திங்கள், 20 ஜூன், 2022

"திங்க"க்கிழமை : மெனஸ்காயி   -  கீதா ரெங்கன் ரெஸிப்பி.

  

மெனஸ்காயி செய்முறை

மெனஸ்காயி(காரசாரமான காய்) - மாவினகாயி(மாங்காய்) கொஜ்ஜு செய்முறை

 

நமஸ்காரா! வணக்கம்! ரொம்ப நாளாயிடுச்சுல்ல எபி அடுக்களைக்குள் நுழைந்து? செய்முறை பற்றிய குறிப்புகள் தவிர வேறு கதைத்தல்கள் இல்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். 

செய்முறையை மட்டும் சொல்லிச் செல்லாமல் அதன் வேறு வகைகள், சில வித்தியாசங்களைச் சொன்னால், சமையலில் ஆர்வம் உள்ள பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதுடன் சமையலில் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள உதவுமே என்பதால்தான் சொல்கிறேன்.

மெனஸ்காயி - மங்களூர், உடுப்பிப் பகுதியில் ஒரு சமூகத்தினரிடையே கல்யாணங்களிலும் பரிமாறப்படும் மிகவும் பிராபல்யமான - பைனாப்பிள் மெனஸ்காயி - குழம்பு வகை

நான் அடிக்கடிச் சொல்வது அஞ்சரைப் பெட்டியில் இருக்கும் பொருட்களையும், சமையலுக்குத் தேவையான மற்ற பொருட்களையும் “Permutation Combination”ல் ஒவ்வொரு பகுதிகளிலும் செய்யும் போது கிடைப்பதுதான் பல செய்முறைகள், செய்முறைகளில் சின்ன வித்தியாசத்தில் சிலவற்றில் (மட்டுமே) சுவை வேறுபடுகிறது, பெயர்களும் வேறுபடுகிறது. அவ்வளவே.

அப்படி, இந்த மெனஸ்காயியை தென்னகப் பகுதியில் செய்யப்படும் தாளகம்/வறுத்து அரைத்த குழம்பின் (எபியில் சுட்டி) உறவுன்னு சொல்லலாம். ஏன் என்றால் மெனஸ்காயிக்கும் மிக முக்கியம் எள்ளு. அதன் சுவைதான் இதனை வேறுபடுத்தும்.

சரி அது என்ன மெனஸ்காயி? பெயரே வித்தியாசமாக இருக்கிறதே! மிளகாய் - கன்னடத்தில் - “மெனசினகாயி”.  இந்தக் குழம்பு கொஞ்சம் காரசாரமாக, கன்னட தேசத்திற்கே உரிய கொஞ்சம் திதிப்பின் சுவையுடன் செய்யப்படும் குழம்பு. அதுதான்மெனஸ்காயிஎன்று சொல்கிறார்கள் என்பது என் புரிதல்.

எனக்குத் தெரிந்த வரையில் எப்படி தாளகத்திற்கும், வறுத்து அரைத்தக் குழம்பிற்கும் மயிரிழை வித்தியாசமோ அதே போன்றுதான் இந்த மெனஸ்காயி வகைகளில் அரைக்கப்படும் மசாலாவின் சுவையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் போடப்படும் காய்களின் சுவையினால் சுவை வேறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

மெனஸ்காயி வகைகள்மாவினகாய்(மாங்காய்) மெனஸ்காயிபைனாப்பிள் (கொஜ்ஜுமெனஸ்காயி, பைனாப்பிள், மாவினகாயி மெனஸ்காயிஅம்பட்டே மெனஸ்காயி(HOG PLUM - ஆம்பழம்காட்டு மாங்காய் இது பல மருத்துவக்குணங்கள் கொண்டது) ஹாகலகாயி (பாகற்காய்) மெனஸ்காயி.

இப்போது மாங்காய் மெனஸ்காயி செய்முறை (மற்ற வகைகள் பின்னர் நான் செய்யும் போது படங்கள் எடுத்துப் பகிர முயற்சி செய்கிறேன். குறிப்பாகப் பைனாப்பிள் மெனஸ்காயி)

கடுபு இட்லிக்கு (இதுவும் அப்பகுதியில் பிராபல்யம்) பைனாப்பிள் மெனஸ்காயி தொட்டுக் கொள்ளும் பழக்கம்.  மாங்கா மெனஸ்காயியும் நன்றாக இருக்கும். நம் வீட்டில் சாதத்திலும் சேர்த்துச் சாப்பிடுவதுண்டு.

தேவையான பொருட்கள்:-

மாங்காய்  - நல்ல புளிப்புள்ள மாங்காய் பெரியதாக ஒன்று. எனவே புளி தேவை இல்லைமாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி 1 ½ கோப்பை அளவு.  தோல் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

காரமில்லாத மங்களூர் சிவப்பு மிளகாய் வற்றல்/பைய்ட்கி மிளகாய் – 5-6 (இந்த மிளகாய் இல்லை என்றால் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சிவப்பு வற்றல் மிளகாய் உங்கள் காரத்திற்கு ஏற்ப)

பச்சை மிளகாய் – 2

காரம் அதிகம் வேண்டாம் என்பவர்கள் உங்கள் காரத்திற்கேற்ப சிவப்பு மிளகாயையும் பச்சை மிளகாயையும் எடுத்துக் கொள்ளலாம். நான் எடுத்துக் கொண்ட மாங்காய்க்கு  6 சி மி, 2 மி சரியாக இருந்தது.

கறுப்பு/ப்ரௌன் எள்ளு – 1 மேசைக்கரண்டி (நான் இரண்டும் கலந்து எடுத்துக் கொண்டேன்)

வெள்ளை உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி.

வெல்லம் பொடி – 1 மேசைக்கரண்டி (வெல்லம் வேண்டாம் என்றால் தவிர்த்துவிடலாம்)

துருவிய தேங்காய் – ½ - ¾ கோப்பை 

மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டி

உப்பு  - தேவைக்கேற்ப

எண்ணைதேங்காய் எண்ணை பயன்படுத்துவதுதான் வழக்கம். அதுதான் சுவை.

ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், போட்டு மாங்காய் நன்றாக மூழ்கும் அளவிற்கும் மேல் தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். கொதிக்கும் போது வெல்லத் தூளையும் சேர்த்துக் கொள்ளவும் விருப்பப்பட்டால். ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணை விட்டு அதன் மேல் கறிவேப்பிலை ஒரு ஆர்க் கிள்ளிப் போடவும். கொஞ்சம் கொதித்ததும் தேவையான உப்பையும் போட்டுக் கொண்டுவிடவும்.

அடுத்தாற்போல் வாணலி சூடானதும் எள்ளைப் போட்டு வெடிக்கவிட்டு எடுத்துக் கொள்ளவும். ரொம்ப வறுத்துவிடக் கூடாது சுவை கெட்டுவிடும். அடுத்து, துருவிய தேங்காயைப் போட்டுக் கொஞ்சம் ஈரம் போக வறுத்துக் கொள்ளுங்கள். சிவக்க வறுக்கக்  கூடாது. தாளகம் சுவை வந்துவிடும்.  இதையும் எடுத்து எள்ளுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணை விட்டு, அதில் பைய்கிடி மிளகாயை பாதியாகவோ கால் பாகமாகவோ கிள்ளிப் போட்டு (இந்த மிளகாய் சுருக்கங்களுடன் இருப்பதால் முழுசாகப் போடும் போது வறுபடுவது சரியாக இருப்பதில்லை. அதிக எண்ணை விட வேண்டியுள்ளது.) வறுத்துக் கொள்ளுங்கள். பாதி வறுபட்டதும் உளுத்தம்பருப்பையும் போட்டுச் சிவக்க வறுபட்டதும் எல்லாவற்றையும் சேர்த்து ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

இதற்குள் மாங்காய் நன்றாக வெந்திருக்கும். வெந்த மாங்காயுடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு கொஞ்சம் கெட்டியாகி வாசனை வந்ததும், அடுப்பை அணைத்து, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் கடுகும் கறிவேப்பிலையும் தாளித்து விட்டால் மெனஸ்காயி தயார். இது சாதத்திற்ல்

இதில் சில சின்ன சின்ன மாறுபாடுகள்

மேலே சொன்னதில் அரைப்பவற்றில் வெந்தயமும் வறுத்துச் சேர்த்து அரைத்துச் செய்யலாம். அப்படிச் செய்தால் தாளகம்/வறுத்து அரைத்தக் குழம்பு சுவை கொஞ்சம் வந்துவிடும் என்பதால் நான் பெரும்பாலும் வைப்பதில்லை. ஆனால் செய்ததுண்டு.

எள்ளு + உளுத்தம் பருப்பு + கடலைப்பருப்பு வறுத்து+ தேங்காய் ஈரம் போக வறுத்து அல்லது தேங்காயை வறுக்காமல் அப்படியே வைத்து அரைத்துக் கொள்வது. (இதோடு வெந்தயமும் வறுத்துச் சேர்த்துச் செய்வது ஒரு வகை)

எள்ளு + கடலைப்பருப்பு வறுத்து + தேங்காய் ஈரம் போக வறுத்து அல்லது வறுக்காமல் அப்படியே வைத்து அரைத்துக் கொள்வது. (இதோடு வெந்தயமும் வறுத்துச் சேர்த்துக் கொள்ளும் ஒரு வகை)

இதில் எது வேண்டுமானாலும் சேர்த்துச் செய்வது உங்கள் விருப்பம்.

படங்கள் எடுப்பது எடுத்துவிடலாம். அதன் பின் எழுதுவது என்பது இப்போதெல்லாம் கொஞ்சம் ஹிஹிஹி.  என்னால் அப்படி படங்களைக் கோர்த்து டக்கென்று குறிப்புகள் மட்டும் என்று எழுதிட முடிவதில்லை. விளக்கங்கள், மாறுபாடுகள், வேறு வகைகள் என்று சேர்த்து எழுதினால்தான் கொஞ்சமேனும் திருப்தி என்பதால் நேரம் எடுக்கிறது.

இந்தச் செய்முறைகள் அனைத்தும் நான் திருவனந்தபுரத்தில் இருந்த போது கற்றுக் கொண்டவை. 

ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

74 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா. வாங்க.. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. சீசனுக்கு ஏற்ற ரெசிபி. படங்கள் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தோசை நல்ல முறுகலாக இருக்கிறது. திருவனந்தபுரத்தில் கற்றுக்கொண்டது என்பது ஆச்சர்யம். காரணம் இங்கு கன்னடர் குறைவு. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை கீதா கொலாஜ் முறையில் இணைப்பதால் படங்கள் சிறிதாகத்தான் இருக்கும்.  கொசகொசவென்று படங்களாக இருப்பதும் தவிர்க்கப்படும்.  ஆனால் படங்கள் தனியாக, பெரிதாக இருந்தால் அது ஒருவகையில் ரசிக்கலாம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜெகே அண்ணா.

      திருவனந்தபுரத்தில் நன இருந்தது கோட்டைக்குள் ஸ்ரீவராகம்/பத்மநாப சுவாமி கோயில் அருகில் சுற்றி சுற்றி 8 வருடங்கள். அங்கு போத்தி, நம்பூதிரி குடும்பங்கள் உண்டே. இது மங்களூர் உடுப்பி பகுதி ஒரு சமூகத்தினரின் செய்முறை என்றும் சொல்லியிருக்கிறேனே.

      படங்கள் நான் செய்முறைப்படி கொடுப்பதால் நிறைய சேர்ந்துவிடுகிறது. தனி தனியாகக் கொடுத்தால் பதிவு மிக நீண்டுவிடும் அபாயம் உண்டு என்பதால் இப்படிச் செய்கிறேன்.

      ஸ்ரீராம் சொல்லியிருக்கும் காரணம்தான். தனியாகப் போட வேண்டும் என்றால் மூன்று அல்லது நான்கு படங்கள் மட்டுமே....போட முடியும். பெரும்பாலும் நான் சொல்வது போடுவது சமையலில் ரொம்ப அனுபவம் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ள என்பதால்.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
    3. படங்கள் கொலாஜ் முறையில் இல்லாமல் தனித்தனியாக இதே சைசில் அடுக்கியிருந்தால் படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்க ஏதுவாக இருக்கும். அவருடைய பழைய பதிவு (தாளகம்) போல.

       Jayakumar

      நீக்கு
    4. ஒகே ஜெகெ அண்ணா அப்படிச் செய்துவிட்டால் போச்சு. கொலாஜ் பண்ணாமல் சிறிதாக. ...அது அலைன்ட்மென்ட் ப்ளாகர் பல சமயங்களில் படுத்தும் படங்களை சைட் சைடில் கொடுக்க....

      இனி அப்படிச் செய்கிறேன் அண்ணா.

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    5. ஜெகே அண்ணா கொலாஜ் படத்தின் மீது க்ளிக் செய்தால் படம் இன்னும் க்ளோசப்பில் தெரிகிறதே...அதே போன்று பெட்டிக்குள் இருக்கும் ஒவ்வொரு படத்தின் மீதும் க்ளிக் செய்தாலும் அந்தப் படம் மட்டும் பெரிதாகத் தெரிகிறதே. நான் இப்போது சும்மா க்ளிக் செய்து பார்த்தேன். இதுதான் முதல் முறை நான் இப்படிக் க்ளிக் செய்து பார்ப்பதும்.

      இருந்தாலும் முன்பு போல் போடவும் முயற்சி செய்கிறேன் அது வேறு ஒன்றுமில்லை இப்படிச் செய்து மகனுக்கு அனுப்புவது எளிதாக இருப்பதால் செய்கிறேன். இடையில் பெட்டிக்குள்ளேயே செய்முறையும் சொல்லிவிடுவேன் அது இன்னும் அவனுக்கு அனுப்ப எளிதாக இருக்கும் என்பதால்.

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    நலமா? தங்கள் வருகைக்கு நல்வரவு கூறிக் கொள்கிறேன். நிறைய நாட்கள் அனைத்துப் பதிவிலும் உங்கள் கலகலப்பான கருத்துரைகள் இடம் பெறாத நாட்களாக நகர்ந்து விட்டன. நேற்றைய பதிவில் உங்கள் கருத்துரையை இப்போதுதான் பார்த்தேன். இன்று திங்கள் சமையல் செய்முறையிலும் தங்கள் பதிவை கண்டதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    மெனஸ்காயி... விளக்கங்கள் அருமை. இன்றைய செய்முறையான மாங்காய் கொண்டு செய்த ரெசிபி நன்றாக உள்ளது. கொலாஜ் செய்த படங்களும் நாவில் நீர் சுரக்க வைக்கிறது. மாங்காயில் எது செய்தாலும் சுவையே... நல்ல விளக்கங்களுடன் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இது போல் இதுவரை செய்ததில்லை. சமயம் வரும் போது செய்து பார்க்கிறேன். வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெனஸ்காயி!  புதுமையான பெயர்!  இல்லை?  

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா. நலமா....// இன்று திங்கள் சமையல் செய்முறையிலும் தங்கள் பதிவை கண்டதும் மகிழ்ச்சி அடைகிறேன்//

      மிக்க நன்றி கமலக்கா...

      வேலைப் பளு.

      விரிவான கருத்திற்கு மிக்க நன்றி. செய்து பாருங்கள் சுவை நன்றாக இருக்கும்.

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நன்மை பெருகி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பைனாப்பிள் கொஜ்ஜு, பாகற்காய் கொஜ்ஜூ செய்திருக்கேன். அவ்வளவா போணி ஆகலை. :))))) இது மாதிரி மாங்காயில் பண்ணினதில்லை/ பண்ணினாலும் யார் சாப்பிடுவது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதிலே தி/கீதா சொல்லி இருக்கும் எல்லாச் செய்முறைகளிலும் செய்தும் பார்த்தாச்சு. ம்ஹூம், நோ போணி! :)))) தி/கீதாவுக்கு நல்வரவு கூறிக்கொண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா மிக்க நன்றி கருத்திற்கு. நீங்கள் செய்திருப்பீங்கன்னு தெரியும்....

      கீதாக்கா, ஒரு வாரம் சென்னைப் பயணம். அங்கிருந்து 14 அன்று வந்தாலும் வந்ததும் வேலைப் பளு. ஒரு மொக்கை Low budget தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்க். அதை சென்ஸார் ஸ்க்ரிப்டில் தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழில் தட்டச்சு செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். ஹீரோ பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார். பாடல்களைப் பாடியவர்கள் கடித்து கடித்து பல வார்த்தைகளை முழுங்கி விடுகிறார்கள் இடையில் ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் இப்போதைய ட்ரெண்டில் உச்சரிக்கிறார்கள். வீட்டு வேலை இந்த வேலை என்று வேலைப் பளு.

      உங்க பதிவு ஆரூரார் வாசித்து விட்டேன். கருத்து போட்டேன் நேற்று ராத்திரி. போக மறுத்தது. இன்று முயற்சி செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. கீதாக்கா மிக்க நன்றி கருத்திற்கு. நீங்கள் செய்திருப்பீங்கன்னு தெரியும்....

      கீதாக்கா, ஒரு வாரம் சென்னைப் பயணம். அங்கிருந்து 14 அன்று வந்தாலும் வந்ததும் வேலைப் பளு. ஒரு மொக்கை Low budget தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்க். அதை சென்ஸார் ஸ்க்ரிப்டில் தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழில் தட்டச்சு செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். ஹீரோ பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார். பாடல்களைப் பாடியவர்கள் கடித்து கடித்து பல வார்த்தைகளை முழுங்கி விடுகிறார்கள் இடையில் ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் இப்போதைய ட்ரெண்டில் உச்சரிக்கிறார்கள். வீட்டு வேலை இந்த வேலை என்று வேலைப் பளு.

      உங்க பதிவு ஆரூரார் வாசித்து விட்டேன். கருத்து போட்டேன் நேற்று ராத்திரி. போக மறுத்தது. இன்று முயற்சி செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. இங்கயு ம் கருத்து போக இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது....கர்ர்ர்ர்ர்ர்ர்.

      கீதா

      நீக்கு
    4. இந்த கொஜ்ஜுவை நம் தமிழ்நாட்டுக்காரங்க அநேகமா உபருப்பு, கபருப்பு, வெந்தயம், ஜீரகம் சேர்த்தும் செய்யறாங்க. இதற்கான மசாலாவைத் தயாரிக்கையில் இவற்றைப் போட்டு வறுத்து அரைக்கிறாங்க. என்னதான் இருந்தாலும் சுவையில் மாறுபாடு தெரியுமே. நம்ம ஊர்ப் பிட்லை போல் எனக்குத் தோணும்.

      நீக்கு
    5. நீங்களும் சொல்லி இருந்தாலும் இங்கே எள்ளைச் சேர்த்துக்கறது மிகக் குறைவு.

      நீக்கு
    6. எள்ளு சேர்ப்பதுதான் இதை வித்தியாசப்படுத்துகிறது கீதாக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    7. இந்த கொஜ்ஜுவை நம் தமிழ்நாட்டுக்காரங்க அநேகமா உபருப்பு, கபருப்பு, வெந்தயம், ஜீரகம் சேர்த்தும் செய்யறாங்க. இதற்கான மசாலாவைத் தயாரிக்கையில் இவற்றைப் போட்டு வறுத்து அரைக்கிறாங்க. என்னதான் இருந்தாலும் சுவையில் மாறுபாடு தெரியுமே. //

      ஆ ஆ அதானே சுவை வேறு போன்று ஆகிவிடும். எப்படி வித்தியாசப்படுத்த முடியும்...

      கீதா

      நீக்கு
  6. ஓ இன்று நம்ம ரெசிப்பியா.....வருகிறேன்...ஒவ்வொரு வலையிலும் விட்ட பதிவுகளை வாசிக்கிறேன். ஒரு சிலதில் கருத்து போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான ரெஸிப்பிதான்
    தலைப்பை பார்த்து பயணத்திலிருந்து வந்ததால் ஜப்பானுக்கு போய் வந்தீர்களோ என்று நினைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கில்லர்ஜி....ஜப்பானுக்கு ஒரு டெக்கெட் போட்டுக் கொடுத்தீங்கன்னா போய்ட்டு வந்து அவங்க ஊர் உணவு முறைகளையும் எழுதிடறேன்!!!!

      கருத்தைப் போடும் போது பிழை ஏற்பட்டது என்று வந்து கொண்டே இருக்கிறது. ஹூம் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் இந்தப் பிரச்சனை....வீட்டு வேலைகள் மற்ற வேலைகள் துரத்துகின்றன...பின்னர் வருகிறேன்

      கீதா

      நீக்கு
  8. மெனெஸ்காயி செய்முறை தெளிவாக இருக்கிறது. வேரியேஷன்ஸ் நன்று, ஆனால் இதை இந்த மாதிரித்தான் பண்ணணும் என்பதில் குழப்பம் வந்துவிடும்.

    ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் குழப்பம் வரும் நெல்லை? மோர்க்குழம்பில் வேரியேஷன்ஸ் இருக்கிறதே. சாம்பாரில் இருக்கிறதே அது போலத்தானே.

      குடும்பங்களுக்கு குடும்பம் ஒரே செய்முறை மாறுபடுமே.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  9. எனக்குப் பழக்கப்படாத உணவை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கு ஸ்டபர்ன் ஆன மனதுதான் காரணம். பூரிக்குத் தொட்டுக்கொள்ளக் கொடுக்கும் சாஹு, விருந்துகளில் பைனாப்பிள் ரெய்த்மா (பெயர் மறந்துவிட்டது. அரைத்து விட்டிருப்பார்கள். இனிப்பு காரம் எனக் கலவையாக இருக்கும். இது ஸ்பெஷல்) போன்ற பலவும், இங்கத்தைய சாம்பார் முதற்கொண்டு... மனதுக்குப் பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீன்னாக்க, மெனெஸ்காயி என்னிடம் போணியாகாது

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா தெரிஞ்ச விஷயமாச்சே!!!!!

      //விருந்துகளில் பைனாப்பிள் ரெய்த்மா// அது கொஜ்ஜு வாகத்தான் இருக்கும் கன்னட ரெசிப்பி என்றால்

      கீதா

      நீக்கு
    3. ஆமாம். கொஜ்ஜுதான்.... அடக்கருமமே என்று நான் நினைத்துக்கொண்டேன். எனக்கு பெங்களூர் உணவு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மனதுக்கு ஆறுதல்..பசங்களுக்கு செட் ஆகிறது என்று.

      நீக்கு
  10. கீதா ரங்கன்(க்கா) எழுதுவது மட்டுமல்ல... வித்தியாசமானவைகளைச் செய்யவும் செய்வார். எல்லாவிதமான உணவுகளையும் செய்துபார்ப்பதும், அதனை ஏற்றுக்கொள்ளும் குடும்பத்தினர் இருந்தால் மட்டுமே சாத்தியம். எங்கள் வீட்டில் மனைவி தவிர என்னையும் உட்பட மற்றவர்கள் பாரம்பர்ய வித்யாச உணவுகளின்மீது ஆர்வம் காட்டுவதில்லை. (பசங்க, இந்தக் காலத்தைய அல்லது வட நாட்டு புதுவித உணவுகளைச் சாப்பிடுவார்கள்). அந்த வித்த்தில் கீதாரங்கன்(க்கா) குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உண்டு போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. எனக்குப் புதுசு புதுசாகச் செய்வது ரொம்பப் பிடிக்கும். சமையலில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே. நம் வீட்டிலும் எல்லாம் ரசிக்கும் குடும்பத்தினராக இருப்பதால்தான் முடிகிறது. பிடிக்காது என்பதே இல்லை. அதுவும் புதுசா செய்தா அட புதுசா இருக்கிறதே என்று சாப்பிடுவார்கள். அதனால்தான் எனக்கும் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. தெரிந்துகொள்வதோடு நானுமே சில யோசித்து இப்படிச்செய்தால் என்ன என்று செய்வதுமுண்டு. மகன் உட்பட எல்லாமே விரும்பிச் சாப்பிடுவான். அதுவும் வித்தியாசமான செய்முறைகளை ரசிப்பான்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  11. பெங்களூரில் எல்லாவித பச்சைமிளகாயும் கிடைக்கும். சில மிளகாய்கள் மிக மிக் காரம். அதனால் நான் நீளமான சிறிது தடுமன் உள்ள மிளகாயோ இல்லை காரம் இல்லை என்று கடைக்கார்ர் சொல்லும் மிளகாயோ மட்டுமே வாங்குவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இங்கு பல வித ப மி கிடைக்கும். காரமில்லாததுதான் வாங்குகிறேன். ஒல்லி மிளகாய் எல்லாம் செம காரமா இருக்கும்

      கீதா

      நீக்கு
  12. இரு நாட்கள் முன்பு இரு நாட்கள் பயணமாக கும்பகோணம் சென்றிருந்தேன். தமிழக சாம்பார், ரவாமோசை, ஊத்தாப்பம், பரோட்டா என்று நன்றாகவே ருசித்தேன். அடுத்த தமிழகப் பயணத்துக்காக மனம் ஏங்குது (but not a fan of மதிய உணவு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி போடுங்க!! நெல்லை. அடி பொளி!!!

      கீதா

      நீக்கு
    2. அதனால..உங்க வீட்டுக்கு வந்தால், புதிது புதிதாக எனக்காக யோசிக்காமல், தோசை, தமிழக சாம்பார், சேவை, புளிசேரி என்று மட்டும் செய்யுங்கள். ஹா ஹா

      நீக்கு
    3. ஹாஹாஹா முதல்ல வீட்டுக்கு வாங்க.

      கீதா

      நீக்கு
  13. இறைவனுக்கு நன்றியும் வணக்கமும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  14. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நைஜீரியன் உணவு என்று நினைத்து விட்டேன் நான்..

    பதிலளிநீக்கு
  15. கேள்விப்படாத பெயர்.. அதன் விளக்கமும் செய்முறையும் அருமை...

    வழக்கமாக படங்களுக்கு கீழ் அதன் விளக்கங்கள் இருக்குமே, என்னாச்சி...? ஆனாலும் இது போல் எழுதி திருப்தி அடைந்தது அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      படங்களின் கீழ் விளக்கங்கள் அந்த கொலாஜ் பெட்டிக்குள்ளேயே கொடுப்பது இல்லையா...அது தட்டச்சு செய்வதில் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். தவறாக அடித்தால் டெல் அல்லது பேக் கீயை அழுத்துவதில் மிகவும் கவனம் தேவை டக்கென்று எல்லாம் அழிந்துவிடும் மீண்டும் தொடக்கத்திலிருந்து அடிக்க வேண்டும். வேர்டில் அடித்துவிட்டு காப்பி பேஸ்ட் செய்யலாம்தான். செய்தால் வரிகளின் நீளத்தை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். இப்போது நேரம் போனஸ் இல்லை. எனவே இப்படி.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. ஆ!! ஆ...மேலே போய் வருவதற்குள் டிடி, வல்லிம்மாக்குப் போட்ட கருத்துகள் காணாமல் போய்விட்டதே......வேர்டில் அடித்தும் வைக்காமல் போய்விட்டேன். இனி நம்ம தெக்கினிக்கிதான் சரி போல...வேர்டில் அடித்து வைக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    3. டிடி மிக்க நன்றி.

      ஆமாம் கொலாஜ் பெட்டிக்குள் அடிப்பதுண்டு. அது கவனமாகச் செய்ய வேண்டும். பிழையைத் திருத்தும் போது. கவனமா இல்லை என்றால் அடித்தது முழுவதும் அழிந்துவிடும். மீண்டும் தொடங்க வேண்டும். வேர்டில் அடித்துவிட்டு காப்பி பேஸ்ட் செய்யலாம். அதிலும் வரிகளைப் பெட்டிக்குள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். நேரமெடுக்கும் என்பதால் இப்போதைய சூழலில் முடியவில்லை என்பதால் இப்படி.

      மிக்க நன்றி டிடி.

      கீதா

      நீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. மங்களூர் மெனஸகாயி பெயரே புதிசாக இருக்கிறது.


    எள்ளு வாசனை பிடிக்கும். மாங்காய்ப் புளிப்புடன்
    புது விதமாகச் செய்து பார்க்கலாம்.
    சின்னப் பேரனுக்குப் பிடிக்கும்.
    அன்பின் கீதாவுக்கு மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா....எள்ளு வாசனை பிடித்தால் கண்டிப்பாகச் செய்து பார்க்கலாம். பேரனுக்குப் பிடிக்கும் என்றால் இறங்கிடமால் கோதாவில்!!!!

      மிக்க நன்றி வல்லிம்மா..

      கீதா

      நீக்கு
    2. கமென்ட் காணவில்லை.

      ஸ்ரீராம், அண்ட் கௌ அண்ணா, டிடிக்கும் வல்லிம்மாக்கும் போட்ட கருத்துகள் இங்கு தெரிந்தது, ஆனால் திடீரென்று காணாமல் போய்விட்டன. உங்கள் பெட்டியில் இருந்தால் போட முடியுமா?

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் வல்லிம்மா பெயர் வித்தியாசம்தான். எள்ளு வாசனை பிடிக்கும் என்றால் செய்துவிடலாம் அதுவும் சின்னப் பேரனுக்குப் பிடிக்கும் என்றால் கோதாவில் இறங்கிடுங்க!! ஆனா இப்ப ஸ்விஸ் இல்லையா....

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் !வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெனஸ்காயி செய்முறை நன்றாக இருக்கிறது.படங்களும் நன்றாக இருக்கிறது. கன்னடம், மலையாளம் பேச்சு வழக்கு எல்லாம் கலந்து இருக்கிறது பதிவு.
      படிப்பதற்கு நன்றாக இருக்கிறது மெனக்கிட வேண்டும் போல மெனஸ்காயி செய்ய.

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதிக்கா.

      கன்னடம், மலையாளம் பேச்சு வழக்கு எல்லாம் கலந்து இருக்கிறது பதிவு.
      படிப்பதற்கு நன்றாக இருக்கிறது மெனக்கிட வேண்டும் போல மெனஸ்காயி செய்ய.//

      ஹாஹாஹா...மிக்க நன்றி. ரொம்ப எல்லாம் மெனக்கிட வேண்டாம். அது பதிவில் அபப்டித் தெரிகிறது. எளிதுதான் செய்வது

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    3. மிக்க நன்றி கோமதிக்கா...

      //படங்களும் நன்றாக இருக்கிறது. கன்னடம், மலையாளம் பேச்சு வழக்கு எல்லாம் கலந்து இருக்கிறது பதிவு.
      படிப்பதற்கு நன்றாக இருக்கிறது//

      மிக்க நன்றி கோமதிக்கா. செய்வது எளிதுதான். ஆனால் ஒருவருக்காகச் செய்வது என்பது பல சமயங்களில் அலுப்புத் தட்டும்தான்....

      மெனஸ்காயி - மெனக்கிட !!!! நல்லா பொருந்துகிறது இல்லையா கோமதிக்கா...

      முன்னர் போட்ட கருத்து காணாமல் போனதால்....அப்போது என்ன சொன்னேன் என்று தெரியவில்லை கிட்டத்தட்ட இதேதான் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் வேர்டில் அடித்து வைத்துக் கொண்டுவிடுவேன்...மீண்டும் தொடங்க வேண்டும் அப்படி.

      கீதா

      நீக்கு
  19. வித்தியாசமான குறிப்பு! இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டுமா? அல்லது தொட்டுக்கொள்ளும் கறி போலவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். கெட்டி கிரேவி போன்ற பதம்.

      மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
  20. தோசை முறுகலாய் சாப்பிட ஆசையை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதிக்கா.

      பெரும்பாலும் முறுகல் தோசை செய்வதுண்டு.

      கோமதிக்கா, கருத்து காணாமல் போய்விட்டது முன்பு போட்ட கருத்துகள்

      கீதா

      நீக்கு
  21. அன்பின் கீதாரங்கனுக்கு வாழ்த்துகள்.
    படங்கள் அழகாக எடுத்துப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
    கொத்தமல்லி (தனியா) சேர்க்காமல்
    இது போலச் செய்வது சுவையாக இருக்கும் என்றே
    தோன்றுகிறது.

    ஸ்பெஷல் பெயராக இருப்பதால்
    உடனே இந்த செய்முறை செல்லுபடியாகும். அன்பின் கீதாவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தமல்லி (தனியா) சேர்க்காமல்
      இது போலச் செய்வது சுவையாக இருக்கும் என்றே
      தோன்றுகிறது.//

      ஆமாம் வல்லிம்மா. எல்லாவற்றிலும் கொத்துமல்லை சேர்த்தால் எல்லாமே ஒரே போன்று இருப்பதாகப்படுகிறது.

      செய்து பாருங்கள் வல்லிம்மா. கண்டிப்பாகப் பிடிக்கும்

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  22. எபி ஆசிரியர்ஸ், மேலே போட்ட கருத்துகளும் காணால் போய்விட்டன. கருத்துகள் பெப்பே காட்டி ஒளிந்து கொண்டிருக்கின்றனவோ? முடிந்தால், நேரமிருந்தால் அப்படி ஒளிந்து கொண்டிருப்பவற்றைக் காண முடிந்தால், கட்டிப் இழுத்து வந்து இங்க போட முடியுமா?!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பார்க்கவே அழகாய் சுவைக்க வேண்டும் போல உள்ளது கீதாக்கா! நல்லதொரு 'திங்க' ப்பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காயத்ரி. செஞ்சு பாருங்க. இல்லைனா வீட்டுக்கு வாங்க சுவைக்கலாம்!!!!

      கீதா

      நீக்கு
  24. பெயர் புதுமையாக இருக்கிறது.

    மாங்காய் காரக் கறி செய்வோம் பட்டை சேர்ப்போம் எள்ளு சேர்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவி. நீங்கள் செய்யும் வகை பற்றியும் சொன்னதுக்கு மிக்க நன்றி. இதுவும் முயற்சி செய்து பாருங்கள்.

      மிக்க நன்றி மாதேவி

      கீதா

      நீக்கு
  25. லேப்டாப்பில் படங்கள் ரொம்ப தெளிவா இருக்கு. தோசை யம்மி.. தொட்டுக்க வனஸ்வினியோட...ஐயையோ மெனெஸ்காயியோட சூப்பரா இருக்கும்....போல் இருக்கு. பார்க்க யம்மி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேப்டாப்பில் படங்கள் ரொம்ப தெளிவா இருக்கு. //

      மிக்க நன்றி நெல்லை.

      தோசை யம்மி.. தொட்டுக்க வனஸ்வினியோட...
      ஐயையோ //

      ஹாஹாஅஹாஹா...தோசை பெரும்பாலும் இப்படித்தான்

      மெனெஸ்காயியோட சூப்பரா இருக்கும்....போல் இருக்கு. பார்க்க யம்மி//

      வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றாகவும் இருக்கும். மற்ற மெனஸ்காயி களும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். நான் செய்வதில் தித்திப்பு அதிகம் இருக்காது நெல்லை.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  26. அடுத்த வேலை வந்துவிட்டது. வியாழன் அன்று முடித்துக் கொடுக்க வேண்டும். எனவே ஓடுகிறேன்....வலைப்பக்கம் வந்தாலும் சின்னதாகச் சொல்லிவிட்டு ஓடிவிடுவேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரு புதுசா இருந்தாலும் நன்னா இருக்கும் போல மனசுக்கு படுவது நல்ல செய்முறை மிக்க சந்தோஷம் அன்போடு

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!