வெள்ளி, 30 ஜூன், 2023

வெள்ளி வீடியோ : என்ன லீலை கண்ணன் வேலை இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழிவிடு

இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'நீயல்லால் தெய்வமில்லை'. யார் எழுதியது என்று தெரியவில்லை. அநேகமாக சீர்காழி அவர்களே இசை அமைத்து பாடியிருப்பார்.

ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
“நீதி தழைக்கின்ற” போரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…

நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை! 

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!

குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்!
திருவே நீயென்றும் என்
உள்ளம் நிறைந்தாய்!

நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்!

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!

நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!

முருகா சரணம்!!!!

========================================================================================

அலை ஓசை..   இது கல்கி நாவலுமில்லை, நாளிதழும் இல்லை.  தமிழ்திரைப்படம்!


சிறுமுகை ரவி கதை, இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திலிருந்து னக்குப் பிடித்த ஒரே பாடலான நீயா அழைத்தது பாடல் இன்றைய பகிர்வு.


வைரமுத்து பாடல்.  இளையராஜா இசை.  எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி குரலில் ஒரு அருமையான பாடல்.


காட்சியோடு வேண்டுமென்றால் இங்கே பார்க்கலாம்.  பாடலை முழுமையாக ரசிப்பதற்காக காட்சி இல்லாமல் பகிர்ந்திருக்கிறேன்.


நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா
வெண்ணிலவு தரை வந்தால் ஆறோடுமா
பெண்மை குளித்ததில் தன்னை மறந்தது நீரோடை
கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
காற்றே வாழ்க காதல் தேவன்
நன்றி சொல்கிறேன்
என்ன லீலை கண்ணன் வேலை
இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழிவிடு
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா
காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா
சேலை பூக்களில் தேனை திருடுது பொன் வண்டு
ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று
எண்ணி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளி கொள்ளுமா
கேள்வி என்ன, கேலி என்ன, இல்லை இதில் வரைமுறை
தென்றல் தொடும் இருவரை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது...

62 கருத்துகள்:

  1. முதல் பாடல் பல முறைகள் கேட்டு ரசித்தது.

    அலை ஓசை பாடல் ரசித்து கேட்ட பாடல் விஜய்காந்த் - நளினி நடித்ததுதானே ஜி ?

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
    தீது புரியாத தெய்வமே – நீதி தழைக்கின்ற திருப்போரூர் தனிமுதலே நாயேன்
    பிழைக்கின்ற வாறுநீ பேசு..

    இந்தப் பாடல் திருப்போரூர் சந்நிதி முறை..

    திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள் தியான நிலையில் பாடியருளியது ..

    ஸ்வாமிகள் இது போல நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்..

    அந்த வெண்பாவிற்கும் நீயல்லால் - எனத் தொடங்கும் பாடலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி பாடலை இணைக்க நினைத்தால் அது 'வீடியோ அன் அவைலபிள்' என்று வருகிறது. பாடலை இங்கே இணைக்க வேண்டும் எனில் கிடைப்பதை இணைக்க வேண்டும். இதுதான் கிடைத்தது. ரேடியோவில் கேட்ட காலத்தில் இந்த முன் இணைப்பு கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே...

      நீக்கு
  4. நீயல்லால் - எனத் தொடங்கும் பாடல் எப்போதும் தான் இருந்தது.. பின்னாளில் இசை நிகழ்ச்சிகளில் அந்த வெண்பாவையும் சேர்த்துப் பாடி - மனதை உருக்குவது வழக்கமாகி விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி, வெண்பாக்கள், விருத்தங்கள் போல் பாடி பாட்டை எடுப்பது கச்சேரிகளில் செய்வதுண்டுதான். அப்படிப் பாடும் போது இப்படியும் பாக்கள் இருக்கின்றன அது என்ன பா, என்று தெரிந்து கொள்ள உதுவும்தானே. எனக்குத் தெரிந்து என் வட்டத்திலேயே இப்படித் தெரிந்துகொள்பவர்கள் உண்டு. பாடுவதற்கும் கூட.

      கீதா

      நீக்கு
    2. நேக்கு அதில் எல்லாம் நாலட்ஜ் இல்லை கேட்டேளா...!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  6. நீயல்லால் - எனத் தொடங்கும் பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள் எழுதியதாக இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  7. ./// ஒயாமல் ஒளியாமல்///
    இது பிழை..

    " ஒயாமல் ஒழியாமல் " - இதுதான் மூல பாடம்..

    பிழையான இந்த வார்த்தைகளில் எனக்கு அப்போதிருந்தே உடன்பாடு இல்லை..

    " ஒயாமல் ஒழியாமல் " - எனில் முருகனுக்கு ஏது ஓய்தலும் ஒழிதலும்?..

    ஒயாமல் ஒளியாமல் - எனில் அர்த்தமே வேறு!..

    பதிலளிநீக்கு
  8. நல்ல தெய்வீக அதிர்வு தரும் பாடல்களுடன் எதற்காக காலக் கொடுமைக் குப்பைகளை இணைத்துத் தர வேண்டும்?..

    வயிர முத்தர் எலுதியவை (!),
    பாலு பாடியவை எல்லாமே அமுத (!) கானங்களா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு பிடித்தவை சிலருக்கு பிடிக்காததாக இருக்கலாம் .அவரவர் ரசனை..

      நீக்கு
  9. நீயா அழைத்தது - எனும் வயிர முத்தின் பாடல் எப்போதுமே பிடிக்காது..
    கீழ்த்தரம்.. இவிங்களோட வக்கிரத்துக்கு கண்ணனைக் கூட்டு வைத்துக் கொள்வது என்ன நியாயம் ?..

    உண்மையில் இதைக் கண்டு ஒதுங்கிப் போவதே சாலச் சிறந்தது..

    துறவியாரது வரிகளுக்கு ஈடாகுமா இது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதனோடு எதை ஒப்பீடு செய்வது? இது வேறுவிதம், அது வேறு விதம்.

      நீக்கு
    2. ஓட்டக்கருவாட்
      ஓட்டக்கருவாட்
      ஓட்டக்கருவாட்

      இப்படியொரு பாடல் மிகப்பெரிய பாப்புலராகி விட்டது

      இதன் அர்த்தம் ?

      நானும் இதற்கு இணையாக பாடல் எழுத முயல்கிறேன் தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை.

      நீக்கு
    3. இந்தப் பாடல், அதாவது நீங்கள் சொல்லி இருக்கும் பாடல், என்னுடைய விருப்ப லிஸ்டில் இல்லை.

      நீக்கு
    4. ஹா.. ஹா.. எனது லிஸ்டில் மட்டும் இருக்குமா ஜி ?

      நீக்கு
    5. நான் எந்த ஒப்பீடும் செய்யவில்லையே..

      நீக்கு
  10. சேலை பூக்களில் தேனை திருடுது பொன் வண்டு..

    சேலைப் பூ - என்றால் என்ன?..

    சேலையில் அச்சடிக்கப் பட்டவைகளா?..

    சொற்குற்றம் பொருள் குற்றம் இல்லாமல் திரைப்பாட்டு கூட எலுதத் (!) தெரியாத வயிர முத்தர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்பாடல்களில் மலினம் என்பது இன்று நேற்று அல்ல, 1935 வாக்கிலேயே இருப்பது தான். அதற்கு உதாரணமும் நான் முன்பு சொல்லி இருந்தேன். முருகனைக் குறித்து பாடும் ஆலோலம் பாட்டில் சில வரிகளை குறிப்பிட்டு முன்னர் ஒரு உதாரணம் சொல்லியிருக்கிறேன். இப்போது இது புதுசா என்ன..

      நீக்கு
  11. ஒரு சிலருக்கே இயற்றவும் தெரியும்.. எழுதவும் தெரியும்!..

    அவர்களையே புலவர் , கவிஞர் என்றது தமிழுலகம்..

    அவர்களே -
    பேர் கண்டவர்..
    சீர் கொண்டவர்..
    புகழ்தனை வென்றவர்
    புவிதனில் நின்றவர்..
    மற்றோர் அனைவரும்
    புழுதியில் புரண்டவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் பெற்ற கவிஞர்களும் எலந்த பழம் காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை போன்ற பாடல்களை எழுதியிருக்கின்றனர்..

      நீக்கு
    2. அது ஏதாவது நிர்பந்தமாக இருக்கலாம்...

      டப்பா வார்த்தைகளை வைத்தே வயிறு வளர்க்க வில்லை..

      நீக்கு
    3. வைரமுத்துவை பல்வேறு வகைகளில் எனக்கும் பிடிக்காது. ஆனால் அவரது பல்வேறு பாடல் வரிகள் எனக்குப் பிடிக்கும்!

      நீக்கு
    4. ஸ்ரீராம்ஜி சொன்னதே எனக்கும்...

      நீக்கு
    5. டிட்டோ - ஸ்ரீராம். எனக்கும் பல பாடல் வரிகள் பிடிக்கும்.

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இனிமையான பாடல். சீர்காழி அவர்களின் முருகன் பாடல் கேசட் தொகுப்பில் அடிக்கடி கேட்டு உள்ளம் உருகிய பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது திரைப்பட பாடல் இதுவரை கேட்டதில்லை. பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...
      பாடல்களை bhaaவங்களுக்காக ரசிக்கலாம், இசைக்காக ரசிக்கலாம், குரலின் குழைவுகளுக்காக ரசிக்கலாம்.. ரசனைகள் பலவிதம். கேட்டு ரசித்து விட்டு சொல்லுங்கள்.

      நீக்கு
    2. ஆமா ஸ்ரீராம். டிட்டோ...

      கீதா

      நீக்கு
  13. நீயா அழைத்தது இதே மெட்டில் "சாதனை" திரைப்படத்தில் "அத்திமரப்பூவிது" என்ற பாடல் உண்டு ஜி

    அதுவும் நளினி நடிக்கும் பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கில்லர்ஜி அப்ப இந்தப் பாட்டுதானோ....நானும் கீழே இதே மெட்டில் ஒரு பாட்டு உண்டே வார்த்தைகள் டக்கென்று வரவில்லைனு சொல்லியிருந்தேன்....அத்திமரப்பூவிது பாடலா...கேட்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. அத்திமர பூவிது பாடல் இதே மெட்டா என்று எனக்கு இதுவரை உரைத்ததில்லை!!

      நீக்கு
    3. கில்லர்ஜி கேட்டுவிட்டேன் இந்தப் பாட்டுதான்...அப்ப எனக்கு வரிகள் கிடைக்கலை......ஸ்ரீராம் இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்துக்கேட்டுப் பாருங்க...

      கீதா

      நீக்கு
  14. இன்றைய தலைமுறைகளுக்கு ரசனை மாறிவிட்டது என்று சொல்வது தவறு.

    ரசனை என்ற வார்த்தையே தெரியவில்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனை என்பதற்கு அவர்களுக்கும் இருக்கும். மாறுபட்ட ரசனைகள்.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
    அடுத்த பாடல் கேட்டது இல்லை. படம் வந்ததும் தெரியாது.
    இன்று கேட்டேன், இசை நன்றாக இருக்கிறது. இதே ராகத்தில் நிறைய பாடல்கள் கேட்டது போல் இருந்தது. தேவகோட்டை ஜியும் சொல்லி இருக்கார், அந்த பாடலை கேட்டுப்பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பாடல்களா... யோசித்துப் பார்க்கிறேன் அக்கா.

      நீக்கு
  17. வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன் - என்று இல்லாவிட்டாலும்,

    சேலை பூக்களில் தேனை திருடுது பொன் வண்டு போன்றவை வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து..

    பிழையெனில்,

    அதுவும் தமிழ்.. இதுவும் தமிழ்..

    - என்று ஒதுங்கி நடக்க வேண்டியது தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌரவமாக வார்தைகள் அமைந்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை அண்ணா.. ஆனால் பாடல் ரசிக்கக் கூடியது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

      நீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் என்றாலும் முதல் பாடல் அடிக்கடி கேட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.. வணக்கம். நீங்கள் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்சி.

      நீக்கு
  19. முதல் பாடல் எவ்வளவோ முறை கேட்டு ரசித்தது....அருமையான பாடல். பாடல் மட்டுமே கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். இப்போது பாடலுடன் கூடவே முதலில் விருத்தம் பாடிக்கேட்பது நன்றாக இருக்கிறது. இப்படி விருத்தங்கள் பாடி கிருதி பாடுவது கர்நாடக சங்கீதத்தில் பாடுவாங்களே....அப்படி...இப்படி மேடைகளில் பாடும் போது அந்த விருத்தம் எங்கிருந்து யார் எழுதியது என்று தேடத் தோன்றி புதியதாக ஒன்றை கற்க வைக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இப்படிச் செய்வது.

    நானும் கூட சில பாடல்கள் பாடும் போது தெரிந்த இப்படியான ஒன்றை விருத்தமாகப் பாடி பாடலை எடுப்பதை பயிற்சி செய்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இரண்டாவது பாடல் நீயா அழைத்தது பல முறை கேட்டதில்லை அப்ப இலங்கை வானிலி கிடையாதே. ஆனால் கேட்டிருக்கிறேன். எஸ் பி பி கிமிக்ஸ் சில வார்த்தைகளில்....அருமை. ரசித்தேன். இதைக் கேட்டதும் வேறு ஒரு பாடல் இப்படியே இருக்கும் கேட்ட நினைவு ஆனால் வார்த்தைகள் டக்கென்று கிடைக்கவில்லை. ஆனால் இப்படியே தான் இதே மெட்டு....இப்படியே ஆனால் இரண்டும் வேறு வேறு ஸ்ருதியில் எடுப்பு....ஆனால் மெட்டு மாறாது. இதில் இசை வருகிறது முதலில் அதில் ஹம்மிங்க் ஆலாப் என்று நினைவு. ஆனால் ஜானகி தான் பாடியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜானகி அவங்க எடுக்கும் போது இரண்டும் ஒரே ஸ்ருதியில்தானோ என்று டவுட்டும் வருது...ஆனால் இதே இதே இதே மெட்டு. வரிதான் டக்கென்று கிடைக்கவில்லை படம் எல்லாம் என்ன என்றும் தெரியாது

      கீதா

      நீக்கு
    2. நான் இந்தப் பாடலை அதிகம் கேட்டது மதுரை வானொலியில்.. அப்படியே ரேடியோவிலிருந்து கேசெட்டில் ரெகார்டும் செய்து வைத்திருந்தேன்.

      நீக்கு
  21. முதல் பாடல் மனப்பாடம். அதுவும் சீர்காழி வேறே. இரண்டாவது படமும் தெரியாது. பாடலும் கேட்டதில்லை. வைரமுத்து எனக்குப் பிடித்த கவிஞரும் இல்லை. நான் அவர் கவிதைகளை ரசித்ததே இல்லை. வைரமுத்து பெயரைப் பார்த்ததுமே கடந்து போயிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்ல முடியாது. சில வரிகள் உதாரணத்துக்குச் சொல்கிறேன்..

      ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
      கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்

      நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
      தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்

      வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
      பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
      ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
      காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
      வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்

      நீக்கு
    2. எழுதுறதுல பல வார்த்தை சமஸ்கிருதம்!..

      பேசுறது எல்லாம் திராவிடம்.. ஆரிய எதிர்ப்பு!..

      நீக்கு
  22. முருகன் பாடல் பல தடவை கேட்டிருக்கிறேன்.
    அடுத்தபாடல் நினைவில் இல்லை கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!