ஞாயிறு, 9 ஜூலை, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 04

 

வைரமுடி யாத்திரை – மைசூர் அரண்மனை – பகுதி 4

சங்கமத்தைப் பார்த்த பிறகு, மைசூர் அரண்மனை இருந்த இடத்திற்கு 2 ¾ க்கு வந்து சேர்ந்தோம்.  எல்லோரும் இறங்கி, 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு அரண்மனை வளாகத்துக்குச் சென்றோம். செருப்புகளை விடுவதற்கு தனி counterகள் இருக்கின்றன. மொபைல் மற்றும் கேமராக்களை அனுமதிக்கிறார்கள்.

பழைய மைசூர் அரண்மனை முழுவதுமாக மரங்களால் கட்டப்பட்டிருந்தது. ஒரு தீ விபத்தில் முற்றிலுமாக அழிந்துவிட்ட து. கிருஷ்ணராஜ உடையார், 1897ல் இப்போதுள்ள அரண்மனையைக் கட்டினார். இதைக் கட்டி முடிக்க 15 வருடங்களும் (1912ல் கட்டி முடிக்கப்பட்டது) அப்போதைய மதிப்பில் 47 லட்சம் ரூபாய் செலவழிந்ததாம்.

அரண்மனை வளாக நுழைவாயில் 

அரண்மனையின் நான்கு மூலைகளிலும் அழகிய, பெரும் கோபுரங்களைக் கொண்ட கோவில்கள் இருக்கின்றன. ஸ்வேத வராஹ ஸ்வாமி கோவில், லக்ஷ்மி நாராயணர் கோவில் (இது 14ம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்திருக்கிறது)


அரண்மனையின் பிரம்மாண்டம் புகைப்படத்தில் தெரிகிறதா?










குதிரைப் படை,  காளையின் மீது ஏறிச்செல்லும் வீரன் என்று சுவரில் உள்ள ஓவியங்கள் பழங்காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன. 


இவர்கள் நகைகளைப் பார்க்கும்போது, லண்டனில், அரச குலத்தவர்களின் வைர நகைகளைப் பார்த்த நினைவு வந்தது (குறும்படமாகத் திரையிட்டார்கள்). அந்த வைர நகைகளின் ஜ்வஜ்வலிப்பு எழுத்தில் வர்ணிக்க முடியாது. எவ்வளவு வைர நகைகள், எப்படி டாலடிக்கின்றன. அரச குலத்தவர்கள் எல்லோரும் வைர நகைகளை அணிந்திருந்தார்கள். அந்த ஹாலில் (லண்டன்) தங்கக் கோப்பைகள், சாராயம் வைப்பதற்கான தங்கப் பாத்திரங்கள் (எம்மாம்பெருசு) என்று பலவற்றைப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிந்தது. படம்லாம் எடுக்க முடியாது. (எல்லாம் தென்னாப்பிரிக்கா மற்றும் நம் நாட்டிலிருந்து லவட்டியதுதான் என்று யாரோ சொல்லும் குரல் கேட்கிறது. ராஜராஜ சோழன் தஞ்சைப் பகுதியை ஆண்டபோது லண்டன் ஒரு மீன் பிடிக்கும் கிராமமாக இருந்தது)


எனக்குத் தோன்றும்… அரசர்களின் அணிகலன்கள், அரசிகள்/ இளவரசிகள்/ கிழவரசிகள் போன்றவர்களின் ஆடை அணிகலன்கள் போன்றவற்றை எங்கு வைத்திருப்பார்கள், எப்படிப் பாதுகாப்பார்கள், எப்படி ஆவணப்படுத்தியிருப்பார்கள்? புதிய நகைகள், உடைகளை யார் வாங்குவார்கள், அதற்கான பணம் யார் கொடுப்பார், அரசர்களுக்கு என்று சம்பளம்/பணம் தனியாக உண்டா, புதிய நகைகள்/ஆடைகள் பற்றி அவர்களுக்குள்ளும் குறைகள் இருந்திருக்குமா என்றெல்லாம் யோசிப்பேன்.

என்ன வைத்திருந்தால்தான் என்ன? எடுத்துக்கொண்டா போய்விட்டார்கள்? என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது.   மிகுதியை அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

= = = = =

55 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்!

    நெல்லை, மொபைலா? கேமராவா? அரண்மனை முதல் படங்கள் செம அட்டகாசம்...ரொம்ப தெளிவா இருக்கு. அதுவும் அந்த ரெண்டு படம் ஒட்டி இருக்கின்றனவே அவை செம....நான் நேரிலேயே அதன் பிரம்மாண்டம் பார்த்து பிரமித்திருக்கிறேன், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். அரண்மனை நன்றாக இருந்தது.. எது இருந்தால் என்ன.. கண்காணிப்பு, காவலர்கள் இல்லாத 6 1/2 அடி, 4அடி அகல கட்டிலில் படுத்தால் போதாதா?

      நீக்கு
  2. நெல்லை, நீங்க கடைசில சொல்லிருக்கற பாராவை நான் யோசித்ததுண்டு கூடவே அவங்க இந்த கனமான நகைகளை எப்படி அணிந்து கொண்டிருந்தாங்கன்னு. உறுத்தாதோ? நம்ம உடம்பை சுமக்கறதே கஷ்டமா இருக்கு...இந்த வெயிட்டும் கூடவேவான்னு ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி.. திருமணத்தின்போது பெரிய பெரிய நகைகளை மற்றும் எடை அதிகமான உடைகளை அணிந்துகொள்கிறார்களே

      நீக்கு
  3. நெல்லை, முன்னரே சொல்லணும்னு நினைச்சேன்....ரெண்டு படங்களா கொடுத்திருக்கீங்க இல்லையா? அதை கொலாஜ் பண்ணிக் கொடுக்காம தனியாவே இப்படி ரெண்டு போடலாம். ப்ளாகர்ல போட்டா, படத்தைக் க்ளிக் செய்து, பார்டரை கொஞ்சம் சுருக்கினா ரெண்டு படமும் சேர்த்து போடலாம்...அப்ப தனி தனியா கொஞ்சம் பெரிசு பண்ணிப் பார்க்கலாம்....ஜெகே அண்ணா தனித் தனியா பார்க்க முடியலை என்று சொல்வார்...வாசகர்கள் பார்த்து நாம் பெற்ற இன்பம் அவங்களுக்கும் கிடைக்கணுமேன்னு நானும் கொலாஜ் செய்வதை விட்டேன்... ஆனால் தனித்தனியாகப் போடுறப்ப .dimensions பார்த்துக் கொள்ள வேண்டும். க்ளிக்கினால் பெரிசாகத் தெரிவது போல போடணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். நான் தனித் தனிப் படங்களாக அனுப்புவேன். கேஜிஜி சார் இந்த வேலையைச் செய்ய நேரமிருக்கும்னா ஓகே

      நீக்கு
  4. இத்தனையும் எப்படிக் கட்டிக் காத்தாங்களோ?

    ஓவியர் நாகராஜு - நல்லாருக்கு அந்தப்படம்..... ரவிவர்மாவின் ஓவியங்கள் டக்கென்று பார்த்தவுடன் தெரிந்துவிடும். அந்த வண்ணக் கலவை texture .....அந்த ஓவியம் ரவிவர்மா என்று தெரிந்துவிடும். அவர் வரைந்த ஓவியங்கள் அங்கு இருந்ததை Post card களாக விற்பனையில் இருந்தவற்றை நான் வாங்கினேன் அப்போது 30 வருடங்களுக்கு முன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியர் நாகராஜுவின் ஓவியம் நன்றாகவே இருந்தது. ஓவியர்கள் உண்மை முகத்தை வரைந்திருப்பார்களா இல்லை அழகாக்கி வரைந்திருப்பார்களா? யாருக்குத் தெரியும்?

      நீக்கு
    2. ஏன், ஓவர் அழகாத் தெரியுதாக்கும்!

      நீக்கு
    3. இந்த ஓவியங்களில் அப்படித் தெரியவில்லை. பொதுவாக அரச/அரசி சிற்பங்கள் ஓவியங்கள் செய்பவர்கள் அப்படியே வரைந்திருப்பார்களா (இந்தியாவில். நிச்சயம் வெளிநாடுகளில், நான் லூவர் மற்றும் பல இடங்களில் பார்த்த ஓவியங்கள்/சிற்பங்களைப் பொருத்து, அப்படியே செய்திருக்கிறார்கள்)

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்களுடன் அருமையான பதிவு!..

    பதிலளிநீக்கு
  7. படங்களை கணினியில் காணவேண்டும்

    அரண்மனை தகவல்கள் இப்போதுதான் அறிகிறேன் நான் 1983-ல் போயிருக்கிறேன்.

    //இளவரசிகள்/ கிழவரசிகள்//
    இதை மிகவும் இரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. ஒரு மாற்றம் என்ற முறையில் கோயில்களையும் சிலைகளையும் விட்டு அரண்மனையில் புகுந்து விட்டீர்கள். புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன. செல்போனில் எடுத்தவை அல்ல என்று தோன்றுகிறது. தலைப்பில் கோயில் என்பதை ஒரு strikeout செய்து அரண்மனை என்று புகுத்தியிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார். யாத்திரை இந்தப் பகுதியையும் கடந்ததால் அரண்மனை பார்வையிடல். ஆனால் வழியிலேயே இருந்தும் டிப்பு, ஹைதர் சமாதிகளைப் பார்க்கப் போகலையே

      நீக்கு
    2. இதற்கு எழுதிய பதிலைக் காணோம். யாத்திரையின் ஒரு பகுதி இது. அரசனின் இல்லங்களைக் காணச் சென்றதன் ஒரு பகுதியாக நாட்டு அரசர்களின் இல்லங்களையும் கண்டோம் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. /// ராஜராஜ சோழன் தஞ்சைப் பகுதியை ஆண்டபோது லண்டன் ஒரு மீன் பிடிக்கும் கிராமமாக இருந்தது ///

    ராஜராஜ சோழன் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு பெரிய கோயிலைக் கட்டி முடித்து தென்னகத்தை
    ஆட்சி செய்தபோது லண்டன் மீனவர் குப்பமாக இருந்தது..

    அவன் மீன் பிடித்து சுட்டுத் தின்று கொண்டிருந்த போது இவன் யானைகளோடு கடல் தாண்டிக் கொண்டிருந்தான்..
    ஆனால் அவன்தான் இவனுக்கு கல்வியைக் கற்றுக் கொடுத்தான் என்று இங்கே காது கொள்ளாத படிக்கு ஊளைச சத்தம்!..

    அடக் கொடுமையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லார் சொல்வதையும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். நம் மனது என்ன சொல்லுதோ அதை நம்பவேண்டியது

      நீக்கு
  11. அரண்மனையப் பார்க்க அரை நாளுக்கும் மேல் தேவை.

    உள்ளில் இருக்கும் கோயில்களும் அழகாக இருக்கும். படங்கள் அப்போது பார்த்த நினைவை எழுப்புகின்றன. அந்த court yard சுற்றி இருக்கும் மாடங்கல் சாளரங்கள் அழகு....இதே போன்று ஒரு வடிவம் இராஜஸ்தானில் அரண்மனையில் பார்த்த நினைவு...வெங்கட்ஜி போட்டிருந்ததில்...

    அந்தக் கதவு மணிச்சித்திரத்தாழ் படத்தில் வருவது இதுதானோ? அது போன்றே இருக்கு..

    //அரசிகள்/ இளவரசிகள்/ கிழவரசிகள்//

    சிரித்துவிட்டேன்....இந்தக் கிழவரசிகள்னு சொன்னது சினிமாவில் வரும் இளவரசிகளா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவில் வரும் இளவரசிகளா? நல்ல கேள்வி, எனக்கு ஐஸ்வர்யா திரிஷா ரசிகர்கள் மனதைப் புண்படுத்தும் எண்ணமில்லை

      நீக்கு
  12. மக்கள் அதிகம் தெரியாமல் எடுத்திருப்பது பிடித்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள், நாங்கள் இருக்கும் படங்களைத் தவிர்த்திருக்கிறேன். தாஜ்மஹல் இடுகையில் பெண் ஒருவரின் படம் வரும்

      நீக்கு
  13. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    மைசூர் அரண்மனை படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. 10.12 வருடங்களுக்கு முன்பு நாங்கள் சென்று வந்தோம். அப்போது காமிரா கொண்டு போகலாமா என்பது நினைவில் இல்லை. செல்லில் (இப்போது போல் கைப்பேசியில் அழகாக படங்கள் விழும் கைப்பேசி களும் வரவில்லை.) எடுத்த படங்களும் டெஸ்க் டாப்பில் மாட்டிக் கொண்டு விட்டன என நினைக்கிறேன்.

    தங்களின் புகைப்படங்களை பார்த்ததும் என் நினைவு காமிராவில் படங்கள் வருகின்றன. எப்போதும் அங்கு கூட்டம்தான். ஆனாலும் அரண்மனையின் விஸ்தாரத்தை சுற்றிப் பார்த்து பிரமித்தேன்.

    இப்போதும் தாங்கள் எடுத்த அழகான படங்களை கண்டு அரண்மனை அழகை கண்டு வியந்து மகிழ்ந்தேன். படங்கள், விபரங்கள் நன்றாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /என்ன வைத்திருந்தால்தான் என்ன? எடுத்துக்கொண்டா போய்விட்டார்கள் என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. /

      உண்மை.. நினைக்கும் நாமும் என்ன எடுத்துச் செல்ல முடியும்.? "அவர்களுக்காவது சிறப்பாக வாழ்ந்த எச்சங்கள் இன்றும் உள்ளது. நமக்கு....? " என்றும் நினைக்கத் தோன்றுகிறது.நன்றி. .

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      முன்பே நான் எழுதியிருக்கிறேன். அரசர்கள் வாழ்வு என்பது சுகமல்ல. பலரும் கண்காணிக்கும், நிச்சயத்தன்மையற்ற வாழ்வு. யார் எப்போது தன்னைக் கொலை செய்யத் திட்டமிடுவார் என்பதும் தெரியாது. யார் நம்பிக்கைக்கு உரியவர்கள், அல்லர் என்பதும் மிகவும் கடினமான விஷயம்.

      ஒவ்வொரு உயிரையும் எப்போதாவது நினைவில் கொண்டுவரும் யாராவது இவ்வுலகில் இருந்துதான் தீரவேண்டும். 'எங்க பெரியம்மா பண்ணும் மணத்தக்காளிக் கீரைக் கூட்டு, அப்பக்கொடி மோர்க்குழம்பு' என்று நான் நினைத்துக்கொள்வேன். இப்படிப் பலரை, அவர்களது உணவிற்காகவும், கண்டிப்பிற்காகவும், எளிமைக்காகவும், நம்மீது செலுத்திய அன்புக்காகவும்...என்று பல காரணங்களுக்காக, நான் நினைத்துக்கொள்வேன். அப்படித்தான் ஒவ்வொருவரும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. அரண்மனையின் பிரம்மாண்டம் புகைப்படத்தில் தெரிகிறதா?//

    நன்றாக தெரிகிறது. மிக அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    அனைத்தும் அருமை.
    அரணமனை பல வருடங்கள் ஆச்சு பார்த்து. இப்போது மீண்டும் பார்த்தேன். நன்றாக பாராமரிக்கிறார்கள் என்று தெரிகிறது.
    ஓவியங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  16. தகவல்களும் படங்களும் அருமை! 2010ல் போயிருக்கிறேன். கால் வலி இருந்ததால் அதிகம் ரசித்து பார்க்க முடியவில்லை. வருடங்களும் கடந்து சென்று விட்டதால் புதிதாய் பார்ப்பது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதம் மேடம். மாளிகை, அதிலும் உள்ளே இருந்த மண்டபங்கள் பிரம்மாண்டமாக இருந்தன.

      நீக்கு
    2. மனோ சாமிநாதன் மேடம்... தட்டச்சுப் பிழையாகிவிட்டது

      நீக்கு
  17. ராஜராஜ சோழன் திரைப் படத்தின் போது நடிகர் திலகம் அவர்கள் அணிந்திருந்த உடை ஆபரணங்களின் எடை பன்னிரண்டு கிலோ என்றொரு செய்தி வந்திருந்தது..

    மிகக் குறைந்த எடை உடைய உடைகளுடன் நடிகர் திலகம் தோன்றிய வேடம் திருநாவுக்கரசர்..

    இதையும் மிஞ்சியதாக வெறும் நூறு கிராம் கூடத் தேறாத ஒட்டுத் துணியுடன் ஒருவர் நடித்தார்..

    இப்போது கூட, அவர் அப்படி நடிக்கத் தயார்..

    ஆனால்!..

    அவர் யாரென்று தான் எல்லாருக்கும் தெரியுமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒட்டுத் துணியுடன் ஒருவர் நடித்தார்..// - யாரு? விவசாயிகளுக்காகப் போராடுகிறேன் என்ற விவசாயி வேடத்தில் நடித்த அய்யாக்கண்ணுவா இல்லை நம்ம கமலதாசரா?

      நீக்கு
    2. ஓ.. அய்யாக்கண்ணு வேற இருக்கார் இல்லே!..

      நீக்கு
    3. காசரும் இல்லை.. தாசரும் இல்லை..

      லேசரே வேசர்
      வேசரே லேசர்..

      நீக்கு
  18. நெல்லை அவர்களது புண்ணியத்தால் மைசூர் அரச மாளிகை தரிசனம் ஆயிற்று..

    நல்லது..
    நல்லது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் - என்பது வரி. அரச குடும்ப தரிசனமும் கிடைத்ததா?

      நீக்கு
    2. அரச குடும்பத்தை மானசீகமாக நினைத்துக் கொண்டால் போதாதா!..

      நீக்கு
    3. இதுபற்றி ஒன்று எழுத நினைக்கிறேன். ஆக்ராவில், அக்பர் கோட்டையில் உச்சியில், அரசரின் மாளிகை இருந்தது. அதன் அருகில் பெரிய கயிறில் கட்டப்பட்டிருந்த தங்க 'மணி'யும் இருந்தது. பொதுமக்கள் அரசரின் கவனத்தை ஈர்க்க அதனை அடிக்கலாம் என்பதுபோல. காலையில் அங்கிருக்கும் பிராமணர்கள், அரசரைத் தரிசித்துவிட்டுதான் மற்ற செயல்களைச் செய்யவேண்டும் என்று அங்கிருந்து உச்சியில் பார்ப்பார்கள். அதற்காக அரசர் அங்கு நின்று தரிசனம் தரும் முறை இருந்தது. ஔரங்கசீப், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அந்த வழக்கத்தை ஒழித்தான். அவன் அந்த 'மணி அடிக்கும்' முறையையும் எடுத்துவிட்டான்.

      நீக்கு
  19. 2021-ல் மைசூர் சென்றிருந்தேன். அரண்மனையை நிதானமாக ரசித்துப் பார்த்தேன். நன்றாக, பெருமையுடன், பராமரிப்பதற்காக கன்னடர்களுக்கு நன்றி கூறலாம். தற்போதைய மைசூர் ஆரவாரமற்ற, அமைதியான நகரம் - பரபரப்பு பெங்களூருடன் ஒப்பிடுகையில்.

    மைசூரில் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அன்னையை தரிசித்தேன். மிகச் சிறிய விக்ரகம். அலங்கார ஜோடனைகளுக்கு மத்தியில், திருமுகத்தை சரியாகப் பார்ப்பதில் எனக்கு சிரமம் தெரிந்தது. அரண்மனை வளாகத்தில் (ராஜ குடும்பத்திற்காகக் கட்டப்பட்டதாகக் கேள்விப்பட்ட) ஸ்ரீ ஷ்வேத வராகப் பெருமாளையும் (தாயார் ஸ்ரீ அம்புஜவல்லி) தரிசிக்க நேர்ந்தது. இன்னொரு பக்கம் அரசபரம்பரையால் கட்டப்பட்ட ஒரு கிருஷ்ணன் கோவில் எனக் கேள்விப்பட்டேன். செல்லவில்லை அங்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்...இன்னும் அரண்மனை பற்றிய பதிவு முடியவில்லை. அரண்மனை, நன்றாக பெருமையுடன் பராமரிக்கப்படுகிறது. For that matter, கர்நாடக கோவில்கள் அனைத்துமே என்பது என் எண்ணம்.

      நீக்கு
  20. கிருஷ்ணராஜ வோடேயார் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.  அந்த வோடேயாரும் உடையாரும் ஒன்றுதானா?  மரூஉ வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒன்றே. உடையாரும் வொடையாரும் ஒன்றே (என்பது என் எண்ணம்). இதுபோல, கவுடர், கௌடா ஆகியவையும் ஒன்றே. கவுண்டர், கவுடர் இரண்டுமே ஒன்று என்பதிலும் எனக்கு சந்தேகம் உண்டு. இப்போதானே நாம் தமிழகம், கர்நாடகா என்று பிரிந்திருக்கிறோம். முன்பு தமிழகம் பரந்து விரிந்திருந்ததல்லவா? அதனால் மக்களும் ஒன்றாகத்தானே இருந்திருக்கவேண்டும்?

      நீக்கு
  21. படங்களும் தகவல்களும் சிறப்பு. ”எத்தனை சம்பாதித்து, எத்தனை சேர்த்து என்ன செய்யப்போகிறோம் - போகும்போது எடுத்துக்கொண்டா போகப் போகிறோம்?” சரியான சிந்தனை! ஆனாலும் பறந்து பறந்து சேர்ப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். நீங்கள் சொல்வது உண்மை. ஒருவேளை அரசாங்கம் நம்மை வயதானபின் கவனித்துக்கொள்ளும் (உணவுக்கு ஓரளவு பணம், மருத்துவச் செலவு) என்று இருந்திருந்தால் ஒருவேளை நாம் பறந்து பறந்து பணம் சேர்க்கமாட்டோம். அந்த நிலை இல்லாததால், நமக்கு எவ்வளவு வேண்டும் என்பதில் நமக்குத் தடுமாற்றம் வந்து, பணத்தின் பின்னால் ஓடவேண்டியிருக்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!