எங்கள் வாசகர்கள், நண்பர்கள், சக பதிவர்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
கொரோனாசுரன் அழிந்து, நன்மைகள் பெருகட்டும்.
====
'கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது'
நியூயார்க் : கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த, பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து, பைசர் நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த, 44 ஆயிரம் பேரிடம், கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 94 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து, பைசர் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், பில் கிருபர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி ஆய்வு முடிவு நம்பிக்கையூட்டும் விதத்தில் உள்ளது. அடுத்த கட்டமாக, இம்மாத அவசரகால சிகிச்சைக்கு, தடுப்பூசி மருந்து செலுத்த அனுமதி கோரி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் விண்ணப்பிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.உலகிலேயே, ரஷ்யா தான், முதன் முதலாக கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்த பெருமையை தட்டிச் சென்றது.இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த, 10 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில், இறுதிக் கட்டத்தில் உள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களில், ஏதேனும் ஒன்று, ஜனவரியில் தடுப்பூசி மருந்தை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
====
குழந்தைகள் தின சாதனையாளர்கள் 1 5 வயது சிறுவன் ஸ்ரீஷ் நிர்கவ்
மீண்டும் மீண்டும் கின்னஸ் சாதனை ஐந்து வயதில் சென்னை சிறுவன் அபாரம்
சென்னை போரூரைச் சார்ந்த ஐந்து வயது சிறுவன் ஸ்ரீஷ் நிர்கவ் நான்கு மாத இடைவெளியில் இரண்டு கின்னஸ் சாதனை செய்து சாதித்துள்ளான்.
வேலவன் கிருஷ்ணன் மற்றும் தாய் ரோஷ்மி ஆகிய இருவருமே பல் மருத்துவர்கள் இவர்களின் ஒரே மகன்தான் ஸ்ரீஷ்.
சென்னையில் உள்ள தி பப்ளிக் ஈகோ ஸ்கூலில் யூகேஜி படிக்கிறான் இவனுக்கு இரண்டு வயது ஆகும் போதே இவனது அபார ஞாபகசத்தியை கண்டு வியந்த பெற்றோர் அவனது திறமையை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் ஒரு முறை ஒரு கார் லோகோவை பார்த்துவிட்டால் பிறகு அந்த லோகோவை நேரிலோ,புத்தகத்திலோ, டி.வி.,யிலோ என்று எங்கே பார்த்தாலும் சொல்லிவிடுவான்.
இதன் காரணமாக இவனுக்கு நிறைய கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிங்கப்பூர்,ஜப்பான் உள்ளீட்ட நாடுகளுக்கு இவனுடன் பயணம் மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 150 கார்களின் பிராண்டு லோகோக்களை நினைவு படுத்தி சொல்லும் இவனது நினைவாற்றலை நண்பர்கள் உதவியுடன் இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்தனர், இதன் தொடர்ச்சியாக கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றான்
கடந்த நான்கு மாதத்திற்கு முன்தான் இந்த சாதனையை நிகழ்த்தினான். இந்த சாதனை தந்த மகிழ்ச்சியில், கிடைத்த பாராட்டில் மகிழ்ந்த சிறுவன் அடுத்து இதே போல ஏதாவது செய்யவேண்டும் என்று சொல்ல மீண்டும் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த முறை ஒரு நிமிடத்தில் 60 கார்ட்டூன் கேரக்டர்களை நினைவுபடுத்தி சொல்லியுள்ளான்.இரு சாதனைகளுமே அதிகாரபூர்வமாக கின்னஸ் நிறுவனத்தால் அவர்களது முகநுால் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இப்படி ஐந்து வயதிற்குள் அடுத்தடுத்த இரு சாதனை புரிந்த இந்திய சிறுவன் இவனாகத்தான் இருக்கவேண்டும் என்று பெற்றோர் கருதுகின்றனர்.
இவ்வளவு நினைவு ஆற்றல் உள்ளதால் ஸ்ரீஷ் அதிகம் டி.வி.,பார்ப்பனா என்றால் அதுவும் கிடையாது அவனுக்கு பிடித்ததைத்தான் அவன் செய்வான் ஆனால் அதில் அதீத ஈடுபாடு காட்டுவான்.நன்றாக விளையாடுவான்,ஒவியம் வரைவான்,சிறுவர்களுக்கான மாரத்தான்,சைக்கிள் ஒட்டும் போட்டி எல்லாம் அதிகாலை நான்கு மணிக்கு நடந்தாலும் ஆஜராகிவிடுவான்,வீட்டில் சின்ன சின்ன செடிகளை வளர்த்து வருகிறான் சபைக்கூச்சம் என்பது சிறிதும் கிடையாது மகா தைரியமானவன்
இந்த இரண்டு கின்னஸ் சாதனை தந்த ஊக்கம் காரணமாக இப்போது உலக மேப்பை ஆராய்ந்து கொண்டு இருக்கிறான் அதை வைத்து யாரும் சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளான்.
இவனது வளர்ச்சியில் எங்களைப் போலவே இவனது பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி வெங்கட்,வகுப்பு ஆசிரியைகள் ஸ்டெபி,சரண்யா,கவிதா ஆகியோருக்கும் பங்கு உண்டு என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஸ்ரீஷ் நிர்கவின் பெற்றோரிடம் பேசுவதற்கான எண்:7550118440.
-எல்.முருகராஜ்
குழந்தைகள் தின சாதனையாளர்கள் 2 : 6 வயது அர்ஹாம் ஓம் தல்சானியா
கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை
அகமதாபாத்: ஆறு வயதிலேயே கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கி உலகிலேயே இளைய வயது கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற உலக சாதனை படைத்துள்ளான் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன்.
இது குறித்து கூறப்படுவதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் ஓம் தல்சானியா. இவர் சாப்ட்வேர் இன்ஜியராக பணி புரிந்து வருகிறார். இவரது 6 வயது மகன் அர்ஹாம் ஓம் தல்சானியா. இவர் ஆறு வயதிலேயே கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கி உலகிலேயே இளைய வயது கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற உலக சாதனை படைத்துள்ளான் இது சிறுவனின் தந்தை கூறியதாவது: அர்ஹாம் சிறுவயதிலேயே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தான்.மேலும் புதிர்களை தீர்வு காண பழகினார். தொடர்ந்து அவர் வீடியோ கேம்களை உருவாக்க நினைத்தார். அவரது ஆர்வத்தை கண்ட நான் புரோகிராமிற்கான அடிப்படை கோடிங்கை கற்றுகொடுத்தேன்.
தொடர்ந்து அவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சிறிய விளையாட்டுகளை உருவாக்க துவங்கினார். தொடர்ந்து மைக்ரோ சபாட் நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்றார். இதனையடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்தோம் என்றார்.
சிறுவன் அர்ஹாம் கூறியதாவது: 2 வயதான நிலையிலேயே டேப்லெட்டுகளை பயன்படுத்த துவங்கினேன் 3 வயதில் விண்டோஸ் ஓஎஸ் கேஜெட்டுகளை வாங்கினேன். நான் சிறிய விளையாட்டுக்களை உருவாக்கி கொண்டிருந்தேன். சிறிது நாளில் கின்னஸ் நிறுவனம் என்னிடம் இருந்து சான்றுகளை அனுப்ப சொல்லி கேட்டனர் அதன் பின்னர் அவர்கள்ஒப்புதல் அளித்து உலக சாதனை சான்றிதழ்கிடைத்தது. என கூறினான்.
மேலும் வருங்காலத்தில் ஒரு வணிக தொழில் முனைவேராக வர விரும்புவதாகவும், விளையாட்டுக்கள் மற்றும் ஆப்களை , கோடிங் குகளை உருவாக்க விரும்புகிறேன் மேலும் அனைவருக்கும் உதவ வேண்டும் என கூறினான்.
மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வரிடம் வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் முதல்வர் பழனிசாமி பணி ஆணையினை வழங்கினார்.
தூத்துக்குடி சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு வேலை வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி வருகை தந்தபோது, தென்பாகம் காவல் நிலையம் அருகே மனு அளிப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தார். இதனை கவனித்த முதல்வர், அம்மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரும்படி அழைத்தார்.
மாஸ்கோ: கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக்-வி பயனுள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' என்னும் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால சோதனை முடிவுகளின்படி, இந்த தடுப்பு மருந்து கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஸ்பூட்னிக்-வி தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி:தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கினால் அவற்றின் உற்பத்தி பெருகுவதோடு, விவசாயத்திற்கான பயன்பாடும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
===
குழந்தைகள் தின சாதனையாளர்கள் 3 : 9 வயது இந்திரா அர்ஜூன்
also சாடர்டே சங்கி போஸ்ட் :
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை..
பதிலளிநீக்குஎன்றென்றும் நலமே வாழ்க...
நலமே விளைக...
நீக்குஅனைவரும் நலமுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!..
பதிலளிநீக்குஇணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்றிலிருந்து தீமைகள் அகன்று நன்மை ஒளி வீசவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நீக்குநன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குநன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
இந்த தீபாவளித்திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கவும் அனைவரும் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியம் பேணவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா அசுரனை ஜெயிக்கும் வல்லமையை இறைவன் அனைவருக்கும் அளிக்கவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநன்றி. பிரார்த்திப்போம்.
நீக்குகுழந்தைகள் தினச் சாதனையாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மற்றச் செய்திகளும் நல்ல செய்திகள். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்து மக்களுக்குப் பயனளிக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஆம் அவ்வாறே பிரார்த்திப்போம்.
நீக்குயாருங்க இந்த விகே? விகே"ஸ் கார்னர்? அதே போல் மின் நிலா தீபாவளி மலரிலும் ஜெயஶ்ரீ ஶ்ரீராம்! யாரு இவர்? !!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குமின்நிலா தீபாவளி மலரில் எழுதியுள்ளவர், சுபஸ்ரீ ஸ்ரீராம். முகநூல் நட்பு. வி கே?? புரியவில்லையே?? விம் பிளீஸ் ---
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விகே"ஸ் கார்னர், தஞ்சையம்பதியின் பதிவுக்கு ஆன சுட்டியின் கீழே வந்திருக்குப் பாருங்க அந்தச் சுட்டி. முதியோர் இல்லத்தில் வாசம்னு பதிவில் எழுதி இருக்காங்க. ஏற்கெனவே சில மாதங்களாக அவங்களோட வலைப்பக்கத்தின் சுட்டி இங்கே காட்சி அளிக்கிறது.
நீக்குமின் நிலாவில் ஜெயஶ்ரீ ஶ்ரீராம்? அப்படினு தான் கேட்டேன். சுபஶ்ரீ ஶ்ரீராமா? அ.வ.சி.
வசந்தா krishnaswami வலைப்பூ - ஸ்ரீராம் இணைத்தது - அது பற்றி ஸ்ரீராம் சொல்வார்.
நீக்குஇவர்தான் அவர்
நீக்குhttps://1.bp.blogspot.com/-Oe6-RdhInJw/XtWqwE2V9yI/AAAAAAAAFR0/6iiYGG8Q6S4hLBbgzFiDTf2aNaz5f5DGQCLcBGAsYHQ/s1600/101813661_10163675181755313_6961267986741067776_o.jpg
Jayakumar
// வசந்தா krishnaswami வலைப்பூ - ஸ்ரீராம் இணைத்தது - அது பற்றி ஸ்ரீராம் சொல்வார். //
நீக்குநான் இணைத்த மாதிரி நினைவில்லை. எனக்கே புதிதாக இருந்தது.
ஆச்சரியமா இருக்கு. ஒருவேளை நானே இணைத்திருப்பேன். மறந்துபோய்விட்டது.
நீக்குநான் சிபாரிசு செய்து கவுதமன் சார் இணைத்தது.
நீக்குJayakumar
அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறுவர்கள் வியக்க வைக்கின்றனர் வாழ்க வளர்க எதிர்காலம்
நன்றி.
நீக்குஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇளம் சாதனையாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குசாதனையாளரை வாழ்த்துவோம்
பதிலளிநீக்குஆம், அதே.
நீக்குஅனைத்து பாசிடிவ் செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குஎனக்கு எப்போதுமே ஒன்று தோன்றும். எஸ் எஸ் எல் சி, மற்றும் +2 முதல் மூன்று ரேங்க் எடுத்தவர்கள் என்னவாக ஆனார்கள், அவர்கள் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள.
நீண்டநாட்களுக்கு முன் படித்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் முடிவாக வந்தது இது: child prodigy குழந்தை மேதைகள் பின்னாட்களில் வளர்ந்த பின் என்ன ஆனார்கள்? இந்தக் கேள்விக்கு பதிலாக அரிதிலும் வெகு சிலரே வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு இருந்தார்கள், அவ்வளவுதான்!
நீக்குபள்ளிக் கல்வி , கல்லூரிப் படிப்பு இவைகளில் ரேங்க் ஹோல்டராக வந்தவர்களிலும் மிக அபூர்வமாகவே வாழ்க்கையில் ஜெயித்து சாதனையாளர்களாகவும் ஆகிறார்கள், அவ்வளவுதான்! காரணம் ரேங்க் ஒன்றில் மட்டுமே குறிவைத்து உழைத்தவர்களில் பெரும்பாலானோர் அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறார்கள் என்பது மட்டுமே முதல் காரணம்!
இங்கே வரும் நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
வாழ்த்துகளுக்கு நன்றி. ஆரம்ப கால ஆர்வத்தை குழந்தைகளிடம் அவர்களின் அறிவுப் பசிக்கு சரியான தீனி போட்டு வளர்க்கவேண்டும். ஆனால் வெகு சிலர் மட்டும்தான் அப்படி வளர்(க்)கிறார்கள். மற்றவர்களுக்கு குடும்பச் சூழல், நண்பர்கள், பள்ளிகள், ஆசிரியர்கள் சரிவர அமைவதில்லை.
நீக்குகிருஷ்ணமூர்த்தி சார்.... ரேங்க் வாங்கின பிறகும் இன்னும் ஏதேனும் ஒரு Goal, அதற்குப் பிறகு இன்னொரு goal என்று நோக்கிக்கொண்டே இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும். முதல் படம் கன்னா பின்னாவென்று வெற்றி பெற்ற பிறகு, அடுத்த படம் என்ன எடுப்பது, எதில் நடிப்பது என்ற குழப்பத்தில் சொதப்பிவிடுவது போல்தான் நடக்கிறது. நான் படிப்பை மட்டும் சொல்கிறேன்.
நீக்குChild Prodigy - இது இறைவன் கொடுப்பினை. அதை பெற்றோர் அல்லது உற்றோர் வளர்த்தால்தான் இன்னும் பெரிய ஆளாக வரமுடியும். கடுமையான உழைப்பையும் கொடுக்கணும். நம்ம பாலமுரளி கிருஷ்ணா, மாண்டலின் ஸ்ரீநிவாஸ் போன்று.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்திரா அர்ஜுன் too sharp for her age. பல்திறன் அவருக்குள் இருக்கும் எனத் தோன்றுகிறது. பாராட்டுதல்தாண்டி அவரது திறமைகள் கவனிக்கப்பட்டு, அவருக்கேற்ற சரியான பாடங்கள், மேல்படிப்புகள் என மேற்கொள்ளவைத்து கவனமாக அவர் வளர்க்கப்படவேண்டும். ஆண்டவன் அருள்வானாக.
பதிலளிநீக்குஅவ்வண்ணமே வேண்டுவோம்; வாழ்த்துவோம்.
நீக்குஎபி நண்ப, நண்பிகள், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும் எங்கும்!
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் சார்.
நீக்குஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
இன்றைய நேர்மறை செய்திகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
வெற்றிப்பெற்ற குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். பாசிட்டிவ் செய்திகளில் குழந்தைகளின் சாதனைகள் மகிழ்ச்சி அளி்கின்றன். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபரோட்டா மாஸ்டர் - அந்தப் பெண் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார். எத்தனையோ பெண்கள் கஷ்டத்துக்கு இடையிலும் படித்து, பொறுப்பாக எதிர்காலத்தை நோக்கி நகர்வது மனதை நெகிழ்த்துகிறது. அந்தப் பெண் நல்லா இருக்கட்டும், நல்ல எதிர்காலம் அமையட்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குஅனைவருக்கும் தீப ஒளித் திருனாள் வாழ்த்துகள் இன்றைய
பதிலளிநீக்குகுழந்தைகள் தின செய்திகள், ஐந்து வயதிலிருந்து ,
கல்லூரிப் படிப்பு வரை சாதிக்கும் குழந்தைகள்
பெண்கள் அனைவரும் மேலும் மேலூம் வளர்ச்சி அடைய வேண்டு.
செய்திகளைப் படித்து வியந்து போகிறேன்.
இவ்வளவு வளர்ச்சி போற்றப்பட வேண்டும்.
மிக நன்றி கௌதமன் ஜி.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகுழந்தை சாதனையாளர்களுக்கு பாராட்டுக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகுழந்தை சாதனையாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.