திங்கள், 17 ஜூலை, 2023

"திங்க"க்கிழமை  :  தஹி மித்தல் - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 " தஹி!.. "

" ஏ.. நீ மறுபடியும் வந்துட்டியா?.. "


" வேற  எங்கே நான் போறது.. கடல் காக்கா மாதிரி இங்கே தானே சுத்தி சுத்தி வரணும்.." 

" அதுசரி.. இன்னிக்கு என்னா பிரச்னையோட  வந்திருக்கே?.. "

" வெட்டி வேரை பானைத் தண்ணில போட்டு  ராத்திரி பூரா வெச்சிருந்து  அந்தத் தண்ணிய காலைல குடிச்சால் உடம்பு சூடு குறையும். நீர்க் கடுப்பு வராது. சிறுநீரகப் பிரச்னையும் வராது... "

" அதாவது கிட்னி!.. இந்த மாரி டமில்ல சொல்லுவியா.. அத உட்டுட்டு.."

" ஆமா.. அந்த வெட்டி வேர் தண்ணீர்.. ல தான் இன்னிக்கு தஹி மித்தல்... " 

" என்ன இது?.. மித்தல்.. வத்தல்.. ன்னுக்கிட்டு?.. "

" வத்தல் இல்லே.. மித்தல்..  தஹி மித்தல்!.. "

" எப்படி?.. "

" தண்ணி ஊத்தாம பசும் பாலை நல்லாக் காய்ச்சி ஆற வைச்சு உறை ஊத்தணும்.. இதுதான் முக்கியம்.. இப்படியான தயிர் கூட ஒரு டீஸ்பூன் பட்டைத் தூள்.. "

" இரு.. இரு.. லவங்கப் பட்டைத் தூள் எதுக்கு?.. "

" அது..  ரத்தம் சுத்தம் ஆகறதுக்கு  பட்டைத் தூள்!.. "

" ஓ!.. "

" அதோட மூனு டீஸ்பூன் பழுப்புச் சர்க்கரையும் போட்டு
மூனு குவளை வெட்டி வேர் தண்ணிய ஊத்தி தயிர் மத்தால சிலுப்பி எடுத்தா அதுதான் தஹி மித்தல்!.. "

" ஆமா.. டமில் நாட்டு டயிரும் மட்டி வேர் தண்ணியும்.. "

” அது மட்டி வேர் இல்லே.. வெட்டி வேர்!.. "

" அட.. ஏதோ ஒன்னு..
வெட்டி வேர் தண்ணிய ஊத்திக் கடைஞ்சதுக்கு சேட்டு வூட்டுப் பொண்ணு பேரு எதுக்கு வெச்சிருக்கே?.. "

" மித்தல்.. ன்னா.. நட்பு.. நல்ல இயல்பு.. ன்னு அர்த்தம்.. "

" அப்பிடி.. ன்னா தோஸ்துன்னு மீனிங்!.. நல்லாருக்குதே!.. "

 ” நன்னாரி வேர் ஊற வச்ச தண்ணி சேர்த்தும்  இதே
மாதிரி செஞ்சு பாருங்க!.. "

***

31 கருத்துகள்:

  1. தமிழக வெயிலுக்கு அருமையான பானம். நல்ல பகிர்வு. யாரு இப்போ செஞ்சுதரப் போறாங்க?

    பெங்களூர்ல குளிர்காலம் வந்த மாதிரி இரண்டு வாரங்கள இருக்கு. இதுல, மித்தல், வத்தலா இல்லாம ரோடுல போனா பார்க்கலாம். தஹி மித்தல் எங்க செய்யறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      இது கோடையில் அனுப்பப்பட்ட பதிவு..

      குளிர் காலம் சீக்கிரமே வந்து விட்டது!..

      நீக்கு
    2. குளிர் காலம் எங்கே வந்திருக்கிறது என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்!!

      நீக்கு
  2. தலைப்புல தஹி போடாமல் வெறும் மித்தல் என்று இருந்திருந்தால் கேஜிஜி சார் அரிவை தெரிவை பேதை மடந்தைனு ஏதாவது படம் இணையத்தில் தேடிப் போட்டிருப்பார். தஹின்னதும் ஓ இது தி பதிவுன்னு நஹின்னுட்டார்

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. ஆகா...

    இன்று சமையல் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது குறிப்பினை பதிவு செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

  6. தலைப்பில் சிறிய எழுத்துப் பிழை..

    தஹி மித்தல் - என்று திருத்தம் செய்து விடவும்.. நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணை இருக்க வேண்டிக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    நல்லதொரு உணவு குறிப்புக்கள். உடல் ஆரோக்ககியத்திற்கும், உணவு ஜீரணிக்கவும், நீரும், மோரும் மிக அவசியம். தங்கள் பாணியில் நகைச்சுவையுடன் நீர் மோர் பற்றி சொன்ன விதம் அருமை. ரசித்தேன்.

    அனைவருக்கும் ஆடிப்பண்டிகை வாழ்த்துக்கள் எங்கள் நலத்திற்காக பிரார்த்தித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏. பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி. பிறகு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் ஆடிப் பண்டிகை வாழ்த்துக்கள் ..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  9. பயனுள்ள தகவல்கள் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  10. ..” நன்னாரி வேர் ஊற வச்ச தண்ணி சேர்த்தும் இதே
    மாதிரி செஞ்சு பாருங்க!.. "//

    இருங்க.. சேட்டு வூட்டுப் பொண்ணப் பாக்கப் போயிருக்காரு.. திரும்பினதும்....

    பதிலளிநீக்கு
  11. // சேட்டு வூட்டுப் பொண்ணப் பாக்கப் போயிருக்காரு..//

    பொண்ணு பார்க்கப் போனவர் வந்துடுவார் தானே!..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. "தஹி மித்தல்" செய்முறையை நல்ல நகைச்சுவையோடு சொன்னவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  14. தஹி மித்தல் அருமையான குறிப்பு, துரை அண்னா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  15. நல்ல நகைச்சுவையான "தஹி மித்தல்". ஓரிரு முறை குடிச்சிருக்கேன். எங்க பொண்ணு மண் பானைக்கு வெட்டி வேர் போடச் சொல்லி இருக்கா. வாங்கிப் போடணும். நன்னாரி வேர் இருந்தது. தேடணும். என் கிட்டே நெருஞ்சி முள்ளில் இருந்து சிவப்புச் சந்தனக் கட்டை வரை (அகில் கட்டை வேறே இல்லையா? அதுவும் உண்டு) எல்லாமும் வைச்சிருந்தேன் இந்த யுடி ஐ எனப்படும் urinary tracj infection க்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பிரச்னைகளைத் தடுப்பதில் வெட்டிவேர் நன்னாரி வேர்கள் சிறப்பானவை..

      நன்றியக்கா..
      வாழ்க நலம்..

      நீக்கு
  16. ராத்திரி நேரத்தில் இப்போவும் அடிக்கடி படுத்தும். இப்போல்லாம் அதிகமாக ஓ.ஆர்.எஸ் வாங்கிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஆகா! கோடைக்கு உகந்த பானம்.
    எங்கள் வீட்டில் நன்னாரி உண்டு தண்ணி குடிப்போம். சில தடவை வற காப்பியும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!