ஞாயிறு, 31 ஜனவரி, 2021

மை மி கா சா - தொடர்ச்சி




மான் கொம்பு வேண்டுமா? 


அந்தக் கொம்புக்குத்தான்   மருத்துவ பயன் உண்டாம் - - 

யாரோ பிக் பாக்கெட் பக்கத்துல வருகிறான் - நம்ம ஜாக்கிரதையா பாக்கெட்டை பாத்துக்குவோம் ! 


அப்பாடி - பிக் பாக்கெட் போயிட்டான் ! 


ஆ ! இவர் எங்கே  வந்தார் !

என்ன பார்வை - உந்தன் பார்வை ! 

மெல்ல மெல்லப் பக்கம் வந்து - - 


இவன் யாருடா சமோசா தலையன் ! 


அண்ணே அது நீங்கதானா ! சரி, சரி !


இவ்வளவுக்கும் நடுவே பயமில்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே !


மீண்டும் பிளாட்பார்ம் ! 


அதோ மின்கல வண்டி வந்துடுச்சு! 


இது என்ன வெள்ளை மூங்கிலா அல்லது ராக்கெட்டா !! 


மின்கல  வண்டியில் முதல் பயணி !


முதல் காட்சி !


எந்தப் பள்ளிக்கூட மாணவிகள் ? 


என்ன பார்க்கிறார்கள்? 

= = = = =

 

37 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மான் கொம்பு கம்பீரமாக இருக்கிறது.
      பேர் சொல்லாததை இந்த இரவு வேளையில் காட்டி
      பயமுறுத்துகிறார்களே.
      அந்தப் பச்சை மரங்களுக்கிடையெ
      பையனும் உட்கார்ந்து இருக்கிறார்!!!

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. காத்திருந்து காத்திருந்தே அலுத்துப் போயிருக்கும் .

    பதிலளிநீக்கு
  4. நல்ல தெளிவான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வழக்கம் போல் இன்றைய ஞாயிறு படங்கள் அழகுடன் அருமை. ஒவ்வொரு படங்களையும் பெரிதாக்கி பார்க்கலாம் என்றால், அங்குள்ள நீளமான பச்சை கலர் ஜந்துவைப் போல என் மொபைல் டேட்டாவும் ஊர்ந்து வருகிறது.

    சரி.. என்று விடாமல் பார்த்தால் இப்படி சமோசாவை என்றுமே சாப்பிட முடியாதபடிக்கு செய்து விட்டீர்களே.....?
    சமோசாவுக்கு இப்படியெல்லாம் உதாரணம் காண்பித்தால் இனி சாப்பிட முடியுமா? ஹா ஹா.

    கடைசி படத்தில் என்ன பார்க்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. மான் கொம்பு மருத்துவ குணமுடையது. சின்ன வயதில் என்னுடைய அம்மா தலைவலிக்கு மான்கொம்பு கல்லில் உரைத்து பற்று போடுவார்கள். 

    அதே போல் மயிற்பீலியும். இறகு எடுத்துவிட்டு காம்பு பகுதியை விளக்கெண்ணெய் விளக்கில் சுட்டு கருக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி நிற்கும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  9. அப்படியே
    மை மி கா சாலையின் மிருகங்கள் வாழ்க..
    ஆங்கே எடுக்கப்பட்ட படங்களும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. மை.மி.கா.சா. காட்சிகள் நன்று. படங்கள் சிறப்பு - ஒன்றிரண்டு படங்களைத் தவிர!

    தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு
  11. நல்லா இருக்கு படங்கள்.அந்தப் பச்சைப் பசேலென்று விழிக்கிறாரே! அவர் எங்க வீட்டு வாழை மரங்களில் குடி இருப்பார். ஒரு தரம் இலை அறுக்கப் போனால் இவர் தொங்கிட்டு இருந்திருக்கார். நான் பாட்டுக்குக் கையை நீட்ட, அவர் தலையைத் தூக்கி நீட்ட,அலறி அடித்துக் கொண்டு பின் வாங்கினேன். பின்னர் பயந்து கொண்டே வேறொரு சின்ன வாழைக்கன்றில் இலை அறுத்துக் கொண்டேன். அந்த ப்ரவுன் கலர்காரரையும் பார்த்துட்டுத் தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் ஹோஸ் பைப் என நினைத்து எடுத்து வைக்கப் போனேன். பக்கத்து வீட்டில் இருந்து அலறினாங்க, "மாமி! அது பாம்பு! இரை எடுத்துட்டுச் சுருண்டு படுத்திருக்கு!" என! நல்லவேளை! நான் பிழைத்துக் கொண்டேன் என ஓடோடி வந்தேன். அதுக்கப்புறமாத் தண்ணீர் ஊற்றும் ஹோஸ் பைப்பைச் சுருட்டியே வைக்கிறதில்லை. வீட்டுக்குள் சமைக்கக் குளியலறையில் குளிக்க, படுக்கை அறையில் படுக்கனு எங்களுக்கு முன்னாடியே வந்து காத்துட்டு இருப்பாங்க இவங்கல்லாம். சங்கரன் கோயில் புற்று மண்ணைத் தலையணைக்கடியில் வைச்சுண்டு படுத்துப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அதுங்கள்ளாம் தான் சுப்புக் குட்டிகளாயிற்றே!...

      நீக்கு
    2. சங்கரன்கோயில் புற்றுமண் வரப்ரசாதம்...
      கண்கண்ட உண்மை...

      தற்போது தஞ்சையில் குடியிருக்கும் பகுதி முந்திரிக் காட்டை அழித்து உருவாக்கப்பட்ட மனைப் பிரிவுகள்.. வேறு போக்கிடம் அறியாமல் இங்கேயே வம்சாவளியாக சுற்றிக் கொண்டிருக்கின்றன பாம்புகள்..

      இவைகள் கண்களில் படாமல் ஒதுங்கிட வேண்டும் என வேண்டிக் கொள்வது
      ஸ்ரீ கோமதி அம்மனிடம் தான்..

      நீக்கு
    3. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி.

      நீக்கு
    4. உண்மையே.
      புற்று மண் தீராத வினை தீர்க்கும். கோமதி அம்மன்
      பூச்சி பொட்டு கண்ணில் படாமல் நம்மைக் காப்பாள்.

      நீக்கு
  12. வெள்ளை மூங்கில் மாதிரியும் இருக்கு! தண்ணீர்க்குழாய் மாதிரியும் இருக்கு. எனக்கென்னமோ மூங்கிலாட்டமாத் தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலைகளைப் பார்த்தால் மூங்கில் மரம் போல இருக்கு.

      நீக்கு
  13. மான்கொம்பு, மயில்பீலி வைத்தியம் கேள்விப் பட்டிருக்கேன். கங்காரு அழகாய் இருக்கு. இந்தச் சீதோஷ்ணம் அதுக்கு ஒத்துக்கிறதா?

    பதிலளிநீக்கு
  14. படங்கள் எல்லாம் அழகு.
    என்ன பார்வை ! உந்தன் பார்வை !
    நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!