வெள்ளி, 12 ஜூன், 2020

வெள்ளி வீடியோ :   அன்று காதல் கண்கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ

கோமதி சுப்பிரமணியம் எழுதிய கதையை கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்க 1970 இல் ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜா தேவி நடிப்பில் வெளியான திரைப்படம் மாலதி.

கண்ணதாசன் பாடல்களுக்கு கோவர்தனம் ஜோசப் கிருஷ்ணா உதவியுடன் எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த படம்.படத்தில் தேங்காய், நாகேஷ், கௌரவ வேடத்தில் சந்திரபாபு போன்றோரும் நடித்திருக்கிறார்களாம்.  கதையைப் படித்தால் சோகக்கதையாய் இருக்கும் போல!இதில் இரண்டு SPB பாடல்கள் இருக்கின்றன.  இரண்டுமே சுசீலாவுடன் பாடும் டூயட்.  ஒன்று மிகச் சுமார் ரகம்.  இன்று பகிரும் பாடல் நல்லதொரு பாடல்.  எளிமையாக, அதே சமயம் சிறப்பாக மனதில் அமரும் பாடல்.  இளமையான எஸ் பி பி குரல்.

கற்பனையோ கைவந்ததோ..
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்..
சுகமோ சுகம்...  சுகமோ சுகம்...

அன்று காதல் கண்கொண்டு நீ பார்த்த பார்வை 
இன்று கனியானதோ 
என்ன சுகமோ சுகம் 

உந்தன் கையில் விழுந்தேனோ 
கன்னிக்கனியே 
இல்லை கள்ளில் விழுந்தேனோ 
செல்லக்கிளியே 
யாரும் சொல்லித்தெரியாத 
இன்பக்கலையே 
அதை அள்ளிக்கொள்ள வந்தேன் 
தன்னந்தனியே 
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா 
சுகமோ சுகம்...  சுகமோ சுகம்...

ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து 
என்னைச் சிறை செய்ததோ 
என்ன சுகமோ சுகம்..
என்னைக்கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் 
அங்கு வெட்டிவைத்த கரும்போ  கன்னம் இரண்டும் 
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னைக்கொடுத்தேன் 
அங்கு காதல் என்னும் அமுதை அள்ளிக்குடித்தேன் 
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா 
சுகமோ சுகம்...  சுகமோ சுகம்...

102 கருத்துகள்:

 1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு
  இனிய பாடல் கிடைத்தது. நன்றி ஸ்ரீராம்.

  எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய வணக்கம் வல்லிம்மா...  வாங்க...  நன்றிம்மா.

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடுமையான சோதனைக்காலத்திலிருந்து நாம் அனைவரும் மீண்டு வர வேண்டும். பிரார்த்தனை, பிரார்த்தனை, மீண்டும் மீண்டும் பிரார்த்தனை. மனதே வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. எல்லாம் நல்லபடி ஆக மீண்டும் மீண்டும் பிரார்த்திப்போம். அவனன்றி ஓரணுவும் அசையாது!

  பதிலளிநீக்கு
 3. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் ஒரு குறள் மகிழ்ச்சியே... ஆனால்...

   இதற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம் ஐயா...?

   தினமுமே இப்படி ஏன் ஐயா...?

   ஐயா... குறளின் மதிப்பு வேறு என்பது தெரியும் தானே...?

   நீக்கு
  2. https://dindiguldhanabalan.blogspot.com/2019/11/Regime-and-Government-End-Part.html

   மேலுள்ள பதிவிற்கு பின் - அதில் உங்களின் கருத்துரைகளுக்கு பின்... அதற்கு பின் இந்த எங்கள்ஸ்-ல் தினம் ஒரு திருக்குறள் என்று ஆரம்பித்த காரணம் என்ன...?

   நீக்கு
  3. இன்றைய குறள் திருவள்ளுவர், மானிடர் இறைவனை அடிபணியவேணும் என்று எழுதிய குறள்களுள் ஒன்று.

   தனக்கு உவமை இல்லாத இறைவனின் தாளினைப் பற்றினாலொழிய, மனத்தின் கண் நிகழும் துன்பத்தையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

   நீக்கு
  4. நெல்லைத் தமிழன் ஐயா... இந்தப் பதிவிற்கு என்ன சம்பந்தம்...?

   நீக்கு
  5. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்...

   கடவுளுக்கு என்று கூறப்படும் உவமைகள் அனைத்தையும் ஏன் ஒருமையில் பயன்படுத்துகிறார்...?

   வாலறிவன்

   மலர்மிசை ஏகினான்

   வேண்டுதல் வேண்டாமை இலான்

   பொறிவாயில் ஐந்தவித்தான்

   தனக்குவமை இல்லாதான்

   எண்குணத்தான்

   என்று அனைத்து உவமைகளும் ஒருமையில்தான் கூறப்பட்டிருக்கிறது...

   ஏன் நெ.த. ஐயா...?

   நீக்கு
  6. தேவாரத்திலும் திருவாசகத்திலும் இறைவனை ஒருமையில் தான் பாடி வைத்திருக்கிறார்கள்...

   இதை விடவும் பித்தனே - என்று அழைப்பதும் பிரசித்தம்...

   நீக்கு
 4. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் திருக்குறள் பகிர்வுகளால், தினம் ஒரு திருக்குறளை என்னால் நினைவுபடுத்திப் பார்க்க + விரிவுரைகளையும் அவ்வப்போது படித்து உணர முடிகிறது. தொடருங்கள் ஐயா. வாழ்க வளமுடன்.

   நீக்கு
  2. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பொருள் தெரியவில்லை என்றால் (சில வார்த்தைகளுக்கு) அதனைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன். மற்றவர்களுக்கு எளிதாக இருக்க, பொருள் கொடுக்கவில்லை என்றால் சுருக்கமான பொருளை நான் எழுதுகிறேன்.

   நீக்கு
 5. ஓ..

  இந்தப் பாடல் மாலதி எனும் படத்திலா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள்ஸ்-ன் அரசவைக் (அவசரக்) ஆண் கவிஞர்கள் இருவரில் தாங்கள் முதன்மை என்பது அனைவருக்குமே தெரியும்... இருந்தாலும் 24x7 இங்கே இருந்து தங்களின் நேரத்தை இப்படியா போக்கிக் கொள்வது...? என்னதான் இந்த தளத்தின் எங்கள்ஸ்களின் மறுமொழிகளை விட தாங்கள் அனைவருக்கும் வெட்டியாக மறுமொழிகள் இட்டாலும், ஆறாவதாக உங்களை இந்த தளத்தின் உரிமையாளராக சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் ஐயா - அதை நீங்கள் புரிந்து கொள்ள விடும்...! உங்களின் தளத்தில் உங்களின் பதிவுகள் தொடர வேண்டுகிறேன்... நன்றி ஐயா...

   (இது அனைவரின் மின்னஞ்சல் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு சின்ன விருப்ப தகவல்)

   எனது குறிப்பு : குறள்களை மேலும் கெடுக்க வேண்டாம்... நன்றிகள் பல...

   நீக்கு
  2. துரை சார், மேலே உள்ள என் (பிற்பகல் 2.31) கருத்தைப் பார்க்கவும் உங்கள் ஆர்வத்தைப் பெரிதும் பாராட்டுகின்றேன். எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அல்லது பதிவின் ஆசிரியர் தவிர வேறு யாரும் சொல்லும் கருத்துரைகளைப் பொருட்படுத்தவேண்டாம்.

   நீக்கு
  3. //இது அனைவரின் மின்னஞ்சல் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு சின்ன விருப்ப தகவல்)//

   யார் அந்த "அனைவர்"?  சொன்னால் தெரிந்து கொள்வோம்!  நன்றிகள் பல.

   நீக்கு
  4. //எங்கள்ஸ்-ன் அரசவைக் (அவசரக்) ஆண் கவிஞர்கள் இருவரில் தாங்கள் முதன்மை என்பது அனைவருக்குமே தெரியும்...//

   மறுபடியும் "அந்த"  அனைவர்!

   //இருந்தாலும் 24x7 இங்கே இருந்து தங்களின் நேரத்தை இப்படியா போக்கிக் கொள்வது...?//

   இது யாருக்கேனும் சாத்தியமாகுமா?  என்ன காழ்ப்புணர்ச்சி!


   //என்னதான் இந்த தளத்தின் எங்கள்ஸ்களின் மறுமொழிகளை விட தாங்கள் அனைவருக்கும் வெட்டியாக மறுமொழிகள் இட்டாலும், ஆறாவதாக உங்களை இந்த தளத்தின் உரிமையாளராக சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் ஐயா - அதை நீங்கள் புரிந்து கொள்ள விடும்...! //

   அவர் அப்படி எதிர்பார்ப்பதாய் "அனைவரிடமும்" சொன்னாரா?    இல்லை அந்த "அனைவரி"ன்  கருத்தா அது?  அதை அவரிடமும் சொல்லி இருக்கிறார்களா அந்த "அனைவர்"?  ஏன் உங்களிடம் மட்டுமே சொல்கிறார்கள்?  ஆறாவதாய் சேர்கிறாரோ, இல்லையோ,  சேர்ந்திருப்பதில் அப்படி என்ன விருந்தம் அந்த "அனைவரு"க்கு?  பிரிந்து ஒருவருக்கொருவர் வசைப்படிக் கொள்வதுதான் சரி என்பது அபிப்ராயமா?

   நீக்கு
  5. //எனது குறிப்பு : குறள்களை மேலும் கெடுக்க வேண்டாம்... நன்றிகள் பல...//

   ஒரு இடத்தில சொல்வதால், குறிப்பிடுவதால் குறள் கெட்டுவிடுமா?  வானொலியிலும், சில தொலைக்காட்சி சேனல்களிலும் காலை குறள் சொல்வார்கள்.  அப்புறம் என்னென்னவோ நிகழ்ச்சிகள் போடுவார்கள்.  அவர்கள் உங்களிடம் பெர்மிஷன் வாங்கி  விட்டார்களா?   தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.  நன்றிகள் பல.

   நீக்கு
  6. திருக்குறள் முழுமைக்கும்
   நிர்வாக இயக்குநர் போலிருக்கிற்து...

   நீக்கு
  7. // குறள்களை மேலும் கெடுக்க வேண்டாம்..// 'மேலும்' கெடுக்கவேண்டாம்! ஏற்கெனவே அதை யார் கெடுத்தார்கள்?

   நீக்கு
  8. குறள்களைப் படித்தால் மட்டும் போதாது துரை செல்வராஜூ ஸார்.  மற்றவர்களுக்கு உபதேசிப்பதை நிறுத்தி தான் அந்த வழி நடக்கவேண்டும்.  பழகிய நண்பர்களையே அவதூறாகவும், கேவலமாகவும் மனவருத்தம் தரும்படியும் பேசத்தான் அந்தக் குறள் கற்றுக் கொடுத்திருக்கிறதா?   நண்பர் தனபாலன் மற்ற தளங்களிலும் நண்பர்களை வருத்தம் கொள்ளும்படி பேசி /எழுதி வருவதைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  சில இடங்களில் அதற்கு எழும் ஓரிரு ஆதரவுப் பின்னூட்டங்களையும் கண்டிருக்கிறேன்.  


   அரசியல் நிலைப்பாட்டிலும், மதம் சார்ந்த உணர்வுகளிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம்.   அதைத் தனிப்பட்ட முறையில் அந்தந்த நண்பர்களை - கவனிக்கவும், நண்பர்களை , எதிரிகளை  அல்ல - மோசமான வார்த்தைகளில் வசைபாடுவது எந்த விதத்தில் சரி என்று அந்த "அனைவர்" உணர வேண்டும்.  அல்லது இது அந்த "அனைவரி"ன் தூண்டுதலின்பேரிலும், சம்மதத்தின் பேரிலும்தான் நடக்கிறதா என்றும் தெரியவில்லை.

   நீக்கு
  9. என் பொருட்டு கருத்துரைகளைப் பதிவு செய்து அன்பு காட்டிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் திரு கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

   நீக்கு
  10. நேற்று எங்களுக்கு...
   இன்று உங்களுக்கு..
   நாளை?

   நீக்கு
 6. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சென்னை நேயர் விருப்ப நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கேட்ட பாடல்.

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. நன்றி கமலா அக்கா?  இனிய பிரார்தனைகளுக்கு நன்றி.  நல்வரவு, வணக்கம்.

   நீக்கு
 8. மாலதி - இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. பாடலும் கேட்டதில்லை என்றே தோன்றுகிறது. இன்றைக்கு உங்கள் பதிவு வழி தான் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே, வெங்கட் சொல்வதைப் போல் மாலதினு "தேவன்" எழுதின புத்தகம் தான் தெரியும். திரைப்படம் வந்ததே தெரியாது. இந்தப் பாட்டெல்லாம் கேட்டதே இல்லை.

   நீக்கு
  2. எனக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.  மாலதி படத்தின் பெயர் என்பதும் தெரியும்.  பதிவுக்காக தேடியபோதுதான் மிச்ச விவரங்கள் எனக்கும் தெரிந்தது!

   நீக்கு
 9. பாடல் கேட்டிருக்கிறேன். படத்தின் பெயர் இப்பொழுதுதான் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். நல்ல இனிமையான பாடல். மெதுவாகத்தான் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்க, பாருங்க, இரசியுங்க.

   நீக்கு
  2. வாங்க பானு அக்கா...   மாலை வணக்கம்.   இப்போதுதான் வரமுடிந்தது.

   நீக்கு
 11. பாடல் முதல் முறை கேட்கிறேன் ரசிக்கலாம்

  பதிலளிநீக்கு
 12. இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் வருகிறது ஜி சிறப்பான பாடல்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல பாடல், வரிகள். அந்தக்காலத்துச் சுகம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏகாந்தன் ஸார்...  எளிமையான பாடல், இனிமையான டியூன்.

   நீக்கு
 14. படம் பார்த்ததில்லை. பாடலைக் கேட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் நானும் படங்கள் பார்ப்பதில்லை முனைவர் ஸார்...  பாடல்கள் காதில் விழுந்து மனதில் நுழைந்த உடன் என்ன படம் என்று பார்த்துக் கொள்வேன்.

   நீக்கு
 15. இது செம பாடல். மிக நன்றாக பாடியிருப்பார். ரசித்த பாடல்.

  பதிலளிநீக்கு
 16. பாடல் கேட்டு இருக்கிறேன். தொலைக்காட்சி தயவால் பழைய படங்கள் வரிசையில் பார்த்து இருக்கிறேன். சோகபடம்.

  //கோமதி சுப்பிரமணியம் எழுதிய கதையை கே எஸ் கோபாலகிருஷ்ணன்//
  கே எஸ் இயக்கிய படம் என்று தெரியும், நீண்ட நீண்ட வசனங்கள் பேசுவார்கள் படத்தில்.
  கதை எழுதியவரை இப்போது தெரிந்து கொண்டேன்.

  இளமையான எஸ் பி பி குரலில் இனிமையான பாடல் கேட்டு ரசித்தேன், நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் பற்றி எனக்கும் தெரியாது. ஆனால் பாடல் பலமுறை கேட்டு ரசித்தது உண்டு.

   நீக்கு
 17. இண்டபாடலை இங்கு கேட்டபின்யூ ட்யூபிலும் தெரிகிறது இப்பாடல்

  பதிலளிநீக்கு
 18. கோமதி சுப்பிரமணியம் சிறுகதைகளை அந்நாட்களில் ஆனந்த விக்டனில் வாசித்த நினைவு மங்கலாக இருக்கிறது.

  //கெளரவ வேடத்தில் சந்திரபாபு...//

  ஆமாம், கெளரவ வேடம் என்றால் என்ன? டைட்டிலில் கெளரவ நடிகர் என்று கூடப் போடுவார்கள். அப்படீன்னா என்ன??.. தெரிந்தவர் சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சம்பளம் வாங்காமல் நடிப்பதை கௌரவ வேடம் என்று சொல்வார்கள் என்று அந்தக் காலங்களில் சித்ராலயா கம்பெனியில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
  2. ஆம். ஏதேனும் ஒரு காட்சியிலோ அல்லது இரண்டு காட்சிகளிலோ Guest appearance செய்வார்கள்.

   நீக்கு
  3. புகழ் உள்ள நடிகர்கள், இன்னொருவர் படத்தில் 'தாட்சண்யத்துக்காக' (அது நடிகருக்காக இருக்கலாம், தயாரிப்பாளருக்காக இல்லை டைரக்டருக்காக) சிறிய பாத்திரத்தில் நடிக்க நேரிட்டால், அதனை 'கெளரவ வேடம்' என்று போடுவார்கள். அதுக்கும் சம்பளத்துக்கும் சம்பந்தமில்லை (ஏதோ ஒரு தொகையை வாங்கிக்கொள்வார்கள்).

   இப்போ நினைவுக்கு வருவதால் இதனை எழுதுகிறேன். ஜெமினி கொஞ்சம் படங்கள் குறைவாக இருந்தபோது(ன்னு படித்தேன்), ஏவிஎம் ஒரு படத்துக்காக அப்ரோச் செய்தபோது, (அப்போது அவர் வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் 30), ஏவிஎம் 15தான் தருவேன் என்று சொன்னார்கள். அதற்கு மீதி 15 நான் கொடுக்கிறேன், ஆனால் ச்மபளம் 30 என்றுதான் போடணும் என்றாராம். அப்படி இல்லையென்றால் மார்க்கெட் படுத்துவிடும் என்பதால்.

   நீக்கு
  4. என் நண்பர் ஒருவர் அடித்த ஜோக் நினைவுக்கு வருகிறது.  கௌரவ வேடத்தில் சந்திரபாபு என்று நீதி படத்திலும் போட்டிருப்பார்கள்.  ஆனால் அவர் தொளதொள என்று டிராயர் போட்டுக்கொண்டு வருவார்...!!

   நீக்கு
  5. .. ஆனால் அவர் தொளதொள என்று டிராயர் போட்டுக்கொண்டு வருவார்...!!//

   ’கௌரவ வேட’ம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டவரோ? ‘தொளதொள’வென இருந்தால்போதும் எனத் தோன்றியிருக்கிறது அவருக்கு!

   நீக்கு
  6. ஆமாம், நெல்லை, நீங்கள் சொல்வது நினைவில் வருது. அந்தக் காலக்குமுதத்தில் படிச்சேனோ? ஜிவாஜி, பாலாஜி போன்றவர்கள் கூட கௌரவ வேடத்தில் நடிச்சிருக்காங்கனு நினைக்கிறேன். ரஜினியோட ஒரு படத்தில் கூட ஜிவாஜி கௌரவ வேடம்னு சொன்னாங்க! என்ன படமோ தெரியாது. நான் முள்ளும், மலரும், ஆறு முதல் அறுபது வரை போன்ற படங்கள் மட்டுமே பார்த்திருக்கேன். இன்னொன்று ரஜினி, அம்பிகா, ராதா நடிச்சது, ரஜினி, கௌதமி நடிச்சு ஒரு படம், ஸ்ரீதேவியோட ஒரு படம், அதான் ஸ்ரீதேவியோட கடைசித் தமிழ்ப்படம்னு சொல்வாங்க. இஃகி,இஃகி, எல்லாமே தூர்தர்ஷன் தயவு!

   நீக்கு
  7. ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப்படம் விஜய் நடித்த படமன்றோ?

   நீக்கு
  8. ஸ்ரீதேவி அரவிந்தசாமியோடு நடித்த படம்தான் அவர் நடித்த கடைசி தமிழ்ப்படம் என்று நினைக்கிறேன். தேடிப்பார்க்கவேண்டும்.

   நீக்கு
  9. இல்லை.  புலி என்கிற பெயரில் பாஹுபலி சமயத்தில் விஜய் படத்தில் அவர் வில்லியாக நடித்த படமே கடைசி!

   நீக்கு
  10. @ஸ்ரீராம் - கீசா மேடம் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சுக்கலை. அவர் சொன்னது //அதான் உயிரோடு இருக்கும்போது தூர்தர்ஷனில் போட்ட ஸ்ரீதேவியோட கடைசித் தமிழ்ப்படம்னு சொல்வாங்க// ஹா ஹா ஹா

   நீக்கு
  11. ஆஹா....   அப்படியா?

   கேஜிஜி சொல்லி இருக்கும் படத்தின் பெயர் தேவராகம்!

   நீக்கு
  12. //ஸ்ரீதேவியோட ஒரு படம், அதான் ஸ்ரீதேவியோட கடைசித் தமிழ்ப்படம்னு சொல்வாங்க. இஃகி,இஃகி, எல்லாமே தூர்தர்ஷன் தயவு!// இஃகி,இஃகி,இஃகி, நான் சரியாய்ச் சொல்லலை. அப்போத் தான் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததா! குழப்பிட்டேன். அ.வ.சி.அ.வ.சி. ஸ்ரீதேவி ஹிந்திக்குப் போகும் முன்னர் ரஜினியோடு நடிச்ச கடைசிப்படம்னு வந்திருக்கணும். அது கடைசியிலே அர்த்தமே மாறிடுச்சு. தூர்தர்ஷனிலே பார்த்தேன்னா நீங்களாவது புரிஞ்சுக்க வேண்டாமோ? திரேதா யுகம்னு! என்ன போங்க! இதுக்காக நான்ன் ராத்திரி படுத்துக்கப் போகாமல் வந்து பதில் எழுதிட்டு இருக்கேன்! :))))))))

   நீக்கு
  13. அப்படியா?  அப்போ அடுத்த வாரிசு!!

   நீக்கு
 19. இப்போதெல்லாம் கௌரவ வேடம் என்று குறிப்பிடுவதில்லை. நட்புக்காக என்று போடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 20. //சம்பளம் வாங்காமல் நடிப்பதை கௌரவ வேடம் என்று சொல்வார்கள்.. //

  செளகரியமான ஏற்பாடு. இரண்டு பக்கமும்.

  பதிலளிநீக்கு
 21. இந்தப் பாடல், படம் எதுவுமே இதுவரை தெரிந்ததில்லை ஸ்ரீராம். இப்பத்தான் முதல் தடவையா கேட்கிறேன். நன்றாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. படம் பார்த்த நினைவு இல்லை. ஆனால் பாடல் கேட்ட நினைவு இருக்கிறது. இப்போதும் கேட்டேன். நல்ல பாடல்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  இனிமை பாடகர் எஸ். பி. பியின், மற்றும் சுசிலா அவர்களின் இனிய குரலில் நல்ல பாடல். நிறைய தடவை ரேடியோவில் கேட்டுள்ளேன். படம் பார்த்ததில்லை. இப்போது இங்கும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டும்..
  10/5 இதற்குப் பிறகு இன்றுவரை செய்தது ஒன்றுமில்லை..

  20 நாட்கள் கடும் காய்ச்சல்.. இந்த ஒரு வாரமாக சற்று ஓய்வு.. இதற்கிடையில் வேறு அறைக்கு இடமாற்றம்..

  இந்தப் புதிய அறையில் கணினியை நிறுவுதற்கு மனமில்லை... ஏனைனில் இந்த அறைக்கு நானே ஒரு இடைஞ்சல்...

  வீண் பிரச்னை வேண்டாம் என்று சும்மா இருக்கிறேன்...

  இன்று தான் மனம் தாங்காமல் சிறு கதை ஒன்றை எழுதி ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி விட்டு

  புதிதாகப் பதிவு ஒன்றைத் தயார் செய்தேன்..
  பழைய அமைப்பில் படங்கள் முதன்முதலாக இணைய மறுத்தன...

  புதிய அமைப்பில் எழுதி வைத்திருந்த பதிவு திறக்கவே இல்லை...

  மன வருத்தத்துடன் பதிவை மூடி வைத்து விட்டு கைபேசிக்குத் திரும்பி எபியைத் திறந்தால் இத்தனை அமளி...

  குறள்களை மேலும் கெடுக்க வேண்டாம்!...
  என்ற திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களது அறிவுரை மனதைக் காயப் படுத்துகிறது..

  குறள் வழி நடந்து கொண்டு இருப்பவனைப் பார்த்து குறள்களைக் கெடுக்க வேண்டாம் என்ற கூரம்பு.. அக்னி வார்த்தைகள்..

  என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் திரு. தனபாலன் அவர்களே!..  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலை வேண்டாம் துரை செல்வராஜூ சார். உங்கள் நோக்கம் உயரியது. அதை நாங்கள் அறிவோம். அறியாதவர்களின் ஏளனங்களை புறம் தள்ளுங்கள்.

   நீக்கு
  2. உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய அறையில் தூக்கம் நன்றாக வருகிறதா? பக்கத்து (அறை) ஆசாமி பிரச்னையில்லையே? ஏனெனில், ஏற்கனவே நலமில்லாத உடம்பு சமநிலைக்கு வர, நல்ல ஓய்வு, தூக்கம் தேவை.
   மனம் அயர்ந்தால், எழுத்தின் பக்கம் திரும்பிவிடுவதே மேல். அப்படி திரும்ப முடிவதும் ஒரு வரம் போல.

   நீக்கு
  3. திரு. ஏகாந்தன் அவர்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  4. சில கம்பனி, சூழ்நிலை எல்லாம் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்த, அதிலும் இந்தியர்கள் மீது அவ்வளவாக பற்று இல்லாதவர்கள், இந்தியரிலேயே ஒரு சாராரை வெறுப்பவர்கள் போன்றோர் இருக்கும் சூழலில், வேலை செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.

   அந்தமாதிரி சூழலில் இறைவனை நினைத்து இருப்பதுதான் கடந்துசெல்ல வழிவகுக்கும்.

   பிரச்சனைகள் விரைவில் தீரட்டும் துரை செல்வராஜு சார்.

   படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் போன்று இருப்பவர்களை எதற்காக பொருட்படுத்த வேண்டும்.

   மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
   ஆகுல நீர பிற

   அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
   இழுக்கா இயன்றது அறம்.
   நீக்கு
  5. அன்பின் நெல்லை... தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி.. ம்

   நீக்கு
 25. இங்கே இந்த நாட்டில் கடுமையான ஊரடங்கு மார்ச் மாதத்திலிருந்து... சிறு கடைகளும் உணவகங்களும் மூடப்பட்டு விட்டன...

  பெரிய வணிக வளாகங்களுக்குள் நுழைவதற்குக் காத்திருக்கும் நூற்றுக் கணக்கானோர்.. நம்மால் நுழைய ஆகாது...

  இந்நிலையில் 20 நாட்கள் கடும் ஜூரம்... ஆதரவாகப் பேசுவதற்குக் கூட அருகில் யாரும் இல்லை...

  மனம் முற்றாகத் தளர்ந்து விட்டேன்..

  கால் லிட்டர் பால் வாங்கிக் காய்ச்சக் கூட வழியில்லை.. வயிற்றுக்கு இதமாக ஒரு வாய் சாப்பிடுவதற்கும் வாய்ப்பு இல்லை..

  முதற்கட்ட வைரஸ் காய்ச்சல் என்று பேசிக்கொண்டு பேசிக் கொண்ட சில சூபர்வைசர்கள் தலை வலி மாத்திரைக் கொடுத்து விட்டுப்போய் விட்டார்கள்...

  தட்டுத் தடுமாறி விஷயத்தை வீட்டுக்குச் சொல்லிய போது அவர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்...

  வீட்டு எண்களை வேறொருவருக்குக் கொடுக்கத் தயாரான வேளையில்

  கனடாவில் இருந்து ஒரு குரல் ..
  எனது ஒன்று விட்ட சகோதரர் மகளின் குரல்..

  தெய்வத்தின் குரலாக
  நான் இருக்க பயமேன் என்று ஒலித்தது...
  என்னை மீட்டெடுத்து அனைவரையும் ஆறுதல் படுத்தியது..

  நான் அந்த தெய்வத்தைத்தின் தாள் மலரைச் சார்ந்திருந்ததாலேயே இது நிகழ்ந்தது...

  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது..

  இந்தத் திருக்குறளுக்கும்
  இன்றைய பதிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்...

  ஆனால் - திரு. தனபாலன் அவர்களே
  எனக்கும் இக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு என்பதைத் தாங்கள் அறிந்து கொள்ளவும்...

  அறிந்து கொள்வது வேறு
  உணர்ந்து கொள்வது வேறு...

  பதிலளிநீக்கு
 26. கடவுளைப் பற்றிய உவமைகள் அனைத்தும் ஒருமையில் தான் சொல்லப்பட்டிருக்கிறது.. அது ஏன் என்று கேட்டிருக்கிறார். திரு தனபாலன்...

  பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் குன்றி காலமாகி விட்டார்...

  அந்த சமயத்தில் ஒரு திரைப்படம் மணிப்பயல் என்று... அதில் அண்ணா அவர்களைப் பற்றி ஒரு பாடல்...

  காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.. கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...

  என்று ஆரம்பிக்கும்..

  கடவுளை ஒருமையில் சொல்வது இருக்கட்டும்.
  அப்பேர்ப்பட்ட அறிஞரை ஒருமையில் சொல்லியது ஏன்?...

  இப்போது அதற்கு நியாயம் கேளுங்களேன் - தனபாலன்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளைஒருமையிர் விளிப்பது அன்பாலும் உரிமையாலும்தான். இறைசக்தி என்பது ஒன்றுதான். தலைவன் என்று பதிகங்களிலும் அவன் குறிக்கப்படுகிறான்.

   இது பக்தி மனதில் இருப்பவர்களுக்குப் புரியக்கூடியதுதான்.

   இலக்கியங்களிலும் ஒருமையாக பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

   இயேசு கடைசியாக சிலுவையில் இறப்பதற்கு முன்,
   ஏலி ஏலி லேமா சபக்தானி என்று வருத்தப்பட்டு அழுத்தற்கு, கண்ணதாசன் தன் இயேசு காவியத்தில் அழகாக தமிழ்ப்படுத்தியிருப்பார்

   இறைவா இறைவா என்னை ஏனோ கைவிட்டாயே கைவிட்டாயே

   மலர் மிசை ஏகினான் என்பதற்கு தாமரை மலர் மீது நிற்கும் விஷ்ணு எனவும் பொருள் கொள்ளலாம், மலரின்மீது அமர்ந்த இறைவன் எனவும் பொருள் கொள்ளலாம், நம் மனதிற்குத் தோன்றியபடியும் விளக்கம் சொல்லலாம். ஆனால் வள்ளுவர் குறிப்பிட்டது இறைவன் என்பது மட்டும் நிச்சயம்.

   நீக்கு
 27. /// அனைவரின் மின்னஞ்சல் தகவலின் அடிப்படையில்.. ///

  அதெப்படிங்க தனபாலன்?...

  தினமும் ஒரு குறளை இங்கே எழுதுபவன் நான்.. அப்படி எழுதுவதற்கு அனைவரது முறையீடு உங்களிடமா!...

  அப்படியானால் நீங்கள் யார் எனக்கு?...

  உங்களது கடைக் கண் கண்டு இயங்குபவன் நான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா அந்த அனைவரும்?...

  பதிலளிநீக்கு
 28. அன்பின் வேண்டுகோள் ஒன்று..

  நான் இத்தளத்தில் நாளொரு குறள் சொல்வதில் குற்றம் கண்டு திரு. தனபாலன் அவரிடம் மின்னஞ்சல் வழி கூறிய அனைவரில்
  ஒருவராவது முன் வந்து என்னிடம் கேளுங்கள்..

  நான் சொல்கிறேன் இதன் பின்னணி என்ன என்று!...

  பதிலளிநீக்கு
 29. இப்படி ஒரு படம் இப்படி ஒரு பாடல் இருப்பது இன்றுவரை அறியாமலிருந்தேன்.

  பாடல் வரிகளும் காட்சியும் அருமை.

  SPB ஏ மறந்திருப்பார் அவர் பாடியதை.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!