வியாழன், 7 ஜனவரி, 2021

அவன் ஆன நான்...

 நோலனுக்கு ஒன்றும் புரியவில்லை.  தான் யார் என்பதே புதிராக இருக்கிறது.  அவனை அவன் மகள் - என்ன பத்து வயது இருக்குமா? - அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்.  அவனுக்கு நேர்ந்த விபத்து பற்றிச் சொல்கிறாள்.  அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டது பற்றிச் சொல்கிறாள்.


நோலனின் பழைய திறமைகள் காணோம்.  அவன் பழைய கம்பெனியில் அவனுக்கு வேலை இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.  'உன் வேலையில் பழைய சுஸ்து இல்லை' என்கிறார்கள்.

குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் தடுமாறுகிறான் நோலன்.  அவனுடைய மருத்துவ நண்பன் அவனைத் தேற்றுகிறான்.  நோலன் சிகெரெட் பிடிக்க நினைக்கும்போது அவன் மகள் ஈவா "உனக்கு சிகெரெட் பிடிக்கும் வழக்கமே கிடையாது" என்கிறாள்.


அவன் மருத்துவ நண்பனின் யோசனையின் பேரில் டாக்டர் ப்ரூக்ஸை சந்திக்கிறான் நோலன்.   அவள் அவனை ஹிப்னடைஸ் செய்து சீராக்க முயற்சிக்கிறாள்.  முதலில் நோலன் அவளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறான், அதாவது அவன் மனம் ஒத்துழைக்கவில்லை.  பின்னர் ஹிப்னாட்டிஸ மயக்கத்தில் அவன் காணும் காட்சிகளில் தெளிவில்லை.  மசமசவென்று தெரிகிறது.  

'உன் மூளை சேதமடைந்திருப்பதே காரணம்' என்கிறாள் ப்ரூக்ஸ்.  ஒவ்வொரு அமர்விலும் ஒரு மர்ம உருவம் உடம்பை தலைகீழாக வளைத்து நகர்ந்து அங்கேயிருந்து வந்து அவனைத் தாக்க முயல்வதும், நோலன் பதறி ஹிப்னாட்டிஸ மயக்கத்திலிருந்து விடுபடுவதுமாக செல்கிறது.

இதைப் பற்றி அவன் மருத்துவ நண்பனிடம் சொல்லும்போது மருத்துவ நண்பனின் அசைவுகள் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.  'நானும் என் மனைவியும் சண்டை போட்டுக்கொள்வோமா?' என்கிற மாதிரி நோலனின் கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.


அடுத்தடுத்த அமர்வுகளில் கொஞ்சம் தெளிவு வருகிறது.  அதில் வரும் ஒரு இடம் அவனுக்கு ரொம்ப பழகியது போல இருக்கிறது.  மகளை பள்ளியிலிருந்து அழைத்துவரும்போது அந்த இடத்தை ஒருநாள் தேடிச் சென்று கண்டுபிடிக்கிறான்.  

அங்கு சென்றதுமே அந்த மாடிப் படிகளைக் கண்டதும் அவனுள் ஒரு அதிர்வும், தெளிவில்லாத சில காட்சிகளும் வருகின்றன.  அங்கிருக்கும் பெண்ணைக் கண்டதும் பதறி ஓடிவந்து விடுகிறான்.  ஆனால் இவனின் மருத்துவ நண்பன் அந்த மாதிரி இடங்களில் அவன் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறான்.

இதைப்பற்றி எல்லாம் டாக்டர் ப்ரூக்ஸிடம் சொல்லும்போது நோலன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாகச் சொல்கிறாள்.  

நோலனின் நண்பன், நோலன் கேஸ்ஃபைலை எடுத்து ஆராய்கிறான்.  மூளைச் சாவில் கோமாவுக்கு சென்றவன் திடீரென ஒரு நாள் விழித்து எழுந்ததாகவும், இன்னும் அவனுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கோப்பு சொல்கிறது.  இது எப்படி சாத்தியம் என்று அவன் குழப்பமுறுகிறான்.

என்ன நடந்தது, அவனுக்கு எப்படி திடீரென விழிப்பு வந்தது என்று  இன்னொரு டாக்டர் நண்பனை கேட்கும்போது அவன் வேறு சில கணினித் தரவுகளை சோதித்து, நோலன் அப்படி கோமாவிலிருந்து  விழிக்கும் முன்பாக அவனை டாக்டர் ப்ரூக்ஸ் தன் லேபிற்கு எடுத்துச் சென்றதாக தெரிகிறது என்கிறான்.

ஏன் என்று தெரியாமல் இன்னும் குழப்பம் வருகிறது.

இதற்கிடையே நோலன் டாக்டர் ப்ரூக்ஸுடனான அடுத்த அமர்வில் கொஞ்சம் தெளிவாகத் தெரியும் காட்சிகளுக்கிடையே, அவனைத் தாக்க வரும் அந்த தலைகீழ் மனிதனைத் தாக்கி அனுப்பி விடுகிறான். காட்சிகள் சட்டென தெளிவடைகின்றன.

சிறு அதிர்ச்சி!

அவன் நோலன் இல்லை.  தாமஸ்.  மருத்துவர் ப்ரூக்ஸின் மகன்.  ஹிப்னாடிஸ  மயக்கத்திலிருந்து விடுபட்டு அவளிடம் 'ஏன் இப்படிச் செய்தாய் அம்மா?' என்று கேட்கிறான்.  'ஏன் இந்த உடல்?' என்றும் கேட்கிறான்.

அது டாக்டர் ப்ரூக்ஸின் முக்கியமான கண்டுபிடிப்பு.  மூளையின் நினைவுகளை, இறந்து போகும் ஒருவரின் மூளையிலிருந்து எடுத்து, இன்னொரு இறக்கும் நிலையில் உள்ள ஒருவர் மூளையில் செலுத்தி அவனை இவனாக்கும் செயல்.

Black Box!

இந்த இடத்தில்தான் எனக்கு மகரிஷி எழுதிய 'அதுவரையில் காஞ்சனா' நாவல் நினைவுக்கு வந்தது.  மூளை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் நினைவுகளில் காஞ்சனாவாகவே இருப்பதுதான் கதை.  70 களின் இறுதியில் படித்த கதை.

இப்போது நோலனால், அல்லது நோலனாக இருக்கும் தாமஸால், நோலன் மகள் ஈவாவை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.  அவள்மேல் பாசமும் இல்லை.  அதே சமயம் அவளை அப்படியே விட்டு விடவும் அவனால் முடியவில்லை.  அவளை தனது மருத்துவ நண்பன் வீட்டில் விட்டுவிட்டு, முன்பு சென்ற தனது, அதாவது தாமஸின்  மனைவி மிராண்டா வீட்டுக்குச் செல்கிறான்.  விவரம் கேட்டு பயந்துபோகும் அவள் இவனை வெளியே போகச் சொல்கிறாள்.  
அவளால் இவனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

அங்கே ஈவா மிகவும் சோகமாக இருக்கிறாள்.

மறுபடியும் ப்ரூக்ஸிடம் செல்கிறான் நோலன்/தாமஸ்.  அவள் அவனை ஹிப்னாட்டிஸத்தில் ஆழ்த்தி எங்கு குழப்பம் என்று பார்க்கிறாள்.  கோரமான வடிவத்தில் உள்ளே வருவது நோலன் என்று தெரிகிறது.  தாமஸ் அதை அம்மாவிடம் சொல்கிறான்.  அவனைக் கொன்று  விடும்படி கூறுகிறாள் ப்ரூக்ஸ்.

அப்புறம் என்ன நடக்கிறது என்பது பிளாக் பாக்ஸ் கதை.  அமேசான் பிரைமில் பார்த்தேன்.

=========================================================================================================

அப்பாவின் மறைவு பாடகி ஆக்கியது!



பழம்பெரும் நடிகரும், பாடகருமான, டி.ஆர்.மகாலிங்கத்தின் இளைய மகள், 42ஆண்டுகளாக, இன்னிசை குழு நடத்தி வருவது பற்றி, சாவித்ரி மகாலட்சுமி:

மதுரை அருகே உள்ள சோழவந்தானில், ராமகிருஷ்ணபவனம் என்ற பங்களாவில், அப்பா, அம்மா,அக்கா குடும்பம்,அண்ணன் குடும்பம், நான் எல்லாரும் கூட்டு குடித்தனமாக இருந்தோம்.

எங்கே ஷூட்டிங் என்றாலும், கடைக்குட்டி பெண்ணான என்னையும், அப்பா கூட்டிச் செல்வார். கடந்த, 1978, ஏப்., 21 காலை, காரை ஓட்டிக் கொண்டு, வெளியே போய் வந்த என் தந்தை டி.ஆர்.மகாலிங்கம், திடீரென மதியம், 2:00 மணிக்கு தவறி விட்டார். மாரடைப்பு. அப்போது அவருக்கு வயது, 54.அவரை மட்டுமே நம்பி இருந்தது எங்கள் குடும்பம். பெரிய அளவில் சொத்துகள் கிடையாது; அப்பாவின் நடிப்பு மற்றும் குரல் மட்டுமே சொத்து. அவர் நிறைய கச்சேரிக்கு, அட்வான்ஸ் வாங்கி இருந்தார். 



அவர் இறந்த சில நாட்களிலேயே, எல்லாரும் வீட்டுக்கு வந்து விட்டனர். வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. நானே, பாடுவது என முடிவு செய்தேன். மேடையில் முன் அனுபவம் கிடையாது.அப்பாவின் பாடல்களை, அவர் முன், ஆண் குரலில் பாடுவேன். உயிருடன் இருக்கும் போது, அப்பா கேட்டு ரசிப்பார். குறிப்பாக, அவரின், 'செந்தமிழ் தேன்மொழியாள்' பாட்டு, எனக்கும் ரொம்ப பிடிக்கும்; அப்பாவும் கேட்டு ரசிப்பார்.அந்தப் பழக்கத்தில், ஆண் குரலிலும், பெண் குரலிலும் அப்பா பாடலை பாடி கச்சேரிகள் செய்யத் துவங்கினேன். இரவு, பல இடங்களில் கச்சேரி.காலையில் வீடு திரும்பி, கல்லுாரிக்கு செல்வது என, மிகவும் சிரமப்பட்டேன்.

அப்போது, பி.யு.சி., படித்து வந்தேன்.அப்பாவின் பெயரிலேயே, டி.ஆர்.மகாலிங்கம் இன்னிசைக் குழு என்ற பெயரில், இசைக் குழுவை ஏற்படுத்தி, தமிழகம் முழுக்க சென்று பாடிஉள்ளேன். கூடவே, முறைப்படி, கர்நாடக சங்கீதம் படிக்கத் துவங்கினேன்.கடந்த, 1991ல், திருமணம் ஆகும் வரை, இரவினில் பாட்டு; பகலினில் துாக்கம் என்று தான் போனது.

அதற்குப் பின், சென்னைக்கு வந்து விட்டோம். தனிக்குடித்தனம். கணவர் வைத்தியநாதன், தனியார் நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருந்தார். இரண்டு குழந்தைகள். சென்னையில் இருந்தவரை, இசையமைப்பாளர்கள், எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா ட்ரூப்களில் பாடி வந்தேன். குழந்தைகள் வளர்ந்ததும், மதுரைக்கே வந்து விட்டோம். மறுபடியும் பாட வாய்ப்பு வந்தது; இப்போது வரை பாடிக் கொண்டிருக்கிறேன்!  

- தினமலரிலிருந்து -

=======================================================================================================


அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூன்று மாதங்களுக்குமுன் தனது குழந்தையின் முதல் பிறந்த   நாளைக் கொண்டாடினார்.  கொரோனா காரணமாக அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலையில் ஆர்வமாக அவரிடம் குழந்தையின் புகைப்படம் கேட்டிருந்தேன்.  அவர் அனுப்பிய புகைப்படத்தில் குழந்தையின் பூஞ்சிரிப்பில் உள்ளம் குளிர்ந்தது.  அப்போது அந்த புகைப்படங்களுக்குப் பொருத்தமாக எழுதி அவருக்கு வாட்ஸாப்பில் அனுப்பிய மூன்று கவிதைகள்!

பூஞ்சிரிப்பில்
பூக்களாய் தூவுகிறாய்
என் மனத்தோட்டம்
முழுவதும்
மகிழ்ச்சிப் பூக்கள்.

**

உள்ளம் கொள்ளை போகிறது
அந்தக் 
கள்ளமில்லா மழலைச் 
சிரிப்பில் 

**

மனங்கள் யாவும்
மலர்கின்றள
உன்
மத்தாப்பூச் சிரிப்பில்..

======================================================================================================

பொக்கிஷம் :

எழுத்தாளர் அநுத்தமா.


வகுப்பு வித்தியாசம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டார் போல!!


சென்ற வாரம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திலிருந்து பாடல் பகிர்ந்தோம்.  இந்த வியாழனில் அவர் சம்பந்தமாக சிறு செய்தி!


சிலேடை!


========================================================================================================

விளம்பரங்கள் பழசு!


அப்போது ரசிகர்களின் பேராதரவு பெற்ற லிரில் சோப் விளம்பரம்!  


பின்னர் இதே விளம்பரத்தில் ப்ரீத்தி ஜிந்தா நடித்தார்!

119 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நல்லவேளை அனுஷ்கா லிரில் விளம்பரத்தில் நடிக்கவில்லை. கொடைக்கானலில் லிரில் நீர்வீழ்ச்சி என்றே இதனை அழைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்...   வணக்கம்.  'அனுஷ் இந்த விளம்பரத்தில் நடிச்சிருந்தா' கற்பனை நல்ல கற்பனை!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    என்றும் வளம் நிறைந்து இருக்க வேண்டும்.
    இறைவன் அருள் கூட வரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ப்ளாக் பாக்ஸ்'' திகில் படமாக வந்ததோ.
    இதயத்தை மாற்றி வைத்தால்
    உணர்ச்சிகள் கூடவே வரும்.
    மூளையை மாற்றியதால் குழப்பம் மட்டும் மிஞ்சுமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமேசான் ப்ரைம் இருந்தால் பார்க்கலாம்.  அல்லது யு டியூபில் கிடைக்குமோ என்னவோ!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    "ப்ளாக் பாக்ஸ்" திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது. கடைசி முடிவை நீங்களும் "வெள்ளித்திரையில் காண்க" என்று வரும் அந்த கால திரைப்பட விமர்சனம் போல் விட்டு விட்டீர்கள். ஹா. ஹா.

    மகரிஷி எழுதிய நாவலும் நன்றாகத்தான் இருந்திருக்கும். சில கதைகளை கையில் எடுத்தால் முடிவை தெரிந்து கொள்ள வேண்டி, வேறு எந்த வேலைகளும் செய்யாமல் படித்திருக்கிறோம்.அது ஒரு காலம். மகரிஷி எழுதிய கதைகளும் என்னை அவ்வாறு ஈர்த்திருக்கிறது.

    பாடகர் டி.ஆர் மஹாலிங்கம் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் மகளின் வாழ்க்கை வரலாறும் இன்று அறிந்து கொண்டேன். அவருக்கு நல்ல குரல் வளம். அவர் மகளுக்கும் அது அப்படியே அமைந்தது இறைவன் தந்த பரிசு.

    தாங்கள் எழுதிய கவிதைகள் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகரிஷி எழுதிய சில சிறுகதைகள் கண்ணில் பட்டிருக்கின்றன. ஆனால் இது அப்படியே நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு மாத நாவலாகப் படித்தேன்.

      ரசித்திதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. நம்மைப் பாதிக்கும், மன உணர்வுகளைத் தூண்டி/மீட்டி விடும் கதைகள் கட்டாயம் மறக்காது. மற்றவற்றைச் சர்வ சாதாரணமாய்ப் படிச்சுட்டு மறக்கிறாப்போல் நம்மைப் பாதித்த கதைகள் மறக்காது. அந்த வகையில் நான் மறக்காத நாவல்களில் ஒன்று நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" திரைப்படமாக வந்ததாயும் கேள்விப் பட்டேன். நாவலின் ஜீவனை அதில் கொண்டு வர முடிந்ததா? அதுவும் தமிழ்ப்படத்தில்? சந்தேகமே!

      நீக்கு
  6. //முதல் பிறந்த கொண்டாடினார். // Please add the omitted word. :)))))

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்விலும் இனிமையும், அமைதியும், மகிழ்ச்சியும் நீடித்திருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. யாரு இந்த "ராம்மலர்?" புதுசா இருக்காங்களே! பதிவு படிச்சேன். சுவாரசியமான திரைப்பட விமரிசனம். பார்க்கணும்னு ஆவலைத்தூண்டுகிறது. அநுத்தமா படம் மட்டும் ஏன்? குழந்தையின் மலர்ச்சிரிப்பில் மனமே ஆறுதல் அடையும். நல்ல கவிதைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாரு இந்த "ராம்மலர்?" புதுசா இருக்காங்களே!//

      எனக்கும் புதுசு!  படம் பார்ப்பீங்களா என்ன?  அநுத்தமா படம் கிடைச்சுது பகிர்ந்தேன்.  கதை இங்கு பகிர்ந்தால் இடம் இருக்காதே...!!  கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. பொதுவாகவே திகில் படங்கள் பிடிக்கும். இது பயங்கரத் திகிலா இருக்கே!

      நீக்கு
    3. அவ்வளவு திகில் எல்லாம் இல்லை!  முடிவு நெகிழ்ச்சியாக இருக்கும்!

      நீக்கு
    4. // யாரு இந்த "ராம்மலர்?" // ஜெயகுமார் சந்திரசேகரன் link அனுப்பியிருந்தார். பதிவு சுவாரசியமாக இருந்ததால், ஸைட் பாரில் இணைத்துள்ளேன்.

      நீக்கு
  9. டி.ஆர்.மகாலிங்கம் அப்பா வழியில் நெருங்கிய சொந்தம். எங்கள் வீட்டு விசேஷங்களுக்குக் குடும்பத்துடன் தவறாமல் வந்திருக்கார். அந்தக் காலத்துப் பெரிய அம்பாசடர் கார்னு நினைவு. அவர் வரும்போதே அப்போதைய பிரபலமான சென்டின் மணமும் கூடவே வரும். நிஜம்மாவே அந்தக் காலத்து வண்ணார்கள், வண்ணாத்திகள் துணிகளின் நிறத்தைப் போக்கி வெளுத்துக் கொண்டு வந்தது உண்டு. லிரில் அழகி இறந்துவிட்டதாக ஒரு வதந்தி அந்தக் காலங்களில். இப்போதைய லிரில் விளம்பரங்கள் பார்க்க முடியறதில்லை. மோசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் லிரில் அழகி கரேன் தான் இறந்துவிட்டார் கீதாமா.
      அதுபோல சில் அருவியில் அவர் நடித்தது அட்டகாசமாகப் பேசப்பட்டது.

      நீக்கு
    2. அப்படியா வல்லி? அது உண்மைச் செய்தியா? அடப்பாவமே! :(

      நீக்கு
    3. டி  ஆர் மகாலிங்கம் எதிரில் நான் 'தென்றலோடு உடன்பிறந்தாள்' பாடல் பாடி இருக்கிறேன்!  முதுகில் தட்டிக்கொடுத்தார்.  உங்க சொந்தமா அவர்?  என் அப்பா அவருக்கு பெரும் ரசிகர்.  லிரில் செய்தி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. மஹரிஷி எழுதிய அந்த நாவல் முதலில் "ராணி" வாராந்தரியில் தொடராக வந்து பின்னர் சில, பல சுருக்கங்களுடன் "ராணி முத்து" வெளியீடாக வந்தது. ராணி, குமுதம் போன்றவை அப்போதெல்லாம் படித்தால் வீட்டில் திட்டுவதோடு கெட்ட பெயரும் கிடைக்கும். ஒரு முறை ராணி புத்தகமும் கையுமாக என் வாத்தியாரிடம் மாட்டிக் கொண்டேன். :( இப்போது பல பிரபல எழுத்தாளர்கள் ராணியில் தங்கள் நாவல்கள்/கதைகள் வருவதைப் பெருமையாக நினைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  ராணியில் தொடராக வந்ததா? ராணி முத்துவில் படித்தேனா ன்று நினைவில்லை.  வேறு ஏதோ மாதாந்தரி!  அந்தக் காலத்தில் ராணியில் என் அப்பாவின் கதை ராணியில் வந்திருக்கிறது.

      நீக்கு
    2. ஆமாம், அறுபதுகளின் கடைசியில் ராணியில் தொடராக வந்தது தான் பின்னர் எழுபதுகளின் ஆரம்பத்தில் "ராணி முத்து"விலோ அல்லது "மாலைமதி" குமுதம் வெளியீடாகவோ வந்தது. ஆரம்பத்தில் ராணி முத்து தான் ஆரம்பித்தார்கள். பல பிரபலமான நாவல்களைச் சுருக்கிக் கொடுத்து வந்தார்கள். அது வெற்றியடையவே பிரபலங்களின் நாவல்களை மாலைமதியும் வெளியிட ஆரம்பித்தது. அந்த நாட்களில் இதை வாங்கிப் படிப்பதில் போட்டா போட்டி அதிகம். மாலைமதிக்காகச் சிறப்பாகத் தனியாக எழுதியும் கொடுத்திருக்கின்றனர் பல நாவலாசிரியர்கள். அதில் சுஜாதாவின் "விபரீதக் கோட்பாடுகள்" பிரசித்தம். இது திரைப்படமாகவும் வந்த நினைவு. ஶ்ரீதேவி நடித்து (அம்மன் அருள்வாக்குச் சொல்பவராக வருவார்) வந்த ஒரு படமும் இம்மாதிரி மாலைமதி/ராணி முத்துவில் வந்த கதை தான்.

      நீக்கு
    3. // ஶ்ரீதேவி நடித்து (அம்மன் அருள்வாக்குச் சொல்பவராக வருவார்) வந்த ஒரு படமும் இம்மாதிரி மாலைமதி/ராணி முத்துவில் வந்த கதை தான்.// 1978 ஆம் வருடம் வந்த படம் 'வணக்கத்துக்குரிய காதலியே ' கதை - ராஜேந்திரகுமார்.

      நீக்கு
    4. ராணிமுத்துவில் நான் முதலில் படித்த நாவல்கள் தேவதாஸ், தூக்குமர நிழலில்  நீ நான் நிலா போன்றவை.  சுஜாதாவின் விபரீத கோட்பாடு படமாக வரவில்லை.

      நீக்கு
    5. கீதா அக்கா சொல்வது சிவப்புக்கல் மூக்குத்தியோ...   கண்ணதாசன் எழுதிய கதை.  ஸ்ரீதேவி குறி சொல்பவராக வருவார்.  கமல் பூசாரி!

      நீக்கு
    6. நீ, நான், நிலா அந்தக் காலங்களில் அறுபதுகளின் கடைசியில் தினமணி கதிரில் சாவி ஆசிரியராக இருந்தப்போ வந்து கொண்டிருந்தது. போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். ரசிப்போம், விவாதிப்போம்.என் மாமாக்கள் அனைவருமே அந்தத் தொடரின் ரசிகர்கள். அவர்களுக்கு இணையாக நானும் விவாதிப்பேன். ஆனால் ராணிமுத்துவில் வந்தப்போ மூலக்கதையில் பாதி கூட இல்லை. பல கதைகளும் அப்படித்தான் சுருக்கித் தரப்பட்டன.

      நீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  12. திரு மஹாலிங்கத்தின் மகள் பற்றித் தெரியாது.
    நன்றாக இருக்கட்டும்.
    வாழ்த்துகள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா.   அவர் மகன் பெயர் சுகுமார் என்று தெரியும்.  அவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

      நீக்கு
    2. டி.ஆர்.மஹாலிங்கம் கதாநாயகனாக நடிச்சப்போ அதில் அவர் பெயர் "சுகுமார்". அந்தப் பெயரில் நடிச்சுப் பிரபலம் ஆனதால் அப்போது பிறந்த தன் பையருக்கும் "சுகுமார்" என்னும் பெயர் வைத்தார் என்பார்கள்.

      நீக்கு
    3. ஆமாம்.  நானும் படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
  13. மகரிஷி அவர்களின் கதைகளைக் கல்கியில் படித்தேன் என்று நினைக்கிறேன்.

    கடைசி கதை தானே நதியைத் தேடி ஓடும் கடல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதியைத்தேடி வந்த கடல். இதை ஜெ படமாக்கினாரோ?

      நீக்கு
    2. ஆமாம்னு நினைக்கிறேன். ஜெ. கதாநாயகியாக நடிச்சாதாயும் நினைவு. 80களில் வந்திருக்கணும். ஏனெனில் அதன் பின்னர் வந்த படங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லை.

      நீக்கு
    3. ஆம்.  நதியைத் தேடி வந்த கடல்.  ஜெயலலிதா நடித்த கடைசித் தமிழ்த் திரைப்படம் என்று நினைவு.  அதில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஒன்று ஜெயச்சந்திரன் குரலில் தவிக்குது தயங்குது...  இன்னொன்று ரொம்ப ஸ்பெஷல்...   எஸ் பி பி - சுசீலா  குரலில் 'எங்கேயோ ஏதோ' என்கிற அற்புதமான பாடல்.  புவனா ஒரு கேள்விக்குறி கூட மகரிஷி அஃதைத்தான்.  அப்புறம் வட்டத்துக்குள் சதுரம்...

      நீக்கு
  14. ''அனுத்தமா ''அவர்களைப் பற்றி பசுபதி பதிவுகளில் படித்தேன்.
    எங்க எதிர்வீட்டிற்கு அடிக்கடி வருவார்.
    அந்த வீட்டு மருமகள் விஜியின் பெரியம்மா அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    அவரை நீங்கள் நேரிலேயே பார்த்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம். தொகுப்பு சுவாரஸ்யம். Black box பட விமர்சனம் கடைசி நிமிடத்தில் ஒட்ட வைக்கப் பட்டதோ? கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் இதே கருத்தை கொண்ட ஒரு ஆங்கிலப் படம் பார்த்த நினைவுக்கு வந்தது.
    ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒரு குழந்தை இருக்கும் மத்தியத்தர வகுப்பை சேர்ந்தவள், இன்னொருத்தி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம் பெண். குடும்பப் பெண்ணின் மூளையை இளம் பெண்ணுக்கு பொருத்துவார்கள். அதில் ஏற்படும் மனப்போராட்டங்களை விறுவிறுப்பாக சொல்லும் படம்.பெயர்தான் மறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   வணக்கம்.  பிளாக் பாக்ஸ் கடைசி நிமிடத்தில் ஒட்டவைக்கப்பட்டது அல்ல!  படம் பார்த்த உடனே எழுதப்பட்டு சேர்க்கப்பட்டது!  நீங்கள் சொல்லி இருக்கும் அஃதை அமைப்பில் ஏதோ சில தமிழ்ப் படங்களும் உண்டோ?  இரட்டையர் கதை என்கிற சிறு மாறுதல்களோடு!

      நீக்கு
  16. குழந்தையின் சிரிப்பு அருமையான கவிதைவரிகளில்
    மலர்ந்து எங்களைப் பூரிக்க வைக்கிறது. பாராட்டுகள்
    ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. உங்களை கவிஞராக்கிய அந்தக் குழந்தையின் படத்தை போடாவிட்டாலும், வேறு குழந்தைகளின் படங்களை போட்டிருக்கலாம். Don't read between the lines I literally mean it.

    பதிலளிநீக்கு
  18. அநுத்தமா அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். நூல் பிடித்தாற் போன்ற நேரான எழுத்து. அவருடைய எழுத்தை பகிர்ந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். படம் மட்டும் போட்டு விட்டு விட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி தயவாலும் ஶ்ரீராம் தயவாலும் கடந்த நாட்களில் 3,4 அநுத்தமா நாவல்கள் படித்தேன். அநேகமாய் எல்லாமும் படித்திருக்கேன். ஏதோ ஒன்றிரண்டு தவிர்த்து!

      நீக்கு
    2. அநுத்தமா கதைகள் சிறுவயதில் படித்திருக்கிறேன்.  ஆனால் நினைவில் இல்லை.  இப்போதுதான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன்.  இனி தேடிப் படிக்கவேண்டும்!

      நீக்கு
    3. இணையத்தில் இருந்தது.  எடுத்துக் கொடுக்கப்பட்டது.  இதில் எங்கள் தயவு என்ன இருக்கிறது கீதா அக்கா?

      நீக்கு
  19. வீர பாண்டிய கட்டபொம்மன் சித்திரமும் விளக்கமும் மிக அருமை.

    எல்லாவற்றையும் வெளுத்து விட்டாரே சலவையில்!!!
    ஹாஹாஹா.

    பதிலளிநீக்கு
  20. லிரில் விளம்பரம் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ப்ரீத்தி ஜிந்தாவின் குளியலை விட முதல் அழகியின் குளியலில் உற்சாகம் பீரிடும்.

    பதிலளிநீக்கு
  21. பதின்ம வயதுகளில், 10-12ம் வகுப்பு படிக்கும்போது லிரில் சோப் மற்றும் லக்ஸ்தான் என் ஃபேவரைட். அந்த லக்ஸின் வாசனை இப்போது இல்லை. அருமையான லைஃப்பாய் அப்போது லேப்களில் உபயோகித்தார்கள். முந்தைய ஜெனரேஷன் அந்த சோப்பை வாங்கித்தர எண்ணுவார்கள், மிக மிக மெதுவாக்க் கரையும் என்பதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது சிலோன் லக்ஸ் என்றெல்லாம் வரும்.  அதுபோல சிலோன் சந்திரிகா சோப்!

      நீக்கு
  22. நடிகர்களில் பலருக்கு அதீதமான பணவரவை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியவில்லை. குடும்பத்தை பரிதவிக்க விட்டுச் செத்துப் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி ஆர் மகாலிங்கம் பற்றிச் சொல்கிறீர்களா?  அவர் எடுத்த சொந்தப்படம் ஒன்று கூட ஓடவில்லை என்பதுதான் சோகம்!

      நீக்கு
  23. மூளைமாற்று அறுவை சிகிச்சை என்பதே இன்னொரு ஆளா இல்லை பலர் சொல்வதுபோல நம் நினைவலைகள் சூக்கும உடலில்தான் சேகரமாகிக் கிடக்கிறது, ROMதான் மூளையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை வைத்துதானே கற்பனையை ஓடவிட்டு கதைபல பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்!

      நீக்கு
  24. ..நல்லவேளை அனுஷ்கா லிரில் விளம்பரத்தில் நடிக்கவில்லை.//

    பிழைத்துப்போகட்டும் லிரில் என்று விட்டிருப்பார். கருணை உள்ளம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வாசனை அவருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!

      நீக்கு
    2. மஹாராணி கம்பீரமாக சிம்மாசனத்தில் அமருவாரா? நீச்சலுடையில் குதிப்பாரா?

      நீக்கு
    3. அதானே...    அதானே...   அதானே...!

      நீக்கு
  25. அநுத்தமாவின் படம் இங்கே ஏன்? இலக்கியவாடை கொஞ்சம் அடிக்கட்டுமே என்பதற்காகவா!
    சரி, அநுத்தமாவின் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? நான் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நிறையப் படிச்சிருக்கேன். "லக்ஷ்மி"யின் சீரியோ டைப் நாவல்களை விட அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பிரேமா நந்தகுமார், குமுதினி ஆகியோரின் நாவல்கள்/கட்டுரைகள் பிடிக்கும்.

      நீக்கு
    2. அநுத்தமா கதை படித்தும் எதுவும் நினைவில் இல்லை.  படம் கிடைத்த உடன் நீங்கள் சொல்லி இருப்பதுபோல இலக்கிய வாசனை அடிக்கட்டுமே என்று சேர்த்து விட்டேன்!

      நீக்கு
    3. //லக்ஷ்மி"யின் சீரியோ டைப் நாவல்களை விட// ஆனால் அவர் வெகு ஜன அபிமானி இல்லையா? ஆனந்த விகடன் மகிமையோ? அவருக்கு அடு்த்த இடத்தை சிவசங்கரி, ரமணி சந்திரன் போன்றவர்கள் பிடித்துக் கொண்டார்கள். ஆர்.சூடாமணி வேறு லெவல்.
      பிரேமா நந்தகுமார், குமுதினி படித்த நினைவு இல்லை.

      நீக்கு
    4. ரமணி சந்திரன் நாவல்களெல்லாம் கனவுலகில் மிதப்பவை. அவற்றோடு ஒப்பிடுகையில் லக்ஷ்மியின் நாவல்களில் யதார்த்தம் இருக்கும். சூடாமணி அதி அற்புதம். ராஜம் கிருஷ்ணன் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் அநுத்தமா, பிரேமா நந்தகுமார்(இவர் மாமியார் தான் குமுதினி) குமுதினி ஆகியோர் புரட்சி செய்தவர்கள் அந்தக் காலங்களிலேயே! பிரேமா நந்தகுமார் இங்கே மாசாமாசம் இலக்கிய வட்டம் கூட்டம் நடத்துகிறார். எனக்கும் அழைப்பு எல்லாம் வந்திருந்தது. ஆனால் போக முடியவில்லை. நண்பர் ஒருவர் அஷ்டாவதானி மௌலி என்னும் மஹாலிங்கம் அழைத்துப் போவதாகச் சொல்லி இருந்தார். அவரே இப்போது இல்லை. அவர் பெண்ணும் அருமையாகப் பதிவுகள் ஆங்கிலம், தமிழில் எழுதுவார். தேர்ந்த அறிவாளி. நல்ல ஆழமான சிந்தனை. மாதங்கி மௌலி என்னும் பெயரில் எழுதி வந்தார். அறிவு ஜீவிகளில் சேர்ந்தவர். என்னை "ப்யூரிஸ்ட்" என்றே குறிப்பிடுவார். தன்னை/அப்பாவையும் சேர்த்து ரேஷனலிஸ்ட்கள் என்பார். இப்போது ஆஸ்திரேலியாவில் மாதங்கி மௌலி இருக்கார். ரிஷபன் சார், வைகோ சார், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அனைவருக்கும் மாலி அவர்கள் நல்ல பரிச்சயம். அவங்க தான் இவருடைய அஷ்டாவதானத்தையும் காட்சியாக நடத்தினார்கள். நான் இல்லாததால் காணொளி வந்தது. நீளமான பதிலாகி விட்டதோ?

      நீக்கு
    5. தப்பில்லை. இப்படியெல்லாம் அவ்வப் பொழுது வந்தால்தான் எ.பி.க்கும், இலக்கியத்துக்கும் ஸ்னான ப்ராப்தி உண்டு என்பது புரியும்.:))

      நீக்கு
    6. அஷ்டாவதானி மாலி ஸார் பற்றி தெரியும்.  மாதங்கி அவர்களையும் தெரியும்.  (அவர்களுக்கு என்னைத்தெரியாது!)  ஜி எம் பி ஸார் கூட அறிவார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    7. // அவ்வப் பொழுது வந்தால்தான் எ.பி.க்கும், இலக்கியத்துக்கும் ஸ்னான ப்ராப்தி உண்டு என்பது புரியும்.:)) //

      ஹிஹிஹி....

      நீக்கு
  26. எல்லாவற்றையும் வெளுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொடுத்து, வெள்ளையாகப் பேசிக்கொண்டும் உட்கார்ந்திருக்கானே.. அவனையும் சந்தேகப்படுகிறாரே தாத்தா !

    பதிலளிநீக்கு
  27. இனிய காலை வணக்கம்.

    இன்றைய தொகுப்பு சிறப்பு.

    ப்ளாக் பாக்ஸ் - நல்லதொரு அறிமுகம். பார்க்கக் கிடைத்தால் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.  வணக்கம்.  அந்தப் படம் அமேசானில் இருக்கிறது.  ஒருமுறை பார்க்கலாம்.

      நீக்கு
  28. அமேசான் ப்ரைம் - பல படங்களால் நல்லதொரு பொழுது போக்கு...

    கவிதை வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  29. "Black box" is interresting to read. nowadays, dont want to see the movie...but like to read as it is up to our imagination. Nice "kutti kavidhai"!

    பதிலளிநீக்கு
  30. மகரிஷி எனது உறவினருக்கு உறவினர். 70-களில் படித்த அவரது 'அது வரை காஞ்சனா'
    கதையின் சாரம் இந்நாள் வரை உங்கள் ஆழ் நினைவுகளில் படிந்துள்ளது. ஆனால்
    சில வருடங்களுக்கு முன் நீங்கள் வாசித்து லயித்த எனது 'பார்வை' நாவலின் கதை போக்கு கூட உங்கள் நினைவுகளில் இப்பொழுது இருக்காது. இதற்கு உளவியல் காரணம் என்னவாகும் இருக்கும் என்று நினைக்கிறீர்கள், ஸ்ரீராம்?.. (கதையைப் பற்றி க்ளூ கொடுத்தால் நினைவுக்கு வரலாம். ஆனால் அடிப்படை கேள்வி அப்படி நினைவுக்கு வருவதைப் பற்றி அல்ல)...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பார்வை" தொடர் வந்து பத்து வருஷம் இருக்குமோ? முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் படிச்ச நினைவு.

      நீக்கு
    2. ஜீவி ஸார்...   பார்வை கதை நினைவுக்கு வரவில்லைதான்!  பாதியில் நிறுத்தப் பட்டதோ...  இசை சம்பந்தப்பட்ட கதை?

      நீக்கு
  31. 'அது வரை காஞ்சனா' ஒரு குறுநாவல். குமுதத்தின் மாத இதழான 'மாலைமதி'யில் பிரசுரமானதாக நினைக்கிறேன்.

    மகரிஷி பற்றி சென்ற, இன்றைய தலைமுறையினர் அறிய மாட்டார்கள். அதனால் என்ன? ப்ளாக் பாக்ஸ்' பற்றி பின்னூட்டங்கள் வரும் என்பது மட்டும் நிச்சயம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பும் ஒரு முறை மகரிஷி பற்றி நீங்கள் எங்கள் பிளாக்கில் குறிப்பிட்ட பொழுது மகரிஷியின் புகைப்படம் அனுப்பி பிரசுரிக்கக் கேட்டுக் கொண்டேனே, ஞாபகம் இருக்கா?..

      நீக்கு
    2. அதென்னவோ இரண்டுக்குமே வரவில்லை பின்னூட்டங்கள்!

      நீக்கு
  32. இரயில் பயணங்களுக்கு மட்டுமில்லை. இந்த வகுப்பு பேதம் இன்றைய நாள் வரை உயிர்ப்பு கொண்டு உலாவி வரும் அரசியல் என்பது அன்றைய விகடனாருக்குத் தெரியாது போனது தான் ஆச்சரியம்.

    வசதியுள்ளவனுக்கு முதல் வகுப்பு பயண செளகரியம்; வசதியற்றவனுக்கு வியர்வை நாற்ற நெருக்கடிப் பயணம் என்று பணம் என்பது எதையும் தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கக் கூடாது என்று இந்த தேசத்தின் பெருமகனார் சாஸ்திரி அவர்கள் நினைத்திருக்கிறார்கள். பாவம்! அவரை நினைத்தாலே அரியலூர் இரயில் விபத்தும் தாஷ்கண்ட் ஒப்பந்தமும் தான் நினைவுக்கு வருகின்றன.

    1956-ம் ஆண்டு வாக்கில் என்று நினைக்கிறேன். நம்ம திருச்சி பக்க அரியலூரில் நிகழ்ந்த இரயில் விபத்து அது. பக்கத்து மருதையாற்றில் கரையே தெரியாதபடி வெள்ளம் ஓடிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுது. இருப்புப்பாதையையே மறைத்துக் கொண்டு ஓடிய வெள்ளம். இரயில் பாதையோ வெள்ளச் சீற்றத்தில் நீண்ட தூரம் அரிக்கப்பட்டிருந்த்தது. அந்த நேரத்தில் அந்த இடத்தைக் கடந்த தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகியது. நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்ச் சேதம். பலருக்கு உடல் சேதம்.

    இந்த விபத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சராக இருந்த பெருந்தகை லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் மந்திரி பதவி துறந்தார். எந்த துயரத்தையும் அரசியலாக்க்கும் வித்தை தெரிந்தவர்களின் 'அரியலூர் அழகேசரே! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?' கோஷத்திற்கு நாணி, துணை அமைச்சராக இருந்த ஓ.வி.அழகேசனும் தன் பதிவியிலிருந்து விலகினார்.

    பிற்காலத்தில் நடந்த ஒவ்வொரு இரயில் விபத்துக்களின் போதும் அந்த இருவரின் இராஜினாமாக்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்த இருவர் மக்கள் மனசில் சாகா வரம் பெற்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அறியாத சரித்திர சம்பவங்கள் மற்றும் முன்பு வாழ்ந்த நிஜமான தலைவர்கள் பற்றி அறிந்ததில் நெகிழ்த்தேன் ...

      நீக்கு
    2. ஆம்.  அரியலூர் என்றாலே ரயில் விபத்தும், உடனே இந்த இருவர் நினைவும் எழும்தான்.சாஸ்திரி நினைவு வந்ததும் அவரின் மரணத்திலும் மர்மம் உண்டு என்பதும் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    3. 'அம்மை’ இந்திராவின் சூழ்ச்சிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
      ஆனால்.. வினை விதைத்தவள் வினை அறுத்துச் சென்றாளே...

      நீக்கு
  33. கெட்டிபொம்மு பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி?.. இந்திய விடுதலைப் போரின் முன்னோடியான புலித்தேவனார் பற்றியும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலித்தேவனா?  பூலித்தேவனா?  தேடிப்பார்க்கவேண்டும்.

      நீக்கு
    2. பூலித்தேவன். சங்கரன் கோயிலில் இவர் மறைந்த இடத்தில் முன்னெல்லாம் அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்கள். இப்போத் தெரியலை.

      நீக்கு
  34. சுஜாதாவின் லாண்டரி கணக்கோ?.. சிவப்புப் புடவை, மஞ்சப் பாவாடை பற்றியெல்லாம் பெரியவர் கணக்குக் கேட்கிறாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா பற்றிய இன்றைய இரண்டாவது பிரஸ்தாபம்!

      நீக்கு
  35. அநுத்தமாவின் புகைப்படம் மட்டும் பிரசுரித்து நகர்ந்தால் எப்படி?..

    'கேட்ட வரம்' இன்னும் மனசில் தனி இடத்தைப் பிடித்து இருக்கிறது. வேப்பமரத்து பங்களா மட்டும் என்னவாம்?.. கலைமகளில் வாசித்த மணல் வீடு?.. ருசியான கதைகள், அற்புதமான, படு பேஷான, அழகான என்று எத்தனை கதைகளை ரகரகமாக எழுதியிருக்கிறார்?.. அநுத்தமா பற்றி செளகரியப்பட்ட பொழுது விவரமாக எழுதுங்கள். அப்புறம் ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, வாஸந்தி, இந்துமதி என்று வரிசையாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படி நினைவில் இல்லாதது வருத்தம்தான்.  இனி படிக்க வேண்டும்.

      நீக்கு
  36. மூன்றில் எனக்கு அந்த மூன்றாவதாக ஜொலித்த மத்தாப்பூ சிரிப்பு தான் பிடித்துப் போயிற்று.

    பதிலளிநீக்கு
  37. எல்லா செய்திகளையும் வாசித்தேன் ப்ளாக் பாக்ஸ் சிற்ந்த கற்பனைவியாழனில்உங்கள் எழுத்து எங்கே தேடினேன் வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ....   கவிதையைப் படிக்கவில்லையா ஜி எம் பி ஸார்?

      நீக்கு
  38. கொடைக்கானல் சென்றபோது லிரில்...சூட்டிங் இடம் எனக் காண்பித்தார்கள்.

    பதிலளிநீக்கு
  39. ப்ளாக் பாக்ஸ் பார்த்துட்டு சொல்றேன் :) ப்ச்  btw நான்  நெகட்டிவ் வன்முறையை சமீபகாலமா  தவிர்க்கிறேன் :) மகளுடன் கிரேட்டஸ்ட் ஷோ மேன் பார்க்கும்போது படுத்தி எடுத்திட்டேன் .வரவர அதிகம் இப்படி மனம் படபடக்குது ஆனாலும் பாவக்கதைகளையே பார்த்தாச்சு :) அதனால் பிளாக் பாக்ஸ் பார்த்துட்டு சொல்றேன் :)அநுத்தமா அவர்க ளின் ருசியான கதைகள்  பிரமாதமான கதைகள் இவைலாம் படிச்சிருக்கிறேன் அநுத்தமா அவர்கள் தனது மாமனாரின் வழிகாட்டல் மூலம் அவர் உற்சாப்படுத்தியதன் மூலம் கதை எழுத ஆரம்பித்தார்னு எங்கோ படிச்சா நினைவு அநுத்தமா எழுத்தாளர் பற்றி பல பிரபலங்கள் கூறியவற்றில் தொகுப்பு :)
    http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4423&id1=84&issue=20171216

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   பாவக்கதைகள் பார்த்துட்டீங்களா?  நானும் பார்த்தேன்!  லிங்க் சென்று பார்க்கிறேன்.  நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
    2. மாமனார் மட்டுமில்லை, கணவரும் கூட அவர் கதைகளைப் பிரதி எடுத்துக் கொடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பினு நிறைய உதவிகள் செய்வாராம். அதே போல் ராஜம் கிருஷ்ணனின் கணவரும் கூட!

      நீக்கு
  40. டி ஆர் மஹாலிங்கம் அவர்களின் பாடல்கள் டிவி ஒளியும் ஒலியும் உபயத்தில் இன்னும் சில நினைவிருக்கு .மூன்று கவிதைகளும் அழகு குழந்தைகள் எப்பவும் அழகுதான் .எல்லா குழந்தைகளுமே அழகுதான் :) கவிதை அழகுக்கு அழகூட்டுது .சிலேடை :)) ஹாஹாஹா  சாயம் போகுமளவுக்கா வெளுத்துட்டார் 
    ஹாஹாஹா அப்போ லிரில் ad வரும்போது சேனல் மாத்துவாங்க :) அந்த சோப்பில் ஒண்ணுமில்லை விளம்பரம்தான் அதை தக்க வச்சி  .இப்பவும் விற்கிறாங்களா லிரில் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி ஆர் மகாலிங்கத்தின் நிறைய பாடல்கள் நன்றாய் இருக்கும்.  செந்தமிழ்த்தேன்மொழியாள், திராவிடப்பொன்னாடே , மழை சொட்டுச்சொட்டு சொட்டுனு, நானன்றி யார் வருவார், மற்றும் இசைத்தமிழ் நீ செய்த போன்ற பல பாடல்கள்.  கவிதைகளை ரசித்ததற்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!