திங்கள், 5 ஜூன், 2023

​​"திங்க"க்கிழமை - தஹி மதுர் - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 தஹி மதுர்..




என்னங்கடா இது!.. மறுபடியும் சமசுக்கிருதமா?..

தஹி மதுர் என்றால் தயிர் மதுரம்..

#₹#₹%&%&#₹ !?...

நம்ம லஸ்ஸி தாங்க!..

இந்த மாரி ஜென்டமிள்..ல சொல்ல வேண்டியது தானே!..

எல்லாம் வெயில் கோளாறு தான்!.. 

தஹி மதுர் அடிச்சா... சை.. லஸ்ஸி குடிச்சா எல்லாம் சரியாய்டும்.. ன்னு சொல்ல வர்றே.. அதானே..பா!..

அதே தாங்க... அதே தான்!..

சரி சொல்லு!..

புத்தம்புது தயிர் - ஒன்றரை கப்

அட.. அதுக்கு எங்க போறது?..  டப்பா தயிரு ஒத்து வருமா இதுக்கு?..

அதெல்லாம் கெமிக்கலுங்க..

அப்போ என்ன தான் செய்றது?..

வீட்ல விவரம் சொல்லி அரை லிட்டர் பசும்பால் வாங்கி கொடுத்தீங்கன்னா அதை தயிராக்கிட்டுப் போறாங்க...

அதுக்குத் தெரியுமா இதெல்லாம்?..

இல்லத்தரசிகளுக்கு தான் எல்லாந் தெரியுமே!..

இருந்தாலும் ...

தண்ணீர் விடாமல் பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்து உறை ஊற்றி வைக்க வேண்டும்.. இதுதான் முக்கியம்.. இப்படிக் கிடைத்த தயிருடன் கால் tsp பட்டைத் தூளும் மூன்று tbsp பழுப்புச் சர்க்கரையும் மூன்று குவளை குளிர்ந்த நீரும் சேர்த்து தயிர் மத்தினால் சிலுப்பிக் கொள்ளவும்.. 
பாரம்பரிய தயிர் மதுரம் தயார்..

மத்து எல்லாம் சொல்றீங்க!?. மத்துக்கு எங்கே போறது?.. நான் பார்த்ததே இல்லையே!.. 

வாழ்க்கையே மிக்சி ன்னு ஆனதுக்கு அப்புறம் தயிர் மத்து எப்படி கைக்கு வரும்?..

வீட்ல தயிர் மத்து இருந்தால் மின்செலவு குறையும்!.. தவிர கைகளுக்கும் நல்ல பயிற்சி!..

கையில் காசு பணம் நிறைய இருந்தால்  முந்திரி/ பிஸ்தா வாங்கி சன்னமாக பொடி செய்து தயிர் மதுரத்தில தூவிக் கொண்டு அருந்தலாம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..

**"

38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில்
    உடல் சூட்டை குறைக்கும் பானமாக தஹி மதுர் செய்முறை அருமை. சொன்ன விதத்தை ரசித்தேன்.

    மோர் என்றுமே நம் உடம்பிற்கு நல்லதுதானே..! நாம் சாப்பிடும் போது என்ன சாப்பாடு எடுத்துக் கொண்டாலும், இறுதியில் மோரோ, தயிரோ விட்டு கொஞ்சம் சாப்பிட்டால்தான் அதற்கு முன் சாப்பிட்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது மிகவும் சரி..

      நல்ல தயிர் என்பது நாமே வீட்டில் தயாரிப்பது.. அதற்கும் இடைத் தரகர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள்....

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. திங்கட்கிழமை சமையலறைப் பக்கத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    எனது குறிப்பினைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. தஹி மதுர் குறிப்பு அருமை! அதை ஊற்றி வைத்திருக்கும் குவளை மிக அழகு! முன்பெல்லாம் கிராமங்களில் எருமைப்பாலை சுண்டக்காய்ச்சி மண் கலயங்களில் உறை ஊற்றி வைப்பார்கள். தயிர் அமிர்தமாய் ருசிக்கும்! ம்..அது ஒரு காலம்!!

    பதிலளிநீக்கு
  6. அந்தப் படம் இணையத்தில் இருந்து பெற்றது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அன்புக்குரிய கோமதிஅரசு அவர்கள் வெளியூர் பயணத்தில் இருக்கின்றாரோ!..

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. எதையுமே புதுவித பெயர் வைத்தால்தான் ஃபேமஸாகும் என்பது வழக்கமாகிவிட்டது.

    மசாலா தயிர், நீர் மோர் இதெல்லாம் காணாமல் போய், தஹி மதுர் வந்துவிட்டதா? செய்துபார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சும்மா குறும்புக்காக வைக்கப்பட்ட பெயர்..

      தஹி வேணாம் போடா.. - என்றொரு பிரச்சாரம் கிளம்பியதே அப்போது எழுதினேன்..

      தயிர் என்பது தஹி என்றாகி தஹி என்பதை ததி என்று பாடுகின்றார் இறையருள் பெற்ற அருளாளர்..

      அது நினைவுக்கு வருகின்றதா!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
    2. துரை சார்... இதெல்லாம் கொஞ்சம் அறிந்திருக்கிறேன். ஹிதம் என்பதுதான் இதம் என்றானது (இதம்பாடல் நினைவுக்கு வருதா?). ஹிம்சை-இம்சை, ஹிரண்யண்-இரணியன்... தஹி அன்னம் - ததி அன்னம் - தத்யோன்னம்

      நீக்கு
    3. தாங்கள் அறியாததா!..

      நானும் கொஞ்சம் மொழி ஆர்வத்தைக் காட்டிக் கொண்டு இருக்கின்றேன்..
      அவ்வளவு தான்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. கோடைக்கு ஏற்ற தஹி மதுர். அருந்த இதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ,..

      நலம் வாழ்க..

      நீக்கு
  11. தஹி மதுர் என்பதே லஸி..
    தயிர் இனிப்பு ..

    பதிலளிநீக்கு
  12. தஹி மதுர் என்பது வடமொழி என்றால்

    லஸி என்பது என்ன மொழி?..

    ஆங்கிலமா..

    தயிர் அதிரசம் என்றால் தயிர் வடை மாதிரி!..

    அதிரசத் தயிர் என்று வைத்துக் கொள்ளலாமா!.. ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரசம் அதி ரசம் என்றால், லட்டுவம் ரசமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? இனிப்பூட்டிய தயிர் - லஸ்ஸி.

      நீக்கு
  13. நிறையக் குடிச்சாச்சு. அம்பேரிக்காவில் மாங்கோ லஸ்ஸி ரொம்பப் பிரபலம். சாப்பாடெல்லாம் முடிஞ்சதும் அவங்க கிட்டே இதை ஆர்டர் பண்ணிட்டு, "டு கோ" சொல்லிட்டால் நன்றாகப் பாக் பண்ணித் தருவாங்க. கொட்டவே கொட்டாது. காரில் வரச்சேயும் சாப்பிட்டுக்கலாம். வீட்டுக்கு வந்தும் சாப்பிட்டுக்கலாம். அம்புட்டுப் பெரிய தம்பளர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா ,..

      நலம் வாழ்க..

      நீக்கு
  14. வடமாநிலங்களில் ஷதாப்தியில் பயணம் செய்தால் கட்டாயம் காலை உணவுடனோ அல்லது சுமார் பதினோரு மணி அளவிலோ இந்த லஸ்ஸி பாட்டில் கொடுப்பாங்க. அருமையாக இருக்கும். அமுல் காரங்களோட அமுல் லஸ்ஸி இன்னமும் சுவை. ராஜஸ்தான் நசிராபாத், ஜாம்நகர் ஆகிய ஊர்களில் இருக்கையில் நல்ல சுத்தமான பசும்பால் என்பதால் வீட்டிலேயே பண்ணுவேன். என்னன்னா ஒரு நாளைக்கான பாலேடுகள் லஸ்ஸிக்குப் போயிடும். அங்கெல்லாம் தோலை உரிக்கிறாப்போல் பாலேடுகளைத் தயிரிலிருந்து உரித்துக் கொள்ளலாம். குறைந்தது ஆறு அங்குலம் கனம் இருக்கும். ஒரு விரற்கடைனு வைச்சுக்கோங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மும்பையில் இருந்தபோது இப்படி சாப்பிட்டு இருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா ,..

      நலம் வாழ்க..

      நீக்கு
  15. எண்பதுகளில், டெல்லியின் டாபா (Dhaba) க்களில் உயரமான கண்ணாடி டம்ளர்களில் மேலே திக்கான ஆடையுடன் சூப்பர் லஸ்ஸி சாப்பிட்டிருக்கிறேன். அதே காலகட்டத்தில் உ.பி.யின் அலிகர் நகருக்குப் போய் உறவினர் வீட்டில் தங்கியிருக்கையில் இரவு நேர வாக்கின்போது சாலையோர டாபாக்களில் அருமையான சூடான பாலும் அருந்தியிருக்கிறேன். வடக்கும் நன்றாயிருந்த ஒரு இனிய காலகட்டம் அது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஹி வேணாம் போடா
      பிரச்சாரம் வேணும் வாடா..

      // வடக்கும் நன்றாயிருந்த ஒரு இனிய காலகட்டம் அது..//

      இனிமேல் எப்போது வருமோ?..

      தங்கள் அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஏகாந்தன் ,..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. வாரணாசியில் தங்கி இருந்தப்போ தினம் இரவு வாடிக்கையாக ஒரு பால்கடைக்குப் போய் இம்மாதிரிப் பால் வாங்கிக் குடிச்சிருக்கோம். மலாய்னா மலாய் அதான் மலாய். பாலில் க்ரண்டியால் எடுத்து எடுத்துப் போட்டுக் கலக்குவாங்க. அதுக்கெல்லாம் மனசு வேணும். இங்கே எதிர்பார்க்கவே முடியாது. கூடவே பொடித்த மு.ப., பா.ப., பி.ப. ஆகியனவும்.

      நீக்கு
    3. அதே போல் அன்னாசிப்பழச் சாறும். ஒரு முழு அன்னாசியைத் தோல் சீவி நறுக்கி இரண்டு பம்ப்ளிமாஸ் பழங்களையும் அதோடு சேர்த்துச் சாறு எடுத்துக் கொண்டு கொஞ்சம் போல் காலா நமக் மேலே தூவித் தருவாங்க. நாங்க பழச்சாறுகளில் சர்க்கரையோ, ஐஸோ சேர்க்கக் கூடாதுனு சொல்லிடுவோம். அதே இங்கே கீழே இருந்த சூப்பர் மார்க்கெட்டில் மாதுளை ஜூஸ் கேட்டப்போ அதில் பாலை எல்லாம் ஊற்றிச் சர்க்கரை போட்டு ஐஸைத் தூவினு கந்தரகோளம் பண்ணிட்டாங்க. அதனால் தமிழ்நாட்டில் ஜூஸ் எனில் எப்போவானும் மாம்பழ ஜூஸ் மட்டும்.

      நீக்கு
    4. நாங்க சாப்பிட்டதிலேயே பிரமாதமான லஸ்ஸி எனில் அது கான்பூரில் தான். காலை ஒன்பது மணிக்குக் குடிச்சோம். லக்னோ போய்ச் சேரும்வரை பசியே எடுக்கலை.

      நீக்கு
    5. தங்கள் அன்பின் மீள் வருகையும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  16. பாலுக்கும், தயிருக்கும் வடக்குதான் லாயக்கு என்றுதான் எனக்கு இப்போதும் தோன்றுகிறது . அங்கே ஏந்தலான மண்பாத்திரத்தில் பாரம்பர்யத் தயிர் தோய்க்கிறார்கள். குறிப்பாக டாபாக்களில். ரொட்டி, ஸப்ஜி சாப்பிடும்போது தயிருக்கு ஆர்டர் கொடுத்தால், அதை ஹல்வா வெட்டுவதுபோல் வெட்டி ஒரு சிறு தட்டில் போட்டுத் தரும்போது சாப்பிட ஆனந்தமாயிருக்கும்-லேசான புளிப்போடு, தயிருக்கே உரிய பிரத்யேக வாசனையோடு. பேசாமல் தயிர் மட்டுமே இரண்டு ப்ளேட் அடித்துவிட்டுப் போய்விடலாமா என்று தோன்றும், குறிப்பாக வெளுக்கும் கோடையில்.

    பாக்கெட் தயிர்களில் , அதன் இயற்கை மென்வாசனை தென்படுவதில்லை. பெங்களூரில் நந்தினியின் பால், தயிர் மற்ற ப்ராண்ட்களைவிடப் பரவாயில்லை எனினும், பாலித்தீன் தயிர் மூடை அவுட் செய்துவிடுகிறது.

    நகரங்களில் பாலித்தீன் பாக்கெட்டிலேயே பால், தயிரெனப் பழக்கப்பட்டுவிட்ட நடப்புத் தலைமுறைக் குழந்தைகளுக்கு, பாலின் வாசனை, தயிரின் வாசனை என்றால் என்ன எனப் புரியாது. ம்ஹூம்.. பல விஷயங்களும் புரிவதில்லைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நகரங்களில் பாலித்தீன் பாக்கெட்டிலேயே பால், தயிரெனப் பழக்கப்பட்டுவிட்ட நடப்புத் தலைமுறைக் குழந்தைகளுக்கு, பாலின் வாசனை, தயிரின் வாசனை என்றால் என்ன எனப் புரியாது.///

      மாடும் தெரியாது..
      கன்றும் தெரியாது!..

      தங்கள் அன்பின் மீள் வருகையும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..
      நன்றி ஏகாந்தன்..

      நலம் வாழ்க..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!