புதன், 24 ஜூன், 2020

மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுக்கும், நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம்?நெல்லைத்தமிழன் :


பாடும் பாடலை மிகவும் கண்ணைமூடி ரசிக்கலாம், பாடுபவரைப் பார்த்தால் ஐயோ..வலிப்பு வந்துவிட்டதோ, கையில் பாரிச வியாதி வந்துவிட்டதோ, என்ன! தோசைக்கு மாவரைக்கும் நேரத்தில் வந்துவிட்டோமோ? வாய்க்குள் தேள் ஏதேனும் போய்விட்டதோ....வாய் ஏன் கர்ணகடூரமாக இருக்கு, நேற்று சாப்பிட்டது ஜீரணமாகாமல் கேஸ்ட்ரிக் டிரபிளில் கொண்டுவந்துவிட்டுவிட்டதா என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கும் கர்னாடிக் பாடகர்கள்/பாடகிகள் உங்களுக்குத் தெரிந்து யார் யார்?

$ பாடுவதை ரசிக்கும் போது பாடகரின் சேஷ்டைகளோ முக பாவங்களோ எனக்குத் தெரிவதில்லை. கண் திறந்திருந்தாலும் காதுகளுக்கு auxiliary sensor களாகவே செயல்படுகின்றன.

# வடையைத் தின்னக் கொடுத்தால் துளையை எண்ணக்கூடாது.
இசையை வழங்குபவரது ரசனைக் கேற்ப அவரது உடல் வளைகிறது. அல்லது இசை அவர் உடலை அப்படி இயக்குகிறது. 
சேற்றைப் பார்க்காமல், செந்தாமரையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம்.

& பாகவதர் : " என்ன சார்! நேற்று நான் அயோத்யா மண்டபத்தில் பாடிய கச்சேரிக்கு நீங்க வரவே இல்லையே. ரொம்பக் கஷ்டப்பட்டு,  பிரமாதமாகப் பாடினேன்."

ரசிகர் : " ஓ அப்படியா ! வந்தவர்களும் கஷ்டப்பட்டுக் கேட்டிருப்பாங்க! " 

நிற்க. நான் கச்சேரிகளுக்குச் சென்றால், பாட்டு, பக்கவாத்தியம், தனியாவர்த்தனம் இவைகளோடு பாடகரின் அங்க சேஷ்டைகளையும் இரசிப்பேன். எல்லாவற்றிலும் ரசனையை வளர்த்துக்கொண்டோம் என்றால், அப்புறம் என்ன கவலை! 

 பானுமதி வெங்கடேஸ்வரன் : 

1. மரக்கறி உணவு உண்பவர்களை விட அசைவம் சாப்பிடுகிறவர்கள் அதிகமாக செல்லப் பிராணி வளர்ப்பவர்களாக இருகிறார்களே எப்படி இந்த முரண்பாடு?  

$ இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அனுபவம் பற்றாது!
நான் மரக்கறி+ செல்லப் பிராணி.

# தாமரையை பூஜையிலும், ரோஜாவை மாலையாகவும், மல்லிகையை தலையில் சூடவும் பழகிய நாம் கத்தரிக்காயை எண்ணெய் சட்டியில் வதக்குவது போலதான்.

& கேள்வி வித்தியாசமான கோணத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோணம் சரியா தவறா என்று கேட்காமல், யோசித்துப் பார்த்தேன். இந்த முரண்பாடு பொதுவானது அல்ல. 
அசைவப் பிரியர்களில், செல்லப்பிராணிகளை வளர்ப்பது பிடிக்காதவர்களும் இருக்கலாம். சைவ உணவு சாப்பிடுபவர்களில், (என்னைப்போன்று) செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்றாலே 'வேண்டாத விவகாரம்' என்று ஒதுங்கிச் செல்பவர்களும் இருக்கலாம். 
வாழ்க்கையில் அதிக மன இறுக்கங்களுக்கு ஆளானவர்கள், செல்லப்பிராணிகள் வளர்த்தால், அந்த நிலை, அவர்களின் மன இறுக்கத்தைப் போக்கும் என்று சொல்கிறார்கள். 
பொதுவாக, சிறிய வயதில், நாய்/பூனை வளர்க்க ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால், பெரிய வயதில், அதுவும் தனக்கென குடும்பம், குழந்தை குட்டி என்று வந்தபின், செல்லப்பிராணிகள் வளர்க்கிறேன் என்று சொல்பவர்களுக்கு .... 

நான் குடியிருக்கின்ற குடியிருப்பிலும் சரி, முன்பு வாக்கிங் செய்த பார்க்கிலும் சரி, நாயோடு வாக்கிங் வரும் செ.பி வளர்ப்பாளர்கள்  (Dog walkers தவிர்த்து)  எல்லோருடைய முகத்திலும் நான் ஓர் இறுக்கத்தைத்தான் பார்த்திருக்கிறேன் / பார்க்கிறேன். 


2. ஆங்கிலத்தில் நேரத்தை குறிப்பிடும் பொழுது 6'O'clock,7'O' clock... என்கிறோமே, அந்த ஓ என்பது எதைக்குறிக்கிறது?

$ 7 On clock 7 O'clock ஆயிற்று என்பர். O பூஜ்யத்தைக் குறிப்பதாகவும் சொல்வர்.சரியாக 7 மணிக்கு 7-00 என்பதாக.

& " 7 of the clock " என்பதைத்தான், apocopic form ல 7 O' clock என்று சொல்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. சிறிய வயதில் நான், 7 O' clock என்றால், (ஆங்கிலத்தில்) ப்ளேடு என்று அர்த்தம் என்றுதான் நினைத்திருந்தேன். 

3. மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுக்கும், நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

$ மிமிக்ரிக்கு குரல் 
    நடிகருக்கு லுக்கு.

# பிரபலங்களை வைத்து மிமிக்ரி நடக்கிறது. இவர் அவரைச் சார்ந்து பிழைக்கிறார். அவர் இவரைப் பார்ப்பது கூட அபூர்வம்.

& நடிகர்கள், திறமை வாய்ந்தவர்கள். மிமிக்ரி கலைஞர்கள், எல்லா நடிகர்களின் திறமையும் ஒருங்கே வாய்ந்தவர்கள். ஒரே மி. க விடம் பல நடிகர்களைக் கண்டு / கேட்டு ரசிக்கலாம். ஆனால் ----- பலதரப்பட்ட நடிகர்கள் இல்லை என்றால், மி க வுக்கு வேலை இல்லாமல் போய்விடும். 

================================

வாசகர்கள் அனுப்பிய தகவல்கள்  :

1

அன்புள்ள நண்பர்களுக்கு,   இந்தப் பழைய வலைப்பூவில் 
எனக்குப் பிடித்த திரை இசைப்பாடல்களை  பதிந்து  வருகிறேன்.
 இனிமேல்தான் நன்றாக  வகைப் படுத்த வேண்டும். 
லேஅவுட் எல்லாம் அமைக்க வேண்டும்.  நான் அனுப்பாமலேயே  எங்கள் ப்ளாகில்  ஒரு பாடல் வந்து விட்டது .  ஒரு விளக்கமாக  இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மிக மிக நன்றி.
வல்லிசிம்ஹன் 
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

2
அனைவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப 
யூ டியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது.
Please like share and subscribe . thank you all.

L Karthik. 


===========================      ===========   ===========================
நிலா மேடை 

மின்நிலா 005 எல்லோரும் படித்துவிட்டீர்களா?

உங்கள் நண்பர்களுக்கு, வாட்ஸ் அப் மூலமாக சுட்டி அனுப்பவேண்டும் என்றால், கீழ்க்கண்ட சுட்டியை  copy செய்து, வாட்ஸ் அப் மூலமாக, உங்கள் மற்ற வாட்ஸ் அப் குழுமங்களில் பகிருங்கள். 

சுட்டி :  https://docdro.id/MVets2O

இதன் மூலமாக, எங்கள் ப்ளாக் பற்றிய விவரங்களும், அதில் எழுதுகின்ற உங்கள் பெயர்களும், உலகெங்கும் உலா வரட்டும். 

மின்நிலாவை நாங்க ஆரம்பித்தது மே மாத இறுதியில் என்றாலும், அதை வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி சமயத்தில்தான் வெளியிடலாம் என்று இருந்தோம். (ஏன் என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்) ஆனால், ஜூன் 28 ஆம் தேதிக்குள் சில பரிணாம வளர்ச்சிகள் கொண்டுவரவேண்டும் என்றால், அதை ஒரு மாதம் முன்பே ஆரம்பித்து வாசகர்கள் அபிப்பிராயம் கேட்கலாம் என்பதால்தான் முன்பே ஆரம்பித்துவிட்டோம். 

மின்நிலா புத்தகத்தில், 'எங்கள் ப்ளாக்' வாசகர்களுக்கும், அதில் கதை, கட்டுரை, கவிதை, கருத்துரைகள் எழுதுபவர்களின் படைப்புகளுக்கும்தான் முன்னுரிமை அளிக்க இருக்கிறோம். 

இப்போதைய project : எங்கள் ப்ளாக் பதிவில், தொடர் பயணக் கட்டுரையாக ஸ்ரீராம் எழுதிய 'காசி பயண'க் கட்டுரைகளை புத்தக வடிவில் செய்துகொண்டிருக்கிறோம். A5 அளவில், நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ளது அந்தப் புத்தகம். 

அதை எப்படி உலகளாவிய அளவில் வலை ஏற்றுவது / என்ன விலை நிர்ணயம் செய்வது என்பது பற்றி எங்களுக்கு, தற்போதைக்கு விவரங்கள் தெரியவில்லை. 

நம் வாசகர்களில் பலர், புத்தகங்கள் எழுதி, அதை மின்நூலாக வெளியிட்டிருக்கும் அனுபவஸ்தர்கள். அவர்கள் எங்களுக்கு வழி காட்டினால், பெரிதும் நன்றி உடையவர்களாக இருப்போம்.  உதவுங்கள் நண்பர்களே !

===========================

மீண்டும் சந்திப்போம்!

===========================

121 கருத்துகள்:

 1. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜு ஸார்... வாங்க..

   நீக்கு
  2. @கௌதமன், குறள் விளக்கம் சொல்லலை!:)

   நீக்கு
  3. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
   சான்றோர் பழிக்கும் வினை
   (அதிகாரம்:வினைத்துய்மை குறள் எண்:656)

   பொழிப்பு (மு வரதராசன்): பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.

   நீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவருக்குமான உடல் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. //நம் வாசகர்களில் பலர், புத்தகங்கள் எழுதி, அதை மின்நூலாக வெளியிட்டிருக்கும் அனுபவஸ்தர்கள். அவர்கள் எங்களுக்கு வழி காட்டினால், பெரிதும் நன்றி உடையவர்களாக இருப்போம். உதவுங்கள் நண்பர்களே !// வெங்கட் இருக்கக் கவலை ஏன்? நேற்றுக் கூட ஆதியின் சமையல் குறிப்புக்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றார். நானுமே அவரைக் கேட்க வேண்டும் என நினைப்பது உண்டு. ஆனால் அவர் வேலைப்பளு யோசிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதை எழுதும்போது, உங்களையும், வெங்கட் சாரையும் மனதில் நினைத்து தான் எழுதினேன்!

   நீக்கு
  2. Shrinivasan T லினக்ஸ் ஸ்ரீநிவாசனின் மெயில் ஐடி. இவரைத் தொடர்பு கொள்ளலாம். இருவேறு விதமான காப்பிரைட் உரிமைகள் உள்ளன. உங்களுக்குப் பணம் வேண்டுமெனில் ஒன்று. வேண்டாமெனில் ஒன்று. உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். மற்றபடி அமேசான், கிண்டில் எனில் வெங்கட் தான்!

   நீக்கு
  3. மின்னூல் - பெரிய கம்பசூத்திரம் இல்லை. அமேசான் தளம் எனில் உங்களிடம் .docx/.doc வடிவத்தில் புத்தகத்திற்கான Content தயாராக இருந்தால் உடனடியாக வெளியிடலாம். நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்களில் Freetamilebooks.com தளம் வழி வெளியிட வேண்டுமென்றால் அவர்களுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும்வரை காத்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு WhatsApp வழி சந்திப்போம்.

   பணிச்சுமை - அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எப்போது வேண்டுமானாலும் என் உதவி உங்களில் எவருக்கு வேண்டுமானாலும் தருவதற்கு நான் ரெடி. புத்தகம் வெளியிட என்னை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். நேரம் எடுத்து செய்து விடலாம்.

   நீக்கு
  4. நன்றி, வெங்கட். வாட்சப் மூலமாகத் தொடர்பு கொள்கிறோம்.

   நீக்கு
  5. Shrinivasan T ஸ்ரீநிவாசனின் ஐடி அங்கே கொடுத்திருந்தேன். ஆனால் போகலை. ஆதலால் திரும்பக் கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் உதவும்.

   நீக்கு
  6. இரண்டு முறையும் ஐடி போகவில்லை. என்ன காரணம்? பேயார் வேலையா? Shrinivasan T இப்போ என் கண்ணெதிரே தெரிகிறது. கமென்டை பப்ளிஷ் செய்தால் போகுமா?

   நீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐடி மட்டும் போகமாட்டேன்னு அடம்! :(

   நீக்கு
 5. இன்னிக்குக் கேள்வி பதில்கள் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா மாதிரிக்கு வந்திருக்கின்றன போலும்! ஆனாலும் எல்லாக் கேள்வி பதில்களும் புன்னகையை வரவழைத்தன. ஒரு வேளை தி/கீதாவின் பதிவு படிச்சுட்டு வந்ததின் தாக்கமோ? :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா!அப்போ நானும் போய் அதைப் படித்துவிட்டு வருகிறேன்!

   நீக்கு
  2. ஆ ஆ ஆ!! கீதாக்கா என் பதிவுல அப்படி என்ன புன்னகை வர வழைத்தது!!!???? ஓசித்துக் கொண்டே இருக்கிறேன்...!!!!!!

   கௌ அண்ணா ஹையோ அப்பூடி எல்லாம் ஒன்றும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மில்ல!!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. அமேசான் கிண்டில் என்றால் நானும் வெங்கட்ஜி யை நினைத்தேன் கீதாக்கா சொல்லிட்டாங்க...

   நண்பர் துளசி சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவர் சொல்லியே இரு வருடங்களுக்கும் மேலாகிறது. கதைகள், சமையல் குறிப்புகள், பயணக் குறிப்புகள் எல்லாம் போடு, போடுவோம்னு. கிண்டிலில் போட்டால் சின்னதாகவேனும் எனக்கு வருமானம் வருமோ என்று துளசியின் சஜஷன். எண்ணம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவருக்கு வருமானம் வேண்டும் என்ற விருப்பமில்லை எனக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

   நான்தான் ப்ளாக் சம்பந்தப்பட்ட கணினி இயக்கம் முழுவதும் இங்கிருந்து என்பதால் நான் தான் செய்ய வேண்டும். இன்னும் கைவரவில்லை. தயக்கம் தான் காரணம்.

   கீதா

   நீக்கு
  4. செய்து விடலாம் கீதாஜி. வாட்ஸ் அப் மூலம் அளவளாவலாம். பதிவுகளைத் தேர்ந்தெடுத்து Word file-ஆக மாற்றி அனுப்புங்கள். பார்த்து மின்னூலாக அமேசான் வழி வெளியிட்டு விடலாம்.

   நீக்கு
  5. மிக்க நன்றி வெங்கட்ஜி.

   எல்லாமே வேர்டில்தான் இருக்கின்றன. நான் நேரடியாக ப்ளாகரில் எழுதுவதில்லை. எல்லாமே வேர்டில் எழுதிவிட்டு காப்பி பேஸ்ட் செஞ்சு ப்ளாகரில் போடுவது வழக்கம். அப்புறம் படங்கள்,வீடியோக்கள் இருந்தால் அவற்றை மட்டும் ப்ளாகரில் சேர்த்துப் போடுவேன்.

   வேர்ட் ஃபைலாகத்தான் இருக்கின்றன. பார்ப்போம் ஜி

   மிக்க நன்றி மீண்டும்

   கீதா

   நீக்கு
 6. புத்தக வெளியீட்டின் மூலம் பணம் பார்க்கணும்னால் அமேசான், கிண்டில் தான் சரினு நினைக்கிறேன். நான் அநேகமாக லினக்ஸ் ஸ்ரீநிவாசன் https://freetamilebooks.com/ வழியாகவே வெளியிட்டு வருகிறேன். 2,3 புத்தகங்கள் தொகுத்துப் பிழைகள் பார்ப்பதற்குக் காத்திருக்கின்றன. என்னமோ அந்தப் பக்கமே போகவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலைக்கான வாழ்த்துகளும், தொடர்ந்து
   பிரார்த்தனைகளும்.

   நெல்லைத்தமிழனின் கேள்விக்குப் பதில் அவரவர்
   அனுபவங்களைப் பொறுத்து அமையும்.
   கொனஷ்டைகளை அனுபவிப்பது
   கொஞ்சம் சிரமம்தான்.
   எங்கள் ஊர்ப்பையன் ஒருவரே இப்படிப் பாடுவதாகத் தகவல்கள்
   இருக்கின்றன. சொன்னால் கோபம் வந்துவிடும்:)

   பழைய பாகவதர் ஜோக்குகளில் நிறைய இந்த சேட்டைகள் பற்றி
   இருக்கும்.
   சாரத்தைப் பற்றிக் கொண்டு சரீரத்தை விட்டு விடலாம்.

   நீக்கு
  2. நல்ல அணுகுமுறை! நன்றி.

   நீக்கு
  3. ..சாரத்தைப் பற்றிக் கொண்டு சரீரத்தை விட்டு விடலாம்.//

   பாதிபேரிடம் சரக்கு சரியாக இருப்பதில்லை. சரீரம்தான் சாரமே !

   அவர்கள் செய்கிற கொனஷ்டைகள் இருக்கட்டும். அதை கேமராமேன்கள் zoom செய்து காட்டும் கொடுமை இருக்கிறதே.. !

   நீக்கு
  4. //அவர்கள் செய்கிற கொனஷ்டைகள் இருக்கட்டும். அதை கேமராமேன்கள் zoom செய்து காட்டும் கொடுமை இருக்கிறதே.. !// ஹாஹா! உண்மைதான். சுஜாதா கூட,"டி.வி.யில் பாடகரின் உள் நாக்கு தெரியுமளவிற்கு க்ளோசப்பில் காட்டி விடுகிறார்கள்" என்று எழுதியிருந்தார்.

   நீக்கு
  5. ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 7. செல்லப்பிராணி வளர்ப்பு என்பது அவரவர் (ஜீன்ஸில்) மரபணு சார்ந்தது என நினைக்கிறேன். எல்லோருக்கும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடிப்பதில்லை.

  மிமிக்ரி கலைஞர்களில் ஸ்ரீவித்யாவின் அப்பா, எம்.எல்.வி.யின் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்தியின் நிகழ்ச்சிகள் மிக மிக நன்றாக இருக்கும்.நேரிலே கேட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறது!

   நீக்கு
  2. எது ஆச்சரியம்? விகடம் கிருஷ்ணமூர்த்தியா? செல்லப் பிராணி வளர்ப்பா?

   நீக்கு
  3. ..எல்லோருக்கும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடிப்பதில்லை.//

   பலரை பிராணிகளுக்கும் பிடிப்பதில்லை!

   நீக்கு
  4. நாங்கள் திருச்சி உறையூரில் வசித்த பொழுது எங்கள் வீட்டுக்கருகில் 1001 குரல் மன்னன் நாகாஸ் என்று ஒருவர் வசித்தார்.

   நீக்கு
  5. பலரை பிராணிகளுக்கும் பிடிப்பதில்லை!//

   ஹா ஹா ஹா அஹ ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா கரீக்டாகச் சொல்லிட்டீங்க!!!! மிகவும் ரசித்தேன் இதை!!

   கீதா

   நீக்கு
  6. // எது ஆச்சரியம்? விகடம் கிருஷ்ணமூர்த்தியா? செல்லப் பிராணி வளர்ப்பா?// விகடம் கிருஷ்ணமூர்த்தி சமாச்சாரம். அவர்தான் என்னுடைய தூ ஊ ஊ ரத்து சொந்தக்காரர். ஆனால், அவரைப் பற்றிய விவரங்கள் இணையத்தில் கூட கிடைக்கவில்லை!

   நீக்கு
  7. ஆமாம், முன்னர் கூட நீங்க சொன்ன நினைவு இருக்கு! நான் அவர் நிகழ்ச்சியைக் கேட்டது மதுரை மேலகோபுரவாசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் கடையின் வெள்ளிவிழாவில். அவங்க எனக்குப் பிறந்த/புகுந்த வீட்டுச் சொந்தம். சுமார் ஒரு வாரம் பற்பல கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடந்தன. எம்.எஸ். அம்மாவின் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் வில்லுப்பாட்டு, காந்தி மஹான் கதை. எஸ்.டி.சுப்புலக்ஷ்மியின் சங்கீத உபந்நியாசம், விகடம் கிருஷ்ணமூர்த்தியின் விகடக் கச்சேரினு வரிசையாய் நிகழ்ச்சிகள். வீட்டு வாசலில் நடைமேடையிலேயே பந்தல் போட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரையில் கல்யாணங்களே அப்படித் தான் நடக்கும் அவரவர் வீட்டு வாசலோடு அக்கம்பக்கம் இரு வாசல்களையும் சேர்த்துப் பந்தல் போட்டுக் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். என் கல்யாணம் உள்பட!

   நீக்கு
 8. மின்னூல் பற்றிய விவரங்களுக்கு :

  திரு.ஜோதிஜி அவர்கள்
  திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
  திரு.ஜம்புலிங்கம் அவர்கள்
  திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

  மேலும் சில தகவல்களுக்கு :

  இணைப்பு 1

  இணைப்பு 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்!

   நீக்கு
  2. செல்லப் பிராணிகளுக்கும் மாமிசம் தேவை. செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பார்கள். என் தோழி பதினோரு வகையான நாய்கள் வைத்திருந்தார். அவர்கள் அசைவம் தான்.

   அதில் ஒரு Great Dane NAME KING.
   என் கழுத்து உசரத்துக்கு வந்து நின்றபோது பயத்தில் ஒடுங்கிப் போனேன்.
   சாதுவானதாம்.
   அதற்குப் பிறகு அவர்கள் வீட்டிற்குப் போகும்போது
   எல்லாம் கூண்டில் அடைக்கப் பட்ட பிறகே
   நான் வெளியே வருவேன். அவர்களது எஸ்டேட்டிற்கு அவை எல்லாம் காவல்.

   இங்கே இந்தத் தொற்று கால லாக்டவுனுக்கு
   ஒரு செல்லத்தை அடாப்ட் செய்யச் சொல்கிறார்கள்.
   மன அழுத்தம் குறைவதற்கு அவைகள் பெரும்பங்கு
   கொள்வதாக நிரூபித்திருக்கிறார்கள்.

   நீக்கு
  3. மின்னூல் வெளியிடுவதற்கு
   உந்துதலாக அன்பு தனபாலன் லிங்க் கொடுத்துவிட்டார்.
   கீதாமாவும் இதில் அனுபவஸ்தர்.

   நீக்கு
  4. தகவல்கள் அளித்ததற்கு நன்றி.

   நீக்கு
 9. ஆஹா, இன்று ஒரு தகவலாக என் வலைப்பதிவும் வந்து விட்டதா.
  நன்றி மா.
  வேறு தகவல் கிடைத்தாலும் அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பதில்களை மிகவும் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. புகழ் பெற்ற பாப்பிலோன் நாவலில் படித்த (உவ்வே) சமாச்சாரம். அதில் இனி வாழ்க்கையே கிடையாது என்னும்படியான ஒரு சிறையில் இருக்கும் கைதிகளில் ஒருவன் பூனை வளர்க்கிறான். ஒரு நாள் சிறையில் வேலைபார்க்கும் ஒருவரது வீட்டில் அவனுக்கு உணவு கொடுக்கிறார்கள். (அவனுடைய பிரியமான பூனை காணாமல் போயிருந்தது). பிறகுதான் தனக்குக் கொடுத்த உணவு தன்னுடைய பூனை என்பதை அறிந்து, அவனைக் கொன்றுவிடுகிறான் என்பதுபோலப் படித்தேன். சிறைக்கைதி (நிச்சயம் கொலைக்குற்றவாளி). அவனுக்கும் இருக்கும் உணர்வு என்னை ஆச்சர்யப்படுத்தியது.

  பதிலளிநீக்கு
 13. //தாமரையை பூஜையிலும், ரோஜாவை மாலையாகவும், மல்லிகையை தலையில் சூடவும் பழகிய நாம் கத்தரிக்காயை எண்ணெய் சட்டியில் வதக்குவது போலதான்.// நல்ல பதில்.
  தன்னுடைய சிங்கப்பூர் பயண அனுபவங்களை எழுதிய சிவசங்கரி அங்கு ஈசல் கறியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், அதுவும் ஈசல்களைப் பிடித்து அதன் இறக்கைகளை பிய்த்து, பிறகு எண்ணை சட்டியில் வறுப்பார்கள் என்று கேள்வி பட்டதும் இதை தெரிவித்த நண்பரிடம்,"இது மிகவும்"கொடூரமாக இருக்கிறதே" என்றாராம் அதற்கு அந்த நண்பர், "ஏன் நீங்கள் வாழைப்பூவை சமைக்க மாட்டீர்களா? அதில் கள்ளனை ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கி சமைப்பதில்லையா?" என்றாராம். வாழைப்பூவை சமைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அதுதான் நினைவுக்கு வரும்.

  பதிலளிநீக்கு
 14. இன்றைக்கு கண்ணதாசன் பிறந்தநாளாம். அவர் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? திரைப்பட பாடலைத்தவிர்த்து ரசித்த அவருடைய வேறு படைப்பு எது? அவருடைய சுய சரிதமான மனவாசம் எனக்கு பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வார கேள்வியாக எடுத்துக்கொண்டோம்.

   நீக்கு
  2. // இன்றைக்கு கண்ணதாசன் பிறந்தநாளாம். //

   MSV க்கும் இன்றுதான் பிறந்த நாள்.

   நீக்கு
 15. மின்னூல் நல்ல முயற்சி. நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது பக்கம் மிகவும் அதிகமாக இருப்பதுபோல் உள்ளது. சிலருக்கு அயற்சியை உண்டாக்கும். பகுதிகளாக வெளியிடலாமா என சிந்திக்க வேண்டுகிறேன். மற்றவர்களிடம் கருத்து கேளுங்கள். முயற்சி சிறப்பாக வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. ஆமாம், பக்கங்கள் இங்கே குறைவாக இருந்தாலே மின்னூலுக்கு வரவேற்பு இருக்கும். :( என்னுடையது எல்லாம் சுமார் ஆயிரம் பக்கங்கள் என்பதால் வெளியிடவே நாட்கள் ஆகும். அதிலும் கண்ணன் வந்தான் தொடரை வெளியிட எல்லோருமே தயக்கம் காட்டுகிறார்கள். அச்சுக்குக் கொடுக்கலாம் எனில் அங்கேயும் இதே பக்கங்கள் பிரச்னை! ஆயிரம் பக்கமெல்லாம் இப்போ யாரும் படிப்பதில்லை. புத்தகம் விலை போகாது என்கின்றனர்.

   நீக்கு
  3. ஓஹோ -- இப்படி ஒரு கோணம் இருக்கிறதா!

   நீக்கு
  4. எதுக்கும் வெங்கட்டைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுக்கோங்க. அவரோட பயணக்கட்டுரைகளை அநேகமாக அவர் பகுதியாகவே வெளியிட்டிருக்கார்னு நினைக்கிறேன்.

   நீக்கு
 16. மிமிக்ரி கலைஞர்கள் பற்றிய என் கேள்விக்கு & அவர்கள் பதிலை மிகவும் ரசித்தேன். அந்த பதிலை படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயா டி.வி.யில் "கடவுள் அமைத்து வைத்த மேடை..." என்னும் கமலஹாசன் மிமிக்ரி செய்யும் பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. What a coincidence!

  பதிலளிநீக்கு
 17. பாடகர்களின் உடல்மொழி என்னையும் எரிச்சல் பட வைக்கும்

  பதிலளிநீக்கு
 18. ஸ்ரீராமின் பயணக் கட்டுரை மின்னூலாக வடிவெடுப்பது குறித்து மிகவும் சந்தோஷம்.
  அவரது முதல் நூல் வடிவமே மின்னூலாவதற்கு வாழ்த்துக்கள்.

  நான் அடிக்கடி சொல்வது தான். பதிவுகள் வேறு; அவற்றின் அச்சாக்கம் என்பது வேறு. இதை உணர்ந்து தான் பின்னால் பதிபிக்க வெண்டி வரும் என்று என் எல்லாப் பதிவுகளையும் புத்தக பதிப்பிற்கேற்ற மாதிரியே பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  அதனால் பதிவில் வந்ததை அப்படியே புத்தகமாக்காமல் வேண்டிய மாற்றங்களைச் செய்து (முன்னால் வரவேண்டியவை - பின்னால் வரவேண்டியவை எல்லாவற்றையும் சரிசெய்து, நீக்க வேண்டியவைகளை நீக்கி சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்து,
  புத்தகம் என்பதினால் ஆரம்பத்திலிருந்து கடைசி பக்கம் வரை சுகமான வாசிப்புக்கு செளகரியங்கள் செய்து, வாசிப்போர் கவனத்தைக் கவர்கிற மாதிரி புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து) வெளியிடுங்கள். ஸ்ரீராமிற்கு அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்.

   நீக்கு
 19. & பாகவதர் : " என்ன சார்! நேற்று நான் அயோத்யா மண்டபத்தில் பாடிய கச்சேரிக்கு நீங்க வரவே இல்லையே. ரொம்பக் கஷ்டப்பட்டு, பிரமாதமாகப் பாடினேன்."

  ரசிகர் : " ஓ அப்படியா ! வந்தவர்களும் கஷ்டப்பட்டுக் கேட்டிருப்பாங்க! "

  நிற்க. நான் கச்சேரிகளுக்குச் சென்றால், பாட்டு, பக்கவாத்தியம், தனியாவர்த்தனம் இவைகளோடு பாடகரின் அங்க சேஷ்டைகளையும் இரசிப்பேன். எல்லாவற்றிலும் ரசனையை வளர்த்துக்கொண்டோம் என்றால், அப்புறம் என்ன கவலை! //

  ஆஹா ஆஹா! அப்படியே ஹைஃபைவ் சொல்லிக்கிறேன்!! மீ டூ இந்த லிஸ்ட்தான்...ஹா ஹா ஹா ஹா...

  பல சமயங்களில் பாடல் மற்றும் பக்க வாத்தியங்கள் மட்டுமே மனதில் போகும் மற்றவை பற்றி யோசிக்காமல்...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. செல்லப் பிராணிகள் மன இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு ஹீலர் என்பது எங்கள் வீட்டு மற்றும் சுற்றத்து அனுபவம். மனநிலை மட்டுமல்ல, ஆட்டிசம் வகைக்காரர்களுக்கும். சென்னை ப்ளூக்ராசில் அப்படி டாக்டர் டாக் என்று அனிமல் தெராப்பிக்கு அனுப்பும் செர்வீஸ் என் நினைவு சரியாக இருந்தால் 2002 என்று நினைவு..அப்போது தொடங்கினாங்க. குறிப்பாக நட்சத்திரக் குழந்தைகளுக்கு (ஸ்பெஷல் குழந்தைகளை இப்படி நான் சொல்லுவது வழக்கம்..) நல்லாப் போச்சு. இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 21. கேள்வி பதில்கள் நன்று. பாடகரின் கொனஷ்டைகள்! :))) அதையும் ரசிக்கலாமே!

  மின்னூல் - வாழ்த்துகள் ஸ்ரீராம். உதவி வேண்டுமெனில் கேளுங்கள்! சுலபம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேண்டும், வேண்டும். தொடர்பு கொள்கிறோம். நன்றி.

   நீக்கு
 22. & " 7 of the clock " என்பதைத்தான், apocopic form ல 7 O' clock என்று சொல்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. //

  நல்ல தகவல்.


  சிறிய வயதில் நான், 7 O' clock என்றால், (ஆங்கிலத்தில்) ப்ளேடு என்று அர்த்தம் என்றுதான் நினைத்திருந்தேன். //

  ஹா ஹா ஹா ஹா எங்க வீட்டுல, நல்லா ப்ளேடு போடுறான்-றாப்பா/அறுக்கறான்-றாப்பா என்று சொல்வதை குறிப்பாக எங்களுக்குள் 7 O' clock ஆ....தொடங்கிருச்சா, சரி வேலைய பார்ப்போம்....சரி கிளம்பலாம் என்று சொல்லி சங்கேத பாஷையில் பேசிக் கொள்வோம்..!!! இல்லேனா ப்ளேட் பெயர் மட்டும் சொல்லுவது!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. மின்நிலா வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி! அட காசிப்பயணம் பதிவுகள் மின் புத்தகம் வரப் போகுதா!! வாழ்த்துகள்! ஸ்ரீராம் மற்றும் ஆசிரியர்களுக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் அண்ட் கௌ அண்ணா, இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் பாக்ஸ் இந்தப் புதிய வடிவத்தில் இல்லையே. கொடுத்திடுங்களேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. மின்நிலா நன்றாக வருகிறது. வளர்ந்தும் வருகிறது. புதியனவாக கவிதைகள் எல்லாம் இடம் பெறத் தொடங்கியுள்ளது. அறிமுகங்களும் விளம்பரங்களும். மேலும் வளர்ந்திட வாழ்த்துகள்.

  கர்நாடக சங்கீதம் பரிச்சயமில்லை.

  மிமிக்ரி க்கான & ன் பதில் மிகவும் பொருத்தம். கேரளத்தில் பல நடிகர்கள் மிமிக்ரி ஆர்டிஸ்ட் தான். கலாபவனில் பயிற்சி எடுத்து பல ஷோக்கள் நடத்தி சினிமாவுக்கு வந்தவர்கள். ஜெயராம், கலாபவன் மணி என்று இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 26. வரப்போகும் ஸ்ரீராமின் மின்னூலுக்கு வாழ்த்துகள்.
  400 பக்கத்துக்கு மேல் வருதா? அப்படி என்னதான் எழுதினார் - காசியைத் தாண்டியும் போய்ட்டாரோ..!

  பதிலளிநீக்கு
 27. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  //எங்கள் ப்ளாக் பற்றிய விவரங்களும், அதில் எழுதுகின்ற உங்கள் பெயர்களும், உலகெங்கும் உலா வரட்டும். //

  அருமை.


  மின் நிலாவின் வளர்ச்சி அருமையாக இருக்கிறது.

  ஸ்ரீராமின் மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 28. மின்நிலா வாழ்க.. வளர்க...

  ஸ்ரீராம் அவர்களது காசிப் பயணம் நூலாக வெளியீடு ...

  நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 29. வேறொருவரின் இணைப்பின் வழியே வலைத் தளத்திற்கு வருவதால் விரிவாக கருத்து சொல்ல இயலவில்லை...

  மாதக் கடைசியில் சீராகலாம்...

  இணைய இணைப்பிற்கான ரூட்டர் பழுதாகி விட்டது.. புதிதாக மாற்ற வேண்டும்...

  பார்க்கலாம்..
  கலைவாணர் அவர்களது பாட்டுதான் நினைவுக்கு வருகின்றது...

  பதிலளிநீக்கு
 30. ஸ்ரீராமின் காசிப் பயணத்தை நினைத்தாலே எனக்கு தட்டில் பூரியும் தக்காளித் தொக்குமாக போட்டிருந்த பதிவுதான் நினைவுக்கு வருகிறது. முதல் மின்னூலுக்கு வாழ்த்துகள். படிக்கவும் அது ரசனையாக இருந்தது.

  இதை எழுதும்போது, நாங்க சில மாதங்கள் முன்பு சென்றிருந்தபோது, அலஹாபாத் நதிக்கரை வழியாக (தடம் மாறி) எங்கள் பேருந்து சென்றது. அப்போ கரையில் எரிப்பதற்காக ரெடியாக இருந்தவைகளைப் பார்த்தேன். சிறிது தூரத்தில் எரிந்துகொண்டிருந்தவைகளையும் பார்த்து (காலை 6 மணி) என் செல்ஃபோனைத் தூக்கினேன். மனைவி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று முகம் காண்பித்து, எதைப் படம் பிடிப்பது என்று இல்லையா எனச் சொல்லிவிட்டாள். நல்ல ஆவணப்படம் மிஸ் ஆன எண்ணம் எனக்கு.

  பதிலளிநீக்கு
 31. புத்தகத் தலைப்பு இரண்டாவது காசி யாத்திரை என்று இருக்கலாமோ? ஆனா அவர் யாத்திரையைப் பற்றி நிறைய எழுதியிருக்கமாட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனா அவர் யாத்திரையைப் பற்றி நிறைய எழுதியிருக்கமாட்டார்.//
   இதுதான் என் மனதிலும் தோன்றியது, புத்தகமாக வெளியிடும்போது, இன்னும் கொஞ்சம் விரிவாக்கலாம் ஸ்ரீராமிடம் எழுதச் சொல்லி என நினைக்கிறேன்... ஆனால் இதே பல பக்கங்கள் வருகிறதோ...

   நீக்கு
  2. ஸ்ரீராம் செய்யறதுல அர்த்தம் இருக்கு. காசிக்குப் போனோம், அங்கு காலபைரவர் கோவிலுக்குச் சென்றோம். காலபைரவர் என்பவர்......... என்று பாடல்களோடு 25 வரிகள் எழுதினால் (நான் அப்படித்தான் எழுதுவேன், என் ரெஃபெரன்ஸுக்கு), படிக்கறவங்க நிறையபேர் அந்த பாராவை ஸ்கிப் பண்ணிட்டுப் போயிடுவாங்கன்னு நினைக்கிறேன். (நீங்களும்தான்... ஓ..இது நமக்கில்லை என்று ஹா ஹா)

   நீக்கு
  3. கட்டுரை எனும்போது ஓவர் அலட்டலும் இருக்கப்பிடாது!!.. அதே நேரம் பானு அக்கா மாதிரியும் இருக்கப்பிடாது!!:), இரண்டுக்கும் இடையில இருக்கோணுமாக்கும்.. அதாவது அதிராவைப்போல எனச் சொல்ல வந்தேன் எண்டு ஜொள்ளல்லே நான் ஹா ஹா ஹா:)))

   நீக்கு
  4. // புத்தகமாக வெளியிடும்போது, இன்னும் கொஞ்சம் விரிவாக்கலாம் ஸ்ரீராமிடம் எழுதச் சொல்லி என நினைக்கிறேன் //

   ஏற்கெனவே ஐந்து மடங்கு பக்கம் அதிகம்ங்கறாங்க... இன்னும் வேற எழுதறதா? ஆத்தாடி!

   நீக்கு
  5. // ஸ்ரீராம் செய்யறதுல அர்த்தம் இருக்கு. காசிக்குப் போனோம், அங்கு காலபைரவர் கோவிலுக்குச் சென்றோம். காலபைரவர் என்பவர்......... என்று பாடல்களோடு 25 வரிகள் எழுதினால்.. //

   எனக்கு பக்தி அவ்வளவா வராது!! ("அதுவுமா?" என்று கேட்கப்பிடாது!!)

   நீக்கு
  6. // அதாவது அதிராவைப்போல எனச் சொல்ல வந்தேன் //

   சரி டீச்சர்!

   நீக்கு
  7. ////
   எனக்கு பக்தி அவ்வளவா வராது!! ("அதுவுமா?" என்று கேட்கப்பிடாது!!)///
   வேறு என்னெல்லாம் வராது ஶ்ரீராம்?:) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ

   நீக்கு
  8. பட்டிமன்றம் நல்லா இருக்கு. ரசித்துப் படித்தேன்.

   நீக்கு
 32. புதன் கிழமைகளில். கேள்வி பதில் குறைந்து, மெல்ல மெல்ல வேறு விசயங்கள் இடம்பிடித்துக் கொண்டு வருவது தெரிகிறது.. பழையன கழிதலும் புதியன புகுதலும் நமக்கு ஒன்றும் புதிதல்ல,,,மாற்றம் தான் மனதுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.. அனைத்தும் அழகு இன்று... வாழ்த்துக்கள்.

  வல்லிம்மா, கார்திக் இருவரது முயற்சிகளும் இன்னும் பொலிவுபெற்று முன்னேற வேண்டும் எனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சலின் நிறைய கேள்விகள் கேட்பார், இப்போ பிஸி என்பதால் எங்கு வரமாட்டார் என்பதால், 'பழையன கழிதலும்' என்று சொல்லாதீங்க. அப்புறம் அவங்கள்ட நான் சொல்லவேண்டியிருக்கும்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))...

   ஒருதடவை பொங்கல் காலம் அண்ணன் வீட்டில நிண்டோம், அப்போ அண்ணன் சொன்னார்.. நாளைக்கு என்ன நாள் தெரியுமோ? பழையன கழிதலும் புதியன புகுதலுமான நாள் என்றார்.... நான் கேட்டேன்ன்.. என்ன அண்ணன் நீ பொருட்களைச் சொல்கிறாயோ? இல்ல ஆட்களைச் சொல்கிறாயோ? என்றேன்ன்... அண்ணனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை ஆனாலும் சிரிக்கவில்லை ஏனெனில் அப்பா இருந்து ஒரு முறைப்பாகவும் சிரிப்பாகவும் நோக்கினார் ஹா ஹா ஹா...

   நல்லவேளை எங்கட பிள்ளைகள் இதைச் சொல்ல மாட்டினம் ஏனெனில் அவர்களுக்கு இதெல்லாம் சொல்லத் தெரியாது ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. //எங்கட பிள்ளைகள் இதைச் சொல்ல மாட்டினம் ஏனெனில் அவர்களுக்கு இதெல்லாம் சொல்லத் தெரியாது// - நீங்க சிரித்துக்கொண்டே இதனைக் கடந்து போகறீங்க. ஆனால் எனக்கு மன வருத்தம் உண்டு. எங்க வீட்டிலயும் நான் அதிகமா (எதையும்) தமிழ்லதான் பேசுவேன், சொல்லுவேன். அதைச் சாக்கிட்டாவது பசங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்துகொள்ளட்டுமே என்று.

   பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே

   இதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. அவங்க தமிழ், பள்ளிக்கல்வில படிக்கவில்லை.

   நம்முடைய (தமிழர்) மரபு, நாகரீகம், இலக்கியம், சொல்லாட்சி, மாண்பு - இவையெல்லாம் அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா அந்நியமாகிடுது இல்லையா? அப்போ அடுத்த ஜெனெரேஷனுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விடும். இது சார்ந்து வேறு சப்ஜெக்டும் இருக்கு (குடும்ப பாரம்பர்ய வழக்கங்கள்). அதை எழுதுவதற்கான இடம் இது அல்ல.

   நீக்கு
  4. இன்றைய கால கட்டத்தில நெ தமிழன், எங்களைப்பொறுத்து எங்கள் பிள்ளைகள் தமிழ் கதைக்கத் தெரிஞ்சாலே போதும் என்பதுதான் நம் நிலைமை..

   உங்களுக்குத் தெரியாது, இங்கே நம்மவர்கள் பலரின் பிள்ளைகளுக்கு தாய் மொழியே தெரியாது... இலங்கையில் இருந்து 8 வயதில் இங்கு வந்த பிள்ளை இப்போ டொக்டரும் ஆகிட்டார்.. அவருக்கு தமிழ் தெரியாது.. இலங்கையிலேயே தமிழ் இல்லாமல் தனி ஆங்கிலம் மட்டும் பழக்கி இங்கு கூட்டி வந்தனர்... இத்தனைக்கும் பெற்றோர் இருவரும் டொக்ரேர்ஸ் அதிலயும் இருவருக்கும் 4 மொழிகள் எழுதப் படிக்க பேச தெரியும்.. மகனுக்கு ஆங்கிலத்தை விட்டால் வேறு தெரியாது..

   நான் இங்கு வந்த ஆரம்ப காலம், அபோ தமிழ் ரிவி இல்லை, யூ ரியூப் ஆரம்பிக்கவில்லை, அதனால பொழுது போக்கிற்காக, இங்கு தன்னுடன் வேர்க் பண்ணும் ஒரு ஹிந்தி லேடி டொக்டரை அறிமுகப் படுத்தினார் என் கணவர்.. அப்போ டியூட்டி இல்லாத நேரம், நான் தனியே இருக்கையில் அவ வருவா, நான் புட்டு அவிச்சுக் குடுப்பேனாக்கும் ஹா ஹா ஹா..

   அவர்களுக்கு ஒரு மகன், அவ சொன்னா தன் மகனுக்கு ஆங்கிலம் மட்டும் போதும், ஹிந்தி எதுக்கு, என் கணவர்தான் ஹிந்தியும் வேணும் என ஹிந்தியிலும் பேசுவார் ஆனா நான் பேச மாட்டேன், எனக்கு ஹிந்தி எதுவும் பண்ணவில்லை, ஆங்கிலம்தான் எனக்கு உதவியது என்றா... இப்படியும் மனிதர்கள்..

   நீக்கு
  5. ஆனா, தமிழ் நாட்டில் இருந்துகொண்டு நீங்களே பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது எனச் சொல்வதுதான் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்குது.., ஏனெனில் இங்கு எங்களுக்கு வசதிக் குறைவு, பெற்றோர் தவிர பிள்ளைகளோடு தமிழ் பேச ஆரும் இல்லை, தமிழ்க் ஸ்கூல் இல்லை... அதனாலதான் இப்படி ஆச்சு நிலைமை..

   ஆனால் கனடாவில், கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பிள்ளைகளுக்கும் தமிழ் எழுதப் படிக்க ஓரளவு தெரிகிறது, நன்றாகப் பேசுகின்றனர், ஜோக்கூடப் புரிகிறது, தமிழ்ப்படம், நாடகங்கள் பார்க்கின்றனர்.

   எங்கட அன்ரியின் மகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவ, அவவுக்கு என்னைவிடத் திருக்குறள் தெரியும் ஹா ஹா ஹா... அங்கு தமிழ்க் ஸ்கூல் உண்டு..

   வட்சப்பில் தமிழ் மெசேஜ் அனுப்பினால் தமிழில் பதில் அனுப்புவா.. அவவின் புரொபைல் பிக்சருக்கு நான் யூ ரியூப்பில் ஆஹா மெல்ல நட.. மெல்ல நட பாடல் லிங் அனுப்பினேன்.. பின்பு என் ஒரு பு.பிக்ஸருக்கு... அவ யூ ரியூபில் லிங் அனுப்பினா நான் அபூடியே ஷொக்ட்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன்... அழகே நீ பிறந்தது.. அந்தப்பாடல்.. அந்தளவுக்கு தமிழ் தெரியும்... ஹா ஹா ஹா.

   இப்படிப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதெனில் அது பெற்றோரின் தப்புத்தான் என அடிச்சுச் சொல்லுவேன் தேம்ஸ்ல:)) ஹா ஹா ஹா..

   செனையைச் சேர்ந்த ஒரு அக்கா, பெருமையாக சொன்னா தன் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என.. ஆனா அதே அக்கா பின்பு சொல்கிறா, சென்னையில பிள்ளைகள் வெளிநாட்டு ஸ்டைலில் உடுப்போடு உலாவுகின்றனர் என திட்டினா.. அப்போ வெளிநாட்டு மொழி தெரியும் எனச் சொல்வதில் பெருமையாம், ஆனா வெளிநாட்டு உடை போடக்கூடாதாம்ம்.. எனக்கு தேவை நீதி நியாயம் நேர்மை எருமை.. கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

   இது ஒரு போஸ்ட்டாகவெ போட்டலாம் போல:)) நேரம் இல்லை ஓடிடுறேன்ன்..

   நீக்கு
  6. //தமிழ் நாட்டில் இருந்துகொண்டு நீங்களே// - பசங்க பதின்ம வயது வரை வெளிநாட்டுலதான் இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிப்பாங்க (வேகமா படிக்கமாட்டாங்க). எழுதவும் தெரியும். ஆனா அது மட்டும் தமிழ் இல்லையே. நம் இலக்கியம் இன்னும் மரபு என்று நிறைய இருக்கு இல்லையா?

   ஆனா நீங்க சொல்ற மாதிரி, தமிழகத்துல தமிழே தெரியாம கல்லூரி வரை படிக்கறவங்களும் நிறைய.

   நீக்கு
  7. ஆஆஆ என் எழுத்தில் பொருட்பிழைபோலும்:) நெ தமிழன்..... இதில் வரும் /////நீங்களே/// என்பது உங்களை மட்டும் இல்லை.... பெரும்பாலான தமிழ் நாட்டினரைச் சொன்னேன்...
   இன்னொன்று நாம் என்னதான் தலை கீழாக நின்றாலும் பிள்ளைகளும் விரும்பினால்தான் படிக்கலாம்...
   எங்கட வீட்டில தமிழ் எழுதப் படிக்க கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தேன் ஆனா மறந்துவிட்டார்கள்:).... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  8. // கேள்வி பதில் குறைந்து, மெல்ல மெல்ல வேறு விசயங்கள் இடம்பிடித்துக் கொண்டு வருவது தெரிகிறது..// யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால், நாங்க என்ன செய்வது!

   நீக்கு
 33. பானுமதி அக்காவின் முதல் கேள்வியை நான் மாத்தி யோசிச்சுப் பார்க்கிறேன்..

  அதாவது, அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக செல்லப்பிராணி வளர்க்கிறார்கள் என்பதை விட, அசைவம் சாப்பிடுபவர்களோடு, அதிகம் செல்லப் பிராணிகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன என எடுத்துக் கொள்ளலாமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அசைவம் சாப்பிடுபவர்களோடு, அதிகம் செல்லப் பிராணிகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன// - நானும் மாத்தி யோசித்துப்பார்க்கிறேன். இதே 'அசைவம் சாப்பிடும்' ஆட்கள், காட்டில் வசித்தால், அவங்களோட இந்த செல்லப் பிராணிகள் ஒட்டிக்கொள்ளுமா இல்லை புலி/சிறுத்தை வந்து ஒட்டிக்கொள்ளுமா?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நான் இனமும் கொஞ்சம் மேலே.. மேலே போய் மாத்தி ஓசிச்சேன்.... அதாவது அசைவம் சாப்பிடுவோரோடு புலி ஜிங்கம்:) எலலம் ஓடி வந்து ஃபிரெண்ட்டாகிடும் ஆனா ஆனா ஆனா சைவம் சாப்பிடுவோர் காட்டுக்குள் போனால்ல் என்ன ஆகும்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:))

   நீக்கு
 34. //அதை எப்படி உலகளாவிய அளவில் வலை ஏற்றுவது / என்ன விலை நிர்ணயம் செய்வது என்பது பற்றி எங்களுக்கு, தற்போதைக்கு விவரங்கள் தெரியவில்லை//

  ஆஆஆஆஆஆஅ எங்களுக்கு ஆடித்தள்ளுபடி போல ஏதும் இதில கிடைக்குமோ கெள அண்ணன்?:) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆடித்தள்ளுபடி போல// - ஆடினால், தள்ளுபடி கிடைக்கும் என்று கேஜிஜி சார் சொல்வாரோ?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா வட்சப்பில அனுப்புங்கோ ஆடி.. எனச் சொன்னாலும் சொல்லிடப்போறார் ஹையோ ஹையோ

   நீக்கு
  3. 'தேம்ஸில் தள்ளு' படி உண்டு!

   நீக்கு
 35. லாக் டௌனில் வெளியே போகவேண்டாம் என்கிறார்கள் இந்த் நிலையில் செல்லப்பிராணி களை வாக் கூட்டிப்போவ்து சிரம்ம் இல்லையா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!