புதன், 12 ஜூலை, 2023

உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?

 

கீதா சாம்பசிவம் : 

ஆளையே கவிழ்க்கும் அளவுக்குச் சிலர் தப்புச் செய்தாலும் அவங்களை ஏன் யாருமே கண்டுகொள்ளுவதில்லை? சின்னத் தப்புச் செய்தவர் அதிலும் பல சமயங்கள் அறியாமல் செய்தவர்களைத் தண்டிப்பது ஏன்?

& அதுதான் அரசியல் என்று ஆகிவிட்டது. வாக்காளர்களிடம் பெரிய மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய, இதெல்லாம் மாற வாய்ப்பு இல்லை. 

இப்போதெல்லாம் தினம் யாராவது கணவன், மனைவியையோ மனைவி கணவனையோ கொன்று விட்டதாகவே செய்தி வருகிறது. அதிலும் பல சமயங்கள் ஜோடியாகக் கணவன், மனைவியைக் கொல்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

& கொலையும் செய்வாள் பத்தினி; கழுத்தையும் நெரிப்பான் கணவன்! என்னைக் கேட்டால் எல்லாம் டீ வி சீரியல்களால் மற்றும் சினிமாவினால் ஏற்படும் விபரீதங்கள். 

மது போதையில் காவல்துறையினரை மிரட்டிய இளைஞர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலம் என நினைக்கையில் மனதே கொதித்துப் போகிறதே! இந்நிலைக்கு யார் காரணம்? அதுவும் இப்போதுள்ள அரசின் ஆட்சியில் தான் இவை அதிகம் நடைபெறுகின்றன. ஏன்? தமிழகம் மாறவே மாறாதா?

# இப்போது உள்ள அரசு என்று முடிக்கிறீர்கள். சீர்கேடு யார் ஆட்சி செய்கிறார் என்பதைப் பொறுத்து வருவதல்ல.  அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

மேலும் குற்றங்கள் பற்றி செய்திகள் அதிகம் நம் கண்ணில் படுவதும் இந்த மன உளைச்சலுக்கு காரணம் ஆகிறது. 

இதெல்லாம் மாறுமா என்பது -- எல்லாமே மாறும்.  எப்போது யாரை முன்வைத்து என்பது நமக்குத் தெரியாது.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சாலட் போன்றவை சுவையாக இருந்தாலும், பசி அடங்கினாலும் வயிறு நிறைந்த உணர்வு வர மாட்டேனன்கிறதே..?

# வயிறு நிரம்பிவிட்ட உணர்வு வரவேண்டுமானால் மாவுசத்து உட்கொள்ள வேண்டும். இது பழக்கம் காரணமாக மட்டும் இல்லை.  அறிவியல் விளக்கம் என்கிறார்கள்.

& சாலட் போன்றவை ருசிக்காக சாப்பிடப்படுபவை; பசிக்காக  அல்ல ! 

உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?

# பத்து ரொம்ப அதிகமோ என்று தோன்றுகிறது.  என்றாலும் முயற்சிக்கிறேன்.

1. படிப்பது

2. பதிவு எழுதுவது

3. இசை கேட்பது

4. கீ போர்டில் பாட்டு வாசிக்க முயல்வது.

5. ஆன்மீக சொற்பொழிவு கேட்பது.

6. நகைச்சுவை அல்லது துப்பறியும்  திரைப்படம் பார்ப்பது. 

7. வடமொழி மந்திரங்கள் சொல்லப் பயிற்சி செய்வது

8. சிறு தீனி / நொறுக்குத் தீனி சாப்பிடுவது

9.கணக்கு, பொது அறிவுப் புதிர்கள் விடை தேடுவது

10.குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் அரட்டை. 

11. 56 என்று பெயர் கொண்ட சீட்டாட்டம்.  (இப்போது ஆட்கள் இன்றி நின்று போய் இருக்கிறது.)

12. நடைப் பயிற்சி.

13. படம் பிடிப்பது.  (மலர்கள் குழந்தைகள், இயற்கைக் காட்சி, அழகிகள்.. விருப்பமான "பொருள்" .

14. பயணம்

15. கோயில், சிற்பம் இவற்றை கூர்ந்து கவனித்துப் பார்ப்பது.

16. புது நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளுதல். 

17. உறவுகள் கூடும் குடும்ப விழாக்களில் ஆஜர் ஆவது. 

18. தர்க்கம் செய்வது.

& கடந்த காலங்களை நினைவுக்குக் கொண்டுவராமல், இன்றைய நிலையில் என்  மனதுக்குப் பிடித்த, நான் செய்ய விரும்பும் விஷயங்கள் என்று யோசித்தால் .. 

1) படம் வரைவது. - குறிப்பாக எங்கள் Blog கதைகளுக்கு.  

2) புதன் கிழமை பதிவுக்கு என் அந்தக் கால அனுபவங்களை எழுதுவது 

3) நகைச்சுவை படங்கள் பார்ப்பது, நகைச்சுவை பதிவுகள், கதைகள் படிப்பது. 

4) ஸ்வீட் சாப்பிடுவது. (இதை இப்போது எழுதும்போது கூட வாயில் பனங்கல்கண்டு கரைந்துகொண்டு உள்ளது!) 

5) மழையை ரசிப்பது. 

6) தினமும் இல்லை என்றாலும் எப்போதாவது காலையில் மட்டும், கிடைக்கும் நல்ல பில்டர் காபி. 

7) குட்டிப் பேரனுடன் விளையாடுவது. 

8) டீ வி யில் 20 ஓவர் கிரிக்கெட் பார்ப்பது. 

9) வாழைப்பூ வடைகறி & கொத்தவரங்காய் / பீன்ஸ் பருப்புசிலி 

10) அடை. + வெண்ணெய் அல்லது வெல்லம். 

நெல்லைத்தமிழன்: 

பொதுவா வாலிப மற்றும் தெம்பு இருக்கும் வயதில் புறச் சின்னங்களை அணியாமல், வயது ஆகும்போது புறச் சின்னங்களோடு பக்தியும் அந்த மார்கத்தை நாடும் ஆர்வமும் வருவதன் காரணம் என்ன?

# புறச் சின்னங்களைப் பொறுத்தவரை, கவலை, பயம், முன்னேற்பாடு / பாதுகாப்பு மட்டுமே.. மற்றபடி, முதிர்ச்சியில் விவேகம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கவனம் உடல், மூளை இவற்றிலிருந்து மனதை நோக்கித்  திரும்புவது முதிர்ச்சி கனிவு இவற்றின் அடையாளம்.

= = = = = =

KGG பக்கம் : 

ஸ்ரீநிவாசன் 'கதை' 

ஆறாம் வகுப்பு - நீதி போதனை பீரியட் நடந்துகொண்டிருந்தபோது, ஆசிரியரைக் காண யாரோ ஒருவர் வந்தார். அவர் கையில்  ஒரு சிறிய பெட்டி. அதை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு சென்றார். முதல் பெஞ்சு மாணவர்களாகிய எங்களுக்கு அந்தப் பெட்டியில் என்ன இருக்கின்றது என்பதைக் காண பேராவல் வந்தது. 

ஆசிரியர் எங்களுக்கு ஏதோ சில கேள்விகள் கொடுத்து விடைகள் எழுதும்படி சொல்லிவிட்டு அந்தப் பெட்டியைத் திறந்தார். 

அவைகள் சினிமா தியேட்டர்களில் இடைவேளை முடிந்ததும் படம் ஆரம்பிக்கும் முன்பு காட்டப்படும் விளம்பர ஸ்லைடுகள். 4 inch சதுர வடிவில் கண்ணாடியில் எழுதப்பட்ட விளம்பர வாசகங்கள். 

அதைக் கண்டதும் என்னுடைய ஆச்சரியம் பன்மடங்கு ஆகியது. அந்தக் காலத்தில் சினிமா பிலிம், சினிமா ஸ்லைடு, சினிமா போஸ்டர் என்று சினிமா சம்பந்தப்பட்டவை எல்லாமே என்னை சுண்டி இழுத்த விஷயங்கள். நான் அந்த ஸ்லைடுகளை ஆர்வத்துடன் பார்ப்பதை கவனித்த ஸ்ரீனி என்னிடம், " இந்த மாதிரி ஸ்லைடு என் வீட்டில் நிறைய இருக்கிறது " என்றான். 

எனக்கு ஆச்சரியம் அதிகமானது. " அப்படியா ! எவ்வளவு இருக்கிறது? யார் கொடுத்தார்கள்? "

" அது இருக்கும் நூறு, நூற்றைம்பது! எல்லாம் என்னுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து அனுப்பியது"

" உன்னுடைய மாமா சிங்கப்பூரில் இருக்கிறாரா ! இன்னும் என்னவெல்லாம் அனுப்புவார்? "

" எனக்கும் என்னுடைய தங்கைக்கும் நிறைய டிரஸ், சாக்லேட், காமிரா எல்லாம் அனுப்பியிருக்கிறார். " 

" எவ்வளவு காமிரா வெச்சிருக்கே? "

" சிறுசும் பெருசுமாக நாலைந்து காமிரா இருக்கு " 

" டேய் - எனக்கு இரண்டு காமிரா (எனக்கு ஒன்று, என் அண்ணனுக்கு ஒன்று என்று கணக்குப் போட்டேன்) கொஞ்சம் ஸ்லைடு எல்லாம் கொடுடா !" 

" நாளைக்குக் கொண்டுவந்து தருகிறேன்" 

மறுநாள் - ஆவலோடு காத்திருந்த என்னிடம், " அடடா - மறந்துபோய்விட்டேன் - நாளை நிச்சயம் கொண்டுவருகின்றேன்" 

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சால்ஜாப்பு சொன்னான். 

பீரோவிலிருந்து எடுக்கப் போனபோது என் சித்தப்பா வந்துவிட்டார். 

ஸ்கூலுக்கு நேரமாகிவிட்டதால் அவசரமாகக் கிளம்பி வந்துவிட்டேன். 

ஹோம் வொர்க் எழுதி முடித்த அவசரத்தில், இதை மறந்தே போனேன். 

ஒருநாள் அவன், " அடுத்த வாரம் - ஒரு வாரம் லீவுல என்னுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து வரப்போகிறார். உனக்கும் சேர்த்து எல்லாவற்றையும் வாங்கி வரச் சொல்லி லெட்டர் போட்டிருக்கேன். அவர் கொண்டுவந்ததும் நீயே என் வீட்டிற்கு வந்து அவைகளை வாங்கிக்கொள். பள்ளிக்கூடத்திற்கு அவைகளைக் கொண்டுவந்தால் மத்த பசங்க என்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிடுவார்கள் " என்றான். 

ஆஹா - சில நாட்களுக்கு கற்பனைக் கனவுகளில் வெள்ளை சட்டை, வெள்ளை டிராயர் அணிந்து வெண்மேகக் கூட்டங்களில் மிதந்து சஞ்சாரம் செய்தேன் ! 

(தொடரும்) 

= = = = =

அப்பாதுரை பக்கம் : 

மனங்கவர் மாந்தர்

சமீபமாக என்னைக் கவர்ந்தவர்களில் மஸ்க் முன்னணியில் இருக்கிறார். பத்திலிருந்து இருபது வயது வரையிலான உலக மக்கள் நடுவே,  யேசுவை விட மஸ்க் பற்றி அறிந்தவர்கள் அதிகம் என்று சதர்ன் கலிபோர்னியா பல்கலை சர்வே ஒன்று தெரிவிக்கிறது. சகப பட்டமளிப்பு விழாவில் கணக்கிட்டு ஐந்து நிமிடங்கள் பேசிய மஸ்க் மாணவர்களுக்கு வலியுறுத்திய நான்கு பழக்கங்களில் ஒன்றைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறேன். (யுட்யூபில் பார்க்கலாம்).  

மஸ்க் பற்றி நான் கவனித்த சில:

- முறையான பொறியியல் கல்வி பயிலாமல் கார், விண்வெளி, பாதாளம், கடல், நுகர்பொருள், மென்பொருள், எண்ணை என்று எதையும் விடாமல் ஒரு கை பார்க்கிறார். 

- 2008 வாக்கில் சவடால் என்று இவர் சொன்னதை அலட்சியம் செய்தவர்கள் 2018 வாக்கில் இவரை தீர்க்கதரிசி என்றனர். ரஷியாவிடம் இருந்த உபயோகமற்ற ICBM வாங்கி, குறைந்த செலவில் செயற்கைக்கோள் பறக்கவிடும் முயற்சியில் அவமானப்பட்டு தோல்வியடைந்து அதுவே ஒரு வித்தாகி அவர் தொடங்கிய spacex நிறுவனம் இன்று மகத்தாக விரிவடைந்து செவ்வாயில் குடியிருப்பு என்கிற அளவில் நிற்பது உதாரணம். 

- அவருடைய disruptive thinking அடிக்கடி வியக்க வைக்கிறது. 2012 வாக்கில் மனித மூளையில் துணியளவு பருமனான நரம்பு கடத்திகளை வைத்து மனித-கணிப்பொறி தொடர்பை அசலாக்க முடியும் என்றார். இதைக் கேட்ட எம்ஐடி விஞ்ஞானிகள் பத்து நிமிடங்களுக்குக் குறையாமல் வீரப்பா-ரஜினிகாந்த கலந்த சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.  2018ல் இதற்காக ஒரு கம்பெனி தொடங்கி நரம்பு கடத்தித் துணி (?) மட்டுமல்ல அதை மூளையில் தைக்கும் கருவியையும் (உஷா தையல் மிஷின்?) கொண்டு வந்து, அமெரிக்க அரசாங்க அனுமதியுடன் நரம்பு செயலிழந்த பத்து பேருக்கு சிகிச்சை வழங்கும் அளவுக்கு வந்துவிட்டார். எம்ஐடி விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள் தெரியவில்லை. ஊசிப்போன மசால்வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். 

 - பாதாள போக்குவரத்து பற்றிய அவருடைய எண்ணங்கள் பிரமிக்க வைக்கின்றன. பாபோ எனக்கு மிகவும் பிடித்த துறை. இதில் அதிகம் படிக்கவோ வேலை செய்யவோ முடியாமல் போனது ஒரு வருத்தம்.  மஸ்காக இருந்தால் வருத்தம் போக ஏதாவது துணிச்சலாகச் செய்திருப்பார். அப்பாதுரையாக இருந்ததால் வருத்தம் போக அதிகம் படிக்கப்படாத ஒரு கதை எழுதி அடி வாங்காமல் தப்பித்தேன். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சாதிக்கப் போவதாகச் சொல்லும் மஸ்க் (தூபம் சமர்பிப்பது மோடி, ஜெய்சங்கர்) அந்த சாதனைக்கு நாடு தழுவிய பாதாள போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறேன். ஆசைப்படுகிறேன்.  

 - அவருடைய செவ்வாய் குடியேற்றத் திட்டம் ஒரு பொறி. இது புரியாமல் அவர் திட்டத்தை அக்கு ஆணி என்று புரட்டி மிதித்து துப்பியவர்கள்,  இன்றைக்கு விண்வெளியில் ஆக்கிரமிப்பு தொடங்கும் ஏதுவில் அவர் கம்பெனி முன் வரிசை கட்டி நிற்கிறார்கள். இந்தியாவுடன் ஒத்துழைக்கப் போவதாக அவர் சொல்லியிருப்பதை வரவேற்கிறேன்.  (சைனாவுக்கு பயந்து அத்தனை நாடுகளும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை ரகசியமாக விரும்புகின்றன என்று நம்புகிறேன்).

வால்: 

BA (economics) படித்த என் நண்பர்களை திடீரென்று நிறைய மதிக்கிறேன். Economics படிக்கப் போகும் இந்திய இளைய சமுதாயத்திலிருந்து பதினைந்து மஸ்க் வெளிவர பிரார்த்தனை செய்கிறேன். 

அனுமார் வால்:

"இந்தப் பக்கத்துல எழுத ஒரு வரையோ வரம்போ உண்டா" என்று kgg அவர்களிடம் கேட்டபோது "என்ன வேணா எழுதுங்க" என்றார். 'நானா படிக்கப் போகிறேன்?' என்று அவர் கேட்காதது சுவாரசியம். செய்திகள் பற்றி எழுதினால் போரடிக்கிறது சில நேரம்.  அவசரமாக ஏதாவது எழுதினால் கண்டுபிடித்து விடுகிறார்கள். சாயம் வெளுத்துவிடுகிறது (ஜெயகுமார் அவர்களின் துல்லியம் ஒரு ஆச்சரியம்). ஆன்மிகம் பற்றி என் எண்ணங்களை எழுதத் தூண்டியவர் முரளி, இன்னும் வரும் (பா வெ அவர்கள் கவனிக்கவும்). 

 செல்போன் பற்றிய வாட்ஸப் பரிமாற்றத்தினிடை என்னைக் கவர்ந்த மனிதர்கள் பற்றி எழுத வித்திட்டவர் ஶ்ரீராம் (பிடிக்காதவர்கள் அவருக்கு காரபோளி பார்சல் அனுப்பவும். வேண்டாம் ப்லீஸ். எனக்குக் கொடுத்து விடுவார்).

= = = = = = =

80 கருத்துகள்:

  1. இன்றைய அப்பாதுரை பகுதி சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  2. // என்னைக் கவர்ந்த மனிதர்கள் பற்றி எழுத வித்திட்டவர் ஶ்ரீராம் //

    அடுத்த வாரம் டெஸ்லா பற்றியா?

    பதிலளிநீக்கு
  3. மனதுக்கு பிடித்த 10 செயல்களில் யாருமே மனைவிக்கு உதவி செய்வதை குறிப்பிடவில்லை. குறிப்பாக சமையல்.

    அப்பாதுரை சார் மஸ்கின் மாஸ்க்கை அகற்றி விட்டார். ISRO 60 வருடங்களில் சாதித்ததை விட SPACEX குறுகிய காலத்தில் சாதித்தது அதிகம். ஏன் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. முதலீடு மற்றும் அரசுடைமை என்றே கூற முடிந்தது. என்ன செய்தாலும் ரூல் படி செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு.

    மஸ்க் போலத்தானே அதானி. குறுகிய காலத்தில் பழம்பெறும் முதலாளிகளை மிஞ்சும் அளவு முன்னுக்கு வந்து விட்டார், ஆனாலும் மஸ்க் போன்று புது துறைகளில் காலடி எடுத்து வைக்கவில்லையே ஏன்? காரணம் அவருக்கு வேண்டியது லாபம் மற்றும் பணப்புகழ், அரசியல் தலைவர் உதவி. (தற்போது ராக்கெட் உதிரி பாகங்கள் செய்யும் சிறு குறு நிறுவனங்களை வாங்கிக் கூட்டுவதாகக் கேள்வி)

    புதன் பதிவுகள் பொலிவடைகின்றன. Kgg மற்றும் அப்பாதுரை அவர்கள் முயற்சியால். நன்று.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. // மனதுக்கு பிடித்த 10 செயல்களில் யாருமே மனைவிக்கு உதவி செய்வதை குறிப்பிடவில்லை. குறிப்பாக சமையல்//

      'மனதுக்கு பிடித்த' என்றுதானே கேள்வி கேட்டிருக்கிறார். 'மனைவிக்கு பிடித்த' என்றா கேள்வி கேட்டிருக்கிறார்!

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அவருடைய disruptive thinking//

    No. இது அவருடைய thinking. Normal. அடுத்தவர்களுக்கு ஏனோ disruptive !

    பதிலளிநீக்கு
  6. கீதாக்காவின் கேள்வி குடும்பத்துக்கும் பொருந்தும்.

    மது போதையில் காவலர்களை மிரட்டுதல் - நான் சமீபத்தில் எழுதிய பதிவை நினைவுபடுத்துகிறது....நான் கண்டது வகுப்பிலேயே போதைப்பொருள் பயன்படுத்தல் அதைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை மிரட்டல்...."நான் யாரு தெரியுமா?" இவை எல்லாம் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. குடும்பச் சூழல், பெற்றோர் குழந்தை வளர்ப்பு என்பது எளிதல்ல. அடுத்து பள்ளிகள்.

    இதுதான் இப்போது அதிகம் பேசப்படுகிறது சில பள்ளிகளில் குழந்தைகளுக்கான உளவியலாளர்களை நியமிக்கிறாங்க. kindergarten வகுப்பிலேயே பெற்றோர் எல்லோரையும் வரவழைத்து ஒரு வாரம் போல குழந்தை வளர்ப்பு பற்றி அதாவது இப்போதைய சவால்கள் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ளும் வகையில் பேசுகிறார்கள்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு முறைகள் பணி இடை நீக்கம் செய்தும் போதையில் மிதக்கும் ஆசிரியர்களை என்ன செய்வது? இப்போது அதைப் பற்றித் தான் அமைச்சர்கள் கூடப் பேசி எப்படி வருமானத்தை அதிகரிப்பது எனக் கவலைப் படுகின்றனர். மக்களைப் பற்றிய கவலை ஏதும் இல்லை. முக்கியமாய் மாணவர்களின் எதிர்காலம் பற்றி யாருமே நினைப்பதில்லை.

      நீக்கு
    2. பணி இடை நீக்கம். அரசுப்பணிகளில் இதைப்போன்ற அபத்தம் ஏதுமில்லை. அதுவும் செய்யக்கூடாத குற்றத்திற்கு. ஒரு ஆசிரியர் குடித்துவிட்டு வகுப்புக்கு வருகிறார் என்றால் அந்தப் பணிக்கு அவர் லாயக்கில்லை என்று அர்த்தம்.மேற்கொண்டு விவாதம் இங்கே தேவையில்லை. இதேபோன்றுதான் குடித்துவிட்டு அரசுப் பணிக்கு வரும் எவரும், குறிப்பாக காவலர்கள், டாக்டர்கள் போன்ற சென்சிட்டிவ் வேலைகளில் உள்ளவர்கள்.

      இதுமாதிரி பேர்வழிகள் விஷயத்தில் எடுக்கவேண்டிய ஒரே ஆக்‌ஷன் - dismissal. வேலையிலிருந்து உடனே தூக்கிஎறியப்படவேண்டும். மேல்முறையீடும் அனுமதிக்கப்படக்கூடாது. இப்படி ரூல்ஸ்களைத் திருத்தி ஆக்‌ஷன் எடுங்கள். அரசுப்பணி, ஆசிரியர் பணி என எல்லாம் சீராகும் விரைவில்.

      நீக்கு
    3. நீங்க வேறே ஏகாந்தன்! நான் எங்கே பணி இடை நீக்கம் பண்ணினேன்? இஃகி,இஃகி,இஃகி, அரசு தான் பண்ணியதாகத் தொலைக்காட்சிச் செய்திகளில் காட்டிட்டு இருந்தாங்க. இந்த அழகில் அவர் பெயர் அறிவழகன் எனவும் ஃபோட்டோ எடுத்துப் பத்திரிகைகளில் போட வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

      நீக்கு
    4. Youtube சேனல்ல போடுங்க, நல்லாருக்கும், லைக்குல்லாம் விழும் எனச் சொல்லவில்லையா !

      நீக்கு
  7. சாலடில் dry fruits, Nuts, வேக வைத்த கடலை சேர்த்தால் நன்றாகப் பசி தாங்கும். முயற்சி செய்து பாருங்க பானுக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கீதா நீங்கள் கூடவா? என் கேள்வியை சரியாக படியுங்கள்.// சாலட் போன்றவை சுவையாக இருந்தாலும், பசி அடங்கினாலும் வயிறு நிறைந்த உணர்வு வர மாட்டேனன்கிறதே..?// பசியெல்லாம் தாங்குகிறது, வயிறு ரொம்பிய உணர்வு கிடைப்பதில்லை. லைட்டாக இருக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டுமோ என்னவோ? ஆனால் சாப்பிட்டால் கம்மென்றிருக்குமே? அந்த ஃபீலிங்க், மிஸ்ஸிங்க்

      நீக்கு
    2. ஓ பானுக்கா நான் சொன்னது அந்த வயிறு நிறைந்த ஃபீலிங்க்...அது வந்தால் அடுத்த பசி வரவே நேரமாகுமே!!! அதுதான்....அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்...வயிறு நிறைந்த ஃபீலிங்க் வரும் அதுவும் நட்ஸ், வேர்க்கடலை சேர்த்தால்...

      கீதா

      நீக்கு
    3. லைட்டாக இருந்தால் டக்கென்று அடுத்து என்ன சாப்பிடலாம் என்று தோன்றும்தானே....அதுதான் இவை சேர்த்தால் பசியோ அடுத்து என்ன சாப்பிடலாம் ன்ற ஃபீலிங்க் வராது

      கீதா

      நீக்கு
    4. நான் என்ன சாப்பிட்டாலும்/எது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வு வராமலே பார்த்துப்பேன். கொஞ்சம் சாதம் அதிகம்னு தோணினாலும் அடுத்து வரும் மோர் சாதம் சாப்பிடாமல் எழுந்துடுவேன். வயிறு கனமாக இருக்கக் கூடாது.

      நீக்கு
    5. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. மனதிற்குப்பிடித்த விஷயங்கள் ஒன்றா ரெண்டா ஆசைகள்.....விஷயங்கள்!!!! நிறைய....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஒரு பத்தை எடுத்து விடுங்களேன்.

      நீக்கு
    2. என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் படிப்பது தான். ஆனால் இப்போது புதிய புத்தகங்கள் கிடைக்காததாலும், படித்த புத்தகங்களை மீண்டும் எடுத்துப் படிப்பதில் பழைய ஆர்வம் இல்லை என்பதாலும் புத்தகம் படிப்பது அநேகமாகக் குறைந்தே விட்டது.

      நீக்கு
  9. பதிவு சிறப்பு..
    அன்பின் கேஜிஜி அவர்களும் அப்பாதுரை ஐயா அவர்களும் அடித்து விளையாடி இருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  10. (அடித்துக் கொண்டு விளையாடினர் என்றோ - விளையாடி அடித்துக் கொண்டனர் என்றோ)

    மூல பாடத்தை மாற்றிப் படிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கம்பெனியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீநிவாஸன் கதை - ஹாஹாஹாஹா கௌ அண்ணா நீங்க ரொம ப்ரைட்டா இருந்தீங்களோ அப்ப!!!!!? நல்லா பல்பு வாங்கியிருக்கீங்க ஓசில!!!! அதான் கேட்டேன்!

    நல்லா பாரதிராஜா வைக்கும் கனவு சீன் போல பறங்க....அடுத்த வாரம் ஸ்ரீநிவாசனின் மாமா - சிnங்கப்பூர் மாமா வந்திருப்பார்னு அவங்க வீட்டுக்கு ப் போறப்ப...உங்க நண்பன் வாசல்ல பெரிய அல்வா பெட்டியோடு நின்னு வரவேற்பு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இம்மாதிரி எல்லாம் பிறர் சொல்லுவதை வாயைப் பிளந்து கொண்டு கேட்டு நம்பி இருக்கேன். அப்புறமா அசடு வழிஞ்சாலும் மறுபடியும் ஏமாறத் தயார் ஆயிடுவேன்.

      நீக்கு
    2. :)) ஏமாறுவதில் ஒரு சுகம் இருக்கு! ஏமாறியவர்களுக்கு மட்டும்தான் அது தெரியும்! (ஏமாற்றுபவர்களுக்கும் அப்படி ஒரு சுகம் இருக்கலாம்!)

      நீக்கு
  12. அப்பாதுரையின் கட்டுரையை வேறு தளத்தில் சுஜாதா எழுதியது என்று போட்டால் நம்பி விடுவார்கள். சிவாஜியையும், சுஜாதாவையும் யார் என்ன திட்டினாலும், அவர்களின் பாதிப்பு மற்ற படைப்பாளிகளிடம் இருப்பதை தவிர்க்க முடியாது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே, பானுமதி, நீங்க தப்பாப் புரிஞ்சுட்டு இருக்கீங்களே! நம்ம ஜிவாஜியை நான் திட்டியதே இல்லை. மிகை நடிப்புனு மட்டும் தான் சொல்லுவேன். சில நேரங்களில் சிப்பு மூட்டும்படி இருக்கும் நடிப்பு என்பேன். அம்புடுதேன். :))))))

      நீக்கு
    2. நீங்கள் நடித்தால், சிவாஜியின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது, எங்கேயோ அவர் எட்டிப் பார்ப்பார் என்கிறேன்.

      நீக்கு
  13. அப்பாதுரைஜி சொல்லிருப்பது போல எனக்கும் மஸ்க் பற்றி நிறைய வியப்பு கூடவே ஒரு admiration என்றும் சொல்வேன். அசாத்தியமான சிந்தனைகள். அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடறாப்ல எனக்குனு வடிவேலு ஸ்டைல்!!!!! அவரது சிந்தனைகள் சாத்தியமாகும் வாய்ப்பு உண்டு ஆனால் எப்போதுமே ஒருவர் ஒரு நல்ல சிந்தனையை முயற்சிகளை அதுவும் அறிவியல் சம்பந்தமான ஒன்றை முன்னிறுத்தினால் அதை உலகம் எதிர்க்கும்.

    பை த பை, நான் செவ்வாய்ல குடியிருப்புக்கு புக் பண்ண யோசனை!!!! ஆனா பாங்க்ல லோன் கொடுக்கமாட்டேய்ங்கிறாங்களே!!!! முகவரி வேணுமாம்....மஸ்ஸ்க் கிட்டதான் கேக்கணும் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவ்வாயில் குடியேற ஆசை என்று புதனில் சொல்லி இருக்கீங்களே!

      நீக்கு
    2. எங்கே பார்த்தாலும் எலன் மஸ்க் பத்தியே பேச்சு.

      நீக்கு
    3. எங்கும் எலான் மஸ்க் என்பதே பேச்சு;
      அவர் எல்லாவற்றிலும் கிங் என்பது உறுதியாச்சு!

      நீக்கு
  14. BA (economics) படித்த என் நண்பர்களை திடீரென்று நிறைய மதிக்கிறேன். //

    ஹாஹாஹா அப்ப நானும் அதில்!!!!

    //Economics படிக்கப் போகும் இந்திய இளைய சமுதாயத்திலிருந்து பதினைந்து மஸ்க் வெளிவர பிரார்த்தனை செய்கிறேன். //

    மஸ்க் மாதிரி நானும் நிறைய சிந்தித்து பல புதுசு புதுசா என்னால் முடிந்தவை என்று சிந்தித்தும் கூட ஹூம் ஒண்ணு கூட செயல்படுத்த முடியலை....இன்றைய கேள்வி மனசுக்குப் பிடித்த....அதுக்கான பதிலில்.அதில் இதுவும் ஒன்று..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்

      நீக்கு
    2. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
      எலான் மஸ்க் என்பவரெனின்..

      நீக்கு
  15. அனுமார் வால் கூட மனதிற்கு பிடித்தது...!

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளுக்கு பதில்கள் நன்றாக இருக்கிறது.
    KGG சார் பக்கம் பள்ளி பருவத்தில் குழந்தனம் எதிர்ப்பார்ப்பை அழகாய் சொல்லி இருக்கிறார்.

    //சில நாட்களுக்கு கற்பனைக் கனவுகளில் வெள்ளை சட்டை, வெள்ளை டிராயர் அணிந்து வெண்மேகக் கூட்டங்களில் மிதந்து சஞ்சாரம் செய்தேன் ! //
    நல்ல கற்பனை கனவு.

    அப்பாதுரை சார் பக்கம் மூலம் மஸ்க் அவர்களை தெரிந்து கொண்டேன்.


    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரையும் கேஜிஜியும் கலக்கறாங்க. அது சரி, என்னோட கேள்விகளில் (கேள்வி கேட்டிருந்தேன் என்பதே இப்போத் தான் தெரிஞ்சுண்டேன். இஃகி,இஃகி,இஃகி) முதல் இரண்டு கேள்விகளுக்கு மற்ற ஆசிரியர்களுக்குப் பதில் தெரியலையா என்ன? கேஜிஜி மட்டுமே பதில் சொல்லி இருக்கார்.
    இப்போது உள்ள அரசு என்று முடிக்கிறீர்கள். உண்மை தானே சொல்கிறேன். காலங்கார்த்தாலேயேகுடிக்க ஏற்பாடு இதுவரையிலும் எந்த அரசாவது செய்திருக்கோ? இவங்க தான் அதுக்கும் முன்னுதாரணம். இனி வீட்டுக்கு வீடு வந்து கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. பால்காரர் பால் கொண்டு வரமாதிரி. இன்றைய தினமலரில் இதான் முக்கியக் கார்ட்டூன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்கள் ஆளவந்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் !

      நீக்கு
  19. Geetha Sambasivam "உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    இரண்டு முறைகள் பணி இடை நீக்கம் செய்தும் போதையில் மிதக்கும் ஆசிரியர்களை என்ன செய்வது? இப்போது அதைப் பற்றித் தான் அமைச்சர்கள் கூடப் பேசி எப்படி வருமானத்தை அதிகரிப்பது எனக் கவலைப் படுகின்றனர். மக்களைப் பற்றிய கவலை ஏதும் இல்லை. முக்கியமாய் மாணவர்களின் எதிர்காலம் பற்றி யாருமே நினைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  20. Geetha Sambasivam "உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    நான் என்ன சாப்பிட்டாலும்/எது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வு வராமலே பார்த்துப்பேன். கொஞ்சம் சாதம் அதிகம்னு தோணினாலும் அடுத்து வரும் மோர் சாதம் சாப்பிடாமல் எழுந்துடுவேன். வயிறு கனமாக இருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  21. Geetha Sambasivam "உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் படிப்பது தான். ஆனால் இப்போது புதிய புத்தகங்கள் கிடைக்காததாலும், படித்த புத்தகங்களை மீண்டும் எடுத்துப் படிப்பதில் பழைய ஆர்வம் இல்லை என்பதாலும் புத்தகம் படிப்பது அநேகமாகக் குறைந்தே விட்டது.

    பதிலளிநீக்கு
  22. Geetha Sambasivam "உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    நானும் இம்மாதிரி எல்லாம் பிறர் சொல்லுவதை வாயைப் பிளந்து கொண்டு கேட்டு நம்பி இருக்கேன். அப்புறமா அசடு வழிஞ்சாலும் மறுபடியும் ஏமாறத் தயார் ஆயிடுவேன்.

    பதிலளிநீக்கு
  23. Geetha Sambasivam "உங்கள் மனதிற்குப் பிடித்த, நீங்கள் செய்ய விரும்பும் பத்து விஷயங்கள் எவையெவை?” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    சேச்சே, பானுமதி, நீங்க தப்பாப் புரிஞ்சுட்டு இருக்கீங்களே! நம்ம ஜிவாஜியை நான் திட்டியதே இல்லை. மிகை நடிப்புனு மட்டும் தான் சொல்லுவேன். சில நேரங்களில் சிப்பு மூட்டும்படி இருக்கும் நடிப்பு என்பேன். அம்புடுதேன். :))))))

    பதிலளிநீக்கு
  24. பிடித்ததில் பதிவு எழுதுவதைத்தவிர வேறொன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  25. BA (economics) படித்த என் நண்பர்களை திடீரென்று நிறைய மதிக்கிறேன். Economics படிக்கப் போகும் இந்திய இளைய சமுதாயத்திலிருந்து பதினைந்து மஸ்க் வெளிவர பிரார்த்தனை செய்கிறேன். //

    இருந்தாலும், இப்படி அநியாயத்துக்கும் வாசித்திருக்கக்கூடாது சுஜாதாவை நீங்கள்!

    பதிலளிநீக்கு
  26. //பொதுவா வாலிப மற்றும் தெம்பு இருக்கும் வயதில் புறச் சின்னங்களை அணியாமல், வயது ஆகும்போது புறச் சின்னங்களோடு பக்தியும் அந்த மார்கத்தை நாடும் ஆர்வமும் வருவதன் காரணம் என்ன?// எனக்குத் தெரிந்த பலரும் இள வயதிலேயே விபூதி தரித்துக் கொண்டோ, ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டோ பள்ளி, அலுவலகம் வருவதைப் பார்த்திருக்கேன். நான் வேலை பார்த்த மின் வாரிய அலுவலகத்திலும் ஓரிரு ஸ்ரீவைணவர்களும், மற்றும் சிலரும் ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொண்டும், விபூதி பட்டை/பட்டையாய் இட்டுக் கொண்டும் வந்திருக்கின்றனர். இத்தனைக்கும் ஸ்ரீ வைணவர் தவிர்த்து மற்றவர் பிராமணர் அல்லாதோர். அது ஏனோ தெரியலை. ஆண் ஊழியர்களில் வைணவ பிராமணர்கள் தவிர்த்து மற்றவர் அதிகம் மின் வாரியத்தில் இல்லை. அதாவது நான் வேலை பார்த்த கால கட்டத்தில் என்னோட அலுவலகத்தில்னு வைச்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  27. இப்போதைய இளவயதினரில் எனக்குத் தெரிந்து செங்கோட்டை ஸ்ரீராம் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளாமல் நான் அவரைப் பார்த்தது இல்லை. சுமார் பத்து வருஷங்களுக்கும் மேலாக அவரைப் பார்த்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. நம்ம ரங்க்ஸும் நெற்றியில் வட்டச் சந்தனப் பொட்டு விபூதிப் பட்டையின் மேல் வைத்துக் கொண்டு குங்குமமும் வைத்துக் கொண்டே அலுவலகம் சென்றிருக்கார். அவங்க சோழ தேசத்து வடமன் என்பதால் சந்தனம் வட்டம். என் அப்பா வீடுகளில் எல்லாம் சந்தனக்கீற்று நாமம் போல நெற்றி, கைகளில் இருக்கும். என் பெரியப்பா சந்தன நிறம். அவருக்கும் இட்டுக் கொண்டிருக்கும் சந்தனத்திற்கும் வித்தியாசமே தெரியாது. அதில் உள்ள குங்குமத்தை வைத்துக் கண்டுபிடிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கணவர் ஓமானில் அரசுப் பணியில் இருந்தாலும், அலுவலகத்திற்கு விபூதி தரித்துக் கொண்டுதான் செல்வார். இதைப் பற்றி சிலர் ஆச்சர்யமாக கேட்பார்கள். நானும், பொட்டிற்கு மேல் விபூதி இட்டுக் கொண்டுதான் செல்வேன். ஒரு முறை, ஒரு ஓமானியப் பெண், "ஐ நோ, திஸ் சிந்தூர், வாட் இஸ் தட் வொயிட் திங்க் ஆன் யுவர் ஃபோர் ஹெட்" கேட்டுக் கொண்டே, பரபரவென்று விபூதியை அழித்து விட்டாள். "த்ட்ஸ் ஹோலி ஆஷ்" என்று நான் கூறியதும்,"ஐ ஆம் சாரி" என்றாள்

      நீக்கு
    2. நான் தினமும் வெளியில் கிளம்பும்போதும்,  அலுவலகம் செல்லும்போதும் விபூதி தரித்தேசெல்கிறேன் என்பதை....

      நீக்கு
    3. நானும் காலையில் குளித்து வந்ததும் நீரில் குழைத்து விபூதி பட்டைகள் - நெற்றி, கைகள் மார்பு எங்கும்.

      நீக்கு
  29. நான் காங்கோவின் கின்ஷாசாவில் இந்திய அரசுப் பணியில் இருக்கையில், இந்திய சமூகத்தில் ஒருவர் பளிச்சென்று கண்ணில்பட்டார். பின்னர் வேறு சிலரோடு இவரும் நண்பரானார். ராமானுஜம் அவர் பெயர். அங்குள்ள இந்திய வம்சாவளிக் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நெற்றியில் சிவப்பு, வெள்ளையாக திருமண் அலங்கரிக்கும் எப்போதும். அவரது கம்பெனிக்குப் போனாலும், கோயிலில் பார்த்தாலும், இந்திய கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும், வேறு எங்குதான் சந்தித்தாலும் அவர் பளிச்சென்ற திருமணுடன் தூரத்திலிருந்தே பிரகாசமாவார். ‘பொது’வான ஆப்பிரிக்க வெளியில், இந்திய தனித்துவம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்தவரை, புறச்சின்னங்களுடன் வேலைக்கு வரும் வைணவர்கள் அதிகம். எங்கள் அலுவலகத்தில் பர்சேஸ் பிரிவில் வேலை பார்த்த வைணவர் ஒருவர், நெற்றிக்கு திருமண் இட்டுக்கொண்டு பஞ்சக்கச்சத்துடன்தான் அலுவலகம் வருவார். அலுவலர்கள் எல்லோருக்கும் சீருடை என்று ஆன பின்பும் அப்படி வந்துகொண்டிருந்தார். அவருடைய பிரிவின் நிர்வாக அதிகாரி (கிறித்துவர்), அவரை அழைத்து கடுமையாக எச்சரித்த பிறகு, அவர் உடையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். அலுவலகத்திற்கு வரும்வரை பஞ்சக்கச்சம் & சீருடை சட்டை - அலுவலகம் வந்தபின் பஞ்சக்கச்சம் அகற்றி சீருடை pants. திரும்ப அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது பஞ்சக்கச்சம் அணிவது என்று மாற்றிக்கொண்டார்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!