ஞாயிறு, 4 ஜூன், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்:: அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை:: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 15

கடப்பா அருகிலுள்ள ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் உள்ள சிற்பங்களை நாம் பார்த்துக்கொண்டு வந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம்.

நான் கோவிலை மாத்திரம்தான் படம் பிடித்தேன். கோவிலுக்கு வெளியே 200 மீட்டர் தொலைவில் திருக்குளம் உள்ளது. அதற்குச் சிறிது தள்ளி Rest rooms. இடையில் உள்ள இடங்களெல்லாம் பூங்கா என்று மிக அழகாகத் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள் (இதெல்லாம் சமீப கால அமைப்பு). அந்த இடங்களை, கொஞ்சம் இருட்டில் நான் படம் எடுக்கவில்லை (Rest room இருக்கும் திசையைப் பார்த்து கேமராவைக் காட்டினால் அடிவாங்குவது யார்?)












(இதுபோன்று, பாரீஸ் லூவர் மியூசியத்தில், அழகான பஞ்சணையில் படுத்திருப்பவரை ஒரு புறத்திலிருந்து பார்த்தால் அழகிய ஆணாகவும், இன்னொரு புறத்திலிருந்து பார்த்தால் அழகிய பெண்ணாகவும் தெரியும். அந்தப் பஞ்சணை, நிஜமான மெத்தையா என்று தொட்டுப் பார்த்தேன்..அவ்வளவு அழகு. பளிங்கில் செய்தது. அதை எங்கள் பிளாக்கில் பகிரணும் என்று எனக்கு எண்ணம். அதுபோல, பலவிதமான சரித்திரச் சிற்பங்கள்/பளிங்குச் சிலைகள் அந்த மியூசியத்தில் உண்டு. ஏராளமான ஓவியங்கள். ஆனால் nudity என்பது இயல்பாக இருக்கிறது.  ‘கலைக்கண்பலருக்கு இல்லை, அதனால் கூடாது என்று கௌதமன் சார் சொல்லிவிட்டார். அதற்காக சில பாகங்களை blur பண்ணினால், மொத்த artன் அழகு குறைந்துவிடும். Artஐ ரசிப்பதற்குப் பதிலாக, blur செய்த இடத்தில் என்ன இருந்திருக்கும் என்பதில்தான் நம் கவனம் செல்லும். ஆமாம் கலைக்கண்எங்கு கிடைக்கும்?)











கோவிலை நன்றாகச் சுத்திப் பார்த்தேன். அதற்கு முன்பு கோதண்டராமர் சன்னிதியில் தரிசனம். 

ஒற்றைக்கல்லில் செய்த இராம சீதா லக்ஷ்மண விக்ரஹங்கள். மூலவர் சந்நிதி.

கோவிலில் சில பல இடங்களில் நான் நின்றுகொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள இடத்தில், இரவு உணவாக புளியோதரை, வடகம் மற்றும் தயிர்சாதம், எலுமிச்சை ஊறுகாய் கொடுத்தார்கள். எனக்கு புளியோதரை, பயணத்தின்போது ஒத்துக்கொள்ளாது என்பதால் தயிர்சாதம் மாத்திரம் சாப்பிட்டேன்.

பிறகு யாத்திரை நடத்தியவர், தன் குழுவினருக்கு அவர்களுக்கான ஊதியத்தையும், எல்லோர் முன்னிலையில் பாராட்டையும் வழங்கினார் (ஒவ்வொருவருக்குமான அன்பளிப்பை, யாத்திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர்களைக் கூப்பிட்டுக் கொடுக்கச் சொன்னார்).  பிறகு எந்த எந்த இடங்களையெல்லாம் தரிசித்தோம் என்று மீண்டும் நினைவுகூறும் விதமாக விளக்கமாகச் சொன்னார். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அங்கு வெளிச்சம் நன்றாக இருந்ததால், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இரவு 9 மணி வாக்கில் ஒண்டிமிட்டாவிலிருந்து சென்னையை நோக்கிக் கிளம்பினோம். அசதி, குளிர்சாதன வசதியுள்ள பேருந்துஓரளவு நன்றாகத் தூங்கினோம். அதிகாலை 3 மணிக்கு, அசோக் நகர் உதயம் தியேட்டர் பக்கம் நாங்கள் இறங்கிக்கொண்டோம். உறவினர் இடத்திற்கு ஆட்டோவில் சென்றோம். (ஆட்டோக்காரர்களின் அநியாயத்தை ஸ்ரீராம் ஏற்கனவே எழுதியிருக்கிறார். சென்னை ஆட்டோக்கொள்ளையர்கள்….sorry தட்டச்சுப் பிழை.. ஆட்டோக்காரர்கள் Ola, Uber etc system எல்லாவற்றையும் ஏய்த்து, வாடிக்கையாளர்களிடம் அடாவடி செய்து தொழில் பண்ணுபவர்கள் ஆயிற்றே). எனக்கு காலையில் 7:40க்கு பெங்களூருக்கு சதாப்தி இரயிலில் டிக்கெட். ஒரு மணி நேரம் தூங்கியபிறகு, வேறு வழியில்லாமல் எழுந்து, குளித்துத் தயாராகி, காலை 6 ½ மணிக்கு ஆட்டோவில் சென்டிரல் இரயில் நிலையத்துக்குப் போனேன். தமிழ்நாட்டு சாம்பார் மீதான காதலால், A2Bயில் இரண்டு சாதா தோசை சாப்பிட்டேன். மிகுந்த திருப்தியுடன், ஸ்டேஷனிலேயே இருக்கும் புடவைக் கடையில் (இது சில மாதங்களாக இருக்கிறது. 10க்குப் 10 அடிக்கும் குறைவான கடை. அழகிய புடவைகள், ரொம்ப அதிக விலையில்லை), மனைவிக்கு ஒரு புடவை வாங்கினேன். அதன் அருகில் மெட்ராஸ் காஃபி (?) கடையில் பன்/பட்டர்/ஜாம் ஒன்று 55 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். சுகமான இரயில் பிரயாணம். மெஜெஸ்டிக்கில் மதியம் 2 ½ மணிக்கு இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

அஹோபில யாத்திரை இவ்விதமாக மிகவும் நன்றாக அமைந்தது. கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள் ஞாயிறு பதிவுக்குப் பிறகு வேறு என்ன எழுதலாம் என்று யோசித்தேன். எழுத, பகிர்ந்துகொள்ள விஷயங்களோ இல்லை படங்களோ இல்லையா என்ன? என் நெடிய பயணத்தில் ஏகப்பட்ட விஷயங்களை, பயணங்களை, படங்களைப் பகிருமளவு நினைவுப் பெட்டகத்தில் மற்றும் ஹார்ட்டிஸ்கில் சேமித்து வைத்துள்ளேன். முதலில், தற்போது சென்றுவந்த அஹோபில யாத்திரையைப் பதிவாகப் பகிர்வோம் என்று தோன்றியது.

வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கும், பொறுமையாகப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கும் என் நன்றிகள். அஹோபில நரசிம்ஹர் நம் எல்லோரையும் காக்கட்டும். மீண்டும் வேறு ஒரு பதிவில்  சந்திப்போம்.

= = = = = = = = = = =


84 கருத்துகள்:

  1. நன்றாற்ற லுள்ளும்  தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை..

    வாழ்க குறள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவரின் குணநலன்களை அறிந்து ஒரு செயலைச் செய்யாவிட்டால், நல்லதே நாம் செய்தாலும் அதிலும் தவறு ஏற்பட்டுவிடும் (குற்றம் ஏற்பட்டுவிடும்). அண்ணன் தம்பிக்குள்ள சண்டை இருக்கும், தம்பி செய்த தவறுதான் அண்ணனுக்குத் தெரியும். இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று நன்மை செய்யப்புகுந்தாலும், அதனை விரும்பாத அண்ணனுக்கு நம் நல்ல செயல், கசப்பை ஏற்படுத்துவதைப் போல

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அழகான சிற்பங்கள்..

    ஆற அமர மீண்டும் பார்க்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. பயணங்கள் முடிவதில்லை..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடத்திற்கு மூன்று-நான்கு யாத்திரைகளாவது நான் போகணும் என்று நினைத்திருக்கிறேன். அதன்படியே இதுவரை நடந்துவருகிறது.

      நீக்கு
  5. தங்களால் நானும் நரசிம்ம தரிசனம் பெற்றேன்..

    நரசிம்மர் அருளால் எங்கும் நலம் விளைக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நன்றி. உங்களுக்கு சமீப காலங்களில் கிடைக்கும் இறை(வி) தரிசனங்கள் எங்களுக்கும் கிடைக்கிறது அல்லவா?

      நீக்கு
  6. அந்தக் காலத்திலும் மன்னர்கள் தொந்தி தொப்பையுடன்தான் இருந்திருப்பார்கள்.  இவ்வளவு வசதி, ராஜபோக வாழ்க்கையை வைத்துக்கொண்டு 'வாழ்ந்திரு'க்கிறார்கள்!  சிற்பங்களில் பார்த்துப் பார்த்து கண்காணித்து ஒல்லியாய், அளவாய், கட்டுமஸ்தான வடிக்கச் செய்திருப்பார்கள்!  இல்லா விட்டால் அது 'இப்படி இருந்திருக்கலாமில்ல' என்று சிற்பியின் ஏக்கமாகவும் இருந்திருக்கும்..  :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம், வரலாறு முக்கியம் அமைச்சரே எனும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது!!!

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம். நாம், பொதுவா, சில சமூகங்களில் உள்ள தொந்தி தொப்பை ஆட்களை வைத்து எடைபோடக்கூடாது. போரிடும் மன்னர்கள் தொந்தி இருந்தாலும் அவங்க போர்த் திறமையோ இல்லை வலிமையோ குறைவில்லாமல் இருக்கும்.

      திருமலை நாயக்க மன்னரை சரிந்த தொந்தியுடன் சிலையாகச் செய்திருக்கிறார்கள்.

      மன்னர், இளவரசர்களுக்கான தனிப்பட்ட உணவு, பலரின் கண்காணிப்பில் அளிக்கப்படும் (அதாவது அவர்களின் வலிமைக்கு ஏற்றவாறு). அவர்களுக்கு காலையில் போர்ப்பயிற்சி, மாலை குதிரையேற்றம் என்று கடுமையான பயிற்சிகள் இருக்கும். அதனால் எல்லா மன்னரும் தொந்தி தொப்பையுடன் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது.

      நீக்கு
  7. பயணத்தை வெற்றிகரமாக முடித்து வீடு சென்று விட்டீர்கள் வாழ்த்துகள்.

    படங்கள் வழக்கம் போல் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... மிக்க நன்றி. இதற்கப்புறம் நான் நான்கு யாத்திரைகள் சென்றுவிட்டேன்.

      நீக்கு
  8. /கலைக்கண்’ எங்கு கிடைக்கும்?// அந்தக் கண் தானே இத்தனை படங்களையும் பிடித்திருக்கிறது.

    ​நல்ல யாத்திரை, நல்ல விவரணம், நல்ல படங்கள். மொத்தத்தில் சிறப்பான பதிவுகள். ​மின் நிலா ஸ்பெஷல் எடிஷன் கொண்டு வரலாம். மற்றவர்களுக்கும் ஒரு சிறு உதவி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார். நன்றி.

      நான் சொன்னது, நான் எடுத்த சில பல படங்களை கலைக்கண்ணோடு வெளியிடுவாங்களா என்பது. அது நடக்காது என்று தெரிகிறது. ஹா ஹா ஹா.

      போப் பயாஸ் IX, (17ம் நூற்றாண்டு) வாடிகனில் இருந்த ரோமன் சிற்பங்களின் (நிர்வாண-சில பொது ஆண்டிற்கு முன் 5ம் நூற்றாண்டு), சில பகுதிகளை உடைத்தெறியச்சொன்னார். அதற்கு முன் அந்தப் பகுதிகளில் உலோக இலைகள் ஒட்டப்பட்டன. இந்த மாதிரி ஓவியங்களின் மறைக்கவேண்டிய பகுதிகளில் வர்ணம் பூசி மறைக்கும் வழக்கம் 15ம் நூற்றாண்டில் போப்பினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது (வாடிகனில்)

      நீக்கு
    2. இதற்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம். எல்லோருக்கும் கலைக்கண் இருக்காது, அந்தப் புனிதமான இடத்திற்கு அந்தச் சிற்பங்களின் நிலை சரியில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

      கோவில்களிலும் இத்தகைய சிற்பங்கள் இருக்கின்றன. பலரும் கண்டுகொள்ளாமல்தான் போய்வந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இதனை விளக்கி சில சிற்பங்களை வெளியிட்டால், கோவிலுக்குப் போய் அந்தச் சிற்பங்களின்மீதுதான் கண் போகுமே தவிர, கோவிலுக்குப் போன காரணம் நிறைவேறாது.

      நீக்கு
    3. நான் குறிப்பிட்ட கலைக்கண் காமிரா' கண்ணால் பார்க்க முடியாததையும் காமெரா பார்க்கும்

      நீக்கு
    4. //கண்ணால் பார்க்க முடியாததையும் காமெரா பார்க்கும்// அப்படி இல்லை. லேப்டாப்பில் படங்களை இன்னும் கூர்ந்து பார்க்கும்போது அப்போது காணாமல் விட்டது இப்போது தெரியும்

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பெரியவங்க சொன்னா அந்தப் பெருமாளே சொன்ன மாதிரி. இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்னு சொல்லிட்டீங்க. அப்படியே ஆகட்டும்.

      நீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அஹோபில நவ நரசிம்மர் கோவில் யாத்திரை பதிவு இதுவரையில் ஞாயிற்று கிழமையை துணையாக அழைத்துக் கொண்டு நல்லவிதமாக சென்றது.

    தங்களது யாத்திரை பதிவுகள் இதுவரை செல்லாத எங்களைப் போன்றோருக்கும், இனிச் செல்லப் போகும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது/ அமையும் என்பதில் ஐயமில்லை.

    கோதண்ட ராமரை தரிசனம் செய்து கொண்டேன். இன்றைய பகிர்வில் அத்தனை சிற்பங்களும் அழகாக இருந்தன. அந்த கால கோவில்களில் சிற்பிகளின் கைவண்ணத்தில் ஒவ்வொரு சிலைகள் சேர்ந்தாற் போன்ற வடிவ அமைப்புகளில் ஒவ்வொரு புராண கதைகள் இருக்கும். இங்கும் அனைத்தையும் ரசித்துப் பார்த்தேன். தங்கள் மூலம் நல்லபடியாக வீட்டிலிருந்தபடியே நரசிம்ஹர் கோவில் தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். பதிவுகள் மிகவும் மனத்திருப்தியை தந்தது.

    தாங்கள் கோவில் அமைப்புடன் படங்கள் பலவற்றையும் எடுத்து பதிவாக்கித் தந்து பகிர்ந்த தங்களின் உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் அக்கறையான ஒவ்வொரு பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இது 15 பகுதிகளாக வந்தது, 3 மாதங்களுக்கு மேல். வெளியிட்டவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்றி.

      கோவிலைப் பற்றி மாத்திரம் எழுதினால் அது ஞாயிறு படங்கள் பகுதிக்குச் சரியாக இருக்காது என்று எண்ணி, படங்களைத்தான் அதிகம் பகிர்ந்துகொண்டேனே தவிர கோவில் தல வரலாறு போன்றவற்றையல்ல.

      நிச்சயம் இந்தத் தொடர், அஹோபிலம் செல்பவர்களுக்கு பயனுள்ளதாகத்தான் இருக்கும். நன்றி

      நீக்கு
  11. இன்று பிரபந்தம் சேவிக்க ஒருவர் இல்லத்துக்குச் செல்லணும். 10,000 ஸ்டெப்ஸ் முடித்தாயிற்று. மாலையில் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  12. நெல்லை பட்ங்கள் ஹையோ நிஜமாவே வளைத்து வளைத்து...சரி ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு அப்புறமாக வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிஜமாவே வளைத்து வளைத்து// - இதுக்கே இப்படி என்றால், இன்னும் சில மாதங்களில் வரப்போகும் ஹொசஹொலாலு கோவிலின் சிற்பங்கள் 5-6 வாரங்களுக்கு வரும்போது, நீங்க என்ன சொல்லுவீங்களோ என்று கவலையாகத்தான் இருக்கிறது

      நீக்கு
  13. (Rest room இருக்கும் திசையைப் பார்த்து கேமராவைக் காட்டினால் அடிவாங்குவது யார்?)//

    ஹாஹாஹாஹா...புகைப்படம் எடுக்கறவங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கணுமாக்கும், நெல்லை!! பின்ன அப்படி எடுக்கறப்ப ஏதாவது நல்ல விஷயம் அல்லது, சில கொலைக் கதைகளில் வருமே துப்பு கிடைக்க கஷ்டப்பட்டு அலையறப்ப இப்படி ஏதாவது ஒரு க்ளூ கொடுக்குமே அது போல ஏதாவது சிக்குமாக்கும்!!! ஹையோ இப்ப நெல்லைகிட்டருந்து தப்பிச்சு ஓடணுமே....heel spur னால கணுக்கால் எலும்பு வேற துருத்திட்டு வேகமா ஓட முடியாதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க எழுதியிருக்கற கருத்தைப் படித்தபோது சமீபத்தில் நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது. எங்கள் வளாகத்திலிருந்து 1.2 கிமீ தொலைவில் இருக்கும் Voting Boothக்கு நான் நடந்துசென்றேன் (சமீப தேர்தல் அன்று). ஆனால் வளாகத்திலிருந்து ஆட்டோ facility arrange செய்திருந்தார்கள். நான் காலை 6:50க்கு செல்போனில் கூகுள் மேப்பைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். எனக்கு முன்னால் 3-4 பெண்கள் பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள் (எல்லாம் முதன் முறை வாக்காளர்களாக இருக்குமோ?). அப்போ ரோடின் ஓரத்திலிருந்த ஒருவன், என்னையும், செல்ஃபோனையும் அந்தப் பெண்களையும் பார்த்தான். அவனுக்கு நான் இந்தப் பெண்களைப் படமெடுக்கிறேன் என்ற சந்தேகம் வந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.

      நீக்கு
    2. //அவனுக்கு நான் இந்தப் பெண்களைப் படமெடுக்கிறேன் என்ற சந்தேகம் வந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது.//

      ஹா ஹா ஹா சூழ்நிலைக் கைதி என்பது இதுதானாக்கும்:)

      நீக்கு
  14. வரும் பக்தர்களை எல்லாம் வருக வருக என்று//

    எல்லாப் பக்கத்துலருந்தும் வருக வருகன்னு சொல்லி அடுத்தாப்ல சிங்க முகம் காட்டி......ஹாஹாஹாஹா அடுத்தாப்ல
    அப்படியே அந்த சிங்கத்துல ஏறி (கஷ்டங்களைச் சுமந்து!!!) உள்ளார வாங்க. வந்தீங்கனா இறைவன் எல்லாரையும் அரவணைத்து அருள் புரிவார்!!!

    அப்புறம் என்ன மகிழ்ச்சிதான்.. களியுங்கள்!! என்று சொல்வது போல் ஒரு கற்பனை! அடுத்தடுத்த படங்களைப் பார்த்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் நம் கற்பனையைத் தூண்டுபவை. நுழைவாயில்களில் இருந்த சிற்பங்கள் எல்லாமே ஏதோ காரணத்துக்காக அமைக்கப்பெற்றவை. நமக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் அளவு புராணக் கதைகள் தெரியவில்லை, சொல்லவும் ஆட்கள் இல்லை.

      நீக்கு
  15. என்னாது??!!! வயிறு ஒட்டி இஞ்சி இடுப்பழகி/ழகனாக இருந்தாங்க என்றா சொல்றீங்க??!!! இருக்காது...இதெல்லாம் சும்மா...கற்பனை வடிவங்கள். ஸ்ரீராம் கூடச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அங்கு நான் கொடுத்த கருத்துதான் எனக்கு நினைவுக்கு வருது. எல்லாரும் அப்படி இருந்திருக்க முடியாது நெல்லை...அப்படிப் பார்த்தா நாயக்கர்கள் சிலைகள் பெரும்பாலும் குண்டாகத்தான் வடிவமைத்திருப்பாங்க...கூடவே பல ஓவியங்களிலும் கூடக் குண்டாக வரைஞ்சிருப்பதைப் பார்க்கலாமே நெல்லை...

    கீதாஅ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலை என்று வரும்போது, சிற்ப சாஸ்திரப்படிதான் அமைப்பாங்க. அதனால் மன்னரை அவரது தேவியரை முழுமையாக அந்தச் சிலை காட்டுகிறது என்று சொல்லவே முடியாது.

      நமக்குமே ரஜினிகாந்த் இயல்பான மேக்கப் இல்லாமல் வரும் நிலை பிடிக்குமா இல்லை மேக்கப்புடன் டோப்பா போட்டுக்கொண்டு நாம் நினைக்கும், திரையில் பார்த்த வடிவத்துடன் வருவது பிடிக்குமா?

      நீக்கு
  16. பல சிற்பங்கள் சிதைந்து வருவதைக் காட்டுது இல்லையா?

    அத்தனையும் அழகு அழகு!! ஆமாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வினைச் சொல்லும் விதமாக இருக்கும். நமக்குக் கதை தெரிந்திருந்தால் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. சிதைந்தது இதற்கு முந்தைய காலகட்டத்தில் (படையெடுப்பு போன்றவையினால்). இப்போது அப்படி அல்ல. இருப்பினும், கிருஷ்ணாபுரத்தில் அர்ஜுனன் சிற்பத்தில், கையில் வில்லை வைத்திருப்பதுபோல சிற்பம். போக்கத்தவங்க, அந்த வில்லைத் தட்டிப் பார்த்து உடைத்துவிட்டார்கள். இப்போ எல்லாச் சிற்பங்களையும் கூண்டுக்குள்ள அடைச்சுட்டாங்க

      நீக்கு
  17. ‘கலைக்கண்’ பலருக்கு இல்லை, அதனால் கூடாது என்று கௌதமன் சார் சொல்லிவிட்டார். //

    ஏன்? ஏன் ? ஏன்? ....என்னவோ இணையத்தில் எதுவுமே இல்லாதது போல!!!!! ஓகே நம் தளத்தில் வேண்டாம் ஏன்றா ம்ம்ம்ம்ம்ம்ம்

    அப்படிப் பார்த்தா அதே கலைக்கண் இப்ப பகிர்ந்திருக்கும் சிற்பங்களுக்கும் பொருந்தும்தானே!!! அதுவும் பாருங்க ஒரு பெண் சிற்பம் அதில் இப்பல்லாம் படமோ அல்லது பெண் உருவமோ இப்படிக் காட்டி மார்பகங்களின் நடுவில் மட்டும் குறுக்கே ஒரு கோடு அல்லது துணி இருப்பது போன்று காட்டுவது போல அந்தச் சிற்பத்திலும் வடிவமைச்சிருக்காங்க...அப்படிச் செய்துவிட்டால் என்னவொ எல்லாத்தையும் மறைப்பது போல!!! எத்தனையோ சிற்பங்கள் கலவி கூட வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன நம்மூரில் அப்படி இருக்க அது பாரிஸ் சிற்பம் என்பதாலா? பாரிஸ் என்றாலே நியூட் என்றா? இங்குள்ளவை புனிதமான சிற்பங்கள் அவை புனிதமற்றவை என்றா? நம்மூர் சிற்பங்கள் தற்போதைய பெண்கள் கூட அப்படி உடை அணிந்து வராங்களே சினிமாவிலும் நேரிலும் கூட....

    //அதற்காக சில பாகங்களை blur பண்ணினால், மொத்த artன் அழகு குறைந்துவிடும். Artஐ ரசிப்பதற்குப் பதிலாக, blur செய்த இடத்தில் என்ன இருந்திருக்கும் என்பதில்தான் நம் கவனம் செல்லும். ஆமாம் ‘கலைக்கண்’ எங்கு கிடைக்கும்?)//

    ஹாஹாஹஹா உண்மை உண்மை நெல்லை...டிட்டோ செய்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்குள்ளவை புனிதமான சிற்பங்கள் அவை புனிதமற்றவை என்றா?// - கீதா ரங்கன்(க்கா) எனக்கும் இதுபற்றி நிறைய சிந்தனைகள் உண்டு. நம் கோவில்களிலும் நிறைய சிற்பங்கள் உண்டு (கோடு அல்லது துணி அபூர்வம் என்றே நினைக்கிறேன்). ஆனாலும் நம் கண் அவைகள் மீது இருக்காது. வந்தது இறைவனை தரிசிக்க..அதனால் பெரும்பாலும் மனம் வேறு எதிலும் செல்லாது.

      ஆனால் வெளிநாட்டுச் சிற்பங்களில் நாம் அந்த sanctityஐப் பார்ப்பதில்லை (அதுபற்றி நமக்குத் தெரியவும் தெரியாது). அதனால் நம் கண், பலவற்றை உற்று நோக்குகிறது.

      அதாவது, தாயின் உடைகள் எதுவும் கீழே கிடந்தாலும் நம் கண்ணை உறுத்தாது. ஆனால் சம்பந்தமில்லாத வேற்றுப் பெண்களின் உடைகள் நம் கண்ணை உறுத்தும் (பெரும்பாலானவர்களுக்கு). அந்த வித்தியாசம்தான் இது

      நீக்கு
  18. முகநூலிலேயே படித்தேன். கருத்திடவில்லை. இந்தக் கோயில் எல்லாம் நாங்க போகலை. சும்மாஅஹோபிலம் மட்டும் போயிட்டுத் திரும்பிட்டோம். சாப்பாடு பற்றியும் தங்குமிடங்கள் பற்றியும் நெல்லை சொல்வதைப் பார்த்தால் ஒருங்கிணைப்பாளர் நல்ல உழைப்பாளி எனத் தோன்றுகிறது. எல்லோரும் இப்படிப் பொறுமையாக அழைத்துச் செல்லுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நீங்க நிறைய கருத்துக்கள் எழுதும் அளவு உற்சாகமாக எப்போது இருக்க ஆரம்பிக்கிறீர்களோ, அதற்குப் பிறகுதான் திங்கக்கிழமை பதிவுக்கு பதிவு எழுதணும்னு நினைத்திருக்கிறேன்.

      யாத்திரை நடத்துபவர் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லுவார். பல சமயங்களில் நேரப்படி அந்த அந்த இடங்களிலிருந்து கிளம்பினால்தான் அடுத்த கோவிலில் தரிசனம் வாய்க்கும். அதற்காக நேரத்தை எல்லோரும் கடைபிடிக்கணும் என்பதில் குறியாக இருப்பார். அவர் யாத்திரையில் உணவுக்கு ஒரு குறையும் இல்லை (நமக்குத்தான் வெயிட் அதிகம் போட்டுவிடும்)

      நீக்கு
    2. நிறையக் கருத்துரைகள் எழுத உற்சாகம் குறையவில்லை. வேண்டாம்னு தான் எழுதுவதில்லை. நிறுத்திக்கிறேன். :(

      நீக்கு
  19. சிறப்பான தொடர். தொடர் முழுவதும் மின் நிலாவில் தனி pdf ஆக வெளியிடலாம். பயனுள்ளதாக இருக்கும்.

    படங்கள் அனைத்தும் சிறப்பு. சிற்பங்கள் அநைத்தும் ரசித்தேன். பயணங்கள் நல்லது. ஆகவே பயணங்களும் பதிவுகளும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நன்றி. இதை நான் எழுதியது, எனக்குமே (மற்றும் அஹோபில யாத்திரை செல்பவர்களுக்குமே) மிக உபயோகமாக இருக்கும்.

      நிறைய பயணங்கள் (நானும்.... ஹாஹாஹா) மேற்கொள்கிறேன். நீங்க திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து பஸ்களில் தனியாகப் பயணம் செய்து, நடந்து, கோவில்களுக்குச் செல்வது போல எனக்கும் போக ஆசை. அந்த மாதிரி தனியான பயணம் எனக்கு மிகவும் விருப்பம். பார்க்கலாம் அவையெல்லாம் நடக்கிறதா என்று.

      சமீபத்தைய ஆசை, chardham சார்தாம்-யமுனோத்ரி, கேதார்நாத் ... போன்றவை செல்லணும் என்று.

      நீக்கு
  20. முதலிரண்டு படங்களிலும் நீங்கள் படமெடுத்திருப்பதைப் பார்க்க, எவ்ளோ உயரத்தில் அச்சிலைகள் இருக்கின்றன என்பது புரியுது, அண்ணாந்து அண்ணாந்துதானே படமெடுத்திருக்கிறீங்கள்... தூண்களிலிருப்பவை எனத் தெரியுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நான் மண்டபத்தில் ஏறினால், அந்தச் சிற்பங்களைப் படமெடுக்க வசதியில்லை (அந்த கார்னருக்குப் போய் நின்று படமெடுக்க முடியாது)

      நீக்கு
  21. கப்ஸனில் எழுதியிருப்பதைப்போல[[ஆர் எழுதியது??? என ஓசிக்கிறேன்:)]] சுவரில் இருக்கும் சிலைகளுக்கெல்லாம் ஒவ்வொரு கதை இருக்கும், எனக்கு மீண்டும் மீண்டும் கஜூராவோதான் நினைவுக்கு வருது, அங்கும் கோபுரச் சுவர்களில் கதைகளாகத்தான் இருந்தது, சும்மா பார்த்தால் புரியாது, ஹைட் தான் லைட் அடிச்சு கதையை விளங்கப்படுத்தினார்... அதாவது இருவரும் இப்போ சண்டை போட்டுக் கொண்டு வேறு பக்கம் பார்க்கின்றனர், இப்போ தோழியிடம் கதை சொல்கிறா.. இப்படிப் பல கதைகள், கதை கேட்டுப் பார்க்கும்போது, ஆவல் இன்னும் அதிகமாகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு guide நமக்கு விளக்கும்போதுதான் பலவற்றை நாம் கவனித்துப் புரிந்துகொள்ள முடியும். நாம் பெரும்பாலும் guide வைத்துக்கொள்வதில்லை (எதற்கு வெட்டிச் செலவு என்று நினைத்துவிடுகிறோம்). ஆக்ராவில் அக்பர் கோட்டையைச் சுற்றிப் பார்க்கும்போது, சல்லிசா 150 ரூபாய்க்கு ஒரு guide என்னுடன் வந்து, அங்குள்ளவற்றை விளக்கினார். ரொம்பவே உபயோகமாக இருந்தது.

      நீக்கு
    2. ஓ நீங்கள் எப்போ போனீங்களோ தெரியவில்லை, எங்களுக்கு தாஜ்மஹாலும் சரி, கோட்டையும் சரி 1000 ரூபா இப்போ சுற்றிக்காட்ட, இப்போ எல்லாமே கூடித்தானே விட்டது.

      நீக்கு
    3. ஒரு ஹைட் பிடிப்பது நல்லதென்றே எங்களுக்குத் தோன்றுகிறது, அவர்கள் நமக்குத் தெரியாத நிறைய விசயங்கள் சொல்லித் தருகிறார்கள், நீங்கள் எப்போ போனீங்களோ தெரியாது, எங்களுக்கு, கோட்டைக்கும் சரி, தாஜ்மஹாலுக்கும் சரி 1000, 1000 எடுத்தார்கள்.. இப்போ எல்லாம் கூடி விட்டதுதானே..

      நீக்கு
  22. பரிஸ் -லூவ்ர் மிசூசியம், நானும் நிறையப் படங்கள் எடுத்தேன், ஆனா போட நேரமில்லாமலோ என்னமோ விட்டுவிட்டேன், உங்களிடம் இருந்தால் போடுங்கோ... பார்த்திடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போகூட உங்களுக்கு அந்தப் படங்களைப் போட நேரமில்லையா? சாம்பிளுக்கு சில படங்களைப் போட்டு பதிவு எழுதுங்க அதிரா.

      என்னிடம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதில் எவ்வளவு சென்சார் பண்ணணுமோ தெரியலை.

      நீக்கு
  23. இக்காலத்தில் கலைக்கண் என்பது யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் மட்டுமில்லை, நம்மைவிட மோசமாக, எங்கு போனாலும், இதை டுவிட்டரில், பேஸ் புக்கில், யூரியூப்பில்... போடுவோம் என நினைச்சுப் படமெடுப்பதே குறியாக எல்லோரும் இருக்கின்றனர், அப்போ கலைக்கண் எப்படிக் கிடைக்கும்..

    நெ தமிழன்கூட, அழகை ரசிப்பதை விட்டுப்போட்டு இதை புளொக்குக்கு அனுப்புவோமே எனும் நினைப்புடனேயே இருந்திருப்பார்:)).. இல்லை எனச் சத்தியம் பண்ணுவாருக்கும் பார்ப்போம்:)) இல்லை எனச் சொன்னால் நான் இப்பவே ஓடிப்போய் எங்கட நாணல் படுகை[நன்றி கீதா:)] குளத்தில குதிச்சிடுறேன்:)).. ஹா ஹா ஹா[இது குதிக்க முன் சிரிச்சிடுறேனே:), குதிச்ச பின்பு ஜிரிக்க முடியாதெல்லோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை அதிரா. எல்லாச் சிற்பங்களையும் நேரம் செலவழித்து அங்கேயே பார்த்து ரசித்து... இதற்கு நேரம் கிடைக்காது. அதனால் கிடைத்த நேரத்தில் நிறைய படங்களை எடுப்பேன். பிறகு லேப்டாப்பில் ஒவ்வொன்றாக ரசித்துப் பார்ப்பேன். அப்புறம் அந்த இடத்தில் நான் இருந்தேன் என்பதற்காக ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன்.

      நாணல் படுகைல, பறவைக் கூடுகள், குஞ்சுகள் இருக்கும் என்றெல்லாம் கீதா ரங்கன்(க்கா க்கா க்கா) எழுதியிருந்தாரே. நீங்க குதிச்சா என்னாகும்? பாவம்... அவைகள் பிழைத்துப்போகட்டுமே.

      நீக்கு
  24. 13ம் நூற்றாண்டுச் சிலைகளோ.. கஜூராவோ சிலைகளே 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொன்னார்கள் அப்போ இது அதைவிடப் பழமையாச்சே..

    ஓ ராமரைவிட, லக்ஸ்மனர் கொஞ்சம் பதிவு, அவரை விடச் சீதை இன்னும் கொஞ்சம் பதிவு... ஹா ஹா ஹா இதை வச்சுத்தான் அடையாளம் கண்டுபிடிச்சேனாக்கும்..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா. அப்படித்தான் இருக்கும். கணவனை விட மனைவி உயரம் குறைவு, பசங்க இன்னும் உயரம் குறைவு என்றுதான் சிலை வடிப்பாங்க.

      இதை எழுதும்போது, பெசண்ட் நகர் வீட்டில், மனைவியைப் பெண் பார்த்த மறுநாள் சாப்பிட்டோம் (அந்தக் கதைகள் பிறகு. அப்பாவும் வந்திருந்தார்). அது மனைவியின் உறவினர் வீடு. அவங்க வீட்டு மாடில, ஒரு couple. கணவன் மனைவியின் இடுப்பு உயரம்தான். (கொஞ்சம் exaggeration) இதுல லவ் மேரேஜாம். என்னடா இந்தக் காதல் படுத்தும் பாடு என்று தோன்றியது.

      நீக்கு
    2. காதலுக்குக் கண் இல்லைத்தானே:))... ஆனா எனக்கு என்னமோ இக்காலத்தையும் குடும்பப்பிரச்சனைகள் டிவோஸ் இவைகளைப் பார்க்கும்போது, மனப்பொருந்தம்தான் முக்கியம் என, இங்கு இப்போ பெற்றோர் எல்லாம், பிள்ளைகளின் விருப்பத்துக்கே விடுகின்றனர்...

      ஊரில படிக்கும் காலத்தில் அண்ணனின் நண்பர், ஒருவரை லவ் பண்ணினாராம், கேள் படிச்சுக் கொண்டிருந்தாவாம், இந்த நண்பர் கனடாவுக்கு வந்து கொஞ்ச வருடத்தால ஸ்பொன்சரில கேளைக் கூப்பிட்டாராம், கேள் எயார்போர்ட்டில வந்து இறங்கினாவாம் பார்த்தால், நண்பரை விட நன்கு உயரமாக வளர்ந்திட்டாவாம் ஹா ஹா ஹா...

      நீக்கு
  25. ///எனக்கு புளியோதரை, பயணத்தின்போது ஒத்துக்கொள்ளாது என்பதால் தயிர்சாதம் மாத்திரம் சாப்பிட்டேன்.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரெம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமாக்கும்:)) ஹா ஹா ஹா..

    ஓ நீங்கள் குழுவாகப் போனீங்களோ? அது கஸ்டமாக இருக்காதோ? எனக்கு எங்கென்றாலும் நம் குடும்பம் மட்டும் அல்லது நெருங்கிய நட்பு/உறவுகளோடு மட்டும்தான் போகப் பிடிக்குது.. இதுதான் என் பிரச்சனையே... குழுவாகச் சென்றால், அவர்களின் கொன்றோலுக்குள்ளேயே நிற்க வேண்டுமாமே, சுவிஜ் போடுவதுபோல, அந்தந்த நேரம் நித்திரை, எழும்புதல், சாப்பிடுதல் எனச் சொல்வார்களாம், நம் இஸ்டத்துக்கு ஒண்ணும் பண்ண முடியாதாம்..

    நான் காப்பு, சீப்புக் கடையைக் கண்டால் அங்கேயே நின்றிடுவேன், அப்போ குழுவில எப்பூடிப் போவதாம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... குழுவா யாத்திரை சென்றோம்னா, அதற்கேற்றபடி பலவிதங்களில் நாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். சரியான தூக்கம் இருக்காது. யாத்திரை நடத்துபவர் சொல்வதற்கு ஏற்றபடிதான் இருக்கணும். கடை கண்ணியில் நிற்பதை அவர் அனுமதிக்கவே மாட்டார். கோகுலம் சென்றால் அங்கு ஒரு கடையில், ரஃப்டி என்று சொல்லப்படும் இனிப்பு, விருந்தாவனத்தில் ஒரு கடையில் லஸ்ஸி... என்று அவரே ஒரு திட்டம் வைத்திருப்பார். அதன்படிதான் நாங்க நடந்துக்கணும். ஆனா பாருங்க..யாத்திரை போவதன் காரணம், தெய்வ தரிசனங்களுக்காகத்தான். அவை ஜாலி ட்ரிப் அல்ல. அதனால் என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிகிறது.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது சரிதான், ஆனா தெய்வ தரிசனம் எண்டாலும், அவர்கள் சொல்லும் நேரத்துக்குள் வணங்கிவிட்டு வானில் ஏறிட வேண்டுமெல்லோ, அதெனக்கு நினைக்கவே ரென்ஷனாக இருக்குதே:))..

      நீக்கு
    3. நான் செல்லும் யாத்திரைகளை நடத்துபவர், நாங்கள் நிம்மதியாக தரிசனம் செய்துமுடிக்கும் வரையில் காத்திருப்பார். எல்லோரும் திரும்ப வந்த பிறகும், யாரேனும், இன்னொரு தடவை போய் தரிசனம் செய்துவிட்டு வரவா? என்று கேட்டால், போய்விட்டு சட்னு வந்துவிடுங்கள் என்பார். ஆனால் பக்கத்துக் கடைல கொஞ்சம் வாங்கிக்கவா என்றால் கர்ர்ர்ர்ர்.

      சார்லஸ் அங்கிளைப் பார்க்க நிற்கும் வரிசையில் நீங்களும் நின்றால், உங்கள் முறை வரும்போது ஆழ்ந்து கவனித்து அவரைப் பார்த்து வணக்கம் தெரிவிப்பீர்கள், உங்கள் கவனம் அவரிடம் இருக்கும். அப்படி இல்லாமல், சார்லஸ் அங்கிள், பக்கிங்ஹாம் பேலஸ் வாசலில் ஹாயாக எப்போதும் உட்கார்ந்திருந்தால், நீங்க அந்தப் பக்கம் போனாலும் அவரைப் பார்க்க மாட்டீர்கள் இல்லையா?

      நீக்கு
  26. தமிழ்நாட்டு சாம்பார் மீதான காதல்!!! ஹாஹாஹா.....உண்மைதான் நெல்லை.
    எனக்கு இங்கு சாம்பார் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். அதை விட அதில் இனிப்புதான் இருப்பதால்...எனக்கு இனிப்பு கூடாதே!!!!!

    சாப்பாடில் எதுவும் பிடிக்கவில்லை என்று நான் சொல்வதில்லை. சாப்பாடு என்பதே இறைவனால் நமக்குக் கொடுக்க்ப்படுகிறது அதை உண்ணும் நிலையில் பாக்கெட், உடல்நிலை மற்றும் consciousness என்று பலதும் பெற்றிருக்கிறோம். நம் அருகிலேயே இவை எதுவும் இல்லாத மனிதர்களைக் காண நேரிடும் போது நமக்கு இது வரப்பிசாதம், we are blessed to get at least this என்று தோன்றும். எனவே இப்படியான ஒரு எண்ணம் சிறு வயதிலேயே வந்துவிட்டது...அதுவும் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்பட்ட காலமும் உண்டு.

    சாப்பிடும் முன் நாம் இறைவனுக்கு நன்றி சொல்லித்தானே தொடங்குகிறோம்???!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த ஊர் உணவு பிடிக்கவில்லை கீதா ரங்கன். என்னால் என் ரசனையை மாற்றிக்கொள்ள இயலவில்லை. ஆனால் இனிப்புகள் விதிவிலக்கு.

      அதற்காக எந்த உணவையும் குறைத்துச் சொல்லக்கூடாது. அதாவது உணவைப் பழிக்கக்கூடாது. 4வது மாடியில் இருந்துகொண்டு, நல்ல மழை, சிறு புயலுடன் கூடிய மழை, கொட்டும் மழை போன்றவற்றை நான் அனுபவிப்பேன். அப்போது எனக்குத் தோன்றும், இந்த மழை எத்தனை ஏழைகளுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ, விலங்குகளுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறதோ என்று. பலர் இருக்க ஒரு நல்ல கூரை இல்லாமல் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

      நானும் சிறுவயதில் கஷ்டப்பட்டிருக்கிறேன். (பெரியப்பா வீட்டில் இருந்தபோது). இதன் காரணம், பணமின்மை இல்லவே இல்லை. ஆனால் மிக மிக எளிமையாகத்தான் வாழ்க்கையைக் கொண்டுபோகணும் என்ற அவர்களின் principle. We are custodians of God given funds என்பது அவர்களின் சித்தாந்தம்.

      நீக்கு
  27. ///மிகுந்த திருப்தியுடன், ஸ்டேஷனிலேயே இருக்கும் புடவைக் கடையில் (இது சில மாதங்களாக இருக்கிறது. 10க்குப் 10 அடிக்கும் குறைவான கடை. அழகிய புடவைகள், ரொம்ப அதிக விலையில்லை), மனைவிக்கு ஒரு புடவை வாங்கினேன். //

    ஆஹா புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)) எல்லாமே புரிஞ்சுபோச்செனக்கு:)).. இதுதான் அல்வாக் கொடுத்துச் சமாளிப்பதென்பதோ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு bargain பண்ணினதும், விலையை கடைக்காரர் ஒப்புக்கொண்டுவிட்டால், திருப்தி வராது. அடடா இன்னும் கொஞ்சம் விலை குறைவாகக் கேட்டிருக்கணுமோ, தப்புப் பண்ணிவிட்டேனே என்று தோன்றும். உங்களுக்கு எப்படி?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா எங்களுக்கு பாகைன் பண்ணவே தெரியாது, அப்பாவோடு போனால், அவர் வாதாடுவார் எனக்கு கஸ்டமாக கூச்சமாக இருக்கும், எதுக்கு இப்படி விலை குறைச்சுக் கேட்கோணும் என, நான் எப்பவும் மனதில நினைப்பது, கடவுள் பார்த்துக் கொள்ளுவார் ஓவரா நம்மை ஏமாத்தினால் என... அப்படி இருந்தும், இது விலை குறைச்சுக் கேட்காமல் அப்படியே காசைத்தருகிறதே என சில கடைக்காரருக்கு மனட்சாட்சி குத்தும்போலும், அதனால அவர்களே குறைச்சும் தந்திருக்கினம், ஆனா இவை எல்லாம் ஊரில்தான், இங்கு அப்படி இல்லை ஸ்கொட்லாந்தில்.

      நீக்கு
    3. நான் எப்போதும் bargain பண்ணுவேன். This is to ensure that I am paying a reasonable price. சிங்கப்பூரில் மகளுக்கு ஒரு டிரெஸ்-National dress வாங்கும்போது இந்த bargain business பண்ணிப்பார்த்தேன். கடைக்காரி, sorry உனக்கு விற்கமாட்டேன் என்று சொல்லிட்டா. அப்புறம் அவள்ட explain பண்ணி அந்த டிரெஸ்ஸை வாங்கினேன்.

      Fixed Price கடைகள் எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
  28. //அஹோபில நரசிம்ஹர் நம் எல்லோரையும் காக்கட்டும். //

    இவர் ஆருடைய அவதாரம்???.. அறிஞ்சிருக்கிறேன் இப்போ மறந்திட்டேனே.... சரி சரி நாளியாச்சிடுத்தோன்னோ.. நான் ஓடிடுறேன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷ்ணு (நாராயணன்) வின் பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம் (உடனே தசாவதாரம், கமல் நடித்தது என்று எங்கோ போயிடாதீங்க)

      நீக்கு
    2. ஓ கிருஸ்ண அவதாரம் என மனதில் நினைப்பாக இருந்துது., நல்லவேளை தசாவதாரம் நான் இன்னும் பார்க்கவே இல்லை.

      நீக்கு
  29. ..எனக்கு இனிப்பு கூடாதே!!!!!//

    யாருக்குத்தான் கூடும் இந்த இனிப்பு! நான் மட்டும்தா தனி ஆளாக நிற்கிறேன் எனத் தோன்றுகிறது. ஒருவேளை கம்பவாரிசு அதிகமாக இனிப்பை உள்ளே தள்ளுபவரோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏ அண்ணன், எனக்கு இனிப்பு கூடும், பிரச்சனை இல்லை ஆனால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காதே.. உறைப்பு, புளிப்புத்தான் பிடிக்கும், அதனாலேயே எப்பவும் உறைப்பான பலகார வகைகளே அதிகம் செய்வேன்:)))

      நீக்கு
    2. //யாருக்குத்தான் கூடும் இந்த இனிப்பு!// இந்த வருடம் இன்னும் பரிசோதிக்கலை... ஆனால் எனக்கு இனிப்பு என்றால் மிக மிகப் பிடிக்கும். இப்போதெல்லாம் மதிய விருந்தில் (திருமணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்லும்போது) சாதம் போட்டுக்கொள்வதில்லை. காய், தயிர்வடை-இருந்தால், அப்புறம் இனிப்பு. என் பசங்க பக்கத்துல இருந்தால், சாப்பிடக்கூடாது, போதும் வேண்டாம் என்று பரிமாறுபவரிடம் சொல்லிவிடுவார்கள்.

      நீக்கு
    3. சாதம் போட்டுக்கொள்வதில்லை என்றால்.. ? மோருக்கு சாதம் போட்டுக்கொள்வதில்லையா, அல்லது சாப்பாட்டு இலையில் சாதமே போட்டுக்கொள்ளாமல், கறிகாய், தயிர்வடை, காரம், இனிப்புகள் மட்டும் என்று போடச்சொல்லி உள்ளே தள்வதா!

      ஆம்.. இந்த மாதிரி கல்யாணம்/கார்த்திகைகளில், ஸ்வீட் நாம் எக்ஸ்ட்ரா சாப்பிடுவதை, அல்லது கேட்பதை பிள்ளைகள் இப்போதெல்லாம் கூர்ந்து கவனிக்கிறார்கள், எச்சரிக்கிறார்கள். சாப்பாட்டுச் சவால்கள்..!

      நீக்கு
  30. சிற்பங்கள் அழகு என்று எழுதுவதற்குள், சிலவற்றை மெனக்கெட்டு உடைத்து சிதைத்துள்ள புண்ணியவான்களைப்பற்றியும் மனது நினைக்கிறது. நாம் அழிவதற்குமுன் எதையாவது அழித்துவிட்டு, சிதைத்துவிட்டுப் போவோம் என்கிற குறிக்கோளுடன் பிறந்தவர்கள் அந்தக்காலத்திலும்.

    இந்தக்காலத்தைப்பற்றி ஏதும் சொல்லாமல் விடுவதே ஞாயிறுக்கு நல்லது; மன ஆரோக்யத்திற்கும் உகந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதையாவது அழித்துவிட்டு, சிதைத்துவிட்டுப் போவோம் //

      இதைப்பற்றி நிறைய எழுதத் தோன்றுகிறது. சந்தர்ப்பம் வரும். எழுதுகிறேன்.

      நீக்கு
  31. ///ஸ்டேஷனிலேயே இருக்கும் புடவைக் கடையில் (இது சில மாதங்களாக இருக்கிறது. 10க்குப் 10 அடிக்கும் குறைவான கடை. அழகிய புடவைகள், ரொம்ப அதிக விலையில்லை), மனைவிக்கு ஒரு புடவை வாங்கினேன்.///

    இதுக்கும் ஒரு கொமெண்ட் போட்டேன் அதைக் காணவில்லை, ஒருவேளை அனுப்புப்படவில்லையோ என நினைச்சு திரும்பவும் போடுறேன் ஏனெனில், போடாமல் விடக்கூடாது இதுக்குப் பதில்:)))..

    சுத்துறதெல்லாம் நல்லாச் சுத்திப்போட்டு, மலிவு விலையில ஒரு புடவை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார் அண்ணியைப் பேய்க்காட்ட கர்ர்ர்ர்ர்ர்ர்:)), அப்போதான்.. அண்ணி சொல்லுவாவாம் " ஆஅ வந்திட்டீங்களோ, களைச்சிருப்பீங்களே, மோர் குடிக்கிறீங்களோ ரீ குடிக்கிறீங்களோ" எண்டெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இந்த அல்வா எல்லாம் அண்ணியிடம் பலிச்சிருக்காதே ஹா ஹா ஹா.. இக்காலத்துப் பெண்கள்[நாம்] , நீங்க என்னதான் உங்கட கிட்னியைக் கீழ பார்த்து மேல பார்த்து ஓசிச்சுப் பேய்க்காட்ட நினைச்சாலும் கண்டுபிடிச்சிடுவோம்ம்.. உந்தப் பாச்சா எல்லாம் பலிக்காதாக்கும் கர்ர்ர்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் கடைகளில் புடவையைப் பார்த்தால், மனைவிக்குச் சரியாக இருக்கும் என்று நினைத்தால் (அவளுக்கு எல்லா நிறமும் ரொம்ப நல்லா இருக்கும். என் பையனிடம் விளையாட்டாச் சொல்லுவேன், நான் காபிப்பொடி நிறம், அவள் பால் நிறம், அதான் நீ காபிக் கலர் என்பேன்) உடனே வாங்கிவிடுவேன். எனக்குத் தெரிந்து நான் வாங்கிய புடவையின் நிறத்தையோ டிசைனையோ அவள் குறை சொன்னதே கிடையாது (அவங்க வீட்டிலும் என் செலக்‌ஷன் ரொம்ப நல்லா இருக்கும் என்பார்கள்). எனக்கு மெரூன், ஆழ் பிங்க் நிறம் (ஆழ்ந்த ரோஸ்), சிவப்பில் மெரூனின் நிறம் கலந்தது ஆகியவை ரொம்பவே பிடிக்கும். அதனால் அவைகளை எப்போதும் வாங்கிவிடுவேன்.

      என் அனுபவத்தில் சொல்றேன். புடவை நகை போன்றவை அந்த நேரத்தில் சிறிது சந்தோஷத்தை உண்டாக்கலாமே தவிர, அவங்க சொல்றதை காதுகொடுத்துக் கேட்டு, ரொம்ப அனுசரனையா கேட்பதுதான் அவங்களுக்கு (பொதுவா பெண்களுக்கு) சந்தோஷம் தரும். ஆனா பாருங்க, எனக்கு பொறுமையே கிடையாது. யாரேனும் ஆரம்பித்த உடனேயே, இதைத்தான் சொல்ல வரியா என்று உடனே க்ளைமாக்ஸுக்குத் தாவிவிடுவேன். ஹா ஹா.

      நீக்கு
    2. உதெல்லாம் சரி:), அந்த ஆனைக்குப் பக்கத்தில நிற்பது நீங்கள்தானே... எஸ்கேப் ஆயிட விடமாட்டோம்ம் இண்டைக்கு:)

      நீக்கு
    3. இங்கு எங்கு யானைப் படம் உள்ளது? பழைய பதிவிலா? தேடிக்கொண்டே யானைகள் இருக்கும் பதிவுகளைப் பார்த்தால் ஒரு பதிவில், யானையின் மீது உட்கார்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. குருவாயூர் யானைத் தாவளத்திலும், யானையின் அருகில் நின்றுகொண்டிருக்கும் படம் உள்ளது. ஆனாலும் நான் கீதா ரங்கன்(க்கா) வின் தம்பியாக்கும். ஆக்கும்...ஆக்கும்

      நீக்கு
  32. நிறைய மறுமொழி காணாமல் போவதால், பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. அற்புதமான கலைப் படைப்புகள்.

    பதிலளிநீக்கு
  34. அஹோபில நரசிம்ஹர் பதிவு அனைத்தும் அருமை. நிறைவு பெற்று விட்டதே! என்று இருக்கிறது. நிறைவு பகுதியை தேடி படித்து விட்டேன். பகிர்வு படங்கள் எல்லாம் அருமை. சிற்பங்கள் சிதிலம் அடைந்து இருப்பது வருத்தம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!