வியாழன், 8 ஜூன், 2023

அவர் அப்படி தான் சார்..

 பழைய வீட்டுக்கு பால் போட்டுக் கொண்டிருந்த குமார் திடீரென அலைபேசி நலம் விசாரித்தார்.  "மறந்துட்டீங்க.." என்றார் எல்லோரையும் போல.

பழைய இடத்தில் பழகிய எல்லோரையும் எப்போதும் அழைத்து பேசிக் கொண்டே இருக்க முடியாது!  தப்பித் தவறி அழைதாலும் அது ஆரம்ப கொஞ்ச நாட்களுக்கு நடக்கும்.  பின்னர் பழகியவர்கள், நண்பர்கள் லிஸ்ட் வடிகட்டப்பட்டு குறைந்து கொண்டே வரும்.  நாமும் வடிகட்டுவோம்.  அவர்களும் வடிகட்டுவார்கள்! 

அங்கிருந்தபோது கூப்பிட்டபோதெல்லாம் ஓடிவந்த வாடகைக் கார் ஓட்டுநர் அப்புறம் அழைத்தாலும் வருவதே இல்லை.  நன்றாகத்தான் பேசுவார்.  வருகிறேன் என்பார்.  கடைசி நிமிடத்தில் காலை வாரி விட்டு விடுகிறார்.  அங்கிருந்தபோது அப்படி நடந்ததில்லை.  அந்த ஓட்டுநர் பள்ளி பயின்ற காலத்திலிருந்தே நாங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை.  ஆனாலும்..

சிலர் இன்னமும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள்.  அடிக்கடி அலைபேசி விடுகிறார்கள்.  என்னிடமோ அல்லது பாஸிடமோ..  பாஸிடம்தான் அதிகம்.  அவர்தான் சிறந்த P R O.

குமார் நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற நாள் முதலாய் எங்களுக்கு பால் போடுபவர். போட்டவர்!   கிட்டத்தட்ட 26 வருடங்கள்!  பைக்கில் பால் கொண்டு வருவார்.  பின்னால் ஒரு உதவியாளர் அமர்ந்து வருவார்.  காலை மூன்றரை நாலு மணிக்கெல்லாம் தூக்கத்தின் நடுவே வெளியே அவர் பைக் சத்தம் மற்றும் குரல் கேட்கும்.  மைக் வைத்தது போன்ற குரல்வளம் அவருக்கு!   "கீழ ரெண்டு ப்ளூ கவர்..  மேல மூணு கிரீன் கவர் போடு.. "  இதனுடன் சேர்ந்து நிறைய வசவுகளை அந்த உதவியாளருக்கு கிடைக்கும்.  அவர் அப்படி நடந்து கொள்கிறாரா, அல்லது குமார்தான் இப்படி ஆர்ப்பாட்டமாக அலட்டுகிறாரா தெரியாது. அந்த உதவியாளர் நாங்கள் பார்க்கும்போதெல்லாம் எப்போதும் திட்டு வாங்கி கொண்டே இருப்பார்.

"ஏன் இப்படி திட்டிகிட்டே இருக்கீங்க குமார்?" என்று கேட்டால், "இல்லாட்டா ஏறி மிதிச்சுடுவாங்க ஸார்...  உங்களுக்கு தெரியாது" என்பார்.  "அவன் பார்வையைப் பாருங்க... என்னடா.."  என்று அவனை ரெண்டு மொத்துவார்.  அந்த 'அவனு'க்கும் குறைந்த வயதெல்லாம் இல்லை.  இவர் வயதுதான் இருக்கும்.  குமாரிடமே தண்ணீர் கேனும் வாங்கி கொண்டிருந்தோம்.  ஒருமுறை குமார் திடீரென எங்களை அழைத்து சில புத்தகங்களைக் காட்டி "ஸார்...  இதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?" என்றார்.  "என்ன, பழைய புத்தகம் கூட வியாபாரம் செய்கிறீர்களா?" என்றேன் சிரித்தபடி.  "இல்லை..  இதெல்லாம் உங்கள் வீட்டு படிக்கட்டில் இருந்த புக்ஸ்.  இந்த எருமை எடுத்துட்டு வந்துருக்கான்.  ஐ ஏ எஸ் படிச்சிருக்கான் இல்ல...  உட்கார்ந்து இதைப் படிச்சிகிட்டே பொழுதை வெட்டியா கழிப்பான்"

ஓ..  நான் படித்து விட்டு வைத்திருந்த சில பழைய புத்தகங்களை கேன் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும்போது எடுத்துச் சென்றிருக்கிறார் உதவி.  "போகட்டும் குமார்..  பரவாயில்லை..  எடுத்துக்கட்டும்.." என்றேன்.  " உட்கார்ந்து இதைப் படிச்சிகிட்டே பொழுதை வெட்டியா கழிப்பான்"  என்கிற குமாரின் வார்த்தைகள் மனதுக்குள் உறுத்தியது!  அவர் திரும்பி தனது உதவியாளரிடம் சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு "எடு..  சாரைக் கேட்டுட்டு எடு..  இப்ப நீ பண்ணி இருக்கறது திருட்டு.." என்றபடி பைக்கைத் திருப்பிக் கொண்டு போனார்.

கொஞ்ச நாட்களில் பைக்கை விட்டு விட்டு ஒரு மூடு வண்டி போல மூன்று சக்கர வாகனம் வாங்கி அதில் பால் கொண்டு வந்தார். 

மதுரையில் நாங்கள் சென்று பால் வாங்கிய அனுபவத்துக்கு இப்படி வீட்டுக்கே வரும் பால் சௌகர்யமாகத்தான் இருந்தது.

அவர் பையனும் பெண்ணும் கூட சமயங்களில் உடன் வருவார்கள்.  சமயங்களில் பையன் மட்டும் தனியாக வந்து பால் போடுவான்.  அவன் அவ்வளவு நல்ல பழக்கங்கள் உடையவன் இல்லை என்று எனக்கு தோன்றும்.  பையன் அளவுக்கு அதிகமாக திட்டு வாங்கிக் கொண்டே இருப்பான்.  பெண் கொஞ்சம் செல்லம்.  ஆனாலும் அவளையும் கண்காணிப்பிலேயே வைத்திருந்திருக்கிறார்.  அதே பெண் பள்ளிப்பருவத்திலேயே காதலில் விழுந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டவர், குலதெய்வம் கோவில் போகலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று ஊரில் உறவினர் வீட்டிலேயே வைத்திருந்து மூன்று மாதத்தில் வேறு இடத்தில் பேசி திருமணம் செய்து விட்டார்.  "என்னங்க விபரீதம்?  பொண்ணு இன்னொரு பையனைக் காதலிக்கிறாள் என்றீர்களே" என்றேன்.  "காதலா?  அதுவா?  கல்யாணமானதும் மூன்று மாசத்துல பாருங்க..  ஆளே மாறிடுவா...  வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்துடுவா எங்ககிட்ட" என்றார்.  அப்படியே நடந்தது!  மகன் டெல்லியில் ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிக்க வேண்டும் என்று கேட்டதும் பணம் கட்டி அனுப்பி வைத்தார்.

இவரது உழைப்பும், அப்போது அங்கே டீக்கடை வைத்திருந்த நடராஜன் உழைப்பும், எங்கள் ஆஸ்தான மாளிகைக்கடைக்காரர் உழைப்பும் அப்போது நான் வியந்து பார்த்தது.

தினசரி காலை இரண்டு மணிக்கு எழுந்து பால் பூத் சென்று பால் வண்டியை ரிஸீவ் செய்து பால் வாங்கி காலை ஆறரை ஏழுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை செய்து விடுவார்.  காலை மாலை இரண்டு வேளை பால் விநியோகித்துக் கொண்டிருந்தவர் அப்புறம் ஒருநாள் மாலை பாலையும் காலையிலேயே கொடுக்கத் தொடங்கினார்.  எங்களுக்கும் அது பழகி விட்டது.  இப்போது எல்லோருமே அப்படித்தான் - ஒரே வேளை  - போடுகிறார்கள்.

பால் கெட்டுப்போய் விட்டது என்று சொன்னால் கேள்வி கேட்காமல் இன்னொரு பால் போட்டு விடுவார்.  சாட்சி கேட்கமாட்டார், வாதம் செய்ய மாட்டார்.  திடீர் திடீரென அவரே எக்ஸ்ட்ரா பால் போட்டு விடுவார்.  "நான் கேட்காமல் நீங்கள் கொடுத்திருக்கும் எக்ஸ்ட்ரா பாலுக்கு நான் காசு கொடுக்க மாட்டேன்" என்பேன்.  "யார் கேட்டது?" என்பார்.  பலமுறை இப்படி செய்திருக்கிறார்.

வீட்டிலிருந்து முருங்கைக்காய், அப்புறம் மார்கெட்டுக்குப் போய்விட்டு வரும்போது வாங்கிய காய்கறிகளில் கொஞ்சம் என்று அவ்வப்போது கொடுத்திருக்கிறார். 

மதிய நேரங்களில் மலையேறி விடுவார் குமார்! அவரிடம் பேசுவதே சிரமம்!

அவர் உதவியாளர் சமயங்களில் எங்கள் அருகில் இருக்கும்போது அவர் திட்டுவதற்கு பதிலாய் ஏதாவது முணுமுணுப்பார்.  குமார் காதில் விழாமல்தான்.  

"வேறு வேலை தேடிக் கொள்வதுதானே?  இவ்வளவு திட்டு வாங்கறீங்களே?" என்றேன் ஒருநாள்.

"வேறு என்ன சார் வேலை தெரியும்?   படிக்காத தற்குறி.  பழகிக்கலாம்.  ஆனால் அண்ணன் என்னை போக விடமாட்டார்.  நானும் போகமாட்டேன்.  அசிங்க அசிங்கமாய் திட்டுவார்.  திட்டும்போது எனக்கும் கோவம் வரும், வருத்தம் வரும், சமயங்களில் கண்கலங்கி விடுவேன்.  சமயங்களில் ச்சேன்னு ஆயிடும்.  கொஞ்ச நேரம்தான் ஸார்...  என்னவோ ஒண்ணு செய்து அவர் நம்மை அவர் பக்கம் மாத்திடுவாரு..  நம்மளை மாத்தணும்னு செய்ய மாட்டாரு..  அவர் குணம் அது..   சாப்பாட்டு விஷயத்திலோ சம்பள விஷயத்திலோ எனக்கு அவர் ஒரு குறையும் வைத்ததில்லை.  என் செலவுகள் பெரும்பாலும் அவரே செய்து விடுவார்.  அக்கா பெரும்பாலும் எனக்கும் சோறு போட்டு விடும்.  பணத்தை நான் அவரிட்டயே கொடுத்து வச்சிருப்பேன்.  அப்புறம் வாங்கி மாசாமாசம் அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவேன்.  அப்படியும் ஒருமுறை நானும் போறேன்னு கிளம்பிட்டேன்.  சரி போ ன்னுட்டார்.  கிளம்பி போய் அரை மணியிலேயே பின்னாலேயே வந்து அசிங்கமாய் திட்டி திரும்ப அழைத்து வந்து விட்டார்.  அவர் அப்படி தான் சார்..   உங்களுக்கு தெரியுமா..  அவர் பயங்கரமா தண்ணி அடிப்பார்..  நானும் அடிப்பேன்.  என் மாதிரி ஆகிடாதே..  உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே என்று திட்டுவார்.  அவ்வப்போது எனக்கும் ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்துடுவாரு...

குமார் அப்புறம் பயங்கர வயிற்றுவலி வந்து குடியை நிறுத்தி, அவஸ்தைப்பட்டு இப்போது அந்த அளவு குடிப்பதில்லை  ஆயினும் அதை விடுவதாயில்லை.  

கோபக்காரர்.  ஆனால் என்னிடம் அல்ல.  அசிங்க வார்த்தைகளை அனாயசமாக உபயோகிப்பார்.  எங்களிடம் அல்ல.  ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் வேறு சிலரால் நான் மிரட்டப்பட்டபோது சைலண்ட்டாய் பக்கம் வந்து துணை நின்றிருக்கிறார்.

அவரைப்பற்றி புகார் செய்பவர்கள், புகார் வைத்திருப்பவர்கள் என்னிடம் சொல்வார்கள்..  ஏதோ நான்தான் அவருக்கு பொறுப்பு போல...  நானும் குமாருக்கு அவ்வப்போது அறிவுரை கூறுவேன். 

பெரும்பாலும் கைலி சட்டைதான் அவர் உடை.  மகள் திருமணத்தில் பேண்ட்ஸ் அணிந்து பார்த்தேன்.  பத்தாவது படித்திருக்கிறாராம்.

உடையில், உணவில், பொழுதுபோக்கில் விதம் விதமாக அனுபவிக்கும் மக்களிடையே இவர் ஒரு ஆச்சர்யம்தான்.  இவரைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது என்ன என்று எனக்குத் தோன்றும்.  அந்த நாள் கழிந்தது.  அவ்வளவுதான்.

அவர் அலைபேசி நலம் விசாரித்து மகனுக்கு திருமணமாகி விட்டதா, எப்படி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்.  போனை வைத்து விட்டு அவர் நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன்.அவரிடம் அவ்வளவு நீண்ட வருடங்கள் கஸ்டமராய் இருந்தது சிலரில் நானும் ஒருவன் என்றார்.  பழகும் விதத்திலும், நட்பிலும் மறக்க முடியாதவர் நீங்கள் என்றார்.  மரியாதைக்காக நான் மறுக்க எல்லாம் இல்லை.  சந்தோஷமாய் இருந்தது.

அவர் அவ்வளவு கோபமாக பேசியும் அவர் உதவியாளர்கள் அவரிடம்  அன்பு வைத்திருந்தது ஆச்சரியம்.  அவர் உழைப்பு ஆச்சர்யம்.  அவர் மகளைக் கையாண்ட விதம் ஆச்சர்யம்.  இன்னமும் அவர் என்னை நினைவில் வைத்து அழைத்துப் பேசியது  ஆச்சர்யம்.  அவர் பேசியதும் அவர் நினைவு வந்தது.  நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  கடைசி வரி ட்விஸ்ட் எல்லாம் எதுவும் இல்லை!  சும்மா கேரக்டர் அனாலிசிஸ்.  நினைவலைகள்!
==============================================================================================.........  தமிழ்ச்சினிமா இசையின் போக்குகள் மாறத்தொடங்கிய பின்னர், அவருக்கு பாடும் வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இந்த பின்னணியில் 1989ம் ஆண்டு "நீ சிரித்தால் தீபாவளி" என்ற படத்தை அவர் தயாரித்தார். அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சொந்த வீடு உட்பட எல்லா பணத்தையும் இழந்தார். அதன்பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்களைப் பாடினார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தென்கிழக்குச் சீமையிலே" பாடலும் அடங்கும். 1997ல் வந்த ரஹ்மானின் மின்சாரக் கனவு படத்தில் 'பூ பூக்கும் ஓசை' என்ற பாடலில் 'ஹில்கோரே... ஹில்கோரே' என்று அவரை கத்த வைத்ததையும் நாம் கேட்டோம்! அதற்க்குப் பிறகு அவரைப் பற்றி
அதிகம் நாம் கேள்விப்படவேயில்லை.
ஒரு பேட்டியின் போது "எனது காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன், ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை அதனால் வருத்தங்களும் இல்லை" என்று குறிப்பிட்டார். "ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். அதனால் வருத்தங்களோ வழக்குகளோ இல்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை தான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. வாழ்க்கை போய்க்கொண்டேயிருக்கிறது. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள்தான் நான்." என்று அவர் சொன்னார்.
"பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. மனிதர்களை நம்பினேன். சிலர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருந்தார்கள், பலர் அப்படி இல்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார். பிறகு மேடை நிகழ்ச்சிகளையே வாழ்வின் இருப்பிற்காக நம்பி இருந்த காலத்தில் கூட சுத்தமாக பணமே வாங்காமல் அல்லது அரைகுறையாக வாங்கிக் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்!
2003 ஆம் ஆண்டில் மேடைநிகழ்ச்சிகளுக்காக மலேசியாவில் இருந்தபோது மூளையில் ஏற்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. சினிமாத் துறையினரிடமிருந்து
எஸ் பி பாலசுப்ரமணியத்தையும் கங்கை அமரனையும் தவிர ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவே இல்லை. எந்தத் துறையில் பல பதிற்றாண்டுகள் பணியாற்றி அங்கு பலருக்கும் உதவி செய்திருக்கிறாரோ, அங்கிருந்து நலம் விசாரிக்கக் கூட எவரும் இல்லை. புகழின் உச்சியில் இருந்தபோது அவர் வீடு எப்போதும் விருந்தினர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என நிரம்பியிருக்கும். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் விழுந்து, புகழின் இறங்கு முகத்தில் இருந்தபோது எல்லோரும் மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்ட போது முற்றிலுமாக அவரைப் புறக்கணித்து தனிமையில் விட்டனர். மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். அவரைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லாத நிலையில் அவரது ரசிகர்களும் கூட அவரைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள்.
ஒருவழியாக கைவசம் இருந்த எல்லாச் செல்வங்களையும் செலவு செய்து கொஞ்சம் நலத்திற்கு மீண்டுவந்து அவ்வப்போது ஓரிரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்வு நகர்ந்தது. துரதிருஷ்டவசமாக மீண்டும் 2008 லும், 2009 லும் மீண்டும் நோயின் தாக்குதலுக்கு ஆளானார். நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். தொடர்ந்த சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிந்தது பின்னர் இடது கை மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறிய வரியைக்கூட, ஒரு சுரத்தைக் கூட அவரால் அப்போது பாட முடியவில்லை.
தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்?
நவீன தமிழ் சினிமா இசையின் மிகவும் அபூர்வமான பாடகர்.. மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை வெளிப்படுத்திய பாடகர்... திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர்... மலேசியா வாசுதேவன். அவரது இசையும் வாழ்வும் இதுவே...
எல்லோரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போகப்போறோம்?
கடைசியில எங்கே கொண்டு வைக்கப்போறோம்?
இது அகல்விளக்கு படத்தில் அவர் பாடிய பாடல் வரிகள்...
ஷாஜி
தமிழில் முபாரக் -  இணையத்தில் இருந்து எடுத்தது - இணையத்தில் இருந்து எடுத்த R. கந்தசாமி அவர்களிடமிருந்து எடுத்தது!
====================================================================================================

இணையத்தில் ரசித்த இனிய ஆச்சர்ய ஒற்றுமை...


=========================================================================================================

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம் - தினமணியிலிருந்து...

தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் "குற்றமும் தண்டனையும்', "அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். "கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:
நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?
மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.
ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?
முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?
படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?
சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.
அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?
அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
"குற்றமும் தண்டனையும்', "அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?
அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.
எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர்
=============================================================================================

நியூஸ் ரூம்

செய்திகள் 8-6-23

கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின் 2 பகுதி நெம்மேலியில் ஜூலையில் பரிசோதனை ஓட்டம். இதன் மூலம் 10 லட்சம் பேர்கள் பயனடைவார்கள்.

கர்னாடகாவில் குடும்பத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்த காங்கிரஸ் அரசு மின் கட்டணத்தை யூனிடிற்கு 70 பைசா உயர்த்தியிருக்கிறது. - மின்சார ஷாக்

ஆந்திராவில் கல்வி கற்க விரும்பிய சிறுமிக்கு படிக்க வைக்க வசதி இல்லாததால் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள். அந்தப் பெண் அரசாங்கத்தின் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டாள்.  

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தருவதற்காக தேர்வு வைக்கப் பட்டதில் பல ஆசிரியர்கள் தேறவில்லை. அவர்களுடைய கற்பிக்கும் திறன் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முன்னணி வர்த்தக நிறுவனமான ஆதித்யா பிர்லா ஐயாயிரம்  கோடி முதலீட்டில் தங்க நகை வியாபாரத்தில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த மாதம் 11ம் தேதி அமித் ஷா சென்னை வருகை. இந்த இரண்டு செய்திகளையுமே வரவேற்கிறோம்.

கடுமையான வெய்யில் காரணமாக தமிழக பள்ளிகள் திறப்பு ஜூன் 12க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

=====================================================================================


இப்பவும் இந்த நிலைதான் போங்க...


===================================================================================

கீழான பார்வை 


எவ்வளவு தூரம் வளையலாம் 
என்பதற்கு 
எல்லையைக் 
கண்டுபிடிக்க வேண்டும் 
உடைவதற்குள் நிமிர்ந்து 
விடவேண்டும்.
உடையவும் உடையாமல் 
நிமிரவும் நிமிராமல் 
வளைந்த முதுகோடேயே 
திரிகிறார்கள் நிறையபேர் 

=======================================================================================================================================

பொக்கிஷம் :-

ஆவதும் அதாலே... பிழைப்பதும் அதாலே!

புகை வருதுங்க...


பச்சை புள்ளத்தனமா இல்ல இருக்கு...


ஸாரி... இது கொஞ்சம் ஓவர்...


அடியேண்டி அசட்டுப்பெண்ணே.....

102 கருத்துகள்:

 1. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஸ்ரீராம், நீங்கள் சொல்வது போல் எல்லோருடனும் எப்போதும் பேச முடியாது. நேரம்...இந்த வடிகட்டல் (ஹாஹாஹா) சில சமயம் அவசியமாகவும் இருக்கிறது.

  அதுவும் இப்போதெல்லாம் வாட்சப்தான். உறவுகள் உட்பட. பேசுவது என்பது குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா..  வாங்க...  வாட்ஸாப்பில் கூட தொடர்பில்லாமல் நின்று போன நட்பு முகங்கள் உண்டே...

   நீக்கு
 2. பாஸிடம்தான் அதிகம். அவர்தான் சிறந்த P R O.//

  ஹாஹாஹாஹா....பெரும்பான்மையான வீடுகளில் அவரவர் வீட்டு Boss தான் என்று நினைக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இதை பலமுறை சொல்லிக்கொண்டுதான் வருகிறேன், இல்லையா?  என் நேர்மையை நீங்கள் பாராட்டணும்!

   நீக்கு
 3. " உட்கார்ந்து இதைப் படிச்சிகிட்டே பொழுதை வெட்டியா கழிப்பான்" //

  பாவம் அந்த உதவி. மனம் வேதனைப்பட்டது, ஸ்ரீராம். அவருக்கு வாசிக்கும் ஆர்வம். என்ன சூழலோ அவரை இப்படியான ஒரு வேலைக்குத் தள்ளி இருக்கிறது.

  இந்த வரியில் 'கழிப்பாள்' போட்டுக்கோங்க! எனக்கு நேர்ந்த அனுபவம்.....பல முறை. கேட்டு கேட்டு மனதிற்குள்ளேயே என் வாசிக்கும் ஆர்வத்தை அடக்கிய உணர்வுகள். அந்த 'உதவி' க்கும் மனதில் இருந்திருக்குமோ?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கும் பழக்கம் இல்லாமல் உழைப்பவர்களுக்கு படிப்பது என்பது வெட்டிப்பொழுது போக்குவது போல இருக்கு பாருங்க...

   நீக்கு
 4. உழைப்பவர்களில் பலரும் தங்கள் உதவியாளர்களைத் திட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படித் திட்டினால்தான் வேலை நடக்கும் என்பதோடு தங்கள் தோரணையையும் நிலைநாட்டிக் கொள்வார்கள். வீட்டிற்கு உதவி செய்ய வரும் பெண்களைக் கூட அதிகாரம் செய்து வேலை வாங்கும் காலம் இருந்தது.

  அது பழைய காலம்...இப்போதெல்லாம் அப்படித் திட்டினால், 'போயா' என்று போய்விடுவார்கள் என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​இந்த வகையிலேயே இன்னொரு பதிவு வைத்திருக்கிறேன்... வரும்!

   நீக்கு
 5. அந்த தோரணைக்காரர்கள் நல்லவங்களாகவும் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். நெடுநாள் பழக்கம் என்றால் நமக்கும் கூடவே சில பொருட்கள் கொடுப்பாங்க...தங்கள் வீட்டில் காய்த்தவை, விளைந்தவை என்றும்...
  காலையில் உழைத்துவிட்டு அதன் பின் வேறு நிலைக்குச் சென்றுவிடுவார்கள். இதைச் சொல்லும் போதே உங்களின் அடுத்த வரிகள் கண்ணில் பட்டுவிட்டன...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஐஸ் வைக்கவும் கொடுக்கலாம், அன்பாலும் கொடுக்கலாம்!

   நீக்கு
 6. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 8. உடையில், உணவில், பொழுதுபோக்கில் விதம் விதமாக அனுபவிக்கும் மக்களிடையே இவர் ஒரு ஆச்சர்யம்தான்./

  இவர் மட்டுமில்லை ஸ்ரீராம், பெரும்பான்மையான உழைப்பாளிகள் அதாவது இப்படியான உழைப்பாளில் இப்படி இருப்பதைத்தான் பார்க்கிறேன். குடும்பத்துக்காக உழைப்பவர்கள்....தங்களுக்கு எதுவும் வாங்கிக்கொள்வதில்லை. குழந்தைகள் கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள் சிலர். நாமதான் அனுபவிக்க முடியலை பிள்ளைங்களாவது அனுபவிக்கட்டுமே என்று. அவர்களில் சிலர் முன்னேறி விடுகிறார்கள். அப்பாவின் உழைப்பு கண்ணில் தெரிய....ஆனால் சிலர் அப்பா கொடுக்கும் செல்லத்தைத் தவறாகப் பயன்படுத்துகிற பிள்ளைகளையும் பார்க்க முடிகிறது.

  இப்படியான நட்பு ஒன்று (குடும்பமே) இருந்தது. ஆனால் இப்ப தொடர்பு இல்லை. நினைவுகளில் மட்டுமே....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  நிறைய சொந்தத்தொழில் செய்பவர்கள் - அதுவும் சிறிய அளவில் -  அப்படிதான் இருக்கிறார்கள்.  உழைப்பே உயர்வு.

   நீக்கு
 9. மலேசியா வாசுதேவன் நல்ல பாடல்கள் சில தந்திருக்கிறார். இவ்வளவு நல்ல மனிதரும்கூட என இதுவரை தெரிந்திருக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலதானா?    எம் எஸ் வி யால் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் இளையராஜா இசையில் நிறைய நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

   நீக்கு
  2. எனக்குத் தெரிந்தவாறு சில - எனக் கொள்க!

   நீக்கு
 10. பால் பாக்கட் போடும் குமாருடைய லாஜிக் வித்தியாசம் தான். சாவியின் கேரக்டர் தொடரில் ஒன்றோ என்று வியக்க வைத்தது. உண்மையில் அதே போன்ற நடை..

  //நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?
  மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது.​//


  ​ஒரு மொழிபெயர்ப்பு செய்பவன் என்ற முறையில் நான் இதை ஆமோதிக்கிறேன். ஆனால் மலையாளம் ஒரு சகோதர மொழியானதால் பல சொற்களையும் அப்படியே தமிழில் எடுத்தாளாலாம் என்பது ​ஒரு சவுகரியம். வாக்கிய அமைப்பு மாறவேண்டி இருக்கும்.

  ​நியூஸ் ​வண்ணங்களில் கொடுக்கப்பட்டது புதுமை. LKG பிள்ளைகளின் பாடப்புத்தகம் போல் உள்ளது.

  2016 இல் எழுதிய கவிதை யதார்த்தமாக உள்ளது. அதை போல் எழுதிய முதுகெலும்பு வளைந்த கவிதை நன்றாக இல்லை.

  வாழையாய் நின்றோரெல்லாம்
  ..... புயலில் வீழ்ந்தனர் அன்றோ
  நாணலாய் வளைந்தவர்
  வளைந்து பிழைத்தனர் அன்றோ?
  பிழைக்கும் வழியே அரசியல் வழி!

  ... புள்ளியிட்ட இடங்களை நிரப்பிக்கொள்ளவும்.

  லஞ்சம் ஜோக்குகள் 2 போட என்ன லஞ்சம் வாங்கினீர்கள்?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'குமார்' பதிவை நெல்லை ரசிக்க மாட்டார் என்று தோன்றியது எனக்கு!  நீங்களும் குறைந்த மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  நன்றி, நல்ல மார்க் கொடுத்து தேர்ச்சி பெற வைத்ததற்கு!

   மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை.  நம் பாண்டித்யத்தையும் காண்பிக்க முடியாது.  வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்க்கவும் முடியாது!

   நியூஸ் வண்ணங்களில் முன்னரேயும் கொடுத்த நினைவு..

   2016 ல் எழுதிய கவிதை அப்படியே சினிமா பாடலை உல்ட்டா செய்தது!  இப்போது எழுதி இருப்பது நான் படித்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையின் பாதிப்பு.

   ஹிஹிஹி..   உங்கள் எல்லோரின் அன்பும் ஆதரவும்தான் லஞ்சம்!

   நீக்கு
  2. இல்லை ஸ்ரீராம். நல்லாவே எழுதியிருந்தீங்க. ஹிந்தி படங்கள், பாடல்கள் போன்றவற்றைப் போட்டால் எனக்குப் பரிச்சயம் இல்லாததாலும் ரசிப்பதில்லை என்பதாலும் கண்டுகொள்ள மாட்டேன். அவ்ளோதான்.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி தங்கள் எண்ணங்களால் உருவாகும் பகுதி, நிறைவாக இருக்கிறது.

  பால் விற்பனை செய்தவரை பற்றிய அலசல் நீங்கள் அவரை எத்தனை தூரம் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை காட்டியது. சில பேர்களை, அவர்களின் நல்ல பண்பு, மற்றும் அவர்களின் உழைப்புத் திறன்களினால் அவர்களை என்றுமே மறக்க முடியாதபடி நினைவில் நிற்கும்படி செய்து விடும் என்பதற்கு தங்களின் கட்டுரையை ஒரு உதாரணம். அவர் தம் மககள், மற்றும் மகனை நல்வழியில் ஈடுபடுத்திய செயல் பாராட்டுக்குரியது.

  அந்த உதவியாளரின் பண்பும் போற்றத்தக்கது. எந்த நிலையிலும், தன் முதலாளியை விட்டுத்தராமல் பேசியது மனதை நிறைய செய்கிறது. இந்த மாதிரி புரிந்து கொள்ளும் ஒட்டுதல் சில பேர்களுக்கே அமையும்.

  நீங்களும் அவர்களைப்பற்றி நல்ல தெளிவாக எழுதியுள்ளீர்கள். அந்த உதவியாளர் இந்த கட்டுரையை படிப்பாரா ? படிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு அமையுமா? (அவர் உங்களிடமிருந்து பெறாமல் பெற்ற புத்தகங்களை படித்ததினால் கேட்கிறேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...  குமார் மேல் மிக ஆரம்பத்தில் எனக்கு ஒரு அவெர்ஷன் இருந்தது.  ஒதுங்கியே செல்வேன்.  அது தெரிந்தே அவர் இன்னும் என்னை நெருங்கினாரோ என்று கூட இப்போது தோன்றுகிறது.  பின்னர் பழகப்பழக அவரைப் பிடித்து விட்டது.    அவரோ, அவர் உதவியாளரோ இதைப் படிக்க வாய்ப்பே இல்லை.

   நீக்கு
 12. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம்

  பதிலளிநீக்கு
 13. பொருட்கள் அவங்க இடையில் கொடுப்பதெல்லாம் ஒரு டெக்னிக் என்றும் சொல்லலாம்....அன்பும்....வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்வதோடு, நம் மனமும் நட்பும் அவர்களைக் கவர்ந்திருக்கும்..

  ஸ்ரீராம், முதல் பகுதி உங்கள் பகுதி ரொம்ப நல்லாருக்கு!!!!

  மலேசியா வாசுதேவன் நிறைய நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார். அருமையான பாடகர். எனக்கு அவரது குரல் ரொம்பப் பிடிக்கும்.

  இத்தனை நல்ல மனிதர் ..அவரது எண்ணங்கள் அருமை...இது இப்போது உங்கள் பகிர்விலிருந்துதான் அறிகிறேன். அவர் தாய்மொழி மலையாளம் என்று நினைக்கிறேன்.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா.  மலேசியா வாசுதேவன் நிறைய நல்ல பாடல்களை பாடி இருக்கிறார்.  வில்லன் ரோல்களில் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.  அவர் மலேசியாக் காரர் என்று தெரியும்.  மலையாளமா என்று சரியாக தெரியாது.  வேறெங்கோ படித்த ஞாபகம் இருக்கோன்னு லேசா சந்தேகம்!

   நீக்கு
 14. மொழிபெயர்ப்பு என்பது, not just translating the sentence. எழுத்தின் போக்கை அறிந்து மாற்று மொழிநடையில், சரியான கலோக்கியல், பழமொழி, பேசும் தன்மை இவற்றை உபயோகித்து எழுதணும். பலருக்கு இது தெரிவதில்லை. Shit.. என்பதை சே எனவும், பேச்சில் வரும் go to hell என்பதை ஒழிந்து போ எனவும் மொழிபெயர்க்கணும். விகடன் பிரசுரத்தில் நான் வாங்கிய புத்தகம் மாதிரி அமைந்துவிடக்கூடாது. பிரபலமானவர் மொழிபெயர்த்தார் என்பதற்காக, அவருக்கு சோப்புப் போடும் விதமாக அவரது மோசமான மொழிபெயர்ப்பை வெளியிட்டு, வாசகர்களிடமிருந்து பணம் பறிக்கக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யு டியூபில் சில பாடல்களுக்கான மொழிபெயர்ப்புகளை பார்த்தல் உங்கள் வயிறு புண்ணாகிவிடும்!

   நீக்கு
  2. மொழிபெயர்ப்பென்றில்லை, தலைப்புக்களைப் பார்த்தாலே, உள்ளே பார்க்கும் எண்ணம் போய் விடுது, ஒரு சனி வக்கிரம் போவது பற்றிச் சொல்கிறார், அவர் போட்ட தலைப்பு பச்சைப்பிழையாக இருந்தது, தலைப்பே இப்படி எனில், இவரது சாஸ்திரத்தை எப்படிப் பார்ப்பது என திறக்க மனம் வரவில்லை..

   நீக்கு
  3. யு டியூபில் இது மாதிரி வரும் செய்திகள் எல்லாமே பொய், பித்தலாட்டம், அபத்தம்.  நல்லா இருக்கற பிரபலமானவங்களை செத்துப் போயிட்டாங்கன்னு கூச்சம், பயம் இல்லாம போடுவாங்க..

   நீக்கு
 15. அட! Photobombing மிகவும் ஆச்சரியமான விஷயம்! அதுவும் அவர்கள் கணவன் மனைவியாக இப்ப...!!!! ரசனையான ஒன்று,

  எங்கள் வீட்டில் இப்படி வேண்டுமென்றே photobombing செய்யும் ஒன்று இருந்தது!!!! கண்ணழகிதான்!!! ஹாஹாஹாஹா...ஒரு படம் எடுக்க ஃப்ரேம் பார்த்து எடுக்கறப்ப டக்குனு உள்ள நுழைஞ்சிருப்பா என்ன பார்த்துக் கொண்டே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் சிறு வியப்புகள், சிறு சந்தோஷங்கள் இல்லையா?

   நீக்கு
  2. ஆமாம் கண்டிப்பாக..!!

   கீதா

   நீக்கு
 16. நல்ல திறமையாளர்கள் (திரையுலகில்), முட்டாள்களாகவும் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். ஜால்ரா கோஷ்டியினால் வாழ்வைத் தொலைத்தவர்களில் இவரும் ஒருவர். ஜெமினி மாத்திரமே, தன் தொழில் என்ன? தனக்கு எது வரும் என்பதைப் புரிந்துகொண்டவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சன் போன்ற வெளியில் தெரியாத இன்னும் சில புத்திசாலிகளும் உண்டு.

   நீக்கு
 17. கூட வேலை செய்பவர்களை, அடிமையாக்கி ஆனால் தேவையானவைகளைத் தந்து, கூடவே வைத்திருக்கும் காரணம், தன்னலம் மற்றும் அடிமையின் முட்டாள்தனத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்வது. நான் பார்த்த நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் இனத்து ஏழைகளை தன்னோடு வேலை செய்ய வைத்துக்கொண்டு, கசக்கிப் பிழிந்து, ஆனால் உணவு இருப்பிடத்தில் குறை வைக்காமல், பத்து இருபது வருடங்கள் வேலைவாங்கிட்டு, அவனைத் தொழில் தொடங்க உதவுவார்கள். அவனே இவர்களைப்போல் பின்னால் வரலாம். இது என்னைக் கவர்ந்தது. வேலை செய்ய முடிந்தமட்டில் வேலை வாங்கிவிட்டு கழற்றி விடுபவர்களைவிட இவர்கள் உயர்வானவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடார் என்றில்லை, எல்லா இடங்களிலும் உண்டு.

   நீக்கு
  2. பால்கார்ர் கேரக்டர் நல்லா இருக்கு. ஏமாளியின் கேரக்டரும்தான்.

   நீக்கு
  3. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜாதி மதம் பற்றி எல்லாம் பேசப்புடாதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   நீக்கு
  4. இல்லை அதிரா... தங்கள் சமூகம் இருந்த நிலையிலிருந்து ஒரு ஐம்பது-அறுபது வருடங்களில் நல்ல செழிப்பான இடத்திற்கு அந்தச் சமூகத் தலைவர்கள் கொண்டுவந்துவிட்டனர். இது ஒரு பெரிய சாதனை. அவர்கள் நிறைய கல்விச்சாலைகள் (பள்ளி, கல்லூரி) ஏற்படுத்தியிருக்கின்றனர். அனேகமாக எல்லாமே மிக நன்றாக, qualityயை மாத்திரம் base பண்ணி நடக்கின்றன.

   நீக்கு
 18. மொழிபெயர்ப்பு பற்றி எம் ஏ சுசீலா அவர்கள் சொல்லியிருபப்தை அப்படியே டிட்டோ செய்கிறேன். மொழியாக்கம் செய்வது என்பதில் நம் மொழியிலும், பிற மொழி ஆளுமையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்போதுதான் மூலத்தில் இருக்கும் உணர்வுகளைக் கொண்டு வர இயலும். இவர்களைப் பற்றி தேனம்மை அவங்க பகிர்ந்திருக்காங்க அவங்க ஆசிரியையும் கூட. தேனம்மை மிகவும் உணர்வுபூர்வமாகத் தன் ஆசிரியை நினைவுகூர்ந்து எழுதியிருந்தார். ஆசிரியையும் தன் மாணவி குறித்து எழுதியிருக்காங்க.

  நம்ம ஜே கே அண்ணா நல்லா செய்கிறார். ஏனென்றால் மலையாளம் சமஸ்கிருதம் கலந்த மொழி. அதை மொழியாக்கம் செய்வது என்பது கொஞ்சம் கடினம் என்பது என் அபிப்ராயம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த எம் ஏ சுசீலா மேடம் தேனம்மைக்கும், ஏன், என் பாஸுக்கும் (வெவ்வேறு வருடங்களில்!) தமிழ் வகுப்புகள் எடுத்திருக்கிறார்.

   நீக்கு
  2. ஆமாம்!!! பாஸுக்கும்...நீங்களே சொல்லியிருக்கீங்க நினைவுக்கு வந்துவிட்டது, ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  3. என்னாது மலையாளத்தில ல்கமஸ்கிர்தம் கலந்திருக்கோ அவ்வ்வ்வ்:)).. எங்கட டமில்ல டச்சு:)).. இது ரச் இல்லை:)).. கலந்திருக்குமாக்கும்:)))

   நீக்கு
  4. மலையாளம் தமிழிலிருந்து உருவான மொழி என்பார்கள்.

   நீக்கு
 19. அன்புக்குரிய கோமதி அரசு அவர்கள் சில நாட்களாக வருவதில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். விசாரிக்க வேண்டும்.

   நீக்கு
  2. கோமதிக்கா பயணத்தில் இருக்காங்க. ஊருக்குத் திரும்பும் பயணத்தில் இருக்காங்க...இடையில் வேறு ஒரு ஊரில் இறங்கிருக்காங்க....இன்னும் ஊர் வந்து சேரவில்லை என்று தெரிகிறது

   கீதா

   நீக்கு
  3. ஆவ்வ்வ் கோமதி அக்கா ஊருக்கு வந்திருப்பா கீதா, போன வெள்ளி, ஆனா ஊரில் தங்கை வீட்டில், கருமங்கள் முடிச்சபின்புதான் புளொக் பக்கம் வருவா என நினைக்கிறேன்.

   நீக்கு
  4. ஆம். அப்படிதான் இருக்கும்.

   நீக்கு
 20. மலேஷியா வாசுதேவன் அவர்களது நினைவில் மனம் கனத்தது..

  பூவே இளைய பூவே..

  ஒரு தங்க ரதத்தில்..

  இன்னும் பல!..

  பதிலளிநீக்கு
 21. நியூஸ் ரூம் :
  முதலில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் இல்லை என்று சொல்லியிருந்தது. இப்போது எல்லோருக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பவர் கட் நிறைய.

  கூட ஒரு நியூஸ் : இந்தியா முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 40 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம். மேலும் 100 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளதாம்.

  இதில் வருத்தமும் வேதனையுமான விஷயம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்ட மூன்றுமே அரசுக் கல்லூரிகள். ஸ்டான்லி, திருச்சியிலுள்ள கே ஏ பி விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி.

  ஆச்சரியம் - தனியார் மருத்துவக்கல்லூரிகள் இல்லாதது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியார் கல்லூரிகள் அந்தப் பட்டியலில் இல்லாதது..ஒரு வேளை அடுத்து வரும் பட்டியலில் இருக்குமோ 100 வர வாய்ப்பு உள்ளது என்று சொன்ன பட்டியலில்??!!

   கீதா

   நீக்கு
 22. தளர்ந்திருக்கும்
  தந்தைக்காக
  தவித்திருக்கும்
  தாய்க்காக
  வளர்ந்து நிற்கும் தங்கைக்காக
  வளைந்த முதுகு
  முதிர்ந்த பின்னும்
  நிமிர்வதற்கு
  விரும்பவில்லை
  கண்ணெதிரில்
  மனைவியும் மகளும்!..
  ***

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உறவு நோக்கிலும் பார்க்கலாம்.  வேலை செய்யுமிடம், யஜமான விசுவாசம் நோக்கிலும் பார்க்கலாம்.

   நீக்கு
 23. குமார் அவர்களின் பொறுமையும் அன்பும் வியக்க + திகைக்க வைத்தது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்களும் இவரைப் போன்ற மனிதர்களை சந்தித்திருக்கலாம்.

   நீக்கு
 24. E & O PS - இருவரையும் நினைத்து எழுதிய வரிகளா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த வரிகளை சொல்கிறீர்கள்?

   நீக்கு
  2. // உடையவும் உடையாமல்
   நிமிரவும் நிமிராமல்
   வளைந்த முதுகோடேயே திரிகிறார்கள் நிறையபேர் //

   முன்பு லேடி...
   தற்போது டாடி...

   நீக்கு
  3. அது அவரவர் பார்வையை பொறுத்தது.

   நீக்கு
 25. இப்பவும் இந்த நிலைதான் போங்க...//

  டிட்டோ...2016 லருந்து இன்னும் எந்த மாற்றமும் இல்லை!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. வளைந்த முதுகோடேயே
  திரிகிறார்கள் நிறையபேர் //

  கீழான பார்வை அவங்க மட்டுமா...அவங்களைப் பார்க்கிறவர்களும் அப்படித்தான் பார்ப்பாங்க. இவன்/ள் லாம்....முதுகெலும்பில்லா ஜென்மங்கள்னு...

  கவிதையின் பொருள் அருமை.

  சரி விடுங்க அவங்களை...மரியாதைக்காரங்கன்னு!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 27. பொக்கிஷம் - என்ன ஸ்ரீராம் இதைப் போய்....லஞ்சம் - அவரு கைமாத்துதானே கொடுத்தார்!!!

  ஹாஹாஹா என் அறிவைப் பார்த்து உங்க காதுல புகை வருது பாருங்க!!!

  அப்ப நீங்களும் அசடுன்றீங்க!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், 2, 3 அந்த பொக்கிஷ ஜோக்குகளுக்கானது!!! துணுக்கைக் குறிப்பிடாமல் சொல்லிவிட்டேன்...

   கீதா

   நீக்கு
 28. இம்முறை படக்கதை எனச் சொல்லி ஏமாற்றாமல், உண்மைச் சம்பவம் போட்டிட்டார் ஸ்ரீராம்.
  அது உண்மைதான், உறவுசரி நட்பு சரி எப்பவும் தொடர்புடன் இருந்தால் மட்டுமே நிலைக்கும்... ஏன் கணவன் மனைவி உறவுகூட, ஓவராக அலட்டிக்கொண்டிருந்தால், உறவு இன்னும் நெருக்கமாகும், பேசுவது, பேசுவதற்கே நேரமில்லை எனும் இடங்களில்தான் விரிசல்கள் பிரிவுகள் வந்திடுது.. அதனால கொமினிகேஸன் எப்பவும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமாக்கும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்.  உண்மைதான்.  ஆனால் ஊடலும் பிரிவும் உறவை வளர்க்கும் என்றும் சொல்கிறார்களே...   நீக்கு
 29. நாம் முன்பிருந்த வீட்டில், நமக்கென எலக்ரீசியன், ஜொயினர் என சிலர் இருந்தார்கள், கூப்பிட்ட உடன், தம் லஞ் பிரேக்கில் ஆவது ஓடிவந்து வேலை செய்து தருவார்கள், நல்ல நட்புப்போல இருந்தார்கள்.. பணமும் பெரிசாக கேட்பதில்லை, அதனால அவர்கள் 30 என்றால் நாம் 40 கொடுப்போம்... இப்படி இருந்து, வீடு மாறி எங்கு சென்றாலும் வருகிறோம் என்றார்கள், ஆனா வீடு மாறியதும், பிசி பிசி என தொடர்பு விட்டுப்போச்ச்ச்:)).. இது வாழ்க்கையில் நடக்கும் நோர்மலான விசயங்கள்தானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   அங்கேயும் இதே கதையா..   உபசார வார்த்தைகள் எங்கும் போதுதான் போலிருக்கிறது!

   நீக்கு
 30. இங்கும் சில மில்க் பார்ம் களில் இருந்து வீட்டுக்கு பால் கொண்டு வந்து தருவார்கள், விடிய 4 மணிக்கெல்லாம் வாசலில் வச்சிட்டுப் போயிடுவார்கள், பாங் மூலம் பணம் டிரெக் டெபிட் பண்ணிடலாம், ஆனா பிரச்சனை என்னவெனில், நம் தேவைக்கு அதிகமாகப் பால் வந்திடும், சில கிழமை 2 லீட்டர் போதுமாக இருக்கும் சில கிழமை 3 லீட்டர் தேவைப்படும், இது நிறைய மிஞ்சத் தொடங்கி, பன்னீர் செய்ய வேண்டிய நிலையாகிட்டுது, அதனால வேண்டாம் நேரே போய் வாங்கினால், நம் தேவைக்கேற்ப வாங்கிடலாம் என நிறுத்தியாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன், முன்னரே தொடர்பு கொண்டு இவ்வளவு பால் போதும் என்று வரையறை செய்துவிட முடியாதா? நாங்கள் சமயங்களில் நாளை பால் வேண்டாம்.  அடுத்த நாள் போடுங்க போதும் என்று சொல்லி விடுவோம்.

   நீக்கு
 31. //அவர் அலைபேசி நலம் விசாரித்து மகனுக்கு திருமணமாகி விட்டதா, எப்படி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார். போனை வைத்து விட்டு அவர் நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன்///

  இதில் பேரனை வைத்துவிட்டு எனப் படிச்சு, ஆஆஆஆ நாம் இல்லாத இந்த இடைவெளியில் என்னமோ நல விசயம் எல்லாம் நடந்திருக்கே என நினைச்சிட்டேன்:)).... எனக்கும் இங்கின ஸ்ரீராமிடம் கேட்க கிளவி வருது.. சே..சே கேள்வி வருது, ஆனா வாணாம்:))

  பதிலளிநீக்கு
 32. மலேசியா வாசுதேவன் அவர்களின் கதை படிக்க கஸ்டமாக இருக்குது... நாளைக்கு என்ன நடக்கப் போகுதென யாருக்குத் தெரியும்.. அதனாலதான் இன்று ஹப்பியாக இருந்திடோணும்.

  பதிலளிநீக்கு
 33. நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும், பழகும் ஒவ்வொரு மனிதரோடும், முன்போ அல்லது முற்பிறவியிலோ ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும்... ஆனால் அறியும்போது நம்ப முடியாமல் இருக்கும்... காதல்கோட்டை படம்போல.. அடிக்கடி சந்திச்சாலும் தெரியாமல் இருந்திடுது... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிய முடியுமா என்ன... அப்படி இருந்தால், அதை அறியவும் முடிந்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

   நீக்கு
 34. பொக்கிசம் நல்லாயிருக்குது, அதிலயும் முதலாவதுதான் பிடிச்ச பொக்கிசம்....:)..

  எவ்வளவுதான் உடம்பில எண்ணெயை அப்பிக்கொண்டு மண்மேல உருண்டாலும், எங்களுக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்:))... நினைவுக்கு வந்துது சட்டென:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... உலக வலை வரலாற்றில் முதன் முறையாக பொக்கிஷத்தில் புரியவில்லை என்று சொல்லாமல் அதிரா ஒன்றை ரசிச்சாச்சு!

   நீக்கு
 35. நீண்ட நாட்கள் பழகியவங்க இப்படி நிறையப் பேர் உண்டு. நான் கல்யாணம் ஆகி ராஜஸ்தான் போனதும் பின்னர் திரும்பி மதுரைக்கு அண்ணா கல்யாணத்துக்கு வந்தப்போப் பலரை எனக்கு நினைவில் இல்லை. அவங்க எல்லாம் அன்புடனும் ஆதுரத்துடனும் என்னை விசாரிக்க நான் திரு திரு! கொஞ்சம் வெட்கமாயும் அவமானமாயும் இருந்தது. இப்போதெல்லாம் நேற்றுச் சந்திச்சவங்களையே மறந்து விடுகிறேன். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதாகும்போது பொதுவாக பழைய நினைவுகள் நன்றாய் நினைவிருக்கும்.  சமீபத்து நினைவுகள் விட்டுப்போய்விடும்.  எப்படி இருந்தாலும் சிலரை மறக்க முடிவதில்லை.

   நீக்கு
  2. அநியாயமா இல்லையோ? அண்ணா கல்யாணத்துக்கு மதுரைக்கு வந்தப்போ எனக்கு 23 வயசு தான். அப்போவே ஒரு சிலர் முகம் நினைவில் இருந்து போய் விட்டது. சிலர் வருந்தவே செய்தனர். :( நீங்க சொல்றாப்போல் இப்போவெல்லாம் முந்தாநாள் சாப்பிட்டதும், நேற்றுச் சமைச்சதும் மறந்து விடுகிறது. :(

   நீக்கு
 36. மலேசியா வாசுதேவன் பற்றி முன்னாடியே படிச்சிருக்கேன். வருத்தமாகவே இருக்கும். உங்கள் கவிதையும் முதலில் உள்ளது படிச்சிருக்கேன். வண்ணச் செய்திகள் சுருக்கமாகவும் நன்றாகவும் இருக்கிறது. எம்.ஏ.சுசீலா என் அண்ணா பெண்ணுக்குக் கூடப் பாடம் சொல்லிக் கொடுத்ததாகச் சொல்லுவாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க அண்ணா பெண்ணும் மதுரையா?

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பூர்விகம்னு பார்த்தால் என் அண்ணா பெண்ணும் மதுரை தான். ஆனால் அவள் சென்னைப் பல்கலைக் கழகத்க்டில் ஆந்த்ரபாலஜி படிக்கையில் இவங்களைத் தேடிப் பிடித்துப் போய்ப் பழக்கம் செய்து கொண்டு ஒரு சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டதாய்ச் சொல்லுவாள். அவள் எம்.ஓ.பி. வைஷ்ணவாவில் ஜர்னலிசம் முடிச்சுட்டுப் பின்னர் உயர்கல்விக்கு ஆந்த்ரபாலஜி படிச்சாள்.

   நீக்கு
 37. பதில்கள்
  1. எல்லாமே இங்கேதான் இருக்கு!

   நீக்கு
  2. இல்லையே, 2,3 கருத்துரைகளைக் காணோமே! இங்கே மெயில் இன் பாக்சிலும் இல்லை!! :(

   நீக்கு
 38. வணக்கம் சகோதரரே

  மலேசியா வாசுதேவன் பற்றிய கட்டுரை மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் சென்னையிலிருந்த போது . அவரின் அண்ணா பெண் என் பக்கத்து வீட்டுத்தோழிக்கு நெருங்கிய நண்பி. அவர் அடிக்கடி இவரைப் பார்க்க வரும் போது அவருடன் பேசியிருக்கிறேன். எளிமையாகத்தான் இருப்பார். இப்போது நீங்கள் குறிப்பிட்டவுடன் அவரின் நினைவு வருகிறது.

  கவிதை நன்றாக உள்ளது. வளைந்த முதுகு நிமிர கஸ்டந்தான். அப்படியே கூன் விழுந்து விடும்.

  மொழிபெயர்ப்பின் சிரமங்களை அறிந்து கொண்டேன்.

  ஜோக்ஸ் அனைத்தும் அருமை. லஞ்சம் எப்பதோ பிடித்து இன்றுவரை தலை விரித்துதான் ஆடுகிறது. சாலையிலேயே கணவன் மனைவி கண்ணாமூச்சி விளையாட்டை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..  அவரை நேரிலேயே பார்த்து பேசி இருக்கிறீர்களா?  அட...  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 39. நல்லதொரு கதம்பம். தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவது வழக்கம் தான். பலர் இப்படித்தான்....

  மற்ற பகுதிகளும் நன்றி. துணுக்குகள் அனைத்தும் அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 40. கேரக்டர் அனாலிசிஸ்.. மனிதர்கள் பலவிதம். மக்களை மகிழ்வித்தப் பாடகர் பற்றிய செய்திகள் வருத்தம் அளித்தன. Photobombing சுவாரஸ்யம். பேராசிரியரும் எழுத்தாளருமான எம்.ஏ.சுசிலாவின் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரை சிறப்பு. நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!