ஞாயிறு, 16 ஜூலை, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 05

 

வைரமுடி யாத்திரை – மைசூர் அரண்மனை – பகுதி 5

அரண்மனையிலேயே இன்னும் பார்க்கவேண்டிய பகுதிகள் பலவும் இருக்கின்றன. பிரம்மாண்டமான மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள் என ஏகப்பட்டவை இருக்கின்றன. தொடர்ந்து பார்ப்போம்.



மிகப் பெரும் பள பளா தூண்கள் மற்றும் பழைய மின்விசிறி






அலங்காரக் கதவு கொண்ட அறை. அதில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த கிருஷ்ணராஜ உடையாரின் சிலை. இவர்தான் இந்த அரண்மனையைத் தான் பதவி ஏற்றுக்கொண்ட 1884க்குப் பிறகு கட்டியவர். (உங்களுக்குத் தெரியுமா? மெழுகுச் சிலையில் என்னதான் முயற்சி எடுத்துக்கொண்டு பிரபலங்களின் உருவங்களை வடிவமைத்தாலும், ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை அந்தப் பிரபலங்களை முற்றிலுமாகப் பிரதிபலிப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. அதிலும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களின் உருவங்களில் சில பொம்மை ரேஞ்சுக்குத்தான் இருக்கும். அதே நேரத்தில் வெளிநாட்டு பிரபலங்களின் சிலைகள் அப்படியே இருப்பதாக நமக்குத் தோன்றும். மேடம் டுஸ்ஸாட் மெழுகு மியூசியங்களை நான் பார்த்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. அங்கு எடுத்த படங்களை இன்னொரு பதிவில் பகிர்கிறேன்)





இவ்வளவு தூண்கள் இருக்கிறதே… எதிரிகள் யாரேனும் தூணின் பின்னால் மறைந்து நின்று தாக்க வந்தால்? இப்படிப்பட்ட ஹாலில் நடப்பதே அச்சம் தரக்கூடியதாக எனக்குத் தோன்றியது.







உங்களில் எத்தனை பேருக்கு இத்தகைய அரண்மனையில் வசிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது? அரண்மனைகளின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால் எனக்கு அதன் அழகு பிரமிப்பாக இருக்கும். ஆனால் அங்கு வசிப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. (நீங்கள் ரா.கி.ரங்கராஜன் எழுதியா “நான் கிருஷ்ணதேவராயன்” என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா? இளவரசனை அரண்மனையின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இதற்கெனப் பணியில் இருக்கும் சேடிப்பெண்கள் முதுகில் தூக்கிச் செல்வார்களாம். அரண்மனை வளாகங்கள் அவ்வளவு பெரியனவாக இருக்குமாம். போருக்குச் செல்லவேண்டிய இளவரசனுக்கு நடப்பதற்கு முடியாதா என்று சிலரும், சேடிப்பெண்கள் வயது என்னவாக இருந்திருக்கும் என்று சிலரும் யோசிக்கிறீர்கள் அல்லவா?)

( தொடரும்) 

========


66 கருத்துகள்:

  1. அரண்மனையின் போட்டோக்கள் அழகாக இருக்கின்றன. அரண்மனையின் பிரம்மாண்டம், மற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளை 3D யில் அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். கமெரா என்ன, polaraiser எதுவும் உபயோகித்தீர்களா (3D எபெக்ட் கிடைக்க)? பாராட்டுக்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா 3D யில் எடுக்க சாதாரண கேமராவிலும் கூட ஓகே ஆனால் மிக துல்லியமாக, இப்படி haze இல்லாமல் துல்லியமா க்ளியரா வர polarizer filter ..இருந்தா நல்லா வரும்...இப்படி...படங்கள் நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கு க்ளியரா

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஜெயகுமார் சார். என் அலைபேசியில் எடுத்தவைகள்தாம். ஆனால் நான் நினைப்பது எனக்கு கேமரா கண்கள் (ஓரளவு அழகாகப் படம் பிடிக்கும் கோணம், எந்த ஆங்கிளில் நன்றாக இருக்கும் என்ற புரிதல்) இருக்கு என நினைக்கிறேன். வேறு தளத்தில் திறமைசாலிகளும் என் அலைபேசியைக் கொடுத்து எடுக்கச் சொல்லும்போது சொதப்புவதைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. அலைபேசியில் என்பது ஆச்சர்யம்தான்.  என்ன அலைபேசி? 

      நீக்கு
    4. ஆனால் நான் நினைப்பது எனக்கு கேமரா கண்கள் (ஓரளவு அழகாகப் படம் பிடிக்கும் கோணம், எந்த ஆங்கிளில் நன்றாக இருக்கும் என்ற புரிதல்) இருக்கு என நினைக்கிறேன். //

      டிட்டோ, நெல்லை. கோணம், எப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது முக்கியம்...

      சாதாரணக் கேமராவில் கூட படம் நன்றாக வரும் அப்படி எடுக்கும் போது. ஆனால் துல்லியமாக, தெளிவாக வர நல்ல ஃபில்டர் கேமராவில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

      கீதா

      நீக்கு
    5. //நல்ல ஃபில்டர் கேமராவில்// - காலைல 11 மணிக்கு ஃபில்டர் காபி நினைவு எதுக்கு இவங்களுக்கு வருது? கேமராவில் ஃபில்டர் கேமராவா?

      நீக்கு
    6. நெல்லை வைத்திருப்பது என்ன அலைபேசி என்று கேட்டிருந்தேன். அதற்கு பதிலை காணோம்!

      நீக்கு
  2. ஆஹா! நெல்லை! படங்கள் அட்டகாசம்!. ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க. கோணம்! அசாத்தியம். பளிச்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்ன அழகான மேல் விதானம், தூண்கள். நான் நேரிலும் பார்த்திருந்தாலும் இப்ப உங்க படங்கள் மூலமா பார்க்கறப்ப பழைய நினைவுகள்.

    இத்தனையும் பரமாரிக்க என்ன செலவு ஆகுமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளுக்கு டிக்கெட் 100 ரூ. ஏகப்பட்ட பார்வையாளர்கள். அரசும் கொஞ்சம் செலவழிக்கும், மைசூர், கர்நாடகாவின் பிம்பம் என்பதால்.

      நீக்கு
  4. // உங்களில் எத்தனை பேருக்கு இத்தகைய அரண்மனையில் வசிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது? //

    நேற்று ஒரு பிரம்மாண்ட கோவில் போன்ற மாளிகையைத் தாண்டிச் சென்றபோது டிரைவர் கூறினார்.."  இதுதான் கல்கி பகவான்னு ஒருத்தர் இருந்தாரே..   அவரும் அவர் மனைவியும் தங்கிய மாளிகை" 

    எம்மா........ ம் பெரிசு!  ஆ....டம்....பர....ம்.

    அம்மாடி..   

    பால்கனிக் கதவையே சாத்தினோமா இல்லையான்னு ஆயிரம் சந்தேகம் ​நமக்கெல்லாம் வரும்போது இந்த மாளிகையின் கடைக்கோடி கதவுகள் பற்றி கவலைப் பட்டிருப்பாரோ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகம் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது பலப் பல வருடங்களுக்கு முன்னாலேயே. நான்தான் கல்கி பகவான் என்று சொல்லி அவர் கிளம்பியது அசாத்திய தைரியத்தில்தான்.

      நீக்கு
    2. பஹ்ரைன் அரசர் படுக்கை அறைக்கு வெளியே கதவுப் பகுதியில் குறுக்காக அவரின் அந்தரங்க உதவியாளர் படுத்திருப்பார் என்று ஒருவர் சொன்னது நினைவுக்கு வருது.

      நீக்கு
  5. //எதிரிகள் யாரேனும் தூணின் பின்னால் மறைந்து நின்று தாக்க வந்தால்?//

    எத்தனை முன்கட்ட பாதுகாப்புகளைத்தாண்டி வரவேண்டும்?  இங்கும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரம்பத்தில் நடுவில் கடைசியில் என்று காவல் இருக்கும்.  சான்ஸ் ரொம்பக் கம்மி.  தமிழ்ப்பட கதாநாயகன் / வில்லன்களால் மட்டுமே அது முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஶ்ரீராம். இருந்தாலும் பணியாளர்களில் சிலர் துரோகிகளானால்?

      கோல்கொண்டா கோட்டையை ஆறு மாதங்களாகப் பிடிக்கக் கஷ்டப்பட்ட ஔரங்கசீப், கோட்டைத் தளபதிகளில் ஒருவன் ஒரு பக்கக் கதவுகளைத் திறந்துவிட, ஔரங்கசீப் வெற்றிபெற்றபின் முதலில் செய்த காரியம் அந்தத் துரோகியைக் கொன்றதுதான்.

      நீக்கு
  6. ஒவ்வொன்றையும் பார்த்து ரசிக்கிறேன், நெல்லை. அதாவது அரண்மனை அழகை உங்கள் புகைப்படங்களின் மூலம்.

    நம் மனதில் இப்படி எடுக்கும் கலைக்கண், கேமராக்கண் இருந்தால்தான் இப்படி எடுக்க முடியும். நான் எடுக்க நினைக்கும் கோணங்கள் விதங்கள். தூண்கள் இப்படி வரிசையாக இருப்பதை இப்படியான frame இல் எடுக்க விரும்புவேன்.

    பளபளப்பு எல்லாமே துல்லியமா தெரியுது. ஆட்கள் இல்லாத போது எடுத்ததை ரொம்ப பாராட்டுகிறேன். படங்கள் அத்தனையும் என் கேமராக் கண்களுக்கு விருந்து. பாராட்டுகள் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வையாளர்கள் நகர்ந்ததும் சட்டுபுட்டுனு படங்கள் எடுத்தேன். நன்றி கீதா ரங்கன்.

      நீக்கு
  7. மிகச்சிறப்பாக படங்கள் எடுத்து இருக்கிறீர்கள்.

    எனக்கு இந்த அரண்மனையில் வசிக்கும் ஆசையே கிடையாது. வீடற்ற பல ஏழைகளை இங்கு குடி வைத்தால் என்ன ? என்ற எண்ணங்கள் வருவது உண்டு.

    ஆனால் மறுநாளே இவைகள் அரண்மனையில் இருக்காது காரணம் இதன் அருமை, பெருமை அவர்களுக்கு புரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... அவரவர் அவர்களது மனநிலையிலிருந்து வெளியே வர முடியாது. இதுவே பரம்பரைப் பணக்காரனுக்கும் அத்ருஷ்டத்தால் பணக்காரனானவனுக்கும் உள்ள வித்தியாசம்.

      நீக்கு
    2. //அரண்மனையாக இருக்காது//
      என்று சொல்ல வந்தேன்.

      நீக்கு
    3. புரிந்தது. அரண்மனையின் அருமை தெரிந்தவர்கள்தாமே அதனை அரண்மனைபோல் வைத்துக்கொள்வர். மற்றவர்களுக்கு அது வெறும் வசிப்பிடம்.

      நீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்க்க பார்க்க பாவம் பொடிபட..// - எனக்கு அறுமுகனின் தலத்திற்குச் செல்ல ஆவல் வந்துவிட்டது. கும்பகோணம் செல்லும்போது தரிசனம் வாய்க்கவேண்டும்.

      நீக்கு
  9. பதிவு அருமை...
    படங்களும் விவரங்களும் தளத்தின் பெருமையை உயர்த்துகின்றன..

    இதற்கு மேல் எனது சிற்றறிவிற்கு வேறொன்றும் தோன்றவில்லை..

    அன்பின் நெல்லை அவர்களது கலைக் கண் களும் கேமரா கண்களும் ஒருசேர வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. பதிவு சிறப்பு என்றால் பதிவிற்கான மறுமொழிகளும் சிறப்பு..

    மறுமொழிகளின் வார்த்தைகள் வேத வேதாந்த கருத்துகளுடன் பொலிகின்றன..

    உதாரணமாக -

    /// அவர்களது மன நிலையிலிருந்து.. ///

    அவர்களது மன நிலையில் இருந்து  அவர்களாலேயே வெளியே வர முடியாது..

    எப்படி - வரமுனி என்ற ரிஷி தமது அகந்தையினால் மகிஷாசுரன் ஆனாரோ அப்படி!..

    எல்லாம் ஈசனின் திருவிளையாடல்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " கல்லுக்கு நீதி சொல்ல முடியாது.. " - என்றொரு பழைய திரைப்பாடல் உண்டு..

      நீக்கு
    2. நீங்கள் எழுதிய பிறகுதான், இந்தப் பாடலின் வரிகளை இணையத்தில் பார்த்தேன். இந்தக் கண்ணதாசனுக்கு இவ்வளவு தத்துவ அறிவும் கவிதை எழுதும் திறமையும் எப்படி வந்திருக்கும்? அந்த சரஸ்வதி தேவியின் அருள் இல்லாமல்

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. /// கோட்டைத் தளபதிகளில் ஒருவன் ஒரு பக்கக் கதவுகளைத் திறந்துவிட, ஔரங்கசீப் வெற்றி பெற்றான்.. கோட்டையைப் பிடித்த ஔரங்கசீப்
    முதலில் செய்த காரியம் அந்தத் துரோகியை வெட்டித் தள்ளியது தான்.///

    ஆகா!!..


    ஔரங்கசீப்பும் நல்லது செய்திருக்கின்றன்..

    துரோகங்கள் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை..

    எந்த நாட்டிலும் இப்படித்தான் நடக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரோகங்கள் வெற்றிபெறும் ஆனால் துரோகிகள் எப்போதுமே வெற்றிபெற மாட்டார்கள். தளபதிகள் என்பவர்கள் முழுமையான நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும். கோல்கொண்டா கோட்டையில் நீருக்கு நல்ல வசதி இருந்தது. (ஔரங்கசீப், தில்லியை முற்றுகையிட்டபோது, யமுனை ஆற்றிலிருந்து நீர் நகருக்குள் செல்லும் வழியை எல்லாம் அடைத்துவிட்டான். அதனால் ஷாஜஹான் தண்ணீர், பாத்ரூம் போன்றவற்றிர்குத் தவித்துப்போய் தோல்வி அடைந்தான். ஷாஜஹான் யாருன்னு கேட்கப்படாது. அவரு ஔரங்கசீப்பின் வாப்பா)

      நீக்கு
    2. போப்பா..

      இவனுங்களும் இவனுங்க ராசதந்திரமும்!..

      நீக்கு
  13. நெல்லை சத்தியமா இம்மாம் பெரிய வீடெல்லாம் ஸாரி அரண்மனை வாழ்க்கை எல்லாம் வேண்டாவே வேண்டாம். நெவர். சுதந்திரம் இருக்காது. வீட்டைக் காக்கவே நேரமும் பணமும் போய்டும். இங்க வசிப்பவங்ககிட்ட கண்டிப்பா ஒரு க்ளோஸ்னெஸ் இருக்காது...தனிமையே பலரிடமும் இருக்கும் நிம்மதி இருக்குமா என்றால் இருக்காது யார் எப்ப வந்து எதை தூக்கிட்டுப் போவாங்க? அந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.

    எந்த இடத்தில் இருந்தாலும் இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்...Simple வாழ்க்கியே சிறந்தது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன், பசங்க அவங்க வாழ்க்கைப்பாதைக்குச் சென்றபிறகு, பெற்றோர் மாத்திரம் தனியா இருப்பதற்கு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் போதாதோ?

      நீக்கு
    2. போதாது. அவர்கள் எப்போதாவது வரும்போது தங்க ஒரு எக்ஸ்ட்ரா ரூம் தேவை.
      Jayakumar

      நீக்கு
    3. ஆமாம் உண்மைதான். ஒருவேளை வெளிநாட்டில் செட்டிலானவங்களாக இருந்தால், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வருவதற்காக ஒரு எக்ஸ்ட்ரா ரூமை அடைத்து வைக்கவேண்டுமா?

      நீக்கு
  14. /// அரண் மனையின் அருமை தெரிந்தவர்கள் தாம் அதனை அரண்மனை போல் வைத்துக் கொள்வர். மற்றவர்களுக்கு அது வெறும் வசிப்பிடம்.. ///

    காண்டீபம் அர்ச்சுனன் கையில் இருக்கும் போது தான் கணை மாரி பொழியும் என்பார் எங்கள் தமிழ் ஆசிரியர்..

    கத்தரிக்காய் ராஜா கதை தெரியுமா உங்களுக்கு!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காண்டீபம் வேலை செய்ததும் கிருஷ்ணன் பூமியில் இருந்தவரைதான். அதன் பின்னர் அர்ஜுனனால் கூட அதை நகர்த்த முடியலை.

      நீக்கு
    2. மஹாபாரதப் போர் முடியும் வரைதான் அர்ஜுனனுக்கு அவ்வளவு சக்தி இருந்தது. போர் முடிந்ததும் அவன் சாதாரணனனாகிவிட்டான். நம்மால் ஏதேனும் செயல் ஆகவேண்டும் என்று இறைசக்தி நினைத்தால் அதற்கான சக்தியை ஒருவனுக்குக் கொடுக்கிறது. அந்தச் செயல் முடிந்ததும் சக்தி போய்விடுகிறது

      நீக்கு
  15. காண்டீபனின் கையில் இருக்கும் போது தான் காண்டீபத்தில் இருந்து கணைகள் பாயும்..

    இடம் மாறினால் வெறும் காற்று தான்..

    " யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும்
    தெரியலை!.. "

    கவியரசரின் பாடல் வரிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை!..// - உண்மைதான். செத்த பிறகு அருமை தெரிந்து வருடா வருடம் நினைவுநாளை காமராஜர் அவர்களுக்குச் செய்கிறார்கள். இருந்தபோது அவரது அருமை தெரியாமலிருந்துவிட்டார்கள்.

      நீக்கு
  16. இதனை இதனால் இவன் முடிக்கும் -

    என்பது ஐயன் வள்ளுவர் திருவாக்கு..

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. அரண்மனை படங்கள் எல்லாம் மிக அருமை.

    பிரம்மாண்டமான மண்டபங்கள், தூண்கள், படம் மிக துல்லியமாக எடுக்கப்பட்ட கோணங்கள் மிக நேர்த்தி. நன்றாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த கிருஷ்ணராஜ உடையாரின் சிலை மிக அழகாய் இருக்கிறது, நன்றாக செய்து இருக்கிறார்கள்.
    அவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்தவர்கள் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாய் போய் வந்து இருப்பார்களா என்பதே சந்தேகம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.... ஆண்கள் எப்படி அந்தப்புரத்திற்குச் சென்றிருக்க முடியும்? வேலைக்காரர்களின் குவாட்டர்ஸ் சுமாராக இருந்தது.

      நீக்கு
  19. அரண்மனை படங்கள் அனைத்தும் மிகவும அழகாக இருக்கின்றன.

    உங்கள் படங்கள் மூலம் மீண்டும் அரண்மனையை சுற்றி வந்த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  20. அரண்மனைப் படங்கள் அனைத்துமே அதன் பிரம்மாண்டத்தைக் காட்டுகின்றன. நாங்க இரு முறை போனோம் மைசூர் அரண்மனைக்கு. முதல் முறை குழந்தைகளும் வந்திருந்தனர். அவங்கல்லாம் சின்னவங்களாய் இருந்தப்போவே போனோம். பின்னர் பல வருடங்கள் கழித்துச் சென்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரண்மனையும் சூப்பர், அதன் நான்கு மூலையில் இருக்கும் கோவில்களும் சூப்பர். நன்றி கீதா சாம்பசிவம் மேடம்

      நீக்கு
  21. எங்க அப்பா 2,3 முறைகள் இங்கே தசரா காண வந்திருக்கார். அப்போல்லாம், மைசூர், ஊட்டி, கொடைக்கானல் என்றாலே "ஆகா" நமக்கெல்லாம் பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்குமானு நினைச்சுப்பேன். ஊட்டியில் தங்கிக் குடித்தனமே செய்யும்படி ஆயிற்று. மைசூரிலும் 2,3 முறை தங்கி இருந்தோம். கொடைக்கானல் 2,3 முறை போனோம். கொடைக்கானல் அவ்வளவாய் மனதைக் கவரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வயதில் சரித்திர எக்சாமில், இந்திய வரைபடத்தை வைத்துக்கொண்டு, இடங்கள் குறித்தது நினைவுக்கு வருகிறது. அந்த இடங்களுக்குப் பிற்காலத்தில் போகும் வாய்ப்பு வரும் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை கீதா சாம்பசிவம் மேடம்.

      நீக்கு
  22. அரண்மனையை அப்படியே அள்ளி இங்கே கொட்டிவிட்டீர்கள். ஜொலிக்கிறது!

    பதிலளிநீக்கு
  23. அரண்மனை எல்லோருக்குமான ப்ரசாதம் அல்ல! உள்ளே வந்து இருங்கப்பா என்று சமூகநீதி காட்டினால்.. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? - என்றாகிவிடும். தனியாகப் பார்த்தால், சிம்மாசனமும் அப்படித்தான்.

    மனிதரில் தகுதிபடைத்தவர், யோக்யமானவர் என்போர்- வெகுசிலரே. பொய்யர்களும், ‘ந லாயக்’குகளும்தான் நிறைய.. நிறைய..

    மேலே கருத்தூட்டங்களை வாசிக்கையில், மேல்படர்ந்த சிந்தனைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.... சமூகத்தை வழிநடத்தும், அரசருக்கு ஆலோசனை சொல்லும் யோக்கியதை படைத்தவர்கள் சிலர்தான் இருக்க முடியும். ஆனால் அதற்கு ஜாதி மதம் தகுதியல்ல என்று நான் நம்புகிறேன். ஆனால் தற்போது சருகுகள்தாம் காற்றினால் கோபுரத்தின் உயரே உட்கார்ந்துகொண்டு, 'நான்' என்று நினைக்குதுகள்.

      நீக்கு
  24. அப்போ அப்போ கமெண்டுகள் காணாமல் போகுது. கேஜிஜி சார் அவைகளைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. ..யோக்கியதை படைத்தவர்கள் சிலர்தான் இருக்க முடியும். ஆனால் அதற்கு ஜாதி மதம் தகுதியல்ல என்று ..//

    தர்மநோக்கோடு தகுதி, யோக்யதை என மட்டும் பார்க்கையில் ஜாதி, மத பேதங்கள் தலைநீட்டாது. நீட்டினாலும் அவை உடனே அலட்சியப்படுத்தப்படவேண்டியவை. இந்த நாட்டில் ஒரு உன்னத காலகட்டத்தில் தோன்றிய எத்தனையோ ரிஷிகள், யோகிகள், சாதுக்கள் எல்லாம் எப்படி வாழ்ந்தார்கள், என்ன சாதித்தார்கள், பின்வருவோருக்கென என்னவெல்லாம் அருளியிருக்கிறார்கள் என்றுதானே இந்த தேசம் காலங்காலமாக, வழிவழியாக சிந்தித்துவருகிறது. அவர்களது ஆதியை, மூலத்தை (origin) யார் பார்த்தார்கள், கேட்டார்கள், முடிவைத்தான் யார் அறிந்தார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏகாந்தன் சார். நதிமூலம் ரிஷிமூலம் யார் பார்த்தார்கள்?

      நீக்கு
  26. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    மைசூர் அரண்மனை படங்கள் அனைத்தும் படு துல்லியமாக எடுத்திருக்கிறீர்கள். யாருமில்லாத நேரத்தில் புகைப்படங்களை எடுக்கும் மிகுந்த பொறுமையும், கலைக்கண்ணோடு எடுக்கும் சாமர்த்தியமும் இருந்தாலொழிய இந்த மாதிரி எடுப்பது சிரமம். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நாங்கள் எப்போதோ இங்கு வந்த புதிதில் பார்த்தது. அவ்வளவாக நினைவில் இல்லை.. இப்போது தங்கள் பகிர்வை பார்த்ததும் லேசாக நினைவு வருகிறது. அந்த மல்யுத்த போட்டிகள் நடக்குமிடம், விளையாட்டரங்கம் என்று பார்த்தது நினைவுக்கு வருகிறது. இப்போது மைசூர் வரை சென்றும் இந்த இடத்திற்கு போகவில்லை. இன்னுமொரு முறை கிடைப்பது எப்போதோ? இன்னமும் தங்கள் பதிவை தொடர்கிறேன். இந்த பதிவுக்கு தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!