ஞாயிறு, 30 ஜூலை, 2023

அமரர் மாருதி அவர்களுக்கு ஓர் அஞ்சலி:: எ பி ஆசிரியர்கள் + நெல்லைத்தமிழன்.

 DOB : 28-08-1938 :: DOD : 27-07-2023

மாருதி….

பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டையில். நிஜப்பெயர் ரங்கநாதராவ். அப்பா வெங்கோப ராவ் டீச்சராக இருந்தார். தாய்மொழி மராத்தி. 

பள்ளி நாட்களில் விஞ்ஞானப்பாடம் மிகப் பிடிக்கும். ஒரே காரணம், படம் வரையலாமே?

மாருதிக்கு ஓவிய ஆசிரியர் யாருமில்லை! 

ஏழாம்.. எட்டாம் வகுப்பு படித்தபோது, எங்கே  எந்தப் படம் பார்த்தாலும் பென்சிலால் சுவரில் வரைந்துவிடுவாராம். 

ஒரு முறை ரஷ்யப் பத்திரிகையின் அருமையான ஆர்ட் பேப்பரில் பொட்டலம் கட்டி வந்தது. அதில் இருந்த படங்கள் போட்டோவா அல்லது ஓவியமா என்று மிரள வைத்தன. வரைந்தால் இது போல் தத்ரூபமாய் வரைய வேண்டும், என்ற வைராக்யம் ஏற்பட்டது. 

இவருடைய ஹவுஸ் ஓனர் வந்தபோது சுவரில் இருந்த ஓவியங்களைப் பார்த்தார். திட்டப்போகிறார் என்று பயந்தால் .. 

“ரொம்ப அழகாய் இருக்கு. நீ பெரிய ஓவியனா வருவே. சுவரில் வரையறது பத்தி எனக்கொண்ணுமில்லை. ஆனால் பேப்பரில் வரைஞ்சு பழகு. இன்டர்வியூ போனால் உன் ஓவியங்களைக் எப்படிக் காட்டுவாய்? சுவரை எடுத்துக்கிட்டுப் போவாயா? தவிர உட்கார்ந்து வரைந்தால் அதன் கோணம் வேற.. அப்பறம் நின்னுக்கிட்டு வரைஞ்சால் மட்டுமே உன்னால் வரைய முடியும்னு ஆயிடும்” என்றாராம்.  

சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு ஓவியர் ராஜா வந்திருந்தபோது அவரிடம் விசாரித்திருக்கிறார். அவர், ‘படமெல்லாம் போட்டால் அங்கே பிழைக்க முடியாது. எழுத்துகள் வரையத் தெரிந்தால் சாப்பாட்டுக்காவது வழி கிடைக்கும்” என்றாராம். 

ஒரு வீராப்பில் தனியாகச் சென்னைக்கு வந்துவிட்டார். குமுதம் அலுவலகத்துக்குப் போய்ப் படங்களைக் காண்பித்து வாய்ப்புக் கேட்டிருக்கிறார். 

ஒரு காட்சியைக் கொடுத்துப் படம் வரையச் சொன்னார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று கணவர் ஏணியில் ஏறி வெள்ளையடிக்கும்போது ஏணி சரிந்து விழுகிறார். உள்ளேயிருந்த காப்பி கொண்டு வரும் மனைவி அதிர்ச்சியடைகிறாள். இக்காட்சியைக் கீழேயிருந்து கேமரா வைத்துப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அந்தக் கோணத்தில் வரைந்துவிட்டார். சுண்ணாம்பு சிதறுகிறது. மனைவியின் முகத்தில் அதிர்ச்சி. பின்னால் இருந்த காலண்டரில் ஞாயிறு என்று  கவனமாகப் போட்டதைக் குமுதத்தில் பாராட்டினார்களாம். 

இப்படித்தான் மகத்தான ஓவியர் நமக்குக் கிடைத்தார். 

படங்களில் ரங்கநாதன் என்றுதான் பெயர் போட நினைத்தாராம். ஆனால் இவர் பெயர்ப்பலகைகள் எழுதும் வேலை பார்த்துக்கொண்டிருந்த கம்பெனிக்காரர்கள் அதை கவனித்தால்  வேலை போய்விடும். பக்கத்தில் மாருதி ராவ் என்ற ஒரு டாக்டரின் போர்ட் கண்ணில் பட்டது.  அபூர்வமான, சுருக்கமான பெயராக இருக்கவே இதையே வைத்துக்கொண்டார். 

சுஜாதா குமுதத்தில் ‘நான் முதல் முதலாய் எஸ் ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியபோது ஸ்ரீரங்கத்தில் கடையில் புத்தகம் வாங்கிப் பார்த்தேன். என் கதையைப் பிரசுரித்திருந்தார்கள். என் அபிமான ஓவியர் மாருதி படம் போட்டிருந்தார்” என்று எழுதியிருந்தார்.

பாலகுமாரன் ‘கெட்டாலும் ஆண்மக்கள்’ கதை வந்தபிறகுதான் பிரபலமானார். அதற்கு மாருதிதான் படம் போட்டார். குமுதம் கதையாயிற்றே என்று, மிக அழகான பெண்ணை வரைந்தாராம். 

ஆனால் குமுதம் ரா. கி. ர,  கதையைக் கொடுத்து, கவனமாய்ப் படித்துவிட்டு மீண்டும் வரையச் சொல்லியிருக்கிறார். மூக்குத்தி  அணிந்த தெற்றுப்பல் பெண்ணை வரைந்தார் மாருதி. பாராட்டிப் பிரசுரித்தார்கள். 

பாலகுமாரன் விசாரித்துக்கொண்டு இவரைத் தேடி வந்துவிட்டார். 

‘‘எப்படிய்யா அவளை அவ்ளோ தத்ரூபமாய் வரைந்தாய்? இதே மூக்குத்தி.. இதே தெற்றுப்பல்லுடன் உண்மையில் இப்போதும் அவள் உயிரோடு இருக்கிறாள்!” என்று சிரித்தாராம். 

1987ல் குமுதத்தில் ராஜேஷ்குமார் எழுதிய முதல் தொடர்கதை 'ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை. அதற்கு எந்த ஓவியர் படம் வரைய வேண்டும் என்று எழுத்தாளரிடமே விருப்பம் கேட்டு மாருதியை வரையச் சொன்னது குமுதம்.

ஒரு சமயம் நடிகை பத்மினியின் ஓவியத்தை ஃபேஸ்புக்கில்  போட்டார் மாருதி. உடனே ஒரு போன் கால். “சார் என் பெயர் மகாலட்சுமி. நடிகை பத்மினியின் தங்கை ராகினியின் மகள்” என்றவர்,  அந்தப் படம் தனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கிப்போனதை விருதாக நினைத்தார் மாருதி. அவர் பெரிய தொகை தரத் தயாராய் இருந்தபோது இவர் அதை வாங்கவில்லை.

மாருதிக்கு 42 வது வயதில்தான் கல்யாணம் ஆனது. மனைவி அரசு ஊழியர். பெயர் விமலா. 

மனைவி இரண்டு வருடங்களுக்குமுன் நிமோனியாவால் காலமானார். கொரோனா காலம். உடலை வீட்டுக்குக் கொண்டு வரவில்லை. உறவினர்கள் வரமுடியவில்லை. 

மகள்கள் சுபாஷினி, சுகாசினி. பூனேயில் இருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் மாற்றி மாற்றி வசித்த மாருதி வியாழனன்று மேல் உலகத்தில் வசிக்கப்போய்விட்டார். ஹூம்…

( நன்றி : வேதா கோபாலன் - facebook போஸ்ட்) 

= = = = = = = =  = = = = = =      = = = = = = =

நான் வியந்த ஓவியர் – மாருதி – பகுதி 2 (நெல்லைத்தமிழன்) 

புதுக்கோட்டையில் பிறந்த ரங்கநாதன் அவர்கள், ஓவிய உலகிற்காகக் கொண்ட பெயர் மாருதி. அவர் தானாகவே ஓவியரான சுயம்பு என்று சொல்லாம். ஐம்பது வருடங்களுக்கு மேல் ஓவிய உலகில் இயங்கிக்கொண்டிருப்பவர் அவர்.  எல்லா தமிழ் பத்திரிகைகளிலும் அவரது ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன. வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில் நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

அனேகமாக எல்லா கலைத்துறையினரையும் போல,  மிக இளம் வயதிலேயே (7 வயது) படம் வரைய ஆரம்பித்திருக்கிறார். எல்லோரையும் போல அவருக்கு பெற்றோரின் ஆதரவு (படம் வரைய) கிடைக்கவில்லை. ஓவிய உலகில் தடம் பதிக்க வேண்டும் என்ற தீராத ஆசையின் விளைவாக 19 வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்  ரங்கநாதன்.

தன் மானசீக குருவாக அவர் நினைப்பது ஓவியர் மாதவன் அவர்களை.  அவருக்கு சீனியர்கள் கோபுலு, மணியம், சில்பி போன்றோர்.

அவருடைய சிறப்பு என்று நான் கருதுவது அவர் வரைந்திருக்கும் பெண்களின் முக ஓவியங்கள். கண்மணி, பெண்மை போன்ற பத்திரிகைகளுக்கு அட்டைப்பட முகத்தை 20+ ஆண்டுகளுக்கு மேலாக வரைந்திருக்கிறார்.  நீங்க மற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் பார்த்தால் (ஜெ…, மணியம் செல்வன், லதா…. போன்றோர்), பெரும்பாலும் அவர்கள் வரையும் முகம் ஒன்றுபோலவே இருக்கும், அல்லது அவற்றை பத்துப் பதினைந்து எண்ணிக்கைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் மாருதி அவர்கள் எவ்வளவு வித்தியாசமாக பெண்களின் முகங்களை வரைந்துள்ளார்.  யாராவது அவற்றை compile செய்தால் ஆயிரக்கணக்கான வித்தியாசமான முகங்களை அவர் வரைந்திருப்பதைக் காணலாம்.


அடுத்த பகுதி இறுதிப்பகுதியாக அமையும்   அது எப்போது என்று காத்திருந்து பாருங்கள்.

-- நெல்லைத்தமிழன். 

= = = = = = = = =  

70 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியக் கலைஞர்களுக்கு அவர்களின் படைப்புகள் யாவுமே அவர்களின் குழந்தைகள். இங்கே காணப்படும் பெண்கள் படங்கள் யாவும் மாருதியின் படைப்புகள்; அவருடைய பெண்கள். மாருதிக்கு அஞ்சலி செலுத்த அவர் படைத்த படங்களை வெளியிடுவதால் பாவமோ / புண்ணியமோ யாருக்கும் கிடைக்கப் போவதில்லை!

   நீக்கு
  2. sarcasm என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படியாக தான் இந்த பின்னூட்டத்தை எழுதினேன். இதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை. நீக்க வேண்டுமானால் நீக்கி விடுகிறேன்.
   அல்லது நீங்களே நீக்கி விடுங்கள்.
   Jayakumar

   நீக்கு
  3. படிக்கும்போதே அதை நகைச்சுவையாகதான் எடுத்துக் கொள்ள முடிந்தது.

   நீக்கு
  4. வாங்க ஜெயகுமார் சார். இன்று வைரமுடி யாத்திரையின் தொடர்ச்சி வந்திருக்கணும். நான் பிறகு வருவதாயிருந்த இந்த இரண்டாம் பகுதியை, ஓவியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று வெளியிட முடியுமா என,று கௌதமன் சாரைக் கேட்டுக்கொண்டேன். Reschedule என்பது தலைவலி என்று நினைத்தேன். கேஜிஜி சாருக்கு நன்றி.

   நான் கத்துக்குட்டி ஓவியன். ஓவியங்களை ரசிப்பவன் (அதன் அழகியலையும்தான்). மற்ற ஓவியர்கள் வரையும் ஓவியங்களைப் பார்த்தால், பெண் ஆண் முகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். போஸ் மற்றும் உடைகள்தான் கேரக்டருக்குத் தகுந்தபடி வேறுபடும். ஆனால் ஒரு பத்திரிகையில் (கண்மணி மற்றும் இன்னொரு பத்திரிகை?) எத்தனையோ வருடங்களாக முகப்புப் படமாக பெண் முகத்தை மாருதி அவர்கள் வரைந்திருக்கிறார். அது என்னை மிகவும் கவர்ந்ததால் நான்கு பகுதிகளாக ஓவியர் மாருதி ஓவியங்களைத் தொகுத்திருந்தேன். இரண்டாவது பகுதி வெளிவருவதற்குமுன் அவர் மறைந்தது துரதிருஷ்டம்தான்.

   வாழ்க்கையில் எல்லாமே ஓர் அங்கம்தானே. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் வீட்டில் ஒருவன்/ஒருத்தி கோயில் குளம் என்றே சுற்றிக்கொண்டு, பக்தியில் ஈடுபட்டு உலகியல் வாழ்க்கையில் ஆர்வம் காட்டாமலிருந்தால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

   இது புண்ணியம் இது பாவம் என்பது சுலபமாக அறுதியிடத் தக்கதல்ல. இதுபற்றி புதன் கேள்வி கேட்கணும் என நினைத்திருந்தேன்.

   நீக்கு
  5. எல்லாவித கருத்துகளுக்கும் இங்கு இடம் உண்டு. உங்கள் கருத்தை, நான் நீண்ட மறுமொழி எழுதும் வாய்ப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். நீங்கள் நகைச்சுவையாக எழுதியதுபோல் எனக்குத் தோன்றிற்று. சீரியசாக இருந்தாலும் என் கருத்தை எழுதியிருக்கிறேன்.

   நீக்கு
  6. மூன்று வாரங்களுக்கு முன் அதிகாலையில் வளாகத்தில் நடந்துகொண்டிருந்தபோது, பாதையில் வயதான புறா இருந்தது. நான் அதன் அருகில் நடக்கும்போதும் அசையவில்லை. நான் தொந்தரவு கொடுக்காமல் நடந்துகொண்டிருந்தேன். வயது அதிகமாகி இறக்கப்போகிறது என நினைத்தேன். இரண்டாவது சுற்று வரும்போது ஒரு காக்காய் அந்தப் புறாவைக் கொத்தியது. புறா சிறகை அசைத்து எனக்கு உயிர் இருக்குறது எனக் காட்டியது. காக்கை ஒரு சில முயற்சிக்குப்பின் பக்கத்து மதிளில் அமர்ந்திருந்தது. புறாவை மீண்டும் தாண்டிச் செல்லும்போது அதன் முதுகுல் காக்காய் அலகால் ஏற்பட்ட பல காயங்கள் இருந்தன. என் மனதில் என்ன செய்யலாம் என யோசித்தேன். புறாவை விரட்டினால் காக்காயின் உணவைப் பறித்த பாவம் வருமா இல்லை புறாவை (அப்போது) தப்பிக்கவிட்ட புண்ணியம் வருமா? இந்த மாதிரிச் சூழலில் என் செயல் என்னவாக இருக்கும் என யோசித்தேன். நம் வேலை இதில் தலையிடாமல் இருப்பதுதான், இது இயற்கையின் சங்கிலி என நினைத்தான். அடுத்த சுற்று வரும்போது, எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர், அந்தப் புறாவைத் தூக்கி புதருக்குள் விட்டார். இது ஏன் எனக்குத் தோன்றவில்லை, அப்படிச் செய்வது சரியாக இருந்திருக்குமா என்ற யோசனை. புகைப்படங்களுடன் புதன் கேள்விக்கு அனுப்பலாம் என நினைத்தேன்.

   நீக்கு
  7. அது நீக்கும்படியான கருத்தாக எனக்குத் தோன்றவில்லை.

   நீக்கு
  8. எனக்கும் அது நீக்கும்படியான கருத்து என்று தோன்றவில்லை. ஆனால், மறுமொழி இடலாம் என்பதால்தான் என்னுடைய அபிப்பிராயத்தை எழுதினேன்.

   நீக்கு
 2. ஹி...ஹி...

  நாம் போடும் பிறர் எதிர்பார்க்காததாக இருந்தால் நிச்சயம் சிறப்பு பெறும். அதற்கு ஜெஸி ஸாரின் இந்த பின்னூட்டம் ஒரு மாதிரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! பின்னூட்டம் 'ஒரு மாதிரி'யாகத்தான் எனக்கும் தோன்றுகின்றது!

   நீக்கு
  2. உண்மைதான் ஜீவி சார். வித்தியாசமான கருத்துகள்தாம் கவனம் பெறும். குமுதம் வாசகர் கடிதம் பகுதியில் (முன்பு, அவர் தலைமையில் இயங்கிய போது) ரசிக்கக்கூடிய வித்தியாசமான கடிதங்களை வெளியிடுவார்கள். தாங்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டும்படியான கடிதங்களுக்கு முன்னுரிமை

   நீக்கு
  3. எஸ். பத்திரிகைகளின் எல்லாவகையான சிறப்புகளும் எபியில் அமைய வேண்டும் என்று கனவு காண்பவன் நான். என் உடல் நல குறைவுகளுக்கிடையேயும் அதற்கான பங்களிப்பு எப்பொழுதும் உண்டு.

   நீக்கு
  4. ...ஆம்! பின்னூட்டம் 'ஒரு மாதிரி'யாகத்தான் எனக்கும் தோன்றுகின்றது!//

   எங்கே அந்த பின்னூட்டம் ? பார்ப்பதற்குள் பறந்துவிட்டதே !

   நீக்கு
  5. :))) JKC சார் அதை நீக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 3. திருத்தம்:
  நாம் போடும் பின்னூட்டம்

  பதிலளிநீக்கு
 4. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன்
   நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்.

   நீக்கு
 5. இனியும் எழுமோ உயிர் பெற்று ஒவியம்..

  கனத்த மனதுடன் அஞ்சலி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் துரை செல்வராஜு சார்... அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் இது இழப்பு. அவருடைய ஓவியங்கள் அவர் நினைவை நமக்குத் தூண்டியபடி இருக்கும்.

   யாயும் ஞாயும் யாராகியரோ என்ற குறுந்தொகைப் பாடல் எனக்கு நிழலாடுகிறது.

   நீக்கு
 6. ஓவியர் மாருதியின் நினைவுகளுக்கு சிறப்பான அஞ்சலியாக அமைந்து விட்டது. ஏனோ தானோ என்றில்லாமல் எடுத்துக் கொண்ட அக்கறைக்கு பாராட்டுகள் சொல்ல வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜீவி சார். கௌதமன் அவர்களின் ஆர்வமே இதற்குக் காரணம்.

   நீக்கு
 7. மாருதியின் பெண் ஓவியங்களில் அவர் எடுத்துக் கொள்ளும் சிறப்பம்சம் என்ன என்று ஒரு கேள்வியைப் போட்டால் ஆளாளுக்கு பதில்கள் வேறுபடாமல் இருந்தால் இயல்பான ரசனை வெளிப்படும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருடைய பெண்-ஓவியங்களின் சிறப்பு, நம் மனதில் நாம் தவறவிட்ட நம் கலாச்சார, பண்பாட்டின் கூறுகளை அவை நமக்குக் காட்டுவதுதான். பிற பெண்கள் மாடர்ன் உடையில் வருவதை ரசிக்கும் நம் கண்கள், நம் பெண் இயல்பான தமிழ் பெண்போல் கலாசாரம் அழியாமல் பொட்டு, பூ, காதணி, சீலை அல்லது தாவணி அணிந்திருக்கவேண்டும் என எண்ணுவதே நம் மனதில் உள்ள இழந்த காலங்களின் மீட்டெடுப்பு தானே

   நீக்கு
  2. இன்று, அதிகாலை எழுந்துகொள்ளாமல்்சுகமாகத் தூங்கிவிட்டேன். கடமைகள் அழைக்குது. பிறகு வருகிறேன்.

   நீக்கு
 8. மாருதி அவர்களின் அழகியலில் இருந்து எனக்கு கதை மாந்தர் சிலர் கிடைத்திருக்கின்றனர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கதை மாந்தர் ஓவியத்திலிருந்து, மாருதியைப் பற்றிய தேடலும் அதிகரித்தது

   நீக்கு
 9. தூரிகை கொடுத்த
  காரிகை வண்ணம்
  தோன்றும் நெஞ்சில்
  அழகின் வண்ணம்..

  அழகின் வண்ணம்..
  ஆக்கிய வண்ணம்
  அமுதெனும் நிலவாய்
  நெஞ்சினில் மின்னும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெஞ்சினில் மின்னும்
   காரிகை அழகு
   பார் பார் அவளை
   என்றே உன்னும்

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. அவர் கதைக்காகத் தான் வரைந்தார்.. இந்த ஓவியத்துக்கான கதை எதுவோ எனக்குத் தெரியாது..

  ஆயினும் அவர் வரைந்த முகங்களில் இருந்து எனக்குக் கதைகள் கிடைத்திருக்கின்றன..

  அவரது ஓவியத்துடன் ஒரு கதையாவது வெளிவர வேண்டும் என்ற ஆசைக்கு காலம் ஒத்துழைக்கவில்லை..

  மாங்காய்ப் பால் உண்டு
  மலைமேல் இருப்போர்க்கு
  தேங்காய்ப் பால் ஏதுக்கடி
  குதம்பாய்!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தேங்காய்ப் பால் ஏதுக்கடி
   குதம்பாய்!?..// - ஹா ஹா ஹா. நம் கதைகளுக்கு ஏற்ற முகங்கள் அவரது ஓவியங்களிலிருந்து பிடிக்கலாம். ஓவியர் இளையராஜா நிறைய காலம் வாழ்ந்திருந்தால் அவருடைய ஓவியங்களிலும் நம் கலாச்சாரத்தின் சாயல் வெகுவாக இருப்பதால், நல்ல கதைகளுக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

   நீக்கு
 12. @ அன்பின் நெல்லை..

  // நம் பெண் இயல்பான தமிழ் பெண்போல் கலாசாரம் அழியாமல் பொட்டு, பூ, காதணி, சீலை அல்லது தாவணி அணிந்திருக்கவேண்டும் என எண்ணுவதே நம் மனதில் உள்ள இழந்த காலங்களின் மீட்டெடுப்பு தானே..//

  சரியான கருத்து...

  பதிலளிநீக்கு
 13. பெண்களின் கண்களில் அவர் அதிக கவனம் கொள்வதாக என் எண்ணம். முழு உடல் என்றால் புடவைக்கான ஜரிகை பார்டலிருந்து ஆரம்பித்து தொங்க விடல், இடுப்பு சுற்றல் என்று அதன் வாளிப்பைக் காட்ட சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்வார். பல கோணங்களில் பத்திரிகைக்களுக்கு படம் வரைபவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர் தான் அவர். அவர் பெயரோடு சேர்ந்திருக்கும் அந்த இலச்சனையும் அழகாக தீர்க்கமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர், தமிழ் கலாச்சாரத்துடன் கூடிய பெண்களையே தன் ஓவியங்களில் கொண்டுவந்தார். அதன் காரணம், அவருக்கு இரண்டு மகள்கள் அமைந்ததுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  சிறந்த ஓவியர் மாருதி அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த அஞ்சலிகளும்.

  இன்று பகிர்ந்த அவரின் ஓவியங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சிறப்பான ஓவியங்களை தந்தவர் /தந்து கொண்டிருந்தவர் இனி இல்லையெனும் போது மனம் வருத்தமுறுகிறது. அவரது குடும்பத்தார்களுக்கு அவரின் பிரிவை தாங்கிக் கொள்ளும் இயல்பை இறைவன் தந்தருள பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. உலகில் அபூர்வ மனிதர்கள் ஒரு சிலரே பிறக்கின்றனர்கள்.

  அந்த வரிசையில் மாருதியும் ஒருவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கில்லர்ஜி....ஆனால் அபூர்வ மனிதர்கள் பலர் இருக்கின்றனர்.

   கவிஞர் வாலி, இளவயதில் மும்பை விக்டோரிய டெர்மினஸ் அருகில் இரவில் நடந்துகொண்டிருக்கிறார். கடுமையான மழை. என்ன செய்வது என்று திகைக்கிறார். அருகில் ஒரு கார் வந்து நிற்கிறது. எங்கு செல்லவேண்டும் என்று கேட்டு அந்த இடத்தின் அருகில் காரை நிறுத்துகிறார் காரை ஓட்டி வந்தவர். வாலி இறங்குவதற்கு முன்னால், அவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கேட்கிறார். என்னை டாட்டா என்று அழைப்பார்கள் என்று சொல்கிறார் அந்தப் பெருந்தன்மைக்காரர். இதை வாலி அவர்கள் எழுதவில்லை என்றால் நமக்குத் தெரிந்திருக்காது. உலக மக்களில் 1 சதவிகிதம் பேர் அபூர்வப் பிறவிகளே

   நீக்கு
 16. மாருதி, தன் ஓவியங்கள் மூலம் என்றென்றும் வாழ்வார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். படைப்பாளி தன் படைப்புகளின் மூலம் நிறைய வருடங்கள் வாழ்கிறார். அந்தப் படைப்பு தரமானதாக இருந்தால், பலராலும் நினைவுகூரப்படுவார்

   நீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 18. மாருதி அவர்களுக்கு அஞ்சலிகள்.
  அருமையான பதிவு. அவர் வரைந்த பெண்கள் படங்கள் எல்லாம்
  அருமை. அவரைபற்றிய செய்திகள் தெரிந்து கொண்டேன்.

  முன்பு பொதிகை தொலைக்காட்சியில் அவரின் நேர்லையாக
  காட்டிய பேட்டி பார்த்தேன். அப்போது படங்கள் எடுத்து வைத்து இருந்தேன், அந்த படங்களை தொகுத்து அவர் பிறந்தநாள் அன்று பதிவு செய்து இருக்கிறேன்.

  அந்த பதிவை அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி முகநூலில் போட்டேன்.
  https://mathysblog.blogspot.com/2018/08/blog-post_28.html
  நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருடைய நேரலையைப் பார்த்ததில்லை கோமதி அரசு மேடம். நிச்சயம் யூடியூபில் இருக்கும். தேடிப் பார்க்கிறேன்.

   பதின்ம வயதில் படித்த தொடர்கதைகளுக்கான ஓவியங்கள் வரைந்த ஜெ, மணியம் செல்வன், மாருதி, ராமு, ஷ்யாம், லதா.... போன்ற பலரின் ஓவியங்கள் மறக்கமுடியாதவை

   நீக்கு
 19. ஒரு உண்மையான தமிழ்க் கலைஞனுக்காக ஒரு நாளைப் பிரத்தியேகமாக ஒதுக்கி, ரசனையோடு அமைத்திருக்கிறீர்கள்.

  மாருதி எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியர் என்றெல்லாம் நான் கூறப்போவதில்லை, அவர் என் சொந்த ஊரான புதுக்கோட்டைக்காரர் என்றபோதிலும். ஆனால் அவரது பெண் முகங்களில் துலங்கும் மங்கலத் தமிழ்ப் பெண்ணை, ஆழ்ந்து ஆனந்தமாக தரிசித்திருக்கிறேன், சிறுவயதிலிருந்தே. தமிழ் இதழ்களுக்கு, குறிப்பாகக் குமுதத்திற்கு அந்தப் புண்ணியம் போய்ச்சேரும்.

  நான் ரசித்த ’எங்கள் ப்ளாக்’ பக்கம் என்று ஒன்றை நான் குறிப்பிட நேர்ந்தால், இன்றைய பக்கத்தையே நிறைவோடு குறிப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் சார். உங்கள் கருத்து மனநிறைவை அளிக்கிறது. யதேச்சையாக அமைந்தது இன்றைய பதிவு (பதிவின் முதல் பாகம் சில வாரங்களுக்கு முன்பு வந்தது. இன்னும் இரண்டு பாகங்கள் வரும்)

   'மங்கலத் தமிழ்ப் பெண்' - உண்மை. மற்ற ஓவியர்களிடம் மேக்கப் போட்ட இயல்பில்லாத தன்மை இருக்கும் (இந்த 'மற்ற' ஓவியர்கள் தொடர்கதைகளுக்குப் படம் வரைபவர்கள். இளையராஜா போன்ற அபூர்வ ஓவியர்கள் அல்லர்)

   நீக்கு
 20. நினைத்தேன் இன்று நெல்லை மாருதியைப் பற்றிச் சொல்லிப் படங்களைப் போடுவார் என்று ...துரை அண்ணாவின் தளத்தில் சொல்லிருந்தாரே!!!!!!!!!!!!!

  மாருதி அவர்களைப் பற்றி ஆங்காங்கே வாசித்திருந்தாலும் இங்கும் தெரிந்து கொண்டேன்.

  அருமையான ஓவியர். கண்கள் அந்த முகம் தத்ரூபமாக அதுவும் சுயம்புவாக!! அருமையான ஓவியர்.

  2019 தான் கடைசியா? அதன் பின் வரைந்திருப்பார் என்று நினைக்கிறேன். பாருங்க அப்பவுமே என்ன அழகா வரைந்திருக்கிறார்! கீர்த்தி சுரேஷ் முகம் போல இருக்கோ? நெல்லை?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் வரைந்த கடைசிப் படம் இந்த வார, இன்று வெளியான மின்நிலா (167) இதழின் கடைசி பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். 29.6.2023 அன்று அவர் வரைந்தது.

   நீக்கு
  2. மின்நிலா புத்தகங்கள் வாட்ஸ் அப் குழுவில் சேருங்கள்.

   நீக்கு
  3. வாட்ஸ்அப் குழுவில் இணைய : https://chat.whatsapp.com/BmH70yzWRzTEuXW0Xeh1wh

   நீக்கு
  4. கௌ அண்ணா இது உங்க கலெக்ஷனா?

   //29.6.2023 அன்று அவர் வரைந்தது.//

   நன்றி கௌ அண்ணா
   வாட்சப் குழுவில் இணைவதில் பிரச்சனை எனக்கு கொஞ்சம் இருக்கு கௌ அண்ணா.

   இரண்டாவது என் ஃபோன் டக் டக்கென்று ஹேங்க் ஆகுது. ரொம்ப டெக்னிக்கல் ஃபோன் இல்லை.

   கீதா

   நீக்கு
  5. ஆம். மின்நிலா எங்கே, எப்படி பார்த்தீர்கள்?

   நீக்கு
  6. என் மனைவி எப்போதுமே சொல்வார், முக அழகுதான் ஒரு பெண்ணின் அழகை நிர்ணயம் பண்ணும் என்று. கண்கள், புன்னகை, மலர்ந்த முகம் என்று மாருதி அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார் (ஆனால் டக் டக் என்று வரைந்திருப்பார் என, சில ஓவியங்களைப் பார்த்தால் தோன்றும்)

   நீக்கு
  7. மின் நிலா பார்க்கலை கௌ அண்ணா உங்க தகவலுக்கு நன்றி சொன்னேன் அம்புட்டுத்தான்!!!!

   கீதா

   நீக்கு
 21. ஸ்ரீதேவி, மீனா முகங்கள் (முன்ன கொடுத்த அதே தானோ?) மத்தவங்களும் தெரிஞ்சாலும் பெயர் டக்கென்று வர மாட்டேங்குது.

  நெல்லை உங்க கலெக்ஷன்ல அந்த தெற்றுப் பல் படம் இல்லையா? பாலகுமாரன் அவர்களின் கதைக்கு வரைந்த படம். இதில் இருக்கோ என் கண்களுக்குப் படவில்லையோ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயலலிதா படமும் இங்கே உள்ளது. யாரும் அதை கவனித்ததாகத் தெரியவில்லை!

   நீக்கு
  2. இருங்க காலையில் பார்த்தேன் அப்ப அவசரம் இப்ப மீண்டும் பார்த்துட்டு வரேன் கௌ அண்ணா.

   கே ஆர் விஜயா, மஞ்சுளா, அந்த 2019 தைத்தான் ஜெஜெ ன்னு சொல்றீங்களா? எனக்கு அது கீர்த்தி போலத் தெரிந்தது

   கீதா

   நீக்கு
  3. ஒவ்வொரு பெண்ணின் முக ஓவியத்தைப் பார்த்து ரசியுங்கள் என்று சொன்னால், அந்த ஓவியங்களில் நடிகைகளைத் தேடுகிறீர்களே........

   நீக்கு
  4. ஹாஹாஹாஹா இந்த நெல்லை இருக்காரே!!!! முகத்தையும் பார்த்து ரசித்தேனே...!!!!!!

   கீதா

   நீக்கு
 22. @ ஏகாந்தன்..

  // அவரது பெண் முகங்களில் துலங்கும் மங்கலத் தமிழ்ப் பெண்ணை, ஆழ்ந்து ஆனந்தமாக தரிசித்திருக்கிறேன், சிறுவயதிலிருந்தே. தமிழ் இதழ்களுக்கு, குறிப்பாகக் குமுதத்திற்கு அந்தப் புண்ணியம் போய்ச்சேரும்.. //

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 23. கருத்துகள் மறைகின்றன. இழுத்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
 24. சிறந்த ஓவியர் மாருதி அவர்களுக்கு அஞ்சலிகள்.

  எ பி இன் இன்றைய பகிர்வு அஞ்சலிப் பகிர்வாக அவரின் சிறப்பான பல ஓவீயங்களையும் பகிர்ந்து தந்துள்ளது மிகவும் சிறப்பு என கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!