ஞாயிறு, 25 ஜூன், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 02

 

வைரமுடி யாத்திரை – ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர்  பகுதி 2

தொட்டமளூர் அப்ரமேயஸ்வாமியையும் நவநீத கிருஷ்ணரையும் சேவித்துவிட்டு ஸ்ரீரங்கபட்டினத்தை நோக்கிச் சென்றோம். மாலை 6 ½ மணிக்குத் தங்குமிடத்தை அடைந்தோம். பேருந்து பயணத்தின்போதே மைசூர்பாக்கும், காராபூந்தி பாக்கெட்டும் கொடுத்தார்கள். இங்கு முதல் மாடியில் 4 அறைகள் இருந்தாலும், எல்லாமே சுமார் ரகம்தான். ஆனால் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த ஹால், நிறைய மின்விசிறிகள் மற்றும் மொபைல் சார்ஜிங்குக்கான ப்ளக்குகள் இருந்தன. 4 பேர் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டாலும் (மற்றவர்கள் ஹாலில்), நான் இரவு படுப்பதற்கு ஹாலைதான் உபயோகித்தேன்.

எல்லோரும் அவரவர் உடைமையை வைத்து செட்டில் ஆனபிறகு, காபி சாப்பிட்ட பிறகு, கோவிலை நோக்கிச் சென்றோம். இங்கு முதன்மையான கோவில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம். ஸ்ரீரங்கபட்டினத்தின் பெரும்பகுதி கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. இங்குதான் திப்பு சுல்தானின் அரண்மனைச் சிதிலங்களும், அவன் உபயோகித்த மசூதியும், சிறைச்சாலையும், போரில் காயம்பட்டு அவன் உடல் கிடந்த இடமும் இருக்கின்றன. ரங்கநாதர் ஆலயத்திற்கு நாங்கள் தங்கிய இத்திலிருந்து நடந்து சென்றுவிடலாம். வழியில் மிகப் பழமையான உக்ர நரசிம்மர் ஆலயமும் உண்டு. இவை அனைத்தும் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் இருக்கின்றன.  இந்த இடத்தின் அருகிலேயே காவிரி கரைபுரண்டு ஓடுகிறது.

நான் சென்றிருந்தபோதெல்லாம், நரசிம்மர் ஆலயம் இரவில் நடைசாற்றியிருப்பார்கள். காலையில் 9 மணிக்குத்தான் நடை திறக்கும். (காரணம் பக்தர்கள் வருகை குறைவு). ஆனால் அன்று கோவிலில் விசேஷம் என்பதால், கோவில் திறந்திருந்தது. முதலில் நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்றோம். உற்சவர் புறப்பாட்டிற்காக மஞ்சளும் சந்தனமும் சேர்த்து கவசம் சார்த்தியிருந்தார்கள்.


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி ஆலயம் 9ம் நூற்றாண்டில் திருமலைராயன் என்ற அரசனால் கட்டப்பட்து. 17ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் சீர்செய்யப்பட்டது.




நரசிம்மர் சந்நிதிக்கு வலது புறத்தில், மைசூரின் புகழ்பெற்ற அரசனான கந்தீவர நரசராஜ உடையாருக்கு ஒரு சிலை, சிறிய அறையில் இருக்கிறது. இந்த அரசன் 17ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலைச் சீர்படுத்தியவன். அரசருக்கு உரிய உடையலங்காரத்துடன் கூடிய 1 மீட்டர் உயரமுள்ள சிலை, அந்த அரசன் நினைவாக கோவிலுக்குள்ளேயே அமைத்திருக்கின்றனர்.

நரசிம்மரைச் சேவித்த பிறகு, ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றோம். கூட்டமில்லை. ரங்கநாதரைச் சேவித்த பிறகு மீண்டும் நரசிம்மர் கோவிலுக்கு வந்து புறப்பாட்டில் கலந்துகொண்டோம். புறப்பாடு என்பது நரசிம்மர் உற்சவரை, கோவிலுக்குள்ளேயே பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பிரகாரத்தில் சுத்திவருவார்கள். அதில் கலந்துகொண்டு பிரசாதங்களும் வாங்கிக்கொண்டு (கூடவே சேவித்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு, சிறிய மாலையையும் கழுத்தில் அணிவித்தார்கள். பிறகு வந்திருந்த சுமார் 50 பேர்களுக்கு தட்டு போட்டு, புளியோதரையும் கோசுமல்லியும் கொடுத்தார்கள்) நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தோம்.


நான் சென்ற யாத்திரைக் குழுவை நடத்துபவர் எப்போதும் உணவு விஷயத்தில் மிக மிக நன்றாக கவனிப்பார்கள். அன்றைய இரவு உணவு, வெண்டைக்காய் சாம்பார், கத்தரி கறியமுது, சௌசௌ கூட்டு, ரசம், ரவா கீர்.  மறுநாள் காலை 6 மணிக்கு காபிக்குப் பிறகு அருகிலிருக்கும் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு 7 ½ க்கு ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யச் சொன்னார்கள்.

ஸ்ரீரங்கபட்டினா, ஹைதர் அலி மற்றும் அவனது மகன் திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கிற்று. மைசூரிலிருந்து சுமார் 16 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த இட த்தில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை அமைந்திருந்தது.  ஸ்ரீரங்கபட்டினம், எல்லாப்புறமும் காவிரி ஆற்றால் சூழப்பட்ட ஒரு தீவு. (ஸ்ரீரங்கம் போன்று). இங்கிருக்கும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தால்தான் இந்த இடம் ஸ்ரீரங்கபட்டினம் என்று அழைக்கப்பட்ட து.

இந்த ஆலயம் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆதிசேஷன் மடியில் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் ஸ்ரீரங்கநாதர், கர்நாடகாவிலேயே பெரிய சிலாமூர்த்தி. ஸ்ரீரங்கநாதர் பாதத்தின் அருகில் கௌதம முனிவரும் காவிரியும் அமர்ந்த நிலையில் இருக்கிறார்கள். கோவிலின் அர்த்த மண்டபத்துக்கு நுழையும் வழியில் சதுர்விம்சதி என்று அழைக்கப்படும் இரண்டு தூண்களில், விஷ்ணுவின் 24 வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன (முந்தைய நாள் இரவு, அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தனர். அப்போது இரவு என்பதால் தெளிவாக இல்லை. மறுநாள் காலையில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மறுநாள் வந்த அலுவலர், புகைப்படம் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. அடுத்த முறை செல்லும்போது புகைப்படம் எடுப்பேன்)

கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு, மூன்று ரங்கனை ஒரே நாளில் தரிசிப்பது முக்கியம். ஆதிரங்கர் (ஸ்ரீரங்கபட்டினா), மத்திய ரங்கர் (சிவணசமுத்ரா) மற்றும் அந்த்ய ரங்கர் (ஸ்ரீரங்கம்). நாங்கள் ஒருமுறை இப்படிச் சேவித்திருக்கிறோம். அப்போது காலையில் ஸ்ரீரங்கபட்டினாவில் காவிரி ஸ்னாநத்திற்குப் பிறகு சேவித்துவிட்டு, மத்திய ரங்கம் சென்று சேவித்து (அப்படியே அருகில் இருக்கும் சத்யகாலா என்ற இட த்திற்குச் சென்று அங்கு இருக்கும் கோவிலிலும் சேவித்தோம். இங்கு, ஸ்ரீரங்கத்தில் முஸ்லீம் படையெடுப்பு நடந்தபோது-13ம் நூற்றாண்டு, ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி, சமயநூல்களைக் காக்கும்பொருட்டு அவற்றை எடுத்துவந்து வேதாந்த தேசிகர் கர்நாடகாவிற்கு வந்து சத்யாகாலத்தில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தார். இந்தப் பயணத்தைப் பற்றி பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்.) பிறகு ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாதரைச் சேவித்தோம். நாங்கள் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரைச் சேவிக்கும்போது இரவு 8 ½ மணி.

பெங்களூர் மார்ச் முதல் மே இறுதி வரையில் கொஞ்சம் சூடாக ஆரம்பித்திருக்கிறது. நான் வீட்டில் ஏசி உபயோகிக்கிறேன். பசங்க அறைகளுக்கு ஏசி இன்னும் வாங்கவில்லை. ஸ்ரீரங்கபட்டினமும் கொஞ்சம் கசகசவென்றே இருந்தது.  நான் ஹாலிலேயே படுத்துக்கொண்டேன்.  காலை 4 மணிக்கு எழுந்து, 1 ½ மணி நேரம் நடந்தேன். காபிக்குப் பிறகு காவிரி ஆற்றிர்க்குச் சென்று ஸ்நானம் செய்தோம்.


தண்ணீரில் வேகம் இருந்தது. இந்த ஆற்றில் குளிப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமானது

உடை மாற்றிக்கொண்டு, ரங்கநாதர் கோவில் விஸ்வரூப தரிசனத்திற்குச் சென்றோம் (7 ½ மணிக்கு விஸ்வரூபம்). கோவிலில் பல்வேறு சந்நிதிகளில் சேவித்த பிறகு 9 ¾ க்கு எல்லோரும் கோவிலை விட்டு வெளியில் வந்தோம்.




இந்தக் கோவிலில் மூலவரைப் பார்த்த மாதிரி, அர்த்த மண்டபத்திற்கு முன் மண்டபத்தில் இரண்டு பெரிய திருவுருவங்களாக கருடர் சந்நிதியும் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளன.  அதற்கு அருகிலேயே வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவேங்கடமுடையான் சந்நிதி அமைந்துள்ளது (ஆஞ்சநேயரும் அவர் பிரதிஷ்டை செய்தது என்று சொல்கின்றனர்) திருவேங்கடமுடையான் இளைய கோலத்தில், பிரபாவளியுடன் சேர்ந்த திருவுருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. கருட வாஹனத்துடன் கூடியது. மிக அழகான சந்நிதி. 

பழமை படிந்த, அழகாகக் கடையப்பெற்ற கோவில் தூண்கள்.


கோவில் கருவறையில் சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர். திருமார்பில் மஹாலக்ஷ்மி.

அழகிய யானைச் சிற்பங்கள் இரண்டு பகுதியிலும்.


(இணையத்திலிருந்து)

அடுத்து எப்போது மீண்டும் இந்தக் கோவிலுக்கு வருவதற்குப் ப்ராப்தம் இருக்கிறதோ என்ற நினைவில் கோவிலை விட்டு வெளியே வந்தேன். இதற்குப் பிறகு எங்கே சென்றோம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

( தொடரும்) 

 

92 கருத்துகள்:

  1. கட்டுரையும் படங்களும் நிறைவாக உள்ளன. என்ன சாப்பிட்டோம் என்பது வரை ஞாபகம் வைத்து எழுத ஏதாவது டைரி குறிப்புகள் செய்தீர்களா?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்... அவ்வப்போது அலைபேசியில், மனைவிக்கு விஷயத்தைச் சொல்லிவிடுவேன். அதனால் நினைவில் இருக்கும். சில நேரங்களில் எழுத மறந்தாலும் சாப்பிட்டது நினைவில் வரும் (ஆனால், நான் ரசம், மோர், ஒரு குழம்புக்கு மேல் இருந்தால், அவற்றைச் சாப்பிட மாட்டேன். அதனால் நினைவில் இருக்காது)

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் இதனைப் படித்த போது, கமலா ஹரிஹரன் மேடமும், இந்த நாளை இனிய நாளாக ஆக்கவேண்டும் என்று இறைவனுக்கு ஆர்டர் போடுவாரே என்று தோன்றியது. இதற்கு பதில் எழுதத் தோன்றவில்லை துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. படங்கள் எல்லாம் அருமையோ அருமை, நெல்லை. சிற்பங்களும், தூண்களும் அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை...ரசித்துப் பார்த்தேன். ஸ்ரீரங்கப்பட்டினம் சென்றும் அதே வருடங்கள் ஆகிவிட்டட்ன. அப்ரமேயர், ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை மூன்றும் ஒரே சமயத்தில் சென்று வந்ததால்...அதன் பின் செல்லவில்லை. ஒரு முறை போய் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீரங்கப்பட்டினம், தலைக்காடு எல்லாம்..

    எனக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அந்த காவிரி கரைபுரண்டு ஓடியது இன்னும் நினைவில் இருக்கிறது. படம் ரொம்ப ரசித்தேன், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). எல்லாவற்றையும் கம்பைன் பண்ணினால், பயணம் செல்லத் திட்டமிடுவது கடினம். அப்ரமேயர், ஸ்ரீரங்கபட்டினம், காவிரியில் ஸ்நானம் என்று ஒரு ட்ரிப் வைத்துக்கொள்ளலாம். எனக்கும் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்ட பஞ்ச வைணவத் தலங்களையும் (விஷ்ணு தலங்கள்) சேவிக்கணும் என்று எண்ணம். பேசாமல், கர்நாடக டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். அவங்களே பலவிதத் திட்டங்களும், சைவ உணவும், தங்குமிடத்தையும் பார்த்துப்பாங்க.

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை எல்லாம் ஒரே நேரத்தில் இல்லை....தனி தனியாக....தலக்காடும் என் லிஸ்டில் உண்டு. இங்க பகக்த்துலதான்....ஆனா அதுக்குமே வாய்ப்பு வரலை இன்னும்.

      ஆமா மார்ச் ல கூட அவ்வளவு வெயில் இல்லை நெல்லை....ஏப்ரல் கடைசில மகன் வந்தப்ப அவன் போற போது கூட நல்லாருந்துச்சு அதுக்குப் பிறகு மே நடுலதான் வெயில். ஆனால் இங்கு வீட்டிற்குள் தெரியவில்லை. வெளியில் அதுவும் மதியம் சமயம் போனா..

      அதுக்கு அப்புறம் இப்ப ஓகே

      கீதா

      நீக்கு
    3. இதுக்கு கமென்ட் போட்ட நினைவு காணவில்லையே

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் கம்பைன் பண்ணி இல்லை நெல்லை. தனிதனியாகத்தான்....தலக்காடும் என் லிஸ்டில் உண்டு.

      //எனக்கும் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்ட பஞ்ச வைணவத் தலங்களையும் (விஷ்ணு தலங்கள்) சேவிக்கணும் என்று எண்ணம். பேசாமல், கர்நாடக டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். அவங்களே பலவிதத் திட்டங்களும், சைவ உணவும், தங்குமிடத்தையும் பார்த்துப்பாங்க.//

      சீக்கிரம் நடக்கட்டும் நெல்லை....ஆமாம் கர்நாடக டூரிஸ்ஸ்ட் பஸ் நிறைய டூர் நல்ல திட்டங்களும் வைச்சிருக்காங்க...

      எனக்கு ஹம்பி, ஹளபைடு போக ஆசை ரொம்ப உண்டு ஆனால் இரண்டிற்கும் இடையில் தூரம் உண்டு. இரண்டையும் கம்பைன் பண்ண வேண்டும் என்றால் குறைந்தது 5 நாட்கள் வேண்டும்

      கீதா

      நீக்கு
    5. //நெல்லைத் தமிழன்25 ஜூன், 2023 அன்று முற்பகல் 9:37
      வாங்க கீதா ரங்கன்(க்கா).//

      எதுக்கு பிரக்கட் போட்டெல்லாம் ஒவ்வொருமுறையும் கஸ்டப்படுறீங்க நெல்லைத்தமிழன் சேட்டா:)) ... இல்லையெண்டால் "டகோதரி" போட்டெழுதலாமே ஹா ஹா ஹா

      நீக்கு
    6. ஒரு வருஷத்துக்கு மேல் பெரியவங்கன்னா அக்கா ன்னு போட்டு எழுதலாம் (ஆமாம் ஒருவரை எத்தனை வயது வரை 'அக்கா' என்று அழைக்கவேண்டும்? அதாவது நமக்கும் அவருக்கும் உள்ள வயது வித்தியாசம்). ஆனால் கீதா ரங்கன்(க்கா) ஓரிரு மாதங்கள்தாம் என்னைவிடப் பெரியவர்(னு அவங்களே சொல்லிக்கறாங்க. வருட வித்தியாசம் பத்தி அவர் ஒண்ணும் என்னிடம் சொல்லலை)

      நீக்கு
    7. ஆவ்வ்வ்வ்வ் சந்தடி சாக்கில கீதாவையும் வெளியே கொண்டு வந்திட்டார் நெ தமிழன்.. உப்பூடித்தான் இருக்கோணும்:)).. அப்பூடியே ஸ்ரீராம் பற்றியும் சொல்லிடுங்கோ.. நான் மாற்றிக் கணக்குப் பார்த்துக் கண்டு பிடிச்சிடுவேன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  4. மறுநாள் வந்த அலுவலர், புகைப்படம் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. அடுத்த முறை செல்லும்போது புகைப்படம் எடுப்பேன்)//

    ஆஆஆஆ எப்பூடி? அலுவலருக்குத் தெரியாமலா!!! ஹாஹாஹா ஏன் இரவு அனுமதி கொடுத்தார்? தெளிவாக வராது என்றா?

    ச்ரி சரி அடுத்த முறை போகும் போது எடுத்தீங்கனா, செல்லுங்க நெல்லை என்னா தெக்கினிக்கினு சொல்லுங்க ரகசியமா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருத்தர், படங்களெடுப்பதால் என்ன ஆகிவிடும் என்று நினைத்து அனுமதி கொடுத்தார் (கோவில் சந்நிதானத்தைப் படமெடுப்பதில்லை. ஆனாலும் அங்கிருந்த அழகிய வெங்கடாஜலபதி சந்நிதியைப் படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மொபைலில் சட் என்று படமெடுக்க முடியவில்லை. பெருமாள் அனுமதி தரவில்லை என்றே நினைத்துக்கொண்டேன்). மறுநாள் இருந்தவர் கொஞ்சம் கெடுபிடி ஜாஸ்தி. அவ்ளோதான்

      நீக்கு
    2. படமெடுப்பதில், யாருல் இல்லாதபோது அல்லது பிஸியாக இருக்கும்போது சட் என்று படங்கள் எடுத்துக்கொண்டுவிட வேண்டும் (நாமென்ன assetsஐத் தூக்கிக்கொண்டா செல்கிறோம்?) ரொம்ப அனுமதி கேட்க முயற்சித்தாலோ இல்லை தயங்கித் தயங்கிப் பார்த்தாலோ, அனுமதி தரமாட்டாங்க. அவ்ளோதான் விஷயம். ஒரு சில இடங்களில், ஏன் படம் எடுத்தீங்க என்று கேட்டு, கேமராவில் அழிக்கக் கேட்டுக்கொண்டதும் நடந்திருக்கிறது.

      நீக்கு
    3. (நாமென்ன assetsஐத் தூக்கிக்கொண்டா செல்கிறோம்?)//

      அதானே....ஆஅமா அடுத்த வரிகள் சரிதான்....நாம தயங்கக் கூடாது ஆனால் இந்த கேமராவை ஓப்பன்லயே வைச்சுக்கணுமே..டக்குபுக்குன்னு எடுக்க வேண்டும்னா...இல்லைனா மொபைல.....இல்லைனா அங்கு போய் ஓப்பன் செஞ்சு ஸ்க்ரீன் வந்து க்ளிக்குவதற்குள் டைம் எடுக்கும்...

      ஒரு சில இடங்களில், ஏன் படம் எடுத்தீங்க என்று கேட்டு, கேமராவில் அழிக்கக் கேட்டுக்கொண்டதும் நடந்திருக்கிறது.//

      சொல்லிருக்கீங்க. இதுவரை எனக்கு வார்னிங்கொடு சரி...ஆனா நான் எங்க ரொம்ப போயிருக்கிறேன். ஆனால் பொதுவாக அங்கு எடுக்கக் கூடாது என்று போர்டு இருந்தால் எடுப்பதில்லை.

      கீதா

      நீக்கு
    4. அடுத்தவாட்டி போறப்ப "சொல்லிட்டுப் போங்க...நான் வரேன் அந்த கெடுபிடி ஆள் இல்லாம முந்தைய நாள் அனுமதி கொடுத்த அலுவலர் ட்யூட்டில இருக்கணும்னு சொல்லிட்டுப் போங்க!!!! ஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    5. எனக்கு, திருநாவாய் கோவிலிலும், வாரணாசியில், ஒரு பெரிய அனுமான் கோவிலிலும் (சேதுமாதவர் கோவில்) இப்படி நடந்திருக்கிறது. அந்த சேதுமாதவர் கோவிலில் இருந்த பையன், recycle binலயும் அழிக்கவைத்துவிட்டான். மறுநாள், அந்தக் கோவிலைப் பார்த்துக்கொள்ளும் பெரியவர், எங்களுக்கு (எனக்கு, என் மனைவிக்கு) ஒவ்வொன்றையும் விவரித்து, படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தார். அதுவும் ஆச்சர்யம் எனக்கு. இவை, நான் எழுதும் 'காசி யாத்திரையில்' 2024ல் வரும்.

      நீக்கு
    6. எனக்கும் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்ட பஞ்ச வைணவத் தலங்களையும் (விஷ்ணு தலங்கள்) சேவிக்கணும் என்று எண்ணம். பேசாமல், கர்நாடக டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். அவங்களே பலவிதத் திட்டங்களும், சைவ உணவும், தங்குமிடத்தையும் பார்த்துப்பாங்க.//

      சீக்கிரம் நடக்கட்டும், நெல்லை. ஆமாம் கர்நாடகா டூரிஸ்ட் பஸ் நிறைய டூர் வைச்சிருக்காங்க. எனக்கு ஹம்பி, ஹளபைடு பார்க்க ரொம்ப ஆசை. இரண்டும் தூர தூர....பக்கத்துல இருக்கறதுக்கே போக முடியலை ....

      கீதா

      நீக்கு
    7. அந்த சேதுமாதவர் கோவிலில் இருந்த பையன், recycle binலயும் அழிக்கவைத்துவிட்டான். //

      அடப்பாவி!!

      //மறுநாள், அந்தக் கோவிலைப் பார்த்துக்கொள்ளும் பெரியவர், எங்களுக்கு (எனக்கு, என் மனைவிக்கு) ஒவ்வொன்றையும் விவரித்து, படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தார். அதுவும் ஆச்சர்யம் எனக்கு. இவை, நான் எழுதும் 'காசி யாத்திரையில்' 2024ல் வரும்.//

      வெயிட்டிங்க்...பரவால்ல என்னை விட சீக்கிரமே போடுவீங்கன்னு தெரியும் !!!! ஹாஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    8. //என்னை விட சீக்கிரமே போடுவீங்கன்னு தெரியும்// - நான் ஒரு ப்ளாக் வச்சிருந்தால், தொடர்ந்து பல யாத்திரையும் மாற்றி மாற்றி எழுதலாம் (திங்கள் இந்த யாத்திரை, புதன் அந்த யாத்திரை, வெள்ளி-பார்த்த இடங்கள் அப்படீன்னு). வாரம் ஒரு பதிவு எழுதினா, எத்தனை வருடங்கள் ஆகும், நான் போன, 105 திவ்யதேசம், நாடுகள், அங்கு எடுத்த படங்கள் என்று?. 5 நாள் யாத்திரைய 20 பதிவுகளா எழுதினா, பஞ்சத்வாரகை (10 நாட்கள்), முக்திநாத், மலையாள திவ்யதேசம்......... என்று பெரிய லிஸ்ட்..)..இதெல்லாம் எப்போ எழுதறது?

      நீக்கு
    9. /எனக்கு ஹம்பி, ஹளபேடு பார்க்க ரொம்ப ஆசை// - நான் அரசு நடத்தும் டூரில் போய்த்தான் இந்த இடங்களைப் பார்க்கணும். நல்லா இருந்தால் தனியாக இன்னொரு முறை போய்க்கலாம்.

      நீக்கு
    10. நெல்லைத்தமிழன் நமக்கென ஒரு புளொக் இருப்பது, அது ஒரு டயரி போல.. நான் அப்படித்தான் நினைக்கிறேன், என் புளொக்கில் இருக்கும் பல படங்கள், ரெசிப்பிகள் இப்போ என்னிடம் இல்லை, ஆனா என் பழைய போஸ்ட்கள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. கொமெண்ட்ஸ் வராட்டிலும் இவை எல்லாம் ஒவ்வொரு பொக்கிசம்தானே.

      என்னுடையது என்னும்போது அது எப்பவும் இருக்குமெல்லோ.. இப்போ ஸ்ரீராமுக்கு உங்களோடு ஜண்டை வந்திட்டால் உங்களை புளொக்..[ இது வேற புளொக் ஹா ஹா ஹா] பண்ணிட்டால் என்ன பண்ணுவீங்க ஹா ஹா ஹா.. ஹையோ ஸ்ரீராம் அடிக்கப்போறார் எனக்கு:))..

      இன்னொன்றும் பண்ணலாம் நீங்கள்.. ஒரு புளொக் செய்து பேசனலாக வச்சிருக்கலாம், இங்கு அனுப்புவதை அப்படியே அதிலும் ஏற்றி விடலாம்...

      நீக்கு
    11. //ஸ்ரீராமுக்கு உங்களோடு ஜண்டை வந்திட்டால் உங்களை புளொக்.// ஆஹா... அப்படி ஒன்று இருக்கிறதா? ஆனால் பாருங்க... நான் போய்வந்த இடங்களில் எல்லாம் படங்கள் எடுத்து, அந்த விவரங்களை எழுதி, என் நினைவுக்குத்தான் வைத்திருக்கிறேன். எங்கள் பிளாக் பதிவில், பல படங்களை வெளியிடுவதில்லை.

      நீக்கு
  5. யாரு காவேரி படித்துறையில ஒத்தைச்செருப்பு - இல்லல்ல...ஜோடிச் செருப்பை விட்டிருக்காங்க?!!

    ஆறு என்ன அழகு...தூரத்தில் தெரியும் பாலம் மைசூர் போகும் போது தெரியும்.

    இந்த ஆற்றில் அங்க ஒரு திட்டுல ஒருசின்ன கோயில் போல இருக்கிறதே அது வரை போனீங்களா நெல்லை? ஆழம் ரொம்ப இல்லை போல இருக்கிறதே அந்து டீ ஷர்ட் போட்டு ஒருவர் போகிறாரே!! அது நீங்களா அல்லது அது நான் அவனில்லை யா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனேகமா எல்லாருமே இப்படி செருப்பை ஆங்காங்கு விட்டுவிட்டுத்தான் குளிக்கச் செல்லவேண்டும். ஆனால் படித்துறையிலும் கடவுளர்கள் சிலைகளை வைத்திருக்காங்க.

      நீக்கு
    2. அதான் கேட்டேன் நெல்லை. நாங்க எங்கு போனாலும் இப்படி ஆற்றில் குளிக்க வேண்டும் என்றால் குளத்திலும் சரி, செருப்பை படிக்கட்டில் விடுவதில்லை. ரூமிலேயே அல்லது கரையில் மண்ணில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

      கீதா

      நீக்கு
    3. ஆற்று வேகம் கொஞ்சம் அதிகம். நான் எங்குமே ரிஸ்க் எடுப்பதில்லை. (ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். கடலூர் அருகில் ஒரு க்ரூப்பாகச் சென்றிருக்கிறார்கள் சிலர். அதில் ஒருவன் (25-30 வயது), அருகில் இருந்த ஆற்றின் தண்ணீரில் இறங்கியிருக்கிறான். Unfortunately அது மணல் எடுத்துப் பள்ளம் தோண்டியிருந்த குவாரி போன்று இருந்ததால், தண்ணீரில் தத்தளித்திருக்கிறான். என்னுடைய வெகு தூரத்து உறவின் அண்ணன், அதைக் கண்டு, தன் துண்டை நீட்டியிருக்கிறான். அவனால் பிடிக்கமுடியவில்லையா இல்லை இவனை இழுத்துவிட்டதா என்று தெரியவில்லை. இவனும் தண்ணீரில் இறங்கிவிட்டான். இருவரும் காலி. ஒரு நிமிடத்துக்குள் இது நடந்துவிட்டதாம்) நான் புஷ்கரில், அதிகாலை 5 மணிக்குத் தனியே கிளம்பி, புஷ்கரணியில் குளித்துவிட்டு, கரையில் தர்ப்பணம் பண்ணிவிட்டு தங்குமிடம் வந்தேன். அப்போதுதான் மற்றவர்கள் குளிக்கச் சென்றார்கள். அதில் இருவர் தண்ணீரில் வழுக்கி விழுந்துவிட்டனர். ஒருவர், கிட்டத்தட்ட மூர்ச்சையாகி, போய்விட்டார் என்ற நிலைமைக்குச் சென்றுவிட்டார். யாத்திரை நடத்துபவர் பிறகு என்னிடம், நீங்கள் தனியாகச் சென்றது சரிகிடையாது. ஏதேனும் பிரச்சனை ஆனால் தகவல் சொல்வதற்கோ இல்லை உதவுவதற்கோ யாருமே இருந்திருக்கமாட்டார்களே என்றார். எனக்கு எப்போதுமே, சஹஸ்ரநாமம் கூடவே வருவதால், ஒன்றும் ஆகாது என்ற அசட்டுத் தைரியம்தான்.

      நீக்கு
    4. எனக்குச் சில நேரங்களில் படிக்கட்டில் செருப்பை விடவேண்டிய நிலைமை. ரோடில் செருப்பில்லாமல் நடந்தால் பாத வலி மிக அதிகமாக ஆகும் என்பதால் எப்போதும் செருப்பு போட்டுக்கொள்வேன். (ஆனா பாருங்க..கும்பகோணம் பக்கம் உள்ள கோவில்களெல்லாம், கோவில்கள் மாதிரி கட்டலை, ஒரு ஊரையே வளைத்துக் கட்டியதுபோல மிகப் பெரிய வளாகம். உள்ளே நடந்து நடந்து பாதவலி மிக அதிகமாக ஆகிவிடும்)

      நீக்கு
    5. எனக்கும் இந்தப் பயம் இருக்குது, கோயில் யாத்திரை எனில் சிலிப்பர் போடமுடியாது, ஆனா பொதுவாக குளிர்நாடுகளில் வாழும் மக்கள் எல்லோருக்கும் கால்தோல்கள் மிக மென்மையாகிடுது, அதனால வெறும்காலில் வீட்டுக்குள்கூட நடக்க முடியாது..
      குழந்தைகளில்கூட கவனிச்சேன், நம்நாட்டுக் குட்டீஸ் ஐத் தொட்டால் கொஞ்சம் தோல் தடிப்பாக இருக்கும், ஆனா இங்க தொட்டால் சரியான மென்மையாக இருக்கும், காலநிலைதான் காரணம்.

      நீக்கு
  6. கோவில் கருவறையில் சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர். திருமார்பில் மஹாலக்ஷ்மி.//

    இந்தப் படம் தான் எங்க பிறந்த வீட்டில் இருந்தது. அது போல வைரமுடிசேவை படமும்

    கோயில் முன் மாற்றங்கள்...முன்பே வேறு போல இருந்த நினைவு. ரங்கனதிட்டும் போனோம் அப்ப.

    இப்ப்வும் எனக்கு ரங்கனதிட்டு சீசன் சமயத்தில் போக வேண்டும் என்று ரொம்ப ரொம்ப ஆசை. பறவைகள் எல்லாம் வருமே...இந்த வருஷமேனும் போக வேண்டும் நவம்பர் டிசம்பர் சமயம்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலின் பழமை எதுவுமே மாறவில்லை கீதா ரங்கன். செருப்பை விட்டுவிட்டுப் போகச்சொல்லி, அதற்கு 5 ரூ வசூலிக்கும் ஒரு அடாவடி கடையை மாத்திரம் பார்த்தேன்.

      ஸ்ரீரங்கநாதர் படம், வல்லிம்மா அவருடைய பிளாக்கில் ரொம்ப நாட்களுக்கு முகப்புப் படமாக வைத்திருந்தார். அவர் இப்போல்லாம் எல்லா பிளாக்குகளுக்கும் வருவதில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

      நீக்கு
    2. கோயில் அப்படியே இருக்கு தெரிகிறது நெல்லை அடுத்து சொல்ல வந்தேன்....சிற்பங்கள் எலலம் பழசாகவே இருக்கே...நான் சொன்னது வெளியில் முன் பகுதி எல்லாம்...

      ஆமாம் வல்லிம்மா வைச்சிருந்தாங்க. அவங்கள்க்கு அவங்க பிரச்சனைகள்,

      கீதா

      நீக்கு
    3. கடலூர் சம்பவம் அப்புறம் புஷ்கர் சம்பவம் - மனதிற்கு வேதனையானவை. ஆனால் பொதுவாகத் தண்ணீரில் செல்லும் போது என்னதான் நீச்சல் தெரிந்தாலும் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. எனக்கு நீச்சல் தெரியும் என்பதற்காக ரிஸ்க் எதுவும் எடுக்க மாட்டேன்.

      நெல்லை உங்களுடன் எப்பவும் அந்த சக்தி கூடவே இருக்கும் என்றாலும் நாமும் விழிப்போடு இருக்க வேண்டும். கவனமாகவே இருங்க.

      கீதா

      நீக்கு
    4. பொற்கோயிலில், கோயில் வாசல்வரை செருப்போடு போகலாம், அங்கு கோயில் நிர்வாகமே அனைவரது பாதணிகளையும் வாங்கி, ரோக்கன் தருகிறார்கள் பத்திரமாக பாதுகாத்துக் குடுக்கிறார்கள்.. அத்தனையும் இலவசமாக நடக்கிறது. அங்கு உணவும் இலவசமாம், நாம்தான் சாப்பிட நேரமில்லாமல் ஓடிவிட்டோம்:(

      நீக்கு
    5. என் ஆசை, பொற்கோவில் போகணும், கண்டிப்பாக அங்கு பிரசாதம் சாப்பிடணும் என்று. 6 சப்பாத்திகளாவது சாப்பிட்டுடணும். என்ன சொல்றீங்க? அவ்வளவு சுத்தமாக இருக்குமாம், உணவு அருந்தும் இடம். உணவும் முழுவதும் சுகாதாரமாகத் தயார் செய்வதைக் காணொளியில் பார்த்திருக்கிறேன். நீங்க எப்படித்தான் இந்த வாய்ப்பை விட்டீங்களோ...

      நீக்கு
    6. அது உண்மைதான் நெ தமிழன், அங்கு உணவு சூப்பராக இருக்குமெனத்தான் சொன்னார்கள், ஆனா நாங்கள் அன்று ஈவினிங் வாஹா போடர் ஷோ வுக்கு வி ஐ பி ரிக்கெட் எடுத்தாச்சு, கோயிலுக்குப் போனபோதே மத்தியானம் ஆச்சு, என் யூ ரியூப் வீடியோவில் தெரியும் பார்த்தீங்களெண்டால், எந்தாப்பெரீஈஈஈஈஈஈய கியூ நின்றது அந்நேரம், அதனாலதான் சாப்பிடாமல் ஓடிட்டோம்...
      சரி இன்னொரு தடவை போயிட்டால் போச்சு.. பார்க்கலாம் ஹா ஹா ஹா... என் ஆயுள் 80 க்கு குறையாதாம்:)) ச்சோ காலமிருக்கே இன்னமும் :))

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாங்க கரந்தை ஜெயகுமார் சார்... ரொம்ப நாளாகிவிட்டது உங்களை இங்கு பார்த்து. நலமா?

      நீக்கு
  8. படங்கள் வழக்கம் போல அழகு
    தகவல்கள் சிறப்பு
    (திருநெல்வேலி) வள்ளியூரிலிருந்து கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... வள்ளியூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அட்டஹாசமான உணவு. நாங்கள் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி நோக்கி வரும்போது அங்கு உணவு உண்டோம்.

      நீக்கு
    2. ///(திருநெல்வேலி) வள்ளியூரிலிருந்து கில்லர்ஜி///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி எதுக்கு வள்ளியூருக்குச் சென்றார்ர்ர்ர்ர்.. உகண்டாவைக் கழட்டி விட்டிட்டாரோ:)) இது சரியில்லை ஜொள்ளிட்டேன் எனச் சொல்லுங்கோ நெல்லைத்தமிழன்:)) ஹையோ மீ... நாட்டிலயே இல்லை:))

      நீக்கு
  9. உண்மையைச் சொன்னால்[மற்றும்படி என்னபொய்யா ஜொள்ளுவீங்க எனக் கேய்க்கப்பிடாது கர்ர்ர்ர்ர்ர்:))] எனக்கு நேரமே கிடைக்குதில்லை. என் பக்கப் பதில்களே போட்டு முடிக்கவில்லை, இனி அடுத்தடுத்த வாரம் ஒருவேளை என்னால வரமுடியாமல் போனால் கோச்சிடக்கூடாதாக்கும்:)).. சமர் என்பதால அப்பப்ப விசிட்டேர்ஸ் வருகையும்..
    முடியும்போது எல்லா இடமும் வருவேன்..

    பதிலளிநீக்கு
  10. //மைசூர்பாக்கும், காராபூந்தி//
    கரெக்ட்டாத்தான் குடுக்கினம், உறைப்பும் இனிப்பும்...

    //இங்குதான் திப்பு சுல்தானின் அரண்மனைச் சிதிலங்களும், அவன் உபயோகித்த மசூதியும், சிறைச்சாலையும், போரில் காயம்பட்டு அவன் உடல் கிடந்த இடமும் இருக்கின்றன.///

    ஆஆஆஆஆஆஆ அப்படியோ? ஆவ்வ்வ்வ் அப்போ அங்கு நான் போகோணும்ம்ம்ம்ம், எனக்கு இப்ப இப்பத்தான் ஸ்ரீரங்கம் வேறு ஸ்ரீரங்கப்பட்டினம் வேறு என்பதே தெரியும் ஹா ஹா ஹா.

    அப்போ திப்புசுல்தான் கர்நாடகாவிலயோ வாழ்ந்தார்... எனக்குப் பாருங்கோ கோயில்களைக் காட்டிலும் சரித்திரங்களைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாகுது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கெல்லாம் அப்புறம் வருகிறேன். வேணி என்றால் பின்னிய சடை, ஆறு என்று அர்த்தம். திரிவேணி என்றால், மூன்றாகப் பின்னிய சடை அல்லது மூன்று ஆறுகள் என்று அர்த்தம். திரிவேணி அதிரா என்றால் என்ன அர்த்தம்? ஒருவேளை 'ஆறு' என்பதை River என்று அர்த்தம் தெரியாமல், Six என்று நினைத்துக்கொண்டு, 3 X 6 = 18 என்று நினைத்து, 18 வயது அதிரா என்று தவறுதலாக பெயரை வைத்துக்கொண்டுவிட்டீர்களோ?

      நீக்கு
    2. இதுக்கு மட்டுமாவது பதில் போட்டிட்டு ஓடிடுவோம் என கை குறுகுறுக்குது... ஓ ஜடை மற்றர் இப்போதான் தெரியுது, மூவாறு சங்கமித்தல் தான் நேக்குத் தெரியுமே:))..

      சே..சே.. ஆராலயும் என் பெயர்க் காரணம் கண்டு பிடிக்க முடியேல்லை கர்ர்ர்ர்ர்:)).. அது வந்து பாருங்கோ ஒரு ஞானியால மட்டும்தேன் இன்னொரு ஞானியை[என்னைச் சொன்னேன்:)] கண்டுபிடிக்க முடியுமாக்கும்:))..
      அதாவது வந்து காசிக்குப் போனால்தான் மீ முழுஞானி ஆவேன் எனச் சொன்னேனெல்லோ:)).. அப்போ காசிக்குப் போகமுன் மீண்டும் புனிதமாகோணுமாக்கும்:).. ஸ்ரீராம் மிரட்டிப்போட்டார், கொம்பியூட்டர் கார்ட் ட்றைவ் போலத்தான் அப்பப்ப நிரம்பிடும் பாவங்கள்:) அடிக்கடி கிளீன் பண்ணிக்கொண்டிருக்கோணும் என..

      அப்போ காசி போக முன்னர் அதிரா திரிவேணி ஜஙமம்ம்ம்ம்ம்ம்ம் போய்க் குளிக்கோணுமெல்லோ.. அப்பூடி எனில் நமக்கு எது தேவையோ அதில அதிகம் ஆசைப்படோணும் எனக் க அங்கிள் ஜொள்ளியிருக்கிறாரெல்லோ:)) அதனாலதான் ஆசைப்பட்டுப் பேரை மாத்தினேனாக்கும் கர்ர்:))..

      அப்போதானே மீ காசிக்குப் போய் அந்த போர்ட் ல நிண்டு, தீபத்தைப் படமெடுத்து வந்து, இங்கு போட்டுக்காட்டி பலபேரை "மோர்" குடிக்க வைப்பேனாக்கும்:)) ஹா ஹா ஹா வயிரெரிஞ்சால் மோர் குடிக்கோணும்:)) ஹையோ ஆண்டவா இதுக்கு மேலயும் மீ இங்கின இருக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ மீ //Dunelm// போகோணும்:)).. ஹா ஹா ஹா இச்சொல்லை சரியாக உச்சரிப்போருக்கு ஒரு திரிவேணி சங்கம ரிக்கெட் இலவசமாக தருவேனாக்கும்:))

      நீக்கு
    3. //காசிக்குப் போய் அந்த போர்ட் ல நிண்டு, தீபத்தைப் படமெடுத்து வந்து, இங்கு போட்டுக்காட்டி// - நாங்கள் செய்த புண்ணியம்தான், நீங்க திரிவேணி சங்கமத்தில் குளித்தபோது எடுத்த உங்கள் போட்டோவை இங்கு வந்து போட்டுக் காண்பிக்காதது. கங்கையில் குளிப்பதைப் போட்டோவாப் போட்டுட்டீங்க.

      நீக்கு
    4. //தீபத்தைப் படமெடுத்து// - காசியில், நான் பார்த்து சந்தோஷப்பட்ட விஷயம், கங்கைக் கரையில், சிறிய தட்டில் தீபம் ஏற்றி கங்கையில் விடுவதற்கு நிறையபேர், 10 ரூபாய் விலையில் விளக்கை விற்பது, இரண்டாவது, காசி விஸ்வநாதர் ஆலயத்திலேயே, உள்ளே க்யூவில் நிற்கும்போது 10 ரூபாய் கொடுத்து ஒரு டம்ளர் அமுல் மில்க் வாங்கி, அதனை காசி விஸ்வநாதரைத் தரிசிக்க நம் முறை வரும்போது, சிவலிங்கத்தின் மேல் விழும்படியாக நம் கையால் பாலை விடமுடிவது. இரண்டுமே satisfying.

      நீக்கு
    5. ////Dunelm// போகோணும்:))..// பாவம் அவர். க்ரெடிட் கார்டை உங்களிடம் கொடுத்து PINஐயும் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. பின்ன என்ன? வாரா வாரம் யூடியூப் விடீயோக்கள் போடணும்னா, வீட்டு அலங்காரம் ஒவ்வொரு முறையும் மாத்திக்கிட்டே இருக்கணும், புதுசு புதுசா பொருட்களைக் காட்டணும் (கடாய், கரண்டி, மேசை விரிப்பு... )

      நீக்கு
    6. ///ஒவ்வொரு முறையும் மாத்திக்கிட்டே இருக்கணும், புதுசு புதுசா பொருட்களைக் காட்டணும் (கடாய், கரண்டி, மேசை விரிப்பு... )///

      https://www.acomaanimalclinictucson.com/wp-content/uploads/2020/04/AdobeStock_288690671-scaled.jpeg

      நீக்கு
  11. கோயில் சிற்பம், சிலைகள் எல்லாம் சேதமடையாமல் பாதுகாக்கிறார்கள் என தெரிகிறது.

    ///புளியோதரையும் கோசுமல்லியும் கொடுத்தார்கள்//
    அதென்ன கோசுமல்லி?? கர்ர்ர்ர்ர்ர் டமில்ல சொல்லுங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிதாக கட் செய்த வெள்ளரி (அது என்ன என்று கேட்காதீர்கள்), ஊற வைத்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஸ்ப்ளிட் பாசிப்பருப்பு (ஏன் மஞ்சள் எனப் போட்டிருக்கிறேன் என்றால், ஒரு தடவை அவசரத்தில் பாசிப்பருப்பை ஊறவைக்கிறேன் என்று நினைத்து, வெளிச்சம் இல்லாதபோது ஸ்ப்ளிட் உளுத்தம்பருப்பை ஊறவைத்துவிட்டேன்), கேரட் துருவல் போன்றவைகளைக் கலந்து, சிறிது எலுமிச்சம்பழச் சாறு விட்டு, கடுகு/ஸ்பிளிட் உ.பருப்பு/கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் கோசுமல்லி ரெடி

      நீக்கு
    2. கோசுமல்லி, கர்நாடக உணவு (அதாவது இலையில் காய்கறி, கூட்டு வைப்பதற்கு முன்பு, முதலில் கட் செய்த பழங்கள் இடது மேற்புற ஓரம், அதற்கு அடுத்தது கோசுமல்லி போடுவாங்க). சில விருந்துகளில் 2-3 விதங்களில் கோசுமல்லி செய்து அனைத்தையும் பரிமாறுவாங்க (கொடுமைடா சாமீ என்று எனக்கு இருக்கும்)

      நீக்கு
  12. ///காபிக்குப் பிறகு அருகிலிருக்கும் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடுப்பேத்துறார் யுவர் ஆனர்ர் கடுப்பேத்துறார்ர்:)).

    எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதோ ஆவ்வ்வ்வ் அப்போ இக்கோயிலைக் கட்டியது ஆர்? பட்டினம் என முடிவதால் தமிழ் சொல்லாக எல்லோ இருக்குது? கர்நாடகா எனில் மொழி வேறெல்லோ..

    கோயிலின் உட்புறம் கருங்கல்லுப்போல அழகாக இருக்கிறது..

    கொழும்பு கொச்சிக்கடை எனும் இடத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் இருக்கு அதுவும் உட்புறம் முழுவதும் கருங்கற்கள் அதனால உள்ளே எப்பவும் இருட்டாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடகாவின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததும், தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்ததும் வரலாறு. பெங்களூரிலும் பல பகுதிகளுக்கு பேட்டை என்று முடியும் இடங்களின் பெயர் உண்டு. இங்கெல்லாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு, வேலை செய்ய தமிழர்கள் குடியேறியிருக்காங்க (காட்டன்பேட்-நூற்பாலைக்கான மூலப்பொருளைத் தயார் செய்த இடம், பின்னிபேட்-பின்னி மில் இருந்த இடம்......).

      நீக்கு
    2. /அதனால உள்ளே எப்பவும் இருட்டாக இருக்கும்.// - முற்காலத்தில் தீப வெளிச்சம் இருந்திருக்கும். மின்சார விளக்குகளுக்கான வசதி இருந்திருக்காது. இப்போதெல்லாம் மின்சார விளக்குகள் பல கோவில்களில் போட்டிருக்காங்க.

      நீக்கு
    3. இல்ல அது அழகுக்காகவோ என்னமோ லைட் போடாமல் இருக்கிறார்கள்.. இப்போ 2000 இல்தான் போனோம். லைட் போடாமல் இருக்கும்போது என்னமோ ஒருவித பக்தி அதிகமாவதுபோல இருக்கும்.

      நீக்கு
    4. //லைட் போடாமல் இருக்கும்போது என்னமோ ஒருவித பக்தி அதிகமாவதுபோல // - அதிகாலையில், திருப்பதியில் நாங்கள் இறைவன் சன்னிதியில் சாற்றுமுறை என்று சொல்லப்படும் பக்திப் பாடல்களை (பாசுரங்களை) பாடுவதற்கு (சேவிக்க)ச் செல்லுவோம். அப்போ அந்தப் பாசுரங்களின் ஒலி, விளக்கு வெளிச்சத்தில் வெங்கடேஸ்வரர் தரிசனம், கற்பூர மணம் என்று ரொம்பவே பரவசமாக இருக்கும். அவன் அருள் இருந்தால், ஜூலை 3ம் வாரம் எனக்கு அந்தத் தரிசனம் வாய்க்கலாம். திருப்பதியில் 4 நாட்கள் தங்கியிருக்கப்போகிறேன்.

      நீக்கு
    5. ///ஜூலை 3ம் வாரம் எனக்கு அந்தத் தரிசனம் வாய்க்கலாம். திருப்பதியில் 4 நாட்கள் தங்கியிருக்கப்போகிறேன்.///
      ஆஆஆ அஞ்சூஊஊஉ திருப்பதிக்கு ரெண்டு ரிக்கெட் போடுங்கோ.. அந்த வீடியோக் கமெராவையும் எடுங்கோ, நெ தமிழன் பாடும்போது ஒரு வீடியோ எடுத்து வந்து புளொக்கில் போட்டால் ஆரும் நம்மைக் கேள்வி கேய்க்க முடியாதே:)))

      நீக்கு
  13. ///நான் வீட்டில் ஏசி உபயோகிக்கிறேன். பசங்க அறைகளுக்கு ஏசி இன்னும் வாங்கவில்லை.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*345678[இத்தனை தடவை கர்ர்ர்ர்ர்ர்:))]

    ஆற்றைப்பார்க்க ஆசையாக இருக்கு, இடமும் சுத்தமாகவே தெரியுது, ஆறு ஓடிக்கொண்டிருந்தால் குளிக்க சந்தோசமாக இருக்கும், பெரிய ஆளமும் இல்லைப்போல தெரியுது.

    ரங்கநாதர் ஆலயம், ரோட்டின் தூர நேரே கோபுரம் தெரிவது பார்க்க மிக ஆசையாக அழகாக இருக்கு. கோபுரத்தைப் பார்த்தபடியே நடந்து போய்ச் சேர்ந்திடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதர் ஆலயம், அதற்குச் செல்லும் பகுதி மிக அழகு. எனக்குத் தெரிந்து ஸ்ரீரங்கபட்டினம் பகுதியே தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் நிறைய கச்சா முச்சாவென்று கடைகள்லாம் வரவில்லை.

      நீக்கு
  14. நடனமங்கையரில் ஒருவர் பார்க்க தமனா(க்கா) போலவே தெரியுதே.. என் கண்ணுக்கு மட்டும்தேன் இப்பூடித் தெரியுதா?:)) ஹா ஹா ஹா.

    மண்டபம் மிக அழகாக இருக்கு, நேரில் பார்க்க மெய் சிலிர்க்குமே...
    மும்தாஜ் இருந்த வீட்டுக்குள் போனபோதும் எனக்கு மெய் சிலிர்த்ததே:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தமனா' - ம்ம்ம்ம் அதையே இப்போ நினைவுபடுத்தறீங்க? திரை நட்சந்திரங்கள் பாவம்..... எல்லாக் காலமும் முடிந்தபிறகுதான் அவங்களுக்கு கல்யாணம் காட்சியெல்லாம் நடக்கவே வாய்ப்பு. இப்போதான் 'தமன்னா'வுக்கு நேரம் வந்திருக்கு. அனுஷ்காவுக்கு எப்போ நேரமோ தெரியலை....

      மும்தாஜ் இருந்த வீட்டில், நீங்க பார்த்தது போலி சமாதி. அந்த floorக்குக் கீழே உள்ள நிலவறைப் பகுதியில்தான் அவர்கள் இருவரின் original சமாதி இருக்கிறது (நேர் கீழே). உங்களுக்கு 'மெய் சிலிர்த்ததா'? நல்லாப் பார்த்தீங்களா... கறுப்பா நிழலா இரண்டு உருவங்கள் தெரிந்ததா?

      நீக்கு
    2. //இப்போதான் 'தமன்னா'வுக்கு நேரம் வந்திருக்கு. அனுஷ்காவுக்கு எப்போ நேரமோ தெரியலை....//

      ஹா ஹா ஹா அவரவர் கவலை அவரவர்க்கு:)).. அனுக்காவுக்கு உடல்நிலை சரியில்லையாமே:).. ஸ்ரீராம் ஆப்பிள் ஒரேஞ் எல்லாம் வாங்கிக்கொண்டுபோனாரோ தெரியேல்லையே:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு.

      நீக்கு
    3. ///மும்தாஜ் இருந்த வீட்டில், நீங்க பார்த்தது போலி சமாதி. அந்த floorக்குக் கீழே உள்ள நிலவறைப் பகுதியில்தான் அவர்கள் இருவரின் original சமாதி இருக்கிறது (நேர் கீழே). ///

      அது நெல்லைத்தமிழன் எங்கட ஹைட் காட்டி விளங்கப் படுத்தினார்... மும்தாஜ் இருந்த வீட்டில் புதைத்து, பின்னர் சுரங்கம் பாதை அமைச்சு தாஜ் மகாலுக்கு, புதைச்ச உடலை திரும்ப எடுத்து தாஜ்மகாலில் கொண்டு போய் அடக்கம் செய்ததாக... சுரங்கப் பாதை தெரிஞ்சது ஆனால் லொக் பண்ணியிருக்கு எட்டிப்பார்க்க மட்டுமே முடிஞ்சது.

      ///உங்களுக்கு 'மெய் சிலிர்த்ததா'? நல்லாப் பார்த்தீங்களா... கறுப்பா நிழலா இரண்டு உருவங்கள் தெரிந்ததா?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))... சாஜகான் அந்நாளிலேயே பெரீய பாத் பேஸின்.. அது ஹொலண்ட்டிலிருந்து இறக்குமதி செய்தாராம், அதில்.. பல பெண்கள் புடைசூழக் குளிப்பாராம்.. அந்த பாத் பேசின், அரண்மனைக்குப் போகும் பாதையில் இருந்துதே.. ஆனா மும்தாஜ் குளிக்கவென பெரிய சுவிமிங் பூல் கட்டியிருக்கிறார், அப்பவே மாபிள் வச்சு, இயற்கை ஜக்குஸி வேலைப்பாடுகளுடன்... பார்த்திருப்பீங்கள்தானே.. அதை எல்லாம் பார்க்க உண்மையில் மெய் சிலிர்த்தது என்னா அழகு.

      நீக்கு
    4. //சாஜகான் அந்நாளிலேயே பெரீய பாத் பேஸின்.. அது ஹொலண்ட்டிலிருந்து இறக்குமதி செய்தாராம், அதில்.. பல பெண்கள் புடைசூழக் குளிப்பாராம்..// - நீங்க, அக்பர் கோட்டை, ஆக்ராவைச் சொல்லறீங்கன்னு நினைக்கிறேன். அங்கு இருப்பது, ஜஹாங்கீர் உபயோகித்த குளியல்தொட்டி (ஒற்றைக் கல்லில் செய்யப்பட்டது). இவ்வளவு பெரிய தொட்டியை எந்த அறையில் வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. இப்போ அது வெட்ட வெளியில் வைத்திருக்கிறார்கள் (ஜஹாங்கீர் மஹாலுக்கு முன்பு). அதில் பல பெண்கள் புடை சூழக் குளிப்பது எப்படி? ஒருத்தர் அல்லது இருவர் குளிக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நீங்க சொன்னபடி பல பெண்கள் புடை சூழக் குளித்து (அது உயரம் மிக அதிகம். வெளியிலிருந்து உள்ளே எத்தனைபேர்கள் இருக்கின்றனர் என்று தெரியாது) ஒருவேளை மூச்சடைத்து ஜஹாங்கீர் செத்துப் போயிருந்தால், அந்தப் பெண்களுக்கு என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கிறேன். ஹா ஹா (எப்படீல்லாம் கற்பனை ஓடுது)

      நீக்கு
    5. /மும்தாஜ் குளிக்கவென பெரிய சுவிமிங் பூல் கட்டியிருக்கிறார், // இதுவும் ரொம்ப பெரிய அளவில் இல்லை. மும்தாஜ் குளித்து, ஷாஜஹான் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்திருப்பார் போலிருக்கிறது. (ஒரே பெண்ணை எத்தனை நாள் குளித்துக்கொண்டிருக்கும்போது பார்த்துக்கொண்டிருப்பது என்பதால், அவரைச் சிறை வைத்தபோது, ஷாஜஹானுக்கு நூற்றுக்கணக்கான பெண்களையும் தன்னுடன் (அப்படீன்னாக்க அவனுடைய மாளிகைக்கு கொஞ்சம் தள்ளி நிறைய அறைகள் உள்ள இடத்தில்) வைத்துக்கொள்ள, அவனுடைய மகன் ஔரங்கசீப், ஷாஜஹானைச் சிறை வைத்தபோது அனுமதி கொடுத்தான். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், அவரவர் அரண்மனையில், பெண்கள் பாதுகாப்புக்கு யாரை காவலர்களாகப் பணியில் அமர்த்துவார்கள் என்று.

      நீக்கு
    6. //நீங்க, அக்பர் கோட்டை, ஆக்ராவைச் சொல்லறீங்கன்னு நினைக்கிறேன். அங்கு இருப்பது, ஜஹாங்கீர் உபயோகித்த குளியல்தொட்டி (ஒற்றைக் கல்லில் செய்யப்பட்டது).//

      இதேதான் நெ தமிழன், நீங்கள் சொன்னபின் தான் நினைவு வருது, எவ்ளோ உயரம், எதிலோ ஏறி நின்று எட்டிப்பார்த்த நினைவு... ஒருவேளை வெளியிலிருப்போர் குளிப்பதைப் பார்த்திடக்கூடாதென்றுதான் அப்படி உயரமோ தெரியவில்லை..

      ஓ அது சாஜகானுடையது இல்லையோ...

      இல்லை எனக்குத் தெரியாது யாரைக் காவலுக்கு வைப்பினம் என.. தேடித்தான் பார்க்கோணும்.

      நீக்கு
  15. சயனநிலையில் ரங்கநாதர்... மார்பில் மகாலஷ்மி தெரியவில்லையே எனக்கு.. படத்தில் புரியவில்லை.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கோயிலுக்குள் படமெடுக்கக்கூடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருவறை மற்றும், சன்னிதிகள் இருக்கும் இடங்களை நோக்கி படம் எடுப்பது மரபல்ல, அனுமதியும் கிடையாது. பெரும்பாலும் நான் படம் எடுத்ததில்லை. (ஆனால் எடுக்க ஆசைப்பட்டதுண்டு) இப்போதெல்லாம் அங்கெல்லாம் காமெரா வைத்திருக்கிறார்கள் (திருடர்களைக் கண்காணிக்க).

      நீக்கு
    2. இதேபோலதான் தாஜ்மகாலுள்ளும் படமெடுக்கக்கூடாதாம், ஆனால் பலரும் கள்ளமாகப் படமெடுத்து யூரியூப்பில் போடுகின்றனர், நாங்கள் ஹைட் உடன் போனமையால் அவர் சொன்னார் படமெடுத்தால் தன் வேலை போய் விடும் என..

      சட்டத்தை மதிக்கத்தானே வேணும்.

      நீக்கு
    3. //தாஜ்மகாலுள்ளும் படமெடுக்கக்கூடாதாம்,// - இதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. நானும் ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுத்த நினைவு. அதைவிட, வெளிச்சுற்றில் (தாஜ்மஹல் கட்டிடத்தின் ஒரு மூலையில்) வெளிநாட்டுப் பெண்ணைக் கொண்டு ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அதையும் வாய்ப்பு வரும்போது பகிர்கிறேன்.

      நீக்கு
    4. இந்தக் கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையோ கர்ர்ர்ர்:)) உள்நாட்டில ஆருமே கிடைக்காமல், வெளிநாட்டு.. அதுவும் ஒரு பெண் படமெடுத்ததாமே:)) அதை நாங்க நிட்சயம் பார்க்கோணும்:)).

      சரி சரி, ஆறிய க ப கஞ்சி என்பது போல இன்று என் கொமெண்ட்ஸ் இருக்கும் என நினைக்கிறேன், இருப்பினும் பதில் போடோணும் என வந்தேன்..

      நீக்கு
  16. படங்கள் அனைத்தும் அழகு...

    விவரிப்பு சிறப்பு...

    பதிலளிநீக்கு
  17. படங்களும் கோவில் தகவல்களும் அருமை.

    காவேரி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. இன்று வெளியிடத்துக்குச் சென்று வந்ததில் சற்று அலுப்பு.. அதுவுமில்லாமல் சில நாட்களாக ஜலதோஷம்..

    (வருகையிட்ட பிறகு கருத்து ஏதும் சொல்ல வில்லை என்பதற்காக முகமன் கூறியதைக் கண்டு கொள்ள வில்லையோ!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். முதல் கருத்துக்கு என்ன பதில் எழுத என்று இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், வெளியிடம் சென்றிருக்கிறீர்கள் (கோவிலுக்கு) என்று நினைத்தேன்.

      நீக்கு
  19. ஒவ்வொரு ஞாயிறும் சிறந்த பதிவுகளுடன் மலர்கின்றது.. ஸ்ரீரங்கப்பட்டினம் மாதிரியான தலங்களை எப்போது காண்போம் என்று இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கணும்னு ப்ரார்த்திக்கிறேன் துரை செல்வராஜு சார். கும்பகோணம் வரும்போது, ஆராவமுதன் கோவில், அவ்வளவு பெரியது, ஆனால் விஸ்வரூப தரிசனத்திற்கு குறைந்த அளவு மக்களே வருகிறார்களே (20 பேர்) என்று தோன்றும். உங்கள் பகுதியில் இல்லாத கோவில்களா?

      நீக்கு
  20. அழகான படங்கள்..

    ஆனால்,
    கைத்தலபேசியில் இப்படியும் அப்படியுமாக உருட்டி உருட்டி பெரிதாக்கிப் பார்ப்பது தான் சிரமம்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு படங்களைச் சேர்ப்பதற்குப் பதில், ஒவ்வொரு படமாக வெளியிட்டால், பதிவு நீண்டுவிடும் அல்லது பல படங்களைச் சேர்க்க முடியாது.

      நீக்கு
  21. அந்தத் திப்பன் நல்லவன் என்று எழுத மாட்டீர்கள் - என நம்புகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனால் மேல்கோட்டை தீபாவளியின்போது இறந்தவர்கள் ஆயிரம்.

      நீக்கு
  22. ஸ்ரீ நரசிம்ம தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் துரை செல்வராஜு சார்... அந்த அமைதியான சூழல், பழைய காலத்தை நினைவுபடுத்தும் கோவில் பிரகாரங்கள்... உண்மையிலேயே தெய்வீகச் சூழல்தான்.

      நீக்கு
  23. ஸ்ரீரங்கப்பட்டினம் 1980 ஆம் ஆண்டில் போனது தான். பிறகு போகும்படி வாய்ப்பே கிடைக்கலை. அரை குறை நினைவுகள் தான். உங்களுடைய விபரமான கட்டுரையைப் படித்தும், படங்களைப் பார்த்து ரசித்தும் மேல் அதிக விபரங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... 1980க்கும் தற்போதைய நிலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இருந்தாலும், காவிரி, அதனருகில் அரங்கநாதன், அமைதியான சூழல், ரொம்ப கச்சா முச்சான்னு கூட்டம் இல்லாமை, ரொம்ப நடக்கவேண்டியிருக்காமை... இந்த விதத்தில் ஸ்ரீரங்கபட்டினம், ஸ்ரீரங்கத்தைவிட வித்தியாசம்தான்.

      நீக்கு
  24. நரசிம்மரின் தரிசனமும் மனதுக்கு நிறைவைத் தந்தது. இந்த மாதிரிச் சின்னக் கோயில்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் வேண்டும். உங்களிடம் அது நிறையவே இருக்கு. உங்களுக்கேற்றாற்போல் பயண ஒருங்கிணைப்பாளரும் கிடைச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ரொம்பவே மன மகிழ்ச்சியைத் தந்தது புறப்பாட்டில் கலந்துகொண்டது மட்டும் ப்ரபந்தம் சேவித்தது. யாத்திரை நடத்துபவர், கோவில் தரிசனத்திற்கு மற்றும் புகைப்படங்கள் எடுக்கத் தடை சொல்ல மாட்டார். கடை கண்ணியில் நின்றால்தான் அவருக்குப் பிடிக்காது (நேரம் வீணாகிவிடும் என்று)

      நீக்கு
  25. தொட்டமளூர் அப்ரமேயஸ்வாமியையும் நவநீத கிருஷ்ணரையும்
    தரிசனம் செய்யவில்லை இன்னும்.


    ஸ்ரீரங்கபட்டினம் சென்று இருக்கிறேன் பள்ளி சுற்றுலாவில். படங்களும் , விவரங்களும் அருமை.
    நரசிம்மர் ஆலயத்தில் உற்சவர் புறப்பாடு தரிசனம் அருமை.
    ஆற்றின் படம், தூண்களில் உள்ள சிற்பங்கள், மற்றும் ரங்கநாதரின் சயன கோல சிற்பம் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!