சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்
டி ஆர் பாப்பா?
திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் பாப்பா! சிவசங்கரன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் ஏன் பாப்பா ஆனார் என்கிற விவரம் இல்லை. புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞராக இருந்தவரை ஜோஸப் தளியத் மலையாளத்திலும் தமிழிலும் (ஆத்மசாந்தி) இசை அமைப்பாளராக 1952 இல் அறிமுகப்படுத்தினார். நாற்பதுகளில் இவர் எஸ் ஜி கிட்டப்பாவின் சகோதரர் எஸ் ஜி காசி அய்யருடன் பணியாற்றி இருக்கிறாராம்.
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய புகழ்பெற்ற சின்னஞ்சிறு பெண்போல பாடல் இவர் இசை அமைத்ததுதான். அபிராமி அந்தாதிக்கும் இவர்தான் இசை.
இது பழைய நம் பதிவொன்றிலிருந்து எடுக்கப்பட்டதுதான். அதே பதிவில்
'டி.ஆர் பாப்பா நிறைய பக்தி பாடல்கள் இசை அமைத்து இருக்கிறார்.
அருணகிரி நாதர் படம் அவருக்கு மேலும் சிறப்பு செய்தது. டி.எம்.எஸ்க்கு புகழ் சேர்த்த பாடல்முத்தைதரு பக்தி சரவண பாடல் இப்போதும் எங்கும் ஓலிக்கும் அவர் பேரை சொல்லி. அது போல் சின்ன்சிறு பெண் போல சீர்காழிக்கு புகழ் சேர்த்த பாடல்' என்று கோமதி அக்காவும்,
அருணகிரி நாதர் படம் அவருக்கு மேலும் சிறப்பு செய்தது. டி.எம்.எஸ்க்கு புகழ் சேர்த்த பாடல்முத்தைதரு பக்தி சரவண பாடல் இப்போதும் எங்கும் ஓலிக்கும் அவர் பேரை சொல்லி. அது போல் சின்ன்சிறு பெண் போல சீர்காழிக்கு புகழ் சேர்த்த பாடல்' என்று கோமதி அக்காவும்,
'எனது ஐந்து வயசு பாலகன் பருவத்தில் டி.ஆர்.பாப்பா வீட்டுக்குப் போனதும் பூஜையில் கிண்ணத்தில் வைத்திருந்த கல்கண்டை அவர் எனக்கு எடுத்துக் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது. அவர் பிரபலமாகாத காலம் அது. வயலின் தான் அவரது அடிப்படை வாத்தியம். எங்கள் எதிர் வீடு. அவர் வயலின் வாசித்துக் கொண்டிருக்கும் போது சமர்த்தாய் விஷமம் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்' என்று திரு ஜீவி அவர்களும் கமெண்ட் இட்டிருந்தார்கள்.
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக் கீடாக வேறொன்றும் கிடையாது
மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்
===================================================================
ரொம்ப வருஷங்களுக்கு முன்னே அமெரிக்காவில் இரண்டு நகரங்களுக்கிடையே ட்ரக் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவருக்கு இரண்டு நகரங்களிலும் மனைவிகள், தனித்தனி குடும்பம் இருந்தது. அந்த ட்ரைவர் இறந்தபிறகு இன்சூரன்ஸ் க்ளெயிம் செய்தபோதுதான் தெரிந்ததாம்.
இந்த நிஜமான சம்பவத்தை ஒட்டி அமெரிக்காவில் 1959 ல் ஒரு படம் எடுக்கப்பட, அதை ஜெமினி ஸ்டுடியோவின் ஆஸ்தான கதைஞர் வேப்பத்தூர் கிட்டு இந்தியாவுக்கேற்ற கதையாக மாற்றி எழுத, எஸ் எஸ் வாசன் தயாரிக்க, அதில் நடிக்க சிவாஜியை அணுக,அவர் நடிக்க மறுக்க, வாசன் அதை ஹிந்தியில் 1963 ல் 'கிரஹஸ்தி' என்று எடுத்து வெற்றிபெற, அதைப் பார்த்த சிவாஜி கணேசன், வேப்பத்தூர் கிட்டுவே தமிழிலும் எடுத்தால் நடிக்கத்தயார் என்று தயாராக, 1966 ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை உருவாகி வெளியானது. வாசன் மகர் பாலனுக்கு இயக்குனராக முதல் படம் இது. இதுபோன்ற வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க நடிகர்த்திலகம் தயங்கியதே இல்லை.
விஸ்வநாதன் இசையில் எல்லாப் பாடல்களுமே ஹிட் என்றாலும், இன்று ஒரு பாடல் மட்டும் இங்கு பகிர்கிறேன். வாலி எழுதிய "காத்திருந்த கண்களே" பாடல்.
இந்தப் படத்தில் வரும் ,மனமே முருகனின் மயில்வாகனம், பாடலை அதை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு அதை 'அடாணா' ராகத்தில் இசையமைக்க வேண்ட, விஸ்வநாதன் அதை ஹிந்தோளத்தில் அமைத்தாராம்.
இன்றைய பாடல் காட்சியில் இடம்பெறும் ஜோடி அந்தக் காலத்தில் மிகவும் ஹிட்டான ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி. கவர்ச்சி ஹீரோ என்று ரவிச்சந்திரனுக்கு பெயர். ஆனால் பார்க்க வினோதமாக இருக்கிறார். நடனம் என்று வளைந்த முதுகாகவே இருப்பதில் முதுகும் இடுப்பும் வலித்திருக்கும்! ஜெயலலிதா டாப். அதுவும் அழகான நடன அசைவுகள், பாவங்கள். வாலியின் அழகான வரிகள். என் அலுவலகத் தோழி ஒருவருக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடல் காட்சி தொலைக்காட்சியில் வரும் காலங்களில் எனக்கு சட்டென தொலைபேசி சொல்லி இருக்கிறார்.
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன -அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ…
தருகின்ற மனதல்லவோ…
கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து
மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கும், அனைவருக்கும், இனிய வரலெட்சுமி தின வாழ்த்துகள். அம்மனின் அருள் உலக மக்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில் திரு. சீர்காழி அவர்களின் இந்த அற்புதமான அம்மன் பாடல் வெகு பொருத்தம். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் எல்லா பக்திப் பாடல்களும் எனக்கு பிடிக்கும். இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் உருவான விதம் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். இன்றைய அருமையான பக்திப்பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலான இந்தப்பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். தொலைக்காட்சியில் படமும், ஒலியும், ஒளியும் நிகழ்ச்சியில் இந்தப்பாடலையும் அடிக்கடி பார்த்து ரசித்துள்ளேன்.
ஜெயலலிதாவின் நடனத்திற்கு கேட்கவா வேண்டும்.? அழகான நடனம். பாடலோடு ஒத்துப் போகிற பாவங்கள் அவருக்கு கை வந்த கலை. ரவிச்சந்திரன் அப்போது நல்ல நடிகர். எங்களுக்கு பிடித்தமான அழகான நடிகரும் கூட.. நீங்கள் சொல்வது போல அவர் நடனம் அவரின் ஸ்டைலாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி முத்திரை என்பது போல ... இந்தப் பாடலும். அந்த பாவத்துடன் கூடிய நடனங்களும் அந்த காலந்தொட்டு இன்று வரை நமக்கெல்லாம் ரசிக்கத்தக்கது. ஆனால், இப்போதுள்ள இளைய தலைமுறைகளுக்கு பிடிக்குமா என்று தெரியாது...
பிறகு என் வேலையெல்லாம் முடிந்த பின் நிதானமாக மதிய வாக்கில் இருபாடல்களையும் கேட்டு, கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரவிச்சந்திரனைப் பார்க்க பெண்கள் கூட்டமாக கூடுவார்கள் என்று என் மாமா சொல்வார். அவரின் நண்பரின் நண்பர் அவர்.
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரர்த்தனைகள்.இன்று வரலக்ஷ்மி விரதம் கொண்டாடும் அனைவருக்கும்/கொண்டாடாத என் போன்ற மற்றவர்களுக்கும் அம்பிகை கிருபையால் நன்மைகளே நடக்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க... வணக்கம் கீதா அக்கா... பிரார்த்திப்போம்.
நீக்குமங்கலகரமான வெள்ளிக்கிழமை..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கங்களுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குகாலகாலத்துக்கும் அம்மன் புகழ் பாடிக்கொண்டிருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..
பதிலளிநீக்குசின்னஞ் சிறு பெண் போலே ..
ஆடி வெள்ளிக் கிழமையில் நல்ல தேர்வு..
நன்றி.
நீக்குஶ்ரீராம் கொழுக்கட்டையில் பிசியாக இருப்பார்னு நம்பறேன். சீர்காழியில் இந்தப் பாடல் எனக்கு உயிர்! இது, அப்புறமா அந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படப் பாடலும்! படமும் பார்த்திருக்கேன். :) திரை அரங்கில் இல்லை. சீர்காழியின் இந்தப் பாடல் தவிர்த்து இன்னும் ஒரு பாடல் என்னை உருக்குவது "சிட்டி ஆயி ஹை" பாடல் தான். பங்கஜ் உதாஸின் அந்தக் குரல். பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்ணீருடனே கேட்பேன்.
பதிலளிநீக்குகொழுக்கட்டை என்பதைவிட, பூஜைக்கான ஏற்பாடுகளில்...!
நீக்குசிட்டி ஆயி ஹை என்னை அந்த அளவு கவரவில்லை!
நீக்கு//சிட்டி ஆயி ஹை என்னை அந்த அளவு கவரவில்லை!// அர்த்தம் புரிஞ்சுண்டு தானே இருக்கீங்க? அப்போ நிச்சயமாய்க் கண்ணீர் வரணுமே! வெளிநாடு வாழ் இந்தியர்கள் யாராய் இருந்தாலும் இதைக் கேட்டால் உடனே அழ ஆரம்பிப்பார்கள். இதுவும் "யே வதன்" பாடலும். எனக்குச் "சிட்டி ஆயி ஹை!" பாடல் தான்!"தூ நே பைசா பஹுத் கமாயா!" Toone paisaa bahut kamaayaa, is paise ne desh chhudaayaa
Panchhi pinjaraa tod ke aaja, desh paraya chhod ke aaja
Aaja umar bahut hai chhoti, apne ghar mein bhi hain roti, chitthi...என்னும் வரியைக் கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் பாரமா இருக்கும்.
ஓ... அர்த்தம் புரிகிறது. ஆயினும்..
நீக்கு'முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி.. பேருக்கு பிள்ளை உண்டு.. பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என் வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்' போன்ற வரிகளின் அளவு பாதிப்பு அதில் வரவில்லை!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீக்குமோட்டார் சுந்தரம் திரைப் படத்தில் இன்னுமொரு இனிய பாடல் -
பதிலளிநீக்குதுள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு!..
இனிய பாடல்களால் இனிமை நிறைந்திருந்த காலம்!..
எல்லாமே நல்ல பாடல்கள்தான்.
நீக்குமுதல, பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சீர்காழி அவர்கள் பாடி அவர் முன்பு திருவனந்தபுரத்தில் கேட்டிருக்கிறேன். சிறிய வயதில் நிறையமுறை நான் பாடும் பாடல். சீர்காழியின் முத்திரை பதித்த பாடல். (நீல மயில் மீது... இன்னொரு பாடல்).
பதிலளிநீக்குதன் சக கலைஞர்களுக்கு (கொன்னக்கோல் மற்றும் அனைத்து வாத்திய கலைஞர்களுக்கும்) மேடையிலேயே சிறப்புச்செய்ய வைப்பார்.
ஆமாம். தஞ்சையில் ஒருமுறை நேரில் கேட்டிருக்கிறேன்.
நீக்குமதுரையில் நவராத்திரி விழாவுக்கு வந்து ஆடி வீதியில் கச்சேரி செய்வார். மேலாவணி மூலவீதி வீட்டு மாடி அறையில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். ஆனாலும் நேரிலும் போவோம். சீர்காழின்னா அப்போல்லாம் ஒரு பக்திப்பரவசம். டிஎம் எஸ்ஸை விடவும்.
நீக்குஅதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகி வந்து அம்பத்தூர்க் குடித்தனத்தின் போது அம்பத்தூர் பொழுதுபோக்கு சபா மூலம் டிஎம் எஸ்/சீர்காழி ஆகியோரின் கச்சேரிகள் கேட்டிருக்கேன். எம்.எஸ்.விஸ்வநாதனும் வந்து நிகழ்ச்சி கொடுத்தார். அப்போ எனக்கு டைஃபாயிடு என்பதால் ஆழ்வார்ப்பேட்டையில் அண்ணா வீட்டில் இருந்தேன். ரங்க்ஸும் அவர் தம்பியும் போயிட்டு வந்து நல்லா இல்லை என்றனர்.
நீக்குசபாவில் தவிர நான் நேரில் பார்த்த கச்சேரிகள் சீர்காழி, பித்துக்குளி, மதுரை சோமு அவ்வளவுதான்.
நீக்குபித்துக்குளியோட வீடே அம்பத்தூரில் நாங்க இருந்த தெருவில் தான் இருந்தாது. மௌலியின் வீடு, கிரேசியின் வீடு, எஸ்விசேகரின் வீடுனு எல்லாமும் இருந்தது. மௌலியின் சித்தப்பா டி.எஸ்.வள்ளீசன் அங்கேயே இருந்தார். மௌலி குடும்பம் மட்டும் வீட்டைக் கொஞ்ச நாட்கள் விற்காமல் வைச்சிருந்துட்டுப் பின்னர் விற்றார்கள். பித்துக்குளியும் வீட்டைப் பல வருஷங்கள் விற்கவில்லை. அவருடைய திடீர்த்திருமணத்துக்குப் பின்னர் விற்றார். கிட்ட உட்கார்ந்து அவர் கச்சேரியெல்லாம் கேட்டிருக்கோம்.
நீக்குமதுரை சோமு கேட்கவே வேண்டாம். எங்க மேலாவணி மூலவீதி வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் வடக்கு/மேலச் சித்திரை வீதி முடுக்கில் இருந்த அவர் வீடும் அவர் சாதகம் செய்வதும் தெரியும். அதே போல் மதுரை ஜி.எஸ்.மணி அவர்களும் மேலாவணி மூலவீதியில் ஒண்ணாம் நம்பர் வீடு. இன்னமும் அங்கே தான் இருக்கார். வீடும் மாறவில்லை. அவர் தம்பி என்னுடனும் தங்கை அண்ணாவுடனும் ஒரே பள்ளியில் படிச்சிருக்கோம்.
நீக்குஎம் எஸ் அம்மாவை அடிக்கடி பார்த்திருக்கேன். கச்சேரியும் கூட. மதுரை மணி ஐயர், வீணை சிட்டி பாபு போன்றோரெல்லாம் மதுரையில் நவராத்திரி விழாவிலும் ஶ்ரீராமநவமி உற்சவத்திலும் கச்சேரிகள் செய்வார்கள். டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் உபந்நியாசமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் கதாகாலட்சேபமும் நிறையக் கேட்டிருக்கேன். எனக்குக் கொஞ்சமானும் இந்த இதிகாசம்/புராணம் பற்றிய அறிவு இருக்குமானால் அதற்கு இவங்க எல்லாம் தான் காரணம்.
நீக்குகாத்திருந்த கண்களே... அழகான பாடல். காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் பாடலை மட்டும் தியேட்டரில் சென்று பார்த்துவிட்டு, ஆலை ஷிப்டுக்கு ஓடிவரும் தொழிலாளர்கள் என்று ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு அவர் நடனத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்களாம்,
பதிலளிநீக்குகவர்ச்சிக் கதாநாயகன்.
நீக்குஆமாம். ரவிச்சந்திரன்/ஜெய்சங்கர் இருவரும் அந்த நாளையக் கவர்ச்சிக் கதாநாயகர்கள். இருவரின் ரசிக ரசிகைகளும் மோதிப்பாங்க. பள்ளி நாட்களில் பார்த்திருக்கேன். நான் ரவிச்சந்திரனைக் கிட்டேத் தொடும் அளவுக்கு நெருங்கிப் பார்த்து அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கேன் என்பதைப் பல முறை சொல்லி இருக்கேனே! நினைவில் இருக்கோ இல்லையோ?
நீக்குகொஞ்சம் விட்டால், ஸ்ரீரங்கத்தில் ரசிகை மன்றம் ஆரம்பித்துவிடுவார் போலிருக்கிறதே இந்த ஆட்டோகிராஃப் ரசிகை? ஒருவேளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாரா? அவர் வீட்டு பால்கனியில் ஏதோ ஒரு கொடியைப் பார்த்த நினைவு. துண்டா அல்லது ரசிகர் மன்றக் கொடியா?
நீக்குகீதா அக்கா அந்த அளவு ரசிகையாக எல்லாம் இருந்திருக்க மாட்டார். ஆனாலும் அந்தக் காலத்தில் எம் கே டி, எம் ஜி ஆருக்கு அப்புறம் இவர்களுக்கு நிறைய ரசிகைகள் இருந்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குஅதெல்லாம் ரசிகை இல்லை. அப்பாவுக்குத் தெரிஞ்சால் முதுகுத்தோல் உரிஞ்சிருக்குமே! சில நடிகர்களின் நடிப்புப் பிடிக்கும். சிலரின் நடிப்புப் பிடிக்காது. அம்புடுதேன். ஆனால் அதிகம் பார்த்தது ஜிவாஜி/ஜெமினி படங்களாய்த் தான் இருக்கும். :))))) அதிலும் உயர்ந்த மனிதன் படம்! கடவுளே! மிகப் பெரிய தண்டனை போல சுமார் 5 முறை பார்க்கவைக்கப்பட்டேன். :))))))
நீக்குஇனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குமுதல் பாடல் பரவசம்,
பதிலளிநீக்குஇரண்டாவது பழரசம்.
பகிர்வுக்கு நன்றி ஜி
ரசனை! நன்றி ஜி.
நீக்குமுதல் பாடலை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமோட்டார் சுந்தரம் பிள்ளை தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். மிகவும் பிடித்த படம். சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று கணித்து கொட்டுவார்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.
ஜெயலலிதாவின் நடன அசைவுகள் எப்போதுமே மிக அழகு+நளினம். நீங்கள் வர்ணிக்கிறது கற்கும் விதத்தில் பார்த்தே தீர வேண்டும் என்று தோன்றுகிறது. வெளியே கிளம்பி கொண்டிருக்கிறேன். வந்ததும் பார்க்கிறேன்.
//சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று கணித்து கொட்டுவார்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.// ஹாஹாஹாஹா! நேரடியாவே திட்டலாமே! முகநூலிலும் திரு நீலகண்டன் என்பவருக்கு இப்படித்தான் உங்களைப் போல் கோபம் வரும். வெறுப்பைக் காட்டாதீங்க என்பார். நான் வெறுப்பது அவர் மிகை நடிப்பைத் தான் அவரை அல்ல என்று புரிய வைக்கிறதுக்குள்ளே! போதும்டா சாமி! இப்படியும் ரசிகர்களா? என எண்ணத் தோன்றும். எனக்கென்னமோ இதெல்லாம் பாதிப்பதில்லை. ஜெமினி, முத்துராமனைப் பிடிக்கும். ஜெயலலிதாவின் நடிப்பு, நடனம் பிடிக்கும். அதுக்காக அவங்களைத் துதிக்கும் அளவுக்கெல்லாம் இல்லை. :)
நீக்குமோட்டார் சுந்தரம் பிள்ளையை விட ஜிவாஜி "முதல் மரியாதை"யில் வாழ்ந்திருப்பார். எனக்குத் தெரிஞ்சு அவர் நடிச்சது அந்த ஒரு படம் தான். ஹேமமாலினிக்கு வாய்த்த "ஏக் சத்தர் மாலி சி" படம் போல.
நீக்குEK CHADHAR MALI SI
நீக்குநன்றி பானு அக்கா. நான் பாடல்களை ரசிக்கும் விதத்தை விளக்கமாக எழுதினால் உங்களுக்கெல்லாம் போரடித்து விடும். எனவே கட்டுப்படுத்தி கம்மியாகவே எழுதுகிறேன்!
நீக்குஹேமமாலினி நடித்து அப்படி ஒரு படம் நான் கேள்விப்பட்டதில்லை கீதா அக்கா... ஆனால் படோசன்னில் அந்த வரியோடு ஒரு பாடல் ஆரம்பிக்குமோ....
நீக்கு@கீதா அக்கா: நாங்களும் ரசிகர்கள்தான், பக்தர்கள் அல்ல. இஃகி இஃகி இஃகி
நீக்குகூகிளில் தேடிப் பார்த்துச் சுட்டி கிடைத்தால் தரேன் ஶ்ரீராம்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=nblbWXWbkqw குல்பூஷண் கார்பங்கா ஹேமமாலினியின் கணவனாக வருவார். பத்மினி கோலாபூரி ஹேமமாலினியின் பெண்! அவர் நடிப்பும் அம்மாவிடம் காட்டும் வெறுப்பும் ரசிக்கும்படி இருக்கும். சுட்டியில் இருக்கும் பாடல் கதைப்படி ஹேமமாலினிக்கு மறு திருமணம் செய்யும்போது பாடும் பாடல்
கருத்து பதிவில் ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். மன்னிக்கவும்.
பதிலளிநீக்கு*கணித்து கொட்டுவார்கள் - கரித்து கொட்டுபவர்கள்
வர்ணிக்கிறது கற்கும் விதத்தில் - வர்ணித்திருக்கும் விதத்தில்
புரிந்தது. புரிந்து பதிலும் சொல்லி இருக்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குமுதல் பாடல் மிகவும் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் பிடிக்கும். கேட்டேன்.
நன்றி.
முதல் பாடல் பிறந்த கதை அருமை.
என்னையும் குறிபிட்டதற்கு நன்றி.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் வரும் " மனமே முருகனின் மயில் வாகனம்" பாடலும் எனக்கு பிடித்த பாடல்தான்.
இந்த படத்தில் எல்லா பாடலும் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஸ்ரீராம் முதல் பாடல் செம பாடல். மிகவும் ரசித்து ரசித்துக் கேட்ட கேட்கும் பாடல். சீர்காழியின் குரலும், இப்ப பதிவில் தெரிந்து கொண்ட டி ஆர் பாப்பாவின் இசையையும் அத்தனை ரசிப்பதுண்டு. என்ன அருமையான பாடல்!! இன்று பொருத்தமான பாடல்தான்!
பதிலளிநீக்குஇதைப் பற்றிய தகவல்களும் இப்பதான் தெரிகிறது ஸ்ரீராம். உடனேயே பாடல் எழுதி இயற்றியிருக்காங்கன்னா என்ன ஒரு திறமை!!!!!
கீதா
முன்னரும்ஒரு வெள்ளியில் சொல்லி இருக்கிறோம்- வேறு பாடல் பற்றிச் சொல்லும்போது. நினைவில் இல்லை. அவ்வளவுதான்!
நீக்குஹிஹிஹி நானும் மறந்துவிட்டேன் அப்புறம் நினைவுக்கு வந்தது டி ஆர் பாப்பா பத்தி வாசிச்சிருக்கோமே என்று!!!! சில பதிவுகள் கருத்துகள் நன்றாக நினைவிருக்கு...சிலது நினைவிருந்தாலும் கொஞ்சம் மெதுவாகத்தான் நினைவுக்கு வருகிறது!!
நீக்குகீதா
இசையில் சிந்துபைரவியின் ரசத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் டி ஆர் பாப்பா அவர்கள்! ஹப்பா!!!
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா.. மிக இனிமையான பாடல்.
நீக்குகாத்திருந்த கண்கள் பாடலும் ரசித்திருக்கிறேன். இப்போது பல வருஷத்துக்குப் பிறகு கேட்கிறேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஆமாம் ரவிச்சந்திரன் ஒரு காலத்தில் கவர்ச்சிக் கதாநாயகன். என் வட்டத்தில் கூட ரசிகைகள் இருந்தார்கள்.
மனமே முருகனின் மயில்வாகனம் பாட்டு ரொம்பவே ரசித்த பாடல்.
கீதா
வரலஷ்மி விரத வாழ்த்துகள். இன்றைய நாளில் அம்மன்பாடல் பகிர்வு சிறப்பு.
பதிலளிநீக்குஇந்தப் பாடலை நல்ல வெய்யில் நேரத்தில் மைசூர் பிருந்தாவனில் ஷூட் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது என்னவோ தெரியவில்லை...அந்தக் காலத்து பத்தத்தி.....நடிகர்கள் ஷூவோ செருப்போ அணிந்துதான் பாடல் காட்சியில் நடிப்பார்கள். நடிகைகளை மாத்திரம் நல்ல வெய்யில் காலத்தில் வெறும் காலில் நடனமிடச் செய்வார்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன் எலியட்ஸ் பீச்சில் நல்ல வெயில் நேரத்தில் சுடு மணலில் ஒரு துணை நடிகை படாத பாடு பட்ட காட்சி என் மனத்தில் இன்றும் பதிந்திருக்கின்றது. இப்போது பாடல் காட்சிகளில் துணை நடிகைகள் கூட காலணி அணிகிறார்கள். நடிகைகள் தமிழ் சினிமாக்களில் எப்போது காலணி அணிய ஆரம்பித்தனர்?
பதிலளிநீக்குஇது மட்டுமா? குளிர்ப்பிரதேசங்களில் நாயகன் கொட்டு சூட்டுடன் குளிர் தெரியாமல் கதகதவென இருப்பான். நாயகி குறைந்த உடைகளில் குளிரில் நடுங்கி கொண்டிருக்கவேண்டும்~! இதெல்லாம் திரை உலகின் எழுதப்படாத சட்டங்கள்!
நீக்குநடிகைகளுக்குப் பாடல் காட்சியில் காலணி அணியும் சுதந்திரம் இப்போது வந்துவிட்டாலும், உடைகள் விஷயத்தில் மாற்றம் வரப்போவதில்லை....பாவம்.....ஆல்ப்ஸ் மலைப் பனிச்சாரலில் சிவந்த மண் படத்தில் அன்று சிவாஜிக்குக் கோட் கொடுத்த டைரக்டர் காஞ்சனாவை வெறும் காலுடன் குளிரில் நடுங்க வைத்த கதை இன்றும் தொடர்கின்றது:) காஞ்சனாவுக்குக் கொடுத்த உடையில் பாதி கூட இன்றைய கதானாயகிகளுக்குக் கிடைப்பதில்லை.
நீக்குமிகவும் பிடித்தமானப் பாடல்கள்
பதிலளிநீக்கு