வெள்ளி, 2 ஜூன், 2023

வெள்ளி வீடியோ : உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

கிருஷ்ண கானத்தில் இன்னொரு பாடல் 'குருவாயூருக்கு வாருங்கள்' பாடல். 

இதுவும் பி. சுசீலா பாடிய பாடல்.  இனிமை இதன் ப்ளஸ். பக்தி ரசம் ப்ளஸ்ப்ளஸ்!  பாடல் கண்ணதாசன்.  இடம் எம் எஸ் விஸ்வநாதன்.

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
===============================================================

1976ல் ஒரு படம்.  கன்னடப்படம்.  படத்தின் பெயர் கதா சங்கமா.  புட்டண்ணா கனகல்  எடுத்த இந்தப் படத்தில் மூன்று சிறுகதைகள் படமாக்கப்பட்டது. கல்யாண்குமார், சரோஜா தேவி, ஆரத்தி, ரஜினி நடித்த்துள்ள இப்படத்தில்  கிராத்தி கோவிந்தராஜ் எழுதிய ஹங்கு, வீணா எழுதிய அதிதி, ஈஸ்வர் சந்திரா எழுதிய முனித்தாயி.  

விஜயபாஸ்கரின் இசையில் P B ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது.  அதே சமயம் வேறொரு பாடலை நினைவு படுத்துகிறது.  என்ன பாடல்  என்று சட்டென நினைவுக்கு வரவில்லை.   (ஆனால் பின்னர் மனதில் டியூன் ஓடிக்கொண்டேயிருக்க, எனக்குத் தோன்றிய  அந்த இன்னொரு பாடலைக் கண்டு பிடித்து விட்டேன்)

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இதில்.  இந்த கதா சங்கமா வில் ரஜினியும் நடித்திருக்கிறார்.  மூன்றாவது சிறுகதையில் வரும் சிறு வில்லன் ரோல் என்றாலும் முத்திரை பதித்திருந்தாராம்.  இதன் பாதிப்புதான் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை ரஜினி பலாத்காரம் செய்யும் காட்சி.  பாரதிராஜா புட்டண்ணா கனகலின் சீடர்.  இரண்டாவது சுவாரஸ்யம், ரஜினி முதலில் அறிமுகமானது 1975 ல் அபூர்வ ராகங்கள் தமிழ்ப்படத்தில்.  இரண்டாவது வாய்ப்பு இந்தப் படம், கன்னடப் படம்.  மூன்றாவது படம் பாலச்சந்தர் எடுத்த அவள் ஒரு தொடர் கதையின் தெலுங்கு பாதிப்பு 'அந்துலேனி கதா'..

So, தமிழ், கன்னடம், தெலுங்கு என்று முதல் மூண்டு படங்கள் வெவ்வேறு மொழிகளில் ரஜினிக்கு.  நான்காவது படம்தான் இன்னும் அழுத்தமாய் பெயர் சொல்லும்படி அமைந்த மூன்று முடிச்சு.  

சுவாரஸ்யம் இன்னும் முடியவில்லை.  இந்த முனித்தாயி கதை இருக்கிறது அல்லவா, இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி பிற்பாடு நடக்கும் கதையாக தமிழில் 'கை கொடுக்கும் கை' என்று எடுத்தார்கள்.  அதில் வில்லன் வேடத்தில் சிறு பாத்திரத்தில் நடித்த ரஜினி இதில் கதாநாயகன்.


சரி, P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் வேறொரு பாடலை நினைவு படுத்துகிறது என்று சொன்னேன் இல்லையா..  அந்தப் பாடல் இதுதான்.  இதுவும் வேற்றுமொழிப் பாடல்தான்.   ஹிந்திப் பாடல்.  பாப்பா கெஹத்தே ஹைன் என்பது படத்தின் பெயர்.  1996 ல் வெளிவந்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட்.  என்னவென்று பார்த்தால் இசை 'மெலடி கிங்' ராஜேஷ் ரோஷன்.  அந்தப் படத்தில் வரும் பாடல் 'பியாருமே ஹோத்தா ஹை க்யா ஜாதூ..' எனும் குமார் சானு, அல்கா யாக்னிக் பாடிய பாடல். 

இரண்டு பாடல்களையும் கேட்பீர்களா, இல்லையா தெரியாது.  இந்தப் பாடல்களை ஏற்கெனவே கேட்டிருப்பவர்கள் இருக்கிறார்களா, தெரியாது.  கேட்டால் ரசிப்பீர்கள்.  இனிமையான பாடல்.  என் மாமா ஜவர்லால் இந்தப் பாடல் என்ன ராகம் பேஸ் என்று முன்னர் சொல்லி இருந்தாலும் இப்போது அது நினைவில் இல்லை!  கீதா ரெங்கன் சொல்லக்கூடும்.

46 கருத்துகள்:

 1. முதல் பாடலை நிறையமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். அவன் அருளால் குருவாயூரில் கோவிலின் அருகில் மூன்று நான்கு இரவுகள் தங்கியிருந்து அவன் தரிசனமும், பிரசாதமாக பால்பாயாசமும் கிடைக்கப்பெற்றேன்.

  குருவாயூர் கிருஷ்ணனுக்கு அலங்காரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிருஷ்ணகானம் கேட்டு இன்புறாதார்த்தான் யார்?! வாங்க நெல்லை.. நான் இன்னும் குருவாயூர் பார்த்ததில்லை.

   நீக்கு
  2. குருவாயூர் போனதில்லை. உடுப்பி பக்கமும் சென்றதில்லை. துவாரகா?ம்ஹூம். மதுரா மட்டும் போய் தரிசித்திருக்கிறேன்.

   நீக்கு
  3. நான் எல்லாத்துக்கும் போயிருக்கேனே! அதிலும் துவாரகா! நாலைந்து தரம். குருவாயூர் மட்டும் ஒரே ஒரு தரம். அப்போப் போனப்போ நெல்லையின் ஆனைக்கொட்டாரத்தில் ஆனை ஓட்டத்தில் ஓடுவது போல ஓடிப் போய் தரிசனம் செய்யும்படி இருந்தது! :( அதிலும் மலையாளிகள் முந்திக் கொண்டனர். அதே உடுப்பியில் அப்படி இல்லை. உள்ளூர் மக்கள் ஆசை தீரப் பாருங்க என இடம் விட்டுடுவாங்க. காலம்பர நிர்மால்ய தரிசனம் சுத்திச்சுத்திச்சுத்திச் சுத்தி வந்து பார்த்துக் கொண்டே இருந்தோம்.

   நீக்கு
  4. மத்ராவில் கிருஷ்ணரைப் போலத் தவழ்ந்து வரச் சொல்லுவாங்க. என்னால் எல்லாம் முடியாது எனப் பேசாமல் நின்று கொண்டே பார்த்தேன். சொன்னது புரியலை போல என அவங்களுக்குள் பேசிக் கொண்டாங்க. நான் ஒண்ணும் சொல்லலை.

   நீக்கு
  5. முன்னாடியே சொல்லி இருப்பேன். ஆனாலும் சொல்றேன். பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை ஒரு பையில் போட்டு வைச்சிருந்தோம். அந்தப் பையிலேயே பணமும் இருந்ததால் அப்படியே எடுத்து வந்துட்டோம். பாதுகாப்புச் சோதனையில் நம்மவர் மாட்டிக்கொள்ள என்னை உள்ளே விட்டுட்டாங்க. நான் தயங்கி நின்று கொண்டே இருந்தேன். நம்மவர் ஆங்கிலம்,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் விளக்கினார். ஆனாலும் கடைசியில் அவரோட ஐடி கார்டு தான் கை கொடுத்தது. பாதுகாப்புத்துறையின் ஐடி கார்டைப் பார்த்ததுமே கத்தியோடு பையை மட்டும் வைத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்து வாங்கிட்டுப் போங்கனு சொன்னாங்க! அப்பாடா! நு இருந்தது.

   நீக்கு
 2. கதாசங்கம்ம் பாடல் மிக இனிமையாக இருக்கிறது. எனக்கென்னவோ கல்யாண்குமாரைப் பார்த்தாலே கான்ஸ்டிபேஷன் வந்து அவதிப்படுபவரைப் கோல எப்போதும் சோகமாகவே இருக்கும் அவர் முகம்தான் நினைவுக்கு வரும். இந்தப் பாடலிலும் அப்படித்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கல்யாண்குமாரைப் பார்த்தாலே கான்ஸ்டிபேஷன் வந்து அவதிப்படுபவரைப் //

   ஹா..  ஹா..  ஹா..  ஆமாம்.  அப்படிதான் இருப்பார்.  ஆனால் அதைப் பார்க்காமல் பாடலை ரசித்ததற்கு நன்றி.  இன்னும் ஒரு பாடல் இருக்கிறது!

   நீக்கு
 3. முதல் பாடல் பல முறை கேட்டு இருக்கிறேன்.

  மற்ற இரண்டு பாடல்களும் கேட்டேன் நன்று.

  பதிலளிநீக்கு
 4. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வு கள் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குருவாயூர் தரிசனமும் தெய்வ அருளால் கிடைத்திருக்கிறது. இன்னுமொரு முறை கிடைக்க அவன் அருள வேண்டும்.

  இரண்டாவது மூன்றாவது பாடல்கள் பற்றிய தகவல் சேகரிப்பு நன்றாக உள்ளது. பாடல்களைப் பற்றிய தங்களது தேடல் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

  இந்தப் பாடல்களை ஏற்கனவே கேட்டிருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. தாங்கள் தேடி ரசித்துப் போட்ட பாடல்கள் அருமையாகத்தான் இருக்கும். பாடல்களை கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் கேட்காதோர் இருக்க முடியாது!  மற்ற இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு சொல்லுங்கள்!  இசைதானே நம் வாழ்வை, மனதை இனிமையாக்குகிறது...?

   நீக்கு
 7. அஸ்மின் பராத்மன்
  நநு பாத்மகல்பே
  த்வமித்த முத்தா
  பித பத்மயோநி: ।
  அனந்த பூமா மம
  ரோக ராஷிம்
  நிருந்தி வாதாலய
  வாஸ விஷ்ணோ..

  குருவாயூரப்பனே!.. பத்ம கல்பத்தில் பிரம்மனைத் தோற்றுவித்தவரே!. அளவற்ற மகிமை கொண்டவரே!. உடல், மனம் சார்ந்த நோய்களைப் போக்கி நீரே என்னை நலமுடன் வாழச் செய்ய வேண்டும்!..

  ஸ்ரீ நாராயணீயத்தின் ஸ்லோகம்..

  அவ்வப்போது கேட்டுக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கின்றேன்..

  என் மனைவி கொரோனாவில் சிக்கியபோது உறுதுணையாக இருந்த ஸ்லோகம் இப்போது எனக்கும்!..

  ஹரே கிருஷ்ணா..

  பதிலளிநீக்கு
 8. நாராயண நாராயண
  ஹரி ஹரி

  நாராயண நாராயண

  நாராயண நாராயண
  ஹரி ஹரி

  நாராயண நாராயண..

  பதிலளிநீக்கு
 9. புல்லாங்குழல் பாடும் புருஷோத்தமனின் புகழ் இது தான்!..

  பதிலளிநீக்கு
 10. சபரிமலைக்கு சென்று வரும் போது 2/3 முறை குருவாயூர் தரிசனம் செய்திருக்கின்றேன்..

  நாராயண
  நாராயண..

  பதிலளிநீக்கு
 11. குருவாயூரப்பன் மூல விக்ரஹம் அளவில் சிறியதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டடிக்கும் குறைவான உயரம். ஆனால் வெவ்வேறு மாதிரியான அலங்காரங்கள், குறைந்தபட்சம் முகத்தை, சந்தனம் இட்டு திருக்கண்கள், வாய் போன்றவற்றை அலங்காரம் செய்வதால் தெளிவாகத் தெரியும்.

   நீக்கு
 12. முதலாவது பாடல் கேட்டிருக்கிறேன் பிடித்தபாடலும் கூட.

  இரண்டு ,மூன்று அருமையான பாடல்கள் இப்போதுதான் கேட்கிறேன். பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது மூன்றாவது பாடல்களை ரசித்ததற்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 13. இடம் எம் எஸ் விஸ்வநாதன் - இசை?

  இந்தப் பாடல் வரிகளைப் பார்த்ததுமே நினைவுக்கு வந்துவிட்டது. ஊர்க்கோயில் உபயத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்.விளையாடிக் கொண்டே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. இந்தப் படத்தில் மூன்று சிறுகதைகள் படமாக்கப்பட்டது.//

  அப்போவே இப்படி எடுத்திருக்காங்க பாருங்க.....இப்ப சமீபத்தில் மலையாள பட உலகில் மூன்று, நாலு கதைகள் அப்படினு சொல்லி பேசிக்கிட்டாங்களே...படம் பெயர் எல்லாம் மறந்துவிட்டது. பரிவை குமார் தளத்தில் வாசித்த நினைவு.

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கன்னடப் பாடல் - பிபி எஸ் ஹிந்திப் பாடல் போலவே இருக்கிறதே ஆனால் எனக்கு ஹிந்திப் பாடல் தெரியாது. நான் ட்யூன் வைத்துச் சொல்கிறேன். குறிப்பாகத் தொடக்கம்...

  நல்லாருக்கு பாட்டு. பிபி எஸ்ஸின் இளம் குரல்! இதில் கொஞ்சம் தொண்டையைத் திறந்து பாடுகிறாரோ!!!?

  கீதா

  பதிலளிநீக்கு
 16. பிபி எஸ்ஸின் குரலும் தனித்தன்மையானது!.

  தொடக்கம் கொஞ்சம் பஜன் போல இருக்கோ?

  கீதா

  பதிலளிநீக்கு
 17. இரண்டாவது பாடல் செம....

  //இரண்டு பாடல்களையும் கேட்பீர்களா, இல்லையா தெரியாது. //

  கேக்காம இருப்பனா?!!!! இசை, பாடல் னா உடனே கேட்டிருவேன் ஆனா சில நினைவில் வைத்திருப்பது கடினம் என்றாலும்... .

  //இந்தப் பாடல்களை ஏற்கெனவே கேட்டிருப்பவர்கள் இருக்கிறார்களா, தெரியாது. //

  நான் கேட்டதில்லை ஸ்ரீராம்...ஆனால் ரொம்பப் பிடித்திருந்தது.

  ரெண்டுமே கல்யாணி - ரெண்டாவது பாடல் கேட்கறப்ப - நம்ம தமிழ்ப்பாடல் காற்றில் வரும் கீதமே நினைவுக்கு வந்தது. அந்த ஸ்வரங்கள் அமைப்பு ராஜாவின் பாடலில் வருகின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா...   ராஜேஷ் ரோஷன் பாடல்கள் எப்போதுமே இனிமையானவை.

   நீக்கு
 18. அதிசயத்திலும் அதிசயமாய் எல்லாப் பாடல்களுமே பல முறை கேட்டிருக்கேன். அதிலும் முதல் பாடல்! சொல்ல்வே வேண்டாம். எல்லாமே பிடித்த பாடல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்மாவா சொல்றீங்க?  இரண்டாவது பாடலும், மூன்றாவது பாடலும் கூட முன்னரே நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

   நீக்கு
 19. குருவாயூருக்கு வாருங்கள் - கேட்காதார் யார்? இனிமையான பாடல்.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  இரண்டாவதாக பகிர்ந்த திரைப்பட பாடல் இரண்டும் கேட்டேன். நன்றாக இருந்தது. நீங்கள் சொல்லிய மாதிரி இரு பாடல்களும் ஒரே மாதிரி ராக அமைப்புடன் ஒத்துப் போகிறது. பாடல்களின் அர்த்தங்கள்தான் சற்று விளங்கவில்லை. இதே போல் தமிழ் பாடலும் உள்ளதோ ?. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!