ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 06 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 06


ருக்மணி கோவில் துவாரகையிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ளது. ஒரு தடவை ருக்மணியும் கிருஷ்ணரும் துர்வாசரைத் தேரில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ருக்மணி, கிருஷ்ணரிடம் தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்க, கிருஷ்ணர் தன் கால் விரலால் பூமியை அழுத்த கங்கைநீர் வெளிவந்த தாம். அதனை ருக்மணி அருந்தி தாகம் தீர்ந்தாளாம். தனக்கு முதலில் தண்ணீர் வேண்டுமா என்று கேட்காமல் ருக்மணி தன் தாகம் தீர்த்துக்கொண்தால் கோபம் கொண்ட துர்வாச முனி, அதற்குக் காரணம் ருக்மணி மனதில் கிருஷ்ணர் மாத்திரமே இருந்த தால், தன்னை முதலில் கவனிக்க மறந்துவிட்டாள் என்று நினைத்து, ருக்மணி எப்போதும் கிருஷ்ணரை விட்டுப் பிரிந்தே வாழவேண்டும் என்று சபித்துவிட்டாராம். (இந்த துர்வாச முனிவர் சாபம் கொடுப்பதில் மிகவும் பெயர் பெற்றவர். அந்தச் சக்தி மாத்திரம் நம்மிடம் இருந்துவிட்டால், இல்லை துர்வாசரே இப்போது உயிரோடு இருந்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்)

இந்தக் கோவில் 2500 ஆண்டுகள் பழைமையானது என்று சொல்கிறார்கள். ஆனால் தற்போதைய கோவில் 12ம் நூற்றாண்டைச் சார்ந்ததாம். வட இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில் மூலவர் பளிங்குக் கல்லில்தான் சிற்பமாக இருப்பார். அதன் காரணம் முஸ்லீம் படையெடுப்பில் சிற்பங்கள் எல்லாம் உடைக்கப்பட்டு, தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அதனால்தான் பிற்காலத்தில் பளிங்குக் கற்களைக் கொண்டு சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்று சொல்கிறார்கள். (இதை நாம் நம்புவதன் காரணத்தைப் பிறகு எழுதுகிறேன்)

ஒயிலான பெண்ணின் உருவத்தையும் அவள் கொண்டையின் அழகையும் பாருங்கள். 
பெண்ணின் முகத்தைக் கற்பனை செய்தால் நம் தென்னிந்தியச் சாயல் தெரியவில்லையா?

சோப் ஸ்டோன் என்று அழைக்கப்படும் மாக்கல் போன்ற கற்களை உபயோகித்துச் சிற்பங்கள் வடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

கோபுரம் முழுவதும் எப்படி நுணுக்கமாகச் சிற்பங்கள் படைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கொஞ்சம் தூரத்திலிருந்து பார்க்கும்போதுதான் சிற்பங்களின் அழகு புலப்படும். வெகு அருகிலிருந்து பார்த்தால், உப்புக் காற்று மற்றும் கால மாற்றத்தால் சிதைந்த உருவம்தான் நம் மனதைத் தைக்கும்.

உருவம் சிதைந்த அழகிய சிற்பங்கள் – கோவில் வெளிப்புறச் சுவற்றில். 





கர்நாடக கோவில்களுக்குச் சளைக்காத வேலைப்பாடுகள். ஆனால் உப்புக் காற்றினால் கொஞ்சம் உருக்குலைந்து போயிருக்கிறது. 

யானைச் சிற்பங்கள் கோவில் பீடத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. ஆனாலும் கற்களைக் கொண்டு தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கும் சிற்பங்களின் நேர்த்தி (கஷ்டம்) இதில் இல்லை என்பது என் எண்ணம்.

உடைகளிலும் உருவங்களிலும் தென்னிந்திய பாணி தெரிகிறதா? உள்ளேயும் அப்படித்தான் மூலவர் மற்றும் மற்ற தெய்வங்கள் இருந்திருக்கவேண்டும்.


வித வித டிசைன்கள்

கல்லிலேயே சாரளங்கள் அமைத்திருக்கிறார்கள்.

மூலவர் ருக்மணி பிராட்டி. 

ருக்மணி கோவிலின் கோபுரத் தோற்றம். 

ருக்மணி தேவி,  துவாரகை ருக்மணி கோவில். 

இந்தக் கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றாலும், 2500 ஆண்டுகள் பழமையானதாம். கோவிலின் சிற்பங்கள் பலவும் ஸ்ரீகிருஷ்ணரையும் ருக்மணியையும், வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கின்றனர்.

கோவிலின் வெளிப்புறத்தில் புறாக்களின் கூட்டமும் மின்கம்பியில் அவைகள் வரிசையாக அமர்ந்திருந்தவிதமும் மனதைக் கவர்ந்தது. அழகாக இருக்கிறது இல்லையா?

ருக்மணி கோவிலின் முன்பு நான் பார்த்தது, யாசகம் கேட்பவர்களின் கூட்டம். அவர்களில் தலைவர் போன்றவர் வந்து, யாராவது ஒருவரிடம் கொடுத்தால் போதும், நாங்களே பிரித்து எடுத்துக்கொள்வோம் என்று சொன்னார். இது வித்தியாசமா இருக்குல்ல?

இந்தக் கோவிலிலிருந்து 200-300 மீட்டர் தொலைவிலேயே நாம் கடற்கரையின் பகுதியைப் பார்க்க இயலும். 

அங்கு தரிசனம் முடிந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அரை மணி பேருந்துப் பிரயாண தூரத்தில் இருந்த Bபேட் துவாரகைக்குச் செல்லும் படகுத் துறையை அடைந்தோம். 

படகுப் பயணம் என்றாலே பறவைகள் இல்லாமலா? அவற்றை அடுத்த வாரம் காண்போமா?

(தொடரும்) 

 

54 கருத்துகள்:

  1. வர வர தரிசன யாத்திரைக் கட்டுரைகள்
    மெருகேறி வருவது மனத்திற்கு மகிழ்ச்சியூட்டுவாய் இருக்கிறது. முக்கியமான அம்சம் இதுவரைப் பார்த்திராத தலங்களின் தரிசனமும் அந்தந்த இடங்களின் விவரிப்புகளும். அப்படியான விவரங்களிலும் வழக்கமாக இந்த மாதிரி பக்தி யாத்திரைக் கட்டுரைகள் எழுதுவோர் தொடாத விஷயங்களையும் தொட்டுப் பார்க்கும் நெல்லையின் விவரிப்புகளும் அந்த மாதிரி விவரிப்புகளைக் கண்முன் கொண்டு வரும் படங்களும். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாக்கல் போன்ற கற்களால் உருவாக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் கூடிய சிற்பங்கள்
      பக்கத்து கடல் உப்புக் காற்றால் சிதைவுகளுக்கு உள்ளாகியிருப்பதைப் பார்க்கும் பொழுது வருத்தமாக இருந்தது.
      படங்கள் எல்லாம் அருமை. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. நன்றி ஜீவி சார். யாத்திரை பற்றி எழுதும் போது படங்களுக்கே முக்கியத்துவம்தர நினைக்கிறேன்

      நீக்கு
    3. நன்றி ஜீவி சார். யாத்திரை பற்றி எழுதும் போது படங்களுக்கே முக்கியத்துவம்தர நினைக்கிறேன்

      நீக்கு
    4. உப்புக் காற்றால் மிக அழகிய சிற்பங்கள் சிதைவது மனதுக்கு வருத்தம்தான்

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய துவாரகா கோவில் யாத்திரை பகிர்வு அருமையாக உள்ளது. ருக்மணி பிராட்டியை தரிசித்துக் கொண்டேன். சிற்பங்கள் படங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளது. ஆனால், அவை உப்பு காற்றினால், சிதிலமடைந்து வருவது வேதனைக்குரியது. அடிக்கடி பராமரித்தல் அவசியம்.

    தூர்வாசரின் கோபங்களும், சாபங்களும் புராண கதைகளில் அறிந்தவைதான். ஆனால், இறைவன் இறைவியருக்கே அவர்கள் சாபங்கள் தருவது கொடுமைகள்தான். அதீதமான கோபம் கொள்பவரை நாமும் இப்போதும் தூர்வாசர் என்றுதானே சொல்வோம். அவருக்கு அடுத்தபடியாக விஸ்வாமித்திரர்.

    வரிசையாக அணிவகுத்து அமர்ந்திருக்கும் புறாக்களின் படம் அருமை. அடுத்ததாக படகு பயணத்துடன் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களின் இப்போதைய பூரி கோவில் யாத்திரைகளில் நல்லபடியாக இறை தரிசனங்கள் பெற்று வந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என்றும் உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பார். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இப்போது கனகதுர்கா கோவிலை நோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம்.

      பூரி தரிசனம் 9ம்தேதி முடிந்தது

      நீக்கு
  4. துர்வாசர் ரொம்பவே அர்த்தமில்லாமல் கோபம் கொண்டு சாபம் கொடுக்கிறார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அப்படியே கோபம் வந்தாலும் வார்த்தைகளை இப்படி விடக் கூடாது என்ற பாடம் இதில். நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவம் செய்யச் செய்ய பவர். அதீதப் பவர் சேர்ந்துகொண்டே மோவது நல்லதல்ல. சாபம் கொடுப்பது சேர்ந்த சக்தியைக் குறைக்கிறது

      நீக்கு
  6. எனவே அப்படியான கதைகளுக்குள் நான் போகலை.

    படங்கள் சிற்பங்கள் கலை நுட்பங்கள் என்று பார்க்கிறேன்

    //ஒயிலான பெண்ணின் உருவத்தையும் அவள் கொண்டையின் அழகையும் பாருங்கள். //

    மிக அழகு. கடல் காற்றினால் அரிப்பு தெரிகிறது இல்லையா புள்ளி புள்ளியாய்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ரங்கன் அக்கா. போகப் போக உருவமே கரைந்துவிடலாம்

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை எனக்கும் அதுதான் தோன்றுகிறது. ஆனால் பராமரிப்பது என்பது ரொம்ப சிரமம் என்றும் தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
  7. சிறப்பான பதிவு..
    அழகான படங்கள்..
    விவரமான செய்திகள்..

    அன்பின் நெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  8. @ கீதா...

    /// துர்வாசர் ரொம்பவே அர்த்தமில்லாமல் கோபம் கொண்டு சாபம் கொடுக்கிறார்!.. ///

    துர்வாசர் எவருக்கும் சாபம் கொடுக்கவில்லை எனில் அவரது தவவலிமை குறைந்து விடும் என்று அவருக்கே ஒரு சாபம் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் போடுங்க துரை செல்வராஜு சார்.

      கோபம் வர்றவங்க பிறரிடம் அதைக் காண்பிக்காமல் மனதுக்குள் வைத்துக்கொள்வதால் அவங்களுக்கு BP, போன்றவைகள் வந்துடுது போலிருக்கு

      நீக்கு
    2. நெல்லை ஹாஹாஹாஹா அப்படி எல்லாம் கிடையாது. இதெல்லாம் சும்மா ஒரு சால்ஜாப்பு! கோபம் வந்தாலும் கத்தினாலும் நெஞ்சு பட படப்பு பிபி எகிறும்.

      அதுவும் கெட்ட வார்த்தைகள் விடும் போது அது அடுத்தவரின் மனதை எவ்வளவு துன்புறுத்தும் என்று யோசிக்க வேண்டும். ஆறாதே நாவினார் சுட்ட வடு!

      கீதா

      நீக்கு
    3. தவம், தியானம், இறைவனின் மீதான எண்ணம் என்பதே நம் மன வலிமையை அதிகரிக்கவும், இப்படியானவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும்தான். மனதில் கெட்ட எண்ணங்கள் வராமல் இருக்கத்தான். சாபம் விடுவதும், கரிச்சுக் கொட்டுவதும், தாழ்த்திப் பேசுவதும் மனதில் தோன்றும் ஈகோ கெட்ட எண்ணத்தினால்.

      கீதா

      நீக்கு
    4. துர்வாசர் எவருக்கும் சாபம் கொடுக்கவில்லை எனில் அவரது தவவலிமை குறைந்து விடும் என்று அவருக்கே ஒரு சாபம் உண்டு..//

      துரை அண்ணா அக்கதையும் கேட்டிருக்கிறேன். மிக்க நன்றி அண்ணா.

      கீதா


      கீதா

      நீக்கு
    5. உண்மைதான் கீதா ரங்கன் அக்கா. கோபம் பாபம் பழி என்பது தெரிகிறது. நமக்குக் கட்டுப்படுத்த முடியாதுன்னு கூட இருக்கறவங்களுக்கும் தெரியும்

      அப்போ நமக்குக் கோபமே வராதபடி நடந்துக்கறது அவங்க ரெஸ்பான்சிபிலிடிதானே

      அப்போ கோபப்படறவங்களைக் குறை சொல்லக்கூடாதில்லையா?

      எப்படி நம்ம லாஜிக்?

      நீக்கு
    6. ஹாஹாஹாஹா.....நெல்லை...நானும் என் தம்பிய விட்டுருவேனா!!!! இருங்க....நம்ம தப்புக்கு மத்தவங்களை சுட்டிக் காட்டக் கூடாது இல்லையா!!! அவங்க அப்படி நடந்து கொண்டால் அதைச் சொல்லும் விதத்தில் சொல்லலாம் இல்லைனா அது அவங்க பொறுப்பு. சொல்லிக் காட்டலாம். அவங்க பொறுப்புன்னு நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் அவங்கதானே அதைப் பாத்துக்கணும்? ஆனால் நாம கோபப்படறதுனால அவங்க மாறப் போறாங்களா? கோபம் நம்முடைய செயல் அவங்க நம்மைக் கட்டுப்படுத்த முடியாது அதாவது நம் கோபத்தை. நாமதான் அடக்க முயற்சி செய்யவேண்டும்!...ஹப்பா ஞானி மாதிரி பேசியாச்சு!!!!

      கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் வார்த்தைகள் முக்கியம். வார்த்தைகளை வெளியிடாமல் கோபத்தை வெளிக்காட்ட முடியும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல!!!

      சரி சரி கனகதுர்கையை வழிபட்டீங்களா!

      கீதா

      நீக்கு
    7. கோபத்தில் வார்த்தைகளைச் சிதறவிடும் தவறு நேர்ந்துவிடுகிறது. வருத்தம்தான்

      கனகதுர்கையை வழிபட எங்களில் பலர் போகலை. ஞாயிறு கூட்டம் மதிய வெயில் காரணம்

      நீக்கு
  9. அந்த ஒயிலான பெண்ணின் கால் உடைந்திருக்கிறதோ இல்லை கரைந்து நம் எலும்புகள் osteoporosis போன்று பொடிப் பொடியாகிடுதோ இந்தச் சிற்பங்கள் என்று தோன்றுகிறது.

    அதுவும் மண்டபம் போன்று ஜன்னல் போன்று இருக்கும் சிற்பங்களில் ஒல்லிய நடுவே பிரிவுகள் இருக்கிறதே அவை எல்லாம் ...

    எவ்வளவு அழகான சிற்பங்கள்! செமையா இருக்கு. அப்படிச் செதுக்கிய கலைஞர்களை மிகவும் வாழ்த்த வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு திறமை கொண்டவர்கள் அந்தச் சிற்ப மேதைகள். பாரதநாடு பழம்பெரும் நாடு

      நீக்கு
  10. ஒயிலான பெண்ணின் சிற்பத்தின் அருகில் இருக்கும் அந்தப் படம் க்ளிக் பண்ணிய கோணம் செம!!!! எனக்கு இப்படியான கோணங்கள் ரொம்பப் பிடிக்கும்.

    தென்னிந்தியச் சாயல் இருக்கு, நெல்லை ஆனால் கூடவே தலையைப் பாருங்க. அது கொஞ்சம் வட மேற்குப் பகுதி போலத் தெரிகிறதோ? புத்தர் கால வகை...உதடுகள் என்று பார்க்கறப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கீதா ரங்கன். படம் எடுத்த கோணம் அழகை அதிகப்படுத்துகிறது

      நான் பிறன் மனை நோக்காப் பேராண்மையைக் கடைபிடிப்பதால் உதடு அங்கங்கள்லாம் சரியாப் பார்க்கலை ஹாஹாஹா

      நீக்கு
  11. மாக்கல் சிற்பங்கள் அழகு ஆனா பயமா இருக்கு எளிதில் வடிவங்கள் மாறிவிடும். கொஞ்சம் உரசினாலோ, இடித்துக் கொண்டாலோ அச்சிற்பங்கள் உடைவதோடு தேய்மானம் எளிதில் ஆகும். வலிமை குறைவு மாக்கல்லிற்கு கரைந்தும் விடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஆனால் மாக்கல்லில் இன்னும் அழகாக கற்சிற்பங்களை விடவும் செதுக்க முடியும்

      நீக்கு
  12. படங்களும் கோவில் பற்றிய விபரமான தகவல்களும் நேரில் பார்த்த உணர்வை எமக்குத் தருகிறது.

    அழகிய சிற்பங்கள்.சிற்பங்கள் சிதிலமடைந்து இருப்பது படங்களில் தெரிகிறது. உப்புக் காற்றில் அழிவது கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. தமிழகத்தில் பெரும்பாலும் கருங்கல் சிற்பங்கள் என்பதால் இயற்கையான சேதம் நேருவதில்லை

      நீக்கு
  13. கோபுரம் முழுவதும் - இந்த இரு படங்களும் மை கடவுளே! எப்படி பொறுமையாகச் செஞ்சிருப்பாங்க இல்லையா நெல்லை! வியக்கிறேன். பார்த்துக் கொண்டே இருந்தேன்.

    கீழ பாருங்க அடுத்த படங்கள். உடைந்து கரைந்து போயிருக்கு வருத்தமா இருக்கு இப்படியான சிற்பங்களை/படங்களைப் பார்க்கறப்ப.

    நெல்லை சிற்பங்கள் எல்லாமே கொஞ்சம் தூரத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் அழகாக இருக்கும். அருகில் போனால் சேதமடைந்திருப்பதுதான் கண்ணுக்குப் புலப்படும் முதலில்!

    கீழே வந்தா அவை கர்நாடக கோயில் போன்று இருக்கு ...போன முறையும் கருத்தில் சொல்லியிருந்த நினைவு. மடிப்பு மடிப்பா வருவடு...மூலைகள்.

    யானை இப்பவும் தமிழகம் தான் நெல்லை. யானைச் சிற்பங்கள் இப்ப மார்பிள் கல், மொசைக் கல், கடப்பா கல்லில், களிமண்ணில் செதுக்கினாலும் கூட அவ்வளவு அழகா செதுக்கறாங்க. யானை, பெண்கள் சிற்பங்கள், விளக்குகள், வாழைப்பூ போன்ற வடிவங்கள் எல்லாம் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் செமையா இருக்கும். உங்கள் கருத்தை டிட்டோ!!

    கர்நாடகாவிலும் கூட யானை நல்லாருக்கு இருந்தாலும் தமிழ்நாடு ஒரு படி மேலோ என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகச் சிறப்பு கருங்கல் சிற்பங்கள். மரச் சிற்பங்கள் நேர்த்தி கேரளா. சோப் ஸ்டோன் கர்நாடகா

      நீக்கு
  14. புறாக்கள் இருக்கும் படமும் படகுத் துறையும் ஆஹா!

    Seagal பார்த்தீங்க்ளோ படகில் போறப்ப?

    யாசிப்பவர்கள் குழுவாக இருந்தால் இப்போ எல்லாம் தலைவர் உண்டு. இப்படிக் குழுவா இருக்கறவங்க. தமிழ்நாட்டில் கூட கோயில் முன் இருக்கறவங்க சிலர் எங்கிட்ட கொடுத்திடு நான் எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்திடுவேன்னு சொல்வாங்க. ஆனா அந்தக் குழுவில் உடன்பாடில்லாத இன்னொருவர்.....அவகிட்ட கொடுக்கறத கொடு எங்கிட்ட இங்க தனியா கொடுன்னு!!!!

    என் தங்கை, இப்படி நீங்க சொன்னா நான் யாருக்குன்னு கொடுக்கறது? தனித் தனியாவே போடறேன்....என்றாள். ஆனா அதுக்கு முதலில் சொன்ன அந்தப் பெண் மற்றும் மற்றொரு ஆண் ஒத்துக்கலை.

    நீங்க பஞ்சாயத்து முடிச்சு சொல்லுங்க....இல்லைனா எதுவும் கிடையாதுன்னு நான் சொல்ல என் தங்கையும் நானும் நகர்ந்துவிட்டோம். எனக்கு இப்படியானவர்களுக்குக் கொடுப்பதில் உடன்பாடு இல்லை.

    அந்த ஆண் ஒடி வந்தார் பின்னால்.....பரவால்ல நீகொடுக்கறத கொடு....அந்த குரூப்புக்கும் சேர்த்துக் கொடு...நான் கொடுத்திடறேன்னு. இத்தனைக்கும் எல்லாரும் நல்லாவே இருந்தாங்க. இது ஒரு தொழிலாகிவிட்டது போல் தோன்றியது. உண்மையாலுமே முடியாதவங்க இருக்கறப்ப...

    என் தங்கை போனா போகிறது என்று கொடுத்தாள். அந்த ஆள் அவளை வாழ்த்தினார் எனக்குச் சாபம் கொடுத்தார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seagal பார்ப்பீஈங்களோன்னு சொன்னதை கூகுள் எப்படி அடிச்சிருக்கு பாருங்க!!!!!

      கீதா

      நீக்கு
    2. அது ஒரு தொழில் அவர்களுக்கு. எனக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் அவர்களில் பரிதாபக் கதைகளையுடைய பலர் இருப்பார்கள்

      நீக்கு
  15. ஓ ருக்மணி கோயிலுக்க்கு இப்படி ஒரு புராணக் கதை இருக்கிறதா?

    கலைப்படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கைகள் கால்கள் உடைந்த நிலையிலும், உப்புக்காற்று சிதைத்த நிலையிலும் அழகாக இருக்கின்றன. சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகள் இப்போது இவற்றைப் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்வார்கள்? எப்படி நினைப்பார்கள் என்று எண்ணினேன்.

    நீங்கள் எடுத்திருக்கும் விதமும் மிக அழகாக இருக்கிறது, நெல்லைத்தமிழன். இப்படி நீங்கள் நிறைய படங்கள் கொடுக்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. அடுத்த பயணம் படகிலா. காத்திருக்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசிதரன் சார்.. இப்போவே இப்படி அழகாக இருந்தால் கோவில் உருவானபோது எப்படி கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்திருக்கும்?

      இப்போது அருவமாக அவர்கள் இருந்தால் இயற்கை செய்ததைப் பற்றி வருந்தமாட்டார்கள். மரியாதையோடும் பிரமிப்போடும் அணுகாமல் சிதைப்பவர்கள் தங்கள் பெயரைக் கிறுக்குபவர்களைப் பார்த்து வருந்துவர்

      நீக்கு
  16. நீங்கள் யாத்திரையில் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு சொல்லியிருந்தீர்கள். அந்த யாத்திரைதான் இல்லையா? நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    இந்த யாத்திரை பற்றியும் வரும் தானே?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார். பஞ்ச துவாரகையே இன்னும் மூன்று மாதங்களுக்கு வரும் என நினைக்கிறேன். குருவாயூர், மன்னார்குடி, பத்ரிநாத் எனப் பல எழுதவேண்டியிருக்கின்றன. இதுவும் வரும் வரிசை மாற்றி

      நீக்கு
  17. நெல்லை துளசியின் கருத்தை இங்கு போடும் போதுதான் இன்னொன்றும் எனக்குத் தோன்றியது. அன்னிக்கு அப்ப இக்கோயில்களை வடிவமைச்சவங்க கடல் பக்கம் இருக்கே எவ்வளவு நாள் அரிக்காம சிற்பங்கள் இருக்கும்? எதிர்காலத்தில் என்னாகும்? யாராவது பராமரிப்பாங்களா? உலகம் எத்தனை வருஷம் இருக்கும்னெல்லாம் யோசிச்சிருப்பாங்கதானே!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல கேள்வி. தஞ்சை கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன் செடி கொடிகளோடு மோசமாக இருந்தது. பராமரிப்பது நம் கடமை. தொல்லியல்துறை மனசு வைக்கணும்

      நீக்கு
  18. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது

    தகவல்கள் சிறப்பு
    யாசகம் கேட்கும் தலைவர் இதில் ஏதும் சூட்சமம் இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி

      யாசிர்களின் தலைவர் கவுன்சிலராக ஆக, அரசியல்வாதி ஆக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்

      நீக்கு
  19. மூலவர் ருக்மணி பிராட்டியை தரிசனம் செய்து கொண்டேன். ருக்மணி வரலாறு அறிந்து கொண்டேன்.
    சிலைகள் எல்லாம் அழகு. உப்புக்காற்ரில் அழிந்து வருவது வருத்தமான விஷயம்.

    //யாராவது ஒருவரிடம் கொடுத்தால் போதும், நாங்களே பிரித்து எடுத்துக்கொள்வோம் என்று சொன்னார். இது வித்தியாசமா இருக்குல்ல?//

    தமிழ் நாட்டிலும் நிறைய கோவில்களில் இப்படி இருக்கிறது நெல்லை. நவக்கிரக கோவில் ஆடுதுறை(சூரியனார் கோவில்)கோவில் வாசலில் அமர்ந்து இருக்கும்சாதுக்கள் இப்படி சொல்வார்கள்.

    நிறைய இடங்களில் யாராவது ஒருவரிடம் கொடுங்கள் போதும் என்றும் "அவர் தரமாட்டேன் என்கிறார் தனியாக கொடுங்க" என்று பின்னால் துரத்தி வருவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... ஆஹா என்னிடம் கொடுங்க, நானே பிரித்துக்கொடுத்துவிடுகிறேன்... இது நல்ல டீலா இருக்கு. இதன் காரணம், ஒருவர் யாசகம் கேட்டால் கொடுக்க நினைக்கும் நம் மனம், வரிசையாக யாசகத்திற்குப் பலர் நின்றுகொண்டிருந்தால் ஒருத்தருக்கும் கொடுக்காமல் அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவே நினைக்கும். அதற்காக, வந்தவரை லாபம் என்று இப்படி ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  20. அங்கே சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் எனது மனதில் இப்போதும் பசுமையாக இருக்கிறது.

    சிற்பங்கள் உப்புக் காற்றால் சிதைந்திருப்பது வருத்தமே! ஆனாலும் இயற்கைக்கு எதிரே மனித சக்தி என்ன செய்து விட முடியும் என்ற எண்ணமும் வலுத்தது.

    தொடரட்டும் உங்கள் உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். 'இயற்கைக்கு எதிரே மனித சக்தி' - உண்மைதான். இருந்தாலும் தஞ்சை பெரியகோவிலில் செய்ததுபோல சுத்தம் செய்து, உப்புக்காற்றால் பாதிப்படையாவண்ணம் கெமிக்கல் பூசி என்று ஏதாவது செய்யலாம் என்றே நினைக்கிறேன்.

      நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!