ஞாயிறு, 2 ஜூலை, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 03

 

                  வைரமுடி யாத்திரை – ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர்  – பகுதி 3 

ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பிறகு சிறிது நேரம் இருந்தால் அருகிலிருந்த நரசிம்மர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தோம். பிறகு 9 ¾ க்கு அருகிலிருந்த திப்புசுல்தான் உபயோகித்த சிறைச்சாலை (நிலவறை-Dungeon என்று அழைக்கப்படுகிறது)க்குச் சென்றோம். 

இது தரை மட்டத்திலிருந்து கீழே அமைந்துள்ளது. இங்கு சுவர்களில் இரும்பாலான வளையங்கள் உள்ளன. கைதியின் இரு கைகளையும் அதில் கட்டிவைத்துவிடுவார்களாம். காவிரியிலிருந்து நீர் இந்த இடத்திற்கு வந்து, கைதியின் இடுப்புவரைகூட உயர்ந்துவிடுமாம். இந்த டஞ்சனிலிருந்து மைசூருக்குச் செல்லும் சுரங்கப்பாதை இருக்கிறதாம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கலோனல் பெய்லி இங்கு இருக்கும்போது மரணமடைந்ததால், அவன் பெயரில் கலோனல் பெய்லி நிலவறை என்று அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீரங்கப்பட்டினம், திப்புசுல்தானின் தலைநகராக இருந்ததால், இங்கு அவனது சிதைந்துபோன அரண்மனை மற்றும் அவன் உபயோகித்த மசூதியும் உள்ளன. ஊரைச் சுற்றி கோட்டைச் சுவர்களையும் காணலாம். ஸ்ரீரங்கபட்டினத்திலிருந்து சிறிது தூரத்தில், ஹைதர் அலியின் சமாதியும் சிதிலமடைந்த அரண்மனைப் பகுதிகளும் உள்ளன. நாங்கள் இந்தச் சிறைச்சாலையையும், அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் வழியில், போரில் திப்பு சுல்தான் உடல் பிணமாகக் கிடந்த இட த்தையும் பார்த்தோம்.


மேலிருந்து பார்த்தால் சிறைச்சாலை இருப்பது தெரியாதபடி, 20 படிகள் இறங்கிச் செல்லும்படி இந்த நிலவறை என்று அழைக்கப்படும் இடம் இருக்கிறது



அரசனானவன் எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும் தவறு செய்யாமல் இருக்கவே முடியாது. பல நேரங்களில் அவனது அமைச்சர்கள் அல்லது மற்றவர்கள் சொல்வதை வைத்துத் தவறான நீதி வழங்கவும், நல்லவர்களைச் சிறையில் வைக்கவும் நேரிடும். இதனால் ஏற்படும் பாவத்தால், எல்லா அரசர்களும் நரகத்தையும் அனுபவிக்க நேரிடும் என்று இந்து சமய நீதி நூல்கள் சொல்கின்றன. இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நல்லவர்கள் அடைக்கப்பட்டார்களோ.

ரங்கநாதஸ்வாமி கோவிலிலிருந்து 150 மீட்டர்கள் தொலைவில் லால் மஹால் அரண்மனை என்று சொல்லப்பட்ட திப்புசுல்தான் அரண்மனை இருந்தது. இது மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக 1800ல் அதனைப் பார்வையிட்ட ஆங்கிலேயர்கள் எழுதியிருக்கின்றனர். 18ம் நூற்றாண்டில் இறுதியில் நடந்த போரில் இந்த அரண்மனை அழிவைச் சந்தித்தது. அதுவும் தொல்லியல்துறையினால் பராமரிக்கப்படுகிறது. 




போர் நடைபெற்ற இட த்திற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது ஸ்ரீரங்கபட்டினம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம். இது ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பகுதியே பரந்த வெளியைக் கொண்டு இருக்கிறது. என்னவென்ன விலையுயர்ந்த பொருட்கள் கோவிலிலிருந்து ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டதோ.

ஸ்ரீரங்கப் பட்டினத்தில் இந்தப் பகுதி முழுமையுமே கோட்டைக்குள் இருந்தது. அங்கு நடந்த கடைசிப் போரில், திப்பு சுல்தானின் சடலம் கிடைத்த இடம் அடையாளப்-படுத்தப்பட்டு இருக்கிறது. அதனையும் கண்டோம்.

இதெல்லாமே முக்கால் மணி நேரத்தில் பார்த்தோம். பிறகு தங்குமிடத்திற்குத் திரும்பி, காலை உணவு உண்டோம்.  அன்றைய உணவு, வெண்டைக்காய் கறி, பறங்கிக்காய் கூட்டு, குடமிளகாய் சாம்பார், மெதுவடை, அக்காரவடிசல். பிறகு தண்ணீர் பாட்டில் மாத்திரம் எடுத்துக்கொண்டு, மற்ற லக்கேஜ்களை தங்குமிடத்திலேயே வைத்துவிட்டு, பேருந்தில், அன்றைய இடங்களைப் பார்க்கச் சென்றோம். கிளம்பும்போது மணி 11 ½ ஆகிவிட்டது.

அநந்தாழ்வான் அவதாரத் தலம். 

இது, ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து (தங்கியிருந்த இடத்திலிருந்து) 2 ½ கிமீ தூரத்தில், கிரங்கூர் என்ற இடத்தில் உள்ளது. 

இராமானுஜரின் தாய் மாமன் திருமலை நம்பி, திருப்பதியில் இருந்தார்.  இராமானுஜர், கர்நாடகாவில் இருந்தபோது, திருப்பதி கோவிலுக்கு பூ கைங்கர்யத்துக்காக ஒருவர் வேண்டும், பெருமாளுக்கு பூந்தோட்டம் அமைக்கவேண்டும் என்ற செய்தி வந்தது. அப்போது திருப்பதி, வனத்திற்குள், மலைமேல் அமைந்திருந்த கோவில். ஆட்கள் வருகை குறைவு. பாதுகாப்பும் குறைவு. இராமானுசர், தன்னுடைய கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து (கர்நாடகாவில் அப்போதுதான் வைணவத்தைப் பரப்பிக்கொண்டிருந்தார் இராமானுஜர். அதனால் அவருடைய கூட்டத்தில் இருந்தவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்தாம்), உங்களில் யார், திருமலை சென்று பெருமாள் கைங்கர்யம் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது அநந்தாழ்வான் எழுந்து, தான் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மலைமேல் பூந்தோட்டம் அமைத்து, பூக்களைத் தொடுத்து திருப்பதி பெருமாளுக்கு தினமும் வழங்கும் கைங்கர்யத்தை மேற்கொள்ள தைரியமாக முன்வந்த அநந்தனை, இராமானுசர், அநந்தான் பிள்ளை (அனந்தன் ஆண் பிள்ளை) என்று அழைத்தார்.  

அனந்தான் பிள்ளை, திருமலை கோவிலின் அருகில் தோட்டம் அமைத்து, அதற்கு நீர் நிலை சமைத்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார், அவர் உருவாக்கிய குளம்  திருமலை கோவிலின் இடது புற மூலையில் உள்ளது, அவர் உபயோகப்படுத்திய கடப்பாரை கோவிலின் நுழைவாயிலின் வலது புற கதவுப் பகுதியில் தொங்கவிடப்பட்டுள்ளது. இப்போதும் அதனைக் காணலாம்.

கிரங்கூரில் இருந்த அனந்தாழ்வானுடைய அவதாரத் தலத்துக்குச் சென்று சேவித்தோம்.



திருப்பதியில் உள்ள அனந்தாழ்வான் வசித்த இடம். இது, கோவிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது (மாட வீதியின் ஒரு மூலையில்). அங்கு அவர் அமைத்த திருக்குளமும், அவருடைய பிருந்தாவனமும் உள்ளன. ஜூலை 2022ல் திருப்பதியில் (மலையில்) ஆறு நாட்கள் இருக்கவேண்டியிருந்தது. அப்போது இந்த இடங்களுக்கெல்லாம் சென்றுவந்தேன். இங்கு இப்போதும் அனந்தாழ்வான் வம்சத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கோவிலில் தனிப்பட்ட மரியாதைகள் உண்டு.


பிறகு அங்கிருந்து புறப்பட்டு, சங்கமம் என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். இங்கு கபினி, ஹேமாவதி, சாரங்கி என்ற மூன்று ஆறுகள் சங்கமமாகின்றன. இது எல்லாமே மாண்டியா மாவட்ட த்தைச் சேர்ந்தது. மாண்டியா, கரும்பு விளைச்சலுக்குப் பெயர் போனது. சங்கமத்துக்குச் செல்லும் பாதையில்தான் திப்பு சுல்தானின் இன்னொரு அரண்மனை இருந்த இடமும், அவனுடைய தந்தை ஹைதர் அலி மற்றும் திப்புவின் சமாதிகளும் இருக்கின்றன (கூடவே ஏகப்பட்ட உறவினர்களின் சமாதிகளும்). பேருந்திலிருந்தே அதனைப் பார்த்தோம்.


திப்பு சுல்தான் இறந்த பிறகு, அவனுடைய தந்தை ஹைதர் அலி புதைக்கப்பட்ட  இடத்திலேயே புதைக்கப்பட்டான். இந்த இடம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ளது. பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டே சென்றோம்.  பொதுவாக ஆன்மீக யாத்திரையில் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்வதில்லை. (தாஜ்மஹாலுக்கே, பார்க்கப் போகிறவர்கள் மாத்திரம் போய்விட்டு வாங்க, ஆனால் வந்த பிறகு குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொள்ளணும் என்பார் யாத்திரை நடத்துபவர்)


இங்கு டூரிஸ்டுகள் வருகை உண்டு என்பதால், கடைகளும் உண்டு. நிறைய இளநீர் கடைகளும் (30 ரூபாய்), கரும்புச் சாறு கடைகளும், மற்ற கடைகளும் உண்டு. கர்நாடகாவில் கரும்புச் சாறு கடைகளே ரொம்பவும் சுத்தமாக இருக்கும். சிறிய இயந்திரம், அதில் கரும்பைச் செலுத்தினால் சாறு வெளியே வரும். (நம்ம ஊர் மாதிரி ஒரு பக்கம் கரும்பைக் கொடுத்து, அடுத்த பக்கம் இழுத்து…சக்கைகளெல்லாம் அருகிலேயே கிடக்க, ஈ மொய்த்துக்கொண்டு…என்றெல்லாம் இருக்காது). 20 ரூபாய்தான்.  பயண அலைச்சல் இருக்கும் என்பதால் இளநீர் குடித்தேன். மதியம் 1 மணி வெயிலுக்கு இதமாக இருந்தது.

இங்கிருந்து 2 மணி வாக்கில் கிளம்பி, 40 நிமிடப் பேருந்துப் பயணத்திற்குப் பிறகு மைசூர் அரண்மனைக்கு வந்து சேர்ந்தோம்.  மைசூர் அரண்மனை பற்றி அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்) 


= = = = =


64 கருத்துகள்:

  1. "நெல்லைத் தமிழன் சிறையில் " என்ற் தலைப்பு இந்த வார பதிவுக்குப் பொருத்தமாக இருக்கும். போட்டோக்கள் நன்றாக உள்ளன. சங்கமம் போட்டோ சரியான கோணத்தில் எடுக்கப் பட்டிருக்கின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலையில் அறச்சொல் எழுதலாமா ஜெயகுமார் சார்? நான்வேறு சில பிளாக்குகளில் அரசியல் கருத்துகள் எழுதறேன்

      நீக்கு
  2. பயணத்தகவல்கள் மனதை கனக்க வைக்கிறது.

    புகைப்படங்கள் அருமை.

    தாஜ்மகால் என்பதும் சுடுகாடுதானே ?

    சென்னை மெரினாவில் நான்கு பிணங்கள் புதைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சென்றால் (???) குளித்து விடணும் இதை மக்கள் பலரும் ஏற்பதில்லை.

    நான் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு தனுஷ்கோடி சென்று தீர்த்தம் எடுத்து வரும்போது அப்துல்கலாம் நினைவகம் (என்னைப் பொறுத்தவரை சுடுகாடு) செல்லணும் என்றபோது நான் இறுதிவரை மறுத்து தடுத்து விட்டேன்.

    இதில் நான்தான் அகவையில் சிறியவன் இதுதான் இன்றைய இறைமார்க்கம்.

    நானும் இதுவரை கலாம் (சுடுகாடு) நினைவகம் சென்றதில்லை. ஒருவேளை போனாலும் வணங்க மாட்டேன் ஒருக்கால் சல்யூட் வைக்கலாம்.

    திரு.கலாம் அவர்கள்மீது அளப்பெரிய மரியாதை வைத்து இருக்கிறேன் என்பது தனிப்பட்ட விடயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு திருமண நாளுக்கு நானும் பாஸும்  சிபெரும்புதூர் கோவில் சென்றோம்.  கோவிலை முடித்து விட்டு ராஜீவகாந்தி நினைவிடம் செல்ல சென்றோம்.  நான் உள்ளே சென்று பார்த்து வந்தேன்.  பாஸ் ஆனவரை அழைத்தும் உள்ளே வர மறுத்து விட்டார்.  இன்னொரு நாள் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டார்.

      நீக்கு
    2. சரிதானே தங்களுக்கு நல்லநாளன்று எதற்காக செத்தவனின் நினைவிடத்தை காணவேண்டும் ?

      அதேநேரம் தாய் - தந்தை நினைவிடம் செல்லலாம் ஆனால் மக்கள் இதை ஏற்பதில்லை

      நீக்கு
    3. உண்மைதான்.  நான் அதை ஒரு சுற்றுலாத்தலமாக கருதினேன்.  பார்த்தேன்.  அவருக்கு அது நீங்கள் சொல்வது போலதான் தெரிந்தது.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. உங்களது பாஸ் எண்ணமே சரியானது.
      சாத்தூரிலிருந்து... கில்லர்ஜி

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தப்பு சுல்தான் ச்சே..   திப்பு சுல்தான் சம்பந்தப்பட்ட விவரங்களும் படங்களும் சுவாரஸ்யம்.  அங்கு இவ்வளவுதான் போட்டோக்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாத்திரைல ரொம்ப சேர்க்கலை.. ஒரு கோவிலில் உள்ள சிற்பங்கள் திகட்டத் திகட்ட பல வாரங்கள் வரப்போகுது

      நீக்கு
  6. சமாதிக்குச் சென்றுவிட்டு வந்தால் குளிக்க வேண்டும் என்கிறீர்களே! ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சமாதி சன்னதிக்கு சென்று வருவதும் தீட்டா? குளிக்க வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்விக்கு சரியான பதிலை நெல்லை சொல்லக்கூடும். அல்லது கீதா அக்கா.

      நீக்கு
    2. பிரபலமானவர்களின் சமாதிகளும் பிரபலமாகும் போது, இந்த சர்ச்சைகளும் உருவாகும் போலும்..! விபரமறிய நானும் காத்திருக்கிறேன்...

      நீக்கு
    3. பிரபலமானவர்கள் கதை வேறு; மகான்கள் கதை வேறு அல்லவா?

      நீக்கு
    4. தாஜ்மகால் சுடுகாடு அல்ல..
      புதைகுழி..

      பொதுஜனங்களுக்கும் அங்கே இடம் கிடைத்திருந்தால் இடுகாடு என்று ஆகியிருக்கும்..

      சுடுகாடு என்பது புறச் சமயங்களுக்குப் பொருந்தாது..

      நீக்கு
    5. தெய்வாம்சமுள்ளவர்கள் ஆசார்யர்கள். அவர்களது சரமத் திருமேனி (உயிர் பிரிந்த உடல்) அடக்கம் செய்து, அதன்மீது விக்கிரகம் வைக்கலாம் இல்லாமலுமிருக்கவாம். விக்ரஹம் வைத்திருந்தால் சந்நிதி எனப் பெயர் பெறும். பிருந்தாவனம் எனவும் வழங்கப்படும்.

      நீக்கு
    6. மனிதர்களுக்கு (சமூக நிலையில் உயர்ந்திருக்கலாம், அரசர், அரசியல் தலைவர்கள்) அமைத்த சமாதி சென்றால் குளிக்கணும் என்பது மரபு. இந்தவிதி புறச்சமயங்களுக்கு இல்லை

      நீக்கு
    7. என் மனைவி, பள்ளிப்படைகளுக்குச் சென்றால் குளிக்கணும் என்பதால், கூப்பிட்டால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பாள்

      நீக்கு
    8. ராஜீவ் மற்றவர்கள் உடல் புதைக்கப்படாததால் அங்கு சென்றால் குளிக்க வேண்டாம். நாம் வசிக்கும் இடத்தில் என்னென்ன போர்கள் நடந்ததோ எத்தனை பேர்கள் செத்தாங்களோ. நாம அங்கு வாழலையா?

      நீக்கு
    9. @ நெல்லை.

      // நாம் வசிக்கும் இடத்தில் என்னென்ன போர்கள் நடந்ததோ எத்தனை பேர்கள் செத்தாங்களோ. நாம அங்கு வாழலையா?..//

      இப்படியான இடத்தில் வாழ்பவர்களுக்கு என்னென்ன பிரச்னைகளோ!..

      நீக்கு
    10. ஃப்ரான்சில் லில் (Lille) ஒரு ஹோட்டலில் இரவு தங்கினேன். அந்த அறை சரியில்லை. ஆவியின் presence.சஹஸ்ரநாமத்தைச் சொல்லிக்கொண்டு கவிழ்ந்து கண்ணை இறுக்க மூடிக்கொண்டு இரவை ஓட்டினேன். காலையில் சன்னல் வழியா பார்த்தால் அதையொட்டி மிகப்பெரிய இடுகாடு.. அம்மாடியோவ்

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பயண விபரங்கள் அனைத்தும் அருமையாக தந்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திப்புசுல்தான் காலத்திய சிறைச்சாலை வித்தியாசமாகத்தான் வடிவமைப்பட்டுள்ளது. கைதிகளின் நிலை பரிதாபத்துக்குரியதுதான். நீர் சூழும் அந்த நிலையில் எத்தனை நாட்கள் நிற்பது.? நீங்கள் சொன்னபடி நிரபராதிகள் மாட்டிக் கொண்டால் அவர்களின் மனவருத்தங்கள் சாபங்களாக மாறி விடுந்தானே....!! நீதி தவறுவதும் எக்காலத்திலும் உண்டே.... கஸ்டந்தான்..

    திருப்பதி மலையில் பெருமாளுக்கு தினசரி புஷ்ப கைங்கரியத்துற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அனந்தன் பிள்ளையின் வரலாறும், அவர் வாழ்ந்த இடங்கள் பற்றிய தகவல்களும் படிக்க நன்றாக இருந்தது. இறைவனின் அருள் அவருக்கு அவர் வாழ்நாளில் கிடைத்துள்ளது.

    நாங்கள் சென்ற வருடம் ஸ்ரீரங்கபட்டிணா சென்று இறைவனை தரிசித்ததோடு சரி.. அதுவே ஒரே கூட்டம். அவசர தரிசனம் என்ற இடர்பாடுகள். இங்கெல்லாம் சென்றதில்லை. உங்கள் பயணங்களும் மூலமாக இவற்றை அறிந்து கொள்கிறேன். நன்றி.

    மூன்று ஆறுகளின் சேருமிடங்கள் படம், திப்பு சுல்தானின் அழகிய அரண்மனை படம் எல்லாம் நன்றாக உள்ளது. பயணத்தின் விபரங்களை நீங்கள் அழகாகவும், விபரமாகவும் தந்துள்ளீர்கள். நேரில் வந்து பயணிப்பது போன்ற ஒரு பிரமையில் நானும் உடன் பயணித்தேன். இன்னமும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  8. இன்றைய பதிவில் அதிகமாக இந்த விஷயம் பேசப்படும் என நினைக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  9. ஸ்மஸானம் என்பதே மயானம்.. சுடுகாடு என்பது புறச் சமயங்களுக்குப் பொருந்தாது..

    அரேபிய வழியில் சென்றவர்களது புதைகுழிகளில் அடையாளம் தெரியாத அநாதி சடலங்களுக்கு இடம் கிடையாது..

    ஐரோப்பிய வழிகளில் சென்றவர்களது புதைகுழிகளிலும் அப்படித் தான்.. அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

    கப்பம் கட்டியிருந்தால் ஒழிய கதை முடியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பம் கட்டியிருந்தாலொழிய... இதைப்பற்றி விவரமா மொபைல் வழி எழுதமுடியலை. ஊருக்கு வந்தபின் அடுத்தவாரம் எழுதறேன்

      நீக்கு
  10. இடுகுழி மரியாதை என்பது அரேபியத்தில் கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னால் நம்பமாட்டீங்க. அவங்க, இறந்தவர் அங்கேயே இருப்பதால் (பாவம் நிறைய செய்திருந்தால் 6x3 அடியிலும் நெருக்குவாங்களாம். நிம்மதியா படுத்திருக்க முடியாது) அவங்க நினைவு நாளில் அல்லது முக்கியமான நாட்களில் அங்கு போய் பெப்சி, கோலா பாட்டிலோடு திறந்து கவிழ்த்தி வைப்பாங்க. குடும்பமா போய் சமாதியைச் சுத்தி உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வருவாங்க

      நீக்கு
    2. தெரியும்.. எழுத வில்லை.. நம்மூர்களில் இந்தப் பழக்கம் இல்லை.. நாற்பதாம் நாள என்றொரு கணக்கு உண்டு..

      நீக்கு

  11. @ ஸ்ரீராம்..
    /// ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சமாதி சன்னதிக்கு சென்று வருவதும் தீட்டா? குளிக்க வேண்டுமா?.. ///

    நமது கலாச்சாரத்தில் அவர்கள் அருளாளர் எனப்பட்டவர்கள்.. தவிரவும் அவர்களது அருட்சிந்தைகள் அங்கேயே சூழ்ந்து கொண்டிருக்கின்றன..

    அவர்கள் துறவிகள் தான் ஆயினும் நற்சிந்தனை, நல்வாக்கு, நற்செயல் இவற்றைத் துறக்காதவர்கள்..

    எனவே ஜீவசமாதிகளும் அதிஷ்டானங்களும் புனிதமானவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதனால்தான் அந்த இடங்களுக்கு தரிசிக்கச் செல்கிறோம்

      நீக்கு
  12. /// நீங்கள் சொன்னபடி நிரபராதிகள் மாட்டிக் கொண்டால் அவர்களின் மனவருத்தங்கள் சாபங்களாக மாறி விடுந்தானே!... ///

    காலையில் இந்தப் பதிவைப் படித்ததுமே என் மனதில் எழுந்த விஷயத்தை மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன் எழுப்பியுள்ளார்..

    இதற்கு விளக்கம் கொடுப்பது பெரிய விஷயம்..

    அந்தக் காலத்தில்
    கிராமங்களில் தெரு வழியே சவம் எடுத்துச் செல்லப்பட்டதும் வாசல் தெளித்து விளக்கேற்றி விடுவார்கள்.. அந்த ஊர்க்காரர்.. எப்படியும் தெரிந்திருக்கும்.. எனவே அது ஒரு ஆத்ம சாந்தி என்று செய்யப்பட்டது..

    சாதாரண மானுட ஆவி.. பத்து நாட்கள் வரை இங்கேயே ஆசாபாசங்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும்.. என்றாலும் அன்றைய தினத்தில் அலைபாய்ந்து கிடக்கும் என்பதாலேயே அக்கம் பக்கத்தார் கூட சாப்பிட மாட்டார்கள்..

    எல்லா கர்மங்களும் நடத்தப்படும் வரை நல்ல காரியங்களை ஒத்தி வைத்து விடுவார்கள்..

    மக்கள் பிற சமய வழிகளில் சென்ற பிறகு அறிவு ஜீவி ஆகி விட்டார்கள்..
    இவற்றைப் பற்றி எண்ணுவதே கேவலம் என்றாகி விட்டது..

    மயானத்திற்குச் செல்லும் வழிகளில் குடியிருக்க மாட்டார்கள் ஒரு காலத்தில்..

    இன்றைக்கு மயானக்0 கரைகள் குடியிருப்பு மனைகள் ஆகின்றன..

    குளத்தைத் தூர்த்து வீட்டு மனையாக்கி விற்றால் அங்கே வீடு கட்டியவன் நிம்மதியாக இருக்க முடியாது..

    நீர் வாழ் உயிர்களின் சாபம் வேறெங்கு போகும்?..

    இன்னும் எவ்வளவோ இருக்கின்றன..

    சென்ற ஆண்டில் எங்களுக்கு
    தேவ பிரச்னம் ஒன்றில் கிடைத்த விவரங்கள் சொல்லில் அடங்காதவை..

    மனம் விட்டுப் பேசலாம்..
    தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கின்றது..

    பிறகு வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்துகள். குளங்களை ஆக்கிரமித்து, பள்ளிவாசலை அதனுடன் சேர்ந்துகட்டி என் பல அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன. இணையத்தில் தேடினால் இல்லை காஞ்சி போன்ற இடங்களில் காணலாம்

      நீக்கு
  13. குவைத்தில் பல வருடங்கள் இருந்தும் எகிப்தின் பிரமிடுகளைப் பார்க்க வில்லையே என்றொரு ஏக்கம் எனக்குள்.. அப்போது எனது குலதெய்வம் யாரெனத் தெரியாது.. குல தெய்வ வழிபாடு கண்டறிப்பட்டது 2002 ல் தான்..

    மீண்டும் குவைத்திற்கு வாய்ப்பு வந்த போது மறுபடியும் பிரமிடு பார்க்க ஆசை எழுந்தது..

    ஏனெனில் அங்கிருந்து செல்வது மிகவும் எளிது..

    அச்சமயத்தில் குலதெய்வத்தின் வாக்கு என்ன தெரியுமா!..

    அங்கே சென்றால் தோஷங்கள் ஏற்படும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பசங்களுடன் அங்கு செல்லத் திட்டமிட்டேன். பெண், தடை போட்டுவிட்டாள்.

      நீக்கு
  14. பதிவு அருமை... அதை விட கருத்துரைகள் ~~~~~~~

    பதிலளிநீக்கு
  15. ப்டங்கள் எல்லாம் அருமை, நெல்லை. திப்புசுல்தான் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட. நானும் சென்றிருக்கிறேன் எப்ப ஸ்ரீரங்கப்பட்டினம் சென்றோமோ அப்ப. பல வருடங்களுக்கு முன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துலா மாதத்தில் ஸ்ரீரங்கபட்டினம் போயிட்டு வாங்க கீதா ரங்கன். காவிரி குளியல், ரங்கநாதர் தரிசனத்துக்கு. நீங்க ஹிஜாப்பைத் தூக்ஙிட்டுப் போயிடாதீங்ங ஹாஹாஹா

      நீக்கு
    2. துலா - ஐப்பசி தானே? நெல்லை அப்படி எல்லாம் ப்ளான் பண்ணி போவது கஷ்டம் நம் வீட்டில். சான்ஸ் கிடைக்கும் போது போக வேண்டியதுதான்!!
      சொல்லப் போனால் இந்தத் துலா காவிரி குளியல் இதெல்லாம் எனக்கு ஊரில் இருந்தவரை தெரியாத விஷயங்கள் நெல்லை. எந்தவித வழக்கங்களும் தெரியாது. கல்யாணம் ஆன பிறகுதான் இப்படி ஒன்று இருக்கு என்று தெரிந்தது. \

      கீதா

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நல்லவர்கள் அடைக்கப்பட்டார்களோ.//

    இப்பவும் அப்படித்தானே, நெல்லை. க்ரைம் கதைகள் அதாவது உண்மையாகவே போலீசாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் சொல்வதிலிருந்து தெரிவது, கொலை செய்தவனைக்காப்பாற்ற வேறு ஒருவனை, அவனுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லைஆனா.....தூக்கு தண்டனை கூடக் கொடுத்து அனுப்பி தூக்கிலிட்டு, அந்த மனிதன் தான் போராடினாலும் தனக்கு நீதி கிடைக்காது என்று அமைதியாக இருந்து தண்டனையை ஏற்றுக் கொண்ட நிகழ்வு வரை நடந்திருக்கு .....தெரிந்த விஷயம் தான் ஆனால் அதிர்ச்சிதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணீர் வரவைக்கும் இத்தகைய கதைகள் ஏராளம் கீதா ரங்கன். சமீபத்தில் விபூதி பாக்கெட்டில் கிறித்துவ மத பிரச்சார விளம்பரங்கள் இருந்தன என்று அப்பாவி பூசாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்

      நீக்கு
  18. வைரமுடி யாத்திரை பதிவு அருமை.
    படங்களும் செய்திகளும் மிக அருமை.

    அநந்தான் பிள்ளை வாழ்க்கை வரலாறு அவர் அமைத்த திருக்குளம் படம், அவதார இடங்கள் படங்கள் அருமை. தரிசனம் செய்து வணங்கி கொண்டேன்

    சிறு வயதில் ஸ்ரீரங்கப்பட்டினம திப்புசுல்தான் அரண்மனை , மற்றும் மசூதி, சிறைச்சாலை பார்த்தது நினைவில் வந்து போகிறது. பல வருடங்கள் கழித்து திப்புசுல்தான் தொடர் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுகளும் வருகிறது.
    படங்கள் எல்லாம் அருமை.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.. மிக்க நன்றி. கர்நாடகாவில் பல கோயில்களுக்கு அரசு சாரோடு போயிருக்கீங்களா?

      நீக்கு
  19. இங்கு கபினி, ஹேமாவதி, சாரங்கி என்ற மூன்று ஆறுகள் சங்கமமாகின்றன.//

    அழகான இடம். பார்த்து வருஷங்களாச்சு. படங்கள் செமையா இருக்கு ரொம்ப ரசித்துப் பார்த்தேன் ஆறுகள் தான் என்ன அழகு!!! இன்று நான் அதிகம் ரசித்தவை இந்தப் படங்கள்.

    //கர்நாடகாவில் கரும்புச் சாறு கடைகளே ரொம்பவும் சுத்தமாக இருக்கும்.//

    ஆமாம் அதே அதே....இங்கு சின்ன உணவகங்கள் கூட சுத்தமாக இருக்கின்றன. தட்டுக்கடை என்று வீட்டின் அருகில் ஒரு கணவன் மனைவி ஒரே ஒரு ஐஸ்க்ரீம் வண்டி போல ஒன்று வைத்துக்கொண்டு அதன் மீது அடுப்பு....அவ்வளவுதான் சுற்றி ஒரு மேசை போன்று ஒன்று பொருட்களை வைத்துக்கொள்ள. ஆனால் சுத்தமோ சுத்தம். இத்தனைக்கும் ஒரு கடையின் நடைபாதையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூர் வந்தால்தான் உணவுக்கடையை எப்படிச் சுத்தமாக நடத்துவது என்பது தமிழக கடைக்காரர்களுக்குத் தெரியும்

      நீக்கு
  20. மைசூர் அரண்மனையும் அழகாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. மூன்று ஆறுகள் படங்களும் நன்றாக இருக்கிறது.அந்த நிழல் தரும் மரமும், கரை ஓரம் உள்ள கூடாராமும், ஆறும் பார்க்க அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. காணாமல் போகும் கருத்துகளின் காதைப் பிடித்துக் கொண்டுவருபவர் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதைப் பிடித்துக் கொண்டுவந்து, பெஞ்சு மேலே ஏற்றிவிட்டேன் !

      நீக்கு
  23. யாகவராயினும் உணவருந்தி, மலம் கழித்தவர்களை கடவுளாக ஏற்க முடியாது.

    அவர்கள் மாமனிதர்களாக, மகாபுருஷர்களாக, புனிதர்களாக கருதலாம் அவ்வளவே...

    இறைவனை தொழுவது போலவே, தாய் - தந்தையை தொழலாம் இதை எல்லா மதங்களும் ஆதரிக்கின்றது.

    ஆனால் (போலி) சாமியார்களையும், அரசியல் தலைவர்களையும், கூத்தாடிகளையும், இறந்து போனவர்களுக்கு ஜெயந்தி என்ற பெயரில் இறைவனுக்கு இணையாக பால்க்குடம் எடுப்பது தவறில்லையா ?

    பதிலளிநீக்கு
  24. சுவாரசியமான தகவல்கள். அதைவிட சுவாரசியமான கருத்துரைகள்/கலந்துரையாடல்கள். பானுமதியின் பதிவைப் பார்த்துட்டு என்னடா இது? நெல்லையோட ஞாயிறு பதிவு எப்படி விட்டுப் போச்சு என்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றவில்லை, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.விழுப்புரம் கோவில் பிரம்மோற்சவம் கைங்கர்யத்தில் இருக்கிறேன். இன்னும் மூன்று நாட்களில் ஊர் திரும்புவேன்.கருத்திற்தும் வருகைக்கும் நன்றிகள்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!