சனி, 1 ஜூலை, 2023

வார்த்தையைக் காப்பாற்றிய தலைமை ஆசிரியை மற்றும் நான் படிச்ச கதை

 

=============================================================================================================


=================================================================================================================


====================================================================================================================


==============================================================================================

 

நான் படிச்ச கதைகள் (JKC)

ஏட்டில் இல்லாத மஹாபாரதக் கதைகள்.

தந்தையின் தவம். கோவேந்தன்.

8


பாரதம் ஐம்பத்தாறு நாடுகளாக பிரிந்திருந்தது. அவற்றில் ஒன்று சிந்து. அந்நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் செயத்ரதன். அவன் வளர வளர தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்கு துன்பம் இழைப்பதைப் பெருமகிழ்ச்சியாக கருதினான். யாராவது அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால் அவர்களைத் தண்டிப்பான்.

சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்க மாட்டான்.

திருமணம் செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் குறையலாம் என்று எண்ணிய தந்தை அவனுக்கு துரியோதனன் தங்கை துச்சலையைத் திருமணம் செய்து வைத்தான். தந்தையின் எதிர்பார்ப்பு வீணானது. செயத்ரதன் கொடுமை எல்லை மீறியது.

இத்தகைய கொடியவனுக்கு கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகவும் கூடுமே. காக்கவும் வேண்டும். அதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தான்.

தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று தம் ஒரே மகனைக் காப்போம் என்று எண்ணினான். காட்டின் நடுவே சியமந்தகம் என்றொரு தடாகம் இருந்தது. அதன் கரையில் மரங்கள் வானுற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடியாத சோலைகளாக அவை இருந்தன.

தவம் செய்ய ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான். என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இட்டால் இட்டவன் தலை நொறுங்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான். வரமும் பெற்று விட்டான். இனி தவத்தை முடிக்கலாம் என்ற நிலை.

அப்போது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவை செயத்ரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான். இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அருச்சுனன் செயத்ரதனைக் கொன்றே தீருவேன் என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியுடன் மறுநாள் மாலை அருச்சுனன் செயத்ரதன் தலையைக் கொய்தான்.

(அபிமன்யுவைக் கொன்றது யார் என்பதில் பல பேதங்கள் உள்ளன. 6 மஹாரதர்கள் துரோணர், கர்ணன், கிருபர், கிரீடவர்மன், அஸ்வத்தாமா, மற்றும் சகுனி சூழ்ந்து அபிமன்யுவைக் கொன்றனர் என்றும் ஒரு பாட பேதம் உண்டு.)

கண்ணன் “அருச்சுனா அந்தத் தலையை நிலத்தில் விழ விடாதே மேலும் மேலும் அம்பெய்து சியமந்தகத் தடாகத்தருகில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் விழ வை." என்று ஏவினான்.

கண்ணன் கூறியபடியே அருச்சுனன் செய்தான். செயத்ரதன் தலை தவம் செய்து கொண்டிருந்தவனுடைய விரித்த கையில் விழுந்தது.


எதிர்பாராது விழுந்த தலையைக் கண்டு துணுக்குற்ற தந்தை தன் மகன் தலையை கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்தது. “என் மகன் தலையை நிலத்தில் இட்டால் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்”. என்பது தானே அவன் கேட்ட வரம். இப்போது நிலத்தில் இட்டது அவன்தானே. ஆகவே அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந்தான்.

திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.

தீயவர் யாராயினும் திருத்த முயலுதல் வேண்டும். திருந்த இயலாவிடின் தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும்.

9

கண்ணன்-கோபியர்-பலராமன் - கோவேந்தன்


கண்ணன் ஆயர்பாடியில் செய்த திருவிளையாடல்களை பலரும் அறிவர். பல காவியங்களிலும் அவை இடம் பெற்றுள்ளன.

காவியங்களில் இடம் பெறாமல் செவி வழிச் செய்தியாக ஒரு திருவிளையாடல் நெடுங்காலம் வழங்கி வந்துள்ளது. அதனை அக நானூறு என்ற சங்க நூல் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

வடாது வண்புனல் தொழுநை வார்புனல்
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மால்
என்பதே அகநானூறு கூறும் செய்தி.

ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக அவர் இட்டு வைத்த துகில் எல்லாம் எடுத்துக் கொண்டு கண்ணன் குருந்த மரத்து ஏறினாராக. அவ்வளவில் தம்பி மூத்த பிரான் பலராமன் வந்தாராக. அவர்க்கு ஒரு காலத்தே கூடி மறைவதற்கு மற்றொரு வழியின்மையால் ஏறி நின்ற குருந்த மரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதனுள்ளே அடங்கி (ஆய்ச்சியர்) மறைவாராக அவர் போமளவும் தானையாக உடுக்கத் தாழ்ந்தார்.

என்பது இப்பகுதிக்கு உரிய பழைய உரை.

கண்ணன் ஆய்ச்சியர் துகிலை எடுத்துக் குருந்த மரம் ஏறினான். அப்போது எதிர்பாராமல் பலராமர் அவ்வழியே வந்து விட்டார். அதனால் கண்ணன் தன் குறும்பு வெளிப்பட்டு விடக்கூடாதே என்று அஞ்சினார். துகில் மீண்டும் தந்து அணிந்து கொள்ளச் செய்ய நேரம் இல்லை. ஆதலால் தான் ஏறிய குருந்த மரத்தை நீரில் தாழும்படி காலால் மிதித்து வளைத்தான். மரக்கிளைகள் தாழ்ந்து நீராடிய பெண்களை மறைத்துக் கொண்டது.

பலராமர் சென்றபின் மரக்கிளைகளை நிமிர்த்தி துகில் தந்தான் என்பது இங்கு கூறப்படும் வரலாறு.

இவ்வரலாற்றை சிந்தாமணி நாமகள் கலம்பகம் 209ஆவது பாடலும் குறிப்பிடுகிறது.

இது தமிழ்நாட்டில் மட்டும் வழங்கி வந்த செய்தி.


10

கண்ணனைத்தாக்கிய அம்பு - கோவேந்தன்


இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

என்கிறார் திருவள்ளுவர்.

இது கண்ணன் கூறிய “துல்யப்பிரிய அப்ரியோ தீர" இனியவரிடத்தும் இனத்தாரிடத்தும் சமானமாக நடக்கும் தீரன். என்ற குறளின் எதிரொலியே எனலாம்.

இன்னா செய்தார்க்கும் இனிய செய்க என்று சொல்வது யார்க்கும் எளியது. ஆனால் சொல்லியவண்ணம் செய்தல் அரிதென்பது தமிழ் மறை.

கண்ணபிரான் முழு ஞானி. அவனிடம் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இயலுமா?

இக்கருத்துக்கு எடுத்துக் காட்டாக கண்ணபிரானின் இறுதி வரலாறு திகழ்கிறது.

தன் அவதாரச் செயல்கள் முழுவதும் முடிந்த பின்பு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் கண்ணபிரான். ஒரு அரசமரத்தின் நிழலில் ஒரு காலை மடித்து வைத்துக்கொண்டு அறிதுயில் கொண்டிருந்தான்.

அவன் திருவடியில் செவ்வண்ணம் கண்ட ஒரு வேடன் ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதாக எண்ணி விட்டான்.

அன்று அவன் வேட்டைக்குப் புறப்பட்டதிலிருந்து எந்தப் பிராணியும் தென்படவில்லை. எதிர்பாராமல் தென்பட்ட இந்தப் பிராணியை விட்டு விடலாகாது என்று கருதினான். உடனே கண்ணபிரானது திருவடித்தலத்தில் தன் அம்பை குறி வைத்து எய்து விட்டான். அந்த அம்பு தவறாமல் கண்ணனது உள்ளங்காலில் தைத்தது,

தான் எய்தது பிராணியை அல்ல கண்ணபிராணையே என்று உணர்ந்த வேடன் நடுங்கினான்.

“ஐயோ பாவம் செய்துவிட்டேன். உலகம் காக்க அவதாரம் செய்த அச்சுதனை அல்லவா எய்து விட்டேன். இனி நான் உயிரோடு இருப்பது தவறு” என்று தன் அம்பாலேயே தன் வயிற்றைக் கீறிக்கொள்ள முனைந்தான்.


இறைவன் “நில் வேடப்ப நில்" என்று அபயம் கொடுத்து அருகில் அழைத்து “நீ தெரிந்து இந்த தவறை செய்யவில்லை, அது மட்டுமல்ல, எனக்கு நன்மையே செய்தாய். எனது அவதார நோக்கம் நிறைவேறி விட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அடுத்து தன்னுடைய சோதிக்கு எழுந்தருளுவதே (பரம பதம் மீளுவதே) செய்யவேண்டுவது என்பதை நீ உன் செயலால் உணர்த்தி விட்டாய். நீ பாபம் என்று எண்ணுவது எனக்கு லாபமாக முடிந்தது." என்று ஆறுதல் கூறினான்.

பின்னர் அந்தரத்தில் இருந்து வந்த தெய்வ விமானத்தில் அவ்வேடனை உடனே ஏற்றி பரம பதத்திற்கு அனுப்பினான்.

படங்கள் உதவி இணையம்.

22 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இரண்டு மட்டுமே படிக்க முடிந்தது. மற்றவை பெரிதாக்கி படிக்க இயலவில்லை.

    தான் சொன்னபடி தன் பள்ளி மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியரை பாராட்டுவோம்.

    ஸ்பெல்லிங் போட்டியில் நிறைய பரிசுகள் பெற்ற இந்திய வம்சாவளி மாணவருக்கும் பாராட்டுக்கள். அவரது திறமைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு அனைத்தும் அருமையாக உள்ளது. முதல் கதையும் படித்துள்ளேன். கண்ணனின் லீலைகளை, அகநானூறு வழியாக கூறியதை தெரிந்து கொண்டேன்.

    கண்ணனின் இறுதி சம்பவம் படித்துள்ளேன். முற்பிறப்பில் செய்பவை இப்பிறப்பில் தொடரும் என்பதற்கு உதாரணமாக மற்றொரு கதையும் இது குறித்து படித்துள்ளேன். ராமவதாரத்தில், ராமர் வாலியை மறைந்து நின்று அம்பெய்தி மடிய வைத்ததின் காரணமாக அடுத்தப் பிறவியில் வேடனால் தன் அவதாரம் முடிவுற்றதாக கிருஷ்ணன் சொல்வதாக ஒரு கதை. எல்லாமே கிருஷ்ண லீலைகள்தானே.. சர்வம் கிருஷ்ணார்ப்பணம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. 🙏.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியையின் செயல் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியை மற்றும் போலீஸ் சுமதிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    வயல் விஷயம் டக்கென்று புரிபடவில்லை. நேரில் பார்த்தால்தான் இது எப்படி என்று புரியும் என்று நினைக்கிறேன். அதாவது எனக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் போட்டு விளக்கி இருக்கிறார்களே...  ஏதோ அது அவ் கார்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது போலும்!

      நீக்கு
  6. மஹாபாரதக் கதை-

    கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் என்ற ஒரு தப்பான அபிப்ராயம் இப்ப வரை தொடர்கிறது!!!!!

    கெட்டது நினைத்தால் பூமராங்க்!
    ஆனால் எப்போதும் எல்லாருக்கும் அப்படி நடப்பதில்லை.

    மற்றொன்று நான் பல கதைளில் இப்படி வேண்டுவது குறித்து வாசிக்கும் போது ஏதேனும் லூப்ஹோல் இருக்கும் அந்த லூப்ஹோல் தான் வேண்டியவருக்கு ஆப்பு வைக்கும். பாரு அவன் வேண்டியது கெட்டது ஆனா கடவுள் வரம்கொடுத்திட்டார்...நடக்குதுன்னு நினைக்கலாம் ஆனால் அந்த லூப்ஹோல் கணக்கு இருப்பதால்தான் வரம் கிடைக்கிறது. எல்லை மீறும் போது அதுதான் பூமராங்க ஆகிறது. அப்ப அதுவரை அவன் கொடுமைகள் செய்து கொண்டிருந்தானே என்றால்...ஒவ்வொன்றும் நடப்பதற்கு நேரம் உண்டு என்று சொல்லப்படும் .

    அறியாமல் செய்யும் தவறுக்கு மன்னிப்பு உண்டு ...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாபாரதக் கதைகளை எல்லாம் ரொம்ப அலசக் கூடாது. படித்தோம் விட்டோம் என்ற அளவில் செல்ல வேண்டும்.
      Jayakuma

      நீக்கு
    2. அது ஏட்டில் இல்லாத மஹாபாரதக் கதைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.  மஹாபாரதம் படிக்கப் படிக்க புதுபுதுச்சுவை கொடுக்கக் கூடியது.  ஒவ்வொரு பாத்திரத்தையும் அலசவே நமக்கு ஒரு ஜென்மம் போதாது என்று எனக்குத் தோன்றும்.  மஹாபாரதத்தை ஒட்டி யாராவது கதை எழுதி இருந்தால் அதை தப்பாது வாசித்து விடுவேன்.  எஸ்ரா புத்தகம் என்னால் வாசிக்கவே முடியவில்லை.  ஆ மாதவன் நன்றாய் இருந்தது.  எம் வி வி புத்தகம் கிடைக்கவில்லை.  எஸ் எல் பைரப்பா புத்தகமும் கிடைக்கவில்லை (விலைக்கு அல்ல)

      நீக்கு
  7. தற்போது தான் கவனித்தேன். ஸ்ரீராம்
    //வெள்ளி வீடியோ : என்ன லீலை கண்ணன் வேலை இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழிவிடு//
    என்று நேற்றே இன்று வந்த கண்ணன்-கோபியர் கதையை அறிவித்திருக்கிறார் என்று.
    கண்ணன் கிளையை தாழ்த்தி கோபியரை மறைத்தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பர் ஸார்..  இந்த தற்செயலை நானும் கவனிக்கவில்லை!

      நீக்கு
  8. செய்திகள் அருமை.
    பகிர்ந்த மகாபாரத கதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  9. பல வருடங்களுக்கு பிறகு இன்று இங்கே வந்துள்ளேன். இப்போது, அனைவருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!