப்ப என் பையன் என்னிடம் ”ம்மா ஒழுங்கா அளவு சொல்லு. சும்மா இம்புட்டு, அம்புட்டுன்னு. குக்கிங்க் இஸ் அல்ஸோ எ சயின்ஸ். அதுவும் எக்ஸ்பெரிமென்டல் சயின்ஸ்! டாக்குமென்ட் இட்.” ஹூம் என்னத்த சொல்ல!!!!! ஹிஸ்டரி ரிப்பீட்ஸ். அம்மாக்குத் தப்பாத புள்ள!

இது சரிதான் என்றும் கூட எனக்குத் தோன்றும். ஒவ்வொரு பதார்த்தத்திற்கும் ஒரு ஸ்டாண்டர்ட் அளவு இருந்தால் (பேக்கிங்க்கிற்கு, சில இனிப்பு வகைகள், கார வகைகளுக்கு இருப்பது போல்) நாம் செய்யும் பதார்த்தம் பெரும்பாலும் ஒரே சுவையுடன் வரும். ஸ்டாண்டர்ட் ஆக. ஒரு நாள் உப்பு கூடி, புளி குறைந்து, போடும் பருப்புகளில் குறைந்து கூடி என்று வரும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இல்லையோ? (இது புதன் கேள்வியாக ஆயிடுச்சோ?!) ஆனால் இதில் நன்மையும் உண்டு. இப்படி சில சமயம் செய்யும் போது புதுவித பதார்த்தங்கள் கிடைக்கும். நம் இஷ்டத்திற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். (கீதாக்காவின் திப்பிசம்!!!)


இப்போது பிட்லா/லைக்கு வருவோம். இது என் பாட்டி செய்யும் விதம். மற்றொரு பாட்டி (அதான் எனக்கும் சித்திப்பாட்டிகள் உண்டே!) கடலைப்பருப்பு இல்லாமல் செய்வார். ஆனா உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றலுடன் கொஞ்சம் மிளகும் சேர்த்து வறுத்துக் கொள்வார். எதுவாக இருந்தாலும் தேங்காய் கொஞ்சம் சிவக்க வறுப்பதுண்டு. அதிகம் சிவக்கக் கூடாது.

இதில் சிலர் தனியா சேர்ப்பதுண்டு. ஒரு முறை பிட்லா என்று தனியா சேர்த்துச் செய்த போது என் மகன் “என்னம்மா இது கிட்டத்தட்ட அரைச்சுவிட்ட சாம்பார் மாதிரிதானே இருக்கு நீ சும்மா வெரைட்டி செய்யறேன்னு கதை விடற னு கேக்கவும் நான் எங்க வீட்டுல செய்யறதை செய்தேன். அதான் இங்க உள்ள செய்முறை. அவன் கமென்ட் “திஸ் மேக்ஸ் சென்ஸ்”.

ஆத்தெண்டிக் என்று எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. இது என் தனிப்பட்டக் கருத்து. நான் எல்லா விதங்களையும் சிறிது வித்தியாசம் இருந்தாலும், இருப்பதையும், தெரிந்து கொண்டு செய்வதுண்டு (இது மாமியார் குறிப்பு, பாட்டி, அம்மா, சித்தி, தோழி, வலையில் நம்ம நட்பூஸ் எழுதுவதைக் குறித்துக் கொள்வது என்று அவரவர் பெயர் வைத்து). இப்படித்தான் இது செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. 
(ஸ்பாஆஆ மைக் பிடிச்சு ரொம்ப நாள் ஆச்சா….பூஸாரே வரும் போது நல்ல ஹெல்தி ஸ்மூதி உங்க செக் கிட்ட கேட்டு செஞ்சு கொண்டு வாங்க!)  பிட்லா/லைக்கு கொ.வி உண்டா கிடையாதான்னு ஜாலியா ஒரு லாக்டவுன் பட்டிமன்றம் கூகுள் மீட் ல போட்டுக்கோங்க!!!!!!!!!!! மீ விடு ஜூட்!!!!!!! கீதாக்கா நடுவர். வாதிப்பவர்கள் பானுக்கா அண்ட் நெல்லை! பின் குரல் தேம்ஸ் காரங்க 2 பேரும், வல்லிம்மா, கமலாக்கா, கோமதிக்கா.

அடுத்த எபி கிச்சன் பதிவில் சந்திக்கும் வரை எபி ஆசிரியர்கள் மற்றும் நம் நட்பூக்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவது எபி கிச்சன் குழு. 

Boost Your Team's Productivity With This Swedish Coffee Break

ஸ்மூதி கேட்டா….காபி போட்டு?!!! வாங்கி?!!!! வைத்துக் கொண்டு நாங்க வரதுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் பாருங்க!

=================

91 கருத்துகள்:

 1. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்...

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 3. பாகற்காய் மிகவும் பிடிக்கும்....

  அது பிட்லை ஆனாலும் சரி...
  கொட்லை ஆனாலும் சரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா துரை அண்ணா அதானே அது எப்படிச் செய்தாலும் மீக்கும் பிடிக்கும்

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 4. இருந்தாலும்
  பாகற்காய் தயிர்க்கறி என்று
  ஒன்று செய்வேன்... அதற்கெல்லாம் இனி எப்போது வாய்ப்புக் கிடைக்குமோ!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயிர்க் கறியா?  எப்படி?

   நீக்கு
  2. பொதுவாப் பாகற்காயை வதக்குவது என்றாலே வில்லை, வில்லையாக நறுக்கிட்டுத் தயிர், உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி அல்லது சாம்பார்ப் பொடி கலந்து அரை மணி ஊற வைத்துவிட்டுப் பின்னர் எண்ணெயில் வறுப்போம். அதைச் சொல்றாரோ?

   நீக்கு
  3. அதே.. அதே...

   அக்கா அவர்களுக்கு நன்றி...

   ஒரே ஒரு வித்தியாசம்...

   மிதி பாகல் என்றொரு வகையுண்டு....
   சின்னச் சின்ன குமிழ் குமிழ்களாய்...

   அதை லேசாகக் கீறி விட்டு இவ்வாறு செய்வரு வழக்கம்...

   நீக்கு
  4. மிதி பாகல், வேலிப்பாகல், நீளப்பாகல் எல்லாவற்றிற்கும் மேற்சொன்ன முறையில் தான் பண்ணுவோம். மிதி பாகல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே கிடைத்தாலும் வாங்குவது எப்போதாவது தான்.

   நீக்கு
  5. அதே அதே துரை அண்ணா அண்ட் கீதாக்கா...

   எல்லா வகைப் பாகற்காயிலும் செய்வதுண்டு..என்னன்னா திவச டைம்ல நீளப் பாகல்தான் சேர்க்கறாங்க மிதிப் பாகல் வாங்கிப் பார்த்ததில்லை..

   மற்றொன்று இந்த்ப பாகலைச் செய்து தயிர் சேர்த்துக் கிட்டத்தட்ட பச்சடி போல..

   அப்புறம் பாகற் மோர்க்குழம்பு போலவும் செய்தாலும் நல்லாருக்கும்

   கீதா

   நீக்கு
 5. பாகற்காய் பிட்லை சாப்பிட்டு நாளாயிற்று.

  செய்முறை சுலபம்தான். பண்ணிடலாம்.

  இதே மெதட்டில் என்ன என்ன காய்கறிகளை உபயோகிக்கலாம்? பூசணிக்காய் சரியா வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ, ஹையோ, பூஷணிக்காயில் பிட்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எது எதிலே எது எது பண்ணணும்னு வியவஸ்தையே இல்லையா?

   நீக்கு
  2. பிட்லைன்னா முதல்லே பாகற்காய்க்கே ஓட்டு! அடுத்து கத்திரிக்காய், அடுத்துச் சேனைக்கிழங்கு+பயத்தங்காய் சேர்ந்தது, அடுத்து பீர்க்கங்காய்! இதே முறையில் பீர்க்கங்காய்ப் பிட்லை செய்து பாருங்கள்! அசத்தும். கடைசியில் தக்காளிக்காய். பச்சையாகவே இருக்கணும். கவனமாப் புளி ஊற்றக் கூடாது. காயில் உள்ள புளிப்பே போதும். இதுவும் அருமையா இருக்கும். (எனக்கும் எங்க அண்ணா, தம்பிக்கும். அம்மா அடிக்கடி பண்ணுவார்.) சப்பாத்திக்குக் கூடத் தொட்டுப்போம்.

   நீக்கு
  3. நெல்லை கீதாக்கா சொல்லிட்ட்டாங்க...

   நான் பாகற்காய், கத்தரிக்காய் பீர்க்கங்காய், தக்காளிக்காயில் செய்திருக்கிறேன் அக்கா சொல்லியிருப்பது போல் பீர்க்கங்காயில் செமையா இருக்கும்.

   தக்காளிக் காயில் எது செய்தாலும் கீதாக்க சொல்லியிருப்பது போல் புளி இல்லாமல் செய்வதுதான் நல்லாருக்கும் அதிலும் புளிப்பு இருக்கும் என்பதால்..

   கீதா

   நீக்கு
 6. ஒரே மாதிரி சமையல் அமையணும்னா அளவு ரெசிப்பி, செய்யும் விதம் ரோபோ மாதிரி இருக்கணும். இல்லைனா ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வித்தியாசம் வரத்தான் செய்யைம்.

  இதுல ஒரு பிரச்சனை, அன்னிக்குப் பண்ணுன மாதிரியே பண்ணு என்றால் மாட்டிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமே சமைச்சாலும் ஒரு நாள் அமைகிறாப்போல் இன்னொரு நாள் அமையாது. அப்படி இருக்கையில் அவங்க மாதிரிச் சமைக்கணும், இவங்க மாதிரிச் சமைக்கணும்னா எப்பூடி முடியும்? என் கடைசி நாத்தனார் அவங்க அம்மா (மாமியார்) சமைக்கிறாப்போலேயே இருக்கணும்னு வற்புறுத்துவா! என்னதான் அந்த முறையில் செய்தாலும் ருசியில் மாறுபாடு இருக்கத்தான் செய்யும். நம்மவரும் சொல்லுவார் நீ அன்னிக்குப் பண்ணின கொத்சு மாதிரி இன்னிக்கு இல்லைனு! மாறத் தான் செய்யும்.

   நீக்கு
  2. கண்டிப்பா நெல்லை அண்ட் கீதாக்கா ஒரே போல வராதுதான் நாமே செய்யும் போதும் கூட ஒவ்வொரு நாளும் மாறும் வாய்ப்புண்டு. காரணங்கள் பல இருக்கும்..

   கீதாக்கா குறிப்பைப் பார்த்து வரிக்கு வரி பார்த்து அதே அளவு செஞ்சாக் கூட நாம் செய்வதற்கும் அக்கா செய்வதற்கும் கண்டிப்பா வித்தியாசம் இருக்கும்.

   அக்கா சொல்றாப்ல சிலர் ஓவரா எதிர்பார்ப்பாங்க நீ சமைத்தது அவங்க சமைக்கறா மாதிரி இல்லை இவங்க சமைச்சா மாதிரி இல்லைனு..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்படி எல்லாம் சொன்னா நான் கண்டுக்கவே மாட்டேன் ஹா ஹா ஹா ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் சமைத்திருக்கிறேன் அம்புட்டுத்தான்னு சொல்லி இல்லை பதிலே சொல்லாமல் நகர்ந்துருவேன்...கீதாக்கா சொல்றாப்ல யாரை மாதிரியும் யாரும் சமைக்க முடியாது. நாமே நம் சமையலைக் கூட ..

   ஏதோ வாய்க்கு நல்லாருக்கா...இந்த நொடிக்கு பசிக்கு வயிறு நிரம்ப ஏதோ கிடைத்ததேன்னு இறைவனுக்கு நன்றி சொல்லிப் போனா நல்லாருக்கும் இல்லையா

   எனக்கு இந்த ஸ்டாண்டர்ட் குறிப்புனு எப்ப நினைச்சேன்னா....ஒரு பேட்டி சரவண பவன்னு நினைக்கிறேன்...அவங்க அமெரிக்காவுல தொடங்கின சமயம்னு நினைக்கிறேன்...யாரோ கேட்டாங்க எப்படி எல்லா ப்ரான்சிலயும் சாம்பார் ஒரே போல இருக்குன்னு..அதுக்கு அவங்க சொன்னது அளவு எல்லாம் ஒரே போல ஸ்டாண்டர்டா அளவு வைச்சுருப்பாங்களாம் ஆனா அது கூட ரகசியமாம் அப்படினு சொல்லிக் கேள்வி....அப்புறம் சங்கீதா செயின் ஹோட்டல்ஸ்ல்யும் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கேன். அப்படி இருக்குமா? எல்லா செயின் ஹோட்டல்களிலும் பதார்த்தங்கள் ஒரே சுவையில் இருக்குமா?

   எனக்கு பல இடங்களில் உள்ள இந்த செயின் ஹோட்டல்களில் சாப்பிட்டு அனுபவம் இல்லை அதனால தெரியலை...ஆனால் இது அப்பத்தான் தோனிச்சு. அப்படி இருக்க முடியுமான்னு?

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்... ஹோட்டல் - சரவணபவன்- ஒரே சுவை - இதுபத்தி கொஞ்சம் தெரியும். சரவணபவன் (ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே. இப்போ ஐயோ பாவம் நிலை) உணவு ஒவ்வொரு ஐட்டத்துக்கும் செய்முறை அளவு உண்டு. ஒரே பொடிவகைகள், கிச்சன் பொருட்கள் அனைத்து பிராஞ்சுக்கும். அவங்க செஃப்புக்கு பேசிக் டிரெயினிங் உண்டு. They dont depend upon chef 's skills. எல்லாமே ஸ்டாண்டர்ட் எக்யூமென்ட்ஸ். அதனால சைட் டிஷ், காய், குழம்பு, கூட்டு எதிலும் சுவை வித்தியாசம் (ஒவ்வொரு பிராஞ்சுக்கும்) கிடையாது.

   சங்கீதா ஃம்ரான்சைஸ்னாலும் பிராஞ்சுக்கு முதலில் அவங்களோட டிரகயின்ட் செஃப்தான் அனுப்புவாங்க.

   அப்படிச் செய்யலைனா செயின் ஹோட்டல் வைக்கமுடியாது. முருகன் இட்லியா என்று நம்பிப் போவதன் காரணமும் இதுதான்.

   ஆனால் பஹ்ரைனில் சங்கீதாவுக்கு அட்டஹாசமான செஃ்ப் அமைந்திருந்தார். இன்னொவேடிவ். ரொம்ப ரொம்ப நல்லா பண்ணுவர். Unfortunately for us, அவருக்கு தமிழகத்துல அரசு வேலை (போஸ்ட் ஆபீஸ்?) கிடைத்து வந்துவிட்டார். அவருக்குனு ஒரு பாணி பின்பற்றினார்.

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சென்னை, மும்பை போன்ற நகரங்களை எல்லாம் வல்ல ஈசனின் பொறுப்பில் தான் விடணும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுக் கூடியவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. கடைசியில் ரொம்ப நாட்கள்/வருஷங்கள் கழிச்சு என்னைப்போல் ஒருத்தர் என் பெயர் கொண்டவர் ஒரிஜினல் பிட்லை செய்முறையைப் போட்டிருக்காங்க! ஆஹா, ஓஹோ! பேஷ், பேஷ்! என் புக்ககத்தில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், கொஞ்சூண்டு தேங்காய் வறுத்து அரைத்த சாம்பாரைத் தான் பிட்லை என்பார்கள். அதிலும் நம்ம நெல்லை மாதிரிப் பூஷணி, பறங்கி, வெண்டைக்காய் எல்லாம் போட்டுப் பிட்லை என்பாங்க. பிட்லைனா இதான் பிட்லை! ஒரே ஒரு மாற்றம். பாகற்காய் இன்னமும் கூடப்போடுவதோடு, அதை முதலில் கொஞ்சம் வதக்கிக் கொஞ்சமாய் ஜலம் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி போட்டு வேகவைத்து அந்த ஜலம் இருந்தால் எடுத்து வைத்துக்கொண்டு அரைத்த விழுதில் கலந்து சேர்ப்போம். அதோடு மொச்சைப்பருப்புப் பிதுக்குப் பருப்பு அல்லது தட்டாம்பயறு போடுவோம். இப்போல்லாம் கொண்டைக்கடலை, முழு மொச்சை போடறாங்க. வேறே வழியில்லைனா அதுவும் ஓகே தான். பிட்லை பண்ணினால் அன்னிக்கு மோர்க்குழம்பு கட்டாயம் உண்டு. இந்த மாதிரிச் சாப்பிட்டேப் பல வருஷங்கள் ஆச்சு! :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ கீதாக்கா மிக்க மிக்க நன்றி!!! ஆஹா உங்ககிட்டருந்து இப்படி ஒரு கருத்து ஓ மீ டான்ஸிங்க்!!

   அக்கா செய்த அன்று இதையே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது போல் செய்ததால் கொஞ்சம் நெகிழ இருக்காப்ல இருக்கு. கெட்டியா செஞ்சிருந்தா பாகற்காய் தெரிஞ்சுருக்கும்...அதான் எடுத்துக் காட்டி கடைசிபடம்.

   நானும் பாகற்காயை வதக்கியிருக்கிறேன் கீதாக்கா. எந்தக் காயையும் கொஞ்சம் வதக்கிவிட்டுத்தான் புளித் தண்ணீர் சேர்ப்பதானால் சேர்ப்பது அல்லது வேக வைப்பது. முதல் படத்தில் வதக்கல் போட்டிருக்கேன். ஆனால் நன்றாக வதங்கிய படம் இல்லை. எல்லாம் எடுக்க முடிவதில்லை கீதாக்கா. அடுத்து புளித் தணியில் மஞ்சள் பொடி போட்டு வேக வைத்ததும் இருக்கு...

   ஆமாம் பயறு ஏதாவது சேர்ப்பாங்க. இப்பல்லாம் கொண்டைக்கடலை போடுறாங்க. ஆனா நான் இங்க சொன்னது போலத்தான் செய்யறேன்..

   மிக்க மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 9. இட்லி, சட்னிக்கப்புறமாப் பாகற்காய்ப் பிட்லைனு அன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னிக்கே கௌதமன் சார் சொன்னார். என்னடா இதுனு நினைச்சேன். இப்போத் தான் பிரியுது! :)))))

  பதிலளிநீக்கு
 10. அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். என்றும் நலமுடன் இருக்க பிரார்ததனைகள். ஹை கீதா. பாவக்காய் பிடலை ருசிகரமா செய்திருக்கீங்க. நான் ஒதுக்கி வைக்கும் நல்ல காய்களில். இது ஒன்று. உடலுக்கு அதுவும் . சர்க்கரைக்கு நல்ல மாற்று. உங்கள் மகனுக்கு நல்ல ரசனை :) மெழுக்குவர்த்தினு தோழி ....பாலக்காட்டுப் பெண் கற்றுக் கொடுத்தாள்.அதை. ரசித்து சாப்பிடுவேன். பாவக்காய் அரைப்பங்கு தான் மிச்சம் எல்லாம் சின்ன வெங்காயம் பூண்டு, தேங்காய்:). நல் வாழ்ததுகள் ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா சாப்பிடுவீங்க தானே? கசக்கவெல்லாம் செய்யது இங்கு எப்போதுமே பாகற்காய் நல்ல பிஞ்சாகக் கிடைக்கிறது. ரொம்ப நன்றாக இருக்கிறது.

   மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அப்படி. எல்லாமே சாப்பிடுவான். ஓ அம்மா மெழுக்குவரட்டி ரொம்ப நல்லாருக்கும்...நானும் செயதுண்டு பாகற்காயிலும்...அதுவும் மிதி பாகலில் செய்ய நன்றாகவே இருக்கும்

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 11. எங்க வீட்டுல பாகற்காய் பொறியல் அல்லது பாகற்காய் சாம்பார் மட்டும் செய்வதுண்டு அவ்வளவுதான். படங்கள் அருமை பாராட்டுக்கள் கீதா ரெங்கன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை. இதையும் செய்து பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும். பாராட்டிற்கும் மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 12. பாகற்காய் எனக்கு பிடித்தமானது ஆனால் உறவினர் வீட்டுக்கு போனால் செய்ய மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாகவே விருந்தினருக்கோ, உறவினரே ஆக இருந்தாலும் பாகற்காய் சமைத்துப் போட மாட்டார்கள். சம்பந்தி வந்தாலும் பாகற்காய் சமைக்க மாட்டார்கள்.

   நீக்கு
  2. அது ஒரு இனிய பாரம்பரியம்....

   நீக்கு
  3. ஓஹோ... அதுதானா கீசா மேடம்... பிட்லையை இப்படிப் பாராட்டறீங்க. நான் நினைச்சேன்..இவ்வளவு சொல்றாங்களே...இவங்க பண்ற பாகற்காய் பிட்லை எப்படி இருக்குன்னுதான் பார்ப்போமே என்று.... அது முடியாது போலிருக்கு.

   நீக்கு
  4. வீட்டுக்கு வரவங்களுக்குப் பாகற்காயெல்லாம் யாருமே சமைத்துப் போட மாட்டார்கள் நெல்லைத் தமிழரே!

   நீக்கு
  5. மிக்க நன்றி கில்லர்ஜி.

   ஆமாம் விருந்தினர்களுக்கு அப்புரம் கீதாக்கா சொல்லியிருப்பது போலத்தான்..

   கீதா

   நீக்கு
  6. நெல்லை நீங்க எனக்கு தம்பி/அண்ணே விருந்தினர் எல்லாம் இல்லை ஸோ உங்களுக்கு நான் செஞ்சு தரேன் ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 13. பாகற்காய் உடலுக்கு நல்லது. நான் விரும்பி சாப்பிடுவதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாகற்காய் உடலுக்கு நல்லது.//

   ஆமாம் முனைவர் ஐயா.

   மிக்க நன்றி முனைவர் ஐயா

   கீதா

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. இன்னும் ஒரு பாரம்பரிய சமையல். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த உணவு பாகற்காய் பிட்லை. எனக்கு மிதி பாவற்காய் மிகவும் பிடிக்கும். பிட்லையில் நான் தனியா,கொஞ்சம் மிளகு இரண்டும் வறுத்து அரைப்பேன், நோ உளுத்தம் பருப்பு. பிட்லை என்றால் அது பாகற்காயில்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிதி பாகல், அதலக்காய் (பாகல் போன்றது. அந்தக் குடும்பம் தான்) வேலைப்பாகல் எல்லாவற்றிலும் பிட்லை பண்ணுவோம். நீர்க்கப் புளி கரைத்துக் கொண்டு அதில் வேகவைத்துக் கொட்டி வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கறியும் பண்ணுவோம். ஆனால் இங்கே பாகற்காய் வதக்கல் தான். மேலே சொன்னாப்போல். இதைத் தவிரக் கடுகு பாவக்காய்க் குழம்புனும் ஒண்ணு உண்டு. நானும் என் சமையல் பதிவுகளில் போட்டிருக்கேன். தி;கீதாவும் "திங்க" பதிவில் ஒரு முறை போட்டார்.

   நீக்கு
  2. கடுகு, பாவக்காய்க் குழம்பு கிட்டத்தட்டப் பாகல்காய் ஊறுகாய் மாதிரி. பண்ணி வைத்துக்கொண்டு தேவையானப்போ எடுத்துக்கலாம். கிட்டத்தட்டப் புளிக்காய்ச்சல் செய்முறை தான். அதில் கடுகும் சேர்த்துப் பாகல்காயும் சேர்ப்பதால் கடுகு, பாவக்காய்க் குழம்பு.

   நீக்கு
  3. மிதி பாகலை ஸ்ராத்த தினத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. நீளப் பாகல் தான் பயன்படுத்தணும் என்பார்கள். நான் பிட்லை எனில் அதில் நோ கொத்துமல்லி விதை! பிட்லைனாத் தனி ருசி, மணம் கொடுக்கணும். தனியா சேர்த்தால் சாம்பார் மாதிரி ஆயிடும்.

   நீக்கு
  4. மிக்க ந்னறி பானுக்கா...

   ஓ உங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்குமா? சூப்பர்.

   பிட்லை என்றால் ஆமாம் அது ஃபர்ஸ்ட் பாகற்காய் தான். நம் வீட்டில் தனியா கிடையாது அக்கா.

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
  5. ஆமாம் கீதாக்கா நானும் கடுகு பாகற்காய் செய்வதுண்டு.

   அதலக்காய் நம் பக்கங்களில் கிடைக்கும். குட்டியாக கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..அங்கு மிதி பாகலும் கிடைக்கும் அதில் பிட்லா செஞ்சாலும் நல்லாருக்கும்

   இங்கு காட்டு பாகற்காய் என்று ரவுண்டாக குண்டாகக் கிடைத்தது சந்தையில் முன்பு...இப்போது சந்தையே இல்லை தொற்று காரணத்தினால்

   இந்தக் காட்டுபாகற்காயிலும் நன்றாக இருந்தது எல்லா பதார்த்தங்களூம்..

   கண்டங்கத்தரி/முள்ளிக்காய் நு சொல்லுவோமே அது கூட இங்கு சந்தையில் கிடைத்தது...

   கீதா

   நீக்கு
 16. பாகற்காய் பிட்லா/லை படங்களும், செய்முறையும், சொல்லிய விதமும் அருமை கீதாரெங்கன்.

  அம்மாவும், நீங்களும் பேசியது அருமை.என் அம்மாவும் கண்ணளவு கை அளவுதான்.
  மாமியார் தான்" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவருக்கு இவ்வளவு உங்கள் இருவருக்கு இவ்வளவு என்று சொல்லி கொடுத்தார்கள்.

  காய் வாங்கி வந்தால் அத்தனையும் அப்படியே சமைத்து விடக்கூடாது, ஒவ்வொரு காயில் இரண்டோ ஒன்றோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், மறு நாள் குழம்பில் போட ஆகும் என்பார்கள். சிந்தாமல், சிதறாமல் சிக்கனமாய் சமைக்க சொல்லிக் கொடுத்தவர்கள்.


  சாதம் வைக்க அம்மா சொல்வது அந்த பாத்திரத்தின் விளிம்பு வரை தண்ணீர் வை.
  புளி இவ்வளவு எடு அப்படி என்று கைகளில் அளவு காட்டுவார்.


  நான் செய்யும் முறை மீனாட்சி அம்மா அம்மாவின் சமையல் குறிப்பைப் பார்த்து எழுதி வைத்த சமையல் குறிப்பு:-

  வறுத்து அரைக்க வேண்டியப் பொருட்கள்.

  பாகற்காய் 100 கி , உளுத்தம்பருப்பு அரைஸ்பூன், தனியா (கொத்தமல்லி விதை) 1 ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், கடலைப்பருப்பு 1ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, வற்றல் மிளகாய் 4 , கடுகு கால் ஸ்பூன்,

  புளி 3 கொட்டைப்பாக்கு அளவு, தேங்காய் துருவல் 3 ஸ்பூன் உப்பு ஒன்றரை ஸ்பூன்.

  அவர்கள் சொல்லாத தக்காளி சேர்த்துக் கொள்வேன் நான்.

  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சம அளவு (கால் ஆழாக்கு) வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

  மற்றவைகள் தான் உங்களுக்கு தெரியுமே!

  நீங்கள் சொன்ன மாதிரி கொத்தமல்லி விதை இல்லாமல் செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடலைப்பருப்பு மாமியார் வீட்டில் அதிகம் சேர்ப்பார்கள். சட்னி, துவையல், தாளிப்பு எல்லாவற்றிலும் முழித்துப் பார்க்கும். நான் கடலைப்பருப்புக் கொஞ்சம் தான் பயன்படுத்துவேன். சாம்பாரில் அரைத்து விடுவது என்றால் கூட ஒரு டீஸ்பூன் தான்! ரொம்பச் சேர்த்து அரைத்தால் சாம்பார் ரொம்பவே கெட்டியாக ஆகிடும்.

   நீக்கு
  2. கோமதிக்கா மிக்க நன்றி

   அந்த உரையாடல் என் பாட்டியோடு அப்பாவின் அம்மா...நான் என் அப்பாவின் அம்மாவை அம்மா என்றுதான் அழைப்பது வழக்கம். அவரிடம் தான் நான் நிறைய விளையாடுவேன்.

   உணவு முறைகள் கொஞ்சம் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். அவர் என்னொடுதான் இருந்தார் மறையும் போது 93 வயது கடைசி ஆறு மாதங்கள் தான் கொஞ்சம் அல்ஜிமர் வந்தது அது வரை பரவாயில்லை. இப்போது நினைத்துக் கொள்கிறேன் சில சமயம் வருத்தமும் வரும்...அவருக்கு நல்ல நினைவு இருந்த போது அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டேனேனென்று..

   உங்கள் அத்தை/மாமியார் செம!!! நல்ல விஷயம்..

   நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன் கோமதிக்கா.

   சிலர் து ப வை நன்றாக வேக வைத்துக் கொண்டு காயுடன் க ப வை வேக வைத்து அதாவது கொண்டைக் க்டலை எல்லாம் பதிலாக க ப வைப் போட்டுச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்...

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 17. வறுத்து அரைப்பதில் பாகற்காய் கிடையாது.
  பாகற்காய் தேவை 100 கி

  பதிலளிநீக்கு
 18. பாகற்காய் தான் எனக்கு இனிப்பே...!

  என்னது அரைச்சு விட்ட சாம்பார் மாதிரி இருக்கா...? அது தானே சாம்பாரில் முதன்மை...! இனி அதை கேட்கும் அளவிற்கு, மற்ற சாம்பார் வகைகளை செய்ய வேண்டுமாய் பரிந்துரை செய்கிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி கருத்திற்கு!!

   ஆம் மீ க்கும் இது இனிப்புதான்!!! மிகவும் பிடிக்கும்

   டிடி அரைச்சுவிட்ட சாம்பார்னு சொன்னது பாகற்காயை பிட்லைனு வேறு விதத்தில் செய்ததை மகன் சொன்னான் வித்தியாசம் எத்வும் இல்லை என்று

   பிட்லை வேறு அ வி சா வேறு நம் வீட்டில்

   அ வி சா சாம்பார் நல்லாருக்கும் தான்

   //இனி அதை கேட்கும் அளவிற்கு, மற்ற சாம்பார் வகைகளை செய்ய வேண்டுமாய் பரிந்துரை செய்கிறேன்...!//

   ஆஆஆஆஆஆஆஆஆஅ....இங்கு பல எக்ஸ்பெர்ட்ஸ் இருக்க நான் ரொம்பவே சின்னக் குட்டியாக்கும் டிடி
   ஹா ஹா ஹா

   மிக்க நன்றி டிடி

   கீதா

   நீக்கு
 19. பிட்லை உங்கள் முறையில் செய்து பார்கிறேன்.

  எங்க வீட்டில் பாகற்காய் நன்கு ஒடும்
  காரக் குளம்பு,பொரித்த புளிக் குழம்பு, பால்கறி பலாக்கொட்டை சேர்த்து, வறுவல்,பொரியல், பச்சடி, பொரித்த சம்பல், சலட்,எனப் பலவாறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மாதேவி! உங்கள் வீட்டிலும் பாகற்காய் நன்கு ஓடுமா அப்ப செய்திடலாம்

   பாகலில் பால்கறி ஆம் பலாக்கொட்டை சேர்த்து என் பாட்டி அத்தை செய்வார்கள் இலங்கையில் இருந்ததால் அதையும் இங்கு பகிரலாம் என்றிருக்கிறேன். நீங்கள் கூட எழுதி அனுப்பலாமே இங்கு அல்லது உங்கள் தளத்தில் போட்லாமே இப்போது எழுதுவதில்லை போல..உங்கள் ஊர்க் குறிப்புகளை எழுதலாம்.

   மிக்க நன்றி மாதேவி

   கீதா

   நீக்கு
 20. பாகற்காய் பிட்லை.... குறிப்புகள் நன்று. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு. நானும் இங்கே சில சமயங்களில் செய்வேன்.

  பதிலளிநீக்கு
 21. முதலில் என் அம்மாவின் சமையல் நாட்களை எனக்கு நினைவு படுத்திய கீதாவிற்கு மிகவும் நன்றி. எங்கம்மா பாவைக்காய் பிட்லை சமைக்கனும். நான் உட்கார்ந்து நல்லா சாப்பிடனும். அந்த நாளெல்லாம் போச்சு. சூபர் கீதா. என் அம்மாவும் நானும் இதே மாதிரிதான் சமைப்போம். மெது பாவை உபயோகிப்போம். மிளகு சேர்க்க மாட்டோம். அம்ஸமான ஒரு தென்னிந்திய உணவுப் பண்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரமா...மிக்க நன்றி . நானும் அதே தான்..

   நீங்களும் இதே போன்று செய்வது மகிழ்ச்சி..மிதி பாகலும் நன்றாக இருக்கும் நானும் செய்வதுண்டு. ஆம் மிளகு என் சின்ன பாட்டி ஒருவர் சேர்க்காமல் செய்வார். அப்படியும் நான் செய்வேன். ஆனால் இதே ரெசிப்பிதான்

   மிக்க நன்றி ரமா

   கீதா

   நீக்கு
 22. டெல்லியில் எங்கள் ஏரியாவில் உள்ள Hotchips கடையில் மாலையில் ஃப்ரெஷ்ஷா பாகற்காய் சிப்ஸ் போடுவார்கள். சுடச்சுடக் காரமாக ருசியாக இருக்கும். கேட்டு வாங்கிச்செல்வார்கள். வட இந்தியர்களும் வாங்கி விழுங்குகிறார்கள் இப்போதெல்லாம். இந்த டயபெடீஸ் வேறு, பாகற்காயின் TRP rating-ஐத் தூக்கிவிட்டுவிட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் அண்ணா பாகற்காய் சிப்ஸ் ஹையோ செமையா இருக்கும். ஹாட்சிப்ஸ்!!

   நானும் வீட்டில் போட்டிருக்கிறேன்! நல்லா வந்திருக்கு.

   இப்போதெல்லாம். இந்த டயபெடீஸ் வேறு, பாகற்காயின் TRP rating-ஐத் தூக்கிவிட்டுவிட்டது!//

   ஹா ஹா ஹா அதைச் சொல்லுங்க இது மட்டுமா இன்னும் நிறைய சாமான்களுக்கு டி ஆர் பி ஏறியிருக்கு!!!

   மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

   கீதா

   நீக்கு
 23. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள், நண்பர் ஒருவர் அவர்கள் வீட்டில் செய்த பாகற்காய் பஜ்ஜி அரை டஜன் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதுவரை அப்படி ஒன்றை சாப்பிட்டதில்லை என்பதால், ஆசையோடு ஒன்றை சாப்பிட்டால் -- ஆ பயங்கரக் கசப்பு! ஐந்து மணி நேரம் வாயில் தங்கி பயமுறுத்தியது கசப்பு. சரி காயை விட்டு மாவை சாப்பிடலாம் என்று முயற்சி செய்தால், அந்த ஒட்டியிருந்த பஜ்ஜி மாவும் கசப்பு. ஐந்து பஜ்ஜிகளைக் கொண்டுபோய் டெரசில் காக்கைக்குப் போட்டேன். அப்புறம் அதைச் சாப்பிட்ட இரண்டு காக்காய்கள் என் வீட்டுப் பக்கமே வரவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறவையார்வலர்கள் இதைப் படித்தால் நீங்கள் காக்காய்களை டார்ச்சர் செய்ததாக கேஸ் போடக்கூடும்!

   நீக்கு
  2. ஆக,
   காக்காய்களை விரட்ட புது யுக்தி என்கிறீர்கள்!...

   நீக்கு
  3. பாகற்காயை அருமையாக பஜ்ஜி போல் செய்யலாம். பாகற்காயை வில்லைகளாக நறுக்கிவிட்டு, முற்றலாக இருந்தால் விதைகளை எடுக்கலாம். பிடிக்கும் எனில் அப்படியே விடலாம். எண்ணெயில் பொரிந்து விதைகளும் ருசிக்கும். அந்த ருசி பிடிக்கணும். வில்லைகளாக நறுக்கிய பாகற்காயில் தேவையான உப்பு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துத் தயிர் அரைக்கிண்ணம் விட்டுக் கலந்து ஊற வைக்கணும். பின்னர் கடலைமாவை பஜ்ஜி மாதிரி உப்பு, காரம், பெருங்காயம் போட்டுக் கரைத்துக் கொண்டு ஊறிய பாகற்காய் வில்லைகளை அதில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். மாலை தேநீருடன் சாப்பிட என் நாத்தனார் அடிக்கடி பண்ணுவார். இம்மாதிரியே வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் ஆகியவற்றையும் பண்ணலாம். கத்திரிக்காயை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கலாம். சேப்பங்கிழங்கை வேகவிட்டுக் கொண்டு பெரிதாக இருந்தால் ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டு இப்படி பஜ்ஜி மாவில் போட்டுக் கலந்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கலாம். என் மாமியார் இதில் சிறந்தவர். வயலிலேயே சேப்பங்கிழங்கு நிறையக் காய்க்கும் என்பதால் அம்பாரமாகக் குவிந்திருக்கும் கிழங்கை இம்மாதிரிப் பண்ணி சாயங்காலம் சாப்பிடக் கொடுத்துடுவார். நான் இதெல்லாம் கல்யாணம் ஆகி வந்து தான் சாப்பிட்டிருக்கேன். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலும் சிறப்புச் சமையலாக இவற்றில் ஏதேனும் ஒன்று பாகற்காய் தவிர இருக்கும்.

   நீக்கு
  4. தயிரில் ஊறின பாகற்காய்களைப் பிழிந்து எடுத்தால் அதில் உள்ள கசப்புப் போய்விடும். பிழிந்து எடுத்த வில்லைகளைக் கடலைமாவில் தோய்த்துப் பொரிக்கணும். அதைக் குறிப்பிட மறந்துட்டேன்.

   நீக்கு
  5. நண்பர் வீட்டில் செய்யப்பட்ட பஜ்ஜி பச்சை பாகற்காய் துண்டுகளை மாவில் தோய்த்து செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  6. கௌ அண்ணா நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா விரிவா சொல்லிட்டாங்க. எங்க வீட்டுலயும் பாகற்காய் பஜ்ஜி வெண்டைக்காய் சேம்பு கத்தரி எல்லாம் பஜ்ஜி போடுவதுண்டு.

   அப்புறம் ஸ்டஃப்ட் பாகற்காய் செய்யலாம் அதுவும் நன்றாக இருக்கும்.

   கீதா

   நீக்கு
 24. வித்தியாசமாக எதைச் செய்தாலும் பிடிக்கிறது. பாகற்காய் பிட்லையைச் சொல்லவில்லை. எழுதும் முறையில் விதவித மாதிரிகளைப் புகுத்துவது எனக்கு பிடித்த ஒன்று என்று உங்களுக்கே தெரியும். பா.பிட்லை தயாரிப்பை புதுமாதிரியாக எழுதிச் சொன்னது மிகவும் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜீவி அண்ணா. எனக்கும் கூட ஏதேனும் புதுசா செய்ய வித்தியாசமாகச் செய்ய ரொம்பப் பிடிக்கும். கருத்திற்கும் எழுதியதைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 25. ஆவ்வ்வ்வ் இன்று ஆவக்காய்.. சே..சே பாவக்காய் பிட்லே அதுவும் கீதா ஸ்டைலில்.. பேஸ்..பேஸ்... ஹா ஹா ஹா எனக்கும் கீதா பாசை வரப்பார்க்குது அம்பி:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பூட்னு என்னைத்தீனே கூப்டீங்க? நான் கீதா ரங்கனுக்கும் தம்பீதான்.

   உங்களுக்கெங்க ஆவக்கீய், கோவைக்கீய், பாவக்காய்லாம் தெரியப்போகுது? எல்லாச் செனி கொடியின் இலையைச் சாப்பிடறவங்களுக்கு காய்லாம் எங்க தெரியும்?

   நீக்கு
  2. ///நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:57
   அம்பூட்னு என்னைத்தீனே கூப்டீங்க? நான் கீதா ரங்கனுக்கும் தம்பீதான்.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரொம்பத்தான் ஆசைப்படுறீங்க இந்தக் கொரோனா நேரத்திலயும்:))

   நீக்கு
  3. பிஞ்சு வானவ்ல்லியா இப்ப!! ஓஹோ புது பதிவு ரெடியாகுதோ?!!

   ஏன்னாது என் பாஷையா?!! பேஸ் பேஸ் நு நான் எங்கிட்டு ஜொன்னேன்!! ஹா ஹா ஹா

   ஆவக்காய்// ஹெ ஹெ ஹெ நான் ஆவக்காய் போட்டுக் கொடுத்தேனே இங்கு ஒருத்தருக்கு...நல்லா வந்திருக்குதே!!!

   கீதா

   நீக்கு
 26. என்னுடைய சமையலும், எனக்கு கண்ணளவுதான், கை பாவிக்க மாட்டேன் எல்லாம் கரண்டிதான், ஆனா அளந்து போடமாட்டேன்.. கண்ணால் பார்த்துப் பார்த்தே சேர்ப்பேன் உப்பு தூள் எல்லாம்.

  ஆனா இந்த இங்கிலீசு சமையலுக்கு மட்டும் அளாவு தேவை... அதாவது பிரெட், புடிங், கேக்... இவற்றுக்கெல்லாம்..

  மற்றும்படி முறுக்குக்கூட சும்மா கப்பால அள்ளிப்போட்டுக் குழைச்சுச் சுடுவேன், ரெசிப்பி எழுதுவதற்குத்தான் அளவெடுத்துச் சொல்வதுண்டு.... இதிலிருந்து மீ ஜொள்ள வருவது என்ன எனில் மீ ஒரு பயங்கர செஃப்ஃப்பூஊஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க பயங்கர செஃப்னா, எதுக்கு அடிக்கடி கேஎஃ்ப்சில சாப்பிடணும்? அதுமாதிரி செய்ய தெரிய லேதா?

   நீக்கு
  2. //
   நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:59
   நீங்க பயங்கர செஃப்னா, எதுக்கு அடிக்கடி கேஎஃ்ப்சில சாப்பிடணும்? அதுமாதிரி செய்ய தெரிய லேதா?//
   ஹையையோ வர வர எனக்கும் நெ தமிழனுக்கும் கே எஃப் சி ல கண்டம்:)).. இனிமேல் கே எஃப் சிப் பக்கம் போனாலும் நெல்லைத்தமிழனின் “செல்பி முகம்” வந்து பயமுறுத்தப் போகுதே ஹா ஹா ஹா..

   நான் வீட்டிலும் செய்வேனே... ஆனாலும் அதன் சுவையே ஒரு தனி... நினைத்தவுடன் வாங்கலாமெல்லோ:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. ஆனா இந்த இங்கிலீசு சமையலுக்கு மட்டும் அளாவு தேவை... அதாவது பிரெட், புடிங், கேக்... இவற்றுக்கெல்லாம்..//

   அதே அதே அதே பிஞ்சு!!

   நானும் கண்ணளவுதான் ஆனால் ஸ்பூனால் எடுத்துப் போடுவேன்....இங்கு போடுவதென்றால் மட்டுமே அளந்து போடுவது!!

   ஆ ஆ ஆ முறுக்கு எல்லாமும் கண்ணளவா....நானும் சில முறுக்கு அதாவது தேன்குழல் வகைகளை அப்படிச் செய்வதுண்டு ஆனால் கை முறுக்கு மற்றும் சில வகைகளுக்குக் கண்டிப்பா அளந்துதான் செய்வது. முறுக்கில் உளுத்தம்பொடி கூடினாலும் சரியா வராது குறைந்தாலும் சரியா இருக்காது நான் செய்யும் போது அதனால்..

   //இதிலிருந்து மீ ஜொள்ள வருவது என்ன எனில் மீ ஒரு பயங்கர செஃப்ஃப்பூஊஊஊஊஊ:))//

   ஸ்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅ தாங்கலைப்பா!!!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 27. வித்தியாசமான முறையில் ஒரு பாவக்காய் ரெசிப்பி கீதா, நன்றாக இருக்கு பார்க்க, சுவையும் நன்றாக இருக்குமென்றே நம்புகிறேன்.. எங்கள் வீட்டில் பாவக்காய் ஓகே ..சாப்பிடுவினம்.

  அதென்னது பிளேன் கோப்பி என்பதால பூஸாருக்குப் பிடிக்கவில்லைப்போலும்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மில்க் கோப்பிக்கு ஓடர் கொடுத்திருக்கலாமெல்லோ.. நல்ல அழகாக கண்ணடிக்கிறா கியூட்டி:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா பார்க்க மட்டுமில்ல சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

   கர்ர்ர்ர்ர்ர் ப்ளெய்ன் காப்பி பூஸாருக்கு அல்ல அங்க பாருங்க நான் கேட்டதை வாங்காமல் இந்தக் காப்பிய எங்களுக்காக வாங்கிருக்காராம் வாங்கி காத்துக் கொண்டு வழி மேல் விழி வைத்து கண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாராம்!!!!!! எங்களுக்குல்ல அதான் ப்ளெயின் காப்பி!! ஹா ஹா ஹா க்ரீம் அல்லது மில்க் கேட்டா கொடுக்காமலா பொவாங்க!

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 28. எனக்கு மிகவும் பிடித்தமானது இந்தப் பாவக்கா பிட்லை..வருடம் ஒருமுறை மதுரை மொட்டையரசு திருநாளில் ஒரு கட்டளைக்காரர் மண்டபத்தில் இது அவசியம் உண்டு...நறுக்காது முழுதாகவே போட்டுச் செய்வார்கள்..அத்தனை ருசியாக இருக்கும் இதற்காகவே நாங்கள் சிலர் தவறாது இந்தத் திருவிழாவிற்குப் போவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வருடம் ஒருமுறை மதுரை மொட்டையரசு திருநாளில் ஒரு கட்டளைக்காரர் மண்டபத்தில் இது அவசியம் உண்டு...நறுக்காது முழுதாகவே போட்டுச் செய்வார்கள்..//

   திருநாளில் பிட்லை கூட உண்டா அட! ஸ்வாரஸ்யமான தகவல். அதுவும் முழுசா போட்டு செய்வாங்களா!!!!

   மிக்க நன்றி ரமணி சகோ

   கீதா

   நீக்கு
 29. குறிப்பும் அதையொட்டிய தகவல்களும் கருத்துக்களும் அருமை கீதா!

  பதிலளிநீக்கு
 30. பாகற்காய் பிட்லையை நாங்கள் பொரிச்சகுழம்பு என் போம் பாகற்காய் வாங்கினாலே இந்தக் குழம்புதான் எங்கள் வீட்டில்

  பதிலளிநீக்கு
 31. பாகற்காய் வறுவல் மட்டுமே எனக்கு பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ராஜி...எனக்கும் பாகற்காய் வறுவல் பிடிக்கும்

   கீதா

   நீக்கு
 32. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

  பதிவு அருமை. பாகற்காய் பிட்லை/லாக்கள் செய்முறைகள் நன்றாக உள்ளது. நம் எல்லோருக்கும் முதலில் அம்மாக்கள் தயாரிப்புதான் ஈசியாக வரும். பின்பு புகுந்த வீட்டு பழக்கங்கள், நா...மே கற்றுக் கொள்வதென சில சிறப்பு பயிற்சிகள் முன் வந்து நின்று நமக்கே சில புதுமைகளை காட்டும். உங்களின் அனைத்துப் பாணிகளும் மிக அருமை. தனியாவை தனித்து வைத்து விட்டு செய்த முறையும் நன்றாக இருக்கிறது.

  இதனுடன் கொண்டைக்கடலையும் வேக வைத்துக் கொண்டு சேர்த்தால் வேக வைத்து இத்துடன் இணைக்கும் கடலைப்பருப்பு அவசியமில்லை.து. ப மட்டும் கொஞ்சம் போதும். எப்படிச் செய்தாலும் பாகல் பிட்லை சுவைதான். எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்டில் இதற்கு தொட்டுக் கொள்ள உளுந்து அப்பளம் கண்டிப்பாக பொரிக்கச் சொல்வார்கள்.

  விரைந்தோடும் வாகனங்களில் நம் வரவை எதிர்பார்த்து காஃபியோடு காத்திருக்கும் அழகான பூசார் அமைதியாக அமர்ந்திருப்பது அவரின் பொறுமையை காட்டுகிறது. எத்தனை நேரந்தான் நாம் அவரின் பொறுமையை சோதிப்பது?

  நீங்கள் செய்த அத்தனை முறைகளையும் படித்ததில், வெகு விரைவில் பாகற்காய் பிட்லை செய்து சாப்பிடும் ஆவல் தோன்றி விட்டது.அவ்வளவு சுவையாக அழகான படங்களுடன் வர்ணித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 33. ரொம்ப நல்லா இருக்கு கீதா அக்கா ...

  ஆன எங்க வீட்டில இப்படி செய்ய மாட்டாங்க ...எங்களுக்கு வறுவலும் , சாம்பாரும் தான் பிடிக்கும் ...

  அடுத்த முறை இப்படி செஞ்சு பார்க்கிறேன் ...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!