ஞாயிறு, 18 ஜூன், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 01

 

வைரமுடி யாத்திரை – தொட்டமளூர் அப்ரமேயர்  பகுதி 1

வைரமுடி யாத்திரை என்று ஐந்து நாட்கள் யாத்திரையில் நான் 2022ல் கலந்துகொண்டேன். யாத்திரைக் குழு புறப்பட்து சென்னையிலிருந்து. அவங்க மதியம் பெங்களூர் கண்டோன்மெண்டில் வந்து சேர்ந்தாங்க. (காலையில் இரயில் ஏறும்போது பொங்கல் கொத்ஸு கொடுத்தாங்களாம். மதியம் கண்டோன்மெண்ட் வந்து சேர்ந்தும் கதம்ப சாதமும், தயிர்சாதமும் கொடுத்தார்களாம். நான் பெங்களூரில் இருப்பதால் கண்டோன்மெண்ட் சென்று அவர்களுடன் கலந்துகொண்டேன். அதுபோல திரும்ப வரும்போது, பெங்களூர் மெஜெஸ்டிக் இரயில் நிலையத்தில் அவங்க, சென்னை செல்லும் இரயிலில் ஏறி சென்னை திரும்புவாங்க.

இந்த வருடமும் அந்த யாத்திரையில் கலந்துகொண்டேன். (அதாவது மார்ச் 2022 மற்றும் மார்ச் 2023)  யாத்திரையைப் பற்றிச் சுருக்கமாகவும், யாத்திரையின் ஒரு பகுதியாக, நான் பார்த்து பிரமித்த ஹொசஹொசாலு லக்ஷ்மி நாராயணர் கோவில் பற்றி விரிவாகவும் எழுத நினைக்கிறேன்.  (அப்படி நினைத்துத்தான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன்…ஆனால் பாருங்க ரொம்பவே நீளமாகிவிட்டது. இப்படித்தான் ஸ்ரீராம் சொன்னாரே என்று பஞ்சத்வாரகா  யாத்திரை சென்று வந்த உடனேயே எழுத ஆரம்பித்தேன். பத்து நாள் யாத்திரையில் முதலிரண்டு நாட்களை எழுதுவதற்கும் 40 பக்கங்கள் போய்விட்டது. அப்படியே நிறுத்திவிட்டேன். அதைவேறு எழுத ஆரம்பிக்கணும்)

கண்டோன்மெண்டில் இருந்து மதியம் 2 ½ மணி வாக்கில்,  பஸ்ஸில் புறப்பட்டு, முதலில் Dதொட்டமளூர் இராமப்ரமேய ஸ்வாமி கோவிலை 4 மணிக்கு அடைந்தோம். இந்தக் கோவில், இராமநகரா மாவட்டத்தில் சென்னப்பட்டினா தாலுக்காவில், கன்வ ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தை 11ம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் ஆண்டனர்.  11ம் நூற்றாண்டில் இராஜேந்திர சிம்ஹன் என்ற சோழ அரசன், அவனது தளபதியான அப்ரமேயன் நினைவாக  புனரமைத்த கோவில் இது. தலக்காடு கங்கர்களால் கோவில் கட்டப்பட்து என்றும் பிறகு சோழத் தளபதி அப்ரமேயனால் புனரமைப்பு செய்யப்பட்டது என்றும் சொல்கின்றனர். கன்வ ஆற்றின் கரையில் மணற்பாங்கான இடத்தில் அமைந்திருந்ததால் மணலூர் என்று இருந்த பெயர், காலத்தில் மளூர் என்று மாறியதாம்.  கோவில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, கிபி 980ல் கோவிலுக்கு விளக்கெரிப்பதைப் பற்றி எழுதப்பட்ட ஒரு document இப்போதும் இருக்கிறது என்கிறார்கள். விஷ்ணு சஹஸ்ரநாம த்தில் வரும் ‘அப்ரமேயோ’ என்ற பெயரில் இருக்கும் ஒரே விஷ்ணு தலம் இதுதான். மூலவர் பெயர் அப்ரமேயர் (இராமப்ரமேயர்).  இந்தக் கோவிலின் பிரகாரத்தில் வலது மூலையில் தவழும் கிருஷ்ணருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. அந்த சந்நிதி மிகவும் பிரபலமானது. குழந்தையில்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றால் விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்த பிறகு இங்கு சிறிய தொட்டில் கட்டுவது வழக்கம் என்றும் சொல்கின்றனர்.  

நான் பெங்களூருக்கு வருவதற்கு முன்னமே ஒரு முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பெங்களூர் வந்த பிறகு வருடா வருடம், துலா மாதத்தில், காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஸ்ரீரங்கபட்டினம் செல்லும் வழியில் தொட்டமளூர் கோவிலுக்குச் செல்வேன்.

இந்தக் கோவிலில் அப்ரமேயர் சந்நிதி, தாயார் சந்நிதி, தவழும் கிருஷ்ணர் சந்நிதி மற்றும் பரமபதநாதர் சந்நிதிகள் அமைந்துள்ளன.






கோவிலின் தோற்றம் (அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டு மாடியிலிருந்து எடுத்தது-மே 2022)






40 வருடங்களுக்கு முன்பு, இந்த ஊர் அக்ரஹாரத்தில் (கோவிலுக்கு எதிரே உள்ள தெரு) சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்துவந்தனவாம். வேலை மற்றும் சுய முன்னேற்றத்திற்காக பலரும் இந்த ஊரை விட்டு வெளியேறி மைசூர், பெங்களூர் என்று சென்றுவிட்டனர். அவர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்களாம்.

பல வருடங்களுக்கு முன்பு முதல் முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, தெருவில் நானும் மனைவியும் நடந்துசென்றோம். அப்போது ஒரு சிறிய மண்டபத்திலிருந்து நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் சொல்லும் சப்தம் கேட்டு உள்ளே சென்றோம். அங்கிருந்த வைணவர்கள், அந்த ஊரைப் பூர்வீகமாக உடையவர்கள். வருடத்தில் பத்து நாட்கள் வந்திருந்து, நாலாயிரத்தையும் சேவிப்பார்களாம். அவர்கள் தமிழ் நாலாயிரத்தை, கன்னட லிபியில் உள்ள புத்தகத்தை வைத்துச் சேவிக்கிறார்கள். பலர் என்னிடம், நீங்க தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர், அதனால் பிரபந்த த்தை எளிதாகச் சேவித்துவிடுவீர்கள், ஆனால் இவர்கள் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தும், பிரபந்தத்தைக் கற்று, கன்னட லிபியில் உள்ள புத்தகத்திலிருந்து சொல்லுகிறார்கள் என்று சொல்வர். இதுபோலவே தெலுங்கு வைணவர்களும் தெலுங்கு லிபி புத்தகத்திலிருந்து சேவிப்பர். இவர்களின் முன்னோர் தமிழகத்திலிருந்து சென்ற வைணவர்கள். (இதை எழுதிய போதுதான், ஏன் சைவர்கள், திருமுறைகளை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்து, கோவில்களில் பாராயணம் செய்வதில்லை என்ற சந்தேகம் தோன்றியது. தமிழ் பக்தி இலக்கியங்கள்தாம் தமிழை வளர்த்தன என்றால் மிகையில்லை)



அப்ரமேயர் கருவறை விமானம்


பிரகாரத்தின் வாயிலில் இருந்த மரத்தில் செய்யப்பட்டிருந்த விஷ்ணு சிற்பம். (மூலவர் அப்ரமேயரைப் போன்றது). தற்போது காணவில்லை.  ப்ராகாரத்தின் சுற்றுப் பாதையில் இருக்கும் அப்ரமேயரின் சிற்பம். அது இந்த இடத்திலேயே எனக்குத் தெரிந்து பல வருடங்களாக இருக்கின்றது (தவழும் கிருஷ்ணர் சந்நிதிக்குப் போகும் வழியில்).

 

கோவிலின் உட்புறத் தோற்றம்





சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் மஹாராஜா, இந்தக் கோவிலுக்கு வந்து அப்ரமேயர், அரவிந்தவல்லித் தாயார் மற்றும் தவழும் கிருஷ்ணரைச் சேவித்தாராம். கிருஷ்ணரின் அழகில் மயங்கி, இந்த விக்ரஹத்தை தன்னுடைய அரண்மனைக்குக் கொண்டுசென்றாராம். அன்றிரவு, அவரது கனவில், விக்ரஹத்தை தொட்டமளூர் கோவிலிலேயே வைத்துவிடும்படி கிருஷ்ணர் கட்டளையிட்டாராம். அதை சட்டைசெய்யாதால், அவரது அரண்மனையின் ஒரு பகுதி தீக்கிரையானதாகவும், உடனே ராஜா தவழும் கிருஷ்ணரை திரும்ப இந்தக் கோவிலிலேயே கொண்டுவந்து வைத்துவிட்டாராம்.

இராமர், இந்த அப்ரமேயர் விக்ரஹத்தை வழிபட்டாராம். அதனால் இந்த மூலவரை இராமப்ரமேயர் என்று அழைக்கின்றனர். இராமர் காலத்தில் ஹோமம் போன்றவை நடந்ததற்கு கோவிலில் அடையாளமிருக்கின்றன என்கிறார்கள்.

(நமக்கு, கோவில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள், ஆனால் இராமர் காலத்துக்கு வரலாறு போகிறதே என்று தோன்றும். பெரும்பாலான கோவில்களில் சீர்திருத்தமோ இல்லை கோவிலை இன்னும் பெரிதாக்கிக் கட்டுவதோ அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. தஞ்சைப் பெரியகோவிலில், கோவில் கட்டும்போதுதான் பெருவுடையாரை பிரதிட்டை செய்தார்கள். ஆனால் பல ப்ராசீனமான கோவில்களில் அப்படி அல்ல. மூலவர் இருக்கும் இடத்தை விரிவாக்கி, மேலும் பல சந்நிதிகளைச் சேர்த்து அவ்வப்போது கோவில் விரிவாக்கம் பெற்றிருக்கும்.)


கோவிலின் பிரகாரத்தில் இருக்கும் கிணறு



தொட்டமளூர் இராமப்ரமேய ஸ்வாமி (இணையம்)



தொட்டமளூர் தவழும் (நவநீத) கிருஷ்ணர் (இணையம்) 


சென்ற வருடம் (2022) மே மாதம், இந்தக் கோவில் பட்டாச்சார்யாரின் (இராதாகிருஷ்ண பட்டாச்சார்யார்) 75வது பிறந்த நாளுக்காக, அவரது இல்லத்தில் பிரபந்தத்தைச் சேவிப்பதற்காக சிலரைக் கூப்பிட்டிருந்தார். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில் தொட்டமளூர் அப்ரமேயரை வெகு அருகில் நின்று சேவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

 சமீபத்தில் இணையத்தில் தொட்டமளூர் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரைப் பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்து. அவரது தந்தையார் கோவிந்தராஜ பட்டர் அவர்கள், இந்தக் கோவிலில் பட்டாச்சார்யாராக 1940களிலிருந்து பணியாற்றி 2013ல் மறையும்வரை கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இராதாகிருஷ்ண பட்டர், மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆகமம் மற்றும் பிரபந்தங்கள் கற்றுத் தேர்ந்தவர். 70களில் அவருக்கு அமெரிக்கா பிட்ஸ்பெர்க் வெங்கடேச்வரர் கோவில் மற்றும் வேறு பல பணிகள் கிடைத்தபோதும், வேறு எங்கும் செல்லும் மனமின்றி, தொட்டமளூர் கோவிலிலேயே பணியாற்றினார். 

கோவிலில் பணிபுரியும் பட்டாச்சார்யார்களுக்கு சம்பளம் மிகக் குறைவு, தமிழகத்தைவிட பரவாயில்லை. (இன்னும் பணியாற்றுகிறார்). அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் கொடுத்தது. இப்படிப்பட்ட சிலரை நான் சந்தித்திருக்கிறேன். (திருவரங்கம் கோவிலில் பணியாற்றுபவரின் மனைவிக்கு வெளிநாட்டு வேலை கிடைத்தும், கணவருக்காகவும் கோவில் பணிகளுக்காகவும் வேலையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல, Engineering படித்த பெண், கோவில் பட்டர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டுள்ளார், அந்த பட்டருக்கு வருமானம் குறைவு என்றபோதும்). பணத்தைவிட கோவில் கைங்கர்யமே பெரிது என்று நினைக்கும் மனம் எப்படி வருகிறது? 

நாமெல்லாம் பக்தி உடையவர்கள் என்று சொல்கிறோமே தவிர உண்மையான பக்தி நமக்கு இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தோன்றும். 



கோவிலின் அருகிலேயே சிற்றுண்டி நிலையம் இருக்கிறது. அங்கு காபி/டீ சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீரங்கபட்டினம் சென்றோம். அங்கு, வரவரமுநி சபாவின் சத்திரத்தில்தான் இரவு தங்கப்போகிறோம்.

சென்றமுறையைவிட, இந்த முறை, மைசூருக்கு 8 வழிச் சாலை சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டிருப்பதால், சாலைப்பயணம் தடங்கலில்லாமல் அமைந்தது. 6 ½ மணிக்கு ஸ்ரீரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம்.


( தொடரும்) 


96 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். நன்றி.

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நேற்று, உங்களுக்குச் சற்று முன்பு என் கருத்தைப் பதிந்தேன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நான் இன்று இப்போதுதான் தாமதமாக கண் திறக்கிறேன். சகோதரர் நெல்லைத் தமிழர் என்னைப் போல் நன்றாக "விபரமாக" எழுதியிருக்கிறார். படித்து விட்டு வருகிறேன். நேற்றைய கதை பதிவுக்கு கூட விளக்கமாக ஒரு. கருத்துரை தந்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனித்தேன்.  தாமதமானாலும் நீங்கள் பிறகு வந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்!

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இப்படியான பதிவுகளைப் படிப்பதற்கு நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..

    (அப்படியானால் பாவங்கள் கழிந்து விட்டனவே!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும்போதே, எனக்கு பல்வேறு புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் நேர்ந்தது. சென்றுவந்த இடங்களை மீண்டும் மீண்டும் அசைபோடவும் வாய்ப்பானது

      நீக்கு
  5. /// ப்ராகாரத்தின் சுற்றுப் பாதையில் இருக்கும் அப்ரமேயரின் சிற்பம். அது இந்த இடத்திலேயே எனக்குத் தெரிந்து பல வருடங்களாக இருக்கின்றது..///

    இங்கே என்றால் நிர்வாக / பக்தர்களின் - வசதிக்காக மாற்றப்பட்டு இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் கவனிப்பு குறைவு என்றாலும், எதற்குமே பணம் தேவைப்படும் காலம் இது.

      நீக்கு
  6. /// கோயிலில் பணிபுரியும் பட்டாச்சார்யார்களுக்கு சம்பளம் மிகக் குறைவு, தமிழகத்தை விட பரவாயில்லை..///

    இதெல்லாம் அந்தப் பெருமாளுக்கே அடுக்காது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தின் கோலம் இது. அதுவும் தவிர, சில கோவில்களில் வருமானம் (பட்டாச்சார்யர்களுக்கு) அதிகம். 'அதுவும் அவனது இன்னருளே' என்று எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலான கோவில்களில் அர்ச்சகர்கள், உதவியாளர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்

      நீக்கு
  7. கர்நாடகாவில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் ஹொய்சல பாணியில் கட்டப்பட்டவையாக இருக்கும். ஆனால் இது திராவிட பாணியில் கட்டப்பட்டதாக இருக்கிறது. பதிவு விளக்கமாக படங்களுடன் நன்றாக இருக்கிறது.

    அப்ரமேயர் என்பது பெயரானாலும் தமிழில் அதற்கு ஒரு சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். கர்நாடகாவில் திராவிட பாணி கோவில்கள் நிறைய உண்டு. பிறகு வந்து எழுதுகிறேன்.

      நீக்கு
    2. அப்ரமேயோ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். அளவிடற்கரியவர். புலன்கள் மூலம் ஒன்றை உணரமுடியும் (பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, வாசனை அல்லது தொடுதல்). பிரத்யட்சமாக இறைவனைக் காண்பது இயலாது (புலன்கள் மூலம்). அடுத்து அனுமானத்தின் மூலமும் அவனை வரையறுக்க முடியாது, (புகை வந்தால் அங்கு நெருப்பு இருக்கிறது என்பதுபோன்ற அனுமானம்). அடுத்து உவமானத்தின் மூலம், அதாவது அறியப்பட்ட பொருள்கள் ஏதாவதை உதாரணமாகக் கொண்டு விளக்குவது, அவனை அறியமுடியாது. ஷப்த ப்ரமாணம் எனப்படும், ஏற்கனவே எழுதிவைத்த விளக்கத்திலிருந்து அவனை அறிவதும் இயலாது. இப்படி எதன் மூலமாகவும் அளவிட முடியாதவர்.

      நீக்கு
    3. நல்ல விளக்கம். நன்றி.
      Jayakumar

      நீக்கு
    4. ஏற்கனவே எழுதிவைத்த விளக்கத்திலிருந்து அவனை அறிவதும் இயலாது. இப்படி எதன் மூலமாகவும் அளவிட முடியாதவர்.//

      டிட்டோ!!!!! நெல்லை. அந்த மாபெரும் சக்தியை எதைக் கொண்டும் அளவிட முடியாது. அணுவிலும் அணுவாய் ஆனால் பிரம்மாண்ட சக்தி. நான் அப்படித்தான் மனதில் நினைப்பது

      கீதா

      நீக்கு
    5. இருந்தாலும், மனதில் ஒரு உருவம் கொடுத்தால்தான் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கான்சன்ட்ரேஷன் வருகிறது.

      நீக்கு
  8. /// ஆனால் இராமர் காலத்துக்கு வரலாறு போகிறதே என்று தோன்றும் ///

    தலம் என்பது வேறு.. கோயில் (கட்டுமானம்) என்பது வேறு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கட்டுமானம் பல நேங்களில் பல தடவைகள் நடந்திருக்கலாம். தலச் சிறப்பு என்பது வேறு.

      நீக்கு
  9. கோ - இறைவன்/ அரசன்..

    கோயில் -
    கோ இல் = இறைவனின்/ அரசனின் இல்லம்..

    கோவில் = இறைவனின். வில்/ அரசனின் வில்...

    நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனே நம் எல்லாருக்கும் அரசன் என்பதால், தங்கள் அரண்மனையைவிட இறைவனின் இல்லத்தையே நம் அரசர்கள் அலங்கரித்தனர் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நான் கோயில் என்று எழுதுவது வழக்கம்..பேச்சில் வில் என்று சொன்னாலும் எழுத்தில் யில் - இறைவன் இல்....இதை ஒருமுறை பதிவிலோ கருத்திலோ சொன்னதாக நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    வைரமுடி யாத்திரை பதிவை நன்றாக எழுதியுள்ளீர்கள். படிக்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது.

    தொட்டமளூர் விஷ்ணு கோவில் படங்கள், அதன் விபரங்கள் என அனைத்தையும் அறிந்து கொண்டேன். இங்கெல்லாம் செல்ல நேரங்கள் அமைய வேண்டும். தங்களுக்கு அந்த கொடுப்பினைகள் அமைந்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி. பக்தியில் மனதை ஈடுபடுத்தியிருக்கும் பல நல்லவர்களுடன் தாங்கள் சத்சங்கம் வைத்துக் கொண்டிருப்பதற்கும் மகிழ்ச்சி. இதுவும் இறைவன் தரும் வரமாகும்.

    பக்தி என்பது ஒரு வரப்பிரசாதம். அது அமைந்த ("அவனே" அமைத்து வைத்த பின்) பின் தங்கள் வாழ்க்கையின், மாற்றங்களையோ , வசதிகளையோ எண்ணிப் பார்க்க விடாமல், அவர்களை நல்வழியில் தன்னுடன் இருத்தி வைத்து விடுகிறான் இறைவன். அதற்கும் நல்ல கொடுப்பினைகள் வேண்டும். எல்லாம் அவன் செயல். அவன் செயலை யாரால் தடுத்து மாற்ற முடியும்?

    மரத்தால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சிலைகள் நன்றாக உள்ளது அது ஏன் மாயமாதோ? தவளும் குழந்தை கிருஷ்ண விக்ரஹம் மிகவும் அழகாக இருக்கிறது. கோவில் அமைப்பும் சுற்றுப்புற தூய்மையும் அழகாக உள்ளது. கோபுரங்களுடன் இறைவனை நன்றாக தரிசனம் செய்து கொண்டேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு நெடும் தொடர் கமலா ஹரிஹரன் மேடம் (பாதியளவு ஹொசஹொலாலு கோவில் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது).

      பக்தி, கர்மானுசாரணைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் அமைகிறது.

      கர்நாடகாவில் முக்கியமான கோவில் இந்தத் தொட்டமளூர் கோவில். (அதிலும் தவழும் கிருஷ்ணர்)

      நீக்கு
  11. /// இதுபோல, Engineering படித்த பெண், கோவில் பட்டர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டுள்ளார், அந்த பட்டருக்கு வருமானம் குறைவு என்றபோதும்). பணத்தைவிட கோவில் கைங்கர்யமே பெரிது என்று நினைக்கும் மனம் எப்படி வருகிறது?..///

    இதற்கு திருவாசகத்தில் பதில் இருக்கின்றது..

    எம்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க..

    திருவெம்பாவையில் இப்படியான விண்ணப்பம் இறைவன் முன் வைக்கப்படுகின்றது..

    ஆனால் மகா உத்தமர்களுக்கே அப்படியான வரம் கிடைக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சார். அவன் அடியார்க்கல்லாது நான் இல்லை என்று ஒரு பெண் நினைக்கும் மனது வர, அந்தப் பெண் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். ப்ரபந்தங்களிலும் உள்ளது, சட் என நினைவுக்கு வரவில்லை. ரஞ்சனி நாராயணன் மேடம் சொல்லக்கூடும்.

      நீக்கு
    2. எல்லாம் பெரியோர் அருளிச் செய்தபடி...

      நீக்கு
  12. //நாமெல்லாம் பக்தி உடையவர்கள் என்று சொல்கிறோமே தவிர உண்மையான பக்தி நமக்கு இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தோன்றும்//

    பலரையும் சிந்திக்க வைக்கும் கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... எனக்கு, எப்போதுமே உள்ளார்ந்த பக்தி மிகக் குறைவு என்ற எண்ணம் வரும். பக்தி நம் மனதை ஆக்கிரமிக்கவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். இந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், 'அக்கம் பக்கம் பாரடா சின்னராசா'

      நீக்கு
    2. பக்திமான் எனச் சொல்வோரை எனக்குப் பிடிக்காது, நான் நல்லவர் எனச் சொல்வதும் இதுவும் ஒன்றுபோலவே தோன்றும்.

      சிலர் கோயிலுக்குப் போனால் அப்படியே சுவாமியுடன் இரண்டறக் கலந்துவிட்டதுபோல இருப்பார்கள், சிரிக்க மாட்டினம்[புன்னகையைச் சொல்கிறேன்], கதை கேட்டாலும் சுவாமியைப் பார்த்தபடி தலையை மட்டும் அசைப்பது... இதெல்லாம் ஓவர் நடிப்பாகவே இருக்கும்...

      என் கணவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம்.."இவர்களுக்கெல்லாம் தாம்தான் கடவுளின் அஸிஸ்டண்ட் எனும் நினைப்பு" ஹா ஹா ஹா... இப்படிப்பட்டோர் கோயிலுக்கென எதுவும் செய்ய மாட்டினம்.

      ஆனா மனதில் பக்தியுடன் வெளியே ஆருக்கும் தெரியாமல் கோயிலுக்காக பாடுபடுவோரும் இருக்கினம்.

      நான் சும்மா கும்பிடுவேன், ஆனா சிலசமயம், தீபாராதனையின்போது, ஒருமாதிரி கண் எல்லாம் கலங்கி, உடம்பெல்லாம் புல்லரிக்கும்.. இது அப்பப்ப வரும் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. இறைவன் சன்னிதியில் ஏதோ ஒரு நொடி, நமக்கு அவருடன் நாம் மட்டுமே இருப்பதுபோல, நம்மை அவர் பார்த்துவிட்டதுபோலத் தோன்றும் அவ்ளோதான். வெளியில் யாருக்கும் தெரியாமல், கோவிலுக்காகப் பாடுபடுவோரால்தான் கோவில்கள் நிலைத்து நிற்கின்றன அதிரா. (உடனே அடுத்து 'காவிரி தந்த அதிரா' என்று பெயர் மாற்றிக்கொள்ளவேண்டாம்)

      நீக்கு
    4. அதிரா, உங்கள் கருத்தை டிட்டோ..

      கீதா

      நீக்கு
    5. ///(உடனே அடுத்து 'காவிரி தந்த அதிரா' என்று பெயர் மாற்றிக்கொள்ளவேண்டாம்)//

      ஹா ஹா ஹா அடுத்து என்ன பெயரோ என எல்லோரும் அலேட்டா இருப்பதைப் பார்க்க நேக்குப் புல்ல்ல்ல்ல்ல்லரிக்குதே:))

      நன்றி கீத்ஸ்... ஒன்றைக் கவனிச்சீங்களோ கீதா...நெல்லைத்தமிழனுக்குப் பாட்டிலகூட சின்னவராக இருக்கத்தான் விருப்பமாம்ம்.. ஹா ஹா ஹா மீ ரன்னிங்:))

      ///அக்கம் பக்கம் பாரடா//// சின்னராசா'////

      நீக்கு
    6. //சின்னவராக// - ஆமாம், அனுபவத்தில், குணத்தில், அறிவில் பலரைவிட நான் குறைந்தவன்தான் அதிரா. ஆனாலும், வயதில் கீதா ரங்கன்(க்கா) என்னைவிடப் பெரியவங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
  13. தகவல்கள் சிறப்பு படங்கள் வழக்கம் போல அழகு

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அழகு...

    பல தகவல்கள் மனதார சொன்னது அருமை...

    பதிலளிநீக்கு
  15. ///(காலையில் இரயில் ஏறும்போது பொங்கல் கொத்ஸு கொடுத்தாங்களாம். மதியம் கண்டோன்மெண்ட் வந்து சேர்ந்தும் கதம்ப சாதமும், தயிர்சாதமும் கொடுத்தார்களாம்.///

    சே சே இதை மிஸ் பண்ணிட்டமே:)) என்பதுதான் இப்போ பெரிய பிரச்சனைபோல தெரியுது:)) சரிசரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) வந்த வேலையைப் பார்ப்போம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு யாத்திரைன்னு சென்றால், அவர்கள் கொடுக்கும் உணவு வகைகளையும் பெரும்பாலும் குறித்துக்கொண்டு, அதையும் எழுதிவிடுவேன். 2008ல், முக்திநாத் யாத்திரை இவர்களுடன் சென்றபோது என்ன என்ன கொடுத்தார்கள் என்பதையும் எழுதிவைத்திருக்கிறேன். ஹா ஹா.

      நீக்கு
    2. அப்படிக் கலந்து எழுதினால்தானே ஒரு சுவாரஷ்யம் இருக்கும் நெல்லைத்தமிழன், இல்லை எனில் ஸ்கூலில் எக்ஸாமுக்குப் படிப்பதுபோல எல்லோ இருக்கும் போஸ்ட்:)

      நீக்கு
  16. ///முதலிரண்டு நாட்களை எழுதுவதற்கும் 40 பக்கங்கள் போய்விட்டது. அப்படியே நிறுத்திவிட்டேன். அதைவேறு எழுத ஆரம்பிக்கணும்)///

    .. ஆஆஅ விட்டதை எல்லாம் திரும்ப எதுக்கு?:))விட்டதை விட்டிடோணுமாக்கும்:))..
    ....................................................................
    திரும்பவும் அதை எழுதவெளிக்கிட்டால் எங்கட கெதி என்னாவுறது.. ஸ்ரீராமுக்கு என்ன ஈசியாச் சொல்லிட்டார்ர் கர்ர்ர்:))---- ஓ மை வைரவா கொஞ்சம் சத்தமா யோசிச்சிட்டேனோ:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பல யாத்திரைகள் எழுத வேண்டியிருக்கிறது அதிரா. அதிலும் பஞ்ச த்வாரகா யாத்திரை, ஆக்ரா அக்பர் கோட்டை... எனப் பல இடங்களின் படங்கள் பகிர்வேன்.

      நீக்கு
    2. பகிருங்கோ பகிருங்கோ.. நான் சும்மா தனகினேன்:))

      நீக்கு
  17. அதென்ன கோயில் பெயர், இடப்பெயர் ஏன் ஆற்றின் பெயர்கூட வாயில் நுழையுதில்லையே... இது தமிழ்நாட்டில் தானே இருக்கு.. சமஸ்கிருதம் தழுவிய பெயர்களோ?

    //நான் பெங்களூருக்கு வருவதற்கு முன்னமே ஒரு முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பெங்களூர் வந்த பிறகு வருடா வருடம், ///துலா மாதத்தில்,//
    எழுத்துப்பிழையோ? தலா என வருமோ இல்லை துலா தானோ? துலாதான் எனில் அப்படியென்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோவில் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது அதிரா

      துலா மாதம் - ஐப்பசி மாதம் (இந்தம்மாவுக்கு ஐப்பசி மாதம் தெரியுமான்னு தெரியலையே). இந்த மாதத்தில் இரவும் பகலும் சம நேரம் இருக்குமாம். துலா மாதத்தில் காவிரி ஆற்றில் குளிப்பது நல்லது. காவிரி இப்போ எங்க ஆறல்லோ (கர்நாடகா).

      நீக்கு
    2. ஆஆஆஆ இது எனக்குத் தெரியாதே கர்ர்ர்ர்ர்:)).. அப்போ அனைத்து மாதத்துக்கும் ராசிப்பெயர் இருக்கோ.. நட்சத்திரம் எனில் 12 கரெக்ட்டா வரும் இது ராசி அதிகம் எல்லோ.. இருப்பினும் கனியிருக்கக் காய் கவரலாமோ கர்ர்ர்:))..

      நீக்கு
    3. நீங்கள் எப்போ கர்நாடகாவுக்கு மூவ் பண்ணினனீங்கள்?.. ஓ கேட்க மறந்திட்டனே உங்கட வீடுகட்டி முடிஞ்சு குடி போயிற்றீங்களோ?? அது கர்நாடகாவிலா???

      நீக்கு
    4. 2019 இறுதி மாத்த்தில். அதற்கப்புறம் பெங்களூரில்தான் வசிக்கிறேன். நான் தமிழக உணவு, சாம்பார், தோசை போன்றவற்றை மிஸ் செய்கிறேன். இருந்தாலும் இங்குள்ள ஹோட்டல்களின், தரம் மற்றும் சுத்தம் சொல்லிமாளாது.

      நீக்கு
  18. ஆவ்வ்வ்வ் படங்கள் கோபுரம் சூப்பராக இருக்கே... புதுப்பிச்சிருக்கினமோ? அந்த பிரவுண் கோபுரத்தில், ஒவ்வொரு படியிலும் ஒருசோடி வெள்ளைச் சிலை மிக அழகாக இருக்கே.. அதைக் கொஞ்சம் குளோசப்பில் எடுத்திருந்தால் இன்னும் பார்த்திருக்கலாம், அது ஆருடைய சிலைகள்?..

    //(அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டு மாடியிலிருந்து எடுத்தது-மே 2022)///

    அவர் எப்பூடி உங்களை நம்பி:) மாடி ஏற விட்டார் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில், பொறுமையாக படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. கோபுரத்தில் உள்ள சிலைகளை எடுக்க, நல்ல கேமரா வேணும்.

      நீக்கு
  19. //(கோவிலுக்கு எதிரே உள்ள தெரு) சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்துவந்தனவாம்.//

    காசியில் இப்பவும் இப்படி தெரு இருக்கிறதுபோலும், யூரியூப்பில் பார்த்தேன்.

    //தமிழ் பக்தி இலக்கியங்கள்தாம் தமிழை வளர்த்தன என்றால் மிகையில்லை)//

    கரீட்டூஊஊஉ இதுக்காகத்தானே அதிராவும் இப்பவும் பாடுபடுறேன், இலக்கியங்களைத்தேடி எடுத்து வந்து போஸ்ட்டாக்குகிறேன்.. இன்னும் வர இருக்குது, இதை எல்லாம் ஆரும் பாராட்டவே மாட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) சரி சரி.... இது கோயில் பற்றிய பதிவு என்பதால ஆரும் என்னோடு கோபிக்க முடியாது சிரிச்சுக்கொண்டே இருக்கோணுமாக்கும் இல்லை எனில் தெய்வக்குற்றமாயிடும்:)) ஹா ஹா ஹா இப்பூடி மிரட்டிட்டால்தான் நேக்கு சேவ்வ்வ்வ்வ்வ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் எழுத்து (இயல்பான பேச்சு நடை) மிகவும் அழகு அதிரா.

      கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் ன்னு பாட்டைப் போட்டுட்டு, நானும் இலக்கியங்களைத் தேடி எடுத்து போஸ்ட் ஆக்குகிறேன் என்று சொல்வதெல்லாம் டூ டூ மச்.

      நீக்கு
    2. ///நெல்லைத் தமிழன்18 ஜூன், 2023 அன்று பிற்பகல் 1:48
      உங்களின் எழுத்து (இயல்பான பேச்சு நடை) மிகவும் அழகு அதிரா.///

      மிக்க நன்றி மிக்க நன்றி...
      சே இந்நேரம் பார்த்து என் செக் இங்கின இல்லையே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை எல்லாம் படிக்க மாட்டா :))).

      //கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் ன்னு பாட்டைப் போட்டுட்டு,//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. அது உண்மை என நிரூபிக்கத்தானே மீ போஸ்ட் போடுறேன்:))...

      நீக்கு
  20. கோயில் சுத்தமாக அழகாக இருக்குது, ஆனா கீழ்பகுதி அப்படியே பழைமை பேணி வச்சிருக்கினம் போல இருக்குது, கருங்கல்லோ?

    //கோவிலின் பிரகாரத்தில் இருக்கும் கிணறு///
    எங்கள் ஊர்க்கோயில்களிலும் இப்படித்தான், இதேபோலவே அமைந்திருக்கும் கிணறுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் பெரும்பாலும் கோபுரப் பகுதியில்தான் சிதைய ஆரம்பிக்கும். செடிகள் முளைத்து கோபுரம் பாழாகும். அதனால்தான் கோபுரத்தை மாத்திரம் புதுப்பிப்பினம். ஶ்ரீரங்கத்தில் உள்ள, மிகப் பெரிய கோபுரத்தின் அடிப்பகுதி, மிகப் பழமையானது. பெரிய கோபுரப் பகுதி மாத்திரம் 80களில் கட்டப்பட்டது.

      நீக்கு
  21. ///ஸ்ரீரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம்.///

    ஆஆ அப்போ இனி ஸ்ரீரங்கத்தில் சந்திப்போம்:))..

    கொமெண்ட்ஸ்க்குப் பதில் கிடைக்கும் எனும் இடங்களில்தான், கொமெண்ட்ஸ் போடும் விருப்பம் வருது, பதில் கிடைக்காதெனில்.. உள்ளேன் ஐயா.. சொல்லிவிட்டுப்போகப் பிடிக்குதில்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீரங்கம் இல்லை. ஶ்ரீரங்கப்பட்டினம். கர்நாடகாவில் உள்ளது.

      உங்கள் கடைசி இரண்டு வரிகள் உண்மை. நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்.

      நீக்கு
  22. வைர முடி யாத்திரை குறித்த தொடர் மிகச் சிறப்பாகத் தொடங்கி இருக்கிறது. பாராட்டுக்கள் நெல்லைத் தமிழன்.

    கோயில் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  23. நெல்லை, முதல்ல படங்கள் பத்தி சொல்லிவிடுகிறேன். அப்புறம் மத்த விஷயத்துக்கு அதான் உங்களை இழுக்க....ஜம்புவேன்.

    படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை.

    இரண்டாவதில் அந்த கோபுரம், 3 வது செம ...ஹையோ என்ன அழகு..ராமர் ஆஞ்சு எல்லாரும் projected ஆக் தனியாகத் தெரியறாங்க...வடிவமைப்பு செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன்(க்கா ஹா ஹா ஹா)

      நீக்கு
    2. நான் இங்கின எதுவும் ஜொள்ளமாட்டேன் :) எனக்கெதுக்கு ஊர்வம்பு:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  24. 30 வருஷங்களுக்கு முன்ன போனது, அப்ரமேயர் கோயில். ஏதோ நினைவில் இருக்கு...அந்த ஆற்றங்கரை நினைவு இருக்கு. தெரு முன்னேறி இருக்கிறது!

    கோயில் படங்கள் அட்டகாசம், போங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்துலதானே இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்றுவரலாமே கீதா ரங்கன். அல்லது ஐப்பசி மாதமாவது.

      நீக்கு
    2. இப்ப ஒரு தடவை போய்ப் பார்க்கும் ஆர்வம் உண்டு ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை......இல்லை நெல்லை என் விருப்பங்கள் வேறு....ஆனால் இப்போதைக்கு எங்கும் செல்லும் சூழல் இல்லை, நெல்லை

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீரங்கபட்டினம் காவிரி, அதன் அருகில் உள்ள பழைய காலத்து கற்களால் செய்யப்பட்ட பாலம் போன்றவைகளைக் கூட காண ஆர்வமில்லையா? நீங்க பிஸி என்பது தெரியும்

      நீக்கு
  25. கோயில் அப்படியேதான் இருக்கு போல....அப்பவும் இப்படி பழமையாகப் பார்த்த நினைவு....ஆற்றங்கரி அடுத்த பதிவில் வருமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  26. காலையில் இரயில் ஏறும்போது பொங்கல் கொத்ஸு கொடுத்தாங்களாம். மதியம் கண்டோன்மெண்ட் வந்து சேர்ந்தும் கதம்ப சாதமும், தயிர்சாதமும் கொடுத்தார்களாம். //

    ஹாஹாஹாஹா வடை போச்சே!!!!! எப்படி மிஸ் பண்ணினீங்க நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மனைவி காலையில் உணவு கொடுத்தாங்களே. அதுவும் தவிர, கதம்பசாதம், தயிர்சாதம், பொங்கல், கொத்ஸு.... நமக்குச் சரிப்படாது.

      நீக்கு
    2. //கதம்பசாதம், தயிர்சாதம், பொங்கல், கொத்ஸு.... நமக்குச் சரிப்படாது.//
      "எட்டாத பயம் புய்க்குமாமே" ஹா ஹா ஹா அது பக்கத்துவீட்டில பூஸ் ரேடியோவில பயமொயி சொல்லீனம்... நான் ஒண்ணும் ஜொள்ளல்லே:)

      நீக்கு
    3. இல்லை அதிரா. பொங்கல்கூட ஓகே. கதம்ப சாதம், புளிசாதம்லாம் யாத்திரையின்போது பிடிப்பதில்லை. ஆனால், இனிப்பு ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
  27. கோயில்ல பிரசாதம் எதுவும் கிடையாதோ? எனக்குப் பிரசாதம் கிடைச்சா கொள்ளாம்!!! ஹாஹாஹாஹாஹா...கோயில்னாலே இதுதான் முதல்ல மனசுக்கு வருது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்களுக்கான பக்தர்கள் வருகை குறைவு. இப்போ எனக்கு கோவில் பிரசாதங்களிலும் ஆர்வம் இல்லை. (ஒரு சில கோவில்களில்தான் பிரசாதம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். ஏதேனும் ஓரிரண்டு கோவில் பெயர்கள் சொல்லுங்க பார்ப்போம்)

      நீக்கு
    2. எனக்கு ஆன்மீகத்தில் மேம்பட்ட உணர்வு வரவில்லை என்று சொல்வதற்கு இன்னொரு காரணம், கோவில் பிரசாதம் நல்லா இருந்தால்தான் நான் எடுத்துக்கொள்வேன் (இல்லைனா கொஞ்சம் சாம்பிளுக்கு). உங்களுக்குத் தெரியுமா, ஒரு சில கோவில் பிரசாதங்கள்தாம் சூப்பராக இருக்கும்(னு என் நாக்கு சொல்லும்). உங்கள் அனுபவத்தில் அப்படிப்பட்ட கோவில்கள் சிலவற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

      நீக்கு
    3. ஊர்க்கோயில்களில் அப்படி இல்லை என நினைக்கிறேன், ஆனா இங்கு வெளிநாட்டுக்கோயில்களில்[90வீதமானவை], பிரசாதத்தையும் வைத்து அருகில் பக் பண்ண என பொக்ஸ் களும் இருக்கும், அப்போ எங்கட மக்களைத் தெரியும்தானே, தேவையில்லை எனினும் ஓசியில கிடைச்சால் விடாயினம், 4,5 பெட்டிகளில் நிரப்பிக் கொண்டு போவினம், இனியும் சனம் வருமே வேணுமே எனும் எண்ணம் இருப்பதில்லை, இதனால பூஜை முடியப்போவோர், தாமதமாகப் போவோருக்கு எதுவும் இருக்காது..

      அதிலும், நம்மைப்போன்று எப்போதாவது கோயில் தேடிக் கஸ்டப்பட்டுப் பிரயாணம் பண்ணிப்போய், அங்கு பிரசாதம் இல்லாமல், பிள்ளைகள் கவலைப்பட்டு... இப்படியான நாட்களும் உண்டு. கோவிலைச் சுற்றி சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் தாராளமாக வாங்கலாம், ஆனால் கோயில் பிரசாதம் எடுத்து ஒரு வாயாவது வைத்தால்தான் ஒரு திருப்தி. அதிலும் வீட்டில் எனில் சாப்பிடமாட்டினம், கோயிலில் எனில் சாதம் எல்லாம் விரும்பிச் சாப்பிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      நோர்மல் நாட்களில் மிஞ்சிவிடும், வெள்ளி செவ்வாய் இப்படித் தினங்களில் வீட்டில எங்கட ஆட்கள் சிலர் சமைப்பதில்லை:) .. கோவில் கிட்ட எனில் ... பிரசாதத்துடன் நாட்கள் நகர்ந்திடும்...:). அதில் தவறு இல்லை, ஆனா நேரம் பிந்தியும் மக்கள் வருவினம் எனவும் நினைக்கோணும்.
      ஆஆஆஆ நேக்கு லெக்ஸ்ஸு காண்ட்டு எல்லாம் நடுங்குதே:))..

      நீக்கு
    4. அதிரா... நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது, 1993-94களில் துபாய் அனுபவம் நினைவுக்கு வருது. அங்குள்ள கோவில்களில் க்யூ வரிசையில் வெள்ளிக்கிழமை மாலை பிரசாதம் கிடைக்கும். நாமே எடுத்துக்கொள்ள முடியாது.

      ரமதான் மாத்த்தின்போது பள்ளிவாசல்களின் வாசல்களில் (அங்கு நிறைய பள்ளிவாசல்கள் உண்டு. வாசல் என்பது ரோட்டின் ஓரம்). இரண்டு மூன்று மிகப் பெரிய மேசைகளில் தொழுகைக்குப் போகிறவர்கள் sweets boxes வைத்துவிட்டுச் செல்வர். (கொஞ்சம் திறந்திருக்கும். அங்கு மிகச் சுத்தமாக இருக்கும்). யார் வேண்டுமென்றாலும் இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  28. நாமெல்லாம் பக்தி உடையவர்கள் என்று சொல்கிறோமே தவிர உண்மையான பக்தி நமக்கு இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தோன்றும். //

    உண்மை....வெளியில் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, நெல்லை. வெளியில் நாம் பக்தி உடைய்வர்கள் என்பதை எந்த வடிவத்திலும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றும். பிரார்த்தனை பக்தி என்பதெல்லாம் தனிப்பட்ட விஷயம்...ஒவ்வொருவரது பக்தியும் ஒவ்வொரு வடிவில்.

    சிலர் வெளியில் பார்க்க நாகரீக உடையில், நுனி நாக்கில் பேசுபவர்களாகத் தோன்றும் ஆனால் அவங்க் உண்மையிலேயே நல்ல மனசுடனும், ஆழ்ந்த இறை உணர்வுடனும் இருப்பாங்க...

    அதுக்காக நெற்றியில் குங்குமம் விபூதி போட்டுக்கொண்டு கோயிலில் நேர்ச்சை செய்து கொண்டு மற்றொரு புறம் வாயில் வரும் வார்த்தைகள், அப்புறம்....அர......திகள்....

    நான் ஓடிடுறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எந்த வடிவத்திலும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றே // - வடிவம் அல்லது அதற்குரிய அலங்காரம், indirect வழியில் நமக்கு உதவும். இப்போ என் வாழ்வில் நடந்த இரு நிகழ்வுகளை எழுதும் நேரம் வரவில்லை. ஆனால் என்னுடைய வடிவம் (நான் ஸ்வரூபம் என்று சொல்லுவேன்) எனக்கு நல்வழியில் என்னைச் செலுத்தியிருக்கிறது. ஆனால் இது அவசியம் கிடையாது, இன்னும் மேம்பட்டவர்களுக்கு.

      //அவங்க உண்மையிலேயே நல்ல மனசுடனும், ஆழ்ந்த இறை உணர்வுடனும்// - வெளி வேஷம், அழகு எதுவுமே முக்கியமில்லை. உள்ளம் நல்லதாக இருக்கும்போது. 'நாத்திகனாக' இருந்தால் என்ன? சக உயிருக்கு கெடுதல் நினையாத, நல்லது நினைக்கும் மனது இருந்தால் போதாதா? அதற்காக பிறருடைய உணர்வைக் காயப்படுத்தத் தேவையில்லை.

      /மற்றொரு புறம் வாயில் வரும் வார்த்தைகள்,// இது மாதிரி நிறைய பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். கோபுரத்தின் மேல் கலசமும் இருக்கிறது, அதற்கு அருகில்தான் காற்றினால் அடித்துவரப்பட்ட குப்பையும் இருக்கிறது. கோபுரத்தின் மேல் இருப்பதால் இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா?

      நீக்கு
    2. //அர......திகள்....

      நான் ஓடிடுறேன்

      கீதா///

      கீதா நில்லுங்கோ நில்லுங்கோ.. அந்த இடைவெளியை நிரப்பிப்போட்டு ஓடுங்கோ... ஹையோ ஆண்டவா என் வாய்தேன் எனக்கு எடிரி:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    3. முல் வார்த்தை தெரியலை. ஆனால் இரண்டாவது வார்த்தை வியாதிகள். சரிதானே. ஹி ஹி ஹி

      நீக்கு
  29. இந்தக் கோவிலைப் பற்றி உங்கள் பகிர்வின் மூலம்தான் அறிகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. இது சென்னப்பட்டினா (கர்நாடகா)வில் உள்ளது.

      நீக்கு
  30. எத்தனை முறை போயிருப்பேனோ நினைவில் இல்லை. கடைசியாப் போனது 2013 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதம். அதன் பிறகு "பெண்"களூரே போகலை. எனக்குச் சென்னையின் அசுத்தமான ஓட்டல்களை விட "பெண்"களூர், ஆந்திராவின் ஓட்டல்கள் பிடிக்கும். சுத்தம் மட்டுமின்றி விலையும் சென்னையை விட மிக மிக மிக மலிவு. அதிலும் "பெண்"களூர், "மங்களூர்" ஆகிய ஊர்களின் ஓட்டல் காஃபி எனில் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நேற்று இணையத்துக்கு விடுமுறை அளித்துவிட்டீர்களா? பெங்களூரில் சல்லிசு விலையில் (12-15 ரூ) சூப்பர் காபி அனேகமா எல்லா கடைகளிலும் கிடைக்கும்

      நீக்கு
  31. நாங்க முதல்முறை போனப்போ இருந்த பட்டாசாரியார் மிக வயதானவர். கோயில் நடை சார்த்திய உடனே போயிட்டோம். ஆகவே மறுபடி கோயிலைத் திறக்க முடியாதுனு கறாராகச் சொல்லிட்டார். அங்கிருந்த தபால் நிலையத்தின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். போஸ்ட் மாஸ்டர் அந்த பட்டாசாரியாரின் மரும்களாம். விபரம் தெரிந்து கொண்டு எங்களை உள்ளே வந்து உட்காரச் சொல்லிக் காஃபி எல்லாம் வாங்கிக் கொடுத்து உபசரித்தார். பின்னர் மாலை நான்கு மணிக்குக் கோயில் திறந்ததும் தான் தரிசனம் கிடைத்தது. 2,3 ஆம் முறைகளில் ஒரு தரம்காலையும் இன்னொரு தரம் மாலை ஆறுமணிக்கும் தரிசனம் செய்ததால் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. என்றாலும் பக்கத்திலுள்ள சென்னப்பட்டணம் சென்று பொம்மைகள், புடைவைகள் வாங்கணும்னு ஆசை. ஆனால் நம்மவர் அதுக்கெல்லாம் ஒத்துக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இருக்கும் பட்டாச்சார்யாரின் தகப்பனாராக இருக்கக்கூடும். நானும் அவரைப் பார்த்திருக்கிறேன். கோவில் நடை சார்த்தியிருந்தால் அங்கு பொழுது போக வாய்ப்பே இல்லை. இப்போ ரெஸ்ட் ரூம், ஒரு பலகாரக் கடை ஆகியவை இருக்கின்றன.

      நீக்கு
  32. கோயில் கோபுரங்கள், விமானம், பிரகாரம் ஆகிய படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் கோயில்களைச் சுத்தமாகப் பராமரிப்பதையும் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் (திருநெல்வேலி) பாபநாசம் கோயில் இருந்த நிலைமையைப் பார்த்துட்டுக் கண்ணில் ரத்தமே வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடகாவில் எல்லாக் கோவில்களும் ஓரளவு சுத்தமாகவே இருக்கின்றன. பக்தர்களின் பங்கும் இதில் உண்டு.

      நீக்கு
  33. தொட்டமளூர் தவழும் (நவநீத) கிருஷ்ணர் மிகவும் அழகு. பிள்ளை வரம் வேண்டுவோர் வெண்ணை சாற்றி மகிழ்வார்கள். கிருஷ்ணர் அருள்வார்.

    படங்களும் , செய்திகளும் மிக அருமை.
    நான் இந்த கோவிலை தரிசனம் செய்யவில்லை. உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. கோவிலின் பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமைந்து இருக்கும் படம் நல்ல கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள் மிக அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!