புதன், 14 ஜூன், 2023

வாக்கிங் செல்வதுண்டா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

CA, MS போன்ற கடினமான படிப்புகளில் சிறப்பாக தேறிய பெண்களை மணந்து கொண்டவர்கள் அவர்களை வேலைக்கு செல்லக் கூடாது என்று சொல்வது சரியா?

# பெண் பிள்ளை இருவரும் இசைந்து என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்.  பெண் வேலை பார்க்க விரும்பி, கணவன் வேண்டாம் என்றால் சிக்கல்.  போதுமான  நிதி வசதி இருப்பின் வேலைக்கு ஒருவர் போனால் போதும் என்பது என் சொந்தக் கருத்து.  வீட்டு நிர்வாகம் ஒரு முழு நேர வேலை. அதை சிறப்பாகச் செய்வது மிக நல்ல விஷயம்.

& CA, MS போன்ற கடினமான படிப்புகளில் சிறப்பாக தேறிய பெண்களை மணந்து கொண்டு அவர்களை வேலைக்கு செல்லக் கூடாது என்று சொல்லக் கூடியவர்களை அந்தப் பெண்கள் மணந்துகொள்வது சரி இல்லை. 

வாக்கிங் செல்வதுண்டா? உண்டு என்றால் எப்படிப்பட்ட நடை

அ). சாதாரண நடை

ஆ). கைகளை வீசி வீசி நடப்பது

இ). ஒரு ரவுண்டு நடக்கிறோம் என்றால் அதில் முதல் பாதியை  சாதாரணமாகவும், இரண்டாம் பாதியை வேகம் கூட்டி ஜாகிங் ஆக முடிப்பது

ஈ). எட்டு போடுவது

உ). சாதாரணமாக நடந்து விட்டு, கடைசியில் ரிவர்ஸில் நடப்பது

ஊ). ட்ரெட்மில்லில் நடப்பது

# என் வயது காரணமாக நான் மணிக்கு 3 கி மீ வேகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறேன். அவ்வளவே.

& தினமும் அரை மணி நேரம் அ + ஆ. மணிக்கு 4 km வேகம். 

மழை பெய்தால், கிளப் ஹவுஸ் ட்ரெட்மில்லில் நடப்பது. 

= = = = = = =

KGG பக்கம் : 

நான் ஆரம்பப் பாடசாலையில் படித்த காலத்தில், பள்ளிக்கூடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில், நாகை ஸ்டார் தியேட்டர். அங்கே திரையிடப்படும் நல்ல கருத்து உள்ள சில படங்கள் பார்க்க வரும் கூட்டம் குறைந்தவுடன்,   ஸ்டார் உரிமையாளர், எங்கள் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டரை வந்து பார்த்து, ஸ்கூல் பையன்களுக்கு சலுகை விலையில் படத்தை ஒருநாள் போட்டுக் காட்ட அனுமதி கொடுத்துவிடுவார். 

அப்படி ஆரம்பப் பள்ளிக் காலத்தில், நான் பார்த்த சில படங்கள், கண் திறந்தது, இரும்புத்திரை, தெய்வப்பிறவி ஆகியவை நினைவில் உள்ள படங்கள். 

கண் திறந்தது படத்தில் 'பள்ளிக்கூடம் போய் படிக்காமல் இருப்பது எவ்வளவு தீமை பயக்கும்' என்பதை விளக்கும் படம். அதில் ஒரு பாட்டு - ஒரு பையன் கழுதை மீது உட்கார்ந்துகொண்டு, " மனுஷனைப் பார்த்துட்டு உன்னையும் பார்த்தா .. " என்று பாடிச் செல்லும் பாடல். அந்தக் காலத்தில் அது ஒரு ஹிட் சாங்! காரணம் என்ன என்றால், அந்தப் பாடலில் வரும் வரிகள்! " பள்ளிக் கூடம் இல்லாத ஊருக்கு பயணம் போறேண்டா .. " 

பள்ளிக்கூடம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் பசங்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லைதானே! 

(இந்தப் பாடலை அடிக்கடி பாடிய என் இன்னொரு நண்பன் ராமன், இதை ஒரு உந்து சக்தியாகக் கொண்டு - நான்காம் வகுப்பில் பரிட்சை எழுதாமல் 'பரிட்சைகள் முடிந்துவிட்டன' என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு கும்பகோணம் - அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டான். அந்த வருடம் அவன் ஃபெயில் ஆனதற்கு இந்தப் பாடல்தான் காரணம் என்று நினைக்கிறேன்.) 

ஸ்டார் டாக்கீஸ் உரிமையாளர், ஹெட் மாஸ்டரைப் பார்த்து சலுகை அறிவித்துப் போனவுடன், பள்ளியில் உள்ள சில ஆசிரிய ஆசிரியைகள், அந்தப் படத்திற்கு டிக்கெட் தயார் செய்வார்கள். 

பரிட்சை எழுதுவதற்காக வாங்கி வைத்துள்ள சில பேப்பர்களை எடுத்துக்கொண்டு, அவைகளை 'ஒன்றரை X இரண்டு' அங்குல அளவுக்கு வெட்டி எடுத்து அடுக்குவார்கள். பிறகு அவைகள் ஒவ்வொன்றிலும் பள்ளிக் கூடத்தின் பெயர் கொண்ட நீள்  வட்ட ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்படும். ஐந்து பைசா கொடுக்கும் பையன்களுக்கு ஒரு டிக்கெட் கொடுக்கப்படும். 

வாரத்தின் இறுதி நாளில், மதியம் ஒன்றரை மணிக்கு, இந்த பெனிஃபிட் ஷோ திரையிடப்படும். பசங்களுக்கு தரை டிக்கெட். ஆசிரிய ஆசிரியைகளுக்கு (ஓ சி !) பெஞ்சு டிக்கெட். 

'கண் திறந்தது' படத்தைப் பார்க்கச் சென்ற போது, நண்பன் கோவிந்து அவனுடைய வீட்டிலிருந்து ( காபிப் பொடி விற்கும் மெல்லிய காகித பையில் போட்டு ஒரு பாதி ஜாங்கிரி கொண்டு வந்திருந்தான். 

'மனுஷனைப் பார்த்துட்டு' - பாடல் காட்சியில், பையன்கள் எல்லோரும் கையால் தாளம் போட்டு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், அவன் ஜாங்கிரி பாக்கெட் எடுத்து அதிலிருந்து அவன் கொஞ்சம் சாப்பிட்டு, எனக்கும் கொஞ்சம் கொடுத்தான். ஒரு பக்கம் பாடல் காட்சி, வாயில் இனிப்பான ஜாங்கிரி - ஆஹா சொர்க்கலோகமே அன்று எனக்கு கிடைத்தது போல இருந்தது! 

ஆனால் அந்த ஜாங்கிரித் துண்டு பிறகு ஒருநாள் எனக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை! 

(தொடரும்) 

 = = = =

அப்பாதுரை பக்கம் : 

ரெண்டே ரெண்டு

ஒரு வார டென்வர், லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம். (சில பேரு ந்யூஜெர்ஸி போறாங்க, விடுங்க). 

டென்வர்ல ரெண்டு நாள் வேலை. தினம் நல்லா நடந்தேன். இந்தப்பக்கம் மலை, அந்தப்பக்கம் வெளி, காற்று, தனிமை, ஆகா, ஒகோ, அத்புதம்.

டென்வர்லந்து எல்ஏ (சேர்த்து எழுதினா எங்கப்பா என்னைக் கூப்ட்றாப்ல இருக்கு.. எலே?) என் பெண்ணைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு டல்லஸ் திரும்பிட்டிருக்கேன். (அப்பா சேர்த்து வச்ச காசுக்கு வழக்கம் போல வேட்டு வச்சா மகள். இந்த கல்யாணம் குழந்தை எல்லாம் அதிகமா விளம்பரப்படுத்தப்பட்ட வாழ்க்கைப் பலன்கள்னு நினைக்கிறேன். இதைப்பத்தி அவும் ஆவும்  எபி வாட்சப்ல கன்னாபின்னாவென்று விவாதம் செய்ய மண்டியிட்டு தண்டனிட்டுக் கேட்டுக்குறேன்).

வழக்கமா என் விமானப்பயண அதிர்ஷ்டம் எப்படினா எனக்கு முன்னாலோ பின்னாலோ சில நேரம் விமானத்தின் பல வரிசைகளில் அடங்காபிடாரி நாலு வயசுகள் உட்கார்ந்து பயணம் முழுக்க அடாவடி கூச்சல் அழிச்சாட்டியம் செய்யும்.  இந்த முறை அப்படியில்லாமல் ப்ளேன்லயே நாலு வயசு நஹி, ஆறு வயசும்  நஹி! நஹி நஹி ரக்ஷது டுக்ரிங்க்ரனே. பயணிகள் அனைவரும் நாலாறு வயசுக்கு மேலே!  விர்ர்ரென்று வேகம் பிடித்து விமானம் தரைவிட்டு மேலெழுந்ததும் நிம்மதியா ஒரு தூக்கம் போட இமை மூடினேன். 

பத்து நிமிசம் கண்ணயர்ந்திருப்பேனா? முன் சீட்டில் சண்டை. கொஞ்சமே மேட்டர், மத்தபடி நாலெழுத்தில் தொடங்கி பனிரெண்டு எழுத்து வரை வரிசையா கொச்சைத்திட்டுகள். அட, இலவச பொழுதுபோக்குனு மத்த பயணிகளோட நானும் கவனிக்கத் தொடங்கினேன். 

மேட்டர் இதான். நடு மற்றும் ஓர சீட்காரர்கள் ஜன்னலை மூடச்சொல்ல, ஜன்னல் சீட்காரர் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தார்.

என்றேனும் ஒரு நாள் நானும் சென்னை வெயில் போல வருவேன்னு சூளுரைத்துக் கொதியோ கொதினு கொதிக்குது லாஸ் ஏஞ்சல்ஸ் வெயில். அனல் உள்ள அடிக்குது. யோவ் ஜன்னலை மூடுயானா ஜன்னல் திறப்பு தன் உரிமை பிறப்புனு இல்லாத மீசையை உருவிக்கிட்டு வெள்ளை வைரமுத்து போல சிரிக்கிறார் ஜன்னல் சீட்காரர். (வைமு பலமா சிரிச்சு பாத்திருக்கீங்களா? இல்லையா? கொடுத்து வச்சவங்க. காந்திஜியின் கண்காதுவாய் குரங்குகள்  தெரியுமா? வைமு பலமா சிரிக்கிறதை கற்பனை செய்தாலே காககு என் நினைவுக்கு வரும்). ஆனால் குரங்கறியா நடு சீட்காரரோ உடனே நாலெழுத்துல திட்ட, கூட்டணி சேர்ந்த ஓர சீட்காரர் ஐந்தெழுத்துல திட்டி ஜன்னலை மூடுயான்னாரு. ஜன்னல் சீட்காரர் விடுவாரா? ஆறெழுத்துல திட்டி போங்கடானு மறுத்தாரு. இப்படியே ஏழு எட்டு ஒன்பது எழுத்துனு மூணு பேரும் மாத்தி மாத்தி மாத்தித் திட்ட, ப்ளேன் சிப்பந்தி வந்து தடுத்தாரு. நாங்கள்ளாம் கூட்டா சேர்ந்து ப்ளேன் சிப்பந்தியைத் தடுத்து "பைசா வசூல் தாயே.. கம்னு கெட"னு அனுப்பிட்டோம்.

ஒரு கட்டத்தில் பனிரெண்டு எழுத்துக்கு மேல் திட்ட வசதியில்லைனு புரிஞ்சு ஜன்னல் சீட்காரர் தன் சுட்டு விரலையும் கட்டை விரலையும் உயர்த்தி நடு, ஓர சீட்காரர்களைச் சுடுவது போல ஜாடை செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ப்ளைட் கேபினிலிருந்து வந்த கேப்டனும் இன்னொருவரும் ஜன்னல் சீட்காரரைக் கைது செய்து பின் வரிசைக் கடைசி சீட்டில் உட்கார வைத்தனர். 

யார் அந்த இன்னொருவர்னு நியாயமான கேள்வியைக் கேட்டிங்கன்னா, அவுரு ப்ளைட் போலீசாம்.  செப்டம்பர் 11க்குப் பிறகு உலகமெங்கும் முக்கிய நகர விமானங்களில் ப்ளைட் போலீஸ் மப்டியில் பயணம் செய்வதுண்டுனு படிச்சிருந்தாலும் இப்பத்தான் நேரில் பாக்குறேன்.

ஜன்னல்காரர் அப்படியென்ன செஞ்சாரு? ப்ளைட்டில் துப்பாக்கி சுடுவது போல சைகை செய்ததே கைதுக்குக் காரணமாம். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அவருக்கு அபராதம் ஜெயில் எல்லாம் உண்டாம்!

இதுலருந்து மக்களே, என்ன தெரியுது? ப்ளேனல் போறப்ப மூணு நாலு பனிரெண்டு பதினாலு எத்தனை எழுத்துல வேணா எத்தனை வேணா திட்டுங்க, ஆனா ரெண்டே ரெண்டு விரலை வச்சு சுடுற சைகை மட்டும் காட்டாதிங்க. ஸம்ஜே?


                                                  டென்வர் ஹோட்டல் வெளி.


லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டின் மல்லிகை மதில்! இரவில் பூக்கும் மல்லிகையாம். என்ன மணம்!!

= = = = =


136 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். இறைவனுக்கு, இந்த நாள் இனிய நாளாக இருக்கணும் எனக் கட்டளை போடும் கஹ மேடம் எப்போ வருவார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.. இதோ வந்து விட்டேன். கட்டளையா? ஆமாம்.. அதிகார கட்டளையல்ல... அன்பு கட்டளை. 🙏.

      நீக்கு
    2. //கஹ// அதென்ன? பெண்களை மட்டும் கீசா, கீரா(இவருக்கு மட்டும் அக்கா அடைமொழி),பாவெ.. என்கிறீர்கள்? இப்போது கஹ வா? நடத்துங்கள். நல்ல வேளை ரஞ்சனி நாராயணன் அடிக்கடி வருவதில்லை, இல்லாவிட்டால் அவரை ரணமாக்கிவிடுவீர்கள்..:))

      நீக்கு
    3. ஐபேடில், அதிகமாக தட்டச்சு செய்யும்போது தவறுகள் வரும். அதிலும் பெயரில் தவறுகள் வந்தால், காலையிலேயே வருத்தப்படுவார்கள். ஒவ்வொன்றையும் செக் செய்துவிட்டு பப்ளிஷ் செய்வதும் தாமதமாகிறது. கஹ என்றால் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது அவருக்குப் புரியும்போது எதற்கு பெயரை நீட்டி எழுதுவானேன்? எவ்வளவு சுருக்கினாலும், கணவர் பெயரைக் குறிப்பிடாமல் நான் எழுதுவதே கிடையாது.

      நீக்கு
    4. /எவ்வளவு சுருக்கினாலும், கணவர் பெயரைக் குறிப்பிடாமல் நான் எழுதுவதே கிடையாது/

      நன்றி. நன்றி.

      நீக்கு
    5. கீரா(இவருக்கு மட்டும் அக்கா அடைமொழி//

      ஹாஹாஹாஹா பானுக்கா அது பயம்!!! மரியாதை!! அதாவது மரியாதையா என்னை வம்புக்கிழுக்கறாராம்!!!! எங்கண்ணன்!!!!

      கீதா

      நீக்கு
  2. MS கடினமான படிப்புன்னு சொல்வதே தவறு. அதுலவேற அதை CA உடன் ஒப்பீடு செய்வது மாபெரும் தவறு. மத்த எல்லாப் படிப்புகளுக்கும் CA வுக்கும் உள்ள வித்தியாசம் CA gambling போல ரிசல்டைக் கொடுக்கும். அது நேர்மையான தேர்வு என என் மனது நம்பவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதில் எதிலும் அனுபவம் இல்லை.

      நீக்கு
    2. எதிலும் சரி தவறு என்ற கண்ணோட்டம் சரியா தவறா?

      நீக்கு
    3. கண்ணோட்டம் சரி என்றால் அது தவறு.

      நீக்கு
    4. //CA gambling போல ரிசல்டைக் கொடுக்கும். அது நேர்மையான தேர்வு என என் மனது நம்பவில்லை.// வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதில் நெ.த.வுக்கு ஈடு அவர்தான். என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிரீர்கள்? தமிழ்நாடு போர்ட் எக்சாம்களில் விவஸ்தை இல்லாமல், சுண்டல் கொடுப்பதை போல் அள்ளி 600/600 போடுகிறார்களே அப்படி போட வேண்டுமா?
      சி.ஏ.வுக்கு கொஸ்டின் பேப்பர் செட் செய்த என் தோழி,"ப்ரொஃபஷனல் படிப்புகளில் எங்காவது ஒரு இடத்தில் வடி கட்ட வேண்டும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கடினம், சி.ஏ.வில் வெளிவருவது கடினமாக வைத்திருக்கிறோம். அதனால்தான் அதற்கு மதிப்பு இருக்கிறது" என்றாள். கேம்ப்லிங்க் என்பது மிகவும் மோசமான வார்த்தை.

      நீக்கு
    5. //எதிலும் சரி தவறு என்ற கண்ணோட்டம் சரியா தவறா?//நம் ஊரில் அல்லது எல்லா ஊர்களிலும் அப்படித்தானா என்று தெரியவில்லை, யார் எல்லோரையும் முட்டாள் என்று சொல்கிறாரோ அவர் பெரிய புத்திசாலியாக நினைக்கப்படுகிறார். அதனால் புகழ்பெற்றவர்களை மட்டமாக பேசி, தன்னை சட்டாம்பிள்ளையாக கருதி ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு எல்லோரையும் விமர்சிப்பவர்கள் காலம் ஓடுகிறது.

      நீக்கு
    6. எனக்கு நெ.த. பதில் சொல்லாமல் கடந்து விடுவார். :))

      நீக்கு
    7. //வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதில் நெ.த.வுக்கு ஈடு அவர்தான்.//CA படிப்புன்னா என்னன்னே தெரியாமல் இருப்பவர்கள்தான் இப்படி எழுத முடியும். CA பரீட்சை எழுதி, மார்க் எடுத்த, ஃபெயில் ஆன புண்ணியாத்மாக்களிடம் பேசிப்பாருங்கள், கொஞ்சத்துக்குக் கொஞ்சம் CA படிப்புன்னா என்ன என்று புரிந்துகொள்ளலாம். இதைப்பற்றி நீளமாக எழுதுவேன், ஆனால் உங்களுக்குப் புரியுமா என்பதில் சந்தேகம் இருப்பதால் நான் எழுதவில்லை. Question set பண்ணுவது என்பது வேறு, திருத்துவது என்பது வேறு. நீங்க, இந்தப் பரீட்சைத் தாள்கள் எப்படித் திருத்தப்படுகிறது என்பதைக் கேட்டுப்பாருங்கள், நன்றாக எடுப்போம் என்று நம்பி மிகக் குறைந்த மதிப்பெண் வந்திருந்தால் அதற்கு என்ன remedy இருக்கிறது என்பதையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, என்னிடம் கேள்வி கேளுங்கள். போற போக்கில் ஏதாவது சொல்லுவதில் என்ன பிரயோசனம் பா.வெ. மேடம்?

      நீக்கு
    8. பானுக்காவோடு பிள்ளையே சி ஏ தான். மருமகளும் சி ஏ தான்..

      கீதா

      நீக்கு
    9. /CA படிப்புன்னா என்னன்னே தெரியாமல் இருப்பவர்கள்தான் இப்படி எழுத முடியும். CA பரீட்சை எழுதி, மார்க் எடுத்த, ஃபெயில் ஆன புண்ணியாத்மாக்களிடம் பேசிப்பாருங்கள், கொஞ்சத்துக்குக் கொஞ்சம் CA படிப்புன்னா என்ன என்று புரிந்துகொள்ளலாம்./ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபொர்மேஷன் எங்கள் குடும்பத்தில் என் மகன், மருமகளையும் சேர்த்து மொத்தம் 20 சி.ஏ.க்கள். தாத்தா, பாட்டி, மாமா, அத்தை,சித்தப்பா இல்லை. அத்தனை பேரும் இளைய தலைமுறை. லயோலா கலேஜில் படிப்பிற்கு கோல்ட் மெடல் வாங்கிய என் மகன் சி.ஏ. ஃபைனலில் இரண்டு முறை தோற்றபொழுது என்னவிதமான மன உளைச்சலுக்கு ஆளானான் என்பதை உணர்ந்தவள். அதனால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் என்ன, நிறையவே புரியும்.

      நீக்கு
    10. இதைப்பற்றி நீளமாக எழுதுவேன், ஆனால் உங்களுக்குப் புரியுமா என்பதில் சந்தேகம் இருப்பதால் நான் எழுதவில்லை.//எங்கள் நட்பு வட்டாரம் முழுக்க முழுக்க சார்டர்ட் அக்கவுன்டெண்டுகள்தான். அதில் சி.ஏ. பேப்பர் திருதுபவர்களும் அடக்கம். நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருக்கலாம். எனக்கும் கொஞ்சம் தெரியும். விவாதங்கள் பண்ணும் பொழுது அந்த கருத்தை மட்டுமே விவாதிக்க வேண்டும். பர்சனலாக அட்டாக் பண்ணுவது மிகவும் தவறு. அதை கீழ்த்தரமான அரசியல்வாதிகள்தான் செய்வார்கள். நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறீர்கள் என்று கூறியதை நியாயப்படுத்தியதற்கு நன்றி.

      நீக்கு
    11. வாருங்கள் கருத்து கந்தசாமி அவர்களே.... சிஏ பற்றி நிறையவே, அதன் திருத்தும் முறைகள் பற்றி அறிந்தவன். முக்கிய இடங்களில் இருப்பவர்களையும் கொஞ்சம் தெரியும். என் கருத்தில் மாற்றமில்லை.

      நீக்கு
    12. எல்லாமே தெரிந்தவராக உங்களைக் கருதிக்கொள்வதால், ஏன் அவர் இரண்டு முறை தோல்வியுற்றார், பேப்பர் வாங்கிப் பார்த்தாரா, அதன் திருத்தும் முறை என்ன, எப்படி அவர்கள் நினைக்கும் சதவிகிதத்துக்கு பாஸ் செய்ய வைக்கிறார்கள் என்பதைச் சுருக்கமாக எழுத முடியுமா? இதில் dubious resultக்கு வாய்ப்பு உள்ளதா?

      மற்ற எந்தப் படிப்பிலும் எழுதினதுக்கு மதிப்பெண் கிடைக்கும். CAவில் அப்படிக் கிடையாது என்பதாவது தெரியுமா?

      நீக்கு
    13. இங்கு (இந்தியாவில்) மனப்பாடம் செய்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு (என்னைப் போன்றவர்களுக்கு) MS போன்ற படிப்புகள் கஷ்டம். ஏன் BSம் கஷ்டம்தான். புரிந்து படிப்பவர்களுக்கு MS கஷ்டமில்லை. அதனால்தான் மிகப் பெரும்பான்மையினர் ACCA மற்றும் வெளிநாட்டு Finance/Accounting relatedல் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். இந்தியன் சி.ஏ.வில் தேர்ச்சிபெறக் கஷ்டப்படுகிறார்கள்.

      நீக்கு
    14. மன்னிக்கவும், என்னை நான் எல்லாம் தெரிந்தவள் என்று எண்ணிக் கொள்ளவில்லை, கருத்துக்களை அள்ளி விடவும் இல்லை. எனவே நீங்கள் எனக்களித்த க.க. என்னும் பட்டத்தை உங்களுக்கே திருப்பி அனுபுகிறேன்.
      நிற்க! (தப்பில்லை உட்காரலாம்), என் கேள்வி வேறு, அதை திசை திருப்ப வேண்டாம். நல்ல வேளை ஆசிரியர்களுக்கு புரிந்து, சரியான விடை கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. கேஜிஜி சார்... படத்தின் பாடலை விடுங்க. பசங்களுக்கு பொம்பளைகள் பாடும் அராஜகத்தை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடும் உத்தேசமில்லையா? எப்போவாவது பொம்பளைகளுக்கு ஆண்கள் பாடியிருக்காங்களா? ஶ்ரீராம் வெள்ளி பதிவுக்குத் தேத்தலாமா என யோசித்துக்கொண்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதாரணங்களுடன் விளக்குக.

      நீக்கு
    2. இந்தப் பாடலே ஒரு உதாரணம்தான். ஏகப்பட்ட பாடல்கள் இருக்கின்றன. இதனால அறியப்படும் நீதி, பத்து வயசு வரை (பருவமடையும் வரைனு சொல்லலாம்) ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை. அதற்கப்புறம், பெண்ணின் குரலில் சங்கீத இனிமையும் ஆணின் குரலில் கழுதையின் கடூரமும் வர ஆரம்பிக்குதுன்னு வச்சுக்கலாமா?

      நீக்கு
    3. இந்தப் பாட்டை முதல் தடவையாக கேட்கிறேன். பார்க்கிறேன்.

      நீக்கு
    4. // ஆணின் குரலில் கழுதையின் கடூரமும் வர ஆரம்பிக்குதுன்னு வச்சுக்கலாமா?// கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!

      நீக்கு
    5. ஹல்ல்லல்லோ.... அந்த குரல் மாறும் பருவம் முடிந்ததும் குரல் நன்றாக இருக்கும். அதனால் ஆண்களுக்கு கடைசி வரை கழுதையின் கடூரக் குரல்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. மகரக்கட்டு குரலைக் கெடுக்கும், அப்போ அவங்களுக்கு நாடக வாய்ப்பு குறைந்துவிடும் என்றும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  4. அப்பன்கள் சம்பாதிச்சு இங்க போட்டுட்டுத்தானே போகப் போறான்கள். உரிமையா பொண்ணு லவட்டறதைப் பார்த்து சந்தோஷம்னா படணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர் சொத்தை பிள்ளைகள் உரிமையுடன் செலவழிப்பது சரியா?

      நீக்கு
    2. அடுத்த புதன் கேள்வியா?

      நீக்கு
    3. அப்பாதுரை சார்.... பிள்ளைகள், எதையும் கேட்காமல், தங்கள் காசை வைத்து மாத்திரம் வாழ்ந்தால், நாம் கொடுப்பதையும், வேண்டாம் என்று சொன்னால், அது நமக்கு மகிழ்வைத் தருமா? அதுக்காக, அப்பா அக்கவுண்டிலிருந்து கன்னா பின்னா என்று பசங்க செலவழிக்கவே /எடுக்கவே மாட்டாங்க. எது சரியோ அதுக்குத்தான் எடுத்துப்பாங்க. இது என் அனுபவம்.

      நீக்கு
    4. கண்டிப்பா சந்தோசம் தராது. பிள்ளைகள் நம்மை விட நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரும்ப வேண்டும். ஆனால் நாம் நடந்த பாதைகளின் கடினம் புரியாமல் இருந்தால் அவர்களும் அதே பாதையில் ஒரு நாள் போகக் கூடும் என்ற அச்சம் தான்.

      நீக்கு
  5. பெங்களூர் கேடர்ர்களுக்கு ஜாங்கிரின்னா என்னன்னு யாரேனும் கத்துத்தரணும், உபியில் செய்யும் கூடு, ஜீரா தோய்த்தல் அல்ல என்று யார்தான் சொல்லப்போகிறார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூர் ஜிலேபி நன்றாக இருக்குமா? இரண்டு முறை தெருமுனை பேக்கரிகளில் ஜிலேபி டீ சாப்பிட்டிருக்கிறேன். சென்னை சவுகார்பெட்டில் ஒரு முறை சாப்பிட்டிருக்கிறேன். ஒப்பிட முடியவில்லை.

      நீக்கு
    2. மார்வாரி கடைகளில் ஜிலேபி எப்போதுமே நன்றாக இருக்கும் (பெங்களூரில் தெருக்கடைகளிலெல்லாம் பொரித்த பண்டங்கள் சாப்பிட்டால், எண்ணெய் பாமாயில், பலமுறை உபயோகித்தது. ஜாக்கிரதை). ஜாங்கிரி/மதராஸ் ஜிலேபி சிலர்தான் நன்றாகச் செய்வார்கள். சாப்பிட்டுப் பார்த்துதான் சொல்லமுடியும். (உதாரணமா பஹ்ரைன்ல கௌரிகிருஷ்ணா ஹோட்டலில் ரொம்ப நல்லா செய்வாங்க).

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. கௌதம் ஜி அவர்களது மலரும் நினைவுகள் அருமை..

    இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை அவர்களது பக்கம் கலக்கல்..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. மல்லிகை மதில்.. ஆஹா !

    ..காலையில் மலரும் தாமரைப்பூ - அந்தி
    கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ..
    இரவில் மலரும் அல்லிப்பூ - அவள்
    என்றும் மணக்கும் முல்லைப்பூ..

    பாட்டு ஞாபகம் வந்ததா... இல்லயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அவள், எவள் னு சொன்னா நல்லா இருக்கும்.

      நீக்கு
    2. எம்ஜிஆர் பட பாட்டு. கட்டி தாக்கம் வெட்டி எடுத்து... இப்ப ஞாபகம் வருது.

      நீக்கு
    3. கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
      காதல் என்னும் சாறு பிழிந்து
      தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா - அவள்
      தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா..!

      நீக்கு
  12. ஆடியோ வராத பாடல், கேட்க படுசுகமாக இருக்கு..

    பதிலளிநீக்கு
  13. பெத்த படிப்பு படிச்ச பெண்கள்அவர்களாகவே துணையை தேடிக் கொள்வார்கள். ஒத்துப் போகவில்லை என்றால் விவாக ரத்து தான்.

    //அப்பா சேர்த்து வச்ச காசுக்கு வழக்கம் போல வேட்டு வச்சா மகள்// அப்போ துரை சேர்த்து வைச்சக் காசுக்கு வேட்டு வைப்பது மகனா?

    என்னுடைய பள்ளிக் காலத்தில் பள்ளியிலேயே மாதத்தில் வெண் திரையில் சினிமா போடுவார்கள் அப்படி நான் பார்த்த ஒரு படம் ஏழை படும் பாடு . நாகையா நடித்தது

    மல்லிகை வேலி அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //மெத்தப் படித்த பெண்கள்// - என்னமாதிரியான கருத்து? படிச்ச பெண்களுக்கு கணவனைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது. படிக்காத (மெத்தப) பெண்களுக்கு, பெற்றோர் கணவனைத் தேர்ந்தெடுப்பதால் நல்லா இருப்பாங்க.... இதைப் படித்து ஒரு பெண்ணும் இங்க பொங்கக் காணோம்?

      நீக்கு
    3. மெத்த படிப்பு இல்ல. பெத்த படிப்பு பெத்த என்றால் பெரிய்ய என்று அர்த்தம்.

      நீக்கு
    4. //அப்போ துரை சேர்த்து வைச்சக் காசுக்கு வேட்டு வைப்பது மகனா?//
      ஷ்! மெதுவா. பையன் காதுல விழுந்துடப் போகுது.

      நீக்கு
    5. மெத்த-அதிகமான, பெத்த-தெலுங்கில் பெரிய.

      நீக்கு
  14. மாதத்தில் என்பதை மைதானத்தில் என்று திருத்திக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  15. இரவில் பூக்கும் மல்லிகை மணத்திற்கு பெண் பேய்கள் வருமே... அப்பாத்துரை சார் அந்த அனுபவங்களை விளக்குவாரா? பேய்கள் வந்தால் அந்த இடம் சலீர்னு குளிர ஆரம்பிக்கும், மல்லிகை மணம் வரும் என்றெல்லாம் படித்திருக்கிறேனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன புதுசா இருக்குதே? எனக்கு தெரியாத பேயா?

      நீக்கு
    2. // பேய்கள் வந்தால் அந்த இடம் சலீர்னு குளிர ஆரம்பிக்கும், மல்லிகை மணம் வரும் என்றெல்லாம் படித்திருக்கிறேனே// அது சந்திரமுகி படத்தில் ரஜனி சொன்னது அல்லவோ!

      நீக்கு
    3. இல்லை.... எண்டமூரி நாவல்களில் படித்துத் தெரிந்துகொண்டது.

      நீக்கு
    4. நெல்லை சொல்றாப்ல நடு ராத்திரில புகை, கொலுசு சத்தம், ஊதுபத்தி வாசம், சில்லுன்னு காத்து, மல்லிகை மணம், பாட்டு, ஜில்லீர் னு ஏதாச்சும் தானா விழுந்து உடையற சத்தம் எல்லாம் கேட்டா அது பேயேதான்!!!!!!!!!!!!!!!! பேய்க்கான இலக்கணம், அது ஜி!!! (அது - அப்பா துரை ஜி!!)

      கீதா

      நீக்கு
    5. யுக்ரெயினில் உலவும் ஆவிகள் பற்றி அடிக்கடி க்ரோயேஷியா சென்று வரும் நண்பர் நிறைய சொல்வார். அந்தப் பக்கம் போகும் விமானங்களில் திடீரென்று அமானுஷ்ய சலனங்கள் எதிர்பார்க்கலாம் என்கிறார்.

      நீக்கு
  16. CA, MS போன்ற கடினமான படிப்புகளில் சிறப்பாக தேறிய பெண்கள், கணவனை வேலைக்கு அனுப்பக் கூடாது - (சிங்கம் போல !)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //CA, MS போன்ற கடினமான படிப்புகளில் சிறப்பாக தேறிய பெண்கள், கணவனை வேலைக்கு அனுப்பக் கூடாது - (சிங்கம் போல !)// நம் நாட்டில்தான் ஆண்தன் வேலைக்குச் செல்ல வேண்டும், பெண் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நியதி. வெளிநாடுகளில் யார் வேண்டுமானலும் ப்ரட் வின்னராக இருக்கலாம். நம் நாட்டில் கூட அப்படி வரலாம். ஆதி காலத்தில் பெண்தான் ப்ரட் வின்னராக இருந்தாளாம்.சைக்கியாட்ரிஸ்ட் ஷாலினியின் கூற்று இது.

      நீக்கு
    2. //கணவனை வேலைக்கு அனுப்பக் கூடாது // திண்டுக்கல் தனபாலன், ஆணினத்துக்கே எதிரியாகிட்டாரே..... வீட்டு வேலைதான் மிகக் கடினமானது. அலுவலக வேலை மிக சுலபமானது (comparitively). அலுவலக வேலைக்கு மாதம் சம்பளம், மற்ற benefits, விடுமுறை, LTC, மருத்துவக் காப்பீடு என்று பல உண்டு. வீட்டு வேலைக்கு, திட்டு மாத்திரம்தான் கிடைக்கும், அவங்களுக்கான போனஸ், எல்லாப் பயலுவளும் கிளம்பிப் போனபிறகு, கிடைத்த நேரத்தில் சீரியல் அல்லது மற்ற நிகழ்ச்சிகள் பார்க்கலாம். அவ்ளோதான்.

      நீக்கு
  17. எட்டு போடுவது, பின் பக்கமாக நடப்பது, ஒரு கால் விட்டு ஒரு கால் உயரத் தூக்கி வைத்து நடப்பது.. நிறைய கிராக்கு நடைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர், ஒவ்வொரு அடிக்கும் இரண்டு கைகளையும் உயரத் தூக்கி உதர்றாங்க. என்ன என்னவோ கூத்து. அது சரி.... பின் பக்கமாக நடப்பதால் என்ன பிரயோசனம்?

      நீக்கு
    2. பின் பக்கமாக நடப்பது மூளைக்கு பயிற்சி என்று எங்கோ படித்தேன்.

      நீக்கு
    3. தில்லுமுல்லு படத்தில்

      தேங்காய்: வெண்டைக்காயை சாப்பிடு, சாப்பிட்டா மூளை வளரும்.
      மாதவி: அப்ப மூளை இல்லாதவங்க சாப்பிடட்டும்.

      நீக்கு
  18. திரு.அப்பாதுரை அவர்கள் பக்கம் ரசனை.

    நடைப்பயிற்சி சிறந்தது.

    மல்லிகை மதில் சூப்பர்.
    மல்லிகை பேய் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரையின் கட்டுரையை படித்ததும், நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. முதல் முறையாக வெளிநாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று நியூயார்க்கை அடைந்த ஒரு பையன் சும்மா இருக்காமல் ஆர்வக் கோளாரினால், அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சென்று, அவர் வைத்திருந்த துப்பாக்கியை சுட்டிக் காட்டி, "இது என்ன மேக்?" என்று கேட்டிருக்கிறான்(ரொம்ப அவசியம்) அவ்வளவுதான்.. அவனை குண்டு கட்டாக கட்டி, உள்ளே தள்ளி, அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான்? என்று இரண்டு நாட்கள் குடைந்தெடுத்து, அவன் ஆன் சைட்டில் வந்திருப்பதாக கூறியதை நம்பாமல், அந்த கம்பெனியிலும் விசாரித்து, இந்திய அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்து, நம்முடைய உளவுத்துறை சென்னையில் இருக்கும் அந்த அதிகப் பிரஸங்கியின் வீட்டில் வந்து விசாரணை நடத்தி, கடைசியில் அவனை டீ போர்ட் பண்ணி அனுப்பி விட்டார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்போ அப்போ போட்டோ எடுக்கும் இயல்புடையவன். பஹ்ரைன் ஏர்போர்ட்டில் ஒரு தடவை, அரசரின் ப்ளேன் இது என்று தூர ரன்வேயில் செல்ல ஆரம்பித்த ப்ளேனைப் பார்த்து ஒருவர் சொல்ல, அந்தப் பக்கம் என் மொபைலைத் திருப்பினேன். அங்கே கூட்டத்தில் இருந்த ஒருவர், போட்டோ எடுக்கக்கூடாது என்று உடனே வந்துவிட்டார் (பிறகுதான் தெரிந்தது அவர் ரகசிய போலீஸ் என்று). அதுபோல ஓமானில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, பாதையிலிருந்து கடலை நோக்கிப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். காரில் ஏறிச் செல்ல ஆரம்பித்தபோது பின்னால் சைரன் ஒலியுடன் போலீஸ் வண்டி வந்தது. அதிலிருந்த காவலர், காரை நிறுத்தச் சொல்லி, எதைப் புகைப்படம் எடுத்தீர்கள் என்று கேட்க, நான், கடலின் அழகு, அதிலிருந்த பாறை ஆகியவற்றை எடுத்தேன் என்று காண்பிக்க, அவர், அந்தப் பக்கத்தில்தான் இராணுவ முகாம் ஒன்று இருக்கிறது, அதனால்தான் உடனே சோதனை செய்ய வந்தோம் என்று பவ்யமாகச் சொன்னார். பஹ்ரைன் வந்த புதிதில், ஒரு பில்டிங் அருகிலிருந்த ரோடை புகைப்படம் எடுத்தபோது, உடனே பில்டிங்கிலிருந்து அமெரிக்கன் செக்யூரிட்டி வந்து காமராவை close செய்து அதிலிருந்த புகைப்படச் சுருளை எடுத்துக்கொண்டு சென்றார். இரண்டு நாட்கள் கழித்து, டெவலப் செய்த படங்களோடு ஒரு கவரில் வைத்து என்னிடம் கொடுத்தார். அவர் சந்தேகம், நான் அமெரிக்க ராணுவ வீரர்களைப் படம் எடுத்துவிட்டேனோ என்று.

      நீக்கு
    2. விமான நிலையங்கள் பொதுக்கூட்ட இடங்கள் தேர்தல் வாக்கு சாவடிகள் போன்ற இடங்களில் விளையாட்டுக்காகக் கூட துப்பாக்கி வெடிகுண்டு போன்ற வார்த்தைகள் சைகைகள் படங்கள் பயன் படுத்தக்கூடாது. we live in a constantly anxious and jittery world.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    நல்ல படிப்பைப் பற்றிய அலசல்கள் (கருத்துரைகளிலும்) நன்றாக இருந்தது.

    நடைப்பயிற்சி நல்லது. ஆனால் எப்போதுமே முறையாக செய்ய இயலவில்லை.

    உங்கள் பக்கம் ஸ்வாரஸ்யமாக உள்ளது. அந்த பாடலும், படத்தின் பெயரும் இப்போதுதான் கேட்கிறேன். உங்கள் நண்பர் கோவிந்து தந்த அந்த ஜாங்கிரி துண்டின் விளைவு என்னவாயிற்றோ என படிக்கும் போது கவலையாக இருந்தது.

    சகோதரர் அப்பாத்துரை பக்கமும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. வாசம் மிகுந்த மல்லிகை மலர்கள் படம் நன்றாக உள்ளது. இதை காட்டு மல்லி என்போம். மாலையில் மலர்ந்து இரவில் மணந்து காலையில் வாடி உதிர்ந்து விடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. காளி கோயிலில் இரவு ஒன்பது மணியில் இருந்து விடியற்காலை நான்கு மணி வரை வேறொருவருடன் இருந்திருக்கின்றேன்..

    அதனால் அவ்விடத்திற்கு பேய்கள் மோகினிகள் வருவதற்கு இயலாமல் போனது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்கள் ஓகே.. மோகினிகள் ஏன் வருவதில்லை?

      நீக்கு
    2. ரொம்ப நாட்கள் கழிச்சுப் பேய்கள், பிசாசுகள், மோகினிகள் வராங்களேனு சந்தோஷப்பட்டால் நம்ம தம்பி துரை காளி கோயிலில் வரலைனு சொல்லிட்டு இருக்கார்! என்ன போங்க! ஒரு பேயையாவது பார்க்கணும்னு நினைச்சால்!

      நீக்கு
  22. CA, MS போன்ற கடினமான படிப்புகளில் சிறப்பாக தேறிய பெண்களை மணந்து கொண்டவர்கள் அவர்களை வேலைக்கு செல்லக் கூடாது என்று சொல்வது சரியா?//

    கண்டிப்பாகச் சரியில்லை. இன்னும் கடினமான படிப்புகள் இருக்கின்றனவே.....எனவே பெண்கள் கல்யாணத்துக்கு முன்னரே இதை எல்லாம் பேசி, தெளிவு படுத்திக் கொண்டுவிட வேண்டும். பையனிடமும் சரி அவன் பெற்றோரிடமும்....பின்னாடி வார்த்தை மாறக் கூடாது என்பது உட்பட....இது நல்லது என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்புனாலே கடினம் தாங்க.. எந்த படிப்பா இருந்தா என்ன?
      இந்த கழுத்தை சவாரி பாட்டை சின்ன வயசுல பாக்காம போயிட்டனேன்னு நினைச்சா..

      நீக்கு
    2. நன்றி கீதா! கேள்வியை புரிந்து கொண்டு, அதை மடை மாற்றாமல் பதில் கூரியதற்கு நன்றி.

      நீக்கு
  23. கௌ அண்ணா, ஜாங்கிரி பழசோ? அல்லது பொரித்த எண்ணை நல்லதாக இருந்திருக்காது....சரியாகப் பொரிக்காமல் ஜீராவில் போட்டு ஜீரா பூத்திருந்தால் அதில் ஃபங்கஸ் இருப்பதும் தெரியாது....அதுவும் காரணமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஹ்ரைன் உபி (உத்தர் பிரதேஷ்) கடைக்காரங்க, கூடு மாத்திரம் மூட்டை மூட்டையாச் செய்து மேல போட்டு வச்சிருப்பாங்க. அன்னன்னைக்கு 2 கிலோ கூடு எடுத்து, ஜீரா காய்ச்சி அதில் போட்டு எடுத்து விற்பனைக்கு வைப்பாங்க. இதுபோல பல தீபாவளி அல்லது விசேஷ இனிப்புகளுக்குச் செய்வாங்க. நான் இவற்றைப் பார்த்திருப்பதால், இந்த மாதிரி தெக்கினிக்கெல்லாம் எனக்குச் சொல்லியிருக்காங்க. சாப்பிடும்போதே தெரியும். சென்னையில் ஓரளவு புதுசா இருக்கும்.

      நீக்கு
  24. படங்கல் இரண்டும் செம....தூரத்தில் தெரியும் பனி மூடிய மலை உச்சிகள், இரவு மல்லிகைச் சுவர்!!! செம

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பாட்டு இப்பதான் முதல் தடவையாகக்கேட்கிறேன்...கழுதையில் வருவது - கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை, கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்ற அர்த்ததிலோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  26. வர வர உங்களைக் கேள்வி கேட்க யாருமே இல்லாமல் போயிட்டாங்க போல! :)

    பதிலளிநீக்கு
  27. கேஜிஜியின் அனுப்வங்கள் சுவாரசியம். ஜிலேபித்துண்டு செய்த வேலையை என்னவெனத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன்.
    மல்லிகைப் புதர் வேலி அருமையாக உள்ளது. அப்பாதுரையின் மகள் தன் அப்பாவின் சொத்தைத்தானே செலவு செய்கிறார்? அதனால் என்ன? பூட்டி வைச்சு என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு சம்பாதிப்பது சேமிப்பது எல்லாம் அனுபவிக்கத்தான். கட்டிக்கொண்டு போக மாட்டோம் தான். நாம் செலவழிக்கும் அளவில் கொஞ்சமாவது வசதியில்லாத பிறருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் சிக்கனமா தேவைக்கேற்ப வரவு பார்த்து செலவு செய்யணும்னு சொல்றேன். நான் வளரும் போது அவசியத்துக்கே செலவு செய்ய முடியவில்லை. இப்போ அனாவசியமா செலவு செய்வதைக் கேட்டா "உனக்கு அனாவசியம் எனக்கு அவசியம்.. சும்மா பள்ளிக்கூடத்துக்கு ஒரு மைல் நடந்து போனேன், தினம் தயிர் சாதம் தான்னு அதையே பாடிக்கிட்டு இருக்காதே"ன்றாங்க. ஒரு வேளை என் பார்வையில் தான் பிசகோ என்னவோ?! :-)

      நீக்கு
    2. சரிதான், எங்க பெண்ணும் அப்படித்தான் சொல்லுவா/சொல்கிறாள். ஆனாலும் பெற்றவர்கள் காசைப் பிள்ளைகள் செலவு செய்யும்போது நமக்கு எந்தவிதமான மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஆனால் பிள்ளைகள் சம்பாதித்த காசை அதைப் போல் நாம் செலவழிக்க முடியுமா?(அடுத்த புதனுக்குக் கூட இதையும் வைச்சுக்கலாம்.)

      நீக்கு
    3. அந்தக் காலத்தையும் பார்த்து, இந்தக் காலத்தையும் பார்ப்பவர்களுக்கு வேற்றுமை தெரியும். இந்தக் காலத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு அந்தக் காலத்தை visualise செய்வது கஷ்டம்.

      நீக்கு
    4. பிள்ளைகள் காசை பெற்றோர் தொடாமல் இருந்தால் தான் பெற்றோருக்கு மதிப்பு.

      நீக்கு
  28. பெரிய படிப்பு, அதாவது பெத்த படிப்புப் படித்தாலும் வீட்டைக்கவனிக்கும் பெண்களையும் பார்த்திருக்கேன். ஒரு சிலர் வேலைக்கும் போகின்றனர். வீட்டையும் கவனிக்கின்றனர். என்னோட உ.பி.ச. திரு தி,வா அவர்களின் மனைவி மகளிர் மருத்துவத்தில் வல்லுநர். சொந்தமாக நர்சிங் ஹோம் வைச்சிருக்காங்க. ஆனாலும் வீட்டில் அவங்க மேற்பார்வையில் தான் சமையல், பலகாரங்கள் எல்லாம். அதே நேரம் தி.வா. அக்னொ ஹோத்ரி என்பதால் தினமும் அதற்கு மடியாக உதவி செய்வதோடு அவர் ஊரில் இல்லாத நாட்களில் அவருக்குப் பதிலாக இவர் செய்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்னி ஹோத்ரி தி.வா.வும் ஒரு மருத்துவர். மயக்க மருந்து நிபுணர்.

      நீக்கு
  29. இப்படி எத்தனையோ நபர்களைச் சொல்லலாம். நம்ம ரேவதியின் மகளும் ஒரு சி.ஏ. தான். வீட்டையும் குழந்தைகளையும் கணவரையும் கவனித்துக்கொண்டு அவரும் வேலைக்குச் செல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து விட்டு வேலைக்குச் செல்பவர்களைப் பற்றி பேச்சில்லை, கஷ்டமான படிப்பை முடித்த பெண்களை மணந்து கொண்டு, அவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது சரியா? என்பதுதான் கேள்வி. அதை ஆசிரியர்களும், கீதா ரங்கனும், சரியாக புரிந்து கொண்டு பதில் சொல்லியிருக்கிறார்கள்.

      நீக்கு
    2. பானுமதி கேட்ட கேள்விக்கு விடை/ அது கணவன், மனைவி இருவரையும் பொறுத்தது. இருவருமே பல விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டி இருக்கும். ஆகவே அவர்கள் இருவருமாகச் சேர்ந்து முடிவெடுக்கணும். மற்றவர் தலையீடு பிரச்னையில் தான் முடியும். நல்ல படிப்புப் படித்த பெண் வேலைக்குச் செல்ல இஷ்டமில்லை எனில் அது அவள் சொந்த விருப்பத்தின்பால் ஏற்பட வேண்டும். மற்றவர் வற்புறுத்தக் கூடாது.

      நீக்கு
  30. கீதா அக்காவை எங்கே காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ வரணுமோ அப்போ வருவேன். ஹாஹாஹா! ஆனால் கட்டாயமாய் வந்துடுவேன்.

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr where is my answer to this question?

      நீக்கு
    3. Geetha Sambasivam "வாக்கிங் செல்வதுண்டா? ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      எப்போ வரணுமோ அப்போ வருவேன். ஹாஹாஹா! ஆனால் கட்டாயமாய் வந்துடுவேன்.

      பேயோ, பிசாசோ தூக்கிட்டுப் போயிருக்குப் போல! இழுத்துட்டு வந்திருக்கேன்.

      நீக்கு
  31. எங்க பெண் பத்துப்பனிரண்டு வருடங்கள் முன்னால் மெம்பிஸில் இருக்கையில் சில காலம் வேலைக்குப் போனாள். அப்பு பிறந்தப்புறமா விட்டுட்டா. இப்போ அப்புவுக்குப் பதினைந்து வயது ஆகி விட்டது என்பதால் மறுபடி போகிறாள். மருமகள் ஓர் எம்.எஸ். டிஸ்டிங்க்ஷனில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றாள். சில காலம் வேலைக்குப் போனதும் அடுத்தடுத்த கருச்சிதைவுகளால் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி ஆச்சு. குஞ்சுலு பிறந்ததும் சில மாதங்கள் வேலைக்குப் போனதோடு சரி. பின்னர் வேலையை விட்டு விட்டாள். இப்போது நைஜீரியாவில் போகவே முடியாது.

    பதிலளிநீக்கு
  32. 1.ஒரு சிலர் குரலே சப்தமாக இருக்கும். உதாரணம் நானே தான். ஆனால் சத்தமாகப் பேசினால் சண்டை என நினைக்கிறாங்களே! சண்டை போடலைனாலும் புரிஞ்சுக்கறதே இல்லை. குரலைக் குறைத்துக்கொண்டு பேசவும் வரலை! என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
  33. முதியோர் இல்லம் வேறே! பென்ஷன் வாங்கும் ஆசாமிகள் தங்கும் ஹோம்கள் வேறே என்கின்றனர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
  34. பெண்களூர் வாசிகளுக்கு ஒரு கோரிக்கை. அங்கே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நடைபெற்று வரும் சீனியர் சிடிசன்ஸ் ஹோம் சிறப்பாக நடக்கிறதா?

    வீட்டில் இருக்கும் சுதந்திரம், நினைத்ததைச் செய்து கொள்ளும் சுதந்திரம், இம்மாதிரி ஹோம்களில் கிடைக்குமா? வீட்டில் எனில் நினைச்ச நேரம் காஃபி குடிச்சுக்கலாம், ஏதானும் பண்ணிக்கலாம். ஹோமில் அப்படி முடியுமா?

    இப்போ எங்கே பார்த்தாலும் இந்த ஹோம்கள் பற்றிய விளம்பரங்களே! அனைத்திற்கும் சென்று தங்க மக்கள் இருக்கின்றனரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு அனுபவம் இல்லை. மற்ற பெங்களூர்வாசிகள் விவரம் தெரிந்தால், பதியவும்.

      நீக்கு
    2. நகரங்களில் நிறைய பேர் முதியோர் இல்லத்தில் இருக்க விரும்புகிறார்கள் என்று அடிக்கடி படிக்கிறேன். என் உறவு நட்பு வட்டத்தில் இது சாதாரணமாகி விட்டது.
      முதியோர் இல்லம் சென்றால் சொந்த வீட்டு சுதந்திரங்களை மறப்பது நல்லது. முதியோர் இல்லம் போவது சுதந்திரமாக இருக்க அல்ல என்றே நினைக்கிறேன்.. (சுதந்திரத்தை இழக்கவும் அல்ல). வீட்டு வேலை மற்றும் பிற சுமைகளை நம் முதுமை தாங்காதிருக்க ஒரு ஏற்பாடு. கண்ணியம் குறையாமல் யாருக்கும் சுமையாகவும் இராமல் காலம் கழிக்க ஒரு வசதி.

      நீக்கு
    3. பெரும்பான்மையான முதியோர் இல்லங்களில் சாப்பாடு பிரச்சனையாக இருக்கிறது. ஏனென்றால் நல்ல சமையல்காரர்கள் கிடைப்பது கடினம். மேலும் பெரும்பான்மையான ஓல்ட் ஏஜ் ஹோம்களில் நடையுடையாக இருந்தால்தான் வைத்துக் கொள்வார்கள். ஃபுல்லி டிபெண்டெண்ட் என்றால் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு + தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!