வியாழன், 4 மே, 2023

கல்கியை காயப்படுத்தாத ஜிம்மி...

 வீட்டு வாசலில் கல்கி ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.

கையில் சிறு நோட்டும், பேனாவுமாக ஒரு ஜிப்பாக்காரர் நெருங்குகிறார்.

"வணக்கம்..  உங்கள் பொன்னியின் செல்வன் படமாக வந்திருக்கிறதே..."

கலங்கிய கண்களை மறைத்துக் கொள்கிறார் கல்கி.

"அது நான் எழுதிய கதை அல்ல.  தலைப்பும், பாத்திரங்களின் பெயரும் ஒன்றாக இருக்கின்றன.  சில சம்பவங்கள் ஒத்து வருகின்றன...  இதை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்.  பெயர் போடும்போது பாருங்கள் கதை : கல்கி என்று போடமாட்டார்கள்.  மூலக்கதை : கல்கி என்றுதான் போடுகிறார்கள்...  இது யாரோ ஜெயமோகன் குமாரவேல் எல்லாம் செய்த கதை..  மகாபாரதத்தையே கெடுத்தவர்களுக்கு என் கதை எம்மாத்திரம்?"

"எம் ஜி ஆர் எடுக்க நினைத்தார்.  முடியவில்லை.  வேறு சிலரும் முயன்றார்கள்.  முடியவில்லை.  இவர் எடுத்து விட்டாரே...."

கல்கி காதில் அது 'கெடுத்து விட்டாரே' என்பது போல விழ, தன்னை மீறி புன்னகைக்கிறார்.

"ஆம்.  இப்படி எடுக்க எம் ஜி ஆரால் முடியாது. " என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.

"முதல் பாகம் பெரிய வசூலாமே..   இரண்டாம் பாகமும்..."

"முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்திலாவது பிடித்திருப்பார் என்று கட்டாயம் கூட்டம் வந்துதான் பார்க்கும்.  பிரம்மாண்டமாய் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.  வானளாவிய மாளிகைகளும், பரந்த மைதானங்களும், மண் பூசிய கோட்டைகளும், குதிரைகளும், ஹெலிகாப்டர் ஷாட்டும் காட்டினால் ப்ரம்மாண்டமாகி விடாது.." சற்று யோசித்து, "இதுவும் நானூறு ஐநூறு கோடி வசூலித்து விடும்.  ஆனால்..."

அவர் பார்வை எங்கோ தூரத்தில் நிலைக்கிறது.  பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் அநிருத்தர், குந்தவை, சேந்தன் அமுதன், ஆழ்வார்க்கடியான் எல்லாம் முகத்தில் கோபமா, சோகமா என்று புரியாத கலவையுடன் தன்னைக் காணக் காத்திருப்பதைப் பார்க்கிறார்.  பின்னால் நிற்கும் பழுவேட்டரையர் சகோதரர்களின் முகத்தில் கொலைவெறி தெரிகிறது.  நந்தினியின் முகத்தில் வெளிபப்டையான கோபம் தெரிகிறது.  'கதையில் அவ்வளவு கிழவியா நான்?  என் முடிவு இப்படியா நடந்தது?'  

'எனக்கு தலைக்கனம் என்பதுபோல நீங்கள் எழுதி இருப்பதை மேக்கப்மேன் மட்டுமே கவனித்திருக்கிறார் போல.."  கோபப்பார்வையுடன் குந்தவை நின்றாள்.

நிருபர் வேறு ஏதோ கேட்க முற்படுகிறார்.  கல்கி மெல்ல எழுந்து தோளில் இருக்கும் துண்டை பற்றியபடி மெல்ல உள்ளே நடந்து மறைகிறார்.  அவர் கண்கள் கலங்கி இருந்தது போல தோன்றுகிறது நிருபருக்கு.

*******************

மணிரத்னத்துக்கு காதலை மையமாக வைத்து படம் எடுத்து எடுத்து பழக்கம்.  எனவே மாபெரும் பொன்னியின் செல்வனை ஆதித்த கரிகாலன்- நந்தினி காதலை வைத்தே எடுத்து விடலாம் என்று எடுத்து விட்டார் போல.  வேறெதற்கும் முக்கியத்துவம் இல்லை.  விக்ரம் அதாவது ஆதித்த கரிகாலன் மரணம் அடைந்த உடன் மிச்ச கதை நிமிடங்களில் முடிந்து விடுகிறது!

குந்தவை பெரிய ராஜதந்திரி. பெரிய திட்டங்கள் தீட்டுவதில் வல்லவள் என்று படைத்திருந்தார் கல்கி.  படத்தில் த்ரிஷா கார்த்தியை காதலிப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கிறார்.  வரும் ஓரிரு காட்சிகளில் பெரிதாக மலையைப் புரட்டும் காட்சி வேண்டாம், சிறிதாகவாவது ஏதாவது காட்சி காட்ட வேண்டாம்?  அக்னிநட்சத்திரம் படத்தில் பிரபுவும் கார்த்திக்கும் எதிரெதிரே பார்த்துத் தாண்டுவது போல ஒரு காட்சியை முதல் பாகத்தில் வைத்ததோடு சரி.

பாவம் அநிருத்தர்.  கதையில் அவருக்கு பெரிய பாத்திரம் கொடுத்திருந்தார் கல்கி.  மாறுவேஷம் எல்லாம் போட்டுக்கொண்டு அலைவார்.  மணிரத்னம் பற்றி அநிருத்தர் கல்கியிடம் முறையிடக்கூடும். கட்டியம் கூறுபவர் போல அறிவிப்பு செய்ய மட்டுமே அன்பில் அநிருத்த பிரம்மராயர்.  அவர் சிஷ்யன் ஆழ்வார்க்கடியானுக்கு இன்னும் பரிதாப நிலை.  படத்தில் சுந்தரசோழருக்கு ஏதோ மருத்துவர் சிறப்பு மருத்துவம் பார்த்து, படம் முழுக்க நோயின் அறிகுறி எதுவும் இல்லாமல் நடந்து வளைய வருகிறார்.

வந்தியத்தேவனுக்கு இரண்டரை ரீல், அருண்மொழிவர்மனுக்கு ஒன்றே முக்கால் ரீல், நந்தினிக்கு மூன்று ரீல், விக்ரமுக்கு நான்கு ரீல், பிரபுவுக்கு காலே அரைக்கால் ரீல், குந்தவைக்கு ஒரு ரீல்...   படம் ஓவர்.

ஹை டெசிபலில் அலறும் இசை.  மனதில் நிற்காத பாடல்கள்.  படம் பார்த்து முடித்த உடன் மனதில் என்னதான் நிற்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.  ஒன்றும் இருக்காது.

பூங்குழலி...?  சேந்தன் அமுதன்...?  பேசக்கூடாது.  மதுராந்தகன் அருண்மொழியோடு இணைந்து போர் புரிகிறானா?  ஆம்! கூட வந்தியத்தேவனும்.  அவனுக்கு பத்து வருட சிறைத்தணடனை படத்தில் கேன்சல்! ஆதித்த கரிகாலன் மாண்டதும், தன் வாழ்க்கைக்கு கதையை ரவிதாசன் சொல்லக்கேட்டு நந்தினி தற்கொலை செய்து கொள்கிறார்.

பொன்னியின் செல்வன் முன்கதைச் சுருக்கங்களை மட்டும் வைத்து படம் எடுத்தாலே இன்னும் இரண்டு பாகம் வேண்டும். படத்தில் வரும் எந்தப் பாத்திரமும் அந்தந்த பாத்திரத்துக்குரிய காட்சிகள் அமையாமல் வந்து போகிறார்கள்.  திருமண வீடியோவில் தலைகாட்டும் உறவினர்களின் தலைகள் போல!  விக்ரம் ஐஸ்வர்யா பச்சன் காதலை மட்டுமே பாடம் எடுத்திருக்கிறார்.  கூட கொஞ்சம் கொஞ்சம் மற்ற கேரக்டர்கள்.

நந்தினியைப் பார்த்தால் அய்யா என்று பார்த்து ஜொள்ளு விடவேண்டும்.  வந்தியத்தேவன் முதல் பார்த்திபேந்திர பல்லவன், கந்தமாறன் வரை அப்படிதான்.  ஆனால் ஐஸ்வர்யாவைப் பார்த்தால் ஆயா மாதிரி இருக்கிறார்.  ஆமாம், படத்தில் கந்தமாறன், அவன் தங்கை கேரக்டர் எல்லாம் எங்கே?

எந்த கேரக்டராவது யாருக்காவது பொருந்துகிறதா?  எனக்குத் தெரிந்து இல்லை.  கஷ்டப்பட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.  பொருத்தமில்லாத நடிகை, நடிகையர் தேர்வு.

குந்தவைக்கு தலைக்கனம் அதிகம் என்பது போல கதையில் வரும்.  அதை மேக்கப்மேன் மட்டுமே கவனித்திருப்பார் போல...

நெகிழவைக்கும் சம்பவங்கள் உண்டா?

இல்லை.

திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் உண்டா?

இல்லை.

செமையாக நடிக்கிறார்கள் என்று சொல்லும்படி காட்சி உண்டா?

இல்லை.

கதையில் வரும்படியே படத்தில் ஏதாவது ஒரு கேரக்டராவது முழுமையாக காட்டப்பட்டிருக்கிறதா?

இல்லை, இல்லை, இல்லை.

ஆர்வத்தைத் தூண்டிய கேரக்டர்?

படம் முடிந்து எனக்கு முன்னே நடந்த 70 வயது பெரியவர்.  தனியே வந்திருந்தார் போலும்.  ஒரு காலை விந்தி விந்தி இறங்க முடியாமல் படிகள் இறங்கினார்.  உதவ தோள் தொட்டபோது நாகரீகமாக மறுத்து விட்டு சொந்த முயற்சியில் சென்றவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை!

படத்தில் பின்னே என்னதான் இருக்கிறது?

சத்தம், இரைச்சல்...

பாஹுபலி அளவு RRR இல்லை.  RRR அளவு கூட பொன்னியின் செல்வன் இல்லை.


Grrrrrrrr

கல்கி ஆன்லைனில் மக்கள் விமர்சனம் என்று மைக்கை நீட்டுகிறார்கள்.  ஒரு பத்து வயது பையன் சொல்கிறான் "ஜெயம் ரவி வேற லெவல்!"  அப்புறம் படத்தின் 'மாண்புகளை' அலசுகிறார்! இன்னொரு பெண் "இது மாதிரி" படங்கள் எடுத்தால் அவரைப் போன்றவர்களுக்கு வரலாறு புரியுமாம்!

கதையைப் படித்து விட்டு படம் பார்ப்பவர்கள் நொந்து போவார்கள்.  கதையைப் படிக்காமல் படம் பார்ப்பவர்கள் கொஞ்சம் ரசிக்கலாம் என்று முதல் பாகம் பார்த்தபோது தோன்றியது.  இதையும் சேர்த்துப் பார்த்தால் ரசிகர்கள் கல்கியையே சந்தேகப் படுவார்கள்.  போஸ்டரிலேயே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்றுதான் போடுகிறார்கள்.

ஒழுங்காய் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து பாகங்கள் வேண்டும்.

============================================================================================================

நம் இனிய நண்பர் கணேஷ் பாலா முகநூலில் பகிர்ந்ததிலிருந்து....


இலக்கிய அரசி வை.மு.கோ.-2
===========================
அனந்தராம பாகவதரின் பாராட்டு கோதைநாயகிக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்தது. தொடர்ந்து பாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட சிறுமி கோதைநாயகி தன்னுடைய எட்டாவது வயதில் (1910) மேடையேறி அரங்கேற்றம் செய்தார் தன் பாட்டுக் கச்சேரியை. அதைத் தொடர்ந்து, பாடுவதில் கோதைநாயகியின் திறமை மெருகேறிக் கொண்டிருந்தது.

கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதி தன் மனைவியின் சங்கீத ஆர்வத்துக்கு அணை போடவில்லை. புரிந்து கொண்டு ஊக்குவித்தார். பல பல கச்சேரிகளுக்கும் நாடகங்களுக்கும் கோதைநாகியை அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். இப்படி சங்கீதத்தில் பெயர் பெற்றுக் கொண்டிருந்த கோதைநாயகிக்கு ஒரு விஐபி ரசிகையும் கிடைத்தார். அவர்… டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. கோதைநாயகியின் பாட்டைக் கேட்டுப் பரவசமடைந்த அவர் ரசிகையாகி, பழகி, நெருங்கிய குடும்ப நட்பாகவே ஆகிவிட்டார்.
அதன் பலன்… தேசிய நீரோட்டத்தில் காலெடுத்து வைத்தார் கோதைநாயகி. 1916ம் ஆண்டு திலகர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது, சென்னை திருவல்லிக்கேணியில் தேசபக்தர்களால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஆரத்தி எடுக்கிற சமயம் பாடல் பாடுகிற பொறுப்பு வை.மு.கோ.வுக்கு அளிக்கப்பட்டது. அன்று அழகாகப் பாடி தன் தேசிய வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைத்தார் வை.மு.கோ.
அப்படியே தொடர்ந்திருந்தால் பாடகியாகவே இருந்து புகழ்பெற்றிருக்கவும் கூடும். ஆனால் வாழ்க்கையில் திருப்பங்கள் எப்படி, யார் மூலம் வரக்கூடும் என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதே வாழ்க்கையின் விசேஷம். அது கோதைநாயகியின் விஷயத்திலும் நடந்தது.

கோதைநாயகிக்குக் கற்பனைத் திறன் அதிகமாக இருந்தது. பொழுதுபோகாத சமயங்களில் வீட்டுக்குள்ளேயே தன் தோழிகளாகிய சிறுமிகளை வைத்து நாடகங்களை நடத்துவார். அதற்கான வசனங்களையும், பாடல்களையும் அவரே இயற்றி (மனதுக்குள்தான்) சொல்லியும் கொடுத்து நடிக்க வைப்பார். அந்த நாடகங்கள் அனைத்தும் புராணச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

சில ஆண்டுகள் இப்படியே சென்ற நிலையில், புராண சம்பவங்கள் தவிர்த்து சமூக நாடகங்கள் எழுதினால் என்ன என்று வை.மு.கோவுக்குத் தோன்றியது. அவருடைய மாமனார் வீட்டு மாடியில் பட்டம்மாள் என்கிற பெண்மணி குடியிருந்தார். அவர் அந்நாளைய எஸ்.எஸ்.எல்.சி. படித்துத் தேறியவர். வை.மு.கோவின் நாடகங்களின் ரசிகை அவர். தன் சிந்தனையை வை.மு.கோ. அவருடன் பகிர்ந்து கொண்டபோது, “உங்களுக்கு கற்பனை நன்றாக வருகிறது. உங்களால் தமிழில் எழுதத்தான் முடியவில்லை. அதனால் நீங்கள் வாயால் சொல்லுங்கள். அதை நான் எழுதித் தருகிறேன்.” என்றார்.

அப்படித்தான் வெளிப்பட ஆரம்பித்தது வை.மு.கோவின் முதல் எழுத்து. வை.மு.கோ. சபாக்கச்சேரிகள் கேட்கச் செல்கையில் அவருக்குப் பழக்கமான ஒரு தோழி நோபிள் பிரஸ் என்றோர் பதிப்பகம்/அச்சகம் வைத்து நடத்திக் கொண்டிருந்த கதிர்வேல் முதலியாரின் மனைவி. தான் எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கோதைநாயகி சொன்னதைக் கேட்ட அவர், “நீங்கள் எழுதுகிற டிராமாவை எங்களின் பிரஸ்ஸிலேயே அச்சிடலாமே..” என்றார். வை.மு.கோ. மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

இப்படியாகத்தானே வை.மு.கோ டிக்டேட் செய்து, பட்டம்மாள் எழுதிய ‘இந்திரமோகனா’ என்ற நாடகம் புத்தகமாக 1924ல் வெளிவந்தது. 100 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை எட்டணா.

முதல் புத்தகம் வந்ததும் வை.மு.கோ. பெரும் புகழ் பெற்றாரா..? பதிப்பகத்தாரும் பத்திரிகைகளும் அவரின் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் பிரசுரித்தார்களா என்றால் பதில் : ஒரு பெரிய இல்லை. அதற்குமுன் சில பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றைப் பற்றி….

தொடர்வோம்.

படக்குறிப்பு : பின்னாளில் வை.மு.கோ. ஆசிரியராக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழ் அட்டைப்படம்.

======================================================================================

கல்கியை காயப்படுத்தாத ஜிம்மி...


==========================================================================================================

முன்பு பகிர்ந்த திகில் கவிதை ஒரு செட்...!  நோ சென்டிமென்ட்ஸ் ப்ளீஸ்.!!!




முழுவதும்
மூடி விடாதீர்கள்
கொஞ்சமாவது
காற்று வேண்டும்
எனக்கு..

தினம் தினம்
எழுந்து வருவதே
சிரமமாயிருக்கிறது.
யாரோ
என் கல்லறையை
மறுபடி மறுபடி
மூடி விடுகிறார்கள்.

================================================================================================

புதையல் எங்கிருக்கும்?


=========================================================================================

இணையத்தில் ரசித்தது......


================================================================================================



நியூஸ் ரூம்  :


நேற்று மனோபாலா மறைந்தததும், ஏற்கெனவே ஸீரியஸாய் இருக்கும் சரத்பாபு பற்றி வதந்தி பரவியதும் வருத்தம்.

================================.



என்ன கொடுமை பாருங்கள்..  எதற்கும் எதற்கும் முடிச்சு!



ஒருவரை ஏற்கெனவே கொன்று விட்டார்கள்.  அடுத்து இந்த செய்தி..  கேட்க ஆளில்லை.

பெரியண்ணனின் நிலை இது..  இன்னும் நாற்பத்தைந்து வருடங்களில்...  இன்னும் பத்துவ வருடங்களில் என்று பூச்சி காட்டுவது போய் அடுத்த மாதத்திலிருந்தே என்று புளியைக் கரைக்கிறார்கள்.  என்ன ஆகுமோ....


கொஞ்சமாவது சிரமம் இருந்தால் சேர்ந்தே வாழ்ந்துடுவோம் என்று நினைப்பார்கள்.  இப்படிச் செய்தால் எப்படி கண்ணே!



=====================================================================================================

பொக்கிஷம் :

முன்ஜாக்கிரதை வேட்டைக்காரர்.

அட போங்கப்பா.....

"பாம்..  பாம்..."

ஒட்ட நறுக்கிட வேண்டியதுதான்...   நறுக்கியாச்சுல்ல....

88 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. புலனத்தில் உலாவிய ரசித்த கட்டுரை.

    கொடூரக்கவிதை ரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
  4. நேத்தைக்கி அம்மம்மா, அப்பப்பா- ந்னு ஸ்ரீராம்!..

    இன்னிக்கி
    புலனம் சலனம் ந்னு கீனா ஜி..

    ஒன்னிமே பிர்யலை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மம்மா, அப்பம்மா நல்ல வார்த்தைதானே!  அவர் சொல்வது பொ செ பற்றி வான்டடாப் க்ரூப்பிலும், முகநூலிலும் போட்டதை..  அங்கு பாதிதான் வெளியிட்டேன்..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... பாட்டி, தாத்தா என்று சொன்னால், வயசாயிடுச்சு என்று அவங்க நினைப்பதால, அம்மம்மா அம்மப்பா. புலனம், கட்செவி, உட்செவி (ஹாஹா) உலாவி என்று நம்மை தமிழ்ப்பண்டிதர்களாக ஆக்கிவிட வேண்டும் என்று கில்லர்ஜி திட்டம் போட்டுவிட்டார் (ஆனால் கில்லர்ஜி தமிழ் சொற்களை உபயோகிப்பதை ஆச்சர்யத்துடன் நான் பார்க்கிறேன்)

      நீக்கு
    3. (ஆனால் கில்லர்ஜி தமிழ் சொற்களை உபயோகிப்பதை ஆச்சர்யத்துடன் நான் பார்க்கிறேன்)

      ஏங்குறேன்... ?

      நீக்கு
    4. நிறைய பேர்கள் முனைந்து தமிழ் சொற்கள் உபயோகிக்க நினைப்பதில்லை. (தமிழ் எனக்குப் பிடிக்கும். ஆனால் நானும் பல முறை ஆங்கில, வடமொழிச் சொற்களை உபயோகிக்கிறேன்). நீங்க தமிழ் சொற்கள் உபயோகிப்பது, அதுபோல மக்கள் தொலைக்காட்சி அழகிய தமிழில் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவை பாராட்டுதலுக்குரியது

      நீக்கு
  5. ​பொன்னியின் செல்வன் இரண்டு பாகமும் பார்க்கவில்லை,

    புதையல் தேடுபவர்களுக்கு கூறிய வழிகாட்டுதல் சிரிப்பு மூட்டுகிறது.


    ஆவிகள்
    கவிதை

    எழுதுவதில்லை.



    மார்க் அடிஸ்தானத்தில் வீடு வாடகைக்கா? GMB அறிவாரா? கீதா ரங்கனுக்கு அந்த அடிப்படியில் தான் வீடு கிடைத்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. - //பொன்னியின் செல்வன் இரண்டு பாகமும் பார்க்கவில்லை,


      நீங்கள் நல்லவர்.

      - ஆவி எழுதுவதாக இந்த பாவி எழுதியது!

      - அவர்கள்தான் சொல்லவேண்டும்!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. /// அம்மம்மா, அப்பம்மா நல்ல வார்த்தை தானே!..///

    நாம் இவ்வாறு சொல்லி அழைத்த வழக்கம் இல்லையே...

    யாழ் தமிழர்களின் வேறு பல நல்ல வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென புரிய வைக்க வார்த்தைகள் உதவினால் வழக்கத்தில் கொண்டு வந்துவிட வேண்டியதுதான்!  'அபுரி' போல!

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    கல்கியை பேட்டி எடுத்தை கற்பனையில் கலக்கி விட்டீர்கள்.

    பொ. செ (இரண்டாவது பட விமர்சனம்) படித்தேன். உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். நான் முதல் பகுதி திரைக்குக் சென்று பார்த்தேன். பாதி (முழுவதும் என்றே கூறலாம்.) வசனங்கள் காதில் விழவில்லை. அவ்வளவு இரைச்சல். ( இரைச்சல் இருந்ததுதான்.. ஆனால், உனக்கு காதிலும் அதே பிரச்சனை. அதனால் வசனங்கள் அதோடு சேர பிடிவாதமாக மறுத்திருக்கிறது. படம் பார்க்க வேண்டுமென்று நீ காட்டிய பிடிவாதத்தில் ஒரு பங்கு கூட அது எடுத்துக் கொள்ளவில்லை என குழந்தைகள் கூறி விட்டனர். ) நல்லவேளை..! ஏற்கனவே கதை படித்திருந்தால் ஒரளவு புரிந்தது கொண்டேன். . இரண்டாவதை இப்போதைக்கு பார்க்கும் ஆர்வம் வரவில்லை.

    இலக்கிய அரசி வை. மு. கோ அவர்களைப் பற்றிய கட்டுரை படித்தேன். சிரமங்கள்தான் பிரபலமானவர்களை ஏற்றும் படிகள். இந்தக் கட்டுரை தொடருமா ?

    கவிதை அருமை. இரண்டையும் ரசித்தேன். தங்கள் கற்பனைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வை மு கோ கட்டுரை வேறொரு தளத்தில் கணேஷ் பாலா எழுதுவது.  அங்கு போனால் படிக்கலாம்!  பொன்னியின் செல்வன் விமர்சனம் ரசித்ததற்கும் கவிதையைப் பாராட்டியதற்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  9. ஏனப்பா கீழே வேறு யாரையாவது
    புதைத்து வைத்திருக்கிறார்களா
    எனச் சோதிக்காமல்
    என்னைப் புதைத்துவிட்டீர்களே!
    நாற்றம் பொறுக்க முடியாமல்
    தினமும் இரவு
    காலாற நடந்துவர
    வேண்டியிருக்கிறது.


    ஆபீஸிலிருந்த வந்துகொண்டிருந்தபோது
    விபத்தில் இறந்ததால்
    ஆபீஸ் டிரெஸோடு
    புதைத்துவிட்டீர்களே
    வீட்டில் போட்டுக்கொள்ளும் பெர்முடா டீ ஷர்ட்
    இல்லை குறைந்தபட்சம்
    நாலுமுழ வேட்டியோடு
    புதைக்கக்கூடாதா?
    எங்கள் அசௌகரியத்தையும் புரிந்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் சௌகர்யத்துக்கு நிறைய இப்படி எழுதலாம்.  என் தங்கை மகள் நான்கு வரிகளில் திகில் கவிதை என்று ஒரு பக்கத்தை அறிமுகபப்டுத்தியபோது அந்த தூண்டுதலில் நான் எழுதியவை அவை.

      நீக்கு
    2. கல்லறையில் இடவசதி இல்லாத்தால், முன்பு புதைத்த பெட்டிகளை எடுத்து நெடுக்காக வைக்கலாமா?, அல்லது ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கலாமா என்றெல்லாம் யோசிக்கிறார்களாம்.

      நீக்கு
    3. ஆமாம்.  ஒரு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அடுத்தடுத்து மறையும் அவர் வீட்டு மனிதர்களை புதைக்க வேண்டுமென்றால் சிரமம்தான்.

      நீக்கு
  10. கல்கியை பேட்டி எடுப்பதுபோல நன்கு எழுதியிருக்கீங்க. எழுத்துக்குப் பாராட்டுகள்.

    உங்க பதிவுல கடைசி வரி மட்டும்தான் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.(ஐந்து பாகம்)

    செவ்வாய் சிறுகதையாக பொன்னியின் செல்வனை நீங்க எழுதணும். அதன் பிறகு நான் கருத்தைச் சொல்லமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளியன்று படம் வெளியான நிலையில் நான் சனிக்கிழமைபார்த்து விட்டு அன்று மாலையே எழுதியது இது.  அப்புறம் வந்த பற்பல விமர்சனங்களும் இவற்றையேதான் பிரதிபலித்தன.

      நீக்கு
    2. செவ்வாய் சிறுகதையாகவா?  பொன்னியின் செல்வனையா?  நானா?  ஏன் அப்படி?!!

      நீக்கு
    3. அதை நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள், சேந்தன் அமுதன் எத்தனை முழம் பூ கோவிலுக்குக் கொண்டுகொடுத்தார், கந்தபாறன் முதுகில் காயம் பட்டது வந்தியத் தேவனாலா, கந்தமாறன் தங்கை வந்தியத் தேவனை பேர் சொல்லி அழைக்கிறாளா என்றெல்லாம் தெரிந்துகொள்ளத்தான்.

      நீக்கு
    4. கல்கியின் படைப்புக்கு அவர் பெயரை உபயோகித்து வியாபாரம் செய்த மணிரத்ன ஜெமோக்கள் அதற்கு நியாயம் செய்யவில்லை என்று சொன்னால் அப்போ நீங்க எழுதுங்களேன் என்றால் எப்படி?!  இது நியாயமான வாதம் அல்ல!

      நீக்கு
    5. கல்கி பெயரில் வியாபாரம் நடக்கவில்லை. கல்கி டிரெஸ்டுக்கு, கொடுக்கத் தேவையில்லை என்றபோதும் 1 கோடி ரூபாய்க்கு மேல் படம் தயாரித்தவர் கொடுத்திருக்கிறார் (ஏற்கனவே கல்கி நாவல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன, அதற்கான பணமும் கல்கி குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது). கல்கி பெயரைச் சொன்னால், கல்கி அவதாரமா? என்று கேட்கும் அளவில்தான் தமிழகத்தின் இளைஞர் பட்டாளமும், தமிழகம் தாண்டிய பகுதிகளும் இருக்கின்றன. அதனால் அவர் பெயரை வைத்து வியாபாரம் என்று சொல்லமுடியாது.

      ஐந்து பாகமாக வந்த பெரிய புதினத்தை, ஒரு பக்கத்தில் எழுதவேண்டும் என்றால் என்ன எழுதுவோம், அப்படி எழுதியதை ஐந்து பக்கங்களுக்கு விரிவாக்கவேண்டும், அந்த ஐந்து பக்கத்தை, ஐம்பது பக்கங்களாக எழுதவேண்டும். இப்படித்தான் பொ.செ. வை எழுதியிருப்பார்கள்.

      கல்கி க்ளைமாக்ஸ், மணிமகுடம் உத்தமச் சோழருக்குக் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். முதல்ல அருண்மொழிக்கு எப்படி பட்டம் வரும்? அவன் இளவரசன்கூட கிடையாதே. இப்படி ஒவ்வொரு பகுதியையும் யோசித்து ஓரளவு எடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் பெரும்பகுதி தமிழக 40+ கல்கியின் நாவலில் வரும் ஒவ்வொரு பகுதியையும் விளக்கமாகச் சொல்லும் அளவு படித்தவர்கள். அதனால் பல துண்டு துக்கடாக்களையும் அவர்களை சாந்தப்படுத்த படத்தில் கொண்டுவந்திருக்கிறார்.

      கல்கி நாவல் படித்துவிட்டு, நாவலைத் தூக்கிக்கொண்டு (மனதில்) படம் பார்க்கப்போனால் ஏமாற்றம்தான். நம் கற்பனைகள் திரையில் வர வாய்ப்பே இல்லை. ஐஸ்வர்யா நன்றாக இல்லை (சொல்ல வருத்தம்தான்), பல இடங்களில். வானதி? அது யாரப்பா என்ற அளவில் பல பாத்திரங்கள். வரலாற்றுச் சிறப்புள்ள படம் என்பதால், என் மச்சானையும் உள்ள சேத்துக்கோங்க என்ற அளவில் பல கதாபாத்திரங்கள்.

      கல்கி கதையே நூல் கண்டுபோல பல சுற்றல்கள்தாம்.

      ஆதித்தனைக் காக்கத் தவறிய வந்தியத்தேவனுக்குச் சிறை. அனிருத்தப் ப்ரம்மராயர், ரவிதாசன் போன்றவர்களுக்குப் பதவி கொடுத்தார் (தனக்குப் பிறகான). அருண்மொழி, சதிக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை நாட்டைவிட்டே விரட்டிவிடுகிறான் (காரணம், பிராமணர்களை, பசுக்களைக் கொல்வதில்லை என்பதால்). காந்தளூர்ச்சாலையில் படிப்பைத் தவிரவும் ஆயுதப் பயிற்சியும் போர்ப்பயிற்சியும் கொடுப்பதால், அதன் காரணமாகத்தான் ரவிதாசன் போன்றவர்கள் முளைக்கிறார்கள் என்பதால், அதனை முற்றிலுமாக எரித்துவிடுகிறான் ராஜராஜ சோழன்.

      பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த பகையால், பின்பு பாண்டிய மன்னன், சோழர் குலத்தைக் கருவறுக்கிறான். கோவிலாக இருந்த இடங்களை விட்டுவிடுகிறான், ஆனால் சோழர் அரண்மனை போன்றவற்றை அடையாளம் தெரியாமல் அழிக்கிறான்.

      காட்சிப்படுத்தும்போது பல பிழைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம், பெரிதுபடுத்தத் தேவையில்லை.

      படத்தின் ஒரு வரி விமர்சனமாக நான் நினைப்பது, அந்தச் சம்பவங்களை திரைக்காவியமாக எல்லோரும் ரசிக்கும்படி எடுக்கவேண்டும், கல்கி எழுதிய சம்பவங்களில் பலவற்றையாவது மறக்காமல் வைத்துவிடவேண்டும் என்ற இரண்டு நோக்கங்களில் அகப்பட்டு திரைக்கதை நசுங்கிவிட்டது.

      நீக்கு
    6. மணிரத்னம் படித்தால் மகிழ்வார். நமக்கு வலுவாக சப்போர்ட் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று!

      நீக்கு
    7. இன்று இரண்டாவது முறையா (140 ரூ) வீட்டை ஒட்டிய மாலில் போய்ப் பார்க்க நினைத்தேன். நாளைக்குப் போகலாம் என்று நினைத்துவிட்டேன்.

      நீக்கு
  11. கல்கியின் நாவல், சோழப் பேர்ரசின் மீதானார்வத்தைத் தூண்டியது, தமிழக மக்களுக்கு.
    எழுத்தும் ரசனை, ஓவியங்கள் கற்பனை உலகைக் காண்பித்தன.
    அவர் எழுதியதுதான் வரலாறு என்பதை அவரே ஒத்துக்கொள்ள மாட்டார். வரலாறு என்பதே அனுமானம்தான். சிவபாத சேகரனின் குணம் இத்தன்மையுது, வீரம் இத்தன்மையது என நாம் அனுமானம் செய்கிறோம் (இதுபோலத்தான், அக்பர் நல்லவர், ஔரங்கசீப் கொடுங்கோலன், அலாவுதீன் கில்ஜி அயோக்கியன், அசோகர் நல்லவர், காந்தி மஹாத்மா என்று நாம் கருத்து வைத்திருப்பதும்)

    சிற்றரசர்களுன் எதிர்ப்பால், ஏற்கனவே சதியால் மூத்தவன் இறந்த நிலையில், சரி நான் இளவரசனாக இருக்கச் சம்மதிக்கிறேன், உங்கள் விருப்பப்படி சிற்றப்பாவே ஆளட்டும், ஆனால் அவர் வாரிசுகளுக்கு அரியணையில் உரிமை இல்லை என்ற ஒப்பந்தத்திற்கு அருண்மொழி, சுந்தரச் சோழர் வந்திருந்தால்?

    நம் கண் முன்னே, யார் திமுகவைக் கைப்பற்றி, முதல்வரானது என்ற நெடிய நிகழ்வைப் பார்த்திருக்கிறோமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதில் தவறே இல்லை.  இது மாதிரி மாறுபட்ட சிந்தனைகளுக்கு வேறு தலைப்பு கொடுக்க வேண்டும்.  சங்ககாரா, வீரபாண்டியன் வாள், வந்தியத்தேவன் வாள், என்றெல்லாம் எழுதியது போல உங்கள் கற்பனைக்கு நீங்கள் அடுத்தவர்தலைப்பையும், வியாபாரத்துக்கு பிரபலத்தையும் திருடக் கூடாது.  சோழர்களோ, பாண்டியர்களோ உத்தமர் அல்லர்.  மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார் என்று சொல்லப்படும் அசோகரின் உண்மையான முகமே அப்புறம் வரலாறு படித்தால்தான் தெரிகிறது.  அதுவரை அவர் மிக நல்லவர்தான்!இந்தப் படத்துக்கு இவர் நியாயமாக வைத்திருக்க வேண்டிய பெயர் ஆதித்தனின் அமர காதல்! நந்தினியின் நம்பிக்கை துரோகம் இப்படி..  

      நீக்கு
  12. போனா சேனா இந்த மாதிரிப் போகுதா!...

    நல்லவேளை.. இந்தவரைக்கும் தஞ்சாவூரு பக்கம் வியாவாரக் கூத்து.. ன்னு தலை வச்சிப் படுக்கலை..

    வேற மாதிரிப் போயிருக்கும்!..

    பதிலளிநீக்கு
  13. மெய்யாலுமே நந்டினி தான் கொன்னாகளாமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தினியுடன் கடம்பூர் மாளிகையில் சந்திப்பு நிகழ்ந்தபோது, கோபப் பேச்சில், ஆத்திரத்துடன் வெளியேறிய ஆதித்தன் கால் தவறி படிக்கட்டுகளில் உருண்டு இறந்துவிடுகிறான். ஏற்கனவே உத்தமச் சோழன் அடுத்த அரசனாக வரணும் என்று சிற்றரசர்கள் சதியாலோசனை செய்திருந்ததால், அவர்கள் குற்றவாளியாகிறார்கள். வந்தியத்தேவன் அங்கிருந்தும் இளவரசனைக் காக்கத் தவறியதால் முதல் குற்றவாளியாகி தண்டனைக்குள்ளாகிறான்.

      நல்லவேளை, ஆதித்தன் முரடன், அவன் பட்டத்துக்கு வரக்கூடாது, தான் சொல்வதைக் கேட்கும் தன் தம்பி அருள்மொழிதான் பட்டத்துக்கு வரணும் என்பதற்காக, தன் காதலனை விட்டு ஆதித்தனை கடம்பூர் மாளிகையில் குந்தவை கொல்லச் சொன்னாள், பழி எப்படியும் பழுவேட்டரையர்கள் மீதும் அவருக்கு ஆதரவான சிற்றரசர்கள் மீதும் வந்துவிடும் என்ற நோக்கத்தில்.... இப்படியும் யோசிக்கலாமே

      நீக்கு
    2. அதுதானே சங்கதாரா கதை?   அருண்மொழியே குந்தவையின் மகன்!

      நீக்கு
    3. அருண்மொழி குந்தவையின் மகன் என்பது ஜீரணிக்கமுடியாத பூச்சுற்றல். ஆனால் தன் கைக்குள் அடங்கிய தம்பி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் சாத்தியக்கூறு இருக்கும்.

      நீக்கு
  14. ரெண்டும் ரெண்டு ஆப்பை..
    ரெண்டும் கழண்ட ஆப்பை!..

    என்றொரு பழமொழி அந்த்க் காலத்தில் வழக்கத்தில் இருந்தது..

    (ஆப்பை - அகப்பை)

    பதிலளிநீக்கு

  15. எனக்குள்ளிருக்கும் பொன்னியின் செல்வன் என்னைத் தடுத்து விட்டான்..

    நல்லவேளை..

    நான் தப்பித்துக் கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  16. உழைத்த காசு..

    மருந்து மாத்திரை என்று போனாலும் இந்தக் கும்பலுக்கு போகக் கூடாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் போடுங்க...  ஏதோ கொஞ்சமாவது பொழுது போகிறது என்றாலாவது சரி..  அதுவும் இலை!

      நீக்கு
  17. நீங்க அப்படி நினைத்துக் கொண்டால் நாங்களா பொறுப்பு?..

    பதிலளிநீக்கு
  18. பரஸ்பர விருப்பத்தில் உடனடி விவாகரத்து - அவங்களோ இல்லை அவங்களைச் சார்ந்தவங்களோ ரொம்பவே நொந்துபோயிருப்பாங்களோ? நம் சட்டத்தின் நோக்கம் என்ன என்று புரிந்துகொள்ளாத தீர்ப்புகள் இவை. பேசாம, ஆசைப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றும் தீர்ப்பு வந்துவிடும் விரைவில்.

    பதிலளிநீக்கு
  19. //அடுத்து இந்த செய்தி.. கேட்க ஆளில்லை.// - கேட்கத்தான் அரசு இருக்கிறதே... இதுக்கெல்லாம் இனி பட்ஜெட்டுல இடம் போட்டுடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கிற கொள்ளையை அடிச்சுட்டு பெத்தவங்க குடுபத்துக்கு இழப்பீடு கொடுத்துடுவாங்க..

      நீக்கு
  20. புதையல் எங்கிருக்கும் - அட புதுப் புது விட்டலாச்சார்யாக்கள் தோன்றுகிறார்களே....

    பதிலளிநீக்கு
  21. எகிப்து பாரோக்கள் கதையைப் படித்தபோது, உங்கள் தினமணி பேப்பரிலும் நாயின் காதலி முகர்ந்து பார்த்திருப்பதைக் கண்டு சந்தோஷத்தில் உங்கள் நாய் பொங்கிவிட்டதோ? கேட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கணும்னா நான் வேளச்சேரி ஏரியாவில் போய்த் தேடவேண்டும்.  பல வருஷங்களுக்கு முன்னாலேயே அதைக் கொண்டு விட்டாச்சு.

      நீக்கு
  22. //பொருத்தமில்லாத நடிகை, நடிகையர் தேர்வு.// - புதன் கேள்வியாக இதனை வைக்கிறேன் கேஜிஜியிடம். தனித்தனியாக சிலரிடம், பொ.செ. பாத்திரங்களுக்கு எந்த நடிக நடிகையர் நடித்திருக்கலாம் என்று கேட்டு வரும் புதன் அன்று பிரசுரம் செய்யுங்கள். அங்கேயே கேட்டால், முன்பு வந்த பதிலைப் பொறுத்து பின்பு எழுதுபவர்கள் மாற்றுவார்கள். ஸ்ரீராமிடமும் கேளுங்கள். (கீசா மேடத்திடம் மறந்தும்கூட கேட்டுவிடாதீர்கள். அப்புறம் சுந்தரச் சோழனாக பியூ சின்னப்பா, குந்தவையாக எம்.என்.ராஜம், நந்தினிக்கு பத்மினி, ஆழ்வார்க்கடியான் நாகேஷ் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கதிகலங்கடித்துவிடுவார்கள். அவங்கெல்லாம் போய் நூறாண்டுகளாகிவிட்டதே என்றால், அப்படியா? இன்னும் பொதிகைல சொல்லலயே என்பார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி, பதில் எல்லாவற்றையும் நீங்களே சொல்லிட்டீங்களே !!

      நீக்கு
    2. பதில் நான் சொல்லலையே...ஹாஹா. இந்தக் கேள்வியின் உள் அர்த்தம் என்னன்னா, ஒவ்வொருவர் மனதிலும் பொ.செ. நாவல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. யாரைப் போட்டிருந்தாலும் பலருக்குப் பிடித்திருக்காது. சோத்துக்கு செத்தவ மாதிரி இருக்கும் திருஷாவா குந்தவை? இரண்டு குதிரைகளில் சவாரி செய்தால்தான் போருக்குச் செல்லமுடியும் என்ற நிலையில் இருக்கும் சின்னப் பழுவேட்டரையர் மற்றும் கொடும்பாளூர் பிரபு, என்று ஒவ்வொரு நடிகரையும் பொருந்தலைன்னு சொல்லிடலாம்.

      நீக்கு
    3. புதுமுகங்களை தேர்வு செய்து வைத்திருக்கலாம்.  நம் மனா பிம்பங்களுக்கு இருப்பவர்களில் யாரும் பொருந்த மாட்டார்கள்.

      நீக்கு
    4. நீங்க சொல்வது சரிதான் ஸ்ரீராம். ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டைத் தாங்கும் அளவு நடிகர்கள் இருந்தால்தான் மினிமம் கேரண்டி பிக்சராக அது மாறும். ஒரு திரைப்படமே, நடிகர்களைப் பொறுத்து வெற்றி, ஆவரேஜ், தோல்விப்படமாக ஆவதைப் பார்த்திருப்பீர்கள். வடநாட்டில் வியாபாரம் செய்ய ஐஸ்வர்யா, தமிழகத்தில் நட்சத்திரக் கூட்டம்.... என்று போட்டிருக்கிறார்கள்.

      அது சரி... நான் படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒரு தடவை, தமன்னாவிற்கு ஒரு தடவை, கதை முழுவதும் நன்றாக ரசிக்க ஒரு தடவை, பசங்களோட போகணும்னு ஒரு தடவை என்று பாஹுபலியை 4 தடவை பார்த்தேன். புது ஸ்டார்கள் என்றால், ஒரு தடவைக்கு மேல் போயிருக்க வாய்ப்பே இல்லை.

      நீக்கு
    5. பாஹுபலி கற்பனைக்கதை.  அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.  இங்கு அப்படி இல்லை.  இவர்களுக்கு பெரும் அளவு பொறுப்பிருக்கிறது.

      நீக்கு
  23. ஆதித்ய கரிகாலனை - (ஆதித்த கரிகாலன் அல்ல!..) ஆரியனுங்க தான் கொன்னானுவோ...

    அந்த இஸ்ட்ரிய நீலகண்ட சாசுத்திரி, சதாசிவ பண்டாரத்தான்..ன்ற ரெண்டு ஆரியனுங்க மறச்சி எழுதுனானுவோ..

    அத்த கலுக்கி.. ன்ற பாப்பான் மறச்சி கதை உட்டான்.. அத்தையும் மறச்சி...

    இப்படியான உருட்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன..

    இவனுங்களுக்காக நம்முடைய டேட்டா காலியாக வேண்டுமா?.. என்று இருக்கின்றது..

    கல்கி அவர்கள் இன்றிருந்தால் - ஏன் டா எழுதினோம்?.. என்று வருத்தப்பட்டிருப்பார்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வெர்ஷனையும் படித்தேன்.  கல்கி ஏன் வருத்தப் படப்போறார்?  அவர் அனுபவித்துதானே எழுதினார்!

      நீக்கு
  24. நல்லவேளை.. இந்தவரைக்கும் தஞ்சாவூரு பெரிய கோய்லு பக்கம் வியாவாரக் கூத்தனுங்க தல வச்சிப் படுக்கலை!....

    வெச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மாதிரி செட் போட்டுதான் எடுப்பாங்க...  பிரபலங்கள் உள்ளே போனால் ஆபத்து என்று பகுத்தறிவுடன் சிந்தித்து உள்ளே போகமாட்டார்கள்.

      நீக்கு
  25. தஞ்சாவூரு பெரிய கோய்லு -

    வேண்டுமென்று தான் எழுதியிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  26. வைமுகோ-வை சட்டென்று கண் வைகோ என்று பார்த்துவிட்டது! அப்புறம் தான் தெளிவானது இங்கே இலக்கியம் ஓடிக்கொண்டிருக்கிறதென! மேலும் தொடரட்டும் கட்டுரையை அவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே பழசு...  அவர் இன்னும் பலப்பல தொடர்ந்திருப்பார்.

      நீக்கு
  27. பொன்னியின் செல்வனை வைத்துக்கொண்டு இனி மணியின் மண்டையை உருட்டோ உருட்டென்று உருட்டுவார் பலர். விமரிசனமும் பல்வேறு முகம்கொள்ளும், விவகாரமாகும், விகாரமாகும்... தவிர்ப்பதற்கில்லை.

    நாவலைப் பலமுறை பரவசமாகப் படித்து, படித்து மனப்பாடம் செய்ததோடு, தியேட்டரில் போய் உட்கார்ந்துகொண்டு, மணிரத்னம் அதே புஸ்தகத்தின் அத்தியாயங்களை வரிக்கு வரி விடாமல் அப்படியே திரையிலும் வாசித்துக்காட்டுவார் என்று பாப்கார்ன் தின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தால், எதிர்பார்த்துக்கொண்டிருந்தால்.. ஏமாற்றம்தானே மிஞ்சும். பாவம், மணியோ, வேறெந்த இயக்குனரோ, என்னதான் செய்யமுடியும்?

    தெரியாத்தனமாய் - ஏதோ அவரின் போதாத காலம் - உங்களின் அபிமான நாவலைத் திரைக்குக் கொண்டுவந்துவிட்டார் ஒரு அசட்டுத் தைர்யத்தில். பிழைத்துப்போகட்டும், அந்த ஆளை விட்டுவிடுங்கள்.

    வேறு நல்ல நல்ல படங்கள் தமிழில்தான் எத்தனை இருக்கு, வருஷாவருஷம்வேறு வந்துகொண்டிருக்கே - நமக்கு பார்க்க, களிக்க, காலமெலாம் பேசி வாய்மணக்க !

    பதிலளிநீக்கு

  28. அன்பின் நெல்லை..

    //பின்பு பாண்டிய மன்னன், சோழர் குலத்தைக் கருவறுக்கிறான். கோவிலாக இருந்த இடங்களை விட்டுவிடுகிறான், ஆனால் சோழர் அரண்மனை போன்றவற்றை அடையாளம் தெரியாமல் அழிக்கிறான்..//

    ஆனால்

    பெரிய கோயிலுக்குள் இருந்த முருகன் கோயில் படையெடுத்து வந்த பகைவர்களால் தகர்ந்து போன நிலையில் நாயக்கர்கள் வந்து புதிதாகக் கட்டினார்கள் என்று ஒரு உருட்டு இங்கே வெகு காலமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ரீல். நாயக்கர்கள் முருகன் கோவிலை பிற்பாடு கட்டினார்கள். இது மாதிரி புது, சிறு கோவில்கள் பல பெரிய கோவில்களில் கட்டப்பட்டிருக்கிறது (உதாரணம் சாஸ்தா/ஐயப்பன் கோவில் - திருவட்டாறு பெருமாள் கோவிலில்)

      நீக்கு
  29. பொன்னியின் செல்வன் விமர்சனம் விரிவாக செய்து இருக்கிறீர்கள். முகநூலிலும் படித்தேன். கதை போல் எடுப்பது என்பது மிகவும் கடினம். தொடர் நாடகமாக அப்படியே புத்தகத்தில் உள்ளது போல எடுத்தால் சிந்துபாத் தொடர் போல நீண்ட காலம் பிடிக்கும். தயாரிக்க ஆள் கிடைக்க மாட்டார்கள்.

    நான் இரண்டாம் பாகம் பார்க்கவில்லை. உங்கள் பிள்ளைகள் படம் எப்படி இருப்பதாக சொல்கிறார்கள்? அவர்கள் நாவல் படித்து இருக்க மாட்டார்கள், அதனால் அவர்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன்களுக்கு திருப்தி இல்லை.  அவர்கள் கேட்டது பொன்னியின் செல்வன் என்பது கரிகாலன்-நந்தினி காத கதைதானா?  பொன்னியின் செல்வன் அருவழி வர்மன் என்றால் டைட்டிலுக்கு அவர் பேயறை வைத்து விட்டு படத்தில் அவரை பற்றி ஒன்றும் காணோமே என்று கேட்டார்கள்!

      நீக்கு
  30. கோதைநாயகி அவர்களை பற்றிய விவரம் முன்பு படித்து இருக்கிறேன்.
    உங்கள் கவிதை உயிருடன் இருக்கும் போதும், நடக்க எழுந்து கொள்ள கஷ்டம், செத்தபிறகும் கஷ்டமா?

    புதையல் வேட்டைக்கு வாணியம்பாடி நோக்கி சென்று விடப் போகிறார்கள்.

    சரத்பாபுவுக்கு வாழ்நாள் அதிகரிக்கும்.

    பொக்கிஷ பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  31. மதுரையின் ராணி சுக்குர் என்னும் இசுலாமியரைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினாளாம்.. அது அழகர் அண்ணனுக்கு பிடிக்கவில்லை யாம்..

    கடைசியில் கலியாணமும் நடக்க வில்லையாம்..

    சுக்குர் தான் சொக்கர் என்று...

    அடக் கடவுளே!..

    மருதைக்கும் சோதனைக் காலம் வந்து விட்டதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..மதுரையின் ராணி சுக்குர் என்னும் இசுலாமியரைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினாளாம்..//

      இப்போ, ஷாருக் கான், சல்மான் கான், ஆமீர் கான் -இவனுங்கதான் ஆம்பளைங்கங்கிற மாதிரி இந்து பெண்களெல்லாம் (வடநாட்டுப் பெண்கள் எனச் சொல்லலாம். தென்னாட்டில் இல்லையென்று உங்களுக்குத் தெரியுமா என்று யாராவது கேட்டுவிட்டால்!) ஆசைப்படமாதிரி, அந்தக்காலத்துலயும் இருந்திருப்பாளுகளோ ... என்று சந்தேகம் எழுப்புகிற விதமாகப் பேசுவார்கள், புத்தகமும் எழுதி பிரசுரித்துவிடுவார்கள். இப்போதெல்லாம்தான், மொழியில் வல்லமை இல்லாவிட்டாலும், எல்லோரும் இந்நாட்டு எழுத்தாளரல்லவா!

      நீக்கு
    2. //எல்லோரும் இந்நாட்டு எழுத்தாளரல்லவா!//

      மருத்துவமனை எல்லாம் ஆய்வகம் ஆனது மாதிரி கசாப்புக் கடைகள் எல்லாம் கருணை இல்லங்கள் ஆகி விட்டன...

      நீக்கு
  32. 980 ல் குந்தவை நாச்சியார் மதம் மாறிப் போய் விட்டதாக ஒரு உருட்டு முன்பே வந்திருக்கின்றது.. இப்போது மீண்டும் பேசு புக்கில் உருட்டப் படுகின்றது..

    பதிலளிநீக்கு
  33. கதை படிக்காதவர்களுக்கு பொன்னியின் செல்வன் படம் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!