புதன், 28 ஜூன், 2023

எங்கள் Blog பிறந்தநாள்!

 



ஜூன் 28, 2009ல் தொடங்கப்பட்ட எங்கள் Blog - இன்று பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 

* பதினான்கு வருடங்கள் தமிழ் Blog உலகில் நிலைத்து நின்று, கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளோம். இன்று 4686 ஆவது பதிவு வெளியாகிறது. தமிழ் Blog உலகில் இது ஒரு அரிய சாதனை. 

* 576 followers 

* 28,40,000 + பக்கப் பார்வைகள்! (Page views!) 

* 2,02,500+ கருத்துரைகள் 

* அதிக அளவில் வாசகர் பங்கேற்பு. ( சிறுகதைகள், சமையல் குறிப்புகள், கேள்விகள், நியூஸ் ரூம், நான் படிச்ச கதை / புத்தகம், ஞாயிறு உலா என்று எல்லா பகுதிகளிலும் வாசகர்கள் & சக பதிவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் படைப்புகளை, அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் )

* எங்கள் வெற்றிக்கு முழு முதல் காரணம் : இதைப் படிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும்தான்! 

தொடர்ந்த ஆதர்வுக்கும் அன்புக்கும் எங்கள் நன்றி, நன்றி, நன்றி. 

"எ பி ஆசிரியர்கள் குழு" 

= = = = = = = =

சென்ற வாரம் எங்களிடம் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. 

நாங்க கேட்கும் கேள்விகள் இங்கே :

1) உங்களுக்கு அடிக்கடி வரும் உடல் பாதிப்பு எது? 

( எனக்கு முன்பு ஜலதோஷம் அடிக்கடி வரும். சில அலர்ஜி சமாச்சாரங்களை விலக்கி வைத்த பின் இப்போ அடிக்கடி வருவதில்லை. ஜலதோஷ அறிகுறி வந்ததுமே நாடி சுத்தி பிராணாயாமம் செய்து ஜலதோஷத்தை விரட்டி விடுவேன்)

2) உங்கள் வீட்டிற்கு இன்று, இப்போது யார் வந்தால் மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைவீர்கள்? 

3) தமிழ்நாட்டில் இப்போது இருக்கின்ற VIP களில் யாரை சந்தித்து பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? + அவரிடம் என்ன கேள்விகள் கேட்பீர்கள்? 

= = = = = = =

KGG பக்கம் :

கோவிந்துவின் முழங்கைக்கு அருகே நான் நகத்தால் கீறிய கீறல் இருந்தது. அவன் என்னிடம் " இது என்னுடைய பாட்டியின் கண்ணில் பட்டுவிட்டால், அவர்கள் உடனே பள்ளிக்கூடத்திற்கு வந்து, உன்னை பிடித்து அடித்து விடுவார்கள். என் மீது எங்க பாட்டிக்கு அவ்வளவு பிரியம்" என்றான். 

ஒரு கொடுமைக்கார பாட்டி என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பது போல ஒரு காட்சி என் கண் முன்னே சினிமா போல தோன்றியது. 

என்னை  கிலி, பயம், திகைப்பூண்டு etc etc எல்லாம் ஒருங்கே  பிடித்துக்கொண்டன.  

" டேய் கோவிந்து, இந்தக் காயத்தை உன் பாட்டியிடம் காட்டிவிடாதே. " 

" சரி. அதே போல நீயும் என் பெயரை அட்டையில் எழுதி உன் அப்பாவிடம் கொடுத்துவிடாதே. " 

இப்படி இருவருக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. 

கொஞ்ச நேரம் கழித்து அவன் சொன்னான் "இந்தக் காயத்தை நானாக பாட்டியிடம் காட்டமாட்டேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் எனக்கு என்னுடைய பாட்டி எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். அப்போ இந்தக் காயத்தைப் பார்த்து, 'இது என்னடா? ' என்று கேட்பார்கள். " 

ஆ! மீண்டும் சோதனையான கட்டம் ! 

" அப்படிக் கேட்டால், விளையாட்டு பீரியடில் கீழே விழுந்ததில் கல் கீறிடிச்சு என்று சொல்லுடா " 

" நான் பொய் சொல்லமாட்டேன் - எனக்கு பொய் சொல்வது பிடிக்காது " என்றான். 

ஆகா - அப்படியே மகாத்மா காந்தியின் பேரன் போல சத்யசந்தனாக, அரிச்சந்திரனாக  என்ன நடிப்பு நடிக்கிறான்! 

இப்போ என்ன செய்வது? 

பிறகு அவன் சொன்னான், " எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது எப்போதும் ஞாயிற்றுக் கிழமையில்தான். அதற்கு இன்னும் நான்கு  தினங்கள் இருக்கு. " 

அப்பாடி. நிம்மதி. அதற்குள் நகக் கீறல் ஆறி மறைந்துவிடும். 

" எதற்கும் நாளைக்கு நீ வரும்போது எனக்கு ஏதாவது கொண்டுவந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நான் வீட்டில் இந்தக் காயத்தை யாரிடமும் காட்டாமல் இருப்பேன். " என்றான். 

அவனுடைய காயம் இரண்டு மூன்று நாட்களில் சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மனதிற்குள் 'முருகா, முருகா ' என்று ஜபம் செய்துகொண்டிருந்ததோடு சேர்த்து - அடுத்து வந்த மூன்று நாட்களுக்கு கோவிந்து மனம் குளிர ஒவ்வொரு நாளைக்கும் - புழுக்கைப் பென்சில், ரப்பர், கலர் குச்சி துண்டு, காய்ந்த உப்பு நாரத்தங்காய் என்று சில விஷயங்களை கொடுத்து சரிக்கட்டினேன். 

நல்ல வேளையாக நகக் கீறல் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பு மறைந்து என்னைக் காப்பாற்றியது! 

= = = == = = 

அப்பாதுரை பக்கம் : 

களைகண்

சென்னைக்கான ஏர்பிரான்ஸ் 108 விமானத்தைப் பிடிக்க சார்ல்ஸ் டிகல் நிலைய வராந்தாக்களில் அவசரமாக ஓடினேன்.  எதையும் கவனிக்காமல் தேராக அசைந்து கொண்டிருந்த ஒரு காவியுடை ஆசாமியை இடித்து மன்னிப்பு கேட்டேன். தொடர்ந்தேன். பயணவாயில் ஜி44 வந்ததும் கவனித்தால் சென்னை விமானம் தாமதமாம். யாரைத் திட்டலாம் என்று நினைக்கும் பொழுது காவி ஆசாமி எனக்குப் பின்னே வரிசையில் சற்று தள்ளி நிற்பதைப் பார்த்தேன். அதற்குள் இங்கே எப்படி வந்தான் இந்த பிஜேபி ஆசாமி என்று தோன்றியது. சட்டென்று இன்னொன்றும் தோன்றியது. அட, இவனை எனக்குத் தெரியும். கீழ்த்தெரு பாலு?

சந்தேகத்துடன் விசாரிக்க நெருங்கியதும் காவி ஆசாமி, 

"எப்படி இருக்கே? துரைதானே? வாழ்க்கைல அன்னிக்கு போலவே இன்னிக்கும் விட்டதைப் பிடிக்கும் அவசரமாவே இருக்கே. விடு. விட்டொழி" என்றான். 

"டேய் பாலு.. என்ன அவதாரம்டா இது?!" வியந்தேன்.

"இப்ப என் அவதாரம் பேரு சுவாமி சத்யநாராயண். ஹரே க்ருஷ்ணால பத்து வருஷமா இருக்கேன். க்ருஷ்ணா கான்ஷியஸ்னெஸ் ஆதரவுல யூரோப் முழுதும் கண்ணன் உணர்வூட்டும் பிரசங்கங்கள் செய்துட்டு திருவான்மியூர் திரும்பிட்டிருக்கேன்"

நம்பவே முடியவில்லை. பாலுவா!

காரைக்கால் நாட்களில் கீழ்த்தெரு பாலு பழக்கம்.  நிர்மலாராணி பள்ளியில் எனக்கு இரண்டு வகுப்புகள் மூத்தவன். பின்னாளில் கிண்டி கல்லூரியிலும் பழக்கம்.  எனக்கு ஒரு வருடம் சீனியர். (இடையில் எனக்குக் கிடைத்த டபுள் ப்ரமோசன் பத்தி இப்ப வேணாம்). 

பாலுவைவிட பாலுவின் தாத்தா எனக்கு அதிகப் பழக்கம். தமிழ் என்னிடம் வரக்  காரணமான சிலரில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் பாலுவின் தாத்தா. 1960களில் காரைக்காலில் வசித்தோருக்கு 'தரங்கம்பாடித்தெரு திருக்குறள் பள்ளி' நன்றாகத் தெரிந்திருக்கும்.  மாலை வேளையில் அவர் வீட்டுத் திண்ணையில் சிறுவர் முதியவர் என்று பலருக்குத் திருக்குறள் பாடம் எடுப்பார். தினம் இரண்டு குறட்பாக்கள். இடையே சூடான பசும்பால். பற்று விடற்கு பற்றற்றான் பற்றினை பற்று என்று அவர் சொல்லிக் கொடுத்த நேர்த்தியும் அழகும் தமிழ் உணர்வும் பசும்பால் சுவையும் மறக்கவே இல்லை. 

என் வயதில் மலர் தீபா ப்ரின்ஸி என்று பெண்களே இருந்ததால், பாலு குருமூர்த்தி அப்துல்காதர் மூவரும் என்னைவிட மூத்தவர்கள் எனினும் நான் அவர்கள் குழுவில்தான் பழகினேன். ஏற்றுக்கொண்டார்கள். மூவரும் எனக்குக் கற்றுக் கொடுத்தவை நிறைய. குருமூர்த்தி எனக்கு அந்த வயதிலேயே திருடக் கற்றுத்தந்தான். வடு இன்னும் வலிக்கிறது. அப்துல்காதர் எனக்கு  சுபஹ் அசர் இரண்டு வேளை தொழுகை முறையுடன் உளு சொல்லிக் கொடுத்ததை அவனுடய வாப்பா பொருட்படுத்தவில்லை. மாமிசம் சாப்பிடக் கற்றதும் அப்துல் வீட்டில்தான். விவரம் தெரிந்து என் பாட்டி எட்டு வயசாகியும் பிள்ளைக்குப் பூணூல் போடவில்லை என்று புலம்பத் தொடங்கியதும் பத்து வயதில் அப்பாவின் வருஷாப்திகத்துக்காக முதல் முறையாகப் பூணுல் போட நேர்ந்ததும் வெவ்வேறு சுவாரசியங்கள். பாலு எனக்குக் கற்றுத் தந்தது கல்லூரியில். நீ படிக்கிற பையன், இந்தியாவில் இருந்தால் உருப்பட முடியாது அமெரிக்கா போய் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி காசில்லாத எனக்கு நாலைந்து அமெரிக்கக் கல்லூரிகளில் டாலரில் விண்ணப்பப் பணத்துக்கான காசோலை கொடுத்து உதவினான். பதிலுக்கு நான் பத்து பேருக்கு உதவ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். தாத்தா திருக்குறள் சொல்லிக் கொடுத்தால் பேரன் திருவருள் சொல்லிக் கொடுத்தான்.

பாலு அமெரிக்காவில் நெடுநாள் தங்கவில்லை. அந்தக் காலத்து சன் மைக்ரோவில் பெரிய எஞ்சினியராக இருந்தவன் க்ளின்டன் பதவிக்கு வந்ததும் இந்திய சன் மைக்ரோ தலைவராக தாய்நாடு திரும்பினான். எனக்கும் குடும்பம் வேலை உயர்வு பணத்துரத்தல் என்று பலவகை மும்முரம். பாலுவை மறந்தேன்.

இப்போ என்னடாவென்றால் சுவாமி சத்ய நாராயணாகி விட்டான். "என்ன பாலு" என்றவன் உடனே தயங்கி "பாலுனு கூப்டலாமா?" என்றேன். புன்முறுவலாகச் சிரித்தான்.  "உன் சீட் நம்பர் என்ன?" என்றான்.  

பாலு உயர்வகுப்பில் நிச்சயம் பயணம் செய்யமாட்டான் என்று நினைத்து "4A" என்றேன். "கம்பெனி விசயமா பயணம் செய்யறதால அவங்க செலவுல பிஸினெஸ் க்ளாஸ்" என்றேன் தயங்கி.

உடனே பாலு புன்னகை மாறாமல்  "6B" என்றான். "கண்ணன் விசயமா பயணம் செய்யறதால அவன் செலவுல பிஸினெஸ் க்ளாஸ்".

தேவையில்லாத குற்றவுணர்வுடன் நெளிந்த என்னை அசாதாரணமாக அமைதிப்படுத்தி "சீட் மாத்திட்டு உம்பக்கததுல வரவா?" என்றான்.  

பத்து மணி நேரப் பயணத்தில் இருவருமே அதிகம் சாப்பிடவில்லை. காய்ந்த திராட்சை முந்திரி பாதாம் அவல்பொறி என்று கலவையாகச் சுருக்குப் பையில் வைத்திருந்தான். சாதா தண்ணீர். இதான் அவ்வப்போது கொஞ்சம் சாப்பிட்டான். நான் விமானப் பயணத்தில் சாப்பிடுவது என்பதும் அபூர்வம். அவ்வப்போது ஆரஞ்சு ஜூஸ்.  இவ்வளவுதான்.

சிகாகோவிலிருந்து பாரிஸ் பயணத்தில் தனிமையில் ஆஸ்டரிக்ஸ் படங்கள் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் பார்த்தேன்.  பாரிசிலிருந்து சென்னை பயணத்தில் பாலுவுடன்  ஆன்மிக சமாசாரம் தொடர்ந்து ஒன்பது நேரம் பேசினேன்.  ஆக, இந்த முறை சென்னைப் பயணத்தில் உடலும் மனமும் கணமும் உறங்கவில்லை.

(அடுத்த வாரம் முடிக்கிறேன்)


116 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இருக்கட்டும். ஆளைக் காணவில்லையே

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      நலமா? உடல், மன வேதனைகளில் எதுவுமே பிடிக்காமல் போன தருணங்களில் அகப்பட்டு கொண்டு இரண்டொரு நாள் காணாமல் போய் விட்டேன். அதுதான் என் வழக்கப்படி இன்று வருகை தந்து விட்டேனே..!! அதற்காக இறைவனுக்கும், அன்புடன் விசாரித்த தங்களுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. என்ன மனவேதனை? சீக்கிரம் அது ஆறட்டும்.

      நீக்கு
    4. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
      தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும் .

      நீக்கு
    5. இந்தக் குறளுக்கு, இறைவனிடம் சென்று சேர்ந்தாலொழிய, இவ் உலகினில் வாழ்பவர்களுக்கு மனக்கவலை இல்லாமல் இருக்காது என்று பொருள் கொள்ளலாமா?

      நீக்கு
    6. தவறு. இறைவனின் பாத "கமல"ங்களை "ஹரி" ஓம் என்று சொல்லி நெஞ்சில் நிறுத்தி வணங்கினால், மனக்கவலைகள் சூரியனைக் கண்ட பனி போல் மறைந்துவிடும்.

      நீக்கு
    7. இப்பிறவியில் இறைவனிடமே சென்று சேர்வோம் என்பது எந்த வகையில் சாத்தியம்.. அதுதான் புனரபி ஜனனமாயிற்றே..! "பிறவிப் பெருங்கடல் நீந்துவர். நீந்தார்....." அத்தனை பிறவிகள்தோறும் ஒரு கணக்கு உள்ளதே..! அந்த கணக்கின் முடிவு எப்பிறப்பிலோ..! விடாத வினை தொடதபடிக்கு இறைவனை வேண்டிக் கொண்டு காத்திருப்பதுதான் இப்பிறப்பில் சாத்தியம்.
      நன்றி.

      நீக்கு
    8. உண்மை... இறைவனின் பாத"கமல"ங்களும், "ஹரியும் ஹரனுமாகிய" நாமங்களும் இப்போதைய வாழ்வில் ஒன்றென கலந்து விட்டன. ஆனால், சூரியனுக்கும், பனிக்கும் ஏதோ பகை போலும்.... :)

      நீக்கு
  2. எங்கள் பிளாக் இன்னும் பல வருடங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்று பிறந்த நாள் காணும் எ.பிக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இன்னமும் நிறைய வருடங்கள் தன் பொலிவு குன்றாமல், வெற்றிநடை போட்டு எங்கள் பிளாக் சிறந்து விளங்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். 🙏. நன்றி.

    இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எ. பியின் அன்பு வாசகர்களாகிய எங்கள் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தந்து கௌரவபடுத்தும் எ. பி ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நாடுகிறோம்.

      நீக்கு
    2. எங்கள் வெற்றி, உங்கள் வெற்றி.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ​பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
    நாம் பிள்ளைகள் போலே
    தொல்லைகள் எல்லாம்
    மறந்த நாள்.....

    வாழ்க வளர்க.

    கேள்விகள் ஏன் கேட்கப்படவில்லை என்பதும் ஒரு கேள்வி தானே. சற்றே சிந்திப்பீர்.

    அப்பாதுரை சார் அவசரமாக எழுதி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

    KGG சாரின் பள்ளித் தோழன் கோவிந்து தற்போது எங்கே என்னவாக இருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி JKC ஸார்...    அந்த பழைய பின்னூட்டத்தை இன்னுமா அழிக்காமல் காபி வைத்திருக்கிறீர்கள்?!

      நீக்கு
    2. // KGG சாரின் பள்ளித் தோழன் கோவிந்து தற்போது எங்கே என்னவாக இருக்கிறார்?// யாருக்குத் தெரியும்! மூன்றாம் வகுப்புக்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை!

      நீக்கு
  6. பதினான்கு வருடங்களாக பல்வேறு இனிய தொகுப்புக்களுடன் வலைத்தள உலகில் சாதனை செய்து வரும் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்!! பதினைந்தாவது வருட பிறப்பிற்கு மனங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. எங்கள் பிளாக்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    மேலும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. அடிக்கடி உடல் பாதிப்பு - அடிக்கடி என்பது சரியா புரியலை. 3-6 மாதத்தில் அலர்ஜி வரும். வட இந்திய சைட்டிஷ் மசாலா அல்லது கெட்டுப்போன உணவினால் வரும் . Stopped NI side dish. Three hours தாண்டிய உணவு முடிந்த வரை சாப்பிடுவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதனால் அலர்ஜி வருகிறது என்று தெரிந்துவிட்டால் போதும். அலர்ஜி சமாச்சாரத்தை விலக்கி வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

      நீக்கு
  9. காக்க காக்க
    கனகவேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  10. எங்கள் ப்ளாக் இனிதே தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. வலைத்தள உலகில் சாதனை !..
    எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவினர்க்கு பாராட்டுகள்.. பதினைந்தாவது வருடத்திற்கு மனங்கனிந்த அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. கோயிந்துவின் அமர்க்களம் பள்ளி நாட்களை நினைவு படுத்துகின்றது..

    ஆகா..

    பதிலளிநீக்கு
  13. அப்பாதுரை ஐயா அவர்களது பக்கம் மறுபக்கம் என்று மயக்குகின்றது..

    சுவாமி சத்ய நாராயணன் தருகின்ற விளக்கம் என்னவென்று பார்க்கலாம்!..

    பதிலளிநீக்கு
  14. 15 ஆண்டுகள். பெரும் சாதனை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாகிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என்றென்றும் இப்படியே எழுத்துப் பயணம் தொடரவும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. 2) உங்கள் வீட்டிற்கு இன்று, இப்போது யார் வந்தால் மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைவீர்கள்? //

    எங்கண்ணன் நெல்லைதான்!!!! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கண்ணன் நெல்லைதான்!!!! // நீங்கள் அவரை அண்ணன் எங்கிறீர்கள்,அவர் உங்களை அக்கா என்கிறார், அண்ணனா? அக்காவா? எது சரி?

      நீக்கு
    2. ஆ! பானுக்கா சத்தம் போட்டுச் சொல்லாதீங்க...அது பரம ரகசியம்!!!!!!!!

      நெல்லை வரவே மாட்டார். அப்படியெ வந்தாலும் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட வேண்டும் என்றால் அவர் உள்ளே நுழைந்து பேசிவிட்டு சாப்பிட உட்காரும் போது தட்டு போடும் போதுதான் அடுப்பிலிருந்து எல்லாம் இறங்க வேண்டும்!!!!

      ஒரு வேளை செய்து வைத்திருந்த ஸ்வீட் கூட 3 மணி நேரம் ஆகியிருந்தால் சாப்பிட மாட்டார்!!!!

      அப்புறம் எங்க வருவார்ன்றீங்க...அதான் அவரை இழுத்திருக்கிறேன். அவர் பிஸி

      கீதா

      நீக்கு
    3. புதன் கேள்வி: உங்களைக் கூப்பிட்டு வீட்டுக்கு நீங்க வந்தா, வெளில காபி பால் போன்றவை சாப்பிடறதில்லைம்பீங்க. சரி குளிர்பானம் ஏதாவது வேணுமான்னு கேட்டால் அதெல்லாம் உடம்புக்கு ஒத்துக்காதும்பீங். சரி. சாப்பாடோ இல்லை டிபனோ சாப்பிடுங்க என்றால், வர்றதுக்கு முன்னாலதான் சாப்பிட்டுட்டேன், வயிற்றில் கொஞ்சம்கூட இடமில்லைம்பீங்க. வர்றவங்களுக்கு ஸ்வீட்டாவது பண்ணி, இங்க சாப்பிடாட்டியும் வீட்டுக்காவது கொண்டுபோகச் சொல்லலாம்னா, நமக்கு மாதிரி அவங்களுக்கு டயபடீஸ் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன்,ஆனா கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லறவங்க, நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறாங்க?

      நீக்கு
    4. இவ்லாம் பெரிய கேள்வியா! பதில் சொல்ல முயற்சி செய்கிறோம்!!

      நீக்கு
  17. "இந்தக் காயத்தை நானாக பாட்டியிடம் காட்டமாட்டேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் எனக்கு என்னுடைய பாட்டி எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். அப்போ இந்தக் காயத்தைப் பார்த்து, 'இது என்னடா? ' என்று கேட்பார்கள். "//

    "சரி, நானும் உன் பெயர் எழுதிய அந்த அட்டையை நானாகக் காட்ட மாட்டேன். அப்பாவின் மேசை மீது வைத்துவிடுவேன். அப்பா ஏதேச்சையாகப் பார்த்துவிடலாம்"

    இப்படிச் சொல்லத் தெரியாத கௌ அண்ணா !!!! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது இது எனக்குத் தோன்றவில்லை பாருங்கள்!

      நீக்கு
  18. " நான் பொய் சொல்லமாட்டேன் - எனக்கு பொய் சொல்வது பிடிக்காது " என்றான். //

    "நானும் பொய் சொல்லமாட்டேன். சத்யமேவ ஜயதேன்னு எங்க பாட்டி சொல்லிக் கொடுத்திருக்காங்க"

    இப்படியும் சொல்லிருக்கணும் கௌ அண்ணா!!!

    கோவிந்துக்கு இப்பூடிப் பயப்படுவாங்களோ!!! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. " எதற்கும் நாளைக்கு நீ வரும்போது எனக்கு ஏதாவது கொண்டுவந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நான் வீட்டில் இந்தக் காயத்தை யாரிடமும் காட்டாமல் இருப்பேன். " //

    நீயும் நாளைக்கு எனக்கு ஏதாவதுகொண்டு வந்து கொடுக்க வேண்டும். அப்பதான் நான் இந்த அட்டையை அப்பாவிடம் காட்ட மாட்டேன். Tit for tat!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. எங்கள் வலைப்பூவிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. 2) எங்கள்'ஸ் அனைவரும் வர வேண்டும்...

    முக்கிய குறிப்பு: குற்றாலம் சுற்றுலா உண்டு...!

    பதிலளிநீக்கு
  22. அப்பாதுரை ஜியின் அனுபவம் சுவாரசியம். பாலு என்ன பேசியிருப்பார்னு யோசனை..

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எங்கள் பிளாக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிக்க சந்தோஷம் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. எங்கள் ப்ளாகிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 15 வயது .. யௌவனம்! என்றும் இதே மாறா இளமையோடு இருக்க வாழ்த்துகிறேன். அது சரி எ.பி. யுவனா? யுவதியா?

    பதிலளிநீக்கு
  25. எ.பி. சார்பில் கீதா ரங்கன் சாக்லேட் கேக் செய்து, அதை கட் பண்ணி புகைப்படம் போடுவார் என்று எதிர் பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  26. எங்கள் ப்ளாகிற்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்/பாராட்டுகள். அனைவரின் தொடர்ந்த ஆதரவினால் எங்கள் ப்ளாக் தொய்வில்லாமல் தினம் ஒரு பதிவுடன் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இப்படியே இதே மாதிரிப் பராமரித்து வரவும்.

    பதிலளிநீக்கு
  27. எனக்கு அடிக்கடி வரும் உடம்பு எனில் கால் வலிதான். சின்ன வயசில் இருந்தே இரு கால்களிலும் முழங்கால் வீங்கிக் கொண்டு நடக்க முடியாமல் கஷ்டப்படுவேன். அப்போல்லாம் இத்தியால் க்ளிசரின் என்னும் ஒரு திரவ மருந்து (கறுப்பாகத் தார் போல் இருக்கும்) அதைத் தான் தடவி விடுவாங்க. பின்னாட்களில் கொஞ்சம் சரியானாலும் 30/35 வயதுக்கப்புறமாத் தீவிரம் அடைந்து விட்டது. இன்று வரை தொடர்கிறது. இப்போக் கூடத் தைலம் தேய்த்துக் கொண்டு தான் வந்து உட்கார்ந்திருக்கேன். இதிலே வெரிகோஸ் வெயின்ஸ் பிரதானம் எனில் மற்றவையும் சேர்ந்து கொண்டு பாடாய்ப் படுத்தும்.

    பதிலளிநீக்கு
  28. வயிற்றுத் தொந்திரவும் அடிக்கடி வரும். இப்போத் தான் ஆறு மாசமாக ஆயுர்வேத லேகியம் ஒன்றின் தயவில் படுத்தல் குறைந்திருக்கு. இல்லைனா நினைச்சதைச் சாப்பிட முடியாது.

    பதிலளிநீக்கு
  29. // உங்கள் வீட்டிற்கு இன்று, இப்போது யார் வந்தால் மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைவீர்கள்? // அம்மா!

    பதிலளிநீக்கு
  30. விஐபி யாரைப் பார்த்தாலும் கத்தித் தீர்த்துவிடுவேன். ஆகவே யாரையும் பார்க்கும் உத்தேசம் இல்லை.

    பதிலளிநீக்கு
  31. கோயிந்து/கோவிந்து உங்களை நன்றாக மிரட்டி வைச்சிருக்கான். என்னைப் பொறுத்தவரை சின்ன வயசில் ஒரு முறை சாத்துக்குடியோ/ஆரஞ்சோ சாப்பிட்டப்போக் கொட்டைகளை விழுங்கி விட்டேன். அப்போ என் பெரியப்பா பெண் (என்னை விட ஒரே வயது பெரிய அக்கா) வயிற்றிலிருந்து மரம் முளைச்சு வெளியே வரும் தொப்புள் கொடி வழியாக என்று சொல்லி என்னைப் பயமுறுத்தினாள். நிஜம்னு நம்பிக் கொண்டு நான் அழுத அழுகை! இம்மாதிரி விஷயங்களில் சீக்கிரம் ஏமாந்து போவேன்.

    பதிலளிநீக்கு
  32. 1. அடிக்கடி வரும் உடல் பாதிப்பு டிடர்ஜென்ட் அலர்ஜியினால் கையில் வெடிப்பு.
    2. சென்ற முறை இந்தியா வந்தபொழுது எங்கள் வீட்டிற்கு வருவதாக கூறிய அப்பாதுரை வராமல் டபாய்த்து விட்டார். ஜூனில் இந்தியா வரும் பொழுது பார்க்கலாம் என்றார். வந்தால் மகிழ்ச்சி.
    3. அப்படியெல்லாம் வி.ஐ.பி. என்று யாரும் இல்லை.

    பதிலளிநீக்கு
  33. அப்பாதுரையின் ஆன்மிக நண்பர் சொல்லப் போகும் விஷயங்களுக்குக்காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  34. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  35. வலைப்பூ பிறந்த நாள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்! உங்களது வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    கோயிந்து - ஆஹா... நன்றாகவே பயமுறுத்தி வைத்திருக்கிறார்.

    அப்பாதுரை சொல்லும் கதை - அடுத்த பகுதிக்கான ஆவலான எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. எங்கள் பிளாக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன். திறம்பட நடத்தி செல்லும் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


    4686 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    உண்மையில் சாதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமாக உள்ளீர்களா? . உங்களைத்தான் நினைத்துக் கொண்டேயிருந்தேன். நீங்கள் வரவில்லையே என தினமும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்த்ததும் மகிழ்வாக உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து இன்று வந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு எப்போதும் போல் அருமை. உங்கள் கேள்விகளுக்கு அனைவரும் தந்த கருத்துக்களை இனிதான் படிக்க வேண்டும்.

    தங்கள் பக்கம் நன்றாக உள்ளது. கோவிந்து என்ற பெயருக்கேற்ற மாதிரி நிறைய விஷமங்கள், தந்திரங்கள் செய்துள்ளார் தங்கள் நண்பர்.

    சகோதரர் அப்பாத்துரையின் பக்கமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் நண்பர் கூறிய ஆன்மிக விஷயங்களை அறிய தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    நலம்.

    //நீங்கள் வரவில்லையே என தினமும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்த்ததும் மகிழ்வாக உள்ளது.//

    உங்கள் அன்பான தேடலுக்கு நன்றி. எனக்கும் நீண்ட நாள் கழித்து எல்லோரையும் வலைத்தளத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.


    நீண்ட நாட்கள் கழித்து இன்று வந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.//

    உடல் நலத்தை பார்த்து கொள்கிறேன். மருத்துவரிடம் போய் வந்தேன். மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன்.

    உங்கள் எல்லோர் அன்பால் விரைவில் நலம் அடைவேன்.
    தொடர் பயண களைப்பு நேரமின்மையால் வரவில்லை. இனி வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, வருக. மீண்டும், மீண்டும்.

      நீக்கு
    2. /தொடர் பயண களைப்பு நேரமின்மையால் வரவில்லை. இனி வருவேன்./

      மகிழ்ச்சி சகோதரி. நலமுடன் வாருங்கள். நன்றி சகோதரி.

      நீக்கு
  39. நானும் ஜூன் 9 ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.
    15 வருடங்கள் ஆகி விட்டது.

    https://mathysblog.blogspot.com/2009/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  40. KGG சார் பக்கம் பள்ளி குழந்தைகள் மன நலம் நன்கு தெரிகிறது.
    அப்பாதுரை சார் நண்பர் நல்ல சத்தியம் வாங்கி இருக்கிறார். சாரும் அவர் சொன்னது போல உதவி இருப்பார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  41. மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்களை இங்கே கண்டதில் பெருமகிழ்ச்சி..

    எல்லாவற்றுக்கும் கடவுள் துணை நிற்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ , வாழ்க வளமுடன்
      மகன் குடும்பம் இன்று தான் ஊருக்கு கிளம்பி போனார்கள்.
      நேரம் இன்று தான் கிடைத்தது வந்தேன்.

      //எல்லாவற்றுக்கும் கடவுள் துணை நிற்க வேண்டும்//

      ஆமாம், அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது உண்மை.


      நீக்கு
  42. எப்படியாவது ஒரு செய்தி சொல்லி இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  43. உங்கள் சிறுகதை "உறவு முறை" க்கு கருத்து போட்டேன்.
    வரவில்லையே! கதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கருத்து அடைப்புக்குள் இருக்கின்றது..

      யாராவது விடுதலை செய்ய வேண்டும்..

      நீக்கு
  44. உறவுகளும் முறைகளும் நூறாண்டு வாழ்க..

    பதிலளிநீக்கு
  45. அப்பா!..
    நூறாவது கருத்து போட்டாயிற்று!..

    ( என்ன பொற்கிழியா கொடுக்கப் போறாங்க?..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. இப்போதுதான் பார்க்கிறேன். வெறும் கிளி தந்தாலும் சரிதான்...! :)) ஆனால் இந்த நூறாவது என்பது நம் மனதுக்கு ஒரு பெருமைதானே ..!

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  46. ஆவ்வ்வ் மீ 101.. இதுக்கு நிட்சயம் பொற்கிழிதான், துரை அண்ணனுக்கு இல்லையாக்கும்.. ஹா ஹா ஹா தற்செயலாக திறந்தேன் பிறந்தநாள் எனக் கண்ணில் பட்டுவிட்டது, வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  47. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், இன்னும் பல ஆண்டுகள் இதேபோல மிளிர வாழ்த்துக்கள்... கெள அண்ணன் நீங்கள் என் கையில் கீறிவிட்ட காயமும் இன்னும் அடையாளம் இருக்குது, என் அம்மம்மா பார்த்தாவோ அவ்ளோதேன்:))... எனக்கும் ஏதும் ஐபாட், ஐஓன் இப்பூடி வாங்கித் தந்தால் காட்டாமல் ஒளிச்சிடுவேனாக்கும்:))

    அப்பாதுரை அண்ணனின் எழுத்து ஆரம்பமும் இல்லை முடிவு படிப்பேனோ தெரியாது, நடுப்பகுதி படிச்சிட்டேன்:))... பாம்பு தின்னும் ஊருக்குப் போனால், " நடுத்துண்டு நமக்கு" எனச் சொல்லிட்டு இருக்கோணுமாம் அப்பூடி ஆச்சு நிலைமை:))...

    ஹா ஹா ஹா மீண்டும் நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பாதுரை அண்ணனின்//

      அண்ணனா !!!!  

      நீக்கு
    2. ஆஆஆஆஆஅ இதாரிது என் செக்:) ஆஆஆ? கொஞ்சம் அந்தக் கண்ணாடியைத் தாங்கோ வடிவாப் பார்க்கோணும்:))..

      ஏன் முன்பு அவரை அண்ணன் என அழைக்கவில்லையோ நான்?.. நேக்குப் பழசெல்லாம் மறந்து போயிந்தி ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. வரவுக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  48. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் பிளாக் .

    3வேணி சொல்லாட்டி எனக்கு தெரிஞ்சிருக்காது மிக்க நன்றி 3வேணி 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிக்க நன்றி 3வேணி ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூது சொல்லியனுப்பியது டப்பாப்போச்சே:)).. அது த்றீ இல்ல இல்ல இல்ல :))).. ஹையோ வடலியூர் வாஞ்சிநாதா:).. பேர் வைக்கிறதும் போதும் மீ படுற பாடும்போதும்:)).. பேசாமல்
      "அரைஞானி அதிரா" எண்டே இருந்திடலாம்போல:)).. ஹா ஹா ஹா சரி சரி மீயும் ஓடிடுறேன்ன்.. .. :))

      நீக்கு
    2. திரிவேணி என்றாலும் 3வேணி என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி என 3 மருந்துகள் சேர்ந்தது. திரிவேணி என்றால் மூன்று ஆறுகள்.

      நீக்கு
  49. எங்கள் பிளாக் பல்லாண்டு வாழ்க !
    தொடர்ந்தும் பணி சிறப்புற நடாத்தும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!