திங்கள், 19 ஜூன், 2023

"திங்க"க்கிழமை  - சிப்பி பாஸ்தா பாயசம் - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 சிப்பி பாஸ்தா பாயசம்

(Shell Pasta பாயசம்)

தேவையான பொருட்கள்
Shell Pasta ½ கப் 100 grms
பழுப்பு சர்க்கரை ¾ கப் 80 grms
முற்றிய தேங்காய் ஒன்று
சோள மாவு 1 tbsp
ஏலக்காய் 2
முந்திரிப்பருப்பு 20
நெய் 1 tbsp 
குங்குமப்பூ ஒரு சிட்டிகை

செய்முறை

தேங்காயைத் துருவி சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு தடவையாக அரைத்து பால் பிழிந்து கொள்ளவும் ( உத்தேசமாக 500 ml) 

சர்க்கரையை  சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி - முழுவதுமாக இளகியதும்  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

பாஸ்தாவை நன்றாக வேக வைத்து நீரில் அலசி வடிகட்டவும். 

100 ml பாலில் 15 முந்திரிப் பருப்புகளை மையாக அரைத்துக் கொள்ளவும்..

50 ml  பாலில்  சோள மாவை கரைத்துக் கொள்ளவும்..

மீதமுள்ள முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்..  ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்..

மீதமுள்ள பாலை  அடுப்பில் ஏற்றவும்.. கொதித்து வரும்போது அலசி வைத்துள்ள பாஸ்தாவை சேர்க்கவும்..  தீயைக் குறைத்து வைக்கவும். 

பாலில் அரைத்த முந்திரியுடன் இளகிய சர்க்கரையையும்  சோள மாவு பால் கரைசலையும் கொதித்து வரும் பாஸ்தாவுடன் சேர்க்கவும்..

வறுத்த முந்திரி ஏலக்காய் பொடி, குங்குமப் பூவையும் பாயசத்தில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.. தளதளத்து வரும்போது தீயை நிறுத்தி விட்டு இறக்கவும்.

சூடு ஆறியதும் Chiller ல் வைத்து குளிரூட்டிய பின் பரிமாறலாம்..

தேங்காய்ப் பால் பிழிந்தெடுக்கத் தெரியாதே என்றால் 
செய்முறையில் பாக்கெட் பால் 400 ml சேர்த்துக் கொள்ளவும்..

***

இது மிகவும் சத்தானது.. 
ஆகா..ஓகோ.. என்றெல்லாம் இல்லை..

மாதம் ஒருமுறை சாப்பிடலாம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

39 கருத்துகள்:

 1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு..

  தமிழ் வாழ்க

  பதிலளிநீக்கு
 2. இன்று சமையல் கூடம் காண்பதற்கு வருகை தர இருக்கும் அனைவருக்கும் நல்வரவு..

  இக்குறிப்பினைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. இதுக்கு, அப்புறம் வருகிறேன். பாஸ்தாவில் பாயசமா? கொஞ்சம் விட்டால் நூடுல்ஸ் பாயசம், பாஸ்தா பருப்பு உசிலின்னுலாம் கைவசம் உள்ள ரெசிப்பிக்களை எடுத்துவிட்டுருவீங்க போலிருக்கே.

  பதிலளிநீக்கு
 5. காலம் மாறுது..

  Vermicelli பாயாசம் தான் வந்து விட்டதே..

  பொரித்த இட்லி அவித்த தோசைகளுக்கான காலம் இது..

  நான் குவைத்தில் இருந்த போது shell pasta செய்திருக்கின்றேன்.. இங்கே இப்போது இயலவில்லை.. நூடுல்ஸ் பக்கம் எல்லாம் போவதேயில்லை..

  தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான குறிப்பைத் தந்ததற்கு இனிய நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்...

   பிரார்த்தனைக்கு நன்றி..

   நீக்கு
 8. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

  இன்றைய திங்கள் செய்முறையில் சிப்பி பாஸ்தா பாயாசம் மிக அருமையாக வந்துள்ளது. இதுவரை இந்த பாஸ்தாவை கேள்வி பட்டதில்லை. (ஒவ்வொன்றும் சிப்பி வடிவத்தில் இருக்குமோ?) பாஸ்தா உபயோகமே இப்போது கொஞ்ச நாட்களாகத்தான். அதிலும் ஒரு தடவை இந்தமாதிரி பசும் பால் விட்டு பாயாசம் வைத்துள்ளேன். ஆனால் அது சிப்பி பாஸ்தாவா என்பது நினைவில் இல்லை. இங்கு வந்த பின் நூடுல்ஸ் கூட அடிக்கடி உபயோகித்திருக்கிறோம்.

  நீங்கள் இன்று அறிமுகப்படுத்திய தேங்காய்பால் சிப்பி பாஸ்தா பாயாசம் அருமையாக இருக்குமென்று நினைக்கிறேன். முடியும் போது ஒரு முறை செய்து பார்க்கிறேன். நான் கோதுமை ரவை பாயாசத்திற்கு தேங்காய் பால் விட்டுத்தான் செய்வேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. சிப்பி வடிவில் இருக்கும்..

   இங்கே எதிர்பார்த்த படி கிடைப்பதில்லை..

   வெள்ளை சீனி கலக்காமல் செய்யும் குறிப்பு..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பொதுவாக பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவை உண்பதில்லை. சுவையான குறிப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூடுல்ஸ் அதிகம் கெடுதல் தருவது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்று என் பேத்திக்கு (மகளின் மகள்) பிறந்த நாள். இன்று எழுந்தவுடன் எ பியை பார்த்தவுடன் (எப்போதுமே காலை கண் திறந்தவுடன் எ. பிக்கு வந்து பார்த்து ஒரு காலை வணக்கம் சொல்லுவது என் வழக்கமாகி விட்டது. அதன் பிறகுதான் காலை காஃபியே...) பாயாசம் என்ற இனிப்பு இடம் பெற்றிருந்தது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. உங்கள் இனிப்பு போல் அவள் வாழ்க்கையும் என்றும் இனிப்பாக சகல சௌபாக்கியங்களோடு அமைய இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். /கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// பாயாசம் என்ற இனிப்பு இடம் பெற்றிருந்தது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. உங்கள் இனிப்பு போல் அவள் வாழ்க்கையும் என்றும் இனிப்பாக சகல சௌபாக்கியங்களோடு அமைய இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். ///

   நானும் அவ்வண்ணமே வேண்டிக் கொள்கின்றேன்..

   இனிப்பு போல் அவள் வாழ்க்கையும் என்றும் இனிப்பாக சகல சௌபாக்கியங்களோடு அமையட்டும்..

   வாழ்க பல்லாண்டு..

   உண்மையில் மிக்க மகிழ்ச்சி..

   நன்றி..

   நீக்கு
 11. பாஸ்ராவில் பாயாசம் அருமை.

  பதிலளிநீக்கு
 12. செய்முறை நல்லா இருக்கிறது. உங்களை நம்பி, இந்த வாரம், பாஸ்தா பாயசம் செய்யச் சொல்கிறேன். நல்லா இல்லைனா, உடனே உங்களுக்குப் போன் போட்டுவிடுவேன். ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் போல மங்கலம்..
   அதெல்லாம் நன்றாக இருக்கும் .. கவலையே வேண்டாம்..

   மகிழ்ச்சி..
   நெல்லை அவர்களுக்கு நன்றி..

   நீக்கு
 13. ஆவ்வ் இம்முறையும் ஒரு வித்தியாசமான ரெசிப்பி போட்டிருக்கிறீங்கள் துரை அண்ணன். நான் உறைப்பாக செய்பவற்றை நீங்கள் இனிப்பாக்கிவிட்டீங்கள்...

  பாயாசம் என்பதை விட வேறு ஏதாவது பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் வந்தால தான் பந்தி களை கட்டுகின்றது..

   காரமாகவும் செய்யலாம். முதலில் இதற்கான வரவேற்பை பார்த்துக் கொள்வோம்..

   பாயசம் என்ற பெயர் பொருத்தமில்லை தான்..

   கிட்டத்தட்ட டெசர்ட் மாதிரி இருக்கும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி அதிரா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 14. பாயாசம் என்றதும் உடனே நினைவுக்கு வருபவர் "தமனா" தான்:).. சே சே டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:) நெ தமிழன் சோட்டா:) தான் ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெ.தமிழன் சோட்டா என்றால் அர்த்தம், நெ.தமிழன் தம்பீ - ஹா ஹா. உண்மை எப்படியும் ஒரு நாள் வெளில வந்துவிடும் இல்லையா? அதான் இன்று உங்களை அறியாமலேயே வந்துவிட்டது.

   நீக்கு
  2. உண்மை எப்படியும் ஒரு நாள் வெளில வந்துவிடும் இல்லையா? //

   இது எங்கேயோ கேட்ட குரல்!!!

   ஹையோ அதிரா மளையாளம், ஹிந்தி ரெண்டையும் போட்டு இப்படிக் குழப்பிடீங்களே அது..சோட்டா....இனிமேல் உங்க செக் கிட்ட க்ளியர் பண்ணிட்டு இங்க போடுங்க ...எங்க அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டீங்களே!!!

   கீதா

   நீக்கு
  3. அது சோட்டா இல்லை - சேட்டா...ன்னு சொல்லணும் அதிரா..

   டங்கு, விரல் எல்லாமே ஸ்லிப் பாகுது!!!

   கீதா

   நீக்கு
  4. ஆவ்வ்வ்வ் அண்டைக்கு மீ கரீட்டாத்தானே போட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதா எங்கயோ சோட்டா எனப் போட்டதைப் பார்த்துக் கொயம்பிட்டேன்... இப்பூடியே விட்டால், இனிமேல் என்னையும்.. ..க்கா என்றிடப்போறாரே நெ தமிழன் கர்ர்ர்ர்ர்ர்:)).. 7 1/2 முடிஞ்சு போச்சு எண்ணிச்சினமே ஆனா இன்னும் நேக்கு முடியல்லப்போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 15. சிப்பி பாஸ்தாவே பார்த்ததில்லைனு நினைக்கிறேன். அதிலே பாயசம் என்பதே எனக்குப் புதிய செய்தி. இங்கே சின்னக் குழந்தைகள் இல்லாததால் இந்தப் பாஸ்தா, நூடுல்ஸ் எல்லாம் வாங்குவதே இல்லை. எப்போதேனும் ஏதாவது பொருள் வாங்குகையில் கொடுக்கும் இலவச நூடுல்ஸைக் கூட வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே இதெல்லாம் கிடைப்பதில்லை.. குவைத்தில் அடிக்கடி செய்வேன்..

   நூடுல்ஸ் மீது அவ்வளவு விருப்பம் கிடையாது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 16. தேங்காய்ப் பால் பாயசம் எனில் சித்திரை விஷுவன்னிக்கு என்னோட அம்மா செய்து கொண்டிருந்த பாயசம் தான். பச்சரிசியைக் குழைய வடித்துக் கொண்டு ஒரு கரண்டி பச்சரிசிக்குக் கால் கிலோ நெய் தேவை. குழைந்த அரிசியை அந்த நெய்யில் போட்டு நன்கு கலந்த பின்னர் இரண்டாம் அல்லது மூன்றாம் தேங்காய்ப் பாலில் தேவையான வெல்லத்தைப் பொடி செய்து போட்டு வெல்ல வாசனை போன பின்னர் நெய்யோடு கலந்த குழைந்த அரிசியைச் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.சாதமும் நெய்யுமாக வெல்லத்துடன் சேர்ந்து மணம் ஊரைத் தூக்கும். கெட்டியாக ஆகும்போது மீதம் இருக்கும் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். சிலர் இதில் வாழைப்பழங்களையும் சேர்ப்பார்கள். தென் மாவட்டங்களில் பெரும்பாலும் கதலிப் பழங்களே சேர்ப்பாங்க. பின்னர் கடைசியில் முதல் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய்க்கீற்றுகளைச் சேர்க்கலாம்.

  சாஸ்தா ப்ரீதிக்குப் பெரும்பாலும் இந்தப் பாயசம் தான் இருக்கும். நானும் முன்னாடி எல்லாம் சித்திரை வருஷப்பிறப்பன்னிக்கு இதான் பண்ணுவேன். இப்போ அதிகம் தித்திப்புச் சாப்பிட முடியாது என்பதால் சமைத்த சாதத்திலேயே நெய்யை விட்டு மிக்சி ஜாரில் போட்டு அடிச்சுட்டு வெல்லம் சேர்த்துத் தேங்காய்த் துருவலையும் அரைத்து விட்டு விடுகிறேன்.ஏலம், முந்திரி சேர்தால் இதுவும் ஒரு ருசி தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருநெல்வேலிப் பக்கம் இதை "சத சதயம்" எனச் சொல்கின்றனர்.பொதுவாகத் தென் மாவட்டங்களில் பாயசங்களின் செய்முறையும் அவற்றின் விதங்கள், மாறுபடுவதோடல்லாமல் ருசியில் மிக அருமையாக இருக்கும். இதே தஞ்சை மாவட்டம் எனில் பாசிப்பருப்புப் பாயசம், பாசிப்பருப்பு+கடலைப்பருப்பு+அரிசி+தேங்காய் அரைச்சு விட்ட பாயசம் என ஏதேனும் ஒன்றிரண்டு வகைகள் தான் இருக்கும்.

   நீக்கு
  2. அருமையான செய்முறை தந்திருக்கின்றீர்கள்.. சிறப்பு..

   மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
  3. எங்கள் வீட்டில் பாசிப் பருப்பு, பச்சரிசிக் குறுநொய், தேங்காய்ப் பால். வெல்லம் -
   என வழக்கமாக பாயசம் தான். சேமியா, ஜவ்வரிசி வாங்குவதில்லை..

   மகிழ்ச்சி..
   நன்றியக்கா..
   வாழ்க நலம்...

   நீக்கு
 17. சிப்பி பாஸ்தா பாயாசம் செய்முறை நல்லாருக்கு, துரை அண்ணா....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!