வியாழன், 25 ஜூன், 2020

ஒரு கிடார் தேய்ந்து புல்லாங்குழல் ஆகிறது..

ஆ...   கிடாரா?  எப்படி?

பிரபு கிறிஸ்துவப் பையன் என்பது அப்போது தெரிந்தது.  வாரா வாரம் சர்ச் கொயரில் இவன் இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பதோடு, அவற்றை எல்லாம் மெயின்டெயின் செய்வதும் அவன்தான் என்பதும் தெரிந்தது.

கிடாரை அவன் வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டு அதில் எதையோ அவன் வாசித்தது எந்த விதமான ஸ்டைலையும் காட்டவில்லை.  அவனும் பாலாவும் பேசிக்கொண்டே இருக்க, நான் மௌனமானேன்.  



பிராக்டிஸ் செய்வது போல வாசித்து முடித்து என்னைப் பார்த்து பிரபு எனக்காக அப்போது பிரபலமாயிருந்த ஏதோ ஒரு பாடலை இசைத்துக் காட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்.

என்னையும் அறியாமல் பாலாவிடம் கேட்டேன்.  "நீயும் வாராவாரம் கோவில்ல ஏதாவது வாசிப்பியா?"  பாலா மறுபடியும் சிரித்து,  "எனக்குத் தெரியாது..   நான் இவன் கூட அவங்க கோவிலுக்குப் போவேன்..  அவ்வளவுதான்" என்றான்   என் மறைமுகக்கேள்விக்கான பதிலை மறைமுகமாகவே கொடுத்தான்.

அவர்கள் இருவரும் அருமையான நண்பர்கள்.  அவர்களுக்குள்ளும் சரி, என்னுடன் பழகிய வகையிலும் சரி.



பிரபு கிடார் மட்டுமல்லாது அகார்டினும் வாசிப்பான் என்று பாலா சொன்னான்.  நான் அப்போது அகார்டினை அறிந்ததில்லை.  பியானோ போல இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.  அப்புறம் அதையும் அவன் காட்டியபோது பிரபுவின் மேல் எனக்கு மதிப்பு உயர்ந்தது.

கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை பிரபு விரும்பினான்.  அந்தப் பெண் கொயரில் பாடுபவளும் கூட.   அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் தன் காதலைப் பற்றி அவ்வப்போது என்னிடமும் அடிக்கடி பாலாவிடமும் பேசுவான்.



அவன் விரும்பும் பெண் என் தங்கையின் தோழிக்குப் பக்கத்து வீட்டுப்பெண் என்பது பின்னர் தெரிந்தது.  ஆனாலும் கூட அவன் எந்த வகையிலும் என் உதவியை நாடவில்லை.  ஒருமுறை என் தங்கை அந்தப் பெண் பற்றிக் கேட்டபோது வெட்கத்துடன் சிரித்தான்.  "அவங்களுக்கு என் அன்பு தெரியல சிஸ்டர்..." என்பான். "இதெல்லாம் ஏன் தோஸ்த்து அவங்க கிட்ட சொல்றீங்க...  என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க" என்றான் என்னிடம்.

பிரபுவின் வீட்டில் அந்தக் கிடாரை நான் கையாள நினைத்தபோதுதான் அதற்கு எவ்வளவு பயிற்சி தேவை என்பது புரிந்தது.  சில நாட்களுக்குப் பின் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  ஒரே ஒரு ஆசை.  ஒருநாள் கேமிராவோடு வந்து அந்தக் கிடாரைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும்!

அதைக்கூட பிரபுவிடம் சொல்லி இருந்தால் அவனிடமே கேமிரா கூட இருந்திருக்கக் கூடும்.  அவன் திறமைக்கு முன்னே என் இந்த பொய்யான புகைப்பட ஆசையைச் சொல்ல தயக்கம் வந்திருக்கவேண்டும் எனக்கு!

அவனோடு ஓரிருமுறை சர்ச்சுக்குச் சென்றிருக்கிறேன்.  ஆனால் அவன் வாசித்ததைப் பார்த்ததில்லை.  சாதாரண சமயங்களில் சென்று வந்திருக்கிறேன்.  

அவனால் எனக்கு ஒரு உதவி நடந்தது.  மிகவும் ஆச்சரியகரமான உதவி.  

என் தங்கை ப்ளஸ் டூவில் சேர விண்ணப்பித்திருந்த பள்ளி மிகவும் பிரபலமான பள்ளி.  அங்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம்.  என் அப்பா ஒருமுறை முயற்சித்து விட்டு கைவிட்டு விட்டார்.  அவரின் உயர் அதிகாரியே தினமும் அந்தப் பள்ளிக்கு, தன் மகளுக்கு அட்மிஷன் வேண்டி அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதை எங்களிடமும் சொல்லி, வேறு பள்ளி முயற்சிக்கலாம் என்றார்.

அவர்கள் எங்களால் கொடுக்க முடியாத அளவு டொனேஷன் கேட்டார்களா நினைவில்லை.  யதேச்சையாக பிரபுவிடம் இதுபற்றிச் சொன்னபோது, "பூ...   அந்த ஸ்கூல்ல தங்கிச்சிக்கு அட்மிஷன் வேணுமா?  முன்னாடியே சொல்ல மாட்டியா தோஸ்த்து..." என்றான்.

எப்படி என்று கேட்டதும் சில நடைமுறைகளை சொன்னான். அவன் தந்தைக்கு அந்தப் பள்ளியில் இருக்கும் சொ(செ)ல்வாக்கு பற்றிச் சொன்னான்.  இதை என் வீட்டிலும் சொல்லி, தங்கைக்கு அட்மிஷன் வாங்கித்தர நானாயிற்று என்றேன்.  அப்பா கேலியாகப் புன்னகைத்தார்.

ஒருநாள் அவன் சொன்னபடி தங்கையை அழைத்துக்கொண்டு நான் பள்ளி செல்ல,. இவன் பெரிய மனுஷன் மாதிரி, எங்களை அங்குக் காத்திருக்கச் சொல்லிவிட்டு முதல்வர் அறைக்குள் சென்று வந்தான்.  வெளியே வந்தவன் வேறு வேலையாகக் கிளம்பி விட்டான்.  "அவர்கள் கூப்பிடும்போது உள்ளே போய்ப்பார்...  என்ன சொன்னாலும் சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் போயிடுங்க" என்று சொல்லி விட்டுப் போனான்.

அதே போல என் தங்கையை மட்டும் உள்ளே நேர்முகத்தேர்வுக்கு அழைத்துப் பேசினார் முதல்வரும் இன்னொருவரும்.  வெளியே என் அப்பா சொன்ன அந்த அவரின் உயர் அதிகாரி சாதாரண மனிதராய் மரத்தடியில் தரையில் அமர்ந்திருந்தார்.  எனக்கும் அவரைத்தெரியும், அவருக்கும் என்னைத்தெரியும் என்பதால் சும்மா பேசிக்கொண்டிருந்தோம்.  நான் வந்திருக்கும் காரணம் அறிந்து சற்றே வியப்படைந்தது மாதிரித் தெரிந்தது.

நேர்முகப்பேச்சில் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை என்றும், இவள் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் திருப்தி அடைந்தாலும், இவள் கேட்ட பிரிவு தர முடியாது என்றும் வேறு பிரிவு தருவதாகவும் சொன்னதாக தங்கை சொன்னாள்.

நாங்கள் வீட்டுக்கு வந்து கொஞ்ச நாட்கள் ஆகியும் முடிவு எதுவும் தெரியவில்லை.  அப்பா முணுமுணுத்தார், திட்டினார்.  'இவன்லாம் ஒரு பெரிய மனுஷன், இவனுக்கு ஒரு பிரெண்டு...  அவன் சொல்லி அட்மிஷன் கிடைக்குமாம்...' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

நானும் பிரபுவிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன்.  அவன் பொறுமையாய் இருக்கச் சொன்னான்.  பிறகு ஒருநாள் பாலா வந்து என்னை அழைத்துப்போனான்.  பள்ளியில் பிரபு காத்திருந்தான்.  அப்போதுதான் அவன் தந்தை வந்து செல்வதாகச் சொல்லி அங்கு சென்று கொண்டிருந்த மனிதரைக் காட்டினான்.  இத்தனை நாட்கள் அவன் வீட்டுக்குச் சென்றிருந்தும் நான் அவன் அப்பாவைப் பார்த்ததில்லை.  இப்போதும் அவர் முதுகை மட்டுமே பார்க்க முடிந்தது.

பள்ளியில் அலுவலகத்தில் அழைத்து, அட்மிஷன் சீட்டையும் தேவைப்பட்டியல் விவரங்களையும் கையில் கொடுத்து மறுநாள் தங்கையை வகுப்புக்கு வரச் சொன்னார்கள்.  கட்டணம் ஒரு வாரத்துக்குள் கட்டிக்கொள்ளலாம் என்றார்கள். 

நோ டொனேஷன்!   என் தங்கை விரும்பிய பிரிவே கொடுக்கப் பட்டிருந்தது!  என் மனதில் பிரபுவின் மதிப்பு உயர்ந்தது.  எங்கள் வீட்டிலும் ஆச்சர்யம்.

திரும்ப வரும்போது இன்னமும் மரத்தடியில் அந்த உயர் அதிகாரி ஒரு பேப்பர் துண்டை வாயில் கடித்தபடி காத்திருந்தார்!  பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர் பெண்ணுக்கும் அங்கு அட்மிஷன் கிடைத்து விட்டது வேறு விஷயம்!

வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இந்த நண்பர்களுடனான தொடர்பு மெல்ல மெல்ல தூரம் அதிகமாகி, அப்புறம் நானும் வெளியூர் வந்து விட்டேன்.

ஆமாம், கிடார் என்று ஆரம்பித்து கதை எங்கோ செல்கிறதே...  கிடார் என்று ஆரம்பித்தாலும் என் இரு நண்பர்களை நினைவுகூரும் வகையில் அமைந்து விட்டது இந்த மினி தொடர்!  கிடார்?    அந்த ஆசை நிறைவேறவே இல்லைங்க...  அதற்குப் பதிலாக புல்லாங்குழல் வாசிப்பது போல பின்னாட்களில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.  எனக்கு புல்லாங்குழலும் வாசிக்கத்தெரியாது!

======================================================================================


கொஞ்ச காலத்துக்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்தது...!  முதல் பகுதி எங்கே என்று தெரியவில்லை!!


புதுமொழிகள் 2

கந்தலானால் கசக்கி எறி.  கூழானால் போஸ்டர் ஒட்டு..

முற்பகல் போனால் பிற்பகலிலும் வராது. (கரண்ட்).

கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க அதற்குத் தக..

எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே....

திரைகடலோடியும் திரைப்படம் பாரு....

ஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்...

அரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்..

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.

===============================================================================================

இந்தப் பழைய கேள்விகளுக்கு விடை தெரியுமா?  ஜீவி ஸாரோ, கோமதி அக்காவோ சொல்லக்கூடும்.  வல்லிம்மா கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது.  இதற்கான விடையை மாலையோ, இரவோ இதன் கீழேயே வெளியிடுகிறேன்!


இதோ விடைகள்....!


இவர் ஆசையும், அவர் கடுப்பும்!


இவர் யார் என்று தெரிகிறதா?  கோமதி அக்கா சட்டென சொல்லி விடக்கூடும்.

156 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். அன்பு தநுரைக்கும் வரப்போகும் அனைவருக்கும் வியாழன் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. படத்தில் இருப்பவர் அடிகளாளாரா?

    பதிலளிநீக்கு
  3. கிடாரும், நட்புகளும் பிரமாதம் மா. அந்த பிரபு நன்றாக இருக்கணும். சத்தம் இல்லாமல் என்ன ஒரு அழகான காரியத்தை செய்திருக்கிறார்.
    இது நடந்தது மதுரையிலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நட்பை ஆரம்பத்தில் நான் சந்தேகத்துடனேயே அணுகினேன்!  

      நீக்கு
  4. சென்னையும் சுற்று வட்டாரங்களும், தென்னிந்தியாவும், முழு இந்தியாவும் தொற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். இறை அருள் மிக வேண்டும்.
    வல்லமை பொருந்திய பிரார்த்தனைகள் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  5. ஆசையும் கடுப்பும் ஆஹாஹா.பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ பெரியசாமி தூரன் வாண்டு மாமாவா. இல்லை ரேடியோ அண்ணாவா.மற்ற இதழ்களைப் பற்றி துரதிஷ்ட வசமாகத் தெரியவில்லை.
    ஆனால் அவர்களைப் பற்றி தெரியும்.

    பதிலளிநீக்கு
  7. எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே....

    திரைகடலோடியும் திரைப்படம் பாரு....

    ஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்...

    அரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்..

    அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.///பிரமாதமான வரிகள். எப்படித்தான் யோசித்தீர்களோ.
    அதுவும் ஆண்டிராய்ட் சூப்பர்.
    என் ஆண்டிராய்ட் நன்றாக வேலை செய்கிறதே.

    பதிலளிநீக்கு
  8. நானும் பிரபுவிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவன் பொறுமையாய் இருக்கச் சொன்னான். பிறகு ஒருநாள் பாலா வந்து என்னை அழைத்துப்போனான். பள்ளியில் பிரபு காத்திருந்தான். அப்போதுதான் அவன் தந்தை வந்து செல்வதாகச் சொல்லி அங்கு சென்று கொண்டிருந்த மனிதரைக் காட்டினான். இத்தனை நாட்கள் அவன் வீட்டுக்குச் சென்றிருந்தும் நான் அவன் அப்பாவைப் பார்த்ததில்லை. இப்போதும் அவர் முதுகை மட்டுமே பார்க்க முடிந்தது./////உன்னதமான மனிதர். அழகன் படத்தில் வரும் முகம் காட்டாத
    அம்மா நினைவு வந்தது...வாழ்வில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் எண்ணெய் பார்த்ததில்லை!  பலமுறை  அவர் இல்லம் சென்றிருந்தும்!

      நீக்கு
    2. //அவரும் எண்ணெய் பார்த்ததில்லை! //என்னைப் பார்த்ததில்லை!!!

      நீக்கு
    3. உங்க தங்கைக்கு/அக்கா? நல்ல பள்ளியில் இடம் வாங்கிக் கொடுத்த (அதுவும் அவங்க கேட்ட பாடத்திட்டத்திலேயே) உங்க நண்பர் உண்மையிலேயே திறமைசாலிதான்.

      நீக்கு
  9. புல்லாங்குழலோட இருக்கிற படத்தைப் பத்த்ரமாக
    வைத்துக் கொள்ளவும். இப்பவும் ஒண்ணும் மோசமில்லை.
    கிடார் கற்றுக் கொள்ளலாம்.ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...  பத்திரமா இருக்கு அம்மா...   பார்க்கும்போதே வெறும் போஸ்தான் கொடுக்கிறேன்னு தெரியும்!   கிடார் இனிமேலா?   பொறுமை இல்லைம்மா!

      நீக்கு
  10. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்என்ப வாழும் உயிர்க்கு
    (அதிகாரம்:கல்வி குறள் எண்:392)

    பொழிப்பு (மு வரதராசன்): எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் குரல் காணோம்!  பதில் குரல்!  நன்றி!

      நீக்கு
    2. பொழிப்பு என்பது வேறு அர்த்தம் கொடுக்கிற வார்த்தை. செய்யுளின் சீர்கள் சம்பந்தப்பட்டது. பொழிப்புரை என்பதே சரி. அதற்கான அர்த்தம் கொண்டது என்று அர்த்தமாகும்.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் பிரச்னைகளில் இருந்து அனைவரும்/உலகே மீளவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா...    வணக்கம்.

      நீக்கு



  12. பெரியசாமி தூரன் ஆசிரியராக இருந்த பத்திரிகை= பித்தன், காலச்சக்கரம் நாற்பதுகளில் வந்தது.

    முருகு சுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த பத்திரிகை/ பின்னர் கா.அப்பாதுரை= பொன்னி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ பாவம் இந்த கீசா மேடம். அப்பாவியா இருக்கறதுனால மாட்டிக்கிட்டாங்க.

      இந்தக் கேள்விகள் ஶ்ரீராம் இன்றைக்கு வெளியிட்டது, எபி படிக்கறவங்கள்ல, யார் யாருக்கு 75 வயசுக்கு மேல ஆயிடுச்சு என்பதைக் கண்டுபிடிக்கத்தான். ஹா ஹா ஹா (உனக்கு ஏன் வேண்டாத வேலை..காலையிலேயே கீசா மேடத்தின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஐச் சம்பாதிக்கணுமா? என் மனசாட்சி கேட்குது)

      நீக்கு
    2. கீதா அக்கா...  விடைகள் விரைவில்!   நெல்லை சொல்வதை கண்டுக்காதீங்க....   நீங்க வரலாறு படிக்கிற குழந்தைன்னு தெரியும்!

      நீக்கு
    3. @ஸ்ரீராம், அதானே! காலம்பரப் பாதியில் வேலை வந்துவிட்டது. இந்த வார ஆரம்ப்த்தில் இருந்தே வேலை நெட்டி வாங்குது. இப்போவும் உட்கார முடியாமல்! :( இப்போப் போயிடுவேன். பூத்தொடுத்ததில் கண்கள் தொந்திரவு! ஒரே ஈக்களாகத் தெரிகின்றன. :(

      நீக்கு
    4. நெல்லை சும்மா இப்படி சொல்லி நீங்க 25 வயசுன்னு சொல்லிக்கலாம்னு பார்த்தீங்களா!!!! ஆசை தோசை !!

      கீதா

      நீக்கு
    5. கீதா அக்கா.. சென்னையில் பூ வாங்குவதே பெரிய சாதனையாக இருக்கிறது இப்போது. அவ்வப்போது தொடுத்த மல்லி கிடைக்கும். முழம் முப்பது ரூபாய்! பழைய பாடல் நினைவு வருகிறது... " முப்பது மைசா... மூணு முழம்..."

      நீக்கு
    6. கீதா ரெங்கன்..

      அதானே.. அவருக்கு 26 வயசு என்று நமக்குதான் தெரியுமே.... !! ஹா... ஹா.. ஹா...

      நீக்கு
    7. @ஸ்ரீராம், சென்னையிலும் அம்பத்தூரில் உதிரிப்பூக்கள் தான். வாங்குவதும் உண்டு. வீட்டில் பறிப்பதும் உண்டு. வீட்டில் பறித்தவை நம்ம சர்வாதிகாரி (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அனுமதியோடு தான் பறிச்சுத் தொடுக்கணும். அந்த வம்பே வைச்சுக்காமல் வாசல்லே வாங்கிடுவேன். அங்கெல்லாம் ஆழாக்கு என்று சின்னத் தம்பளரில் பூ அளந்து தருவாங்க. கூடவே நாரும்/பின்னாட்களில் நூல் இலவசம். இங்கே பூக்கடையில் தான் போய்ப் பூ வாங்கணும். கதம்பம் கூட இங்கே வந்ததில் இருந்து வீட்டில் தொடுப்பது தான். இப்போத் தான் உட்காரமுடியலைனு அதிகம் வாங்கறதில்லை. விசேஷ நாட்களில் மட்டும். கால் கிலோ உதிரி மல்லி 20 ரூ விற்றது இப்போ 50 ரூ விற்கிறதாம்! 20 ரூக்கு உள்ள பூத் தான் எப்போவுமே. அதிர்ஷ்டம் அடிச்சால் கால் கிலோ கிடைக்கும். இல்லைனா நூறு, நூற்றைம்பது! அதென்னமோ பூத்தொடுத்ததும் கொஞ்ச நேரம் கணினியைப் பார்க்க முடியறதில்லை. கண்ணெதிரே கறுப்புப் புள்ளிகளாய்த் தெரியும். கணினியின் எழுத்துகள் கரைந்து போய்த் தெரியும். ஒரு மணி நேரமாவது கண்களுக்கு வேறு வேலை கொடுக்காமல் இருந்தால் சரியாகிறது.

      நீக்கு
    8. இப்போத் திடீர்னு கணினி ஒரே கறுப்பாகி விடக் கொஞ்சம் பயந்துட்டேன். கண்ணின் பிரச்னையோனு. அப்புறமாப் பார்த்தால் சார்ஜ் முழுதும் தீர்ந்திருக்கிறது. இப்போ மறுபடி வந்ததும் தான் மனசுக்கு நிம்மதி ஆச்சு.

      பி.கு. இது பழைய மடிக்கணினி! எனக்கு இதன் மேல் உள்ள பற்றினால் விடாமல் வைத்திருக்கிறேன்.

      நீக்கு
    9. கீதா அக்கா...   இப்போதைய நெருக்கடி நிலையினால்தான் (இன்றைய தினத்தின் முக்கியத்துவம்!!) பூ இந்த விலை.   முன்னர் சாதாரணமாகத்தான் கிடைத்து வந்தது.  கணினியை அவ்வப்போது சார்ஜில் போடுகிறீர்கள்தானே?

      நீக்கு
    10. நான் சென்னையில் இருந்தவரை மல்லிப்பூ முழம் 20 ரூபாய்க்குக் குறைந்து வாங்கியதில்லை. இங்க இப்போவரை பத்து ரூபாய்தான்.

      ஒருசில நாட்களுக்கு முன்பு, கண்டிப்பாக வெளியில் சுற்றாதீர்கள், பரவல் மிக அதிகமாக இருக்கிறது என்று சொல்லியுள்ளதால் வெளியில் அடுத்த இரு வாரங்களுக்குச் செல்லாமல் இருக்க முயற்சிக்கணும்.

      நீக்கு
    11. அப்போ பாருங்க...   அங்கேயும் பூ விலை ஏறிவிடும்!

      நீக்கு
  13. அடிகளார் நடத்திய பல பட்டிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன். புது மொழிகள் தற்காலத்துக்கு ஏற்ப இருக்கின்றன. கிடார் கற்றுக் கொள்ள முடியாமல் போனது துரதிருஷ்டமே! ஆனாலும் வாய்ப்புக் கிடைத்தால் மட்டும் போதாது. ஆதரவுகளும் வேண்டும். புல்லாங்குழலோடு நான் நவராத்திரிக்குக் கிருஷ்ணன் வேடத்தில் போயிருக்கேன். ஆனால் புகைப்படம் எல்லாம் எடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லாங்குழலோடு நான் புகைப்படம் எடுத்திருக்கேன்!  ஆனால் கிருஷ்ணன் வேஷம் எல்லாம் போட்டதில்லை!!!!

      நீக்கு
    2. அது என்ன அடிகளார் என்று பொத்தாம் போக்கில்?.. குன்றக்குடி அடிகளார் என்று சொலவது தானே?..

      நீக்கு
    3. அடிகளார் என்றாலே அப்போல்லாம் அவர்தான்!

      நீக்கு
    4. அப்போ சரி. இப்போன்னா ஏகப்பட்ட அடிகளார் இருக்கிறார்களே!

      கலைஞர் ஒருவர் தான் பெயர் சொல்லாமலே எக்காலத்தும் தெரிந்து கொள்ளக்கூடியவர்.

      நீக்கு
    5. கீதாக்கா, குன்றக்குடி அடிகளார்?

      அப்போது அடிகளார் என்றால் குன்றக்குடி மட்டும்தான் எனக்கு நினைவு வரும்

      இப்போது பங்காரு அடிகளார் என்றெல்லாம் இருக்காங்களே. ஆனால் இவர் பங்காரு அடிகளார் இல்லை.

      கீதா

      நீக்கு
    6. மேலே ரேவதி கூட "அடிகளார்"னு தான் சொல்லி இருக்காங்க. அப்போது அந்தக் கால கட்டங்களில் அடிகளார் என்றால் குன்றக்குடி அடிகளார்தான். இப்போது இருப்பவர் இவ்வளவு பிரபலம் இல்லை. காரைக்குடி கம்பன் கழகப் பட்டிமன்றங்கள் அந்நாட்களில் சென்னை வானொலியில் போடுவார்கள். இதுக்கு எனத் தாத்தா வீட்டுக்கோ (மதுரை சுப்ரமணியபுரம், பின்னர் ஜெய்ஹிந்த்புரம்) இல்லைனா எதிரேயே இருக்கும் பெரியப்பா வீட்டுக்கோ போயிடுவேன்.பெரியப்பா வீட்டை விடத் தாத்தா வீடு சௌகரியம். அங்கே எல்லோருமே தமிழ்ப் பித்தர்கள்! என்னோட ஒரு மாமா எங்களோடு விளையாட்டாகச் செந்தமிழிலேயே பேசுவார்.

      நீக்கு
    7. //அடிகளார் என்றாலே அப்போல்லாம் அவர்தான்!.. //

      அப்படி நான் நினைக்கவில்லை. அந்நாட்களில் சைவ சமய மடத்து அடிகளார்கள் வேறு பலரும் பெயர் பெற்றிருந்தனர். சைவ ஆதீனங்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டுகள் மறக்க முடியாதவை. இதெல்லாம் பற்றி விரிவாகத் தனிக்கட்டுரை தான் எழுத வேண்டும்.

      நீக்கு
    8. பட்டிமன்றங்களில் அவர் ஜொலித்ததால், அடிகளார் என்றாலே குன்றக்குடி அடிகளார்தான். மடம், மக்கள் நல்வாழ்வுக்கும் நிறைய பாடுபட்டது என்று சொல்லும்படி குன்றக்குடி சுற்றி கிராமங்களில் அவரது பணி இருந்தது.

      நான் சிறுவயதில் கேட்ட பட்டிமன்றங்கள் பேராசிரியர் சரஸ்வதி ராமனாதன் அவர்களுடையவை (அப்போ நகரத்தார் வாழ்ந்த பகுதிகளில் வசித்தேன்)

      நீக்கு
    9. அதிகம் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டவரும் (குன்றக்குடி) அடிகளார் தான். அதனாலும் அடிகளார் என்றாலே அவர்தான் என்னும்படி அறியப்பட்டவர்.

      நீக்கு
  14. சித்தார்த்தன் ஆசிரியராக இருந்த பத்திரிகை= எனக்குத் தெரிந்து திருலோக சீதாராம் தான் "சித்தார்த்தன்" என்னும் புனைப்பெயரில் ஓர் ஜெர்மன் நாவலை மொழி பெயர்த்திருக்கிறார்.
    பேராசிரியர் அ.சீனிவாசராகவன் ஆசிரியராக இருந்த பத்திரிகை= சிந்தனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த பாராட்டுகள் கீதாமா.
      மீண்டும் உங்கள் விசாலமான ,ஆழ்ந்த அறிவை
      தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

      நீக்கு
    2. இம்புட்டு விவரம் எனக்குத் தெரியாது!  இது பொக்கிஷத்துக்காக போட்டோ, காபி, பேஸ்ட்!  தட்ஸ் ஆல்!

      நீக்கு
    3. //தட்ஸ் ஆல்..//

      அட! அவ்வளவு தானா?..

      அவர்களுக்குப் பதில்--

      நாலைஞ்சு பழைய சினிமா நடிகைகளின் பெயர்களைப் போட்டு அவங்க நடிச்ச படம் என்ன கேட்டிருக்காமிலே?..

      நீக்கு
    4. செய்துடலாம் ஜீவி ஸார்.. அது ஈஸி!

      நீக்கு
    5. பேராசிரியர் அ.சீனிவாசராகவன் எனக்குப் பிடித்த இலக்கியவாதி. முன்னால் சொல்லி இருக்கும் காரைக்குடிக் கம்பன் விழாவில் நீதிபதி மஹாராஜன், இவர் இல்லாமல் விழா இருக்காது. அதோடு இவருடைய சிந்தனை பத்திரிகையிலும் ராஜாஜி உட்படப் பலர் எழுதி வந்திருக்கின்றனர். இவருடைய திருப்பாவை,விளக்கங்களை அந்த நாட்களில் மார்கழி மாதக் காலைவேளையில் சென்னை வானொலி ஒலிபரப்பக் கேட்டிருக்கேன். (ஓசியில் தான், எங்க வீட்டு வானொலி இல்லை) அப்போல்லாம் தமிழ்ப் பித்துப் பிடித்து அலைந்து கொண்டிருந்த நாட்கள். இந்தச் சிந்தனை பத்திரிகை, கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, கண்ணன் எல்லாம் கூடவே குடி இருந்த திருநெல்வேலிக்காரக் கடையத்து மாமா கிருஷ்ணையர் வாங்குவார். தவம் கிடந்து அவற்றை எல்லாம் படிப்பேன். அவர் கொடுக்கும்வரை அவங்க போர்ஷனில் இருந்து எங்க போர்ஷனுக்குப் போக மாட்டேன்.

      நீக்கு
    6. மற்றவர் பற்றி திரு ஜீவி சொல்லி இருக்கிறார். வாசவன் குறித்து அதிகம் தெரியலை. கடைசிக் கேள்விக்கும் பதில் தெரியலை. விந்தனைக் குறித்து நான்கைந்து நாட்கள் முன்னர் கூட நிறையப் பேசினோம். அதிலேயே விடையும் உள்ளது.

      நீக்கு
    7. ஜீவி சார்.... நடிகைகள்னா இன்னும் அதிக பங்களிப்பு இருந்திருக்கும், சில கிசுகிசுக்களோடு. அவை இன்னும் ஜனரஞ்சகமானவை அல்லவா?

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிரார்த்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்கா...  வாங்க...  வணக்கம்.

      நீக்கு
  16. நண்பனின் உதவி ஆச்சர்யம்தான். நமக்குள்ள பிரச்சனையை நமக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டால் யாராவது உதவும் வாய்ப்பு உண்டு. எனக்கும் இந்த மாதிரி உதவிகள் கிட்டியிருக்கின்றன.

    கிடாருடன் படம் - ஹா ஹா... என் நண்பனுடன் ஏவிஎம் ஸ்டூடியோ சென்றிருந்தேன். அவங்க அம்மா கிறிஸ்துவ பக்திப் பாடல்கள் ரெகார்ட் பண்ணினார்கள். என் ஆசைக்கு பாடகர் பாடும் அறையில் நான் பாடுவதுபோல படம் எடுத்துக்கொண்டேன். அந்த மைக்கை எவ்வளவு பிரபலஸ்தர்கள் உபயோகப்படுத்தி இருந்தார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக இருந்திருந்தால், அந்த வயதில் அப்படி ஒரு உதவி செய்திருப்பேனா என்று தெரியாது.  எதற்கு வம்பு என்று விட்டிருப்பேன்.  பிரபுவிடமிருந்து அன்பு உட்பட சில பழகும் நேர்த்திகள் நான் கற்றுக்கொண்டேன்!

      மைக்குடன் உங்கள் புகைப்படம் மின்நிலாவுக்கு அனுப்புங்களேன்...

      நீக்கு
    2. எங்கே! அவர்தான் முகத்தைக் காட்ட பயப்படுபவர் ஆயிற்றே! படமாவது, அவராவது, அனுப்புவதாவது!

      நீக்கு
    3. கௌ அண்ணே நெல்லைய அப்பூடிச் சொல்லிடாதீங்க. அப்புறம் அவர் ஸ்ரீராம் முதலில் ஃபோட்டோ போடச்சொல்லுங்க அப்புறம் நான் அனுப்பறேன் என்பார்...!!!! ஹா ஹா ஹா

      அப்புறம் முன்னாடி ஏதோ ஒரு ஃபோட்டோ அனுப்பியிருந்தாரெ கடலுக்குள்ள நு அதைச் சொல்லித் தப்பிச்சுருவார்..!!!!!!.
      கிளப்பி விட்டுட்டீங்கண்ணே!!

      கீதா

      நீக்கு
    4. கர்ர்ர்ர்... அவர் கேக்கறாரோ இல்லையோ.. நீங்க கேக்கறீங்க!

      நீக்கு
  17. கிடாருடன் படம் - இப்போது எடுத்துக் கொள்ளலாம்! தப்பே இல்லை ஸ்ரீராம்! படம் எடுத்துக் கொள்வது அந்தக் காலங்களில் கடினமான விஷயம். இப்போது சுலபம்.

    புது மொழி - :)

    நகைச்சுவை - நன்று.

    சுவையான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மாதிரி அல்ப ஆசைகள் அந்த வயதில் தோன்றும்.  இப்போது தோன்றுவதில்லை!!!   நன்றி வெங்கட்.

      நீக்கு
  18. இவர்களால் என்ன உதவிசெய்ய முடியும் என்று நினைக்கக் கூடாது பல நேரங்களில் எதிர் பாராதது நடக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி எம் பி ஸார்...    நான் உதவியே கேட்கவில்லை.  நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தபோது அவனாக முன்வந்து செய்த் உதவி அது.

      நீக்கு
  19. நல்ல பதிவு.

    கிட்டார் வாசிக்க இப்போதெல்லாம் எளிதில் கற்று கொள்ளலாம். யு டுயூப் சென்று "Three Chords songs" என்று தட்டி C D G A E போன்ற எளிதான கார்ட்ஸ் கற்று கொண்டால் போதும், ஆயிரக்கணக்கான பாடல்களை வாசித்து கொண்டே பாடலாம். முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வாசிக்கத் தெரியாவிட்டாலும் புகைப்படம் எடுக்கலாம்.
    புதுமொழிகள் அசத்தல்...

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    மீண்டும் புதிர் புதனோ என்று சந்தேகமாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...     வாங்க.


      ஏன் அப்படி?

      நீக்கு
    2. ஆ துரை அண்ணா நீங்களும் நம்ம கட்சியாகிட்டீங்களா?!!!!! நான் வெள்ளின்னு நினைச்சு ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
  22. ஸ்ரீராம் பத்வுக்கு வந்ததும் முதல்ல ஒரே குயப்பமா போச்சு!! வெள்ளிக்கிழமை பதிவுன்னே நினைச்சேன் தலைப்பு, பிரபு என்ற பெயர் எல்லாம் ஏன் குழப்பம்னா விசு பதிவு பார்த்து அங்கு உங்கள் கமென்டும் பார்த்துவிட்டு இங்கு வந்த காரணத்தால்...ஹா ஹா ஹா

    அப்புறம் பிரபு நம்ம ஸ்ரீராம் ஃப்ரென்ட் கிட்டார் கதை வியாழன் இன்று என்று மூளைல 100 வாட்ஸ்!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...     துரை செல்வராஜூ ஸார் என்னன்னா புதனான்னு கேக்கறார்....  நீங்க என்னடான்னா வெள்ளியான்னு கேக்கறீங்க.....    வியாழனேதான்....   வியாழனேதான்!

      நீக்கு
  23. பிரபு நிச்சயமாகப் "பிரபு"வேதான் இல்லையா ஸ்ரீராம்!

    இப்படியான நண்பர்களின் தொடர்பு விட்டுப் போவது ரொம்பவே மனதுக்கு வேதனையாக இருக்கும் பின்னாளில் யோசிக்கும் போது. நல்ல நட்பு. எதிர்பார்ப்பில்லாத நட்பு! ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வேதனை எல்லாம் இல்லை கீதா.. அது அப்போ..்். இப்போ வேற ஃப்ரெண்ட்ஸ். நீங்கள்லாம் இருக்கீங்களே்

      நீக்கு
    2. ஆஅ ஶ்ரீராம் இன்னும் கொம் சரியாகவில்லையோ

      நீக்கு
  24. இப்போதுதான் சோசியல் மீடியா ரொம்பவே இருக்கிறதே ஸ்ரீராம்..பிரபுவை, பாலாவைக் கண்டுபிடிக்க முடியாதோ?..முகநூலில் தேடிப் பார்க்க முடியாதோ? இல்லை கூகுளில் போட்டால் முகநூலில் இருந்தால் வருமே இல்லையோ? ஏகப்பட்ட கேள்விகள் வந்துவிட்டது ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா பார்த்தால் புதனுக்குப் பொறுக்கி எடுத்துவிடுவார் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம் கீதா.. இனிமையான நினைவுகளுடனேயே இருந்து விட வேண்டும். இப்போது அவங்களுக்கும் வேற சர்க்கிள், குடும்பம் , ஃபிரெண்ட்ஸ்னு இருப்பாங்க...

      நீக்கு
  25. புது மொழிகள் அனைத்தும் ஹா ஹா ஹா ரகம்.

    ரொம்பவே ரசித்தேன் ஸ்ரீராம்...எப்படி எல்லாம் யோசிக்கறீங்கப்பா!!! நல்ல கற்பனை..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. //என் மறைமுகக்கேள்விக்கான பதிலை மறைமுகமாகவே கொடுத்தான்//
    இலை மரைக் காயாக விஷயங்களை சொல்லும் பாங்கு பழைய பாடல்களோடு போகவில்லை. இன்னும் இங்கே இருக்கு.
    நன்பர் பிரபு, முதல்வர் கிட்ட பாட்ஷா ஸ்டைல்ல என்ன உண்மையை கூரி இருப்பாரோ? சீட்டு கிடைச்ச சம்பவம் சுவையா இருக்கு.
    புதுமொழிகள் சூப்பர்.
    ஆண்டிராய்டை விட இப்ப கொரானா தான் நின்னு கொல்லுது.
    இப்பதான் சுகாதாரத்துறை ஆட்கள் எங்கள் வீட்டில் வெப்பப் பரிசோதனை பண்ணினாங்க. என் டெம்பரேச்சர் 94.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இன்று வெப்பப் பரிசோதனை பண்ணினாங்க.்். 35.1. பிரச்னை இல்லை.

      வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி அரவிந்த்.

      நீக்கு
  27. கேள்விகளின் விடைகளை நீங்கள் போட்டதும் தெரிந்து கொள்கிறேன் ஸ்ரீராம். கண்டிப்பாக ஜீவி அண்ணா அதற்கு முன்பே விடைகளைக் கொடுத்துவிடுவார்

    இதைப் பார்த்ததும் நான் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கும் ஒன்று நினைவுக்கு வந்தது. மாமனாரின் தொகுப்பில் இருந்த ஒரு கல்கியில் ஒரு பெட்டிச் செய்தியாக வந்திருந்த ஒன்றை எடுத்து வைத்திருக்கிறேன் பதிவிற்கு. ஒருவர் மூன்று கேள்விகள் கேட்டிருந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினிப்பக்கம் செல்வது சிரமம். இளையவனிடம் டைரக்‌ஷன் கொடுத்து விடை சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

      நீக்கு
    2. தி. கீதா, பதில் சொல்லணும்ங்கறீங்க?.. ஸ்ரீராம் ஏதோ விளையாட்டுக்கு காப்பி & பேஸ்ட் செய்திருப்பதாகச் சொல்கிறாரே!

      நானும் இன்னிக்கு பின்னூட்டம் புது மாதிரி தான்.

      பதிவுக்கு பின்னூட்டம் இல்லை. வேறு மாதிரி. என்ன மாதிரி என்று கண்டுபிடியுங்கள்.

      நீக்கு
    3. பதிவைப் படிக்காமல் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் போட்டிருக்கீஈங்க ஜீவி ஸார்.. அதுதான் வித்தியாசம்!

      மேலும் கேட்கப்பட்டிருக்கும் அந்தக் கேள்விகளுக்கு பதில் இப்போது சொல்வது கடினமும் கூட.

      நீக்கு
  28. ஆசையும் கடுப்பும்// ஹா ஹா ஹா

    க்டைசிப்படம் தெரியவில்லை கோமதிக்கா வந்து சொல்லட்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. புல்லாங்குழல் வாசிப்பது போல பின்னாட்களில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். //

    ஹா ஹா ஹா ஹா

    இந்த எதுக்குனு உங்களுக்குப் புரியும்!!!!! தலைப்பும் அப்போதே புரிந்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லையே கீதா... அப்புறமா வாட்ஸாப்ல சொல்லுங்க!

      நீக்கு
    2. வழ்க்கமான அபுரி என்னாச்சு, ஸ்ரீராம்?..

      நீக்கு
    3. மறந்துட்டேன் ஜீவி ஸார்..

      நீக்கு
  30. இத்தனை நாள் மாலை ஷிஃப்ட் பார்த்த கணினி இப்ப இங்க காலை ஷிஃப்ட் !!!! ஹா ஹா ஹா ஹா

    அதான் காலை வருகை. மாலை 3.30க்கு மேல் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே..்். நானே என்னடா கீதா காலையில் வந்திருக்காங்கன்னு பார்த்தேன்.

      நீக்கு
  31. நப்பாசை யாரைத் தான் விட்டது?.. 'ஏடுகள் தெரியுமோ' முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று முயற்சித்ததில்--

    1. கலைக்களஞ்சியம் (தொகுப்புகளுக்கு பொறுப்பாசிரியராய் இருந்தார்)

    2. பொன்னி

    3. வசந்தன் கேள்விப்பட்டதில்லை.

    4. புதுவையில் நான் இருந்த பொழுது கலைக்கோயில் என்ற பத்திரிகையில் சித்தார்த்தனின் படைப்புகளை வாசித்திருக்கிறேன்.

    5. நம்ம எம்.வி.வி. தானே?.. நடத்திய பத்திரிகை தேனி. தி.ஜானகிராமன் இதில் நிறைய எழுதியிருக்கிறார்.

    6. சிந்தனை

    7. மனிதன். இதில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்.

    8. புரட்சி. தோழர் மாஜினி ஜனசக்தியில் பணியாற்றிய பொழுது பழக்கம் உண்டு.

    9. வாசவன் -- அம்மாடி.. ஏகப்பட்ட படைப்புகளுக்கு சொந்தமானவர். இவர் பத்திரிகை நடத்தினார் என்பது எனக்கு புதிய செய்தி.

    10. கேள்விப்பட்டதேயில்லை. தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. நன்றி ஜீவி ஸார். நானே விடைகளை எடுத்துப் பார்த்துதான் சரிபார்க்க வேண்டும்!

      நீக்கு
    2. விடைகள் இணைக்கப்பட்டிருக்கிறது ஜீவி ஸார். மூன்று சரியான விடைகள்.

      நீக்கு
    3. பார்த்தேன், ஸ்ரீராம். விடைகளைப் பார்க்கும் பொழுது ஏதோ புதுசாகத் தெரிந்து கொள்வது போல இருந்தது. :))

      அது என்ன, தினமலர் வாரமலர் கட்டிங்கா?.. அது தானே உங்கள் ஆஸ்தான செய்தித்தாள்?..

      நீக்கு
    4. செய்தித்தாள்?   அது பழைய விகடனோ குமுதமோ!  இல்லை அமுதசுரபி?!

      நீக்கு
  32. சுவாரசியமான பதிவு சார். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  33. நண்பர் பிரபு மனதில் உயர்ந்து விட்டார்... இன்றுவரை ஏதேனும் தொடர்பு கிடைத்ததா...? இல்லையா...? புதுமொழிகள் 1 போல் இல்லாமல், தேடினால் கிடைக்கலாம் அல்லவா...?

    பதிலளிநீக்கு
  34. உதவுக்கூடிய நண்பர்கள் கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்! பொக்கிஷம் ஜோர்!புது மொழிகளுள் 'கற்க கசடற கற்பவை, கற்றபின் விற்க அதற்குத்தக' என்பது மட்டும் எங்கோ படித்தது போல் இருக்கிறது. பவர் கட் உச்சத்தில் இருந்த காலத்தில் நான் இதைப்போல் மின் மொழிகள் என்று சில எழுதி வைத்திருந்தேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... அப்போ பேஸ்புக்கிலேயே நிறையபேர் வெவ்வேறு விதமாக எழுதி வந்தாங்க... நன்றி.

      நீக்கு
  35. //புல்லாங்குழல் வாசிப்பது போல பின்னாட்களில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். எனக்கு புல்லாங்குழலும் வாசிக்கத்தெரியாது!//

    கிடார் வாசிப்பது போல் போட்டோ எடுத்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
    அப்புறம் தலைப்பைப் பார்த்து கிடார் கற்றுக் கொள்ள முடியாமல் புல்லாங்குழல் கற்று கொண்டீர்கள் என்று நினைத்தேன். அதுவும் இல்லை கடைசியில் தெரிந்து கொண்டேன்.

    நல்ல நண்பர் பிரபு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... எல்லாமே அரைகுறைதான் கோமதி அக்கா..

      நீக்கு
  36. ஸ்ரீராம்ஜி உங்கள் நண்பர் பிரபு நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்திருக்கிறார். இப்படியான ஒரு நட்பைத் தொடரமுடியாமல் போனதே என்பது வருத்தம்தான்.

    ஜோக் ரசித்தேன்.

    புதுமொழிகளை மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  37. புது மொழிகள் நன்றாக இருக்கிறது.

    //கோமதி அக்காவோ சொல்லக்கூடும்//

    ஆஹா! எவ்வளவு நம்பிக்கை என் மேல் !

    குன்றகுடி அடிகளார் அவர்களை தலைபாகையோடுதான் பார்த்து இருக்கிறேன் சிறு வயதில் . முதன் முதலில் சிவகாசியில் சிவன் கோவில் சிவராத்திரி விழா என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அக்கா... நீங்களும் ஸாரும் இதில் நிறைய ஈடுபாடு கொண்டவர்கள் அல்லவா... அதுதான்.

      நீக்கு
    2. என் கணவர் வேலைப்பார்த்த கல்லூரி சிறிதுகாலம் குன்றகுடி அடிகளார் பொறுப்பில் இருந்தது. "பூம்புகார் பேரவை கல்லூரி" என்று பெயர்.
      கல்லூரி போட்டோவில் அவருடன் ஆசிரியர்கள் எடுத்துக் கொண்ட படம் வீட்டில் இருக்கிறது. அப்புறம் பூம்புகார் கல்லூரி .

      நீக்கு
  38. உதவும் உள்ளங்கள் என்று நினைத்தால் சட் என்று சிலர் என் நினைவுக்கு வருகிறார்கள். அதில் ஒருவர் மீனா என்பவர். அவருக்கு கணிணி ப்ராஜக்ட்டில் சில உதவிகள் செய்தேன். அவர் அப்பாவிடம் சொல்லி மோகன் ப்ரவர்சில் நல்ல வேலை வாங்கித் தரணும்னு அப்பாகிட்ட கண்டிஷனாச் சொன்னவர். இன்னொருவர் பாண்டிபஜார் இப்போ இருக்கும் ஜிஆர்டி அருகில் சொந்த வீட்டில் இருந்த தெலுங்கு பேசுபவர். என்னை வற்புறுத்தி அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். (அவங்க பெரிய பணக்காரங்கன்னு அப்போதான் தெரியும். அவர் அம்மா விமானப் பயணங்களின்போது சேகரித்த அழகிய சிறிய விஸ்கி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன). சாப்பிடும்போது அந்தப் பையனுன் அப்பா வந்து, உங்களுக்கு என்ன உதவினாலும் கேளுங்க, தெலுங்கு திரையுலகில் நான் ரொம்ப முக்கியஸ்தன், நான் சொல்வது நடக்கும் என்றார்.

    நல்ல மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட இரண்டு உதாரணங்கள் கொடுத்திருக்கேன்.

    நம் குணங்கள் சிலரைக் கவரும்போது ஆட்டமேடிக்கா அங்கு உதவணும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுமாதிரி பதிவுகளால் அவரவருக்கு அவ்வப்போது தூண்டப்படும் நினைவுகளை எழுதி மின்நிலாவுக்கு அனுப்பலாமே...

      நீக்கு
  39. https://s-pasupathy.blogspot.com/2017/07/757-1.html
    விந்தன் அவர்களைப்பற்றி பசுபதிவுகள் வலைத்தளம் மூலம் தான் தெரிந்து கொண்டேன். தினமணி கதிர் பத்திரிக்கையில் உதவி ஆசிரியர்.
    பார்த்திபன் கனவுக்கு அவர்தான் வசனமாம், முரசு தொலைக்காட்சியில் பார்த்திபன் கனவு படம் ஓடி கொண்டு இருக்கிறது. நன்றாக இருக்கிறது வசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் ஜீவி ஸார் கூட மறுபடியும் இதைச் சொல்லி இருந்தாரே..

      நீக்கு
    2. கோமதி அக்கா நலம்தானே? பார்த்துப் பேசி கனநாளானதுபோல ஒரு ஃபீலிங்காக இருக்குது.

      நீக்கு
    3. அதிரா வாழ்க வளமுடன்
      நலம் அதிரா.
      ஆமாம், பார்த்துப் பேசி பல நாட்கள் ஆச்சுதான் உண்மையில்.
      விடுமுறையில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டீர்களா?
      நிறைய வேலைகள் முடிக்க வேண்டும் விடுமுறையில் என்று சொன்னீர்களே!

      நீக்கு
    4. ஆஆ கோமதி அக்கா, நினைத்ததில் முக்கால் பங்கு முடித்துவிட்டேன் தையல் வேலைகள் இருக்கு... இன்றுதான் ஸ்கொட்லாந்தின் அதிகூடிய வெப்ப நாள் என அறிவிச்சிருக்கினம்... ஆனா சில்லென காத்தடிப்பதால் புழுக்கமில்லை... நன்றி கோமதி அக்கா🙏🥰

      நீக்கு
    5. நினைத்த மாதிரிஎல்லா வேலைகளையும் முடித்து வருவது மகிழ்ச்சி அதிரா.
      இங்கு தொடர்ந்து இரண்டு நாளாய் இரவு நல்ல மழை.இப்போதும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  40. கிட்டார் கதை அருமை.. மொறல் என்னவெண்டால்.... நாம் கடவுள் நம்பிக்கையாகவும், நல்ல மனதுடனும் நடக்கும்போது, ஏதோ ஒருவர் வடிவில் கடவுள் வந்து நமக்கு உதவி செய்து விடுகிறார்.. நெடுகவும் நம்மோடு கூட இருக்க முடியாது என்பதனால, தேவையானதைச் செய்து போட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்:))..

    இருப்பினும் அவ்ளோ பெரிய உதவி செய்த நண்பனோடு, ஏன் நீங்கள் தொடர்பில் இருக்காமல் போயிட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...    உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்து விட்டது.   பிரபு எனக்கு உதவியதற்கே என் நல்ல மனம்தான் காரணம் என்று சொல்லி விட்டீர்களே...   அதனால்!  ஹா..  ஹா..  ஹா...   ஆனால் கடவுள் முக்கியமான தருங்கங்களில் கூட இருக்கிறார் என்பதை நான் பலசமயம் உணர்ந்திருக்கிறேன்.  

      நீக்கு
    2. //இருப்பினும் அவ்ளோ பெரிய உதவி செய்த நண்பனோடு, ஏன் நீங்கள் தொடர்பில் இருக்காமல் போயிட்டீங்க..//
      இதற்கெல்லாம் காரணம் கிடையாது.   அபப்டியே காலம் சென்று விட்டது.  இப்போது பழைய நினைவுகளின் எதிர்பார்ப்புகளோடு தொடர்பு கொண்டால் ஏமாற்றம் மிஞ்சலாம்.  எனவே வேண்டாம்!

      நீக்கு
  41. நான் அறிஞ்சதில் சில..

    1.ஊரார் பிள்ளையை “ஊட்டி” வளர்த்தால்,
    உங்கட பிள்ளையை என்ன “கோடைக்கானலா” வளர்க்கும்?:)

    2. அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞ்சல்:)

    3. ஆலயம் தொழுவது.. வேலை மினக்கேடு:)

    ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் வில்லங்கமாகச் சிந்திக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...    ரசித்தேன்.  அப்போ பேஸ்புக்கில் இப்படி நிறைய வலம் வந்தன.

      நீக்கு
  42. கடசிப் படத்தில் இருப்பவரை எங்கேயோ பேப்பரிலோ புத்தகத்திலோ பார்த்த மாதிரியே இருக்கிறது.. விடை வரட்டும் சொல்கிறேன் தெரியுமோ தெரியாதோ என...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் எல்லோரும் விடை சொல்லி விட்டார்களே அதிரா....

      நீக்கு
    2. ஓஓ மேலோட்டமாக நோக்கினேன் என் கண்ணுக்குத் தெரியவில்லை... கண்டுபிடிக்கிறேன் ஶ்ரீராம்

      நீக்கு
    3. குன்றக்குடி அடிகளார்.

      நீக்கு
  43. எனக்கும் வயலின் அல்லது வீணை பழகி, தமிழ்ப் பாட்டுக்கள் வாசிக்கோணும் எனப் பயங்கர ஆசை.... ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை.. கடசியில் அமைந்து வந்தது, ஒரு அக்கா தன் வீட்டில் சொல்லித் தருகிறேன் என்றா, உடனே வயலின் வாங்க வேண்டாம், என்னுடையதைப் பழகுங்கோ என்றா[ஏதோ தெய்வ வாக்குப்போல]..

    அப்படியே ஒரே ஒருநாள், தட்டிலே பழங்கள் வெத்தலை பாக்கு எல்லாம் எடுத்துச் சென்றேன்ன்.. தெட்சணையாம் என:)[அம்மாதான் அப்படிக் கொண்டுபோகச் சொன்னா].. அந்தக்கா பார்த்ததும் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்டா.. இது எதுக்கு எனக் கேட்டு ஹா ஹா ஹா..

    அந்த ஒருநாள் மட்டும் பழகினேன்.. வானத்தில் பறப்பதைப்போலவும், நானே பாட்டெல்லாம் வாசித்துக் காட்டுவதைப்போலவும் கனவுலகில் மிதந்தேன்.. ஏனெனில் எனக்கு ஆசைகள் வராது, ஆனா வந்தாலோ.. மிக மிகப் பயங்கரமாக வெறித்தனமாக வரும் ஹா ஹா ஹா.. இப்போ வடகம் போடுவதைப்போல:))..

    ஆனாப் பாருங்கோ என் ராசி அப்படி.. எதிலுமே முன்னேற விடாது....

    அடுத்த கிளாஸ் போக முன், நாட்டுப் பிரச்சனை அதிகமாகி, வீட்டால வெளிக்கிடாமல்.. ஒரு மாதத்திலேயே ஊரை விட்டு இடம்பெயர்ந்திட்டோம்ம்.. அத்தோடு அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்... நல்லவேளை வயலின் வாங்காமல் விட்டேனே என மனதை ஆத்திக் கொண்டேன்..

    என் கணவர் கொஞ்சம் கிட்டார் பிளே பண்ணுவார்.. அதனால சின்னவரையும் கிளாசுக்கு விட்டு அவரும் பாட்டுக்கள் கொஞ்சம் வாசிப்பார், ஆனா பெரிதாக என்னைப்போல ஆர்வம் இல்லையாக்கும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அனுபவம்.   அப்போ நாட்டுல ஏற்பட்ட வயலன்ஸால வயலின் கத்துக்க முடியாமத் போச்சு!

      நீக்கு
  44. சொல்ல மறந்திட்டேன், அக்காவின் மகளுக்கு வீணை பழக்கி சூப்பராக வாசிப்பா.. தமிழ்நாட்டின் வீணை பேமஸ்.. பெயர் வருகுதிலை, பிக்பொஸ் வந்தவரின் தம்பி.. அவர்தான் இவவுக்கு ஆசிரியர், ஸ்கைப்பில் வகுப்புக்கள் எடுப்பார்.. வருடம் ஒருமுறை நேரில் கனடா போய் சொல்லிக் குடுப்பார்... அதனால அக்காட மகள் தமிழ்ப் பாட்டுக்கள் எல்லாம் மேடைகளில் சூப்பராக வாசிப்பா.

    அண்ணாவின் மகள் வீணை வாசிப்பா.. இன்னும் பழகி வருகிறா. அங்கு நிறைய வசதிகள் இருப்பதனால, ஊக்கமிருப்போர் ஊர்போல அனைத்தும் பழகுகின்றனர்.. இரு மகள்களும் நன்கு பரத நாட்டியமும் ஆடுவினம், அங்கு பல நிகழ்ச்சிகளில் ஆடுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  ஓ...   பாராட்டுகள்.   எங்கள் உறவில் சமீபத்தில் ஒரு மிருதங்க வித்வான் உருவாகி வருகிறார்.  இன்னும் பதின்ம வயதைத் தாண்டவில்லை.  கச்சேரிகளுக்கு வாசிக்கிறார்.

      நீக்கு
    2. என் பெரிய பேரன் மிருதங்க கச்சேரி செய்வான்,
      பேத்தி பரதநாட்டியம் ,சின்ன பேரன் கவின் கிளாரிநெட் வாசிக்கிறான்.

      நீக்கு
    3. பாராட்டவேண்டும் கோமதி அக்கா.  இந்த சுவாரஸ்யங்கள் இருப்பதே பெரிது.  என் மகன்களிடம் சங்கீத வகுப்புக்குச் செல்லச் சொன்னபோது அவர்கள் செல்லவில்லை.

      நீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. அதை விட இன்றைய தலைப்பு மிக அழகாக உள்ளது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு மாதிரி உள்ளது. "ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது" என்றொரு திரைப்படத்தலைப்பு வந்துள்ளதோ ? ஏதோ ஞாபகம்.

    உங்கள் நண்பர் உங்களுக்கு அன்புடனே நல்ல உதவி செய்துள்ளார். "காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்" என்ற மாதிரி உங்களுடன் பழகிய நட்புக்கு நன்றியாய் அவர் தேவையான அந்த காலத்தில் நல்ல உள்ளத்துடன் சிறப்பாக உதவியிருக்கிறார். இந்த மாதிரி சிலருக்குத்தான் பிரதிபலன் எதிர்பாராத நட்பு கிடைக்கிறது.இப்போது இதை படிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தால் கூட பழைய நட்பை நினைத்து உங்களைப் போலவே பெருமை கொள்வார்.

    எங்கள் வீட்டிலும் என் இளைய மகன் புல்லாங்குழல் வாங்கி ஆர்வமாக கொஞ்சம் பயிற்சிக்கு சென்று வந்தார். பின் அவருக்கு மேற்படிப்பினால், நேரமில்லாது போகவே அதுவும் வரப்போகும் ஒரு சிறந்த சந்ததி இசைக் கலைஞருக்காக கிடாருடன் காத்திருக்கிறது. ஹா. ஹா. உங்கள் பதிவுக்கும், எங்கள் வீட்டிலிருக்கும் இசை கருவிகளுக்கும் என்ன ஒற்றுமை என ஆச்சரியமாக வேறு இருக்கிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    ஆமாம்..  நீங்கள் சொல்வது போல ஒரு படம் வந்ததது.   அது போல ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது என்று இதே டைப்பில் ஒரு தலைப்புல படமும் வந்தது.  தேடிப்பார்த்தால் இன்னும் சில தலைப்புகள் கிடைக்கலாம்!

      பள்ளி, கல்லூரிக்கு காலங்களில் பிரதிபலன் பார்த்து பெரும்பாலும் நண்பர்கள் பழகுவதில்லை.

      அடடே...   உங்கள் வீட்டில் புல்லாங்குழலிலிருந்து கிட்டாருக்கா?   ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  46. ஒரு கிடார் தேய்ந்து புல்லாங்குழல் ஆன புகைப்பட ஆசை - ஹா ஹா ஹா ஹா

    பிரபு (காதல்) விரும்பிய பெண் என்ன ஆயிற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... கேட்பார்களோ என நினைத்து இதுவரை யாரும் கேட்காத கேள்வி! என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியாது.

      நன்றி ஸ்ரீகாந்ந்த்.

      நீக்கு
  47. புல்லாங்குழலுடன் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் இருக்கிறதா? அருமையான மனிதர்கள் நண்பர் பிரபுவும் அவரது தந்தையும். வழக்கம் போல சிறப்பான நடையில் சொல்லியுள்ளீர்கள்.

    புது மொழிகளை ரசித்தேன்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரமாக இருக்கிறது -எங்கேயோ! பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. பத்திரமாக இருக்கிறதல்லவா? நேரம் கிடைக்கும் போது தேடியெடுத்துப் பகிர்ந்திடக் கேட்டுக் கொள்கிறேன்:).

      நீக்கு
  48. அருமையான பதிவு. என்னுல்லும் சில நினைவலைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!