வெள்ளி, 28 ஜூலை, 2023

வெள்ளி வீடியோ : வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் இளமை மீண்டும் வருமா

 

தமிழ்நம்பி அல்லது பாரதிசாமி எழுதிய பாடலுக்கு தானே இசை அமைத்து அல்லது குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பாடல்.. 


முருகனுக் கொருநாள் திருநாள்​ அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள்​....
கடம்பனுக் கொருநாள் திருநாள்​ நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஒரு நாள்
(முருகனுக் கொருநாள் 

வைகாசி விசாகத் திருநாள்​ அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்​ சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்​ சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்​ கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்​ கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்

சரவணன் பிறந்தத் திருநாள்​ அருள் சந்தனம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒருநாள்​ கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்
வள்ளிக் குமரனின் மண நாள்​ நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்

முருகனுக் கொருநாள் திருநாள்​ அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்


=================================================================================================

தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் பின்னணிப்பாடகர் திருச்சி லோகநாதன் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.  அதுவரை அந்ததந்த நடிகர்களே பாடிக்கொண்டனர்.

தங்கவேலு வீட்டுத் திருமணத்தில் மதுரை சோமு பாடிய கச்சேரியை ரசித்துக் கேட்டவர் கையிலிருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியை பரிசாக அவருக்கு அளித்து விட்டாராம்.  'தூக்குத்தூக்கி' படத்தின் அத்தனை பாடல்களையும் பாட ஒப்பந்தமானபோது ஒரு பாடல் பாட 500  ரூபாய் கேட்டாராம்.  தயாரிப்பாளர்கள் தயங்கியபோது அவர் கைகாட்டி மதுரைப் பையன்தான் நம்ம TMS.

இன்று 'தைபிறந்தால் வழிபிறக்கும்' படத்தில் அவர் பாடிய 'ஆசையே அலைபோலே' என்கிற பாடல் பகிர்வு, தத்துவப் பாடல்.

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கண்ணதாசன், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கே. முத்துசுவாமி, சுரதா ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தாலும் இன்று பகிரப்படும் பாடலை எழுதியவர் கண்ணதாசன்.  தத்துவப்பாடல் எழுதுவது கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது போல..  விளையாடி இருக்கிறார்.  1956 ல் வெளிவந்த படம்.  எஸ் எஸ் ஆர்- வி கே ஆர் நடித்த இந்தப் படத்தில்தான் பிரேம் நசீர் முதன் முதலில் தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்.

ரசிக்க வைக்கும் வரிகளையும், டியூனையும் கொண்ட பாடல்.  பாடலைக் கேட்டால் ஒரு தத்துவார்த்த மனநிலை ஏற்பட்டு 'என்னவோ வாழ்க்கை, என்னவோ போடா' என்று தோன்றுமோ என்னவோ...

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)


ஒன்று தெரியுமோ...   பிற பாடகர்கள் பாடிய பாடல்களில் சிலவற்றை தனக்குப் பிடித்த பாடல்களாக SPB ஒரு லிஸ்ட் பாடி இருக்கிறார்.  அதில் இதுவும் ஒன்று.  அதைக் கேட்க வேண்டுமானால்..

 

47 கருத்துகள்:

 1. இன்றைய இரு பாடல்களின் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

  சூலமங்கலம் சகோதரிகள் குரலில் முதல் பாடல் கேட்கக் கேட்கத் திகட்டாது.

  இரண்டாவது பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமானது. 500 ரூபாய்க்குத் தயங்கியவர்கள், படத்தைவிட பாடல்களே காலம் கடந்தும் நிலைக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.  எல்லா செயல்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.  அந்தச் செயல் TMS நமக்கு கிடைக்க வேண்டிய காலம்.  இறைவன் அதை அவர் மூலம் நிகழ்த்தினார்!

   நீக்கு
 2. 'ஆசையே அலை போல.'
  அந்தக் காலத்து பட்டி தொட்டியெல்லாம் லவுட்ஸ்பீக்கர் முழங்கிய பாடல். நாங்களோ தாளம் போட்டு முணுமுணுத்த வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிகள், பாடலுக்கேற்ற டியூனை தயார் செய்தவரையும் பாராட்ட வேண்டும்.

   நீக்கு
 3. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துரை செல்வராஜூ அண்ணா முருகன் காக்கட்டும்.

   நீக்கு
 4. இன்றைய பாடல்கள் இரண்டுமே சிறப்பு..

  சூலமங்கலம் சகோதரிகள் பாடுவதற்கென்றே இத்தனை திருநாட்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துரை செல்வராஜூ அண்ணா முருகன் காக்கட்டும்.

   நீக்கு
 5. காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?..

  கவியரசரின் திறமையைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி துரைக்கு,

   நேற்றைய பதிவின் கடைசிப் பகுதியைப் பார்க்கவும். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன.

   நீக்கு
  2. நன்றி துரை செல்வராஜூ அண்ணா .

   நீக்கு
 6. இரண்டும் சிறப்பான பாடல்கள்.

  எஸ்.பி.பி. பாடிய ஆசையே அலைபோலே பாடல் இன்றுதான் முதன்முறையாக கேட்கிறேன்.

  வித்தியாசமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. இன்று பகிர்ந்த பாடல்கள் அருமை.
  முதல் இரண்டு பாடல்கள் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல்.
  ஆசையே அலைபோல பாடலின் காட்சியை பார்த்தால் பாடல் வரிக்கு பொருத்தமான காட்சிகள்.

  பருவம் என்னும் காற்றிலே
  பறக்கும் காதல் தேரிலே
  ஆணும் பெண்ணும் மகிழ்வார்//

  என்ற வரிகளுக்கு இளமையானவர்களை காட்டுவார்கள்,

  வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
  வடிவம் மட்டும் வாழ்வதேன்
  இளமை மீண்டும் வருமா
  மணம் பெறுமா முதுமையே சுகமா!
  காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?


  இந்த பாடல்வரிகளுக்கு முதுமையானவர்களை காட்டுவார்கள், முதுமையானவர் முகத்தை பக்கத்தில் காட்டுவார்கள் அதில் அவர் யோசிப்பது தெரியும். பாடலில் காட்சியில் ஒன்றி போகும் நம் மனம்.
  அருமையான பாடல் பகிர்வு.

  எஸ்.பி.பி. பாடிய பாடலை இன்றுதான் முதன்முறையாக கேட்கிறேன்,
  இளமைகால எஸ்,.பி,பி என்று நினைக்கிறேன். நன்றாக பாடி இருக்கிறார்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். கவிஞரின் வரிகள், அழகான டியூன், அருமையான குரல்.. எல்லாம் சரிவிகிதத்தில் இணைந்த கலவை.

   நீக்கு
 9. ..தமிழ்நம்பி அல்லது பாரதிசாமி ...பாடலுக்கு, தானே இசை அமைத்து அல்லது குன்னக்குடி வைத்தியநாதன்....//

  பல நல்ல பக்திப்பாடல்களை யார் எழுதியது, இசை அமைத்தது என்றே தெரியாமல் ரசித்து, அவை புகழ்பெற்று... நிலமை இப்படித்தான் இருக்கு.

  புகழலாம் என்று பார்த்தால், யாரைப் பாராட்டுவது எனத் தெரியவில்லையாதலால், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான அவனையே புகழ்ந்துவிட்டு நடையைக்கட்டுவோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..

   எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான அவனையே புகழ்ந்து விட்டு நடையைக் கட்டுவோம்..

   சரணாகதி..
   அவ்வளவு தான்..

   நீக்கு
  2. ஆம் ஏகாந்தன் சார். உண்மையில் வெளியீட்டாளர்கள் இது படைப்பாளிகளுக்கு செய்யும் துரோகம். அதே போல விவரம் தெரியாமல் மாற்றி மாற்றி பெயர் போடுபவர்களையும் திட்ட வேண்டும்!!

   நீக்கு
  3. எல்லாப் புகழும் இறைவனுக்கே! உண்மைதான் துரை செல்வராஜூ அண்ணா.

   நீக்கு
 10. அன்பின் ஜீவி அண்ணா அவர்களுக்கு

  தங்கள் அன்பினுக்கு நன்றி அண்ணா...

  எல்லாருக்கும் ஆயுளும் ஆரோக்கியமும் கொடுங்க சாமிகளே.. என்பது தான் முக்கிய பிரார்த்தனையாக இருக்கின்றது..

  நானும் எழுத வேண்டும்.. நண்பர்கள் எல்லாரும் படிக்க வேண்டும்.. என்பதே எளியனின் நோக்கம்.. சூழ்நிலை சற்றே சிக்கல்.. தளர்வு உடல் நிலையில்..

  மேசைக் கணினி பழுதான பிறகு கைத் தல பேசியில் தான் எல்லாமும்... அளவுக்கு மீறியதாக வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.. தெரியாத தகவல்களை த் திரட்டும் போது முன்னுக்குப் பின் முரண் என ஏராளம்...

  திருவையாற்றுக்குள் ஐந்து ஆறுகள் ஓடுகின்றன என்று
  பொய்யும் புனைவும் காணக் கிடைக்கின்றன ..

  உபாசனா மூர்த்தியிடம் தெளிவு பெற்று பதிவில் வைத்துக் கொண்டு இருக்கின்றேன்..

  இதற்கிடையே உடல் நலன் கருதி கோயில் தரிசனங்கள்..

  அவன் - அவனே அருளாசிகளைத் தரவேண்டும்..

  தங்கள் அன்பினுக்கு மிக்க நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் நாமாக நினைத்துச் செய்வதில்லை. எப்பொழுது எபியில்
   எந்த ரூபத்தில்
   வெளிவர வேண்டியிருக்கோ
   அப்பொழுது தன்னாலே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோமாக.

   நன்றி தம்பி.

   நீக்கு
 11. முதல் பாடல் பல முறை கேட்ட பாடல். சூலமங்கலம் சகோதரிகளின் அனைத்துப் பாடல்களும் அப்போதைய காலகட்டத்தில் கேட்காதவர் குறைவாகவே இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எல்லாக் கோயில்களிலும், திருவிழாக்களிலும், ஸ்பீக்கர் வைக்கும் கல்யாணங்களிலும் என்று கேட்டிருக்க வாய்ப்பு. திருச்செந்தூர் சென்றால் அங்கும். திருப்பதி சென்றால் எஸ்பிபி குரலில் பக்திப்பாடல்கள், கேரளத்தில் தாஸேட்டனின் குரலில் பக்திப்பாடல்கள் என்பது போல்....தமிழ்நாட்டில் சூலமங்கலம், டி எம் எஸ், குரல்கள் கேட்காமல் இருக்காது ஒரு காலகட்டத்தில்.

  கீதா

  பதிலளிநீக்கு

 12. ஆசையே அலை போலே..

  கவியரசரின் இந்தப் பாடல் உச்சம்...

  பாடல் காட்சியின் போது
  இளமையை
  முதுமையை மாற்றி மாற்றிக் காட்டி எல்லாவற்றையும் உணர்த்தி விடுவார்கள்..

  பாடலிலும் காட்சியமைப்பிலும் ஒன்றி விடும் நம் மனம்...

  ஆனாலும் பாடல் முடிந்ததும் மனக் குரங்கு அங்குமிங்கும் தாவ ஆரம்பித்து விடும்..
  அதுதான் பிரச்னை..

  ஈடு இணையற்ற பாடல்...

  பதிலளிநீக்கு
 13. ஒரு பாடல் பாட 500 ரூபாய் கேட்டாராம். தயாரிப்பாளர்கள் தயங்கியபோது அவர் கைகாட்டிய மதுரைப் பையன்தான் நம்ம TMS.//

  கட்டுப்படியாகலை என்று தனக்கு வாய்ப்பு நழுவினாலும், டி எம் எஸ் ஐ கைகாட்டியிருக்கிறாரே! அது பெரிய குணம் இல்லையா!! பெரிய மனசு! அவர் கை காட்டியவரும் எவ்வளவு திறமை படைத்தவர்!!!பின்னாளில் மக்களின் மனதில் இடத்தைப் பிடித்தவர்!

  ஆஅசையே அலைபோல பாடல் மிகவும் ரசித்த ரசிக்கும் பாடல்.

  கவிஞரின் தத்துவப்பாடல்கள் எல்லாமே அவர் அனுபவங்களில் அனுபவங்கள் தந்தவை பாடல்களாய் வந்து நம்மையும் கவர்ந்திருக்கின்றன!!! அருமையான பாடல் இப்பாடலும். வரிகள்.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லாவிட்டாலும் TMS வேறு வழியில் உள்ளே வைங்க...!

   நீக்கு
 14. அந்த காலத்தில் இந்த மாதிரி இடுப்பு வலிக்க வலிக்க தோணி வலித்தால் அதிகபட்சமாக எவ்வளவு கூலி கிடைத்திருக்கும்?..
  ஆனால் அன்றைக்கு இருந்த நிம்மதியும் மன நிறைவும் இன்றைக்கு இல்லாமல் போனதே.. அது ஏன்.. ஏன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்சி இயற்கையாக அமைய அவ்வளவு பாடுபட்டார்கள்.தெய்வப்பிறவியில் சிவாஜி விட்ட அறையில் பத்மினியின் தோடு கழன்று மூலையில் விழா, காட்சி முடிந்ததும் அடுத்த செட் பொய் கண்மறைவாக அழுது விட்டு வந்தாராம்.

   நீக்கு
 15. எஸ்பி பி பாடியதை இப்போதுதான் கேட்கிறேன், குரல் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறாரோ?

  மூன்று பாடல்களுமே ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. SPB முடிந்தவரை திருச்சி லோகநாதன் குரலிலேயே பாட முயன்றிருக்கிறார். ஸஃப் பிற பாடகர்களின் பாடல்கள் சிலவற்றில் தனக்குப் பிடித்த பாடல்களை பாடி இருக்கிறார். PBS ன் நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் (என்று நினைவு) எதாசின் மூன்றாம் பிறை பாடல், TMS ன் பாடல் 9பாவாடை தாவணியில் பாடலோ) எல்லாம் பாடி இருக்கிறார். YOU TUBE ல் தேடினால் கிடைக்கும்.

   நீக்கு
 16. இரண்டு பாடல்களையும் தெரியாதோர் இருப்பாங்களா? ஆசையே அலை போலப் பாடலை எஸ்பிபியும் பாடி இருக்கார் என்பது புதுச் செய்தி. பாடலைக் கேட்கிறேன். நல்ல தேர்வு இன்றைய பாடல்கள் இரண்டுமே!

  பதிலளிநீக்கு
 17. ஆசையே.. அலைபோலே..

  இளம்பிராயத்திலேயே இதயத்தைக் கலைத்துப் போட்ட ஒரு பாடல். கலங்கவைத்தும், விடாது தன்னைத் தொடரவைத்த மஹாபாடல். 29 என்னும் இளம் வயதிலே, சோகப் பெருவெளியின் ஆழ்ந்த இருளில் தன்னை இருத்திக்கொண்டு, பேனாவை மெல்ல நகர்த்திக்கொண்டு போயிருக்கிறான் கவிஞன். எத்தகைய அருமையான மனிதனை, திரைக் கவிஞனாகக் கொண்டிருந்தோம் ஒரு கால கட்டத்தில் நாம். தொடர்ந்துவந்த கட்டங்களில் எத்தனை, எத்தனை மாமனிதரை இழந்து, இழந்து.. இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம்.. இறைவா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இள வயதில் இந்தப் பாடல் உங்கள் மனதில் இடம்பெற்று படுத்தி இருக்கிறது என்று தெரிகிறது ஏகாந்தன் ஸார்..

   நீக்கு
 18. முருகன் பாடல் மிகவும் ரசித்து கேட்ட பாடல்.

  'ஆசையே அலைபோல...' இது என்ன பழைய பாடல் என அப்போது கண்டு கொள்ளாத பாடல். பின்புதான் தத்துவம் புரிந்தது.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வு இரண்டுமே அருமை. முதல் முருகன் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். சூலமங்கலம் சகோதரிகள் இணைந்து பாடிய பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன்.

  இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்தப்பாடல். பாடகர் திருச்சி லோகநாதனை பற்றி தொகுத்து தந்த விபரங்களும் அருமை. அவர் குரலும் நாம் அனைவருமே அன்றைய காலகட்டத்தில் கேட்டு ரசித்ததுதான். இப்போதும் ரசிப்பவைதான். இன்றும் இங்கு பகிர்ந்த இந்தப்பாடலை ரசித்து கேட்டேன்.

  எஸ். பி. பி அவர்களின் குரலிலும் இன்று முதன் முறையாக கேட்டு ரசித்தேன். மூன்று பாடல்களுமே முத்தானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நேற்று பதிவுகளுக்கு வர இயலவில்லை. அதனால் தாமதம். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு அலலது மூன்று பாடல்களையும் கேட்டு, ரசித்து, கருத்து தந்தமைக்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!