திங்கள், 15 ஜூன், 2020

"திங்க"க்கிழமை  : புளியிட்ட கூட்டு/குழம்பு - ரெஸிப்பி - கீதா ரெங்கன்
புளியிட்ட கூட்டு/குழம்பு

எபி கிச்சன் வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வணக்கம்.


கூட்டு/குழம்பு என்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்வதுண்டு. அல்லது செய்முறை ஒரே போல இருந்தாலும் வேறு வேறு பெயரில். இது என் பாட்டியின் செய்முறை. அவர் புளியிட்ட கூட்டுக்குழம்பு, புளியில்லா பொரிச்ச கூட்டு என்று செய்வதில் இன்று புளியிட்ட கூட்டுக்குழம்பு – அதாவது இதனை சாதத்தில் கலந்து சாப்பிடும்படி குழம்பாகவும் செய்யலாம். கெட்டியாகச் செய்தால் கூட்டு என்பார்.

இதற்குப் பெரும்பாலும் கீரைத்தண்டு, இளவன்/தடியங்காய்/வெள்ளைப் பூஷணி, கத்தரி, வாழைக்காய் சௌசௌ, இவற்றில் ஏதேனும் ஒரு காய் + கருப்புக் கொண்டைக்கடலை. கறுப்புக் கொண்டைக்கடலை இல்லை என்றால் வெள்ளை கொண்டைக்கடலை. அதுவும் இல்லை இருக்கவே இருக்கிறது கடலைப்பருப்பு. ரொம்ப சிம்பிள் ரெசிப்பிதான். இதில் பருப்பு எதுவும் வேக வைத்துச் சேர்ப்பதில்லை.

புகுந்த வீட்டில் பொரிச்ச கூட்டு என்று சொல்லுவது வேறு.  சில வெரைட்டி வகைகள்தான் உண்டு. இருந்தாலும் செய்வது வெகு அபூர்வம். அந்த சில வகைகளையும் நான் தெரிந்து கொண்டு நம் வீட்டில் செய்வதுண்டு. அது போலவே இங்கு எபியில் வரும் குறிப்புகளையும்.

நமக்குத்தான் மொனொட்டனி என்பது ஆகாதே!!!!!!! ரொட்டீனாகச் செய்வதிற்கிடையில் ஏதேனும் புதிதாய்க் கற்பது, செய்வது சமையல் என்றில்லை எல்லாவற்றிலும் என்று எல்லாவற்றிலும் கால் வைத்து நுனிப்புல்லேனும் மேய வேண்டும்!!!!! Jack of all trades, master of none!!!! இதில் அவ்வப்போது, என்னடா இது நாம் ஒன்றைக் கூட நன்றாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமலேயே அரை செஞ்சுரியைக் கடந்தாயிற்றே என்றும் தோன்றும்தான்.

இந்தப் பதிவில் நான் கீரைத்தண்டு, வெள்ளைக் கொண்டைக்கடலை சேர்த்துக் கூட்டுக் குழம்பாகச் செய்திருக்கிறேன்.


எபி ஆசிரியர்கள்,  நட்புகள், பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த திங்க பதிவில் சந்திப்போம். இப்போது பை பை!
Top The Only 3 That Matters Bye Stickers for Android & iOS | Gfycat

101 கருத்துகள்:

 1. செய்முறையை புகைப்படத்தை பெரிதாக்கி படிப்பது செய்தது சிறப்பு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறள் 294:
   உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
   உள்ளத்து ளெல்லாம் உளன்.


   மு.வரதராசன் விளக்கம்:
   ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

   நீக்கு
  2. சூப்பர்! துரை அண்ணா அண்ட் கௌ அண்ணா

   கீதா

   நீக்கு
 3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 4. அன்பின் துரைக்கும் ,தேவகோட்டையாருக்கும் இன்னும் வரப்போகிறவர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

   நீக்கு
  2. அனபு கீதாரங்கனின் குழம்பு, கூட்டு. மணம் பிரமாதம் எதையும் அருமையாகச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. கீரைத்தண்டைப் பார்த்தே நாட்களாச்சு. வாசனை மண் வளத்தோடு வரும் இந்தக் குழம்புக்கு. அதுவம்
   அந்த நாரில்லாமல் இளந்தண்டாக இருந்தால் சுவை மிகக் கூடும். நன்றாக இருக்கிறதுமா. அழகான செய்முறைப் படங்கள். சிரத்தையாகச் செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

   நீக்கு
  3. உங்கள் கருத்துரைக்கு எங்கள் நன்றி.

   நீக்கு
  4. மிக்க நன்றி வல்லிம்மா பாராட்டிற்கும் கருத்திற்கும்

   இங்கு தண்டு நன்றாகவே கிடைக்கிறது அம்மா இளம் தண்டுக் கீரை. நேற்றுக் கூட கீரையை மசித்துவிட்டு தண்டினை மிளகுக் கூட்டாகச் செய்தேன்.

   கீதா

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து உண்மை நிலைமையை உணர்ந்து பாதுகாப்புடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. கூட்டுக்குழம்பு ரொம்பப் பிடித்த ஒன்று. அநேகமாகத் தென் மாவட்டங்களிலேயே பண்ணுகிறார்கள். என் புக்ககத்தினருக்கு இது பற்றித் தெரியாது. சொன்னால் சிரிப்பார்கள். ஆனால் நான் நாங்க நான்கு பேர் மட்டும் தனியாக இருக்கையில் பண்ணிக் கொள்வேன். இதுக்குக் கொத்தவரைக்காய்,அவரைக்காய், வாழைப்பூ போன்றவையும் நன்றாக இருக்கும். வாழைப்பூவில் அம்மா அடிக்கடி பண்ணுவார். கடலைப்பருப்பு மட்டும் வைக்காமல் கொஞ்சம் போல் கடலைப்பருப்போடு உளுத்தம்பருப்பு சேர்த்துக் கொள்வோம். அல்லது பொடி மட்டும் போட்டுத் தேங்காய் வறுத்துத் தாளிதத்தில் கொட்டியும் அம்மா பண்ணுவார். தேங்காயை அரைத்தும் விடுவது உண்டு. இதற்குத் தொட்டுக்கொள்ள இன்னொரு காய் பண்ணாமல் அப்பளம் பொரிப்பார் எங்க அம்மா. தேங்காய் எண்ணெய் வாசத்துடன் பெரிது பெரிதாக ஆனை அடி அப்பளங்கள். இப்போல்லாம் ஆனை அடி அப்பளம் என்றால் யாருக்குமே தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனைஅடி அப்பளம் பொரிக்கணும்னா பெரிய வாணலில எண்ணைவிடணும். இப்போல்லாம் உள்ளங்கை அகல அப்பளாத்தையே இரண்டாக உடைத்துத்தான் பொரிக்கவேண்டியிருக்கு. இல்லைனா முழு எண்ணெயையும் தூரக்கொட்டணுமே

   நீக்கு
  2. என் அப்பா வீட்டில் சமையலுக்கு நல்லெண்ணெயும், தேங்காய் எண்ணெயும் தவிர்த்து வேறே வாங்கியதில்லை அப்பளம் பொரித்தால் உடனேயே அம்மா ஏதேனும் பக்ஷணம் செய்துவிடுவார். அதோடு முன்னெல்லாம் அவ்வளவாகக் கலப்பட எண்ணெய் கிடையாது என்பதால் சுட்ட எண்ணெய் பயன்படுத்தக் கூடாது என்பதெல்லாம் அதிகம் கேள்விப் பட்டதில்லை.

   நீக்கு
  3. ஆனைஅடி அப்பளம் என்பது, சென்னை பொங்கல் / சுற்றுலா பொருட்காட்சி அரங்கில் அதிகம் விற்பனை ஆகும் வஸ்து - சரியா?

   நீக்கு
  4. அது டில்லி அப்பளம்னு சொல்ற, பெருசாக சிலபல சமாச்சாரம் சேர்த்த அப்பளம்.

   நார்மல் அப்பளாம் யானை பாதம் சைசுல பொரியும்படி பெரூசா இட்டால் அது யானைஅட அப்பளாம்.

   எவ்வளவு பெரூசா பொரித்தாலும் உடைச்சுத்தானே சாப்பிடணும்

   நீக்கு
  5. @கௌதமன் சார், பொருட்காட்சி அப்பளங்கள் எல்லாம் பாசிப்பருப்பில் செய்த மசாலா அப்பளங்கள். இதூ அப்படி இல்லை ஆனை அடி அளவுக்குப் பெரிதாகப் பொரியும் பார்த்தால் சாதாரண உளுந்து அப்பளம் தான் ஆனால் பொரித்தால் பெரிசாகப் பொரியும். அழுத்தமாகவும் ஜீரகம், பெருங்காய மணத்தோடும் நன்றாகச் சுவையாக இருக்கும். சுமார் பத்து வருடங்கள் முன்னர் கல்லிடைக்குறிச்சிக்கே போய் அப்பளம் வாங்கினோம் சகிக்கலை. நம்மவர் ஒரே கிண்டல்! அதே போல் புழுங்கலரிசி முறுக்கு, தட்டையும். நான் சொல்வதை வைத்துக் கொண்டு அங்கே முறுக்கு, தட்டை, மாலாடு, அப்பளங்கள்னு வாங்கித் தள்ளினோம் பெண்ணுக்காக! பெண் என்னிடம், "அம்மா! இதைவிட நீ பண்ணுவது இன்னும் நன்றாக இருக்கு!" என்று சொல்லிவிட்டாள். நம்மவருக்குப் பணம் அவ்வளவு கொடுத்தும் பண்டம் திருப்தியாய் இல்லைனு வருத்தம்! :(((((

   நீக்கு
  6. கீதாக்கா டிட்டோ உங்கள் கருத்து. நம் வீட்டிலும் இந்தக் கூட்டு செய்தால் அப்பளம் தான் அதுவும் தேங்காய் எண்ணையில் செம டேஸ்டா இருக்கும். ஆஹா ஆனைஅடி !! நம் வீட்டில் அப்பளம் செய்யும் போது இது கண்டிப்பா உண்டு. மிகவும் பெரிதாக இட்டு பொரியும் போதும் பெரிதாகப் பொரியும். வீட்டில் தான் அப்போது அப்பளம் இடுவது. வெளியில் கொடுப்பதற்கும் நாங்கள் அப்போது ஊரில் இருக்கும் போது இட்டதுண்டு. நிறைய இட்டிருக்கிறோம். சின்ன சைஸ் லிருந்து பெரிது வரை. ரெட்டை அப்பளம் எல்லாமும். கேரளத்து பப்படம் உட்பட

   அதன் பின்னும் நான் வீட்டில் செய்வதுண்டு. எப்போதும் வீட்டிற்குத் தேவையானதை செய்வதுண்டு. அவ்வப்போது செய்து கொள்ளலாம் என்று ஒரே அடியாகச் செய்வதில்லை.

   பாட்டியும் சிலப்போ உளுத்தம் பருப்பும் சேர்த்து வறுத்து அரைப்பார். இங்கு அதூவ்ம் செய்வதுண்டு. போன பதிவில் வேரியேஷன்ஸ் கொடுத்திருந்தது போலபதிவில் அதைக் குறிப்பிட விட்டுப் போனது.

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  7. ஆமாம் கீதாக்கா சொன்னது போல் இது தென்னக மாவாட்டங்களில் தான் செய்வது போல் நான் நினைத்ததுண்டு

   கீதா

   நீக்கு
  8. கீதா சாம்பசிவம் மேடம்.....

   கல்லிடைக்குறிச்சி அப்பளாம் - இன்னும் அதே டேஸ்ட்டில்தான் இருக்கும். மூலப் பொருள்கள் மாசடைகிறது என்பதையும் நினைவில் வச்சிக்கணும். அங்கு ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் நல்லாருக்கு, அதில் அதிரசம், திதிப்பைச் சீடை வாங்கலாம். பொருவிளங்காய் (ஐயா சாமிகளா... இதுக்கு ரெசிப்பி வருது. அ.கு வாக செய்து எபிக்கு அனுப்பிடாதீங்க) நல்லா பண்ணத் தெரிஞ்ச கடை, எனக்குத் தெரிந்து கிடையாது. எல்லோரும் மாலாடு செய்து அதான் பொரிவிளங்காய் உருண்டைனு கதை பண்ணறாங்க.

   சுலபமா செய்யமுடியும் ரிப்பன் பகோடா, தட்டை போன்றவற்றை வெளில வாங்கக்கூடாது. கைமுறுக்கு, சீடை போன்ற வேலை எடுப்பவைகளைத்தான் வாங்கணும். ஹா ஹா

   நீக்கு
 7. புளியிட்ட கூட்டு/குழம்பு செய்முறை படித,துவிட்டேன்.

  கீரைத்தண்டு போட்ட குழம்பு சாப்பிட்டு ஏகப்பட்ட வருடங்களாகிவிட்டது. சமீபத்தில்கூட கீரைத்தண்டை எடுத்துவைத்திருந்தோம். ஆனால் குழம்பு செய்யும் வாய்ப்புதான் வரலை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே கீரைத்தண்டு எடுத்து வைத்தால் பொரிச்ச குழம்பு அல்லது மோர்க்கூட்டுத் தான் பண்ணலாம். மற்றவை உள்ளேயே வரக்கூடாது! :))))))))

   நீக்கு
  2. நெல்லை செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க!!

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 8. எல்ஜி தவிர, கட்டிப் பெருங்காயம் யார் விக்கறா? நங்கநல்லூர்ல சிறிது சிறிதாக கட் செய்த பெருங்காயம் டப்பாவும், பொடியான (பிராண்டுகளைப்போல பௌடர் இல்லை) பெருங்காயமும் முன்பு வாங்கியிருந்தேன்.

  இவைகள் எங்கு கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே ஸ்ரீரங்கத்தில் நிறையப் பெயர்களில் கட்டிப் பெருங்காயம் கிடைக்கிறது. எல்ஜி பெருங்காயத்தில் கொஞ்சம் கோதுமை மாவு சேர்க்கை உண்டு. அதோடு காய்ந்து விட்டால் இடிச்சுத் தான் வைச்சுக்கணும். இங்கே கிடைப்பதில் அப்படி இல்லை. நீண்ட நாட்களுக்குக் காயாமல் அப்படியே இருக்கும். கையால் கிள்ளிப் போட்டுக்கலாம். எல்ஜி பெருங்காயம் எல்லாம் அரிசி மாவோடு சேர்த்தோ அல்லது பச்சை மிளகாய் போட்டோ வைத்திருந்தால் கொஞ்ச நாட்கள் காயாமல் பயன்படுத்திக்கலாம். இங்கே வெள்ளையான பால் பெருங்காயம். ஒரு துளி போதும்.

   நீக்கு
  2. சுவையான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
  3. நெல்லை கட்டிப் பெருங்காயம் தென் மாவட்டங்களில் கிடைக்கிறது. ஸ்ரீரங்கத்தில் கிடைப்பது பற்றி அக்கா சொல்லிட்டாங்க.

   சென்னையில் இருந்தவரை அப்பா ஊருக்குப் போனப்ப எல்லாம் திருக்குறுங்குடி நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி அல்லது மதுரையிலிருந்து வாங்கி வருவார். திருவந்தபுரத்திலும் கிடைக்கும். நன்றாக இருக்கும். இம்முறை திருன்வனதபுரம் போனப்ப அங்கு தங்கை எனக்காக வாங்கி வைத்திருந்தாள் இப்போது தீரும் நிலையில் இனி எப்ப மீண்டும் வாங்க முடியுமோ தெரியலை.

   சென்னையில் மாம்பலத்தில் லேக்வியூ ரோடில் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலைத் தொட்டடுத்து உள்ள் பில்டிங்கில் மாடியில் மாருதி பெருங்காயம் கடை என்று இருக்கிறது. அப்பாதான் அக்கடையைக் கண்டறிந்து எனக்கும் சொன்னார். அது கிட்டத்தட்ட தென்னகத்தில் கிடைப்பது போல இருக்கு என்று. அங்கு கிடைக்கும். என்றாலும் எனக்கு தென்னகத்தில் இருந்து வருவது நல்ல மணம் என்று தோன்றியது.

   கீதா

   நீக்கு
 9. //வாய்ப்பு கிட்டாமலேயே அரை செஞ்சுரியைக் கடந்தாயிற்றே என்றும் தோன்றும்தான். //- கால் செஞ்சுரியைக் கடந்த நான் அரை செஞ்சுரியைக் கடந்த உங்களை அக்கான்னு சொல்றதுல தப்பே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ஆரம்பிச்சாச்சா பஞ்சாயத்து!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை கால் செஞ்சுரியா...நான் அரைக்கால் செஞ்சுரிதான். அரை ட்ரௌசர் வயது...என்று வந்திருக்க வேண்டியது அந்தக் கால் விட்டுப் போச்சு திருத்தும் போது!!! பரவால்லண்ணே

   கீதா

   நீக்கு
  3. கௌ அண்ணா எங்க பஞ்சாயத்து ஓயாது!! இன்னும் நிறைய இருக்கு ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

  உங்கள் சமையல் செய்முறைகள் அனைத்தும் எப்பொதுமே சிறப்பு. இம்முறையும் படங்கள் அளவுகள், செய்முறைகள் அனைத்துமே கச்சிதமாக வந்திருக்கின்றன. கீரைத்தண்டு புளிகூட்டு ருசியாக உள்ளது.

  வேக வைத்த பருப்புகள் ஏதுமின்றி கூட்டு/புளிகூட்டு முறைகளை அறிமுகப்படுத்தியது நன்றாக உள்ளது. நான் இரண்டுக்குமே முறையே பா. பருப்பு. து. பருப்பு வகைகளை கடைசியில் கொஞ்சம் வேக வைத்து சேர்ப்பேன். ஆனால். கொண்டைக்கடலை எப்போதாவது அதிசயமாகத்தான் அதனுடன் இணையும். தாங்கள் சொல்லியுள்ள பக்குவங்கள் மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவாசிரியர் சார்பில் நன்றி. (அனேகமா அவங்களுடைய கணினி, காலேஜுக்குப் போயிருக்கும்னு நினைக்கிறேன்!)

   நீக்கு
  2. கமலா, பொதுவாக மதுரை, திருநெல்வேலிப்பக்கங்களில் பருப்பு/துவரம்பருப்புக் குறைவாகவே பயன்படுத்துவார்கள். கூட்டில் எல்லாம் பருப்புப் போட்டுப் பண்ணுவது அபூர்வம். பருப்புப் போட்டால் சாம்பார் மாதிரி ஆயிடும் என்பார்கள். நான் பருப்பில்லாமல் கூட்டுப் பண்ணுவதைப் பார்த்து என் புக்ககத்தில் சிரிப்பார்கள். அவங்களுக்கு தினம் தினம் பருப்பு வேண்டும். நான் வாரம் 2 நாட்கள் பருப்புப் போட்டால் பெரிய விஷயம்! பொரிச்ச முழம்பு எனில் அதுக்குப்பாசிப்பருப்புத் தான்.

   நீக்கு
  3. கமலாக்கா வாங்க எங்க பிறந்த வீட்டுல பருப்பு எலலம் குறைவாகத்தான் சேர்ப்பாங்க. எல்லா பதார்த்தங்களிலும் பருப்பு கிடையாது. கீதாக்கா சொல்லிருக்காப்ல. பாருங்க கமலாக்கா ஜூனியர் கீதா சொல்ல நினைத்ததை சீனியா கீதா அவங்க சொல்லிட்டாங்க!! ஹா ஹா ஹா..

   இப்படிச் செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் எல்லாவற்றிலும் பருப்பு சேர்க்க மாட்டாங்க

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
  4. கௌ அண்ணே வளரே நன்னி கேட்டோ!!!

   ஹா ஹா ஹா அதே கணினி காலேஜ் போய் உழைத்துவிட்டு இப்ப வீட்டுக்கும் வந்தும் உழைக்கிறது. வேலைக்கும் போய் வீட்டுக்கும் வந்து உழைக்குது!!!ஸோ பெண்...ஹிஹிஹிஹி

   ஹப்பா இப்ப இது பாதி லாக்டவுன் என்பதால் கல்லூரி 3.30 வரை அதுவும் இன்று கொஞ்சம் எர்லி. இல்லைனா வலை வர 4. மணிக்கு மேல் ஆகிடும். நார்மல் டைம் என்றால் இரவுதான் வர இயலும் கணினி வரவே சில சமயம் ரொம்ப லேட் ஆகிடும். எல்லாம் என் ஓல்ட் கணினிப் பாட்டி சரியாகும் வரை.!!!!!!!!

   கீதா

   நீக்கு
  5. கீதாக்கா நம்ம பக்கத்தைப் பத்தி சொல்லிட்டீங்க டிட்டோ டிட்டோ...அதே போலத்தான் கிட்டத்தட்ட கேரளத்து/பாலக்காட்டு சமையலும். பருப்பு சேர்ப்பதில்.

   நன்றி கீதாக்கா

   நீக்கு
  6. கீதா சகோதரிகள் இருவருக்கும் வணக்கம்

   ஊர் சமையல் தகவல்களுக்கு நன்றி. எங்கள் அம்மா வீட்டில் (தி. லி) பருப்பு வெள்ளி செவ்வாய் என வாரத்தில் இரு நாட்கள் போட்டு சாம்பார், ரசம் என பண்ணுவார்கள். மோர் குழம்பு வைத்தால், சாதத்திற்கு பருப்பு உண்டு.
   இந்த மாதிரி காய் வைத்து கூட்டுகள் செய்தாலும், பொரிச்ச குழம்பிற்கும் பா. பருப்பு கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

   என் புகுந்த வீட்டுக்கு வந்தவுடன் (திருமணமாகி வந்தவுடனே என் கைபாகந்தான்..) என் மாமியார் கொஞ்சம் கம்மியா பருப்புக்களை போடு எனச் சொல்லுவதால். குறைத்துப் போட ஆரம்பித்தேன்.என் கணவர். மச்சினர்கள் உன் அம்மா வீட்டில் போடுவதை போலவே வேண்டியதை போட்டு சுவையாக பண்ணு.. என்றதும் யார் பேச்சை கேட்பது என ஓரே குழப்பம்...எப்படியோ, பருப்பில்லாமலும், பருப்பு போட்டும் சமாளித்து வந்தாகி விட்டது. ஆனால்.இந்த கூட்டு வகைகள், (புளி சேர்த்தும், சேர்க்காமலும்) எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது. இப்போதும் தொடருகிறது. மதுரைப் பக்கம் கூட்டுகள் நிறைய செய்வார்கள் என நானும் கேள்விபட்டுள்ளேன். எப்படியோ சமையலில், காய்களை வைத்து விதவிதமாக தயாரிப்பது நமக்கு பிடித்தமான விஷயந்தானே. .! இப்போது வெறும் பச்சை காய்களில் சத்து உள்ளதென அப்படியே சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். வேலை மிச்சம்.. ஹா. ஹா. ஹா. நன்றி.

   நீக்கு
 12. வணக்கம்
  ஐயா
  செய்முறை விளக்கத்துடன் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 13. கூட்டு(க்)குழம்பு விளக்கம் அருமை... இரண்டே படம்... பகிர்ந்து கொள்வதிலும் எளிதாக... நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி! இந்தச் செய்முறை மிகவும் எளிதுதான். அதான் சுருக்கமாக

   கீதா

   நீக்கு
 14. தண்டுக்கீரை இங்க கிடைக்காதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜி, தண்டுக்கீரையில் தான் செய்யணும்னு இல்லை, கத்திரிக்காய், வாழைக்காய், கொத்தவரைக்காய், அவரைக்காய், வாழைப்பூ போன்றவற்றிலும் பண்ணலாம்.எங்க அம்மா வீட்டில் கீரைத்தண்டைக் கீரை மசியலிலேயே பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்து மசிப்பதால் அதிகம் தண்டில் பண்ணமாட்டார்கள். மற்றக் காய்களில் தான். வெண்டைக்காயில் கூடப் புளிக்கூட்டு அம்மா பண்ணுவார். அதற்கு மட்டும் ரசத்துக்குப் போடும் பருப்பைக் கரைத்துக் கொண்டு தெளிவான நீரை ரசத்தில் விட்டுவிட்டு அந்தப் பருப்புச் சக்கையைக் கூட்டில் சேர்ப்பார்

   நீக்கு
  2. அட! அட! இன்னிக்கு சீனியர் கீதா அவங்க பௌன்ட்ரி பௌன்ட்ரியா அடிச்சு தூள் கிளப்புறாங்க!! ஜூனியர் கீதாவுக்கு வேலை மிச்சம்!! ஹா ஹா ஹா ஹா

   ராஜி கீதாக்கா சொல்லிருக்காப்ல கீரைத் தண்டு என்றில்லை. கீதாக்கா சொல்லிருக்கும் காய்களிலும் பதிவில் நான் சொல்லியிருக்கும் காய்களிலும் செய்யலாம்.

   மிக்க நன்றி ராஜி

   கீதா

   நீக்கு
  3. கீதாக்கா வெண்டையிலும் புளிப்புக் கூட்டு செய்வாங்க ரொம்ப நலலருக்கும். பிறந்த வீட்டில்.

   பு வீயில் தனியா போட்டு செய்வாங்க.

   ஆமாம் கீரை மசிக்கும் போது தண்டும் சேர்த்துத்தான் மசிப்பது.

   சிலப்ப கீரை நிறைய இருக்குமானால் தண்டை தனியா எடுத்து சுண்டல்/பொரியல், தண்டு சாம்பார் அல்லது இப்படி கூட்டு மிளகுக் கூட்டு என்று. இங்கு இருவர் மட்டுமே என்பதால் நிறைய ஆகிவிடுகிறது. பெரிய கட்டாக இருக்கு.

   பருப்புச் சக்கை// ஹையோ என் பாட்டி குறிப்பாக என் அப்பாவின் அம்மா இப்படி எல்லாம் செய்வார்!!! இந்தக் கூட்டும் கூட அவர் செய்வதுதான்.

   நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  4. புளியிட்ட கூட்டு, பிட்லை போன்றவற்றில் தனியா/கொத்துமல்லி விதை சேர்த்தால் சாம்பாருக்கும் அதுக்கும் வேறுபாடு தெரியாமல் போயிடும். இங்கேயும் நான் ஒரு கட்டுக்கீரையை 2 நாட்கள் தான் வைச்சுக்கறேன்.

   நீக்கு
 15. காலை என்றொரு பொழுதில்லாமல்
  காலம்
  உலகில்
  கழிந்தது இல்லை...

  - இதென்ன புது கண்டுபிடிப்பு என்கிறீர்களா! ’திங்கள் ரெஸிப்பி’க்கு நடுவில் லோகநாயகனைக் கவனித்ததால் வந்த வினை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ஏகாந்தன் அண்ணா!!

   உலகப்பந்தும் சுழல்வதனால்
   மாலையும்
   உலகில்
   வருவதுண்டே - மறுநாள்
   காலையை நோக்கி
   உலகப் பந்தும்சுழன்றிடுமே!


   மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

   கீதா

   நீக்கு
  2. @ கீதா: நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். பொருளை அல்ல! அதை எழுதியவரை. அது நானில்லை! மய்யம்.. மய்யத்தின் கவிதை ’வீரவணக்கம்’ என்று மீடியாவில் தட்டுப்பட்டது.. அதில் ‘லோகநாயான்’ எழுதிய வரிதான் நான் குறிப்பிட்டிருப்பது!

   நீக்கு
  3. ஓ!!! அப்படியா! தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.

   அண்ணா எனக்கு அம்புட்டுத்தான் அறிவு!! ஹிஹிஹி. வாசிப்பு இருந்தால்தானே இதெல்லாம் தெரியும்!! புரியும்.

   நான் லோகநாயகன் என்றதும் இறைவன் என்று நினைத்துவிட்டேன்.

   மிக்க நன்றி அண்ணா

   கீதா

   நீக்கு
 16. LG பெருங்காயத்தை இளகியதாய் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து அதை பொடிப் பொடி உருண்டைகளாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்வது எங்கள் வீட்டு வழக்கம். குழம்பு கொதிக்கும் போது போன்ற சமயங்களில் டப்பாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்துப் போட்டு விட்டால் போதும். வேலை முடிந்து விட்டது.

  தூள் பெருங்காயம் வாங்குவதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜிவி அண்ணா

   கட்டிப் பெருங்காயம்வான முடியாத நாட்களில் அப்ப்டித்தான் செய்வதுண்டு இங்கும்

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 17. சுவையான குறிப்பு. இங்கே பெருங்காயம் பொடியாகவே கிடைக்கிறது. கட்டிப்பெருங்காயம் கிடைப்பது கடினம். ஊருக்கு வரும்போது வாங்கி வரலாம் என்றால் எத்தனை தான் வாங்கி வருவது? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே இப்போது ஃபெமினா வந்துவிட்டதும் விதம் விதமான பெருங்காயம் கிடைக்கிறது. நாங்க எப்போவும் கோபால ஐயங்காரிடம் பால் பெருங்காயம் பாக்கெட் வாங்குவேன். 40 ரூபாயில் ஆரம்பித்து இப்போ 90 வரை வந்தது. ஆனால் ஃபெமினாவில் அந்தக் குறிப்பிட்ட வகைப் பெருங்காயமும் 55 ரூபாய்க்கே கிடைக்கிறது.

   நீக்கு
  2. பால் பெருங்காயம்? அதென்ன கீசாக்கா? பெருங்காயத்தில் வகைகள் இருக்குதோ?

   ஒரு பெருங்காயக் கேள்வி, புதன் கிழமைக்கு கேட்க நினைச்சு, இன்னும் கேட்காமலேயே நாட்கள் நகருது...

   நீக்கு
  3. அதிரா... அந்தப் பெருங்காயத்துக்கு முதலில் கட்டுப் போடுங்க. அப்புறம் கேள்வி கேட்டுக்கலாம்.

   நீக்கு
  4. பெருங்காயம் உண்மையில் ஒரு பசை நிறைந்த கோந்து எனலாம். காய்ந்ததும் சாம்பல் வெண்மையாக இருக்கும். இதனுடன் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு சேர்த்துத் தான் கூட்டுப் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது. சிலர் அரபிய பிசின் சேர்க்கப்படுவதாகச் சொல்கின்றனர். இன்னும் சிலர் கருவேலம்பிசின் என்கின்றனர். எதுவானாலும் கூட்டுப் பெருங்காயம் வாங்குவதெனில் பல்லாண்டுகளாக இருக்கும் எல்ஜி போன்ற பிராண்டுகளே நம்பிக்கையானவை. நான் சொல்லும் பால் பெருங்காயத்தில் மேற்சொன்ன கலப்புகள் குறைவாக இருக்கும். கிடைக்கும் பெருங்காயத்தையும் அப்படியே பயன்படுத்த முடியாது. காரம் அதிகம். விலையும் அதிகம். சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் ஒருகிலோ சுத்தமான பெருங்காயம் என அரபு நாடுகளில் இருந்து வருகிறது. முக்கியமாய் ஈரான். அதை வாங்கிச் சுத்தம் செய்து தேவையான அளவுக்குக் கருவேலம்பிசின், கோதுமை மாவு அல்லது அரிசி மாவு கலந்து தயாரிக்கின்றனர். பால் பெருங்காயம் மருந்துகள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பதால் அதில் கலப்புக் குறைவாக இருக்கும். தண்ணீரில் கலந்தால் வெள்ளையாக நீர் இருக்கும்

   நீக்கு
  5. கட்டிப் பெருங்காயம் கட்டுப் போட்டுத்தான் நெ தமிழன் கிடைக்க்குது ஹா ஹா ஹா..

   இங்கு எல் ஜி கட்டிப் பெருங்காயம் குட்டிப் பெட்டியில் கிடைக்கிறதே.. அதைவிட போத்தலில் பவுடராகவும் கிடைக்குது.

   ஊரில இருந்து என்ன வேணும் என மாமாமாமி கேட்டபோது பெருங்காயக் கட்டிகள் என்றேன், அங்கு குட்டிக் குட்டிக் கட்டி, அதை பேப்பரில் சுத்தி, பின்பு அதனை நூலால் கட்டிக் கிடைகுது.. அனுப்பியிருந்தார்கள்.

   எனக்கு.. சில பொருட்கள் மட்டும் வயிறை பொம்ம்ம்ம் என வீங்க வைக்கும்.. சக்கரைப்பூசணி, பயற்றங்காய்.. மொச்சைக்கொட்டை இப்படியானவை.. அப்படி நேரத்தில் ஒரு துண்டு பெருங்காயத்தை, அப்பூடியே என் பல்லால் கடிச்சு, வெந்நீரோடு விழுந்ங்கி விட்டேன் எனில்.. 10 நிமிடத்தில் வயிறு பிலட் ஆகிடும் ஹா ஹா ஹா...

   ஓ கீசாக்கா விளக்கத்துக்கு நன்றி.

   நீக்கு
  6. வயிறு உப்புசத்துக்கு ( சாப்பாடு வயிறை வீங்க வைக்கும்போது) ஏலக்காயும், கிராம்பும் சிறந்த மருந்து. இரண்டையும் அப்படியே வாயில் போட்டு மென்று தின்றுவிட்டு வெந்நீர் குடிக்கலாம். அல்லது நீரில் தட்டிப் போட்டுச் சுட வைத்தும் குடிக்கலாம்

   நீக்கு
  7. ஓ இது புதுக் கை மருந்தாக இருக்கு கீசாக்கா, இனிமேல் முயற்சிக்கிறேன் ஆனால் கராம்பை பச்சையாக சாப்பிட்டால் வாயை அள்ளிப்போடுமே... அதன் காரம்..

   நீக்கு
  8. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  9. பால் பெருங்காயத்தில் மேற்சொன்ன கலப்புகள் குறைவாக இருக்கும்//

   அதே ! நான் திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு வந்ததில் நல்ல மணம் காரம் அதிகம். எனவே உடைத்து கொஞ்சமாகப் ப்யனப்டுத்தினாலே நல்ல மணம்.

   கீதா

   நீக்கு
  10. வயிறு உப்புசத்துக்கு ( சாப்பாடு வயிறை வீங்க வைக்கும்போது) ஏலக்காயும், கிராம்பும் சிறந்த மருந்து. //

   நான் செய்வது இதுதான் சமீப காலமாக. அல்லது ஓமம் அல்லது ஓமவாட்டர். இதுவும் நல்லா குணம் தெரியும்.

   கீதா

   நீக்கு
  11. கீதா சாம்பசிவம் மேடம் எப்போவும்்விஷயத்தை கிளியரா எழுதுவாங்க. பாராட்டுகள்.

   தெளிவா விளக்கி guide பண்ணற இன்னொருவர் முனைவர் ஜம்புலிங்கம் சார். குழந்தைக்குச் சொல்வதுபோல விளக்கமா சொல்லுவார் (எனக்கு என் அப்பா நினைவு அப்போது வந்தது. நானும் டூடெயிலா விளக்குவேன், சில சமயம் அவ்வளவு டீடெயில் தேவையில்லை என்றபோதும்)

   மற்றவர்களிடமும் இந்தத் திறமை இருக்கலாம். அதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வரலை.

   நீக்கு
  12. அதிரா கிராம்பு ஒன்றிரண்டு சாப்பிட்டால் அதிகம் காரம் வராது. கடைவாய் பல்லில் வலி எப்பவேனும் வந்தாலும் இரு கிராம்பை அந்தப் பல்லில் வைத்து அழுத்திக் கடித்து வைத்து அப்படியே இருப்பேன். வலி இறங்கிவிடும்.

   கீதா

   நீக்கு
  13. கிராம்பு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் ஏலக்காய் மட்டும் இரண்டைத் தோலோடு மென்று சாப்பிட்டு வெந்நீர் குடியுங்கள் அதிரா. வயிற்று உப்புசம் சரியாகிவிடும். சில சமயம் சாப்பிட்டதும் மேல் வயிறு வலிக்கும். அதுவும் சரியாகும்.

   நீக்கு
 18. நல்ல குறிப்பு.

  இன்று கீரை மசிபல் செய்தேன் தண்டு எடுத்து வைத்திருந்தேன் அநேகமாக மறுநாள் மோர் குழம்பு செய்வது வழக்கம்.
  நாளை உங்கள் முறையில் செய்து பார்க இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மாதேவி! கருத்திற்கு.

   ஆஹா கீரைத்தண்டு மோர்க்குழம்பா!! சூப்பர்!!!

   இந்த முறையில் செய்து பாருங்க நல்லாருக்கும்

   கீதா

   நீக்கு
 19. புளியிட்ட கூட்டு/குழம்பு செய்முறை படங்கள், மற்றும் செய்முறை குறிப்பும் அருமை.

  நாங்களும் செய்வோம் கீதா. வெண்டைக்காய் , கத்திரிக்காய், தக்காளி காய் இவற்றில் செய்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ கோமதிக்கா நீங்களும் செய்வீங்களா சூப்பர்!! ஆமாம் நம் வீட்டிலும் வெண்டைக்காய் தக்காளிக்காயிலும் செய்வதுண்டு.

   பி வீட்டில் இப்படி

   புவீ ல் தனியா சேர்த்துதான் செய்வாங்க.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
  2. தக்காளிக்காய் எனில் நான் புளி சேர்ப்பதில்லை.

   நீக்கு
 20. மிக அருமையான ரெசிப்பி கீதா.. முடிவில் கலரைப்பார்க்கவே சாப்பிடும் ஆசை வருகிறது.

  பழப்புளி சேர்த்து, திக்காக செய்தால் எந்தக் கூட்டும் சுவையே...

  பதிலளிநீக்கு
 21. மிக்க நன்றி அதிரா!! உங்களுக்கும் பிடித்ததற்கு!

  ஆமா பழப்புளி சேர்த்து செஞ்சா செம டேஸ்ட்டுதான்

  இப்ப இங்கு சந்தை இல்லாததால் பழம்புளி கிடைப்பதில்லை. வீட்டு அருகில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் புளி அத்தனை நன்றாக இல்லை

  சந்தையில் என்றால் ஒரு சாக்கில் குவித்து வைத்திருப்பாங்க பார்க்கவே அழகா இருக்கும். நல்ல பதப்படுத்திய பழம் புளி கோது கொட்டை இல்லாமல் விற்பார்கள். கிலோ 90, 100 என்று ரொம்ப நல்லாருக்கும். லாக்டவுனில் சந்தை எல்லாம் இல்லை இங்கு.

  மிக்க நன்றி அதிரா

  கீதா

  பதிலளிநீக்கு
 22. கீதா ரெங்கனின் சமையல் குறிப்பு பழைய காலத்து சாப்பாட்டு ஞாபகங்களைக் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. கீரைத்தண்டு! அப்படி ஒன்றைப் பார்த்தே ரொம்ப நாளாயிற்று. எப்போப் பார்த்தாலும் ‘நார்த் இண்டியன் பாலக்’கையே மசிச்சுப் பன்னீருடன் தின்று தின்று .. இன்றும் கூட சப்பாத்திக்கு பாலக் பன்னீர் எங்கள் வீட்டில்.
  ஆனால், தமிழ்நாட்டு கீரைகள், தண்டு போன்றவைதான் மனசையும் தொடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் அண்ணா இங்கு - பங்களூரில் - கீரைத்தண்டு நன்றாகக் கிடைக்கிறதே.

   பருப்புக் கீரை, சிவப்புத் தண்டுக் கீரை, முளைக்கீரை, வெந்தயக் கீரை, கோங்குரா மற்றும் புளிச்ச கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலை, பாலக் இன்னும் மூவகை டக்கென்று பெயர் கிடைக்க மாட்டேங்குது. எல்லாம் கிடைக்கிறதே

   மிக்க நன்றி அண்ணா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  2. //எப்போப் பார்த்தாலும் ‘நார்த் இண்டியன் பாலக்’கையே மசிச்சுப் பன்னீருடன் தின்று தின்று ..// அதேதான், முடியல. கீரையைக் கண்டால் விட மாட்டேன். சென்ற வாரம் கூட தண்டு கீரை கிடைத்தது. வாங்கி சாம்பார் செய்தேன். தண்டு கீரையின் சாம்பார் அலாதி ருசி+மணம்.

   நீக்கு
 23. பானுக்கா வேர் ஆர் யு? என்னாச்சு காணலை? இங்கும் காணலை தி அ விலும் காணலை?
  வந்து ரிப்போர்ட் பண்ணுங்க!!!!!!!!! அடென்டன்ஸ் ப்ளீஸ்!! உள்ளேன் ஐயானு வானும் சொல்லிட்டுப் போங்க!!!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளேன் அம்மா! இந்த பெயரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு கதை எழுதியிருகிறார்.

   நீக்கு
 24. என் பிறந்த வீட்டில் இப்படி செய்வதுண்டு. ஆனால் கூட்டு என்றுதான் சொல்லுவோம். கூட்டுக் குழம்பு கிடையாது. தேங்காயை வறுத்துப் போடாமல் பச்சையாக போடுவோம்.

  பதிலளிநீக்கு
 25. @தி.கீதா: நீங்கள் இளவன், வெள்ளைப் பூசணி என்று இரண்டு தனித்தனியாக குறிப்பிட்டிருகிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே? தடியங்காய் என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தடியன்காய், கும்பளம், வெண்பூசணி எல்லாம் ஒன்றே

   நீக்கு
  2. இளவன் எனில் பிஞ்சுப் பறங்கி என நினைக்கிறேன்.

   நீக்கு
 26. @ நெல்லை: கட்டிப் பெருங்காயம் பெங்களூரில் கிடைகிறது. பால் பெருங்காயம் திருச்சியில் மட்டுமே கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல் ஜி தவிர வேற பிராண்டு என்ன? நான் நங்கைநல்லூர்ல மணல் போன்ற பொடி, மிளகை விட பெரிய சைஸ் கட்டிகள் கொண்ட டப்பாக்கள் வாங்கினேன். ஶ்ரீநாத் த்வாரகா கோவில் வீதியில் வாங்கின பெருங்காயம் நல்லால்லை. எனக்கு டக்குனு எடுத்துப்போடும்படியான சிறு கட்டிகளோ மணல் போன்றதோ வேணும். ஶ்ரீரங்கம் போம்போது பால்பெருங்காயம் வாங்குவேன்.

   நீக்கு
  2. 'L.G.' யைத்தாண்டி இன்னொரு பாப்புலர் ப்ராண்ட் ‘N.R.'. நன்றாக இருக்கும். பௌடர் பெருங்காயத்தில் எவரெஸ்ட், ஆச்சி, பூச்சி என்றெல்லாம் டப்பாக்கள் நிறைய ஸ்டோர்களில் பார்த்திருக்கிறேன- அநியாய விலையில். அதிலும் பதஞ்சலி விலை ஜாஸ்தி.

   நீக்கு
 27. எல்.ஜி. தவிர எஸ்.வி. என்று ஒன்று உண்டு. சுமார் ரகம்தான். பதஞ்சலி விலை அதிகமாக இருந்தாலும், மணம் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 28. படிக்கும்போதே சாப்பிட ஆசையாக உள்ளது மேடம். எனக்கும் சமயலுக்கும் தான் ரொம்ப தூரம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!