வியாழன், 29 ஜூன், 2023

சொல்லவா... குறை சொல்லவா..

 ...................  இன்னொரு நண்பர் இருக்கிறார். அவரும் உரத்த குரலில் கோபப் படுபவர்தான்.  அர்த்தமே இருக்காது..  எடுத்த எடுப்பிலேயே உரத்த குரல் அதிகார த்வனியில் வந்து விடும்.  மற்றவர்களை தம்ப் கண்ட்ரோலில் வைத்திருப்பதாக அவர் எண்ணம். 

அவர்களோ இவர் மீது தீராத வெறுப்பில்..  ஆனால் இவருக்கு சில நல்ல குணங்கள் உண்டு.  மற்றவர்களின் பிரச்னைகளையும் கொஞ்சம் அறிந்தவர்.  உதவுபவர்.  அதனால் இவரது இந்தக் குறை பெரிய அளவில் பாராட்டப்படாமல் போகிறது.

மகளோ, மகனோ, மனைவியோ..  அவர்கள் நம்மிடம் தயங்காமல் உண்மையைச் சொல்லும் நிலையில் நாம் பழகவேண்டும்.  தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று நினைக்கும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் உண்மையான அபிப்ராயம் நமக்குத் தெரியாமலே போகும்.

அது போலவே மற்றவர்களை பற்றி எப்போதும் குறை கூறிக்கொண்டிருந்தாலும் உறவுகளும், நட்பும் நம்மை ஒதுக்க ஆரம்பித்து விடுவார்கள்.  சொல்லி ஆகவேண்டிய குறையைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்.  அங்குதானே இந்தப் பிரச்னை எல்லாம் வருகிறது!  குறைகளை அவர்களிடம் தனியாகக் கூட சொல்ல முடிவதில்லை.  ஏனென்றால் குறையை தனியாகவும், பாராட்டை எல்லோர் முன்னிலையிலும் செய்ய வேண்டும் என்பார்கள்.  

உறவுகளுக்குள்ளேயே உரிமையுடன் பேசுவது, உண்மையாக பேசுவது முடியாமல் போய்க்கொண்டிருக்கிறதா?  என்னைக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்வேன்.

போலித்தனம் இல்லாமல் பேச உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்?  மனம் விட்டுப் பேச உறவில் யாராவது இருக்கிறார்களா?  நாம் சொல்லும் பொருளை விடுத்து அவர்களாக அர்த்தம் செய்து கொள்ளும் பொருளுடன் மனத்தாங்கல் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  மனதில் நினைப்பது எல்லாவற்றையும் மறைக்காமல் பேசி எத்தனை பேர்களிடம் பழக முடியும்?  பதில் வாங்க முடியும்?  முதலில் நம்மைப் பற்றி நாம் போலித்தனமான பிம்பங்கள் கொண்டிருப்பதை மாற்ற வேண்டும்.  நாம் யார் என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும்,  நம் பலங்களைவிட, நம் பலவீனங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் நாம் மற்றவர்களிடம் உண்மையாய் இருக்க முடியும்.

நாம் உண்மையாய் இருந்துவிட்டுதான் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்க வேண்டும்.  

முன்னெல்லாம் அப்பாவோ, மகனோ, மகளோ, மனைவியோ, அண்ணனோ, தம்பியோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது உரிமையுடன் நீ செய்தது தவறு..  இப்படி செய்திருக்கக் கூடாது என்று வாதிடும் சுதந்திரம் இருந்ததது.

இப்போது நிறைய குடும்பங்களில் அந்தத் சுதந்திரம் இல்லை என்று நினைக்கிறேன்.

மனைவியிடமே, அல்லது கணவனிடமே  நீ இப்போது நடந்து கொண்டது தவறு என்றோ, பேசியது தவறு என்றோ சொல்ல முடியாத நிலைதான் பல குடும்பங்களில் நிகழ்கிறது. அண்ணன்-தங்கை, தம்பி உறவுகள் எல்லாம் இன்னும் மோசம்.  சேர்ந்து வாழ்பவர்களிடையேயே இல்லாத புரிந்துணர்வு தனித்தனியாய் வாழ்பவரிடம் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?!

சமீபத்தில் தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக 'அல்டிமேட் முடிவெ'டுத்து விட்ட ஒரு தனயன், கடைசி நொடியில் திடீரென என் நினைவு வந்து, என்னைத்தேடி வந்து,  குமுறிக் குமுறி கொட்ட, அவரை சமனப்படுத்தி அப்பா, அம்மா, உறவு பற்றி பேசி, பேசுவதற்கு கூட உரிமை இல்லாத உறவினால் என்ன பயன் என்று கேட்டு தெளிய வைத்து அனுப்பினேன்.  இப்போது ஒரு திடீர் மாற்றத்துடன் அந்தத் தனயன் நல்ல முறையில் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் இந்தக் காலத்தில் எத்தனை பேர் இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்வார்கள்?  ஏதோ அவராக தேடி வந்ததால் என்னால் உரிமையுடனும், உண்மையாகவும் பேச முடிந்தது.

===================================================================================================

எப்பவோ பகிர்ந்ததுதான்..  இப்போ மறுபடி...




================================================================================================================

படித்ததை ரசித்து, பகிர்வது...

தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் யார் தெரியுமா?, மந்திரி குமாரி திரைப்படத்தில், பாடிய ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் மூலம் அடையாளங் காட்டப்பட்ட திருச்சி லோகநாதன்தான் அவர். முதன் முதலில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” திரைப்படத்தில் பின்னணி பாடியவர் ..
சிவாஜிகணேசனுக்காக கள்வனின் காதலி திரைப்படத்திலும், எம்ஜிஆருக்காக ‘மர்மயோகி’ ‘சர்வாதிகாரி’ ஆகிய திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். நடிகர்களுக்காக குரலை மாற்றாமல், இயல்பான குரலிலேயே பாடும் திருச்சி லோக நாதன், மாயா பஜார் திரைப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் பாடுவதாக அமைந்த ‘கல்யாண சமையல் சாதம் பாடல், இன்று வரை பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வண்ணக்கிளி திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இரும்புத்திரை படத்தில் ‘கையில வாங்கினேன் பையில போடலே காசு போன இடம் தெரியல’ என்ற பாடல், இன்றும் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களின் நிலையை கூறும். ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே’ என்ற பாடல் கிராமப்புறங்களில் திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில், ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’ என்ற பாடல், டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றி வந்தது..
திருச்சி லோகநாதன் மகன்களில் ஒருவரான டி.எல்.மகாராஜன் சிறுவனாக இருந்தபோது, திருவருட் செல்வர் திரைப்படத்தில் பாடிய காதலாகி கசிந்து பாடலை கேட்டு பரவசமடைந்த திருச்சி லோகநாதன், நெகிழ்ச்சியுடன் கண்ணீர் சிந்தியதாக குறிப்பிடுகிறார் அவரது மகன் டி.எல்.மகாராஜன்.
திருவருட் செல்வர் திரைப்படத்தில் ‘ஆலயமணி கதவே தாழ் திறவாய்’ என அண்ணன் மகாராஜன் பாடினால் அவரது சகோதரரும் மற்றொரு பிரபல பின்னணி பாடகருமான தீபன் சக்கரவர்த்தி, நிழல்கள் திரைப்படத்தில் பூங்கதவே தாழ்திறவாய் பாடலை பாடியுள்ளார்.
‘வாராய் நீ வாராய்’ பாடலுக்காக மலைகளும் ‘உலவும் தென்றலுக்காக ஓடங்களும், ஆசையே அலை போல’ பாடலைக் கேட்க, அலைகளும் திருச்சி லோகநாதனின் குரலுக்காக இன்றும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. ஆலயத்தின் கதவென்றாலும், பூங்கதவின் தாழ் திறந்தாலும், இனிய பாடல்களை கேட்கும்போது நமது மனங்களின் கதவு திறந்து, கவலைகள் மறக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை…
நன்றி: நியூஸ் 7 தமிழ் - நன்றி கந்தசாமி ஸார். (முகநூல்)
===================================================
============================

மனம்

பழைய குப்பைகளை 
பெருக்கித் தள்ளி 
பாங்காய் பளிச்சென 
சுத்தம் 
செய்து வைக்கிறேன்..
புதிய குப்பைகள் 
காத்திருக்கின்றன..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பப்போ இப்படிதான் ஏதாவது உருப்படாத, உபயோகமில்லாத எண்ணங்கள் வரும். இங்கும் அங்கும் பகிர்ந்து வைப்பேன். இப்போ வந்திருக்கும் எண்ணம் என்னன்னா...
சினிமாவில் டைட்டில் கார்ட் போடும்போது எத்தனை பேர் அதனை  சுவாரஸ்யமாக பார்ப்பீர்கள்?  அப்படியே பார்ப்பவர்களும் கூட என்னென்ன பெயர்களுக்காக காத்திருப்பீர்கள்?  ஹீரோ, ஹீரோயின்  யார் என்று தெரிந்து தான் படத்துக்கு வந்திருப்பீர்கள்.  பெரும்பாலும் இசை, இயக்கம் எல்லாம் கூட யார் என்று தெரிந்திருக்கும்.  தெரியாதவர்கள் ஒருவேளை அதை சுவாரஸ்யமாக பார்க்கலாம்.  அப்புறம் பாடலாசிரியர் யார் என்று சிலபேர் பார்க்கலாம்.

அப்புறம் துணை நடிகர் ஏஜென்ட், படத்தொகுப்பு, கலர் ப்ராசஸிங் இன்னும் நாம் இதுவரை படித்திராத விவரங்கள் எல்லாம் என்று ஏகப்பட்ட விவரங்கள் வந்த வண்ணம் இருக்குமே..  அவற்றை யார் யார் படிக்கிறீர்கள்? சம்பந்தப்பட்டவர் அல்லது அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் படிக்க நினைத்தால் படித்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.  அதுவும் கூட நொடியில் மறைந்து விடும்.

இன்னும் சில படங்களில் படம் முடிந்த பின் யாருமே படிக்க முடியாத பொடி எழுத்துகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

யாருக்காக...   இவையெல்லாம் யாருக்காக?
========================================================================



நியூஸ் ரூம் :- பானுமதி வெங்கடேஸ்வரன்

29.6.23

உலகிலேயே அதிக கோல் போட்டவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் ரொனால்டோ.

இந்த வருடம் கர்னாடகாவில் பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் அணைகட்டுகள் நிரம்பவில்லை. மழை பெய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு குழந்தைகளுக்கு பால்ய விவாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளுமே ஆண் குழந்தைகள்!!

37 ஆண்டு கால லஞ்ச வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுதலை.

கணவன் டி.வி.சேனல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டெ இருந்ததில் தம்பதிகளுக்கிடையே மூண்ட தகறாரில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி அருகிலிருந்த ஒரு குட்டையில்  குதிக்க, அவளைக் காப்பாற்ற நீச்சல் தெரியாத கணவனும் குதித்து இருவருமே மரணமடைந்தனர். இப்போது 9 மற்றும் 7 வயதுகளில் இருக்கும் அவர்களது மகனும், மகளும் அனாதைகளாகி விட்டனர்.

கம்போடியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என்னும் சட்டத்தை நிறைவேற்ற அந்நாட்டு பார்லிமெண்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

சண்டையில் காதை கடித்த தமிழருக்கு சிங்கப்பூரில் ஐந்து மாத சிறை.சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மனோகர் சங்கர் என்பவர் குடியிருந்த வீட்டின் மாடியில் அமர்ந்து கொண்டு மது அருந்தியிருக்கிறார், சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட வீட்டு உரிமையாளரோடு வாக்குவாதத்தில் இறங்கிய மனோகர் சங்கர் வீட்டு உரிமையாளரின் காதை கடித்து விட்டாராம். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படிருகிறது. 

நம்ம ஊர்லதான் பேனா சர்ச்சைன்னு பார்த்தா லண்டலயும் சர்ச்சை! அழியக்கூடிய மையால் ஆன பேனாவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்ததால், சர்ச்சையில் சிக்கி இருக்கிறாராம்.

கிரிக்கெட் உலகக் கோப்பையை கொண்டு போய் ஆகாசத்துல வச்சிருக்காங்க....  இங்கிலாந்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 'ஸ்டிராட்டோஸ்பியரிக் பலுான்' மூலம் நேற்று உலக கோப்பை விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 1,20,000 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உறைபனிக்கும் கீழான, மைனஸ் 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பூமியின் வெளிவட்டப் பாதைக்கு 99.5% அருகில் ஜொலிக்கிறது. உலக கோப்பை இருக்கும் இடத்தை '4டி' தொழில்நுட்ப கேமரா உதவியால் படம் பிடிக்கப்பட்டது. உலக கோப்பை துவங்க இன்னும் 100 நாள் உள்ள நிலையில், இன்று உலகின் பெரிய மோடி மைதானத்தில், பலுான் தரையிறக்கப்பட உள்ளது.

"சோழர்கள் இன்று" அப்படீன்னு ஒரு புத்தகம் வெளியாகி இருக்குங்க...  தினமலர்ல விளம்பரமா வருது, வாங்க நமக்கும் ஆவலாதான் இருக்கு.  சமஸ் தொகுத்திருக்கிறாராம்.  நிறைய பேர் தனக்கு மட்டுமில்லாமல்  நண்பர்களுக்கு சேர்த்து வாங்கறாங்களாம்.  தனியார் நிறுவன ஊழியரான வாசகர் ராஜ விமலகுமார் நேற்று, 'தினமலர்' நாளிதழ் அலுவலகம் சென்று 25,000  ரூபாய்க்கு அந்தப் புத்தகம் வாங்கினாராம், நண்பர்களுக்கு பரிசளிக்க..  புத்தக விலை 450 


டெல்லியில் சாலையில் நடந்து சென்ற நடந்து சென்ற தம்பதியிடம் வழிப்பறி செய்ய முயன்றதாம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் குழு!  இவர்களிடம் 20 ரூபாய்தான் இருந்தது என்று தெரிந்ததும் 100 ரூபாய் தந்து விட்டு சென்றதாம்..  ஆளுங்களை பிடிச்சுட்டாங்கன்னு வச்சுக்கோங்க...

ஆங்காங்கே கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வரும் நியூஸ் தெரியும்தானே..  அதுவும் அமெரிக்க நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக நிறையவே செய்கின்றன.. நேற்றைய நியூஸ் அமெரிக்காவில் கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் உலகம் முழுதும் 125 மேனேஜிங் டைரக்டர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்லேருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலைன்னு ஜெய்ப்பூர்ல தரை இறக்கி இருக்காங்க..  மூன்று மணிநேரம் ஆனதும், "அவ்வளவுதான்..  எங்க டியூட்டி டைம் ஓவர்"னு பைலட் லாம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்களாம்.  தவித்த பயணிகளை சொகுசு பஸ்ஸில் அங்கிருந்து டெல்லி அழைத்து வந்தார்களாம்.  என்ன ஒரு தின்னக்கம்...!

 

================================================================================


என்ன செய்வார்கள்? எப்படிச் செய்வார்கள்?



============================================================================================

பொக்கிஷம் :-

என்ன ஒரு சந்தேகம்!


"ஆ....!"

என்ன செய்ய... கூச்ச சுபாவம்!

இப்படி மெயின்டெயின் பண்ணுமளவு அப்படியென்ன தொழில் பன்றாராம்?

ஹிஹிஹி...


108 கருத்துகள்:

  1. உறவுக்குள் குறைகளை வெளிப்படையாகப் பேசக்கூடாதா? முதலில் தினமும் நம்முடைய குறைகளை நாலுபேர் நம்மிடம் வெளிப்படையாகச் சொல்லட்டும். நம் ரியாக்ஷன் எப்படி என் நமக்கே புரியும். What is good for us is good for others

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசக்கூடாது இல்லை.  பேச முடியாது.  நண்பர் வீட்டுக் குழப்பம் ஒன்றுதான் இந்த பதிவுக்கு ஆணிவேர்.  கிட்டத்தட்ட இதே போன்ற பிரச்னைகளை ஆங்காங்கே கேள்விப்பப்படுகிறேன்.  எல்லாக் குடும்பத்திலும்  சுலபமாக பேசுவதை எளிதாக எடுத்துக் கொள்வதில்லை.  என் வீடு போல நண்பா வீடில்லை.  நண்பர் போல நான் இல்லை!

      நீக்கு
    2. நம் குறைகளை நம்மிடம் வெளிப்படையாக சொல்ல முதலில் நாம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.  எதிராளி நாம் அதற்கு கோபப்படமாட்டோம் என்று துணிவுற வேண்டும்.  அதையும் சொல்லி இருக்கிறேன்.  நம்மைப்போல எல்லோரும் இருப்பதில்லை.  என்னிடம் குறை இல்லை என்று நினைப்பவர்கள் உண்டு.

      நீக்கு
    3. அதைவிட, என் குறைகள் எனக்குத் தெரியும், நீயென்ன சொல்வது என்ற நினைப்பு. சில பகுதிகளை நான் இன்னும் படிக்கலை. Marriage invitation g4rrrrrrrrrrrrrr

      நீக்கு
    4. உண்மை ஸ்ரீராம், பல குடும்பங்களில் சொல்வது மிகவும் பிரச்சனையாகிறது.

      பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் ஃப்ரெட்ன்லியாக இருந்தால் நல்லது ஸ்ரீராம். அதுவும் இத்தலைமுறை குழந்தைகளிடம்...ஏனென்றால் அப்ப குழந்தைகளுக்குப் பயம் இருக்காது. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பாங்களே அப்படித்தான். ஈகோ இல்லாம இருந்தாலே உறவுகள் பலப்படும் நட்பானாலும்...

      கீதா

      நீக்கு
    5. மேரேஜ் இன்விடேஷன் நிச்சயம் இதுதான் கடைசி!  இனி வராது நெல்லை...   grrr வாபஸ் வாங்கிடுங்க!

      நீக்கு
    6. பிள்ளைகளிடத்தில் ஃப்ரெண்ட்லியா இருப்பது எங்கள் வீட்டில் உண்டு கீதா.  சமயங்களில் அதுவே மைனஸாகி விடும்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  3. //மனைவியிடமே, அல்லது கணவனிடமே நீ இப்போது நடந்து கொண்டது தவறு என்றோ, பேசியது தவறு என்றோ சொல்ல முடியாத நிலைதான் பல குடும்பங்களில் நிகழ்கிறது///

    மனைவி யை குறை சொன்னால் ஒன்றுக்கு பத்தாக திரும்ப கிடைக்குமே

    //நாம் உண்மையாய் இருந்துவிட்டுதான் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்க வேண்டும். /

    ஆனால் தெரிந்த எல்லா உண்மைகளையும் உளரக் கூடாது. அவசியமானது மட்டும் சொல்ல வேண்டும்.

    // நாம் யார் என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும், நம் பலங்களைவிட, நம் பலவீனங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் மற்றவர்களிடம் உண்மையாய் இருக்க முடியும்.//

    ஆனால் நம்முடைய குறைகள் மற்றவர்கள் சொன்னால் தான் நமக்கு தெரிய வரும். (உ--ம் நகம் கடிப்பது. மற்றவர் பேசும்போது குறுக்கிடுவது.) )

    கவிதை சமீபத்தில் கூகிள் டிரைவ் ஸ்பேஸ் உண்டாக்கியதைக் கூறுகிறது என்று நினைக்கிறேன்.

    யாருக்குத் தெரியும் சில சமயம் குப்பையோடு மாணிக்கமும் போய்விடும் என்று.

    சுஜாதாவின் ஒரு கதையில் "ராணி படம் தலைகீழ்" என்று எழுதியிருந்த கவரை குப்பையில் எறிந்தபின் தான் அது ஒரு ஸ்டாம்ப், அது போன்று 4 ஸ்டாம்புகள் தான் உலகில் உண்டு என்பதை பொக்கிஷம் தேடுபவர்கள் உணர்வார்கள். ஆக

    இன்றைய குப்பை
    நாளைய பொக்கிஷம்
    அகழ்வோருக்கு

    டோக்டரிடம் போய் வந்தீர்களா? எல்லாம் டொக்டர் ஜோக்குகளாகவே உள்ளன.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகா சொல்லி இருக்கீங்க JKC ஸார்...  கூகுள் டிரைவ் ஸ்பேஸ் உண்டாக்கி இருக்கிறதா?  என்ன விஷயம்..  கொஞ்சம் விளக்குங்கள்.  இப்பவனும் எனக்கு 15 ஜிபி காலியாயிடுச்சு, பணம் கட்டி எடுக்கறியா என்று கேட்கிறது!  நான் டாக்டரிடம் போகாத நாள் எது?  நேற்றுகூட வலது பாதம் பள்ளத்தில் திரும்பி டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து நொண்டிக் கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. //நேற்றுகூட வலது பாதம் பள்ளத்தில் திரும்பி டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து நொண்டிக் கொண்டிருக்கிறேன்!//
      இப்படித்தான் என்னுடைய மகனும். அமெரிக்காவில். MRI எடுத்தான்.
      Jayakumar

      நீக்கு
    3. நேற்றுகூட வலது பாதம் பள்ளத்தில் திரும்பி டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து நொண்டிக் கொண்டிருக்கிறேன்!//

      ஆ! ஸ்ரீராம் இதை நான் பார்க்கலையே....நீங்களும் என்னைப் பொல பாதம் ஊன்ற முடியாமல்!! ஸ்ரீராம் மற்றவை ஒன் டு ஒன்னில் கேட்டுக் கொள்கிறேன்....

      கீதா...

      நீக்கு
    4. காலைத் தூக்கி நின்று ஆடுகின்ற...நு நான் இடதுகாலைத் தூக்கி ஆடுகிறேன் நீங்க அலது காலைத் தூக்கி ஆடிடுங்க!!!

      கீதா

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பாக இருக்கிறது ஜி தங்களது கட்டுரை.

    ஏ.எல்.மகாராஜன் நான் போட்ட சவால் படத்தில் பாடிய //எங்கே என் ஆசை என்ன// பாடல் சிறப்பாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. டைட்டில் போடுவதை நான் முழுமையாக படிப்பேன் ஜி

    பதிலளிநீக்கு
  7. தலைப்பு நமக்கேத்த தலைப்பாகிடுச்சே!!!! ஹாஹாஹாஹா அதாவது குறை சொல்வது பற்றி....என் கருத்துகள் ...இருங்க பதிவு வாசித்து வருகிறேன்...இன்று கொஞ்சம் பிஸி அதுக்குள்ள கொஞ்சம் கருத்துகளாவது போட்டு போகணும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குன்னு இல்ல.. எல்லோருக்குமான தலைப்பு கீதா...

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் எல்லாருக்குமானதுதான்....நமக்கானது என்று சொன்னது இதைப் பற்றிப் பேசுவது எனக்குப் பிடித்த விஷயம் என்று...

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது

    முதல் பகுதியான தங்கள் எண்ண அலசல்கள் நன்று. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள். (ஒருவேளை கோபத்தில் ஒருவரை சொல்லி விடும் வார்த்தைகள் பிறகு தனித்திருக்கும் போது தனக்குத்தானே அது ஆழ்மனதில் உறுத்தும் போது, பாதித்தவருக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் நல்லதை செய்ய நினைக்குமோ. .?) அந்த வகையில் வருவதுதான் அந்த குணமோ?

    பொதுவாக குறைகள் சொல்லாதவர்கள் யார்? ஒரு கருத்தானது செயலளவிலோ, மனதளவிலோ ,பேச்சளவிலோ , மாறுபடும் போது அங்கு இந்த குறைகள் உருவாகி விடுகின்றன.

    /உறவுகளுக்குள்ளேயே உரிமையுடன் பேசுவது, உண்மையாக பேசுவது முடியாமல் போய்க்கொண்டிருக்கிறதா? என்னைக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்வேன்./

    ஆம்.. அதற்கு காரணம் இந்த குறை சொல்லும் பேச்சுக்கள் எங்காவது எட்டிப்பார்த்து "நானும் இருக்கிறேன்" எனச் சொல்லிப் போய் விடும். கஸ்டந்தான்...!!!

    பொறுமையாக முதலில் தன்னைப்பற்றி ஆராயும் மனிதர்கள் வேண்டுமானால், வாய் மூடி மெளனியாக இந்த குறைகள் சொல்லும் பழக்கத்திலிருந்து ஓரளவு விலக யத்தனிக்கலாம். ஆனால் அவர்களையும், "ஒன்றும் தெரியாதவர்கள்... பேசவே இயலாதவர்கள்" என. குறை சொல்லும் மனித வர்க்கம்.

    சிந்திக்க வைக்கும் பகுதி. இன்றைய செய்தி அறையிலும், அந்த குறை சொல்லும் எண்ணங்களால், ஒரு கணவன் மனைவியின் மனநிலை தடுமாற்றம் பின் விளைவுகள் பற்றி எதையும் யோசிக்காமல் வெளியாகி உள்ளது. இதுவும் ஒரு கொடுமைதான்.. ஆக. குறைகளை ஏற்றுக் கொள்ள எவராலும் முடியவில்லை. சிந்தனை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்னு சொல்லி அவங்களை நாம் தயார் பண்றோம்னு தோன்றும் எனக்கு கமலா அக்கா..அது உண்மையா இருக்கும்ங்கறதுக்கு எந்த அளவு நிஜம்?

      எது சொன்னாலும் குறை சொல்லி பதில் ஆரம்பிப்பவர்களே அதிகம்.  பொதுவாக மௌனம் பல விஷயங்களுக்கு மருத்துவர்!

      நீக்கு
  9. ஆமாம் ஸ்ரீராம்,

    //எடுத்த எடுப்பிலேயே உரத்த குரல் அதிகார த்வனியில் வந்து விடும். மற்றவர்களை தம்ப் கண்ட்ரோலில் வைத்திருப்பதாக அவர் எண்ணம். //

    அதே.....அடுத்த வரியில் நீங்க சொல்லிருப்பது போல் அவர்கள் மற்றவர்களின் பிரச்சனைகளை அறிந்து உதவுபவர்களாகவும் இருப்பாங்க...அந்தக் கோபம் சில நொடிகளே தான் இருக்கும்..

    ஆனால் எல்லாரும் இவ்வகை கிடையாது. எப்போதும் மற்றவர்களைக் குறையுடனே பார்ப்பது...தான் மட்டும் பெர்ஃபெக்ட் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை பொதுவிதியாய் எல்லோருக்கும் சொல்லி விடவும் முடியாது கீதா..   உரத்த குரலில் வாதிபபவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாய், விஷய ஞானம் இல்லாதவர்களாய் இருபிப்பதற்கும் வாய்ப்பு!

      நீக்கு
    2. உரத்த குரலில் வாதிபபவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாய், விஷய ஞானம் இல்லாதவர்களாய் இருபிப்பதற்கும் வாய்ப்பு!//

      யெஸ்ஸூ....நேற்று சொல்ல முடியலை....நேற்றைய உங்கள் முதல் பகுதி நிறைய உளவியல் ரீதியானது எனவே நிறைய சொல்லலாம்...கிட்டத்தட்ட ஒரு கருத்தரங்கம் கலந்துரையாடல் போன்ற ஒன்று. நான் எம் ஏ படித்த போது டிகிரி தவிர ஒரு டிப்ளமா கோர்ஸ் யாரு வேண்டுமானாலும் படிக்கலாம் விருப்பம் இருந்தால் என்று ஒன்று வந்தது அது Personality development, interpersonal relationship and Personnel management. நான் படித்த டிகிரி சம்பந்தமான ஒரு அலுவலகத்திற்கு உபயோகமானது. Personnel management அதுக்குத் தேவையானவை முதல் இரண்டும் அப்படி அப்போது தெரிந்து கொண்டவை ...அதைத் தொடர்ந்து நான் அதைப் பற்றி எங்கு வாசிக்க நேர்ந்தாலும் கண்ணில் பட்டாலும் வாசிப்பதுண்டு.

      கீதா

      நீக்கு
  10. மகளோ, மகனோ, மனைவியோ.. அவர்கள் நம்மிடம் தயங்காமல் உண்மையைச் சொல்லும் நிலையில் நாம் பழகவேண்டும். //

    டிட்டோ டிட்டோ.

    அது போல அவங்க நம்மிடம் குறை கண்டால் அதைச் சொல்லவும் நாம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்...அவங்களும் நமக்கு அந்தச் சுதந்திரம் கொடுக்க வேண்டும், இல்லையா ஸ்ரீராம்.

    அந்த உறவு இருந்தால் மகிழ்ச்சியே..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருப்பதைதான் நான் சொல்லி இருக்கிறேன் கீதா.  இரண்டும் ஒரே விஷயத்தைதான் சொல்கின்றன!

      நீக்கு
    2. மேலே பார்த்துவிட்டேன் உங்க கருத்தை

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய தலைப்பு நன்றாக உள்ளது. சொல்லவா.. கதை சொல்லவா.. பாடலை நினைவு படுத்தியது. (அந்த பழைய பாடல் இனிமையாக இருக்கும்.) இந்த மாதிரி எப்போதும் பழைய வாழ்வியல் கதை பேசும் மனிதர்களை கூட விமர்சிக்கும் பிறர், (நட்பு, மற்றும் உறவு.) அதை ஒரு குறையாகவே சொல்லிக் காட்டுவார்கள். ஹா ஹா ஹா.

    கவிதை நன்றாக உள்ளது. உள்ளமென்பது எப்படியும் குப்பை தங்கும் இடமாகி விடும். இன்றைய புதிது.. நாளைக்கு பழையது.. அதுதான் உண்மை. தெளிவாக சொல்லி விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்தப் பாடலை மனதில் வைத்துதான் தலைப்பை வைத்தேன்.  கவிதையை ரசித்ததற்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  12. குறை சொல்ல வா!..
    குறை சொல்லவா?..

    நிறை கொண்ட
    கதிருக்கும் குறை
    சொல்வார்..
    கறை கொண்ட
    நிலவையும் நிறை
    என்பார்..

    நிறை தனில் நில்லாத
    நிலை கொண்ட மனமே
    குறை கண்டு கூத்தாடி
    ஆவதென்ன தினமே!..

    பதிலளிநீக்கு
  13. டீமானிடைசேஷன் சமயம் 500 1000 குப்பைகளைக் கொடுத்து 2000 குப்பையை வாங்கினீர்களா?

    காகிதம் என்றால் அது காகிதம்.
    பணம் என்றால் அது பணம்.
    காகிதமும் பணமாகுமடா
    பணமும் காகிதம் ஆகும்.

    சேர்ப்பீர் திசை எட்டும் திரிந்து
    பணம் என்ற காகிதக் குப்பையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கிக் கணக்கிலேயே போட்டு விட்டோம்.

      நீக்கு
    2. 'அந்த' அனுபவத்துக்குப் பிறகு நூறு, ஐம்பதுதான் கையில் இருக்கும்.  அதுவும் கொஞ்சம்தான்.  முன்னர் எல்லாம் சம்பளம் கையில் வாங்கினோம்.  இப்போது நேரடியாய் வங்கிக்கணக்குக்கு சென்று விடுவதால் எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனைதான்.

      நீக்கு
  14. தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று நினைக்கும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் உண்மையான அபிப்ராயம் நமக்குத் தெரியாமலே போகும்.//

    ஆமாம்....சரிதான், ஸ்ரீராம்.

    சில சமயம் அது வீண் விவாதங்களுக்கு வழி வகுக்கும் என்றால் தவிர்ப்பது நல்லது கூடவே அது இப்போது சொல்லி என்ன யூஸ் என்று தோன்றினாலும் தவிர்க்கலாம் என்றும் தோன்றும். ஆனால் சொல்லும் விதத்தில் வார்த்தைகளைச் சரியாகக் கையாண்டு சொல்ல வேண்டும் என்பது நல்லது.

    வீட்டில், நட்பு வட்டம் என்றால் சொல்லி மனம் விட்டுப் பேசிவிடலாம்...ஆனால் பொதுவெளியில் அதுவும் இப்படியான இடங்களில் சொல்ல யோசிக்க வைக்கிறது.

    ஏனென்றால் நாம் சொல்வதை வைத்து நம்மை எடை போடுவதும் உண்டே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற கமெண்ட்டில் நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் இங்கு சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.  நிறைய விஷயங்களில் மௌனமாய் சென்று விடுவதே நல்லது.  கவலைப்படாமல் இருக்கிறேன் என்று கெட்ட பெயர் வரும். ஆனால் கவலைப்படுவதில்லை.

      நீக்கு
    2. டிட்டோ ஸ்ரீராம்...ஹைஃபைவ்!! என் மகன் அடிக்கடி சொல்வது இதுதான்....அமைதியாக இருந்தோம் என்றால் சில சமயம் நமக்கு நன்மையில் முடியும் இல்லையானால் ஒதுங்கி இருப்பது..

      கீதா

      நீக்கு
  15. அது போலவே மற்றவர்களை பற்றி எப்போதும் குறை கூறிக்கொண்டிருந்தாலும் உறவுகளும், நட்பும் நம்மை ஒதுக்க ஆரம்பித்து விடுவார்கள். //

    இது ரொம்ப உண்மை. எனக்குமே இது நடந்ததுண்டு ஸ்ரீராம். எப்போதும் நம்மைச் சொல்லிக் கொண்டே இருந்தா, ஒரு புன்சிரிப்போடு ஒதுங்கிவிடுவது நல்லது என்று தோன்றும்.


    //சொல்லி ஆகவேண்டிய குறையைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம். அங்குதானே இந்தப் பிரச்னை எல்லாம் வருகிறது! குறைகளை அவர்களிடம் தனியாகக் கூட சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் குறையை தனியாகவும், பாராட்டை எல்லோர் முன்னிலையிலும் செய்ய வேண்டும் என்பார்கள். //

    ஸ்ரீராம், இதில் குறை மட்டுமே சொல்லிக் கொண்டு பாராட்டு என்பதே இல்லாமல் இருப்பதும் சரியல்லதானே. எனக்கு இந்த அனுபவங்கள் ரொம்ப உண்டு ஸ்ரீராம். தலையில் குட்டி குட்டி என்பாங்களே அது போல....பிறந்த வீட்டிலும் சரி...இங்கு வேறு ஒரு கருத்தும் சொல்ல உண்டு. அது அப்புறம்..

    பப்ளிக்கா குறை சொல்பவர்கள் பப்ளிக்கா பாராட்டினால் ஓகே. ஆனா பப்ளிக்கா குறை சொல்லும் போதும் கூட, அதை அழகா கையாண்டால் நல்லது என்று தோன்றும். ஆனால் எனக்கு இப்படிப் பப்ளிக்கா குறை கேட்டுக் கேட்டே பழகி என் தோல் எருமைமாட்டுத் தோல் என்று பெயர் உண்டு வீட்டில்.

    ஆனால் எருமை மாட்டிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. அதன் பின்னும் நல்ல விஷயங்கள் உண்டு என்பது தெரிவதில்லை. இது எவ்வளவு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்பதும் அது போல சிலர் அதை மறைக்க ரொம்பவே ஈகோவுடன், superiority complex கொண்டுவிடுவாங்க...அதாவது தான் சொல்வது செய்வது சரி என்று...காரணம் அவங்க நிறைய குட்டு பட்டிருப்பாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எப்போதும் நம்மைச் சொல்லிக் கொண்டே இருந்தா, ஒரு புன்சிரிப்போடு ஒதுங்கிவிடுவது நல்லது என்று தோன்றும். //

      நாம் மற்றவர்களை குறை சொல்வதை சொல்கிறேன் கீதா..!  

      பப்ளிக்கா மனைவியை குறை சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன்.  மனைவியின் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே...  

      நீக்கு
    2. நாம் மற்றவர்களை குறை சொல்வதை சொல்கிறேன் கீதா..! //

      ஓ! ஆமாம்.... நம்மை விட்டு ஒதுங்கிவிடுவார்கள்....கண்டிப்பாக...

      கீதா

      நீக்கு
    3. பப்ளிக்கா மனைவியை குறை சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன். மனைவியின் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே...//

      ஹையோ இது நிறைய பார்த்திருக்கிறேன்....ஆமாம் மனைவி அப்போது பாவம்..

      அது போல மனைவி கணவனை பப்ளிக்காகச் சொல்வதையும் பார்க்கிறேன் ஸ்ரீராம்

      இது கண்டிப்பாக நல்ல ஆரோக்கியமான உறவு அல்ல

      கீதா

      நீக்கு
  16. பங்காளிகள்:- அதாவது அண்ணன், தம்பிகள், பற்றி விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன்... ஏனெனிக்கா ல் தி.மு, தி.பி (தி=திருமணத்திற்கு)

    ஆனால் அக்கா, தங்கை உறவுகள் அவ்வாறு அல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மிடம் உரிமையுடன் குறைகள் சொல்லவும் + திட்டவும், நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

      அதை செய்வது சகோதரிகள் அல்ல, அவர்களின் கணவன்மார்கள்...! (இன்றைய எனது சூழல் அப்படித்தான்...!)

      நீக்கு
    2. // ஏனெனிக்கா ல் தி.மு, தி.பி (தி=திருமணத்திற்கு) //

      சரியாய்ச் சொன்னீர்கள்.

      // ஆனால் அக்கா, தங்கை உறவுகள் அவ்வாறு அல்ல.. //

      சொல்ல முடியாது.

      // அவர்களின் கணவன்மார்கள்...! //

      ஹா... ஹா.. ஹா...



      நீக்கு
  17. // முதலில் நம்மைப் பற்றி நாம் போலித்தனமான பிம்பங்கள் கொண்டிருப்பதை மாற்ற வேண்டும். நாம் யார் என்பது நமக்கே தெரிந்திருக்க வேண்டும், நம் பலங்களைவிட, நம் பலவீனங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் மற்றவர்களிடம் உண்மையாய் இருக்க முடியும். //

    ஆகா..! அற்புத வரிகள்...

    பதிலளிநீக்கு
  18. நெருங்கிய உறவுகளுக்குள் எங்கள் வட்டத்தில் உண்மையுடன் பேச முடிகிறது ஸ்ரீராம் மனம் விட்டுப் பேச எனக்கு நெருங்கிய உறவுகள் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் பேர்தான்...போதும் என்பேன். எல்லோரிடமும் தேவையில்லை. முதல் வட்டத்திலேயே இது சாத்தியப்படுகிறது. அது போல அடுத்த வட்டத்திலும் முடிகிறது. அதன் பின் நான் பொருட்படுத்துவதில்லை. நட்புகளில் என்றால் ஓரிருவர் இருக்காங்க.

    //நாம் சொல்லும் பொருளை விடுத்து அவர்களாக அர்த்தம் செய்து கொள்ளும் பொருளுடன் மனத்தாங்கல் கொள்பவர்கள் இருக்கிறார்கள். //

    டிட்டோ டிட்டோ டிட்டோ...

    மனதில் நினைப்பதை அப்படியே பேசி பதில் வாங்கும் நபர்கள் என் வட்டத்தில் இருக்காங்க. மூவர். இதில் நான் ப்ளெஸ்ட்...இது அடுத்த வரிகளுக்கும் பொருந்தும். அது குறைகளை அறியவும் உதவுகிறது என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் கீதா.  நெருங்கியவர்கள் இருக்கிறார்களே..

      நீக்கு
  19. இப்போது நிறைய குடும்பங்களில் அந்தத் சுதந்திரம் இல்லை என்று நினைக்கிறேன்.//

    ஹை!! எங்க்ள் வீட்டில் இன்னமும் இருக்கிறது!!!!! நாங்கள் மூவரும் அதே போல என் ஒரு தங்கை குடும்பத்திலும் ....நான் அவர்களுடனும்..அவள் அவள் குழந்தைகள் என்னுடனும்....என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இப்போது ஒரு திடீர் மாற்றத்துடன் அந்தத் தனயன் நல்ல முறையில் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.//

    சூப்பர் ஸ்ரீராம்...சூப்பர்...உங்களுக்கு ஒரு கைகுலுக்கல்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. மனதில் எண்ணங்களே இல்லாமல் ஸ்லேட் போல ம்ஹூம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு முடியுமா என்பது கஷ்டம் என்றே தோன்றுகிறது.

    ஆனால் சும்ம இரு என்ற தத்துவம்தானே சொல்லப்படுகிறது இல்லையா அதுகஷ்டம் என்று...மனம் அப்படியே ஆனால் அது எப்படி சாத்தியம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை ஸ்ரீராம்.

    எண்ணங்கள் இல்லை என்றால் நம்மை முன்னேற்றிக் கொள்வது எப்படி பக்குவம் அடைய சுய சிந்தனை வேண்டுமே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிப்னடைஸ் செய்து விட்டால் ஒரே சிந்தனைதான்!

      நீக்கு
  22. படித்ததில் பிடித்தது சுவாரசியம்..

    கவிதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன்..
    மனக்குப்பைகளைச் சுத்தம் செய்வது ரொம்பக் கஷ்டம்!!!! ஹாஹாஹா...அது கடல் அலை போல வந்து வந்து சென்றுகொண்டே இருக்கும் புதுசா அள்ளிப் போடும்...இதுக்கு மட்டும் பழையன கழிதலும் புதியன புகுதலும் !!!! அது பழசாவதும்.தொடர் கதை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய குப்பைகளை பார்த்து அதற்கு இடம் செய்து வைக்கிறோம் அல்லது சுத்தம் செய்த உடன் சட்டென புதிய குப்பைகள் வந்து விடுகின்றன....!

      நீக்கு
  23. ஸ்ரீராம் நான் டைட்டில் கார்ட் போடுவதைக் கூர்ந்து பார்ப்பேன் ஆனா பாருங்க ஒரு பெயர் இருந்தா டக்குனு வாசித்திட முடியும்...பல பெயர்கள் இருந்தா அது ஓடும் ஓட்டத்தில் வாசிக்க ம்டிவதில்லை...

    நான் பார்க்க விரும்புவது, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், உதவி இயக்குனர்கள்...காஸ்ட்யூம் யாருன்னு, டப்பிங்க்...

    நன்றி போடுவாங்க பாருங்க அது எங்க ஷூட்டின் நடந்திருக்குன்னு சில சமயம் தெரியவரும்...இந்த நன்றிய பார்ப்பதுண்டு பேங்க்...இப்படி சில கண்ணில் படும். ஆனா ரொம்ப சீக்கிரம் ஓடிடும்

    ஆனால் பலதும் மறந்துடுமே!!! ஹிஹிஹிஹிஹி அதாவது எந்தப் படத்துக்கு யார்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஓரளவு பார்ப்பேன்.  ஆனால் எல்லாவற்றையும் படிக்க முடியாது, தேவையும் இல்லை.  டைரக்டர், இசை அமைப்பாளர், கதாசிரியர் நடிகை அண்டிகையார் இப்படி சில முக்கியமான விஷயங்கள் படிக்கலாம்.  மற்றவைகளை?

      நீக்கு
  24. இன்னும் சில படங்களில் படம் முடிந்த பின் யாருமே படிக்க முடியாத பொடி எழுத்துகளில் ஓடிக்கொண்டிருக்கும்.//

    ஹாஹாஹாஹா..ஆமாம் சிலதுகண்ணில் படும். இதை அவங்க முதல்லயே கொடுத்திடலாம் கடைசில யாரும் பார்க்க முடியாதபடி இருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. தலைப்பு படி குறை சொன்னால் பிடிக்காதே! எல்லோருக்கும், நமக்கும் தான்.
    சில ஓட்டல்களில் போட்டு இருப்பார்கள், குறைகளை எங்களிடம் சொல்லுங்கள், நிறைகளை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் என்று.




    அது போல குறைகளை சொல்லாமல் இருப்பதே நல்லது.

    என்னிடம் உள்ள குறைகளை சொல்லுங்கள் நான் என்னை திருத்தி கொள்ள முயல்கிறேன் என்று நல்ல மனதுடன் சொல்பவர்களுக்கு உதவி செய்யலாம்.

    //அண்ணன்-தங்கை, தம்பி உறவுகள் எல்லாம் இன்னும் மோசம். சேர்ந்து வாழ்பவர்களிடையேயே இல்லாத புரிந்துணர்வு தனித்தனியாய் வாழ்பவரிடம் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?!//

    ஆமாம், எதிர்பார்க்க முடியாது. சேர்ந்து வாழ்ந்த போது இருந்தவர்கள் இல்லை இப்போது அவர்களை மணமுடித்தவர்கள் குணநலனுக்கு ஏற்றார் போல வாழ பழகி கொண்டு இருப்பார்கள்.

    இப்போதும் நம் தம்பி தானே , அக்காதானே! என்று எல்லாம் குறைகளை சொல்லமுடியாது.

    நாம் வளர்த்த பிள்ளைகளிடம் சிறு வயதில் சொன்னோம், இப்போது பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு என்று வாழ்க்கை துணை கிடைத்தபின் குறைகளை சொல்லமுடியாது.

    குறைகளை மனதோடு வைப்போம், நிறைகளை சொல்லி மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோட்டலில் சொல்லி இருப்பது வாழ்க்கை தத்துவம்! நீங்கள் அனுபவபூர்வமாக சொல்லி இருப்பது அத்தனையும் உண்மை அக்கா. உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  27. எப்பவோ பகிர்ந்ததுதான்.. இப்போ மறுபடி...//

    பகிர்வு நன்றாக இருக்கிறது.

    எண்ணங்கள் நல்லதாக இருக்க வேண்டும். நமக்கு எதிரி மனதில் எழும் வேண்டாத எண்ணங்களே. எண்ணம், சொல், செயல் மூன்றிலும் கவனம் தேவை என்பார்கள் பெரியவர்கள்.

    எண்ணங்கள் இல்லாமல் இருக்காது. மனதில் ஓடி கொண்டே தான் இருக்கும். அதை கவனித்து முறைபடுத்த மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனித்து முறைப்படுத்துவதும் எளிதா என்ன!

      நீக்கு
    2. எளிது இல்லை எங்களுக்கு சொன்ன பாடம் மனவளகலை பயிலும் போது சொன்னது. நாள்தோறும் மனதில் ஓடும் எண்ணங்களை முறை படுத்த வேண்டும் என்று. முயற்சி செய்ய வேண்டியதுதான். எண்ணங்களை தவிர்ப்பது கடினம் தான்.

      நீக்கு
  28. உறவுக்குள் உண்மை பேசுவதும் , மனதில் இருப்பதை பகிர்வதும் இன்று அரிதாகிவிட்டது

    பதிலளிநீக்கு
  29. குறைகளை சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்வார்கள் ஏற்றுக் கொள்வதற்கும் சிலருக்குத்தான் மனநிலை இருக்கும். 'நான் பிடித்த முயல்' என இருப்பவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நன்று.

    ஜோக்ஸ் செம காமெடி.

    பதிலளிநீக்கு
  30. படித்ததை ரசித்து, பகிர்வது... பகுதி அருமை.
    எனக்கும் திருச்சி லோகநாதன் பாடல்கள் பிடிக்கும்.
    அவர் மகன்கள் பாடி பாடல்களும் பிடிக்கும்.

    மனம் கவிதை அருமை.
    எண்ணங்கள் மனதில் வந்து கொண்டே இருக்கும்.
    தினம் விழிப்புடன் சுத்தம் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. நியூஸ் ரூம் :- பானுமதி வெங்கடேஸ்வரன் பகுதி மற்றும் பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் அருமை.
    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. இப்போதைய நிலைமையில் யாருடனும் மனம் விட்டு வெளிப்படையாகப் பேச முடியலை. பேசினாலே தப்பாகிடுமோனு கவலையும், பயமுமா இருக்கு. ஆகவே மௌனமே சிறந்தது. அதே போல் யாரிடமும் உதவிகளையும் எதிர்பார்க்க முடியறதில்லை. திரு தனபாலன் அவர்கள் சொல்கிறாப்போல் அக்கா/தங்கை உறவில் அதிகம் உரசல்கள் வருவதில்லை. ஆனால் அதே அண்ணன், தம்பி எனில் உரசல்கள் அதிகமாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நண்பர் சொன்ன மாதிரியே சொல்றீங்க கீதா அக்கா.  உறவுகள் தூரமாகி விட்டன.

      நீக்கு
  33. யாரிடமும் போய் உதவி கேட்கவும் கூடத் தயக்கமாகவே இருக்கிறது. கேட்டால் தப்பாக நினைச்சுப்பாங்க. கேட்கலைனா, கேட்டிருக்கலாமே என்பார்கள். இரண்டுங்கெட்டான் நிலைமை. மனிதரை மனிதர் புரிந்து கொண்டு வாழ்ந்ததெல்லாம் சுமார் 30 வருடங்கள் முன் வரையில். இந்த ஐடி தொழில் நுட்பம் இந்தியாவில் புகுந்ததில் இருந்து மனித நேயம் என்பதே மறந்து போனது. இளைஞர்களும் அதில் கொட்டும் பணத்தைப் பார்த்து மயங்கிக் கலாசார மாற்றங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் இருக்க ஆரம்பித்து விட்டனர். இந்தியக் கலாசாரம் மட்டுமின்றித் தமிழகக் கலாசாரமும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 90 களுக்கு அப்புறம்தான் நிலைமை மாறி இருக்கிறது ன்று கணிக்கிறீர்களா?  இருக்கலாம்.  அந்தக் காலத்து கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் ஒரு காரணம்.

      நீக்கு
  34. பானுமதியின் செய்தி அறையில் கணவன் மனைவி சண்டையில் அநாதை ஆன குழந்தைகளின் நிலைமை மனதை வருத்துகிறது. இப்போதெல்லாம் பொறுமை/சகிப்புத்தன்மை என்பது மிக மிகக் குறைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படித்தான் தோன்றியது.

      கணவன் மனைவி சண்டையில் குட்டையில் விழுந்து தற்கொலை, குழந்தைகள் அனாதைகளாகி விட்ட செய்தி படித்து மனம் மிகவும் வருத்தம் அடைந்தேன். கோபத்தில் எடுத்த முடிவு ! ஏன் இப்படி பின் விளைவுகளை நினைத்துப்பார்க்காத கோபம் என்று நினைப்பு வந்து கொண்டே இருக்கிறது.

      நீக்கு
    2. ஆமாம்.. மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தி.

      நீக்கு
  35. இந்த வருஷம் தென்மேற்குப் பருவக்காற்று அத்தனை வீரியமில்லை. ஆரம்பமே தாமதம் என்றாலும் இன்னமும் சூடு பிடிக்கவில்லை. இங்கே காற்று அமோகமாக இருந்தால் தான் கர்நாடகா அணைகள் நிரம்பும். காற்றில்லாமல் மழை பொழிவது எப்படி? இந்த வருஷம் தண்ணீருக்குப் பாடு தான். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு பக்கம்.. நேற்று, இன்று சென்னையில் அனல், வெப்பம்...

      நீக்கு
  36. இன்றைய நகைச்சுவைத்துணுக்குகள் அனைத்தும் மருத்துவர் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு. மருத்துவரிடம் போயிட்டு வந்தீங்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்செயல்தான். முன்னமே ஷெட்யூல் செய்யப்பட்டது கீதா அக்கா!

      நீக்கு
  37. உலகிலேயே அதிக கோல் போட்டவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் ரொனால்டோ.//

    இத முதல்ல 'கால்' னு தப்பா வாசித்து "கருத்து அடிக்கப் போக...அப்புறம் கோல் கண்ணில் தெளிவாகத் தெரிந்துவிட்டது

    கர்நாடகாவில் மூட நம்பிக்கைகல் அதீதம்...அதுவும் இப்படி பால்ய விவாகங்கள் ரொம்ப...பருவ மழை ரொம்ப டிலே....பருவ மழை கூட பெரும்பாலும் பருவத்தில்தான் வரும் இல்லைனா தள்ளிப் போகும்..ஆனால் கல்யாணம் பட்டும் பருவத்துக்கு முன்னரே !!!

    டீவி விஷயம் கொடுமை..... மக்கள் ஏதோ ஒன்றிற்கு அடிமை ஆறாங்க

    பைலட்டுகள் இப்படியுமா?

    கீதா

    பதிலளிநீக்கு
  38. இந்த சமூகக் கல்யாணத்தில் இவ்வளவு இருக்கிறது என்பது தெரிகிறது அந்த பத்திரிகையிலிருந்து

    ஜோக்ஸ் அத்தனையும் சிரித்துவிட்டேன்....யார் ஜோக்ஸ் கார்ட்டூன்? அந்தக் குட்டிப் பையன் சிலர் தலை மூக்கு முதலில் மதனை நினைவு படுத்தியது ஆனால் மதன் இல்லை என்று தெரிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  39. முதல் பகுதியில் ஒன்றே ஒன்று விட்டுப் போச்சு என் கருத்து..

    ஸ்ரீராம் நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது சரிதான் ஆனால் எல்லாரிடத்தும் எல்லாத்தையும் ஏன் மனைவி/கணவன் குள்ளும் கூட. அதாவது "நான் என் கணவனிடம்/ம்னைவியிடம் எந்த ரகசியத்தையும் மறைக்கவே மாட்டேன் என்று இருக்க முடியாது...(முந்தைய கசமுசா விஷயத்தைச் சொல்லலையாக்கும் நோட் இட்!!! ஹிஹிஹி இது Genuine...) அதாவது குடும்பத்தில் நிகழும் உதாரணத்திற்கு மாமியார் மருமகள் பிரச்சனையை எல்லாம் கணவனிடம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது போல கணவனும்...அது வேண்டாத பிரச்சனைகளை வரவழைக்கும். நல்லதல்ல. அது போல சில வம்புகள் கணவன் காதுக்கு எட்டினால் அது அவர் கோபத்தைட் தூண்டும் மனம் புண்படும் என்றால் அதே பொல மனைவிக்குப் புண்படும் கோபம் வரும் என்றால் இருவருமே ஒருவருக்கொருவர் அதைப் பற்றிப் பேசாமல் சொல்லாமல் இருப்பது என்னைப் பொருத்தவரை தவறு இல்லை. சரி என்பேன். இது உடனே உண்மையாக இல்லை என்ற அர்த்தம் கிடையாது. இடம் பொருள் ஏவல்...

    ஒரு இடத்தில் / குடும்பத்தில் ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் என்றால் அந்த இடத்தில் உண்மையைச் சொல்லாமல் இருத்தல் அல்லது வேறு விதமாகப் "மாசற்ற பொய்" சொல்ல நேர்ந்தாலும் உண்மையாக இல்லை என்று சொல்ல முடியாதே அங்கு அது நல்லதை விளைவிக்கிறதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. spur ஐ ஸ்ரீராமுக்கு கொடுத்து விட்டீர்கள் போல் இருக்கிறது. அவரும் கால்கட்டு, மேலே பாருங்கள்.

      நீக்கு
    2. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்!

      நீக்கு
    3. // spur ஐ ஸ்ரீராமுக்கு கொடுத்து விட்டீர்கள் போல் இருக்கிறது. அவரும் கால்கட்டு, மேலே பாருங்கள். //

      அபுரி!

      நீக்கு
    4. ஓ..   வலது பாதம் நொண்டல் பற்றியா?  ஓகே ஓகே...  ஆனால் கீதா பிரச்னை குதிகால் வலி.  அதுவும் எனக்கும் உண்டு!

      நீக்கு
    5. கால்மேனியம் ஸ்பர் எனக்கும் அவ்வப்போது வருகிறது. கால்களில் மட்டும் சுமார் பத்துப் பனிரண்டு பிரச்னைகள்! :( ஆர்த்ரிடிஸ், ருமாடிஸம், கவுட், வெரிகோஸ் வெயின் என ஏதேனும் ஒன்று நாள் பார்த்துக் கொண்டு படுத்தி எடுக்கும். இப்போப் புதுசாக் கால் விரல்களிலும் வலி அவ்வப்போது வருகிறது.

      நீக்கு
    6. ஸ்ரீராம் அதே பொய்மையிடத்தும் வாய்மை..

      ஜெகே அண்ணா, ஸ்ரீராம்., கீதாக்கா, ஹையோ எனக்குக் குதிகால் வலி இல்லையாக்கும்....இது குதிகால் குருத்தெலும்பு வெளியில் துருத்தி டென்டனிட்டிஸை கீறி inflammation. அதனால் toe அழுத்தி ஊன்ற முடியாமல் ஊன்றினால் ஆடுகால் தசை இழுத்து ....ஸ்போர்ட்ஸ் மக்களுக்கு வருமே!!! அது போல...ஹிஹிஹிநானும் ஸ்போர்ட்ஸ் பெண்ணல்லோ?!!!!

      .அதுக்கு ஃபிசியோ போய்..Splint போட்டு ..இப்போது நம் இயல்பான நடை 75% வந்துவிட்டது......calf muscles, toe exerises இந்தப் பிரச்சனை வருவதற்கு முன்னும் தினமும் செய்தவை தான் இப்போது அதையே செய்து கொண்டிருக்கிறேன். பயிற்சிகளை விடாமல் செய்வதால் எளிதாக மீள்றீங்கன்னு physiotherapist சொன்னார்.

      கீதா

      நீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இன்று மற்ற பகுதிகளும் அருமை. பிரபல பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலில் பல பாடல்கள் நன்றாக இருக்கும். அவரது மகன் பாடிய விநாயகர் அகவல் வீடீயோவாக வருவதை இப்போதும் பார்த்து கேட்கிறேன். குடும்பமே நல்ல குரல் வளங்களில் சிறப்பாக திகழ்வதற்கு நல்ல தவம் (கொடுப்பினை) செய்திருக்க வேண்டும்.

    முன்பு திரைப்படங்களில் டைட்டிலில் (அனைத்து ஊழியர்களையும் குறிப்பிட்டு) போட்டு பின்பு சவுண்டில் அதிரடியாக (இல்லை மென்மையாக) இயக்குனர் பெயர் தந்த பிறகுதான் படத்தின் முதல் காட்சி ஆரம்பிக்கும். சில சமயம் நடுவில் வந்தும் இயக்குனர் மிரட்டுவார். இந்த ஒழுக்கங்கள் நாளாவட்டத்தில் தவறி விட்டது. படங்களின் இறுதியில் தேசிய கீதமும் ஒலிக்கும் காலகட்டங்கள் அவை. இப்போது திரைப்படம் பார்த்து முடித்தவர்கள் அவரவர் வீட்டுக்கு போன பின்பும் (திரையரங்கம் அருகிலேயே வீடிருந்தால்) படத்தில் பங்கேற்றவர்களின் பெயர்கள் திரையில் போய் கொண்டேயிருக்கும். எப்படி அவர்களால் பார்க்க இயலும்.? :))

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சி லோகநாதன் மகன் விநாயகர் அகவல் பாடி இருக்கும் தகவல் எனக்குப் புதிது.  நான் சீர்காழி பாடியதை மட்டுமே கேட்பேன்.  டைட்டில் கார்ட் விஷயத்தில் ஒரு சில முக்கியமான விவரங்கள் தவிர மற்றவற்றை நான் படிப்பதில்லை.  பெரும்பாலானோர் படிக்கவும் மாட்டார்கள் என்பதே உண்மை.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  42. இனிய தகவல் தொகுப்பு. எண்ணங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  43. மனம் விட்டுப் பேச ஒவ்வொருவருக்கும் சிலரேனும் இருக்க வேண்டும். இந்த வழக்கம் குறைந்து வருவது உண்மைதான்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!