புதன், 17 ஜூன், 2020

பிராக்டிகல் ஜோக் செய்வதுண்டா?


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

1. பிராக்டிகல் ஜோக் செய்வதுண்டா? அல்லது அதற்கு விக்டிம் ஆனதுண்டா?




 # பிராக்டிகல் ஜோக் என்று (முட்டாள் தனமாக) நினைத்து சில அசட்டுக் காரியங்கள் டீன் வயதில் செய்ததுண்டு. இதற்கு மேல் விளக்கம் அசாத்தியம்.  அதிர்ஷ்ட வசமாக விக்டிம் ஆனதில்லை.

& செய்தது உண்டு. விக்டிம் ஆனதும் உண்டு. விக்டிம் ஆகி, அசடு வழிந்த சந்தர்ப்பங்களை ஞாபகம் வைத்திருந்து, அதன் பின் அத்தகைய சந்தர்ப்பங்களில் சமயோசிதமாக தப்பித்ததும் உண்டு.  

2.  ஒரே சமையல் குறிப்பை இரண்டு பேர் எழுதி அனுப்பியிருந்தால் எங்கள் பிளாகில் இரண்டையுமே வெளியிடுவீர்களா? அல்லது முதலில் வரும் சமையல் குறிப்பைத்தான் வெளியிடுவீர்களா?

# மாற்றம் சற்றேனும் இருப்பின் இரண்டையுமே.

& ஓர் உதாரணம் சொல்கிறேன். 

சங்கீத சீசனில் காலையில் மியூசிக் அகடெமி(+காபி), மதியம் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்(+சாப்பாடு) , மாலை ஏதேனும் ஒரு சபாவில் பிடித்த பாடகரின் (காசுக்) கச்சேரி என்று கேட்டிருக்கிறேன். 
சில நாட்களில், காலையில் என்னைத் துரத்த ஆரம்பித்த பூர்விகல்யாணி, மதியம் மற்றும் மாலைக் கச்சேரியில் கூடத் துரத்தும். 
இராகம் ஒன்றுதான்; ஆனால் பாடகர்களும், பக்கவாத்தியங்களும்,  பாடும் விதமும் வெவ்வேறு அல்லவா! நன்றாக இரசிப்பேன். 

அப்படித்தான் சமையல் குறிப்புகளும். ஒரே விஷயமாக இருந்தாலும், எழுதுபவரின் சமையல் குறிப்புகளில் சொல்லப்படும் அளவுகள், செய்முறை, எல்லாவற்றையும் விட அவற்றை அவர் சொல்லும் பாணி  எல்லாவற்றையும் பொருத்து அது மாறுபடும். என்னால் எல்லாவற்றையுமே இரசிக்க முடியும். நம் வாசகர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். 

ஆகவே, ஒரே புளியோதரையை நம்ம எ பி கிச்சன் கில்லாடிகள் அவரவர் செய்யும் முறைப்படி, அவரவர்கள் பாணியில் எழுதி அனுப்பலாம். ஒரே சமையல் பக்குவம், தொடர்ந்து வாராவாரம் வெளியிடப்படாமல், கொஞ்ச வார இடைவெளி விட்டு வெளியாகும் விதத்தில், ஸ்ரீராம் அதை அமைத்துவிடுவார். 

3. வெள்ளி வீடியோவில் சினிமா பாடல்களை மட்டும்தான் பகிர்வீர்களா? லைட் கிளாசிகல் பாடல்களேயும் பகிரலாமே. 

# மே....

& சினிமாப் பாடல்கள் வெகுஜனங்களுக்குத் தெரிந்த விஷயம்.  அதை  வீடியோவுடன் சேர்த்து, அந்தப் பாடலைக் குறித்த சுவையான தகவல்களுடன் சேர்த்துப் போடுவதால், வாசகர்களுக்கு பாப் கார்ன் சாப்பிடுவது போல பார்த்து ரசிக்க முடியும். ஐந்து நிமிடப் பாடல். அதோடு ஓவர்! 
ஆனால், லைட் கிளாசிகல், கர்நாடக சங்கீதம் இதெல்லாம் பெரும்பான்மையான வாசகர்களை அவ்வளவாக ஈர்ப்பது இல்லை. (வாசகர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் ஏதேனும் பாடி, அதை வீடியோ கிளிப் ஆக எங்களுக்கு அனுப்பினால், அதை வெளியிட நாங்கள் ரெடி )

4. விளையாட்டு வினையானது என்பார்களே, ஒரு விஷயம் எது வரை விளையாட்டாக இருக்கும்? எப்போது வினையாக மாறும்?

 # அடுத்தவர் ரசிக்கும் அல்லது பொறுத்துப் போகும் வரை விளையாட்டு. எரிச்சல் அதிருப்தி சினம் ஏற்படத் தொடங்கினால் வினை..

5. சுஜாதா இறந்ததும் அவரைப்போல அவர் பெயரில் நிறைய பேர்கள் எழுதுகிறார்கள் ஏன் லா.ச.ரா. போலவோ, அசோகமித்ரன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ யாரும் எழுதவில்லை?

# லா ச ரா பாணி தவிர மற்றவை போல  எழுதுவார்கள். நம் பார்வையில் படுவதில்லை. 

6. நாம் இப்போது ரொம்பவும் தொட்டாசுணுங்கி ஆகி விட்டோமோ? வாசந்தியின் ஆகாச வீடுகள் என்னும் கதையை அவர் 1976 அல்லது 1977ல் எழுதியிருக்க வேண்டும். அதில் ஒரு கிராமத்தின் அக்கிரகாரத்தை தோலுரித்திருப்பார்.  இப்போது அப்படி எழுதினால் பொங்கி விட மாட்டார்களா?

# அக்ரகாரத்தின் எந்த அம்சங்கள் "தோலுரிக்கப்" பட்டன என்று சொல்லுங்கள். பதில் தர முயற்சிப்போம்.


நெல்லைத்தமிழன்: 

ஆண்கள் பெரியவர்களை வணங்கும்போது அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்யணும் என ஏன் விதித்திருக்காங்க?

# Forwarded to Brahmasri Sengalipuram Anantharama Dikshithar. 

& நமஸ்காரம் செய்யும் முறையை, இங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள். 

மேலும், 'வெப்துனியா' தளத்தில் காணப்படும் விவரம் : 

" பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை.

பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது."



  ('சாஷ்டாங்கம், அஷ்டாங்கம், பஞ்சாங்கம் எல்லாம் எனக்கு எதுக்கு? எனக்கு இது போதும்' என்கிறாரோ இவர்!  ) 

திருக்குறள் போன்ற நூல்களை தங்கள் இஷ்டத்துக்கு வலிந்து பொருள் கொள்வது சரியா?

$ 'ஊக்க மது கைவிடேல்' என்பது போல்தான். இதைப் படித்தவுடன் டாஸ்மாக்  க்யூவில் போய் நின்றுவிடுவீர்களா என்ன!

# இலக்கியங்கள் அந்த சுதந்திரத்தை வாசிப்பவர்களுக்குத் தருவனவே.


ரமா ஸ்ரீநிவாசன் :

1. நீங்கள் யாரையாவது மிகவும் நெருக்கமாகவும் மிகவும் புரிந்தவராகவும் நினைத்துப் பழகும்போது அவர் நிஜத்தில் மற்றவர்களிடம் உங்களை முதுகில் குத்துகிறார் என்று உணரும்போது உங்களது எதிர் செயல் எவ்வாறு இருக்கும்.

# அவர் முதுகில் குத்துகிறார் என்னும் தகவல் எனக்கு யார் மூலம் கிடைத்ததோ அவரைப்பற்றிய என் நம்பிக்கை கேள்விக்குரியது ஆகிவிடும்.

& நான் என்னுடைய திருமதியை, மிகவும் நெருக்கமானவராகவும், மிகவும் புரிந்தவராகவுமாகத்தான் திருமணம் நடந்த தினத்திலிருந்து பழகி வருகிறேன். அவர், அவ்வப்போது என்னை முதுகில் குத்துவதுண்டு. திகைக்காதீர்கள். நான்தான் அவரிடம் எனக்கு வாயுப்பிடிப்பு வரும்போதெல்லாம் முதுகில் குத்தச்சொல்லி, ஏப்பங்கள் பல விடுவேன்! 

2. சிறு வயதிலிருந்த வீடு, விளையாடிய விளையாட்டுத் திடல், நடந்து சென்ற தார் சாலை யாவுமே அவ்வயதில் மிகவும் பெரியதாகவும் மிகவும் நீளமாகவும் தெரியும். அதே இடத்தை இப்போது வயது முதிர்ந்த பின் போய் பார்த்தால், எல்லாம் நம் கண்ணுக்கு சாதாரண அளவாகவும், சாதாரண தூரமாகவும் காணப் படும். இது ஏன்?

# இது இயல்பான ஒன்று தான். சின்னவயதில் கமர்கட்டு கடலை மிட்டாய் போன்றவை  நம்மைக் கவர்ந்த மாதிரி பிற்காலத்தில் இருப்பதில்லை. Bird's eye view மாதிரி ant's eye view. 

$ ஆம், உண்மையே. சிறு வயதில், நாகையில் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கூடம் வரை நடந்து செல்வது மிகவும் அதிக தூரமாகத் தோன்றியது. அதே போல் வீட்டிலிருந்து பாண்டியன் டாக்கீஸ் போவதும். பல வருடங்கள் கழித்து அங்கே சென்றபோது, 'அட! இந்த இடங்கள் எல்லாமே இவ்வளவு பக்கத்திலா இருந்தன!' என்று ஆச்சரியப்பட்டேன். 

3. எனக்கு ஒருவரைப் பிடிக்காமல் போய் விட்டால், அது வருடக்கணக்கானாலும் அவரை அண்ட மாட்டேன், அண்ட விடவும் மாட்டேன். என் வாழ்க்கையில் இது போல் ஓரிருவர் இருக்கின்றார்கள். என்ன என்றே சொல்ல முடியாத ஒரு சங்கடமான உணர்ச்சி மனதிற்குள் ஓடும். இது ஏன்?

# முதலில் ஒருவரைப் " பிடிக்காமல் போவது " ஏன் என்பதைத்தான் ஆராயவேண்டும். உரிய காரணங்கள் இருக்குமானால் அவரிடமிருந்து ஒட்டாமல் தள்ளி இருப்பது அறிவடைமைதான். 
சங்கடங்களைத் துடைத்தெறிவதுதான் சரியான செயல்பாடு. மாறாக அதை மறக்காமல் மீண்டும் மீண்டும் அசைபோடுவதன் காரணமாக அவை தீனி போட்டு வளர்க்கப் படுகின்றன. இதைப் புரிந்து கொண்டால் பல வகையான வலிகள் மறைந்துவிடும். 
நடந்த நிகழ்ச்சி என்ற பதிவு மட்டும் இருந்து அது நம் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்காதிருந்தால் இந்த வகை மனச் சங்கடங்கள் முளைக்காதிருக்கும். 

4. பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு நல்லது கெட்டவைகளை பிரித்து பாகுபாடு காட்டி வளர்ப்பது ஒரு பெற்றோரின் அடிப்படை கடமையாகும்.  ஆயின், சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதே பெற்றோர்களுக்கு ஓர் போராட்டமாக இருக்கும். ஆண் பெண் விஷயங்கள், மற்ற நடவடிக்கை சரியில்லாத ஆண்கள் / பெண்கள் பற்றி நம் பிள்ளைகளை உஷார் செய்வது ஆகியவை சமயத்தில் பகீரதப் பிரயத்தினமாக இருக்கும். இதற்கு ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா?

 # சுலபமான வழி இல்லை என்பது உண்மை. சில விஷயங்கள் பெற்றோர் சொல்லி பிள்ளைகள் உணர வேண்டிய கட்டாயம் இல்லை என்பது என் எண்ணம். விலங்குகள் இனப்பெருக்கம், பெற்றோர் வழிகாட்டி நிகழ்வதில்லை. ஆனால் அபாயங்கள், அபாயம் விளைவிக்கும் கவர்ச்சிகள்,  ஈர்ப்பினால் எழும் பிரச்சினைகள் அசம்பாவிதங்கள் ஆகியவை குறித்து கட்டாயம் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லியாக வேண்டும் என்னும் நிலைமை அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.

& குழந்தைகளை நண்பர்களோடு பழகவிட்டாலே போதும். நண்ப, நண்பிகளிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். நேற்று வெளியான 'தலைமுறை இடைவெளி' கதை படித்தீர்கள் அல்லவா !

5. நம் வீட்டுப் பெரியவர்கள் என்றாலும் அவர்கள் நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ பிடிக்காத விஷயத்தை செய்யும்போது, மனம் புண் படாமல் அவர்கள் செய்வது தவறு என்பதை எவ்வாறு சுட்டிக் காட்டி புரிய வைப்பது?

# தவறு செய்யும் போது சற்றுக் கடுமை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புண்படுத்துவதல்ல நோக்கம் எச்சரிக்கை செய்வது என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

& பெரியவர்கள் நமக்கோ / நம் பிள்ளைகளுக்கோ பிடிக்காத விஷயத்தை செய்யும்போது, அந்த சூழ்நிலையை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும்.
1) குழந்தைகள் இருக்கும் இடத்திலேயே  அல்லது அவர்கள் எதிரிலேயே பெரியவர்களிடம் நம் அதிருப்தியை வெளிக்காட்டக்கூடாது. 
2) குழந்தைகள் வெளியே சென்றிருக்கும் நேரத்தில், பெரியவர்கள் மனம் புண்படாத வகையில், அவர்களிடம், நடந்தது என்ன, அது ஏன் நமக்குப் பிடிக்கவில்லை அல்லது ஏற்புடையது இல்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும். 


துரை செல்வராஜூ: 

பக்தி என்பது எது?
ஆன்மீகம் என்பது என்ன?

# பக்தி என்பது இறைவன் பார்த்துக் கொள்வான் என்று முழுதும் நம்பி கவலை சற்றும் இல்லாமல் நிச்சிந்தையாக (சிந்தா என்றால் வடமொழியில் கவலை) இருப்பது.

ஆன்மீகம் என்பது புறப்பொருள் துய்ப்பு என்பதன் நிலையாமையை உணர்ந்து மனச்சோர்வு அல்லது கலக்கம் முற்றிலும் இல்லாமல் இருப்பது.


இது என் பார்வை. அதாரிட்டி எல்லாம் கேட்டால் கிடைக்காது.

=========
நிலா மேடை 

மின்நிலா 004 (சுட்டி) பற்றிய கருத்துகள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் நன்றி. 

மின்நிலா என்ற பெயரில் புதிதாக ஒரு facebook குழுவும் ஆரம்பித்துள்ளோம். Facebook + எங்கள் ப்ளாக், நம்ம ஏரியா, மின்நிலா வாசகர்கள் அந்தக் குழுமத்திலும் விருப்பப்பட்டால் இணைந்து கொள்ளலாம். 



இது>>  மின்நிலா facebook குழுவின் சுட்டி. (Facebook உறுப்பினர்கள் இதில் சேரலாம்) 

முகநூல் குழுவில் உள்ள சௌகரியம் என்ன என்றால், அதில் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு வசதி உள்ளது. அதன் மூலமாக, நீங்கள் மின்நிலா முதல் இதழிலிருந்து எல்லா இதழ்களையும் காணலாம், பதிவிறக்கம் செய்துகொண்டு அவற்றை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பலாம்.

நான் ஒரு கத்துக்குட்டியாக இருப்பதால், மாற்றங்களை ஒவ்வொன்றாக, நிதானமாக செய்துகொண்டிருப்பேன். இப்போதான் சில சில டெக்னிக்குகளைக் கற்று வருகிறேன். 

அடுத்தடுத்த லெவலுக்கு நம் வலைப்பூவைக் கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 

உங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து, எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறோம். 

நன்றி. 

===========
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
===========

93 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். இறைவன் எப்போதும் நமக்குத் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு மாவின் கேள்விகளும் எபி பதில்களும் சூப்பர் ரமாஶ்ரீ. அயன் கேள்விகள் வாழ்வில் எல்லோருக்கும் எழக்கூடியவையே. நல்ல படியாக. நம் வாழ்வில் அப்படி ஏதும் இல்லை. முதுகில் குத்துவது கேள்விக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதில் மிகச்சரி. முதலில் நம் நண்பர்களைச் சந்தேகிக்க சந்தர்ப்பமே. கொடுக்கக் கூடாது. அது வீண் மன உளைச்சலைத் தான் தரும்.

      நீக்கு
    2. பானும்மாவின் கேள்விக்குப் புளியோதரை பதில் ஜோர். என்னைப் பொறுத்தவரை வெள்ளி திரைப்பபடங்களுக்கு உரித்தானது.:)

      நீக்கு
    3. ஆழ்ந்த கருத்துரைகளுக்கு நன்றி. இரசிப்புக்கும் எங்கள் நன்றி.

      நீக்கு
    4. ரமாவின் ஐந்தாவது கேள்வி அனேகமாக
      மூத்தோர் இருக்கும் வீட்டில் நிகழ்வதுதான்.
      அதுவும் அம்மா என்கிற அளவில் நம்மால் பொறுக்க முடியாது.
      நிறையப் பேரன் பேத்திகள் வளைய வரும் இடத்தில் நம் குழந்தைகள்

      கவனிக்கப்படாமல், அரட்டப் படுவது துன்பமே.
      எனக்கு மூத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பு
      கிடைக்கவில்லை.
      முடிந்தவரை கசப்புகளை விழுங்கி விட்டேன் என்றே நினைக்கிறேன்.


      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோருடைய நலனுக்காகவும் பிரார்த்தனைகள் செய்வோம். திக்குத் தெரியாத காட்டில் என்பார்களே, அத்தகையதொரு நிலையில் இருக்கிறேன். விரைவில் சங்கடங்கள் தீரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையே வேண்டாம். என் கனவில் வந்த கடவுள், எல்லாமும் விரைவில் சரியாகும் என்று சொன்னார்.

      நீக்கு
    2. ஆம்...இரவு எப்படியும் விடியத்தானே செய்யும்.

      அது சரி... என் கனவில் வந்த கடவுள், கேஜிஜியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லவில்லையே.. அது ஏன்?

      நீக்கு
    3. எனக்கு சொன்னபிறகுதான் அங்கே வந்திருப்பார். என்னிடம் கீ சா மேடத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னார்.

      நீக்கு
    4. ஆஹா! வந்தது அவரா? சரிதான்! நான் சாதாரணமா இருந்ததைப்பார்த்துட்டு யாரோனு நினைச்சுட்டேன். :)))) நெல்லையை எல்லாம் போய்ப் பார்க்கப் போவதாய்ச் சொல்லவே இல்லை.

      நீக்கு
    5. கடவுள், கடவுளை ஏன் பார்க்கப் போவதாகச் சொல்லப்போகிறார்?

      அஹம் ப்ரம்மாஸ்மி மொமெண்ட்

      நீக்கு
  3. கேள்வி - பதில்கள் சுவாரசியம். அதற்குப் பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. எ பி வாசகர்கள் எல்லோருக்கும் இனிய புதன் காலை வணக்கம்!

      நீக்கு
  6. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    பதிலளிநீக்கு
  7. //எனக்கு ஒருவரைப் பிடிக்காமல் போய்விட்டால்//- எனக்கும் ரெகன்சிலியேஷன் கிடையாது. வேண்டாம் என நினைத்துவிட்டால் என் எண்ணத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.

    ஆனால் இந்தக் குணம் நல்லதா? சிந்திக்க வேண்டிய கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு stubborn ஆக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து. மனிதர்கள் மாறலாம். ஏதோ ஒரு சமய, சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒருவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படாமல் போகிறது என்றால், அதையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை.

      நீக்கு
    2. சிலர் எத்தனை வயசு ஆனாலும் மாறுவதே இல்லை. :(((((

      நீக்கு
  8. //வீடு, விளையாடிய திடல்// சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ், வை ஏன் சின்னதாயிருச்சு என்று கேட்கும் வாடிக்கையாளருக்கு, ரூமை பெரிசாக்கினதால் வடை சின்னதாகத் தோன்றுகிறது என்பார். அதில் அர்த்தம் பொதிந்துள்ளது.

    வளர வளர நம் மனசு விரிவடைகிறது, அனுபவம் அதிகமாகிறது. அதனால் சின்ன வயதில் பெரிதாகத் தோன்றியவை நமக்கு மிகவும் சிறிதாக ஆகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  9. பதில்களை இரசித்தேன் ஜி.
    முதுகில் குத்துவது (உள்பட)

    பதிலளிநீக்கு
  10. கேள்வி - பதில்கள் அனைத்தும் ரசித்தேன். முதுகில் குத்து! அது சரி! :)

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  12. எதிர்பாராத விதமாக நள்ளிரவு 11:30 க்கு நண்பர் ஒருவர் வந்து விட்டார்..

    சாதாரணமாகப் பேசப்போக
    அவரது மாமன் மகன் (21 வயது) ஏதோ ஒரு அந்நிய விளையாட்டை விழுத்திருக்கும் நேரம் எல்லாம் இணையத்தில் விளையாடி தகப்பனின் கோபத்துக்கு ஆளாகினான்..

    அந்த மன உளைச்சலில் தன்னை முடித்துக் கொண்டான் அந்த இளைஞன்...

    பிள்ளைகளைக் கண்காணிக்காத பெற்றோர்..
    பொறுப்பும் அடிப்படை அறிவும் இல்லாத பிள்ளை..

    தவறெல்லாம் இவர்களுடையது..
    பழி மட்டும் காலத்தின் மீது...

    இரவு உறங்குவதற்கு 12:30 ஆகியதால் விழிப்பதற்கும் நேரமாகி விட்டது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா...... இந்தக் கால அடல்ட்ஸ் - பொறுப்புணர்வு இல்லாதவர்கள் என்றே தோன்றுகிறது. ஒரு செல்ஃபோன் இருந்துவிட்டால், பெற்றோர், பெரியவர்களைவிட தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற எண்ணம் தலைதூக்கிவிடுகிறது. நான் எப்போதும் சொல்வது, 'அண்டார்டிக்காவில் ஆட்டுப் புழுக்கை இருக்கா' என்று தெரிந்துகொள்வதில் என்ன அறிவு இருக்கிறது என்றுதான்.

      சின்ன வயதிலிருந்தே பசங்களுக்குச் சொல்வேன், நான் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதற்கு எதிரி என்று. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதும் ஒரு போதைப் பழக்கம்தான். இதனாலேயே ப்ளே ஸ்டேஷன் போன்றவற்றை நான் வாங்கிக்கொடுத்ததில்லை (அதன் விலை சல்லிசாக இருந்தபோதும்)

      நீக்கு
    2. நல்ல கொள்கைதான். நெ த சார்.

      நீக்கு
    3. இந்த இளைஞன் மட்டுமில்லை, சமீபத்தில் இறந்த சுஷாங்க் என்பவரும் இப்படி ஏதோ படங்கள் கிடைக்காத பிரச்னையில் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார் என்கின்றனர்.

      நீக்கு
  13. பொங்கி வரும் காவிரியாய்
    இன்றைய பதில்கள்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  14. //சின்னவயதில் கமர்கட்டு கடலை மிட்டாய் போன்றவை நம்மைக் கவர்ந்த மாதிரி பிற்காலத்தில் இருப்பதில்லை// - என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. எனக்கு இப்போதும் கமர்கட் ரொம்பப் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்னால், ரெகுலராக சென்னை வரும்போது பாண்டிச்சேரி சென்று கமர்கெட் வாங்கிவருவேன் (அப்படியே நன்னாரி சர்பத் பாட்டில்களும்).

    கமர்கட் சாப்பிட்டு சாப்பிட்டு பல் கெட்டுப்போய் அதற்குச் செலவழித்தது அதிகம். ஹா ஹா. கமர்கட் அல்லது தேங்காய்/வெல்லம் சேர்த்த இனிப்பு எது சாப்பிட்டாலும், முழுமையாக பல் துலக்கவேண்டும். இல்லைனா அது பல்லுக்கு ஆபத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; வெல்லமும் தேங்காயும் பல்லில் குருதி !

      நீக்கு
    2. இப்போவும் கடலைமிட்டாய் சாப்பாடுக்குப் பின் சாப்பிடும் வழக்கம் உண்டு. கொஞ்ச நாட்களாகக் கிடைப்பதில்லை. இதுக்கெல்லாம் வயசே இல்லை.

      நீக்கு
    3. /ஆலும் வேலும் பல்லுக்குறுதி; வெல்லமும் தேங்காயும் பல்லில் குருதி./

      ஆகா.. கெளதமன் சகோ.. புது மொழி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
      அப்படி உறுதியாய் இருந்த பற்களுக்கும் இந்த வெல்லமும் தேங்காயும் பல்லில் குருதியைதான் வரவழைக்கின்றன. நன்றி.

      நீக்கு
    4. கடலை மிட்டாய் சாப்பிட்டு ரொம்ப மாதங்களாகிவிட்டன.

      மார்க்கெட்டில் இருக்கும் பல பிராண்டுகள், கடலைமிட்டாய் எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ளாமலேயே வியாபாரத்தில் இறங்கியிருக்கின்றன.

      சென்னையில் 'ராஜா பிராண்ட்' கடலைமிட்டாய், ரொம்ப நல்லா இருக்கும்.

      நீக்கு
    5. போற வர்றவன்லாம், கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று விற்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலானவை போலி.

      கமர்கட் என்பது நான் 3ம் வகுப்பு படித்த போது 1 பைசாவுக்கு 1 கிடைத்தது. கடிக்க கடினமாக இருக்கணும். பாண்டிச்சேரி கமர்கட் கொஞ்சம் சாஃப்டானது. கோவில்பட்டி கமர்கட் என்று பாக்கெட் சென்னையில் பார்த்திருக்கிறேன். அதுவும் நல்லா இருக்கும், ஆனால் தயார் செய்த சில நாட்களில் சாப்பிட்டுவிடவேண்டும். இல்லைனா சவுக் சவுக்னு இருக்கும்.

      நீக்கு
    6. நான் கடலூரில் இருந்த வீட்டில், ஹாலாஸ்யம் என்பவர் வீட்டு வாசலிலேயே பெட்டிக்கடை வைத்திருந்தார். நான் என் அம்மாவிடம் மன்றாடிப் பெற்று காலணா வாங்கிக்கொண்டு போய், 'ஆலா'விடம் கொடுத்து, இரண்டு பெரிய கமர்கட் வாங்கி, ஒவ்வொன்றையும் ஒருமணிநேரம் வாயில் இருத்தி சுவைத்ததுண்டு. வெளியில் சுற்றப்பட்டிருக்கும் வெள்ளித்தாள், அதனுள்ளே ஒரு சவ்வுத்தாள், அதனுள்ளே அந்த கரும்பழுப்பு சொர்க்கம்! ஆஹா !

      நீக்கு
    7. இந்தக்கடலை மிட்டாய், எள் மிட்டாய் போன்ற சமாசாரங்கள் எல்லாம் (கேழ்வரகு உருண்டை உள்பட) காதி பண்டாரில் வாங்குங்கள். நன்றாகவும் இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். இனிப்புக் கம்மியாகப் போட்டிருப்பார்கள்.

      நீக்கு
  15. சின்ன வயதில் பிடித்த எல்லாமே பிற்காலத்தில் கவராது என்றில்லை. எனக்கு பரோட்டா (சின்ன வயதில் சாப்பிடும் வாய்ப்பு கிடையாது என்பதால்), இனிப்புகள், பழங்கள், நெல்லை சமோசா-இப்போ வடநாட்டவர் வந்து சமோசாவைக் கெடுத்துட்டாங்க, பூரி மசால் எல்லாம் பிடிக்கும். இப்போதும் அவை பிடிக்கும். துபாய் செல்லும்போதெல்லாம் 'நம்ம வீடு வசந்தபவன்' சென்று அங்கு எண்ணெய் அதிகம் போடாமல் பரோட்டா செய்யச் சொல்லி சாப்பிடுவேன். (பெரும்பாலான கடைகளில் பரோட்டா உருப்படியாக செய்யத் தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிங் ஆஃப் பரோடா கேள்விப்பட்டிருக்கேன் நீங்க டங் ஆஃப் பரோட்டாவா!

      நீக்கு
    2. //நெல்லை சமோசா// ஹையோ, ஹையோ! நெல்லையில் சமோசாவா? கிழிஞ்சது!
      -//இப்போ வடநாட்டவர் வந்து சமோசாவைக் கெடுத்துட்டாங்க, // அது தானே ஒரிஜினல்! கெடுத்துட்டாங்களாமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
      //நம்ம வீடு வசந்தபவன்' சென்று அங்கு எண்ணெய் அதிகம் போடாமல் பரோட்டா செய்யச் சொல்லி சாப்பிடுவேன்.// பராட்டாவில் எண்ணெயா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! அப்போ நீங்க சாப்பிடறது பராட்டாவே இல்லை. வெண்ணெய் போட்டுத் தானே பராட்டா பண்ணுவாங்க! எண்ணெய்! நினைச்சாலே நடுங்குது!

      நீக்கு
    3. //(பெரும்பாலான கடைகளில் பரோட்டா உருப்படியாக செய்யத் தெரியாது)// தமிழ்நாட்ட்டில் எங்கேயுமேனு சொல்லி இருக்கணும். மைதாவில் எண்ணெயைக் கொட்டிப் பண்ணுவதற்குப் பெயர் பரோட்டாவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் bhuபுரோட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!

      நீக்கு
    4. ஏனுங்கோ... சில பல நாட்கள் வடநாட்டில் வாசம் செய்தால், நம்ம ஊர்ல செய்யறது எல்லாம் மோசம்னு ஆயிடுமா? எனக்குப் பிடித்த ஜமோஜாவில், கொஞ்சம் உருளை, நிறைய வெங்காயம் போட்டு பொரித்திருக்கும். வடநாட்டு சமோசாவை (அதுதான் ஒரிஜினல் என்று நீங்கள் சொன்னாலும்) எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. ஆனா பசங்க விருப்பப்படறாங்களேன்னு வாங்கித்தருவேன். நெல்லைல நான் கல்லூரி காலத்தில் சாப்பிட்ட சமோசா பிறகு கிடைக்கலை. சமீப காலங்களில் உள்ள பட்டாணி இன்ன பிற வைத்துத் தர்றாங்க, எனக்குப் பிடிப்பதில்லை.

      வெண்ணெய் போட்டு பராட்டா - இதை தமிழ்நாட்டு பரோட்டாவே அறிந்திருக்காது.

      வடநாட்டுப் பயணத்தில் எனக்கு பராந்தா சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கலை. அதெல்லாம் பிடிக்கும்னு தோணலை (அதுக்கு ஊறுகாய் தொட்டுக்குவாங்க. ஐயோ ஐயோ. இல்லைனா தயிராம் ஹா ஹா... முதல்ல வடநாட்டு ஊறுகாயே சுத்தமா நல்லா இருக்காது). எனக்குப் பிடிச்சதெல்லாம் டமிள்நாட்டு பரோட்டா, குருமா... ஹா ஹா ஹா

      நீக்கு
    5. எத்தனை முறை வடநாட்டில் பராந்தா சாப்பிட்டிருக்கீங்க? விதம் விதமான சைட் டிஷ் கிடைக்குமே. காலை வேளையில் சாப்பிட்டால் ஆலு பராத்தா, மூலி பராந்தா போன்றவற்றிற்குத் தான் தொட்டுக்க ஊறுகாய் தயிர். அப்படியும் உருளைக்கிழங்கில் ஒரு கூட்டுத் தருவாங்க தான். ப்ளெயின் பராந்தா எனில் கட்டாயமாய் சப்ஜி உண்டு.சாப்பிட்டுப் பார்க்காமலேயே சொன்னால் எப்பூடி? அதோட ஊறுகாய் எல்லாம் குஜராத், ராஜஸ்தானில் சாப்பிடணும். விதம் விதமாய்க் காரசாரமான ஊறுகாய்கள். குஜராத்தில் கறுப்புக் கொண்டைக்கடலையில் மட்டும் ஊறுகாய் போடுவார்கள். வெந்தயத்தை மட்டும் முளைக்கட்டி ஊறுகாய் போடுவார்கள். அதெல்லாம் சாப்பிட்டுட்டு நாமெல்லாம் போடுவது ஊறுகாயே இல்லை. அதோடு சமோசாவில் உருளைக்கிழங்கோடு வெங்காயம் சேர்த்துப் பொரிக்கக் கூடாது. எது எதுக்கு வெங்காயம் சேர்க்கணுமோ அது அதுக்குத் தான் வெங்காயம். உருளைக்கிழங்கு போண்டோவில் கூட நான் வெங்காயம் சேர்க்க மாட்டேன். மிக்சட் வெஜிடபிளில் அங்கே சமோசா செய்வதில்லை. அதெல்லாம் தமிழகத்தில் தான்! பட்டாணி, காரட், உ.கி. வெங்காயம் எல்லாம் போட்டது! அதெல்லாம் சமோசாவா என்ன?

      நீக்கு
  16. பிராக்டிக்கல் ஜோக்ன்னா என்னன்னு முதல்ல சொல்லுங்க. நிஜமாவே எனக்கு அர்த்தம் தெரில

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு வகையில் கவுண்டமணி, செந்தில் ஜோக் போல. யாராவது ஒருவர், இன்னொருவரை ஏதேனும் இக்கட்டில் மாட்டிவிடுவது என்று வைத்துக்கொள்ளலாம். மாட்டிக்கொண்டவர் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொஞ்ச நேரம் ரசிப்பது. ஆனால், பிறகு மாட்டிக்கொண்டவரை மீளச் செய்துவிடுதல்.

      நீக்கு
    2. உங்களோடு பேசியபடியே உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பின்னலில் ஒரு சணலை கட்டி தொங்க விடுவது, முகத்தில் என்ன எதையோ தீற்றிக் கொண்டிருக்கிறாய்? துடைத்துக் கொள் என்று  எதர்  ஆசாமியிடம் கூறி, அவர் துடைத்துக் கொண்டதும், " ஐயையோ சரியாகவே துடைத்துக் கொள்ளவில்லை,வா, நான் துடைத்து விடுகிறேன்" என்று தன்  கையில் இருக்கும் மையை அவர் முகத்தில் தீற்றி விடுவது போன்ற குறும்புகள்தான் பிராக்டிகல் ஜோக். பிராங்க்  கால்சும் இதில் அடங்கும்.   "நீதானே இப்படி செய்தாய்?" என்று கேட்டால், "நானா? சே! நான் இப்படியெல்லாம் செய்வேனா?" என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்ளத் தெரிவது இதில் ரொம்ப முக்கியம். எங்கள் வீட்டில் எங்கள் கடைசி மாமா, அவர் மகன், என் அண்ணா, என் இரண்டாவது அக்காவின் கணவர், அக்கா மகன் போன்றவர்கள் இதில் கில்லாடிகள். 

      நீக்கு
    3. ஆஹா! சரியான விளக்கம். நன்றி.

      நீக்கு
    4. நான் நிறைய மாட்டிப்பேன். அதுவும் புக்ககத்தில். அவங்க கேலி செய்யறாங்கனு தெரியாமலேயே ரொம்பவே தீவிரமாக பதில் சொல்லுவேன்.பின்னர் அவங்க சிரிக்கும்போது தான் தெரியும்.

      நீக்கு
  17. கேள்வி பதில் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. ல ச ரா எழுதிய 'கல் சிரிக்கிறது' 80 ம் ஆண்டு பதிப்பு அண்மையில் வாசிக்க கிடைத்தது.

    கேள்வி பதில்கள் ரசனை.

    பதிலளிநீக்கு
  19. //பெரியவர்கள் நமக்கோ / நம் பிள்ளைகளுக்கோ பிடிக்காத விஷயத்தை செய்யும்போது, அந்த சூழ்நிலையை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும்.// நிறையப்பட்டிருக்கேன் இந்த விஷயத்திலே! எவ்வளவு ஜாக்கிரதையாகச் சொன்னாலும் பிரச்னையாகத் தான் ஆகும்! :( புரிந்து கொள்ள மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். பொதுவில் சொல்ல முடியாது! என்றாலும் சின்னக் குழந்தையிடம் போய்ப் பள்ளியில் பக்கத்தில் உட்காருவதூ யார்னு கேட்டுட்டு அது பெண் குழந்தைனால் உடனே நம்ம குழந்தை ஆண் குழந்தையானால் அந்தக் குழந்தையிடம் சொல்லிக் கொடுப்பார்கள். இதுக்கு மேல் விவரிக்கக் கஷ்டமாக இருக்கு!

      நீக்கு
    2. இப்போதான் அதிகமாகக் குழப்பிவிட்டார் கீ சா மேடம்!

      நீக்கு
  20. // நான்தான் அவரிடம் எனக்கு வாயுப்பிடிப்பு வரும்போதெல்லாம் முதுகில் குத்தச்சொல்லி, ஏப்பங்கள் பல விடுவேன்! // வாயுவுக்கு ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, லவங்கம், ஏலக்காய், கருஞ்சீரகம், இஞ்சி அல்லது சுக்கு ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்துக் கொண்டு அவ்வப்போது குடித்து வந்தால் போதும். வயிற்றில் ஜீரணப் பிரச்னை என்றாலும் சரியாகிடும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கும் நல்ல மருந்து. கூடவே துளசி, தூதுவளை, ஆடாதொடை போன்றவை போட்டால் கபத்திற்கும், வயிற்றிற்கும் சேர்ந்த ஒரே மருந்தாக ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தட்டிப் போட்டு ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்துக் கொண்டு// - இதைச் செய்ய முற்பட்டு ஒரு மணி நேரம் அடுப்பின் எதிரே நின்றுகொண்டிருந்து, இடுப்பு வலியும், கால் வலியும் வந்துவிட்டால், அதற்கும் சேர்த்து மருந்து சொல்லியிருக்கலாம்.

      நீக்கு
    2. // வாயுவுக்கு ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, லவங்கம், ஏலக்காய், கருஞ்சீரகம், இஞ்சி அல்லது சுக்கு ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு... // ஆ ! இவ்வளவு தட்டு தட்டுவதற்கு பதிலாக மனைவி கையால் முதுகில் சில குத்துகள் வாங்கிக் கொண்டால், நமக்கும் ரிலீஃப்; அவங்களுக்கும் (மனசுக்குள்ள) ஒரு திருப்தி!

      நீக்கு
    3. நெல்லையாரே,இதுக்குப் போய் ஒரு மணி நேரமா ஆகும்? கைக்கு எட்டும் தூரத்தில் சாமான்களை வைக்க மாட்டீங்களா? எல்லாவற்றையும் எடுத்துச் சின்ன உரலில் போட்டு இடித்தால் ஐந்து நிமிஷங்கள் கூட ஆகாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  21. பக்தி, ஆன்மிகம் விரிவான பதிலை எதிர்பார்த்தேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலிருந்து விலக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டியது தான்...

      தயிரைக் கொடுத்து விட்டார்கள்..

      அறிவெனும் மத்து கொண்டு ஆர்வமுடன் கடைந்தால் -

      மோர், வெண்ணெய், நெய்!...

      முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே!...
      - அப்பர் ஸ்வாமிகள் திருவாக்கு...

      நீக்கு
    2. நன்றி துரை. ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஆன்மி9க விஷயங்களைப் படித்தாலே மெய் சிலிர்க்கிறது.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் அனைவரது கேள்விகளும், தங்கள் அனைவரின் பதில்களும் அருமை.

    பானுமதி சகோதரியின் விளையாட்டு எந்நேரம் வினையாகும் கேள்விக்கு பொருத்தமான பதில நன்றாக உள்ளது.

    சகோதரர் நெல்லைத் தமிழரின் நமஸ்காரங்கள் கேள்விக்கு தங்கள் பதில் களுடன் கூடுதலாக பொருத்தமானவரையே வந்து நமஸ்கரித்து பதிலளிக்க வைத்து விட்டீர்கள்.ஹா.ஹா. ரசித்தேன்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களது ஐந்தாம் கேள்வியும் அதற்கேற்ற பதில்களும் அருமை.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் கேள்வியும், பொருத்தமான பதிலும் உண்மை. மிகவும் ரசித்தேன்.

    மொத்தத்தில் இன்றைய அனைத்து கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கும், இரசிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  23. தமன்னா படம் நல்லாத்தான் இருக்கு.

    ஆனா இப்போல்லாம் மணிக்கு ஒரு தரம் வந்து, நம்ம தங்கத்தை எல்லாம் அட்டிகாவுக்கு வித்துடுங்க என்று சொல்றதால பிடிக்காம போயிடுச்சு. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! மணிக்கு ஒரு தரமா! நான் திருப்புகின்ற சானல்களில் எல்லாமே உடனே வந்துவிடுகிறார்!

      நீக்கு
  24. அனைத்து கேள்விகளும், பதில்களும் அருமை.
    //அடுத்தடுத்த லெவலுக்கு நம் வலைப்பூவைக் கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். //

    வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  25. ஆஹா பானுக்கா கேள்விகளா!! முதல் கேள்விய பார்த்ததுமே தெரிந்துவிட்டது!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஹையோ எங்க வீட்டுல மையப்புள்ளியே நான் தான். விக்டிம்!! ஹா ஹா ஹா அந்த அளவு நான் நிறைய மாட்டிக்குவேன். பல்பு! எத்தனை பல்பு வாங்கினாலும் அடுத்த முறை கூட அது பளிச்சுனு எரியாது!! ஹா ஹா ஹா அந்த அளவு மீ ரொம்ப அப்பாவியாவும் இருந்திருக்கேன் அப்ப எல்லாம் ஹா ஹா ஹா ஹா. கூட்டுக் குடும்பம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி ஜே இல விக்டிம் ஆனவர்கள்தான் எதிர்காலத்தில் எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கொண்டிருப்பார்கள்.

      நீக்கு
  27. அப்படித்தான் சமையல் குறிப்புகளும். ஒரே விஷயமாக இருந்தாலும், எழுதுபவரின் சமையல் குறிப்புகளில் சொல்லப்படும் அளவுகள், செய்முறை, எல்லாவற்றையும் விட அவற்றை அவர் சொல்லும் பாணி எல்லாவற்றையும் பொருத்து அது மாறுபடும். என்னால் எல்லாவற்றையுமே இரசிக்க முடியும். நம் வாசகர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

    ஆகவே, ஒரே புளியோதரையை நம்ம எ பி கிச்சன் கில்லாடிகள் அவரவர் செய்யும் முறைப்படி, அவரவர்கள் பாணியில் எழுதி அனுப்பலாம். ஒரே சமையல் பக்குவம், தொடர்ந்து வாராவாரம் வெளியிடப்படாமல், கொஞ்ச வார இடைவெளி விட்டு வெளியாகும் விதத்தில், ஸ்ரீராம் அதை அமைத்துவிடுவார். //

    அதே அதே!!

    இரண்டையும் வெளியிடலாம்!! கண்டிப்பாக.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ('சாஷ்டாங்கம், அஷ்டாங்கம், பஞ்சாங்கம் எல்லாம் எனக்கு எதுக்கு? எனக்கு இது போதும்' என்கிறாரோ இவர்! ) //

    ஹா ஹா ஹா ஹா தமன்னாக்கா நெல்லைக்குச் சொல்லுறாரோ!!! அண்ணே இப்பூடி கேள்வி கேட்டா நான் சொல்லுறது இதுதான்னு!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அவர், அவ்வப்போது என்னை முதுகில் குத்துவதுண்டு. திகைக்காதீர்கள். நான்தான் அவரிடம் எனக்கு வாயுப்பிடிப்பு வரும்போதெல்லாம் முதுகில் குத்தச்சொல்லி, ஏப்பங்கள் பல விடுவேன்! //

    ஹா ஹா ஹா ஹா டைம்லி..

    ரமாவின் 2 வது கேள்வி..//.

    அட நீங்க வேற அந்த இடம் எல்லாம் இன்னுமா அப்படியே இருக்கு?!! அடையாள்மே தெரியாம மாறிப் போய் அல்லவா இருக்கு.

    கீதா






    பதிலளிநீக்கு
  30. ரமாவின் 5 வது கேள்விக்கான & பதில் டிட்டோ!!

    கேள்விகள் அனைத்தும் அருமை. பதில்களும் அப்படியே...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. வெல்லமும் தேங்காயும் பல்லில் குருதி.. என்றொரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது..

    ஈறுகளும் பற்களும் உறுதியக இருக்கும் போது இவையிரண்டும் அமுதம்...

    பற்களில் சொத்தை சோடை, பலவீனமான ஈறுகளுக்கு இவை இடைஞ்சலே...

    ஐம்பதுக்கு மேல் ஈறுகள் நலிந்து பற்கள் ஆட்ட்ம் ஆடும்போது தேங்காய், வெல்லம், கடலை, எள் உருண்டை மற்ற வகைகளை பார்த்துப் பார்த்துப் பசி தீர்வதே உத்தமம்...

    பதிலளிநீக்கு
  32. குடித்தால் கொண்ட
    குடி கெடுமென
    உரைத்த ஐயனையும்
    சுயம் தொலைந்தும்
    சாவதென்றால்
    சமணரைப் போல
    உலகமும் கழுவேறும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!