சனி, 29 ஜூலை, 2023

இங்கேயும் மனிதர்கள்..

 


====================================================================================================

லட்சியங்களை எப்படி நிறைவேற்றிக் கொள்வது..  இதோ JKC ஸார் அனுப்பியுள்ள உதாரண சம்பவம்..

குழந்தைகள் அரசுப் பணியில் சேரவேண்டும் என்பது இவர்களது பெற்றோரில் விருப்பம். ஆனால், இந்தப் பெற்றோர், தங்களது கனவை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் யோகேஷிற்கு யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதில் விருப்பமில்லை. எனவே, இதற்காக எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. நொய்டாவில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். சகோதரிகள் தேர்ச்சி பெறமுடியாமல் தவித்ததைப் பார்த்ததும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டார்.....

===============================================================================================


==========================================================================================



===========================================================================================





63 கருத்துகள்:

  1. இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று. குறிப்பாக நீதிபதி அப்துல்காதர், யாஹியா மனதைக் கவர்ந்தனர்.

    பெண்ணை பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்றதில் என்ன சிறப்பு இருக்கிறது? ஆண்டுக்கு 21லட்சம்... இன்னும். நல்ல வழிகளில் உபயோகப்பட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அப்படி நினைத்திருக்கிறார். கூந்தல் உள்ள சீமாட்டி!

      நீக்கு
  2. புத்திர சோகத்தை பிற குழந்தைகளுக்கான சேவையாக மாற்றி ஆறுதல் பட்டுக்கொண்டது பாராட்டத்தக்கது.

    நான் படிச்ச கதை வெளியாகியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவர் சென்ற வாரம் தன் மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்ததை படித்திருப்பீர்கள்...

      நீக்கு
    2. ஊக்கங்களுக்கு நன்றி. தொடர்கிறேன்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா . .வணக்கம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நடிகர் பற்றிய முதல் செய்தி தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்தான் படித்தேன்.ஆனால், முன்பு அவர்கள் ஏதோ ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதும் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் மனதின் ஆறாத தழும்பு இது.

    மற்ற செய்திகள் பொடி எழுத்தில் இருப்பதால், பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன்.

    இன்று "நான்படிச்ச கதைப்பகுதி" இடம் பெறாமலிருப்பதால் சனிக்கிழமை நிறைவு பெறாமல் இருப்பதைப் போல இருக்கிறது. நல்ல செய்திகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி பேஸ்ட் செய்ய முடியாமல் இருப்பதால் இந்த பொடி எழுத்து அவஸ்தை...

      நான் படிச்ச கதை பகுதிக்கு ரெஸ்பான்ஸ் குறைந்த காரணத்தால் வருத்தப்பட்டிருந்தார் JKC சென்ற வாரம்... படித்திருப்பீர்கள்.

      நீக்கு
    2. ஜீவி அய்யாவுக்கு எழுதிய பின்னூட்டத்தை காணவும். எல்லா நாளும் தவறாது வந்து விளக்கமாக ஒரு குறையும் சொல்லாமல் பாராட்டுக்கள் மிகையாக கருத்து கூறுபவர் தாங்கள். ஊக்கங்களுக்கு நன்றி. தொடர்கிறேன்.

      நீக்கு
  5. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் நன்று.

    தங்கள் குழந்தையை இழந்த பின் அதை நல்லவிதமாகிய பெற்றோருக்குப் பாராட்டுகள். நல்ல விஷயம்.

    ஓட்டுநரை தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்து உதவிய எஸ் ஐ க்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உத்திரப்பிரதேச சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்!

    என் சிறிய அறிவுக்கு எட்டிய வரை நான் அறிந்தது...பொதுவாகவே வட இந்திய இளைஞர்கள் அரசுக்கல்லூரி, அரசு நிறுவனங்களில் பணி புரிய அதிக விருப்பம் உடையவர்கள் என்பதோடு அதற்கான தேர்வுகளில் வெற்றி அடைய அதாவது கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு முதல் - வெற்றி பெற பல முறை முனைகிறார்கள். தளராமல் முனைகிறார்கள். இந்தச் செய்தியை வாசித்ததும் உடனே லிங்க் க்ளிக் செய்து அதைத்தான் தேடினேன் வடக்கா தெற்கா என்று!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. Travel education - பயணக் கல்வி மிக நல்ல விஷயம் தான். ஆனால் எல்லோராலும் இது மேற்கொள்ள முடியுமா என்றால் முடியாது. பொதுவாகவே வெளிநாட்டு மாணவ மாணவியர் 12-15 வயதில் பயணக் கல்வி என்று செய்கிறார்கள்தான். நான் எம் ஏ படித்த போது அப்படி ஜப்பானிலிருந்து வந்த 4 மாணவிகளை 14, 15 வயதே....கன்னியாகுமரியில் சந்தித்தேன். மேற்கொண்டு கல்லூரி செல்லும் முன் இப்படி ஒரு break எடுத்துக் கொண்டு அதை இப்படியான கல்வியாக அனுபவங்களுக்காக அமைத்துக் கொள்கிறார்கள். சில அதையே மேற்கொண்டு படிப்பதாகவும் சொன்னாங்க. International relations, political cultural என்று...

    அவங்க மூலமாதான் 3 in one coffee இருப்ப்தை அறிந்தேன். எங்களுக்கு ஆளுக்கு 2 sachet கொடுத்தாங்க நீளமா குழாய் போல....அதில் பால் பொடி, சர்க்கரை, ரெடி காஃபி பொடி கலந்து இருக்கும். அதைப் பார்த்துதான் நான் பயணம் செய்த போதெல்லாம் இப்படி வீட்டிலேயே கலந்து எடுத்துக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது!

    இந்தச் செய்தியில் உள்ள படி எல்லோராலும் மேற்கொள்ள முடியாது என்பதால் நாம் நம்மூரில் இதைச் சின்னதாகச் செய்யலாம்...குறிப்பாக நகரங்களில் வளரும் குழந்தைகளை அவங்க பெற்றோர் தங்களின் சின்ன ஊர்களுக்கு மட்டுமின்றி பல சிறு சிறு கிராமங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு அனுபவக் கல்வி கொடுக்கலாம் அதாவது "பாரு இங்க வாழறவங்களை...சரியான போக்குவரத்து கூட இல்லாம தனித் தனி தீவுகளாக வாழறாங்க, கல்வி சரியா கிடைக்க மாட்டேங்குது...ஏழ்மை...உனக்கு எல்லாம் கிடைக்குது என்பதை ஒர் அனுபவமாக (லெக்சர் கொடுக்காம) கற்றுக் கொடுக்கலாம். தங்கள் பட்ஜெட்டுக்கு ஏத்தாப்ல...சின்ன வயசுலேயே சில விஷயங்களில் பெற்றோர் குறித்த தன்னைச் சுற்றி உள்ள மக்களைக் கவனிக்கவும் பொறுப்பு வந்தால் நலலருக்கும்னு தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 3 in one காபி பொட்டலம் வடிவில் பல சுவைகளில் this என்ற பெயரில் ஹைதெராபாதில் உள்ள Continental Coffee விற்பனை செய்கிறது.
      நான் cappusino வாங்கினேன். நன்றாக உள்ளது. விருந்தினர்
      வரும்போது எளிதில் உபசரிக்க முடியும். order online

      நீக்கு
    2. கொரியா சென்று வந்த என் உறவுக்காரப்பையன் இதுபோன்ற நீளக்குழாய் சாஷேவை எனக்கு கொடுத்தான். வெந்நீரில் கலந்தால் சுவையான (சுமாரான) டிகாக்ஷன் காபி ரெடி!

      நீக்கு
    3. E//நம்மூரிலும் இப்படி சிறிய பயணங்கள்// - நம்ம ஊர்ல, டியூஷன், அந்த வகுப்பு இந்தக் கல்வி னு மார்க் பற்றி மாத்திரமே சிந்தனை செய்யும் பெற்றோர்கள் 99 சதம் (என்னையும் சேர்த்து). இதில் பயணமாவது அனுபவமாவது...

      நீக்கு
    4. நன்றி ஸ்‌ரீராம். கொரிய - மேட்டர் பத்தி நீங்க =, நான் எழுதிய காஃபி புராணம் பதிவில் இந்த ஜப்பான் சொன்னப்ப அங்கும் கருத்தாகச் சொல்லியிருந்தீங்க. இங்கும் அதை சொல்ல நினைத்து வந்தா இங்க உங்க கருத்தே வந்துருச்சு...

      ஜெ கே அண்ணா....ஆஹா கப்புசினோ! எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் இங்கு வாங்குவதுண்டு கிடைக்கிறதே இப்பவும். வேறு வேறு சுவைகளில். ஆமாம் எளிது.

      நெல்லை - ஹாஹாஹாஹா ஹையோ இந்த நெல்லை இருக்காரே!!!!!

      மகன் பள்ளி சென்றதே பெரும்பாடாக இருந்தது...பள்ளிப்பாடம் தவிர வேறு பல நல்ல விஷயங்களில் ஆர்வம் ஈடுபாடு இருந்தது. எனவே.பள்ளி தவிர பாடம் சம்பந்தமான எந்த வகுப்புக்கும் நாங்க அனுப்ப்லை. கராத்தே, வீணை வகுப்புகள் அப்புறம் இப்படிச் சின்ன சின்ன கிராமங்களுக்கு நான் அழைத்துச் சென்றதுண்டு.

      அது சரி நெல்லை நீங்க வாசித்த புத்தகம் பத்தி இங்க எபில எழுதினீங்களே அது போல இப்பவும் நேரம் இருந்தால் எழுதலாமே

      கீதா

      நீக்கு
    5. நம்ம ஊர்ல, டியூஷன், அந்த வகுப்பு இந்தக் கல்வி னு மார்க் பற்றி மாத்திரமே சிந்தனை செய்யும் பெற்றோர்கள் 99 சதம்//

      உண்மைதான் நெல்லை.....

      கீதா

      நீக்கு
  8. நடிகர் கோபி தம்பதியர் செயல் பாராட்டுக்குறியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. மற்றவர்கள் செயல் பாராட்டத்தக்கதில்லையா? நன்றி ஜி!

      நீக்கு
    2. ஶ்ரீராம் நான் மற்றவர்களை நேரில் பாராட்டாமலிருப்பதற்கு உங்களைப் போன்ற கருத்துதான் காரணம் ஹாஹா. சமீபத்தில் குழுவில் இருந்தவர்களில் ஒரு பெண்மணியை, நன்றாக சேவித்தீர்கள் (ப்ரபந்தம் சொல்வது) என்று பாராட்டினேன். உடனே அருகிலிருந்த இன்னொருவர், அப்போ நாங்க நல்லா சொல்லலையா என்று கேட்டார். என்னன்னு பதில் சொல்றது?

      நீக்கு
    3. இவை செய்திகள்தான்.  உயிரில்லாதவை.  நான் விளையாட்டாகத்தான் கேட்டேன் என்றாலும், ஒரு விளையாட்டுக்குழுவில் தனித்து ஒருவரை குழுவினர் நடுவிலேயே பாராட்டும்போது,   குழுவாக வேலை செய்த ஒரு இடத்தில ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு பாராட்டினால் இப்படி மற்றவர்களுக்குத் தோன்றும்தானே நெல்லை?

      நீக்கு
  9. நான் படிச்ச கதை/புத்தகம் தொடர வேண்டும். அதாவது வாசிப்பு பற்றிய புத்தகங்கள் அறிமுகம்.தொடர வேண்டும். எல்லோராலும் வாசிக்க முடிகிறதோ இல்லையோ, அறிமுகம் இருந்தால் குறித்து வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கறப்ப வாசிக்கலாமே. இங்கு கருத்து இடாதவர்கள் கூட அதை வாசிக்க நேரிடலாம். silent readers பதிவைப் பார்த்து அப்புத்தகத்தைத் தேடி வாசிப்பவர்களும் இருக்கலாம்.

    ஒரு வேளை ஜெ கே அண்ணாவுக்கு அயற்சியாக இருந்தால் இடையில் வேறு யாரேனும் முடிந்தால் தரலாம்...கதைகள் என்றில்லாமல் எந்த subject லும் நல்ல புத்தகங்கள் ஆங்கிலமானாலும் தமிழானாலும் வேறு மொழிகளானாலும் பகிரலாம் அதன் தமிழாக்கம் அல்லது ஆங்கில ஆக்கம் இருந்தால் அதன் பெயரையும், எழுத்தாளரையும், மொழி ஆக்கம் செய்தவரையும் குறிப்பிட்டால் விருப்பம் உள்ளவர்களுக்கு உதவும். இங்கு கருத்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல்...

    இது ஒரு நல்ல பகுதி என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பகுதி என்பதாலேயே வெளியிடப்பட்டுக்கொண்டு வந்தது. ஒருவர் மட்டுமே எழுதுவது அயற்சியைத் தரும்தான். நிறைய படிக்கும் பழக்கம் கொண்ட JKC தனது உடல்நிலை சிரமத்தையும் பொருட்படுத்தாது எழுதிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் யாரும் அங்கு எழுதவில்லை, நான் உட்பட. வர வருத்தம், செய்தியைப் குறைந்து போய்விட்டார்களோ என்று எண்ணும் அளவு இருக்கிறது என்று வருத்தப்பட்டிருந்தார். நேற்று என்னிடம் பானு அக்கா பேசி, தான் ஒரு 'நான் படிச்ச கதை' படைப்பு அனுப்புவதாக உறுதி கூறி இருக்கிறார்.

      நீக்கு
    2. டிட்டோ!! ஸ்ரீராம். என்னாலும் ஒன்றுதான் அனுப்ப முடிந்தது வாசித்த புத்தகம் என்று. ஒன்று ரிசர்வ்ட் இப்ப!!!

      ஜெ கெ அண்ணா தன் வருத்தத்தை வெளியிட்டது மிக நல்லது. ஒரு விஷய்த்தை அது வருத்தமோ, கலந்து உரையாடி முடிவெடுபப்தோ அதை மனம் திறந்து சொன்னால்தான் அப்போதுதானே எல்லாருக்கும் தெரியவரும் இல்லையா? இப்போது வரும் என்று நினைக்கிறேன். ஜெ கே அண்ணா Kudos உங்களுக்கு இதை Open up செய்ததற்கு.

      ஸ்ரீராம் இப்ப நானும் நிறைய வாசிக்கிறேன் தான். அதில் சில கதைகள் சில கட்டுரைகள். ஆங்கிலத்தில் கட்டுரைகள். ஒருநாளைக்கு ப்ளாக் தவிர இணையத்திலோ அலல்து குவிகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் வரும் (நன்றி திரு ராயசெல்லப்பா சார்) குறும் புதின புத்தகங்கள் என்று வாசிப்பும் இருக்கு. எழுதத்தான் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கு.

      கீதா

      நீக்கு
    3. இன்று வழக்கம் போல் நா படிச்ச கதை வந்திருந்தால் கூட இப்படி எல்லோரிடம் இருந்தும் Open கருத்துகள் வந்திருக்காது. வழக்கம் போல் சென்றிருந்திருக்கும். Its a good move!

      கீதா

      நீக்கு
  10. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. நிழலின் அருமை வெறிசசோடிய வெயிலில் தெரியும் என்பது உண்மை தான்.
    வெயிலின் அருமையும் விடாது கொட்டித் தீர்க்கும் அடைமழை நசநசப்பில்
    தெரியும் தான்.
    'நான் படிச்ச கதை' இல்லாதிருக்கும் இன்றைய சனிக்கிழமையும்
    தடங்கலில்லாது தொடர்ந்து மாசக்கணக்கில் வெளிவந்து நம்மை மகிழ்வித்த அருமையை
    உணர்த்துகிறது.
    பொறுமையாக நிதானமாக தளர்ச்சியுறாது அதை சனிக்கிழமை தோறும் வெளியிட்டு வந்த ஜெஸி
    ஸார் மீண்டும் அதைத் தொடர வேண்டும். சின்ன ஓய்வுக்கு பின் என்றாலும் ஓ.கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்.. அவர் உடல்நிலை சரியில்லாது ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் விடாது படைப்பு அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் வருத்தம் அதை அவ்வளவாக யாரும் கண்டு கொள்ளாததுதான். இப்படி ஒரு பகுதி ஆரம்பிக்கச் சொன்ன நீங்களும் நெடுநாட்களாக காணோம் என்பதையும் சொல்லி இருந்தார். சீக்கிரமே தொடர்வார் என்று நம்புவோம். எழுத அவர் அயர்ந்ததில்லை.

      நீக்கு
    2. நன்றி ஜீவி அய்யா. எங்கள் வீட்டில் சனிக்கிழமை தோறும் கலந்த சாதம் தான். தயிர்சாதம் கண்டிப்பாக உண்டு. அதே போன்று தயிர்சாதமாக சனிக்கிழமை தோறும் நான் படிச்ச கதையும் வெளி வந்து கொண்டிருந்தது. "சே தயிர் சாதம்" என்று சலிப்பு ஏற்பட்டாலும் அது இல்லை என்றால் சாப்பிட்ட திருப்தி முழுமை ஏற்படுவதில்லை என்பது என் கருத்து. . இந்த கருத்துரையும் தங்களுடைய தயிர்சாத உவமையின் பிரதிபலிப்பு. நினைவிருக்கிறதா?

      Jayakumar

      நீக்கு
    3. ஆமாம் ஜெகே அண்ணா உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரில இருந்து வீடு வந்ததும் கூட சிரமங்களுக்கு இடையில் எழுதினார்.

      அதனால் சனிக்கிழமை பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

      ஸ்ரீராம், மத்தவங்களும் அனுப்புங்கன்னு ஊக்கபடுத்திட்டேதான் இருக்கிறார். ஹூம் எங்க காதுல ஊக்கு நுழைய மாட்டேங்குது!!!!!!!!!!!!!!!!!!!!

      நான் முயற்சி செய்கிறேன் ஸ்ரீராம்...எனக்கு ஒன்று எழுத வர மாட்டேங்குதே...ரெண்டாவது ரொம்ப டைம் எடுக்குது எழுதுவதற்கு....வேலைகள் வீட்டு வேலைகள்னு மனம் distraction..

      ஜெ கே அண்ணா. ஆஆஆஆ தயிர் சாதத்த இப்படி சொல்லிட்டீங்களே!!!! அதுதான் மெயின். அதுவும் பாருங்க இப்பல்லாம் probiotic நு நிறைய மோர் தயிர் சாப்பிடச் சொல்றாங்க...அது இல்லைனா நீங்க சொன்னது போல நிறைவு பெறாது...திருப்தி இருக்காது!!!! என்ன சாப்பிட்டாலும் அது கடைசில வேண்டும்!

      கீதா

      நீக்கு
    4. கடைசியில் தயிர் சாதம் இல்லை என்றால் சாப்பிட்ட மாதிரியே நிறைவு இருக்காது என்று ஒரு தடவை நான் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  12. "நான் படித்த கதை " சிறப்புப் பகுதி இன்று இடம் பெறவில்லையே.. ஏன் .. என்ன ஆயிற்று?..

    தொடர்வதற்கு வேண்டுகின்றேன்..

    சகோதரர் ஜெயகுமார் அவர்களின் சோர்வினை நீக்கி உற்சாகத்தை அளித்து எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழி மொழிகிறேன். எல்லோர் விருப்பமும் அதுவே. கூடவே மற்றவர்களும் படைப்பிலும், கருத்துக்களிலும் தாராளமாக பங்குபெற வேண்டுகிறேன்.

      நீக்கு
  13. /// அவர் உடல் நிலை சரியில்லாது ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் விடாது படைப்பு அனுப்பிக் கொண்டிருந்தார்.///

    இச்செய்தியை இப்போது தான் அறிகின்றேன்...

    மனம் வருத்தம் அடைகின்றது..

    விரைவில்
    எல்லா நலனும் பெற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  14. அவர் சொன்னது உண்மை தான். நானும் உணர்ந்தது தான். இன்னும் சிலர் இந்தப் பகுதியை எழுதினாலும் அதையே தான் உணர்வார்கள். எதையேத் தான்? சொல்லித் தெரிய வைக்க முடியாத சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  15. எ பி யின் அன்புக்குரியவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சோர்வடைந்திருக்கின்றனர்..

    அனைவருக்கும் ஆகும் நலம் அனைத்தையும் அருளி அரவணைத்து ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யம் அளித்திட பிரார்த்தித்துக் கொள்வோம்..

    ஓம் சக்தி..
    ஓம் சக்தி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னபிறகு எனக்கும் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. ..அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சோர்வடைந்திருக்கின்றனர்..//

      இதில் இருக்கிறது உண்மை.

      சோர்ந்துபோவதும் உயிர்களின் இயற்கைதான். அதே சமயம் சோர்வுநிலை என்பது யாருக்கும் ஒரேயடியாக நீண்டுவிடக்கூடாது என்பதே ப்ரார்த்தனை.

      நீக்கு
  16. எனக்குள்ளும் ஒரு ஜேகே இருக்கிறார் என்று சென்ற வாரம் அவர் சொன்னதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குள்ளும் ஜீவி போல ஒரு ஜே கே உண்டு என்பதை உணர்ந்தேன். //

      ஜீ வி அண்ணா, அவர் சொல்லியிருந்தது இப்படி.

      இது எல்லாருக்குமே புரிந்திருக்கும். உங்களைப் போன்று கதையை ஆராய்வதில். எழுத்தைச் சொல்லவில்லை காப்பி என்ற அர்த்தத்தில் இல்லை கதையை ஆராயும் விஷயத்தில்.

      கீதா

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை.
      ஒவ்வொருவர் எழுத்தும் ஒரு மாதிரி.
      எபியின் பின்னூட்டங்களின் ஆழமும், விஷயங்களைக் கையாளும் நேர்த்தியும் அதிகரிக்க வேண்டும் என்பது என் உணர்வு.
      எழுதுபவர்களின் எதிர்பார்ப்புகள் எக்கசக்கம் அதற்கேற்பவான தளங்கள் கிடைக்காத பொழுது ஏமாற்றமே மிஞ்சும்.
      ஜெயகாந்தனுக்கு விகடன் பொருந்திய மாதிரி குமுதம் பொருந்தவில்லை என்பது மாதிரி இது.
      எபியின் வியாழன் அமைகிற மாதிரி மற்ற தினங்களும் இல்லை அல்லவா அது மாதிரியும் இது.
      இதனாலேயே சலிப்பு
      மிஞ்சி கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தேன்.ஸ்டோர்க் வந்து இடது பக்கம் பாதிக்கப்பட்ட பொழுது இவ்வளவு அவஸ்தைகளுக்கிடையே இவர்களுடன் ஏன் இந்த மல்லாட்டம் என்று நினைத்ததும் உண்டு.

      நீக்கு
    3. இப்பொழுது ஜெஸி ஸாருக்கும் இதே மாதிரியான ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
      இதுவே ஜீவி போல எனக்குள்ளும் ஒரு ஜேகே என்பதாக நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன்.
      தம்பி துரைக்கும் நாளாவட்டத்தில் ஏற்படலாம். அந்த சலிப்பு எழுதுவோருக்கு ஏற்படாத மாதிரி பார்த்துக் கொள்வது வாசகரின் பொறுப்பு என்பதற்க்காகவே இதெல்லாம் சொல்ல வேண்டியதாயிற்று.

      நீக்கு
  17. ஜேசி சார் நலமில்லாதிருப்பதை இப்போதுதான் அறிந்தேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு, நலமாகி, இனிதே திரும்பட்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
  18. சகோதரர் ஜெயகுமார் அவர்களுக்கு.. மனத் தளர்ச்சி வேண்டாம்.. எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்..
    தங்களால் மீண்டும் தமிழ்ப் பணி செய்ய ஆகும் ..

    தங்களுக்காக காத்திருக்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  19. இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று.

    குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

    வயதான பாட்டிக்கு உதவியவர்களுக்கும் நன்றி கூறுவோம்.

    பதிலளிநீக்கு
  20. @ ஸ்ரீராம்..

    /// நான் அப்போதே சொல்லி இருந்தேன்.. ///

    நான் தான் புரிந்துகொள்ள வில்லையோ..

    பதிலளிநீக்கு
  21. எனது உடல் நிலையைப் பற்றி கவலைப்பட்ட, நலம் பெற பிரார்த்தித்த எ பி நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து 3 மாதங்கள் ஆகி விட்டன. சிறு உபாதைகள் தவிர உடல்நிலையில் குழப்பம் இல்லை. கணிணி மற்றும் இணைய இணைப்பில் சில பிரச்சினைகள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​P S
      ​அப்படி ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று அறிய வேண்டுபவர்களுக்கு மூன்று வார்த்தைகள். Hernia, Angio, 2 Stents.
      Jayakumar

      நீக்கு
  22. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளைத் தொடரவும்.
    உடல் நலன் பேணவும்.
    விவாதங்களைத் தவிர்க்கலாம்

    மனதுக்குப் பிடித்த சந்தோஷமான விஷயங்களில் கவனம் கொள்ளவும்.
    இசை அருமருந்து. உங்களுக்கு பிடிக்கும் எனில் அதுவே மருந்து.
    உற்சாகமான பொழுது போக்குகளுக்கு வாழ்த்துக்கள், ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  23. ​@ ஜெயக்குமார் சந்திரசேகர்..

    /// அப்படி ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று அறிய வேண்டுபவர்களுக்கு.. //

    உடல் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்..

    ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தேஹி தேஹி மே
    பரமேஸ்வரி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!