செவ்வாய், 11 ஜூலை, 2023

சிறுகதை - இந்தப் பக்கம் கிழக்கு - துரை செல்வராஜூ

 

இந்தப் பக்கம் கிழக்கு..

துரை செல்வராஜூ

***** ***** ***** 

அழைப்பு மணியின் ஒலி கேட்ட சில நிமிடங்கள் கழித்து கதவு மெல்லத் திறந்தது..

சௌந்தரியம்மாள்..

எனது பள்ளித் தோழன் ராமபத்ரனின் மனைவி..

". நான் தான் பாண்டியன்.. நலம் தானே.. ராமபத்ரன் இல்லையா.. "

" நீங்க நல்லா இருக்கீங்களா.. வீட்ல?.. "

" எல்லாரும் நல்லா  இருக்கிறோம்.. "

" அவர் பிள்ளையார் கோயிலுக்குப் போய் இருக்கார்.. இப்போ வந்துடுவார்.. உட்காருங்க.. காஃபி எடுத்துட்டு வர்றேன்.. 

" சீனி போட வேண்டாம்.. "

முன் வாசல் கூடத்து நாற்காலியில் அமர்ந்தேன்.. அருகில் இருந்த மேஜையில் சில தாள்கள் ராமபத்ரனின் முத்து முத்தான கை வண்ணத்துடன் காற்றில் படபடத்தன..

கதை போலிருக்கின்றது..  ராமபத்ரன் தான் நன்றாக எழுதுவானே..

கையில் எடுத்து மெல்ல புரட்டினேன்.. முத்து முத்தான கையெழுத்து இன்னும் அப்படியே!..

முதல் சில வரிகளிலேயே அது கதையல்ல என்று புரிந்து விட்டது..

" பிள்ளைகளைப் பெறுகிறோம்.. சீராட்டி வளர்க்கிறோம்.. படிக்க வைக்கிறோம்.. ஆளானதும் நல்ல இடமாகப் பார்த்து மணம்  முடித்து வைக்கிறோம்!..

சம்பாத்தியத்தின்  காரணமாக வேறு ஊருக்கு சென்று விடுகிறார்கள்...

அதற்குப் பிறகு நமக்கு - நாம் வாழ்ந்த வீட்டிலேயே தனிமை.. 

சம்பாதித்து சேமித்த பணம் சந்தோஷத்தையோ நிம்மதியையோ கொடுப்பதில்லை.

எதை எதையோ நினைத்துக் கொண்டு தூங்குவதும் விழிப்பதும் குளிப்பதும் சாப்பிடுவதும்..

நாலு கைப்பிடி சோறு..  அதுவே அதிகமாக தெரிகின்றது..

கீரைகளும் சில வகைக் காய்களும் பழங்களும்  ஒத்துக் கொள்வதில்லை..  உடலே சொல்லி விடுகின்றது..

எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு தனிமை...

பிள்ளைகள் இருக்கும் ஊருக்குப் போகலாம் என்றால் பயணமே ஒரு கொடுமை...

இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே.. அடடா..

பஸ்டாண்டுக்கு - போய்ச் சேருவதே பெரும் தலைவலி..

காலை ஊன்றி ஏற முடியாத அளவுக்கு உயரமான படிக்கட்டுகளுடன் ஒட்டை உடைசல் பேருந்துகள்..

படிக்கட்டுகளில் நின்று கொண்டு சென்ற நாட்கள் எல்லாம் நினைவில் வந்து சிரிக்கின்றன..

ஜங்ஷனுக்குப் போக வேண்டும் என்றால் அடாவடியின் உச்சத்தில் ஆட்டோக்கள்..

டாக்ஸி  தேவைப்படாத நிலை என்றால் பெரிய அதிர்ஷ்டம்.. 

பகலில் ரயில் பயணம் என்றால் குளிர் சாதனம் ஒத்துக் கொள்வதில்லை..  கொதிக்கும் வெயிலும் கொந்தளிக்கும் கூட்டமும் பிரச்னை..

இரயில் பயணம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்..

இரவு ரயிலில் கீழ்ப் படுக்கை தான் நமது பயணத்தைத் தீர்மானிக்க வேண்டும்.. 


மூன்றடி நான்கடி உயரத்துக்கு தாண்டிக் குதித்த தாண்டிய கால்கள் - இன்று  அரை அரை அடியாய் ஏறவும் இறங்கவும் ஆசைப்படுகின்றன.. 
கைகளுக்கோ கைப்பிடிகளின் மீது கண்..

ஜங்ஷனில் எஸ்கலேட்டர் இருந்தாலும் நம்முடைய நேரம் சக்கரத்தை அணில் கடித்து வைத்திருக்கும்..  

இப்படியான சூழ்நிலையில் பொழுது போகவில்லை  - என்று பிள்ளைகளை வீடியோவில் அழைத்தால் -

அந்த நேரத்தில் கொடகொடா மாலில் கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பார்கள்... 

தடபுடா ஓட்டலில் டின்னர் என்பார்கள்..

ஏதோ ஒரு சினிமா தியேட்டரில் இருப்பதாக குறுஞ் செய்தி வரும்..

மறுநாள் காலையில் போன் செய்து, " உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?.. " -என்பார்கள்.

" அதெல்லாம் இல்லை.. நன்றாகத் தான் இருக்கின்றேன்.. " - என்றபடி  நமது கைபேசி கமுக்கமாகி விடும்..

திடீரென்று பேரன் மிதுனின் முகம்.. வீடியோ இணைப்பில்..

தாத்தா.. பாட்டி.. என்று சிரிப்பதெல்லாம் மூன்று வயது வரைதான்..

அதற்கு அப்புறம் முகத்தைக் காட்டி விட்டு - ஹாய்!.. - என்று ஒற்றைச் சொல்லுடன் ஓடி விடுவான்...

- என்ற நினைப்பும் நெஞ்சுக்குள் நெளியும்..

நரைத்த தலை ஆச்சி.. தாடியுடன் தாத்தா.. கிழட்டு முகங்கள் குழந்தைக்கு நெருடலாய் இருக்குமோ?... என்னவோ!..

நெட்டித் தக்கை நீரில் தத்தளிப்பதைப் போல் பாசமும் நேசமும் நெஞ்சுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.. 

பொதுவாக பேரக் குழந்தைகளிடம் இந்த வயதில் நாம் காட்டும் பாசமும் நேசமும் அவர்களுக்கு புரியமா.. தெரியுமா?.. 

காலங்கள் நகர்ந்த நிலையில் அவர்களை போனில் அழைக்கும் போது இவை மீண்டும் நமக்குக் கிடைக்குமா?..

அல்லது -

அவன் தூங்கறான்.. அவன் குளிக்கறான்.. அவன் டியூஷன் படிக்கிறான்.. அவன் கம்ப்யூட்டர் ல இருக்கான்.. 

அவன் அங்கே போயிருக்கான்.. அவன் இங்கே போயிருக்கான்.. - என்று ஏதோ ஒரு பதில் மட்டும் வருமா?....

தாத்தா பாட்டி, உறவுகள் உணர்வுகள் - அனைத்தையும் தொழில் நுட்பம் என்ற சுறா விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது!...

மகள் வாங்கிக் கொடுத்த அகன்ற திரையில்  டிவி/ டீவி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டியது தானே?.. என்று கேட்டால் -

அந்தக் கருமத்தைத் தான் பார்ப்பதேயில்லையே!

கிராமத்தின் கீற்றுக் கொட்டகையில் மணலைக் குவித்து அதில் உட்கார்ந்து கொண்டு கண்டு களித்த கறுப்பு வெள்ளைப் படங்கள் ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் என்று வந்தாலும் அதில் திளைக்க விடாமல் அடிக்கொரு தரம் விளம்பரம்.. 

விவாதங்கள் என்ற பேருடன்  அரசியலும் அதன் பொய்களும்.. 

அப்போது இருந்து அரசியலைப்  பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்..

தொடர் நாடகங்கள் என்ற பேரில் - 

யாருக்கு  யார் கையைப் பிடித்து இழுப்பது?.. யாருக்கு யார் தாலி கட்டுவது?..  மருமகள் மண்டையை யார் உடைப்பது?.. 

மாமியார் மாமனாரை எப்படி தொலைத்துக் கட்டுவது?.. மிச்சம் மீதியாய் கிடக்கும் குடும்பத்தை எப்படி சில்லு சில்லாகத் தெறிக்க விடுவது?.. 

புருசனுக்குத் தெரியாமல் பிரியாணி எப்படித் தின்பது?.. - என்றெல்லாம் வந்து கொண்டிருக்கும் சமூக சிந்தனைகள் இதயத் துடிப்பை உயர்த்துகின்றன என்பதால்  டீவியை நெருங்குவதில்லை..

கட்டபொம்மன் மாதிரி  உமிழ்ந்து விட்டுப் போக வேண்டியது தான்..

எல்லாவற்றிலும் கோளாறு சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?..

செல்போன் ரேடியோ ஆப்பில் பாட்டு கேட்க வேண்டியது தானே..

கையடக்க ரேடியோவில் தேன் கிண்ணம் கேட்டு மகிழ்ந்த காதுகளுக்கு இன்றைய சினிமா சத்தங்கள்  கூச்சமாக இருக்கின்றன..

நல்லவேளை.. என்னைப் போலவே பேசிக் கொண்டு என்னுடன் சுந்தரி இருப்பதால் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன!..

வாழுகின்ற வீடே பலருக்கு ஆதரவற்றோர் இல்லமாகிப் போகும்  சூழ்நிலையில் இறைவன் அருளால் என்னுடைய  இல்லம் இனிய இல்லம் தான்!..

எல்லா நாடுகளுக்கும் சூரியனின் திசை கிழக்கு தான்.. 

இந்தப் பக்கம் கிழக்கு   - என்றால் அந்தப் பக்கம்!?...

அதுதான் வாழ்க்கை..

யார் போட்ட பாதை இது?..  என்னுடையது என்று சொல்லிக் கொண்டு பயணிக்கின்றேனே!..

இறைவா என்னை மன்னித்து விடு!.. "

வெள்ளைத் தாள்களில் எழுதப்பட்டிருந்ததைப் படித்து முடித்ததும் -

என்ன பிரச்னை ராமபத்ரனுக்கு.. எதற்காக இப்படியான சிந்தனை?..
- என்று குழம்பிய போது,

நெற்றியில் திருநீற்றுடன் அதோ -  ராமபத்ரன்...


***

94 கருத்துகள்:

  1. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ராமபத்ரன் நல்லபடியாக ஆரோக்கியமாக இருக்கட்டும்!..

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்கு என்னவோ சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது..

    பதிலளிநீக்கு
  7. கதையைப் படித்துவிட்டேன். கருத்தை எழுத யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் துரை செல்வராஜு சாரின் கருத்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வாழ்க்கையை இப்படித்தான் யோசித்து அணுகணுமா? தளர்ந்த இலை உதிரும் காலத்தை நோக்கித்தானே இருக்கணும்?

    நம் வாழ்க்கையை நாம் எப்படி அணுகினோம் என்பதுதான் குழந்தைகளுக்கான பாடப்புத்தகம். வேலை காரணமாக, பெற்றோர்களை விட்டுவிட்டு நாம் அலைந்துவிட்டு, நம் பசங்களின் நல்ல வாழ்க்கையை மாத்திரமே நினைத்து அதற்கேற்ப முடிவுகள் எடுத்துவிட்டு, நம் பசங்க, அவங்க பெற்றோரைப் பற்றிக் கவலைப்படணும் என நினைப்பது நியாயமா?

    கதை வயதான பெற்றோர் நிலையில், அவர்கள் மனதில் எண்ணுவதைச் சிறப்பாகச் சொல்லுகிறது. கூடவே அவர்களின் ப்ராக்டிகல் பிரச்சனைகளையும். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நம் வாழ்க்கையை நாம் எப்படி அணுகினோம் என்பதுதான்.. ///

      ராமபத்ரன் காலத்தில் முதியோர் இல்லங்கள் எதுவும் கிடையாது.. அவர் தனது தாய் தந்தையரைத் தவிக்க விட்டவர் இல்லை..

      நவீன கல்வி கலாச்சாரம் தான் இல்லங்களைப் புரட்டிப் போட்ட கடப்பாரை..

      அன்பின் கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  9. இருவர் மாத்திரம் வாழும் நிலையில், எப்போது பார்ட்னரின் ஸ்டேஷன் வந்துவிடும், அதற்கப்புறம் என்னவாகும் என்ற எண்ணமும் தவிர்க்க இயலாது.

    வாழ்க்கையின் பிரச்சனைகளைப் பற்றிப் பொதுவாக கதையில் எழுதிக் கலவரப்படுத்த ஆத துரை செல்வராஜு சார், இதனை ஏன் எழுதினார்? பாசிடிவ் முடிவு இல்லாத்து ஆச்சர்யம்.

    எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது!..///

      நெல்லை அவர்களது கருத்தைப் படித்த பிறகு தான் இந்தப் பாடலும் நினைவுக்கு வருகின்றது..

      இருந்தாலும் -
      ஏழை மனம் தாங்க வலுவில்லையே!..

      நீக்கு
    2. இருந்தாலும் -
      ஏழை மனம் தாங்க வழி இல்லையே!..

      நீக்கு
    3. @ நெல்லை அவர்களுக்கு..

      /// இதனை ஏன் எழுதினார்? பாசிடிவ் முடிவு இல்லாதது ஆச்சர்யம்.. ///

      நெற்றியில் திருநீற்றுடன் அதோ -  ராமபத்ரன்...

      இது நேர்மறை தான்..

      சமயமும் வழிபாடும் மங்கலம், மகிழ்ச்சி..
      நிம்மதி, நிறைவு..

      நீக்கு
  10. புதன் கேள்வி.... பொதுவா வாலிபரமற்றும் தெம்பு இருக்கும் வயதில் புறச் சின்னங்களை அணியாமல், வயது ஆகும்போது புறச் சின்னங்களோடு பக்தியும் அந்த மார்கத்தை நாடும் ஆர்வமும் வருவதன் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பதில் அளிப்போம்.

      நீக்கு
    2. /// வாலிப மற்றும் தெம்பு இருக்கும் வயதில் சமயச் சின்னங்களை அணியாமல், ///

      அங்கே நான் விபூதி குங்குமத்துடன் ஐயப்ப விரதம் இருந்த காரணத்தால் பல பிரச்னைகள்.. புலால் தவிர்த்து சமைக்கும் போது அதற்கு இடையூறுகள் ஏராளம்.. மாட்டிறைச்சியைப் போட்டு தடார் தடார் என்று வெட்டி இடைஞ்சல் செய்வர் மலையாளிகள்..

      தைப் பொங்கல் அன்று நிகழ்ந்தது அந்தச் சம்பவம்.. சற்று பொறுங்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை..

      எல்லாவற்றுக்கும் மேலாக ராமநாதபுரத்து #₹%&#₹% ஒருவன் - நான் விபூதி குங்குமம் வைத்திருந்த காரணத்தால் என்னை வம்புக்கு இழுத்து அடித்து விட்டு அவர்கள் மதத்தை இழிவு செய்ததாக போட்டுக் கொடுத்து விட்டான்..

      விசாரணையின் முடிவில் என் மீது தவறில்லை என்று வந்தேன்.. அவனுக்கு சீட்டு கிழிக்கப்பட்டு டிக்கெட் கிடைத்தது..

      எனது சமய ஒழுக்கம் ஒரு நாளில் ஏற்பட்டதல்ல..

      நான் எனது சமயத்தில் நின்றேன்.. வென்றேன்..

      நீக்கு
    3. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  11. எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.//

    மாறுவதைப் புரிந்துகொண்டால்
    மயக்கம் தெளிந்துவிடும்..
    - என்று முடியும் அந்த கண்ணதாசன் பாடலை சின்ன வயதினேலேயே தனித்திருந்து முணுமுணுத்திருக்கிறேன். மாறுவதென்பது அப்போதே புரிந்ததுதான் என்றாலும், காலம் இப்படியெல்லாம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று அறிந்ததில்லை.

    இப்போது கண்ணுக்கு முன்னே கலக்கங்கள். கலைந்திடும்.. கனவுகள்.. கண்ணீர் சிந்தும் நினைவுகள்.

    தங்கள் இளமைக்காலத்தை சரியாக வாழ்ந்த தற்போதைய முதியோர்களுக்கே இப்படிப்பட்ட கதி என்றால், வேகவேகமாக வெளிநாடுபோய் பணம், சொத்து சேர்த்துக்கொண்டு, வெகுதூரத்திலிருந்து வாழ்வதே வாழ்க்கையில் பேரின்பம் என நினைத்தலையும் மாந்தர்க்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழுத்தமான கருத்துகள் மனதை அழுத்துகின்றன..

      ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  12. ராமபத்ரனாக தங்களது எண்ணப்பிரதிபலிப்புகள் அழகிய தத்துவங்கள்.

    நிகழ்கால நிஜங்கள் ஜி

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கதை மாந்தரின் கதை... மனதைத் தொட்ட கதை. இன்றைக்கு பல வீடுகளில் இப்படித்தான் ஆகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. இன்றைய நிலை, ஆனாலும்,

    இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
    கெடுக்கும் தகைமை யவர் ?

    பதிலளிநீக்கு
  16. கதையில் நீங்கள் சொல்லி இருக்கும் வயதானவர்கள் நிலை உண்மை.

    பிள்ளைகள் இருக்கும் ஊருக்குப் போகலாம் என்றால் பயணமே ஒரு கொடுமை...//

    இளமையில் பயணம் மகிழ்ச்சியை தந்தது, முதுமையில் பயணம் கடினம் தான்.

    //காலை ஊன்றி ஏற முடியாத அளவுக்கு உயரமான படிக்கட்டுகளுடன் ஒட்டை உடைசல் பேருந்துகள்..//

    வயதானவர்களை பயமுறுத்தும் உயரமான படிக்கட்டுகள்.பேருந்துகளில் பயணம் செய்தே பல வருடம் ஆச்சு.
    சிங்கப்பூரில் போன மாதம் பயணம் செய்தேன் ஒரு முறை, ஆனால் படிகட்டு உயரமில்லை. எளிதாக ஏற இறங்க வசதியாக இருந்தது.

    வெளிநாட்டில் இருப்பவர்களுடன் போய் இருந்து அவர்கள் வாழ்க்கை முறையை பார்க்கும் போதுதான் தெரியும் அவர்கள் நேர மேலாண்மை.

    எல்லா வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும். இங்கு போல் உதவியாளர்கள் கிடையாது.

    கடையில் வாங்கி வரும், நாற்காலி, மேஜை, கட்டில், பீரோ போன்ற பொருட்கள் கூட அப்படியே கொண்டு வர முடியாது , பிரித்து தான் இருக்கும் ,பொருட்களை வாங்கி வந்து அவர்களே அதை மாட்ட வேண்டும். எப்படி மாட்ட வேண்டும் என்று வரை படம் கொடுத்துவிடுவார்கள் அதை வைத்து அவர்கள் இணைக்க வேண்டும்.

    விடுமுறை நாளில் வீடு சுத்தம் செய்தல், துணிமணி துவைத்தல், அயர்ன் செய்தல் , பிள்ளைகளை சிறப்பு வகுப்புகளுக்கு கொண்டு விட்டு கூட்டி வருதல், என்று நீண்ட பட்டியல் இருக்கும். இதற்கு இடையில் நம்மிடம் உறவுகளிடம், நட்புகளிடம் பேசுவது மகிழ்வான விஷயம்.

    //இப்படியான சூழ்நிலையில் பொழுது போகவில்லை - என்று பிள்ளைகளை வீடியோவில் அழைத்தால் -//

    அந்த நேரத்தில் கொடகொடா மாலில் கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பார்கள்...

    தடபுடா ஓட்டலில் டின்னர் என்பார்கள்..//

    நம் ஊர் போல பக்கத்தில் கடைகள் கிடையாது, தமிழ் காய்கறிகள், நம் ஊர் பொருட்கள் ஒரு கடையில், மற்ற பொருட்கள் வேறு கடையில் என்று வாங்க வேண்டும் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடை , ஒரு வார விடுமுறையில் இங்கு போனால் இன்னொரு வாரம் வேறு கடை என்று போவார்கள்.

    பொருட்கள் தீர்ந்து போனால் நினைவாய் எழுதி வைத்து கொண்டு வாங்க வேன்டும். அடுப்பில் வைத்து விட்டு பொருள் இல்லையென்றால்கூட (கடை பக்கத்தில் இல்லையென்றால் அக்கம் பக்கது நட்புகளிடம்)நம் ஊரில் வாங்கி விடலாம்.

    அப்படியே மாதம் ஒரு முறை அல்லது இரு முறை ஓட்டல் மாறுதல் வேண்டுமே! அலுப்பு தட்டும் வாழ்வில். உறவுகளை சந்தித்து அவர்கள் வீட்டில் டின்னர் என்று இங்கு இருந்தால் போவார்கள். அப்படியும் நண்பர் வீட்டுக்கு போய் அந்த மனக்குறையும் இல்லாமல் உரையாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

    மருமகள் அவள் அம்மாவுக்கு காலை சமைத்து கொண்டே தினம் பேசிவிடுவாள் . அப்புறம் வீட்டு வேலைகள் முடித்து, பேரனை பள்ளி கொண்டு விட்டு அலுவலகம் செல்ல வேண்டும்.
    மகன் காலை வேலை உதவ முடியாது, மாலை அழைத்து வருவான் பள்ளியிலிருந்து பேரனை. மகன் இரவு நேர பேசுவான்.

    //தாத்தா பாட்டி, உறவுகள் உணர்வுகள் - அனைத்தையும் தொழில் நுட்பம் என்ற சுறா விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது!...//

    அந்தக்காலத்தில் முகம் பார்த்து பேச முடியாது. இப்போது தொட முடியவில்லையே தவிர பேசுவதை, பாடுவதை, ஆடுவதை மகிழ்ச்சியாக தாத்தா, பாட்டி கண்டு களிக்கிறார்கள்.
    அவர்கள் வேலைகளுக்கு நடுவே நமக்கு பேசிவிடுகிறார்கள்.

    சில இடங்களில் நீங்கள் சொல்வது போல இருக்கும் பக்கத்தில் இருந்தாலும் குழந்தைகள் ஆளுக்கு ஒரு அலைபேசியை கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு அறையில் இருக்கிறார்கள்.

    மாற்றங்களை உள் வாங்கி நமக்காக நேரம் ஒதுக்கி பேசுவதை செய்வதை மனதார பாராட்டி , வாழ்த்தி கொண்டு இருக்க வேண்டும் . வேறு வழியில்லை.

    //நல்லவேளை.. என்னைப் போலவே பேசிக் கொண்டு என்னுடன் சுந்தரி இருப்பதால் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன!..//


    முன்பு வேலை வேலை என்று பேச நேரமில்லாமல் ஓடி கொண்டு இருந்தவர்கள் இப்போது கிடைக்கும் பொழுதில் பேசி மகிழலாம். கோவில் குளம் , நடைபயிற்சி என்று சேர்ந்து போய் நாட்களை கழிக்கலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் உதவி கொள்ளலாம்.

    முதுமையை ரசித்து வாழ பழகி கொள்ள வேண்டும்.

    //வாழுகின்ற வீடே பலருக்கு ஆதரவற்றோர் இல்லமாகிப் போகும் சூழ்நிலையில் இறைவன் அருளால் என்னுடைய இல்லம் இனிய இல்லம் தான்!..//
    பிறரை விட நாம் நன்றாக இருக்கிறோம் என்ற இந்த மனநிறைவு தான் முதுமைக்கு தேவை.

    வெளி ஊரில், வெளி நாட்டில் இருக்கும் குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்து கொள்வதும், நாம் அவர்கள் நல் வாழ்வுக்கு பிரார்த்தனை செய்து கொள்வதும் தான் இப்போது நடக்கும்.

    மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். ஏற்று பழகி வாழ வேண்டியது . தான்.

    என் மாமியார் அவர்களிடமிருந்து கற்று கொண்ட பாடம் இது. காலத்துக்கு ஏற்றார் போல வாழ்க்கையை வாழ பழகி கொண்டார்கள். இருக்கும் வரை அனைவருக்கும் பிடித்த பாட்டியாக இருந்தார்கள். முதுமையில் தனிமை கொடுமைதான். இறைவன் அருளால் தாண்டி வர வேண்டும். உங்கள் கதை நிறைய சிந்திக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்..உங்கள் நீண்ட பின்னூட்டம் பல விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. கால மாறுதல்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. இல்லாவிடில் கால வெள்ளத்தில் நாம் ஒதுக்கப்பட்டுவிடுவோம்.

      நீக்கு
    2. //கால மாறுதல்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. இல்லாவிடில் கால வெள்ளத்தில் நாம் ஒதுக்கப்பட்டுவிடுவோம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் நெல்லை.

      நீக்கு
    3. @ கோமதிஅரசு..

      /// வெளியூரில், வெளி நாட்டில் இருக்கும் குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்து கொள்வதும், நாம் அவர்கள் நல் வாழ்வுக்கு பிரார்த்தனை செய்து கொள்வதும் தான் இப்போது நடக்கும்.. ///

      பிரார்த்தனை ஒன்றுதான் வழித்துணை..

      கதையின் (நிகழ்வின்) முழு சாரத்திற்கும் வரி வரியாய் கருத்து வழங்கி விட்டீர்கள்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. /// கால மாறுதல்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. இல்லாவிடில் கால வெள்ளத்தில் நாம் ஒதுக்கப்பட்டு விடுவோம்.. ///

      அன்பின் நெல்லை அவர்கள்
      அன்பின் கோமதி அரசு அவர்கள் வழங்கியுள்ள மறுமொழிகளை தலை வணங்கி ஏற்றுக் கொள்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. கோமதிக்கா உங்கள் கருத்து அழகு...ரொம்ப யதார்த்தம்...

      கீதா

      நீக்கு
    6. நெல்லையின் கருத்து ம் அதே...

      என் கருத்தில் நான் outdated ஆகிடுவோம்னு கொடுத்திருக்கிறேன்...

      கீதா

      நீக்கு
  17. இன்றைய முதியவர்களின் மனக்குழப்பங்களை, குமுறல்களை அருமையாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்! இது இன்றைக்கு முதுமை நிலையிலிருப்பவர்களுக்கு பரவலாக இருக்கும் நிலை தான்! யதார்த்தம், நிதர்சனம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் கதையிலிருக்கும் உண்மை மனதை கனமாக்குகிறது.
    திரு.ஏகாந்தன் குறிப்பிட்டிருக்கும் கண்ணதாசனின்
    " பாதையெல்லாம் மாறி வரும்
    பயணம் முடிந்து விடும்.
    மாறுவதை புரிந்து கொண்டால்
    மயக்கம் தெளிந்து விடும்"
    வரிகளைத்தான் நினைத்து மனதை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உண்மை..

      மாறுவதை புரிந்து கொண்டால்
      மயக்கம் தெளிந்து விடும்..

      கவியரசரின்
      தெளிவான வரிகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. துரை அண்ணா, கதையை காலையிலேயே வாசித்துவிட்டேன். கருத்து போடுவதில் எனக்கு யோசிக்க வேண்டியிருந்தது.
    இதில் சொல்ல வேண்டியவை நிறைய என்பதால்…
    நீங்கள் அந்தக் காலம் இந்தக் காலம் என்று உங்கள் ஆதங்கத்தை வெளிக் கொணர்ந்து எழுதியிருக்கீங்க. கண்டிப்பாக வயதானவர்களின் நிலைதான். ஏற்கிறேன்.
    அதே சமயம், நாம் உலகையோ தொழில்நுட்பத்தையோ குறை சொல்ல முடியாது. நமக்கும் சில சௌகரியங்கள் தேவைப்படுகின்றனதானே? அதற்கு ஏற்ப பல நுட்பங்கள் மாறி வரத்தான் செய்யும். வாழ்க்கை முறையும் மாறத்தான் செய்யும். இல்லை என்றால் கற்காலம் போலத்தான் சமூகம் இருக்கும் இல்லையா? காலமாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்ப நாம் வாழவும், நம்மை மகிழ்ச்சியாகவும் இருக்கக் கற்றுக் கொள்ளலாம். வேண்டும். அதுதான் யதார்த்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகையோ தொழில் நுட்பத்தையோ குறை சொல்ல முடியாது.. கூடாது..
      நமக்கும் சில சௌகரியங்கள் தேவைப்படுகின்றன தானே..

      நியாயமான கருத்து..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  19. தூர தேசத்திற்கு நம் குழந்தைகளை அனுப்புவதும் நாம் தான். அவர்களின் வயிற்றுப் பிழைப்பு அப்படி அமையும் போது, நாம் போகாதே என்று சொல்வது சரியல்லதானே?

    நம் குழந்தைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் இப்போதைய வாழ்க்கைப் பிரச்சனைகளை சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் தனியாக இருக்க நேரிட்டாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் யதார்த்தம் என்று தோன்றுகிறது.

    என் மகன் இங்குதான் படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினான். ஆனால் இங்கு அவன் விரும்பியதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை....காரணங்கள் பல. அதை ஏற்கனவே பதிவாகப் போட்டு பல எதிர்மறைக்கருத்துகளை வாங்கியாச்சு. எனவே மீண்டும் அதைப் பொதுவெளியில் நான் சொல்லவில்லை.

    வெளிநாட்டிற்குச் சென்று அவன் விரும்பிய மேல்படிப்பைப் படித்து முடித்து வேலையும் அங்கே. சென்ற செலவைக் கட்டியாகணும். வயிற்றுப் பிழைப்பு.

    அங்கு அவனுக்குப் பணி என்பது நேரம் காலம் இல்லாமல் போகும். பல சமயங்களில் இரவுத் தூக்கம் கெடும். எங்களோடு பேசுவதற்கும் நேரம் இருக்காது.

    தானேதான் சமைக்க வேண்டும். வெளியில் சென்று பொருட்கள் வாங்க வேண்டும் அதுவும் 10 மைல் தூரம். பல சமயங்களில். அருகில் நம்மூர் கடைகள் கிடையாது. நேரம் கிடைக்கும் போது தன் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள சில பயிற்சிகள்....வழக்கமான வேலை தவிர, எமர்ஜென்சிகள். on call duty ......வார இறுதியில் நேரம் கிடைக்கும் போது அது சில மணி நேரங்கள்....வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்கி, மூன்று நாலு நாட்களுக்கு சமைத்துக் கொண்டு....வகுப்பில் கற்பிக்க உரைகள் பவர் பாயின்ட் ஸ்லைடுகள் தயாரித்துக் கொண்டு, ஆராய்ச்சிக்கானவற்றைக் கற்று அதை டாக்குமென்ட் செய்வது என்று பல வேலைகள். இத்தனையும் அவனுடைய இயலாமைக்கு இடையில்.

    அதற்காக அவனுக்கு எங்கள் மீது பிரியமோ அன்போ, பாசமோ இல்லை என்று நினைக்கவே மாட்டோம் நினைத்ததும் இல்லை, . மிகுந்த அன்புடையவன். அவன் இயலாமையைப் புரிந்துகொண்டு அவனையும் புரிந்து கொண்டிருக்கிறோம். பேசும் போது நிறைய பேசிக் கொள்வோம்... அவனும் எங்களைப் புரிந்து கொண்டுள்ளான்.

    பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். யதார்த்தத்தை. வாழ்க்கையோட்டத்திற்கு, காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்பதோடு நம் அடுத்த தலைமுறையையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாம் out dated ஆகிவிடுவோம்.

    கீதா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்போதைய வாழ்க்கைப் பிரச்சனைகளை சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் தனியாக இருக்க நேரிட்டாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் யதார்த்தம் என்று தோன்றுகிறது.. ///

      உண்மை தான்.. ஆனாலும் சிலசமயங்களில் உண்மையின் வெப்பம் தாங்க முடிவதில்லை..

      அதுதான் பிரச்னையே..

      நீக்கு
    2. /// பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். யதார்த்தத்தை. வாழ்க்கையோட்டத்திற்கு, காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்பதோடு நம் அடுத்த தலைமுறையையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாம் out of dated.. ///

      இப்படியான புரிந்துணர்வு இங்கே எத்தனை பேருக்கு இருக்கின்றது?...

      முற்றாக மேலைக் கலாச்சாரத்தில் மூழ்கினால் மட்டுமே இது சாத்தியம்..

      நீக்கு
  20. முதியோர் இல்லத்தை நான் தவறாக நினைப்பது இல்லை. அதாவது நான் இங்கு சொல்லும் முதியோர் இல்லம் என்பது தனியாக இருக்க நேரிடும் பெற்றோர், குழந்தைகள் அருகில் இல்லாமல் இருக்கும் பெற்றோர்.

    நன்றாக ஆரொக்கியமாக, சுறு சுறுப்பாக இருந்து அப்புறம் வயதாகும் போது தனியாக இருப்பதை விட community ஆக இருப்பது பற்றி. அங்கு அவர்களுக்கு உடனடித் தேவை கிடைக்கும். பாதுகாப்பு இருக்கும் என்பதால் அதைத் தவறாக நினைக்கவில்லை. குழந்தைகள் இல்லாதவங்க எத்தனை முதியவர்கள் இருக்காங்க.

    நான் இங்கு தனியாக இருக்கும், தங்கள் குழந்தைகளின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட கோமதிக்கா, கீதாக்கா இருவரையும் பாராட்டலாம், வாழ்த்துவோம்.

    உதாசீனப்படுத்தப்படும் பெற்றோர் அவர்களின் நிலை வேதனைக்குரியதுதான். இங்கு நம் நட்பு வட்டத்திலேயே நம் எல்லோருக்கும் தெரிந்தவர் அவர். கில்லர்ஜி. அவருக்கும் சீக்கிரமே நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.

    துரை அண்ணா, நீங்களும் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்திருக்கீங்களே இல்லையா...அந்த அனுபவம் உங்களுக்கும் யதார்த்தம் தெரியுமே.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக இருக்கும் கீதாக்கா மாமா என்று வருவதற்குப் பதில் அக்கா பெயர் மட்டும் போட்டுவிட்டேன் அது மாமாவும் சேர்த்துதான்...அவங்களும் சரி, ஜெகே அண்ணா அவர் மனைவி இவங்களுமே ... ஆரோக்கியப் போராட்டங்களுடன்....தனியாக....பல சமயங்களில் யதார்த்தம் கஷ்டம்தான்...

      கீதா

      நீக்கு
    2. /// குழந்தைகள் இல்லாதவங்க எத்தனை முதியவர்கள் இருக்காங்க... ///

      இப்படியன சோகங்களும் இங்கே நிறையவே இருக்கின்றன..

      நீக்கு
  21. என்ன பிரச்னை ராமபத்ரனுக்கு.. எதற்காக இப்படியான சிந்தனை?..
    - என்று குழம்பிய போது,

    நெற்றியில் திருநீற்றுடன் அதோ - ராமபத்ரன்...//

    இங்கு ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே, துரை அண்ணா...ஒரு வேளை நானும் பாண்டியனைப் போலக் குழம்பியிருக்கிறேனா!!!!!!!!!!!!!!!!!!!!!!! அந்தக் குழப்பத்துக்கு ஒரு முடிவு தெளிவாக்கப்படாமல் இருக்கிறதோ என்ற குறை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமபத்ரன் திடமாகவே இருக்கின்றார்..

      நெற்றியில் திருநீற்றுடன் அதோ - ராமபத்ரன்..

      நெஞ்சுக்கு நிம்மதி
      ஆண்டவன் சந்நிதி..

      நீக்கு
  22. நல்லவேளை.. என்னைப் போலவே பேசிக் கொண்டு என்னுடன் சுந்தரி இருப்பதால் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன!..//

    அவ்வளவே....அதுதான்....இப்படி இருந்தால் என்ன பிரச்சனை!!!

    ஆனால் இப்படியான வயதான காலத்தில் கணவர் கூட இருந்தும் மனைவியுடன் எந்தவித ஒரு நட்புடனும் இல்லாமல் இருக்கும் தம்பதியர் என் உறவு வட்டத்தில் உண்டு...மனைவிக்கும் கணவருக்குமான எண்ணங்கள், .விவாதங்களோடு....வெறிச் வாழ்க்கை. என்னைக் கேட்டால் கணவனும் மனைவியும் இளம் வயசிலிருந்தே நன்றாகப் பேசிக் கொள்ள வேண்டும்..சில விருப்பங்கள் இருவருக்கும் இருக்க வேண்டும்..ஒருவருக்கு ஒருவர் அதை விட்டுக் கொடுத்து..அதுவும் நல்ல விஷயமாக்கும்.

    //வாழுகின்ற வீடே பலருக்கு ஆதரவற்றோர் இல்லமாகிப் போகும் சூழ்நிலையில் இறைவன் அருளால் என்னுடைய இல்லம் இனிய இல்லம் தான்!..//

    அதேதான் நான் இது ஒத்த கருத்தும் சொல்ல இருந்தேன்....கதையில் இங்கு வந்துவிட்டது...

    இங்கு குழந்தைகளோடு இருக்கும் பெரியவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னைக் கேட்டால் கணவனும் மனைவியும் இளம் வயசிலிருந்தே நன்றாகப் பேசிக் கொள்ள வேண்டும்.// - திருமணத்துக்கு முன்பும், திருமணத்திற்குப் பின்பு சில காலமும் நிறைய பேசிக்கொள்பவர்கள், ஏன் பிறகு பேசிக்கொள்வதே இல்லை? பேசும் விஷயம் தீர்ந்துவிட்டதா இல்லை இருவரின் விருப்பங்களும் மாறுபட்டுவிடுகிறதா?

      நீக்கு
    2. //வாழுகின்ற வீடே பலருக்கு ஆதரவற்றோர் இல்லமாகிப் போகும் சூழ்நிலையில் இறைவன் அருளால் என்னுடைய இல்லம் இனிய இல்லம் தான்!..//

      இதுதான் எல்லோருக்கும் வேண்டும்..

      அமைதியற்ற சூழ்நிலை மாறி அனைவருக்கும் நிம்மதி உண்டாகட்டும்..

      நீக்கு
  23. @ நெல்லை.

    /// நிறைய பேசிக் கொள்பவர்கள், ஏன் பிறகு பேசிக் கொள்வதே இல்லை? பேசும் விஷயம் தீர்ந்துவிட்டதா இல்லை இருவரின் விருப்பங்களும் மாறுபட்டுவிடுகிறதா?.. ///

    அவரவர் நிலையில் என்னங்கள் மாறுபட்டு விடுகின்றன..

    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  24. /// மேலைக் கலாச்சாரத்தில் சிறுவர் சிறுமியர்க்கு சிறகு முளைத்து விட்டால்
    நீ யாரோ..
    நான் யாரோ!..
    பந்தம் பாசம் நேசம் உறவுமுறை என்றுஎதுவும் கிடையாது..
    தெரியாது..

    வேட்கை.. வேட்கை..
    அது மட்டுமே..

    அங்கே பிரம்மச்சர்யம் என்பதும் கிடையாது.. கிரஹஸ்தமும் பெயரளவுக்குத் தான்..

    இங்கே வாழும் போதே வானப்ரஸ்தம் என்றல் கஷ்டமாகத் தான் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  25. நாங்க பேசிப்போம். ஆனால் டிஷுண் டிஷுண் தான்! :)))) எப்போவுமே அவர் கிழக்கு எனில் நான் மேற்கு. ஆகவே சுவாரசியமான சம்பவங்கள்/நிகழ்வுகளுக்குக் குறைச்சல் இல்லை. என்ன ஒரு பிரச்னை எனில் என்னால் இப்போதெல்லாம் கடந்த இரு வருடங்களாக முன்னைப் போல் சுறுசுறுப்புடன் இருக்க முடியவில்லை. கொஞ்சம் வேலை செய்தால் அப்புறமா ஓய்வு. பின்னர் வேலை! இன்னிக்குக் கூடக் காடரர் சாப்பாடு கொடுக்கலை. லீவ் என்பதால் நான் தான் சமைத்தேன். சமைத்துவிட்டுச் சாப்பிடுவதற்குள்ளாக ஒரு சின்ன ஓய்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. @ கீதாக்கா...
      /// கடந்த இரு வருடங்களாக முன்னைப் போல் சுறுசுறுப்புடன் இருக்க முடியவில்லை. கொஞ்சம் வேலை செய்தால் அப்புறமா ஓய்வு..///

      இங்கும் அப்படித் தான்.. கடந்த் இரண்டு மாதங்களாகத் தான் அக்கம் பக்கம் கோயில்களுக்குச் செல்வது..
      நிறைந்த ஆட்களுடன் வரும் பேருந்துகளில் ஏறுவதில்லை.. சாதாரணமாக (அரசு) பேருந்துகளில் ஏறுவது வயதான நிலையில் மிகவும் சிரமமாக இருக்கின்றது..
      ஆட்டோ டாக்ஸி எல்லாம் நம்முடைய நிலைக்கு ஒத்து வராது..

      அன்பின் வருகையும் கருத்தும் நன்றியக்கா..

      நீக்கு
    2. ஸ்ரீரங்கம் வந்த புதுசில் எங்க வீட்டுக்கு அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறும்போது திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் பேருந்து கிளம்பிவிட அப்படியே மல்லாக்க விழ இருந்தேன். நல்லவேளையாக அப்படியே சமாளித்துக் கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்து விட்டேன். முன்னால் அமர்ந்திருந்தவர்களும் என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். அதன் பிறகே பேருந்துகளில் ஏறுவது என்பதே இல்லை.தெரிந்த ஆட்டோக்காரர் மற்றவர்களை விட 20/30 ரூபாயாவது குறைந்த கட்டணத்திற்கு வருவார். காத்திருந்து கூட்டி வருவார். எங்களால் முடிந்ததைக் காத்திருப்பு நேரத்துக்குக் கொடுத்துடுவோம்.

      நீக்கு
  26. Cultural community, Modern community -

    எது வேண்டும் சொல் மனமே!..

    பதிலளிநீக்கு
  27. ராமப்த்ரனின் ஏக்கம், குறைகள், மன நிலை ஆகியவை தனியா இருக்கும் பெற்றோருக்கு உள்ளவையே. புரிந்து கொள்ளக் கூடியவை. எங்க பேத்திகளும் என்னிக்காவது தான் பார்த்துப் பேசுவார்கள். குட்டிக் குஞ்சுலு மட்டும் இப்போதைக்கு வந்து கொண்டிருக்கு. அதுக்கும் விபரம் தெரிஞ்சு பெரிய வகுப்புப் படிக்க ஆரம்பித்தால் நேரம் குறுகிவிடும். தாத்தா/பாட்டி என நினைவு வைச்சிருப்பதே பெரிய விஷயம் எனத் தோன்றும். சில சமயங்களில் அது வேறே ஏதானும் விளையாட்டில் மூழ்கி இருந்தால் நம்மைக் கண்டுக்காது. ஆனால் நாங்க போயிட்டு வரோம்னு சொன்னால் மட்டும் உடனே ஓடி வந்து டாட்டா/பைபைனு சொல்லிக் கொண்டே ஓடி வரும். திரும்ப ஓடிப் போய் மறுபடி வந்து சொல்லும். இப்படி ஐந்தாறு முறை சொல்லிடும். ஆகக் கூடி நம்மைக் கண்டுக்கலையே தவிர்த்து அதுக்கு நாம் இருக்கோம்னு புரிஞ்சிருக்கு. அதுவே பெரிசு என நினைச்சுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆகக் கூடி நம்மைக் கண்டுக்கலையே தவிர்த்து அதுக்கு நாம் இருக்கோம்னு புரிஞ்சிருக்கு. அதுவே பெரிசு என நினைச்சுப்பேன்..//

      இங்கும் இப்படித்தான்..

      நாம் இருக்கின்றோம் என்று புரிந்திருக்கின்றது.. அதுவே பெரிய விஷயம்..

      நன்றியக்கா..

      நீக்கு
    2. உண்மை தான் தம்பி. குட்டிக்குஞ்சுலுவை நான் செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவேன். கண்டுக்காது. துர்கே அல்லது துர்கி என்று தான் கூப்பிடணும். ஒரு நாள் அது கிட்டே தங்கம்னு கூப்பிட்டதுக்குத் தங்கம்னா என்னனு கேட்டது. கோல்ட் என்றேன். பின்னர் யூ ஆர் கோல்ட் you are gold என்றேனா உடனே அது ஐ அம் நாட் கோல்ட் I am not gold, பட் ஐ அம் போல்ட் but I am bold என்கிறது. ::))))))

      நீக்கு
    3. அருமை.. அருமை..
      வாழ்க குஞ்சுலு..

      நீக்கு
  28. இப்போக் கொஞ்ச நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கு ஹோமுக்குப் போகும் எண்ணம் வந்திருக்கு. அங்கே மட்டும் என்ன சீராட்டப் போறாங்களா? ஒத்த வயதுடையவர்களோடு பேசலாம், அங்கே உள்ள கோயிலுக்குப் போகலாம். பஜனை, மற்ற பக்தி நிகழ்வுகளில் கலந்துக்கலாம் என்கின்றனர். இங்கேயும் இப்போ ஸ்ருங்கேரி மடத்தில் பஜனை/கதா காலட்சேபம் நடக்கிறது. சீதா கல்யாணம்/ராதா கல்யாணம் நடத்துகின்றனர்.ஸ்ருங்கேரி மடத்திலேயே கோயில் உள்ளது. வீட்டிலிருந்து கிட்டத்தான். போறதுன்னாப் போகலாம். நாமாகத் தானே ஒதுங்கி இருக்கோம். என்னோட நிலையைப் பார்த்தால் இப்போ அந்த அரைகிலோ மீட்டர் கூட நடப்பது பெரிய விஷயம். ஆகவே வீட்டிலேயே தினம் தினம் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு மாரியம்மன் தாலாட்டை உருப் போட்டுக் கொண்டு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சாதாரணமா சொன்னாலும் படிக்கிறப்ப வருத்தமா தான் இருக்கு.

      நீக்கு
    2. ISKCONல ஒரு resident senior program இருக்குதாம். விசாரிச்சிட்டிருக்கேன். முதல் வருஷம் initiation. இரண்டாம் வருஷம் involvement. இரண்டு வருடங்களும் தினசரி கடமைகள் உண்டு. தாக்கு பிடிக்க முடிந்தால் சரணம் கிருஷ்ணா என்று அங்கேயே பக்தி யோகம் செய்தபடி இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நிறைய விவரம் தர மறுக்கிறார்கள்.

      இரண்டு வருடம் தாக்கு பிடித்தால் பெயர் மாற்றி சுவாமி இதுவானந்தா அதுவானந்தா என்று அழைக்கிறார்கள். கவர்ச்சியாக இருக்கிறது.

      நீக்கு
    3. சில விதிகளுக்குட்பட்ட வருடக் கட்டணம் 35,000 - 50,000 ரேஞ்சில்.

      நீக்கு
    4. /// நீங்க சாதாரணமா சொன்னாலும் படிக்கிறப்ப வருத்தமா தான் இருக்கு.. ///

      அப்பாதுரை ஐயா அவர்கள் செல்வதை அப்படியே வழி மொழிகின்றேன்..

      நீக்கு
    5. /// தினம் தினம் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு மாரியம்மன் தாலாட்டை ///

      குலதெய்வம் காத்து நிற்கும்..

      நீக்கு

    6. @ அப்பாதுரை ஐயா..
      சரணம் கிருஷ்ணா..
      சரணம் கிருஷ்ணா..

      // இரண்டு வருடம் தாக்கு பிடித்தால் பெயர் மாற்றி சுவாமி இதுவானந்தா
      சுவாமி அதுவானந்தா..
      என்று//

      காலம் போகின்ற போக்கில் ஏதோ ஒரு ஆனந்தா!..

      நீக்கு
    7. எங்க பையர் நாங்க ஹோமுக்குப் போவதையே ஆதரிப்பதில்லை. சொல்லப் போனால் 2011 ஆம் ஆண்டிலேயே க்ரீன் கார்ட் வாங்கிக் கொடுக்கப் பெண்ணும்/பையரும் ஏற்பாடு செய்தார்கள். நம்மவருக்கு அம்பேரிக்கா பிடிக்கலை என்பதால் கண்டிப்பாக வேண்டாம்னு சொல்லிட்டோம். இப்போப் பையர் நைஜீரியாவில் இருப்பதால் வாங்கி இருந்திருந்தாலும் பெண் வீட்டில் மட்டுமே தங்கும்படி இருக்கும். அவள் உடல்நிலையும் இப்போச் சரியில்லை என்பதால் கஷ்டமாகத் தான் இருக்கும். நைஜீரியாவுக்கெல்லாம் நாங்க போக முடியாது. அதனாலேயே பையர் அங்கே கொடுக்கும் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே வந்து கொண்டிருக்கார்.

      நீக்கு
    8. நாங்க "பெண்"களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஹோமைப் பற்றிக் கூட விசாரித்தோம். இஸ்கானோ, ரவிசங்கரின் ஹோமோ எல்லாமும் அப்படி ஒண்ணும் வசதியோ மன நிறைவையோ தரவில்லை எனப் பையர் விசாரித்துவிட்டுச் சொல்கிறார். அவங்களோட சொந்தக் கம்யூனிடிக்கு நாம் தானங்கள் செய்து அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதாகச் சொல்கின்றனர். இன்னும் சிலவும் சொன்னார்கள். பொது வெளியில் எழுத முடியலை.

      நீக்கு
  29. நம்ம வீடு என்பதால் குழந்தைகள் வந்தால் உரிமையுடன் தங்கலாம். நாமும் ஏதேனும் பண்ணிக் கொடுக்கலாம். ஆனால் ஹோமில் அப்படி முடியுமா? காஃபி/தேநீர் போட்டுக் கொள்ள முடிந்தால் பெரிய விஷயம். அங்கே வீடாக வாங்கிட்டோமெனில் பிடிக்காமல் திரும்பி வரும்போது அதை விற்பதில் பிரசனைகள் இருக்கு. வீடு இல்லைஅறை எடுத்திருந்தோமெனில் குழந்தைகள் வந்தால் வாடகைக்கு அறைகள் ஏற்பாடு செய்யணும். தினமும் ஒரே மாதிரிச் சாப்பாடு. அது பிடிக்கணும்/ஒத்துக்கணும். சில ஹோம்களில் காரம் அதிகம் போடுவதாகவும் சொல்கின்றனர். இங்கே நமக்குக் காடரிங் பிடிக்கலைனால் வீட்டிலேயே சமைச்சுக்கலாமே! அந்த வசதி ஹோமில் ஏது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரின் இரண்டு அண்ணா சீனியர் சிட்டிசன் ஹோமில் வீடு வாங்கி இருக்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது.
      சாப்பாடு மிதமான காரம். வயதானவர்களுக்கு ஏற்ற மாதிரி சாப்பாடு. சாப்பாட்டு ஹாலுக்கு வரமுடியவில்லை என்றால் நம் வீட்டுக்கு சாப்பாடு கொடுத்து விடுவார்கள். பிள்ளைகள் வந்து தங்க வசதியாக வீடு எடுத்து இருக்கிறார்கள்.

      உறவினர் வந்தால் தங்க , சாப்பிட இட வசதி இருக்கிறது. முன்பே சொல்லி விடலாம்.

      வீட்டில் சமையல் அறை உண்டு நாமும் நமக்கு வேண்டியதை சமைத்து கொள்ளலாம். உணவு வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்.

      மகன் வந்த போது பெரியப்பாக்களை பார்க்க வேண்டும் என்று போய் இருந்தோம் சாப்பிடும் உணவு அறைக்கு போய் சாப்பிட்டோம்.

      அவர்கள் எல்லோரும் யார் வீட்டுக்கு வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு அன்பாய் பேசினார்கள்.

      மருத்துவ வசதி மருத்துவர் உண்டு. விளையாட இடம் உண்டு.
      சினிமா தியேட்டர், மற்றும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்கிறார்கள்.கூட்டு வழி பாடு நடத்த இடம் உண்டு.

      வீட்டை சுத்தம் செய்ய தினம் ஆள் வருகிறார்கள். எல்லாம் நன்றாக செய்கிறார்கள் வயதானவர்களிடம் அன்பாக பேசுகிறார்கள்.

      மருதமலை அடிவாரம் என்பதால் இயற்கை வனப்புடன் இருக்கிறது. பசுமையான வயல்கள், மயிலின் வருகை என்று நன்றாக இருக்கிறது.

      அங்கு இருப்பவர்கள் நன்கு பேசிகொண்டு நட்புடன் இருக்கிறார்கள்.

      உடல் நல குறைபாடு உணவு சமைக்க முடியவில்லை என்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

      நீக்கு
    2. இடம் பெயர் சொல்லக்கூடாதோ? :-)

      நீக்கு
    3. இன்னும் எத்தனை நாள் ஏதாவது பண்ணிக்க கொடுக்க வேண்டும்? முடியும்?

      நீக்கு
    4. ஹோம் சென்று அடைக்கலம் ஆகின்ற சூழ்நிலை எல்லாம் யாருக்கும் வர வேண்டாம்..

      நீக்கு

    5. @ கோமதி அரசு
      /// மருதமலை அடிவாரம் என்பதால் இயற்கை வனப்புடன் இருக்கிறது.. ///

      அது அப்படியே இருக்கட்டும்..
      முருகன் அருளால் நாம் நல்லபடியாக இருப்போம்..

      முருகா.. முருகா..

      நீக்கு
    6. @ அப்பாதுரை ஐயா..

      // இன்னும் எத்தனை நாள் ஏதாவது பண்ணிக்க கொடுக்க வேண்டும்? முடியும்?.. //

      எத்தனை நாட்களுக்கு முடிகின்றதோ அத்தனை நாட்களுக்கு!..

      நீக்கு
  30. விவாதத்துக்கு உரிய கருப்பொருள் கொண்ட கதை/இல்லை/நிகழ்வு. விரைவில் ராமப்த்ரனும் உள்ள நிலையைப் புரிந்து கொண்டு யதார்த்தத்தைப் புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். என் அப்பாவின் சித்தியும் அவர் மருமகளும் ஆண் துணை இல்லாமல் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷங்கள் தனியாகவே வாழ்ந்தனர். அப்போதைய காலம் வேறே தான் என்றாலும் பெண்களுக்கு அப்போதெல்லாம் இத்தனை முக்கியத்துவமும் இல்லாமல் தானே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதாக்கா..

      // என் அப்பாவின் சித்தியும் அவர் மருமகளும் ஆண் துணை இல்லாமல் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷங்கள் தனியாகவே வாழ்ந்தனர்... //

      நினைக்கவே மலைப்பாக இருக்கின்றது..

      நீக்கு
  31. /கைகளுக்கோ கைப்பிடிகளின் மீது கண்..
    நயம்.
    நிறைய வரிகள் சிரிக்க வைத்தன.

    கதை முடிவில் ஒரு பழைய சினிமா பாடல் நினைவுக்கு வந்தது.
    உனக்கென்ன குறை.. நீ ஒரு ராஜா. வந்தால் வரட்டும் முதுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உனக்கென்ன குறை.. நீ ஒரு ராஜா. வந்தால் வரட்டும் முதுமை..//

      நல்ல பாடல் இது..
      நன்றி..

      நீக்கு
  32. ..தாக்கு பிடித்தால் பெயர் மாற்றி சுவாமி இதுவானந்தா அதுவானந்தா என்று அழைக்கிறார்கள். கவர்ச்சியாக இருக்கிறது.//

    எந்தக் காலகட்டத்திலும்.. கவர்ச்சி முக்கியம் !

    பதிலளிநீக்கு
  33. இன்னொன்று: இந்த ஆனந்தாக்களெல்லாம் உண்மையில் ஆனந்தமாகத்தான் இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கரைக்கு அக்கரை பச்சை..

      ஆனாலும் அப்படியெல்லாம் ஆனந்தமாக இருந்திட விட மாட்டார்கள்..

      நீக்கு
    2. நான் முதியோர் இல்லத்தில் சேரும் சாத்தியம் அதிகம். சுவாமி இதுவானந்தா சரி வராவிடில்.

      நீக்கு
    3. //இந்த ஆனந்தாக்களெல்லாம் உண்மையில் ஆனந்தமாகத்தான் இருக்கிறார்களா?// யோசிக்க வேண்டிய விஷயம்

      நீக்கு

    4. @ நெல்லை..

      இக்கரைக்கு அக்கரை பச்சை..

      ஆனாலும் அப்படியெல்லாம் ஆனந்தமாக இருந்திட விட மாட்டார்கள்..

      நீக்கு
    5. @ அப்பாதுரை ஐயா..

      // நான் முதியோர் இல்லத்தில் சேரும் சாத்தியம் அதிகம்..//

      சும்மா லுலு லுவா தானே!..

      நீக்கு
  34. இந்த கதையை ஒரு முன்னுரையாகக் கொண்டு, தொடரலாம். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  35. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!