வெள்ளி, 23 ஜூன், 2023

வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ

நெல்லை மற்றும் கமலா அக்கா விருப்பத்துக்கிணங்க இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் தனிப்பாடலாய்.  உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு புகழேந்தி இசை.

செல்வ முத்துக் குமரன் அவன்தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் ( செல்வ … )

உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன்
என் உயிரில் கலந்தக் கந்தன் குகன்
(செல்வ … )

புள்ளிருக்கும் வேளூரில் பசும் பொன்னும் மணியும் போர்த்திருப்பான் (2)
வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய் வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய்
சுடர் வண்ணம் மின்ன வீற்றிருப்பான் (2)
(செல்வ … )
(உள்ளம் … )
(செல்வ … )

விழிக்கும் மொழிக்கும் விளங்கு துணை அவன் வேலும் மயிலும் நாளும் துணை (2)
களிக்கும் நெஞ்சில் காட்சி துணை களிக்கும் நெஞ்சில் காட்சி துணை 

கந்தன் கருணை என்றும் வாழ்வின் துணை

===============================================================

பிரபலங்கள் இணைந்தால் படம் வெற்றி பெறும் என்பதெல்லாம் பொய் என்பதை நிரூபித்த படம் ஆகாய கங்கை.  சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் முதல் படம்.  அவர்தான் படத்தின் இயக்குனர்.  மணிவண்ணன் கதை வசனம்.  கார்த்திக், சுஹாசினி, உஷா ராஜேந்தர், கவுண்ட்டமணி  எல்லாம் நடித்திருந்தனர்.  எழுதியவர் மணிவண்ணன்.  சினிமாட்டோகிராஃபி ராபர்ட் ராஜசேகர்.  இளையராஜா இசை.  எனினும் படம் ஊற்றிக் கொண்டது.  மனோபாலாவின் அதிருஷ்டம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் வர,  'பிள்ளை நிலா' படத்தில் வெற்றி பெற்றார்!

இன்று  அந்த 'ஆகாய கங்கை' படத்தின் ஒரே நல்ல பாடலான 'தேனருவியில் நனைந்திடும் மலரோ' பாடல் இடம்பெறுகிறது.  

மு மேத்தாவின் பாடலுக்கு இளையராஜா இசை.  எஸ் பி பாலசுப்ரமணியம்- எஸ். ஜானகி குரலில்.  பாடல் முழுக்க SPB கலக்கி இருந்தாலும் குறிப்பாக சரணங்களில் புகுந்து விளையாடி இருப்பார்.  'ஏன் தொலைவோ, நீ நிலவோ'என்னும்போது குரலில் வழியும் ஏக்கம்...  'தனிமை, கொடுமை எனதுயிர் அழைத்திட' எனும்போது தெறிக்கும் தாபம்...  வா..வ் SPB ​

இளையராஜா இது மாதிரி பாடல்களில் தூள் கிளப்பி விடுவார்.  நிறைய பாடல்கள் அவர் இசையில் இந்த வகையில் சொல்லலாம்.  எல்லாம் பெருவெற்றி பெற்றவை.

தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர நன

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..

முக வாசல் மீது தீபம் இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம் ம் ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்.. இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற

தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

திர ந திர நா..
திர நா...திர நா
திர நா.. நா...நா திர நன
தீம் திராஅ நன திர ந தீம் திர நாஆ

ப ரி நி ரி ச
நி த நி ப
க ம ப நி த நி
ப நி த ப

க ம ப நி நி
ஆ ஆ...
ம ப நி நி
ஆ...ஆ
ப நி ச ரி ரி
ஆ ஆ.
நி ச க த த

ப நி ச ரி ரி
நி ரி ச நி ட ச நி ட
க ம ப ம ம க ம ப ம ம
க ம க ம

ஆ....ஆஓ...

நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

32 கருத்துகள்:

 1. முதல் பாடல் பல முறைகள் கேட்டு ரசித்தது.

  இரண்டாவது பாடலும் கேட்டு ரசித்த நல்ல பாடலே...

  //சமீபத்தில் மறைந்த//
  என்று வரவேண்டும்

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. ​/// செல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன்..///

  இனிமையான பாடலைப் பதிவு செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 5. ஆ.க. - இராஜபாளையத்தில் பார்த்த படம் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. இரண்டு பாடல்களுமே மிக இனிமை.

  சீர்காழியின் பண்பு நினைவுக்கு வருது. இசைத் துறையில் முன்னேற நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பார்.

  கார்த்திக் மேக்கப்... அவர் ஆண் பாத்திரம்தானே அந்தப் படத்தில்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா..   அப்படித்தான் இருக்கும்.  யார் படம் பார்த்தார்?

   நீக்கு
 7. இரண்டு பாடல்களும் கேட்ட பாடல்கள் என்றாலும் முதலாவது நிறைய முறை கேட்டு ரசித்த பாடல்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வில் முதல் பாடல் மிக அருமையானது. சீர்காழி அவர்களின் முருகன் பாடல்கள் பிரிவில் அப்போதெல்லாம் தினமும் கேட்பது. அதனால் அந்த கேசட் முழுவதுமே மனனம் ஆனது. இப்போதும் கேட்டு ரசித்தேன். எனக்காக இந்த பாடலை இன்று இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

  இரண்டாவது பாடலையும் விபரங்களையும், கேட்டு ப் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடலை ரசித்ததற்கு நன்றி. இரண்டாவது பாடல் எப்படி இருந்தது?

   நீக்கு
 9. முதல் பாடல் அழகான அருமையான பாடல்..கேட்கும் போதே நடனமாட வைக்கும் முதல் வரிகள்...

  ரசித்த பாடல்...இப்பவும் ரசித்துக் கேட்டேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 10. சீர்காழி பாடிக்கேட்காமல் இருக்க முடியுமா? இரண்டாவது படமும் தெரியலை. பாடலும்/ இப்போக் கேட்க முடியாது. மாமா தூங்கறார். சாயங்காலமாய்க் கேட்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டீர்களா?!!  நான் இன்று காணொலியை முழுமையாகக் கேட்டபோதுதான் முதல் சரணத்துக்கு முன் டேப் இழுப்பது போல பாடல் சுருதி மாறி இழுக்கிறது என்று பார்த்தேன்.

   நீக்கு
 11. மனோபாலா, பாரதிராஜாவின் சிஷ்யரோ? ஷாட் கொஞ்சம் அவர் வைப்பது போலவும் சிலது பாலச்சந்தர் வைப்பது போலவும் வைத்திருக்கிறார்.

  பாடல் கேட்பது இதுதான் முதல் தடவை ஸ்ரீராம். இப்படி ஒரு படம் வந்ததும் தெரியவில்லை.

  எஸ்பிபி அழகு கலக்கல்...பல இடங்களில் அவரது வழக்கமான உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள்

  யுட்யூப் பாடல் ...டையில் முதல் சரணம் வரும் போது ஏதோ விலகுவது போல்....

  தொடக்கம் முதல் சரணம் சுத்ததன்யாசி அதன் பின் இடையில் பாகேஸ்வரி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்தான். புதிய வார்ப்புகள் படத்தில் வரும் "தம் தன தம் தன தாளம் வரும்" பாடல் உருவாக இவரும் ஒரு காரணம். அந்தப் பாடலில் அவரோகணமே கிடையாது. இளையராஜா கொடுத்த எந்த ட்யூனும் பாரதிராஜாவுக்குப் பிடிக்கவில்லையாம். "என்னதான் உன் டைரக்டர் எதிர்பார்க்கிறார்" என்ற இளையராஜாவுக்கு மனோபாலா பதில் "அயிகிரி நந்தினி மாதிரி ஏதோ எதிர்பார்க்கிறார்". Rest is history!

   நீக்கு
  2. புதிய வார்ப்புகள் பாடல் ஷண்முகப்ரியா என்று நினைக்கின்.  இது சுத்ததன்யாசியும் பாகேஸ்வரியுமா?  ஓஹோ..

   நீக்கு
  3. முதல் வருகையோ..   நன்றி சூர்யா. சுவாரஸ்யமான தகவல்கள்.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இரண்டாவது பாடலும் கேட்டேன். அருமையான பாடல். எஸ். பி பியும், எஸ் ஜானகி அவர்களும் மிக இனிமையாக ரசித்து பாடியுள்ளார்கள். இதற்கு முன் சிலோன் வானொலியில் இப்பாடலை கேட்ட நினைவு வந்தது. ஆனால், எனக்கு படம் பெயர் அவ்வளவாக நினைவில் இல்லை.

  பாடலை கேட்டதும் "மனதில் உறுதி வேண்டும்." படத்தில் சுஹாசினி பாடும் கனவு பாடலாகிய "சங்கத்தமிழ் கவியே" பாடலும் நினைவுக்கு வந்தது. அந்தப்பாடலும் மிக இனிமையாக இருக்கும். அந்தப்பாடலை ஏற்கனவே பகிர்ந்திருப்பீர்கள். இன்றைய இரு பாடல்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸூப்பர் கமலா அக்கா...   சங்கத்தமிழ் கவியே பாடலை யாராவது நினைவு கூர்கிறார்களா என்று பார்த்தேன்.  எனக்கும் அப்படி தோன்றும் எப்போதுமே..  ஒரே டியூன் போல.

   நீக்கு
 13. முதலாவது அருமை கேட்டிருக்கிறேன்.
  இரண்டாவது இப்பொழுதுதான் கேட்கிறேன்
  .

  பதிலளிநீக்கு
 14. கொமெண்ட் போட வந்த இடத்தில் தமிழ் பொண்ட் வேலை செய்யவில்லை, ரீ ஸ்ராட் பண்ணி வரப்போய், இங்கு கொமெண்ட் போடாததையே மறந்துபோனேன்.

  இனி என்ன சொல்லி என்னாகப்போகுது, நிறையச் சொல்ல இருந்தேன், சரி போகட்டும், முதற்பாடல் மிக மிகப் பிடிச்ச பாட்டு... அடுத்ததும் முத்துராமன் மாமாவின் மூத்தமகனின் பாடல் எல்லோ எனக்குப் பிடிக்காமல் போகுமோ ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 15. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
  இன்று கேட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!