இன்றைய தனிப்பாடல் T M சௌந்தரராஜன் பாடியுள்ள முருகன் பாடல். M P சிவம் எழுதியுள்ள பாடலுக்கு இசை அமைத்து அவரே பாடியுள்ளார்.
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…
ஐயன் முருகனைக் கூப்பிட்டு…
என் ஐயா…என் ஐயா…
============================================================
1992 ல் கௌரி மனோகரி என்கிற படம் பற்றி விவரங்கள் அரைகுறையாக இணையத்தில் கிடைக்கின்றன. இனியவன் இசை, வைரமுத்து பாடல் வரிகள் கிருஷ்ண குமார் இயக்கம்.
KJ யேசுதாஸும் SP பாலசுப்ரமணியமும் இணைந்து சில பாடல்கள் பாடி இருக்கின்றனர். பட்டிக்காட்டு ராஜா, திரிசூலம் படப்பாடல்கள் சட்டென நினைவுக்கு வருபவை. அடுத்து நினைவுக்கு வருவது இந்தப் பாடல்.
இந்தப் பாடலில் யார் யாரை முந்துகிறார்கள் என்கிற போட்டியே இருக்கும். உண்மையை சொல்லிவிட வேண்டுமென்றால் KJ யேசுதாஸ் SPB யை பீட் அடித்து விடுகிறார் என்றே சொல்ல வேண்டும். இருவருமே மிக அருமையாக பாடி இருக்கிறார்கள். அங்கிருந்த பாடல் வரிகளை அபப்டியே காபி பேஸ்ட் செய்திருக்கிறேன். அவசியம் பாடலைக் கேளுங்கள்.
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா
உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசை தானே துணிந்து பாடு ஹஹ மனிதா
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
நி சா கா சா நி நி சா சா சா
நி சா கா சா நி நி சா சா சா
நி சா நி சா கா கா
சா கா சா கா மா மா
கா மா கா மா பா நி
பா பா பா
மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
சா சா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
சா சா
அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது
கா கா பா பா
மா மா நி நி
பா பா சா சா
நி நி கா கா
ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை
ஆஆஆஆ...ஆஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். முருகன் படப்பாடல்கள் தொகுப்பில் கேட்டுள்ளேன். அருமையான பாடல்.
இரண்டாவது திரைப்பட பாடல் கேட்டிருக்கிறேனா என்பது நினைவுக்கு வரவில்லை. ஆனால் இப்போது கேட்டு மிகவும் ரசித்தேன்.இன்னும் ஒரு முறை கேட்கத் தூண்டும் பாடல். போட்டிப் பாடல்கள் எப்போதுமே நன்றாக இருக்கும்.
/கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை/
வரிகள் பிரமாதம். ரசித்து கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். இருவர் குரலுமே ஒன்றுக்கொன்று போட்டி போடும்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை அண்ணா...
நீக்குமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
பதிலளிநீக்குமுற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!..
__/\__
நீக்குமுருகா..
பதிலளிநீக்குமுருகா..
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
///
இதுவே எல்லோருக்கும் ஆகவேண்டும்...
எத்தனையோ முறை கேட்டிருக்கின்றேன்..
__/\__
நீக்குஇரண்டாவது பாடலை இதுவரை கேட்டதில்லை..
பதிலளிநீக்குதளபதி படத்திலும் ஒரு பாட்டு இருக்கின்றதே..
நீங்கள் சொல்வது காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடல்.
நீக்குமுதல் பாடலைக் கேட்டு, ரசித்து உருகாதவர் யார்?
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலை முதல் முறையாக்க் கேட்கின்றேன். நன்றாக இருக்கிறது.
நீங்கள் இருவரும் இரண்டாவது பாடலை இதுவரையில் கேட்டதில்லையா ?
நீக்குஇப்போது தான் கேட்கின்றேன் ஜி..
நீக்குபெரும்பாலும் நெல்லைத்தமிழன் பாடல்கள் கேட்டிருப்பது குறைவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. முதன்முறையாகக் கேட்கிறேன் என அடிக்கடி சொல்வார்... பேமஸ் ஆன பாடல்களையும் கூட.. அல்லது மறந்துபோயிடுறாரோ:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு என அம்மம்மா அடிக்கடி ஜொள்ளுவா:)))
நீக்குநன்றி நெல்லை. இரண்டாவது பாடல் ரசனையான பாடல்.
நீக்குஇந்த (இரண்டாவது) பாடல் நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லைதான் அதிரா... ஆனாலும் நெல்லை பற்றி நீங்கள் சொல்லி இருப்பதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்!
நீக்குஸ்ரீராமிற்கு தினமும் பாடல்கள் கேட்கும் வழக்கம் உண்டு (அவ்வளவு ஆர்வம் அதில்). நான் கேட்ட பாடல்கள் எல்லாமே, ஹாஸ்டலில் நான் இருந்தபோது (9-UG 1 வருடம்) கேட்டவைதான். வீட்டில் இருந்து படித்தபோது பாடல்கள் கேட்கும் வழக்கம் இல்லை. பிறகும் பாடல்கள் கேட்கும் வழக்கம் இல்லை, பக்திப் பாடல்களைத் தவிர, அதிலும் எல்லாவற்றையும் கேட்டதில்லை, பிடித்தவைகளை மாத்திரம் கேட்பேன். காரிலும் (பஹ்ரைனில்) பழைய பாடல்கள்தான் வைத்திருப்பேனே தவிர எல்லா இளையராஜா கலெக்ஷன்லாம் வைத்துக் கேட்கமாட்டேன்.
நீக்குஉண்மைதான். நான் சிறுவயதிலிருந்தே பாடல்கள் மிக அதிகம் கேட்பவன்.
நீக்குமுதல் பாடல் பிறந்தது முதல் கேட்டு ரசித்த பாடல்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் இருவருமே பயபக்தியோடு பாடியிருக்கிறார்கள். அதிலும் பாலு சற்றே பயந்தே சேட்டை செய்யாமல் பாடியிருக்கார்.
காரணம் தாஸ் முறையாக சங்கீதம் பயின்றவர், பாலு தான்தோன்றித்தனமாக பாடி வெகு காலத்திற்கு பிறகு சங்கீத வித்துவான்களிடம் சரி செய்து கொண்டவர்.
தாஸுக்கு பாடல் வரிகள் குறைவு இருப்பினும் கடைசி சரணத்தில் அவர் முடித்து வைக்கும் பொழுது அசத்தி இருப்பார் (இது அதிரா போன்ற ஞானிகளுக்கு புரியும்) இதுவொரு சாதனைப் பாடல் வரிசையில் வைக்கலாம்.
இப்படத்தின் பெயர் சிகரம் தானே... ? பாலு இசையமைத்தது...
மேலும் மலையாளி தெலுங்கை முந்தி விடும் இயல்பு குணமும் இதில் அடங்கி இருக்கிறது.
எப்படியோ இவர்கள் இருவரும் தமிழில்தான் நிறைய சாதித்தார்கள்..வந்தவர்களை எல்லாம் வாழ்வைத்து ஏமாறுவதை உணராத ஏமாளிகள் கூட்டம் தமிழர்கள் நாம்.
வேறு தமிழர்களை வரவிடாமல் இறுதி வரையிலும் சாதித்தவர் "எச்சநானி எலையராசா" (இவரது இசைக்கு என்றுமே நான் அடிமையானவன் இது வேறு) - கில்லர்ஜி
இளையராஜா பேசுவது சற்று தர்மசங்கடமாக இருந்தாலும் எனக்கு அவரை இழிவாகப் பேச வராது தேவகோட்டை ஜி. தவறாகப் பேசுகிறார் என்று அவரை குறை சொல்லி விட்டு அதே தவறை நாமும் செய்யக்கூடாது!
நீக்கு1. பலமுறை கேட்டு உள்ளேன்...
பதிலளிநீக்கு2. இருவரும் இனிமையாக பாடுகிறார்கள்...
ஆம்.
நீக்குநன்றி DD.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குமுதல் பாடல் நிறைய முறை கேட்டு இருக்கிறேன். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை.
நன்றி வெங்கட். இரண்டாவது பாடலை ரசித்தீர்களா?
நீக்குமுருகனக் கூப்பிட்டு - பாடல் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். அதுவும் முன்ன எல்லாம் முருகனைக் கும்பிட்டு என்றே முதல் வரியைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் அது கூப்பிட்டு என்று புரிந்துகொண்டேன்!!!!!!
பதிலளிநீக்குஇந்தப் பாடல்கள் எல்லாம் அதாவது நீங்கள் தனிப்பாடல்கள் என்று பகிர்பவை எல்லாம் கோயில்கள் திருவிழா என்ற சமயங்களில் அதிகம் கேட்ட பாடல்கள். அதன் பின் கேட்டது வெகு வெகு குறைவு
கீதா
கீதா
இவை எல்லாம் என் சிறு வயதில் ரேடியோவில் காலை பக்திமாலை என்று போடுவார்கள். அதில் கேட்டது!
நீக்குஸ்ரீராம், இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்...அருமையான ராகம்.
பதிலளிநீக்குதாஸ் சேட்டன் ஆலாபனை முடித்ததும் தலைவர் எடுக்கும் எடுப்பு வித்தியாசம் தெரியாமல் அப்படியே இயைந்து இணைந்து வரும்....இரண்டு பேரும் அழகா பாடியிருப்பாங்க. பல இட்ங்களில் வித்தியாசம் தெரியாமல்...
இதே போன்ற மெட்டில் வேறு ஒருபாட்டு இருக்கு ஆனால் டக்கென்று வரமாட்டேங்குது மனதில்.....பெண் குரல்?
கீதா
சுத்ததன்யாசி ராகம்...நல்ல இசை...பல வருஷங்களுக்குப் பிறகு இப்பாடலைக் கேட்கிறேன் !!! ரசித்துக் கேட்டேன்
நீக்குகீதா
இது மாதிரி பெண் குரலில் பாடும் பாடல்...? எனக்கு ஒன்றும் நினைவில்லை கீதா. சுத்ததன்யாசியா?
நீக்குஇருவரும் சேர்ந்து பாடிய பாடல்...காட்டுக்குள்ள ....ன்னு தொடங்கும் பாடல்...தளபதியில்
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அதுவும் இருக்கிறது. காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சம் இல்ல ஆடத்தான்...
நீக்குபாடல்கள் சூப்பர், கேட்க கேட்க இனிக்கும்.. எனக்கு அதென்னமோ தெரியவில்லை, கண்ணதாசன் அங்கிளும், ஜேசுதாஸ் அங்கிளும்.. இருமினாலும் பிடிக்கும் தும்மினாலௌம் பிடிக்கும்.. அது அவர்களுடைய எழுத்து, குரல் எனத் தெரியாதுவிட்டால்கூட பிடிக்கும், பின்பு தேடிப்பார்த்தால் அவர்களாக இருக்கும்... இது என்னா விசா:)தியோ:))) ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஆம் அதிரா.. நீங்கள் ஜேசு அங்கிள் ரசிகை என்று தெரியுமே... எனக்கும் ஜேசு அங்கிள் பிடிக்கும் என்றாலும் ஒரு படி கூடுதலாய் SPB!
நீக்குஜேசு அங்கிள் ரொம்பக் கோபக்காரர் என்பது தெரியுமோ? அவரது தொழிலை அவர் மிகவும் மதித்தார். கர்னாடக கச்சேரியில் யாராவது சினிமா பாடலைப் பாடச் சொன்னால் மிகவும் கோபப்பட்டு, முதல்ல இந்த ஆளை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என்று சொல்லிடுவாராம். அதே சமயம், வயதானவர்கள் (அவர் சில கோவில்களில் இலவசமாக நெடுநேரம் பாடுவார்) சில பாடல்களை விரும்பிக் கேட்டால், பொறுமையாக அவற்றைப் பாடும் குணமும் உண்டு. எஸ்பிபி பொதுவெளியில் மிக நல்ல பெயரைப் பெற்றவர். இருவருமே சூப்பர் என்பது என் எண்ணம்.
நீக்குஆம். யேசுதாஸின் கோபம் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். ஒரு புதிய இசை அமைப்பாளரிடம் கூட இந்தப் பாடலை நான் பாடமாட்டேன் என்று சொல்லி வெளியேறியதாக படித்த நினைவு. ஆனால் தேன்குரல்காரர். மகா திறமைசாலி. SPB அவரை அண்ணா என்றே அன்புடன் அழைப்பார்.
நீக்குஓ இது புதுத்தகவல், ஆனா அவரைப்பார்த்தால் பயப்படும்படியான, கோபக்கார முகம் இல்லையே.. ரொம்ம்ம்ப சாந்தமானவராக இருப்பார் எப்பவும்..
நீக்குஅது சரி நான் இப்போ திரும்படியும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஸ்ரீராம் பக்திமானாக சே சே இது வேற மான்:)) மாறிப் பாடல்கள் போடத் தொடங்கியிருக்கிறார்ர்.. ஒருவேளை அதிராவைப்போல பாதி ஞ்ஞ்ஞ்ஞாஆஆஆஆஆனியாகிட்டாரோ:)..
பதிலளிநீக்குஅது வந்து... காலை நேரங்களில் பக்தி மாலை என்று நான் கேட்ட பாடல்களும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க அதை எபப்டிக் பகிர்வது என்று யோசித்து இப்படி தொடங்கினேன்.
நீக்குஇரண்டாவது பாடல் வரிகள் செம. வரிகளையும் ரொம்ப ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குசிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
பதிலளிநீக்குமேன்மை உயர்வாகுமே//
இப்படியும் இதில் வருவதை கவனிப்போருண்டோ..
மெய்யறிவை நாடுவோரும் உண்டோ - மற்றதையெல்லாம் விட்டுவிட்டு..
முதலாவது பக்தி பாடல் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இப்பொழுதுதான் தெரியும் கேட்கிறேன்.