திங்கள், 5 பிப்ரவரி, 2024

திங்கக்கிழமை  : விளிம்பிப்பழயோதரை - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

  

விளிம்பிப்பழயோதரை/விளிம்பிப்பழஹோரா/விளிம்பிப்பழ சாதம்


சும்மா இப்படி ஒரு பெயரை வைத்துக் கொள்வோம். வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம்! நம்ம நிலைய வித்வானுக்கு திங்க பதிவு, தான் போட வேண்டியதாச்சே என்று ஆகிவிட்டது. நிலைய வித்வானின் சொந்த சாஹித்யத்துக்கு என்ன குறைச்சல்? நல்லாதானே வாசிக்கிறார்….Oh! No! ….சமைக்கிறார்! ஸ்ரீராமின் கற்பனைக் குதிரை புல்லை மேயப் போயிருக்கிறதாம். பின்ன அடுத்த  கற்பனை வருவதற்குள் வயிற்றுக்குச் சிறிது ஈயப்பட வேண்டாமோ. வந்ததும் நல்லா வேகமா ஓடும்.

So, ஸ்ரீராம், உங்களுக்கு அடுத்த கற்பனை தயாராகிடும். சமையலறைக்குப் போய் ஏதாவது கைக்கு அகப்பட்டதைப் போட்டு வித்தியாசமா சமைச்சு தயாரா இருங்க. உங்க கற்பனைக் குதிரை சமையலறைக்குள் வரதுக்குள்ள …….

இந்தாங்க பிடிங்க இந்த வாரம் எபி சமையலறையில் Star fruit வைச்சு செய்முறை. Wait a minute! முதல்ல இதுக்குத் தமிழ்ல என்ன பெயர்னு கூகுளிடம் கேட்டுவிட்டு வரேன்.

“ஹலோ கூகுள் Star Fruit க்குத் தமிழ்ல என்னன்னு சொல்வாங்க?”

"விளிம்பிப்பழம், தமரத்தம் அல்லது தம்பரத்தம் (Carambola, starfruit) என்பது விளிம்பி மரத்தின் பழமாகும்."

நன்றி விக்கி!, கூகுள்! விளிம்பிப் பழம் பெயர் நல்லாருக்குல்ல. அப்படியே சொல்லிக்குவோம். தலைப்பும் அப்படி வைச்சா "என்னாது இதுன்னு" யோசிச்சு எட்டிப் பார்க்கலாம் இல்லையா அதான்!!!

இது பழம்னா மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுவும் பெரிய பழங்கள்னா இனிப்பும், சிறிது புளிப்புமாக, நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இளம் பச்சையாக இருக்கும் போது புளிப்பு தூக்கலாகவும் இனிப்பு கொஞ்சமாகவும் இருக்கும்.

இதை முன்னரே பார்த்திருக்கிறேன் என்றாலும், இங்கு பங்களூர் வந்துதான் அதிகமாகப் பார்க்கிறேன். பழமும்  காயும். ஆனால் பெரும்பாலும் இளம் பச்சை நிறத்தில் மஞ்சள் பூசினாற்போல பச்சையும் மஞ்சளுமாக (நல்ல Combination இல்லையா! நான் புடவை கட்டுவது அபூர்வம் என்றாலும் மஞ்சளில்/Mustard வண்ணத்தில் பச்சை பார்டர் சேலைகள் ரொம்ப நல்லாருக்கும்!)

சமையலறைக்குள்ள என்ன புடவைய பத்தி பேச்சு? No diversion! - திங்க director நம்ம ஸ்ரீராம்தான்!!!

வந்த புதிதில் எப்படி இருக்கும் என்று பார்க்க வாங்கியாச்சு. விளம்பிப்பழத்தைதான். பச்சை மாமேனியில் மஞ்சள் பூசினாற் போல இருந்தது. நினைத்தது போல் புளிப்புதான். மாங்காயின் சுவை இல்லை என்றாலும் பிடித்திருந்தது. உப்பு போட்டும் அல்லது உப்போடு காரமும் பெருங்காயம், வெந்தயப்பொடி போட்டு கடுகு தாளித்துச் சேர்த்து  மாங்காய் ஊறுகாய் போலச் சாப்பிடலாம். Salad இல் சேர்க்கலாம். ரசம் செய்யலாம். சாம்பார் செய்யலாம், பழமாக இருந்தால் அப்படியே சாப்பிடலாம், Smoothie செய்யலாம்.. பழரசம் செய்யலாம். இப்படி நிறைய லாம் கள்.

வேறு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இதையே எலுமிச்சை சாதம், மாங்காய் சாதம் அல்லது புளியோதரை போன்று புளிப்புக்குப் பதிலாக இதைச் சேர்த்து செய்து பார்த்தாலென்ன என்று விளைந்ததுதான் விளிம்பிப்பழயோரை/ ஹோரா – Star Fruit ஹோரா! விளிம்பிப்பழ சாதம்! வேறொரு நாளில் எலுமிச்சை சாதம் செய்வது போல் செய்தேன்.

நன்றாகக் கழுவி தண்ணீர் வடிந்த பின் இதன் விளிம்பு (ஓ அதான் தமிழ்பெயர்க்காரணமோ!!) போல இருக்கும் பாகங்களின் நாரை உரித்து எடுத்துவிடுங்கள். (படத்தில்) உங்களுக்கு ஒரு புதிர். படத்தில் எத்தனை இருக்கின்றன என்பதை எண்ணிச் சொல்லுங்கள்! அத்தனையும் எடுத்துக் கொண்டேன்!.

அதன் பின் குறுக்காக மெலிதாக நறுக்கிக்கோங்க. (படம்) நட்சத்திர வடிவம் தெரிகிறதா? ஹப்பா Star Fruit பெயர்க்காரண justification ஆகிடுச்சு.

புளிப்பு குறைவு என்று தோன்றினால் சின்ன அருநெல்லிக்காய் அளவு புளியை ரெண்டு மேசைக்கரண்டி தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். நான் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வதுண்டு. ஆனால் இங்கு இந்தச் செய்முறையில் புளி சேர்க்காமல் செய்தேன்.

கிட்டத்தட்ட புளியோதரைக்குச் செய்வது போல் இந்த எண்ணிக்கைக்கு 1 தேக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கோங்க. பெருங்காயக் கட்டி என்றால் 2 புளியங்கொட்டை அளவு எடுத்து வெறும் வாணலியில் பொரித்துக் கொள்ளுங்கள். நான் பெருங்காயப் பொடி பயன்படுத்தியதால் 1 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதை வெந்தயத்தோடு கடைசியில் போட்டுக் கொண்டேன் பெருங்காயம் வறுபட அந்தச் சூடு போதும் என்பதால். இரண்டையும் ஆறியதும் பொடிச்சுக்கோங்க.

அடுத்தாப்ல வாணலில 1 தேக்கரண்டி நல்லெண்ணை விட்டு அதில் உங்கள் காரத்திற்கு ஏற்ப வற்றல் மிளகாய் - நான் 3 எடுத்துக் கொண்டேன். அதோடு 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பொடித்து வைத்தவை எல்லாம் அப்பால இருக்கட்டும், இப்ப வாணலில/சட்டில 3/4 மேசைக்கரண்டி நல்லெண்ணை விட்டுக்கோங்க. எண்ணை சூடானதும் 1 வற்றல் மிளகாயைச் சின்ன சின்னதாகக் கிள்ளிப் போட்டு அவை நன்றாகச் கருஞ்சிவப்பாக வரப்ப, 1/2 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு தாளித்து எல்லாம் சிவந்து வரும் போது 

நறுக்கி வைத்திருக்கும் பழ/காயின் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். 

தாளிக்கும் போது கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம். நான் கறிவேப்பிலை கொஞ்சம் காய்ந்தாலும் அதை அப்படியே பொடித்துச் சேர்ப்பதுண்டு நல்ல மணமாக இருக்கும். காய்ந்த இலைகளைத் தூர எறிவதில்லை. பொதுவாகவே நான் புளியோதரை செய்யும் போது தாளிக்கும் போது சேர்க்காமல் எண்ணை பிரிந்து வரும் சமயம்தான் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கம்.

1/4தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து, தேவையான உப்பும் போட்டுக் கலந்து வதக்கவும்.

நன்றாக வதங்கி வரும் வேளையில் பொடித்து வைத்திருக்கும் பொடிகளை எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்து 


ஒரு 10 நிமிடத்தில், சுருண்டு வரும் பக்குவத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். 


அவ்வளவுதான். இனி உதிர வடித்த சாதத்தில் தேவையான அளவு போட்டுக் கலக்க வேண்டியதுதான். இதோ கலந்த சாதம். விளிம்பிப்பழயோதரையை விளம்பியிருக்கிறேன்! ENJOY!

எத்தனை Star fruits அந்தத் தட்டில் இருக்கின்றன என்று சரியாகச் சொல்றவங்களுக்கு ஒரு Plate விளிம்பிப்பழயோதரை பரிசு! 

கீதா உனக்கு எங்க மேல என்னம்மா கோபம்! இப்படி வைச்சு செய்யறியே!!!!!

49 கருத்துகள்:

  1. பேரே புதுசா இருக்கு!  அடுத்த வாரம் என்ன தலைப்பு வைச்சு எழுதப் போறீங்க கீதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலைய வித்துவானின் முதல் கருத்தே கழன்றுகொள்ளும் வித்த்தில், தி பதிவிலிருந்து, இருக்கு. அடுத்த செய்முறை அதற்கு அடுத்த வாரம் எழுதுங்க கீதா ரங்கன்.

      நீக்கு
    2. தவறான அவதானிப்பு!!  செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யாமல் புதிதாக செய்வது வரவேற்கத்தக்கது இல்லையா?    அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.  அடுத்ததையும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.  (ஷ்,,, அப்பா...   கோனார் நோட்ஸ் மாதிரி போட வைத்து விட்டாரே நெல்லை!)

      நீக்கு
    3. ஆஹா! உடனே போட்டாச்சா!! நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! ஸ்ரீராம். 4 நன்றி இருக்கா ஹப்பா! மொய்க்கு மொய் வைச்சாச்சு! ஹாஹாஹாஹா...

      ஸ்ரீராம் அது ஒன்னுமில்லை கொஞ்சம் புதுசா செய்வது எனக்கும், மகனுக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனா அவனுக்கு இப்ப நேரமில்லை செய்யறதுக்கு. இருந்தாலும் குறிப்புகள் அவனுக்காக என்பதால் செய்வதுண்டு.

      தேடிப் பார்க்கறேன் வித்தியாசமா என்ன செய்து புகைப்படங்கள் ஒழுங்கா இருக்கான்னு. கிடைத்தது என்றால் அனுப்புகிறேன். மற்றது(!!!!!! இது என்னன்னு உங்களுக்குப் புரியும்) அனுப்ப என் கற்பனைக் குதிரை மேயப் போனது இன்னும் வரலை. ஹிஹிஹிஹி

      மற்ற பதில்கள் கொடுக்க கொஞ்சம் அப்பால வரேன். வீட்டு வேலைகள் முடித்து அதன் பின் முக்கியமான ஒரு வேலை இருக்கு துளசியின் சிலபஸ் தயாரிப்பு ஒன்று அதுக்குச் சிலது இருக்கு. வருகிறேன் பின்னர்..

      கீதா

      நீக்கு
    4. நெல்லை, ஸ்ரீராம் கழன்று கொள்ளவில்லை. அவர் என்னிடமிருந்து மட்டுமில்லை, எல்லாரிடமிருந்தும், உங்களிடமிருந்தும் தான் திங்க பதிவு வந்தால் நல்லாருக்கும்னுதான் அதுவும் வித்தியாசமாக வருவதை, அதிகம் அறியப்படாத செய்முறைகளை அவர் வரவேற்பார் என்று சொல்வேன். வித்தியாசமானதை அவர் சாப்பிடுவாரா பிடிக்குமான்னு அடுத்த கேள்விய எங்கிட்டக் கேட்கக் கூடாதாக்கும்!!! ஹாஹாஹாஹா

      இங்கு வரவங்க சிலர், கருத்து போடாமல் பார்க்கறவங்க இப்படிச் சிலர் வித்தியாசமா சமைச்சுப் பார்ப்பாங்க அதனால அவர் கேட்கிறார் அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  2. விளம்பி பழத்தையும், விளம்பி பழ சாதத்தையும் கண்டுபிடிச்சதற்கு ஒரு no pal பரிசு கொடுக்கலாம். ஒரு சின்ன டௌட், செய்ததை சாப்பிட்டீர்களா?
    இனி இந்த விளம்பி பழத்தை வைத்து ஒரு தொடர் பதிவு தொடங்கலாம். விளம்பிப்பழ ரசம்., சாம்பார், ஊறுகாய், சட்னி என்று சில வாரங்களை ஓட்டலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஜெ கே அண்ணா. ஆமாம் இதுக்குப் பல்லு தேவையில்லைதான்!!!

      உங்க சின்ன டவுட் - நானும் சரி நம்ம வீட்டிலும் சரி இப்படி வித்தியாசமாகச் செய்வதை விரும்பிச் சாப்பிடுவாங்கன்றதுனாலதானே செய்யறேன் Risk எடுத்து எல்லோரையும் நான் உட்பா சோதனை எலிகளாகிறோம்.

      எல்லாருக்கும் பிடித்திருந்தது.

      அண்ணா அப்படித் தொடர் பதிவென்றால் எல்லாருக்கும்...ஏன் எனக்கே கூட அயற்சி ஆகிடும்.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. எனக்கு Monotony கொஞ்சம் கஷ்டம். அனுபவித்துச் செய்ய விரும்புவேன். சமையலில் மட்டுமில்லை எல்லா வேலைகளிலுமே ஏதேனும் புதுசா வித்தியாசமா செய்ய நினைப்பேன். எழுத்தில் கூட வித்தியாசம் இருந்தால் நல்லாருக்குமேன்னு நினைப்பேன். அதனாலதான் எழுத முடிவதில்லை! அதுவும் ஒரு காரணம்.
      நடைப்பயிற்சிக்குக் கூட ஒரே போன்று தினமும் ஒரே இடத்தில் நடப்பதில்லை. வேறு வேறு இடங்களில். அல்லது மாற்றி மாற்றி. வீட்டில் இப்படி நானும் என் மகனும் மட்டுமே. மகன் இப்ப இங்கு இல்லை எனவே நான் மட்டும்!..

      கீதா

      நீக்கு
  3. முதலில் தலைப்பைப் படித்து, விளாம்பழத்தில் செய்முறை போலிருக்கு, நாமதான் அதை கயாவில் விட்டாச்சே என்று நினைத்தேன். ஸ்டார் ஃப்ரூட்னு நல்ல தமிழில் எழுதி தமிழை வாழவைக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....விளாம்பழத்தில் வேறு மூன்று செய்முறைகள் செய்தேன் புகைப்படம் எடுக்காம விட்டுட்டேன். விளாம்பழ அல்வா, விளாம்பழம் குழம்பு, விளாம்பழ தயிர் கிச்சடி (உப்புமா இல்லை!!!)

      ஸ்டார் ஃப்ரூட்னு நல்ல தமிழில் எழுதி தமிழை வாழவைக்கக்கூடாதா?//

      சிரித்துவிட்டேன் முடிலப்பா!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நல்ல காலம் விளாம்பழ செய்முறைகள் புகைப்படம் எடுக்கலை இங்க போட்டிருந்தா நீங்க சொல்வீங்க, "தப்பிச்சேன் நான் கயால விட்டுவிட்டேனே!!" ன்னு பட்டாசு வெடிச்சு கொண்டாடியிருப்பீங்க!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  4. உண்மையைச் சொன்னால், முதலில் என்ன என்று சொல்லி பண்ணவா எனக் கேட்டால், வேண்டாம்னு சொல்லிடுவேன், பண்ணினப்பறம் பெயர் சொன்னால் சாப்பிடமாட்டேன், புளியோதரை/மாங்காய் சாதம் வித்தியாசமான செய்முறை எனச் சொல்லிக் கொடுத்தால்தான் டேஸ்டே பண்ணுவேன். ரொம்பப் பிடிச்சுப்கோச்சுனா உண்மையைச் சொல்லலாம்.

    உணவில் ஃப்ளெக்சிபிலிட்டி என்னிடம் இல்லாத்தால், வீட்டில் உள்ளவர்கள் நான் அவர்களுடன் புதுப் புது ரெஸ்டாரன்டில் புதிய உணவுகளைச் சுவைக்கச் சேர்ந்துகொள்வதில்லைனு வருத்தப்படுவாங்க. ஹாஹா... இந்த விஷயத்தில் நான் எங்கப்பாவின் க்ளோன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியுமே நெல்லை உங்கள பத்தி! அதான் கருத்துல அடிக்கடி சொல்லி மனப்பாடம் ஆகிடுச்சே!!! ஹாஹாஹா...பரீட்சைக்குப் படிச்சது கூட மனப்பாடம் ஆகுதோ இல்லையோ இங்க வரும் கருத்துகள் வைச்சு பலருக்கும் என்னான்றது பதிந்துவிடுகிறது!

      எங்க வீட்டில் புதுசா வீட்டில் சமைச்சா சாப்பிடுவாங்க. வெளில என்றால் யோசனைதான்.

      கீதா

      நீக்கு
  5. செய்முறை நன்றாக இருக்கிறது.

    முதன் முதலில் ஸ்டார் ஃப்ரூட் நான் தாளவாடியில்தான் பார்த்தேன். 1977. ஐந்து பைசா ஒன்று. ரொம்பப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      தாளவாடிலயும் கிடைச்சிருக்கும். பழமா இருந்தா நல்லாருக்கும்....புளிப்பு கூடப் பிடிச்சவங்களுக்கு பிடிக்கும்.
      இப்ப இதன் விலை அதிகம்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. பெங்களூரில் நிறைய கிடைக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு வாங்கினேன். புளிப்பு அவ்வளவாகப் பிடிக்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இங்கு நிறைய கிடைக்கிறது. நெல்லை நீங்க பச்சையாகவோ, அதில் லேசா மஞ்சள் கலந்து படத்துல இருக்காப்ல இருக்கறத வாங்கக் கூடாது. நல்ல முழுவதும் மஞ்சளா இருக்கறத வாங்கணும் அதில் பெரிதாக இருப்பதை வாங்கணும் அதுலதான் கொஞ்சம் திதிப்பு இருக்கும் நல்லாருக்கும்

      1977 ல பிடிச்ச புளிப்பு இப்ப பிடிக்கலை பாருங்க...வயசாகிடுச்சு!

      கீதா

      நீக்கு
  7. எத்தனை ஸ்டார்கள் இருக்கின்றன எனக் கேட்டீர்களா இல்லை ஸ்டார் ஃ்ரூட்டா? ஹா ஹா ஹா. இதே முறையில் மாங்காய் புளிஹோரை நல்லா இருக்குமா?

    அடுத்தது அரை நெல்லிக்காய் புளியோதரை ரெசிப்பி போடும் எண்ணம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...நெல்லை அந்த புதிர் கேட்க நினைச்சேன் சரி பாவம் எல்லாருக்கும் வயசாகிடுச்சுன்னு பழம் மட்டும்தான் கேட்டேன்!

      அரை நெல்லியா அரு நெல்லியா ? எங்க மாமியாரே நெல்லிக்கா சாதம் செய்வாங்க. அரை நெல்லி ஜூஸ் செய்வாங்க. மாமியார் வீட்டில் அரை நெல்லி மரம் உண்டு. நாங்க அதை உதிர்த்து பரித்து ஜூஸ் செய்ததுண்டு சாதம் செய்ததுண்டு.

      நானும் அரை நெல்லி சாதம் செய்ததுண்டு. இங்க வந்து அரை நெல்லி கண்ணில் படவே இல்லை அவ்வளவா. நெல்லி சர்க்கரைவியாதிக்கு ரொம்ப நல்லது. நெல்லிக்காயும் மஞ்சளும் சேர்த்து சாறாகவோ, சும்மா அப்படியேவோ சாப்பிட சர்க்கரை வியாதி என்பதை விட Pancreas க்கு ரொம்ப நல்லது முழு ஆரோக்கியத்துக்கும்.

      நெல்லிக்காய் புளியோதரை என்பதை விட நெல்லிக்காய் சாதம் எனலாம். ரெண்டு நெல்லிலயும் செய்யலாம்.

      படங்கள் இல்லை எனவே போடமுடியாதே. இனி செய்யறப்ப எடுத்தா அனுப்பிடுவோம்!!!

      நன்றி நெல்லை

      கீதா



      நீக்கு
  8. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. மிகச் சிறப்பான பதிவு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. விளாம்பழத்தைச் சொல்கிறீர்களோ என்று
    பார்ய்தேன். ஹி..ஹி..
    படத்தைப் பார்த்ததும் சந்தேகம் தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஅஹாஅ.....படம் போடலைனா கண்டிப்பா குழப்பம் இருந்திருக்கும் இல்லையா!!!

      நன்றி ஜீவி அண்ணா

      கீதா

      நீக்கு
  11. நீங்க எங்கே பெங்களூரு போனீங்க? இன்னொரு வித்த்தில் கேட்கணும்னா நீங்களுமா பெங்களூரு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெங்களூரு வந்து 5 வருடங்கள் ஆகின்றன, ஜீவி அண்ணா. ஆமாம் நானும் பெங்களூருதான்!/பெங்களூருவில் தான்.

      கீதா

      நீக்கு
  12. உங்கள் பெயரைப் பார்த்தாலே குமரி மாவட்டம் நினைவுக்கு வரும் எனக்கு? அதுவும் போயாச்சா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியேதான் ஜீவி அண்ணா நான் இப்பவும் குமரிப் பெண்ணேதான்!!! பெண்தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (நெல்லை இப்ப வந்திடுவாரே!!! சொந்தச் செலவுல.....ஹிஹிஹி)

      அது எப்படிப் போகும் ஜீவி அண்ணா. நாரோயில், தின்னவேலி யேதான். ஊர் ஊராகப் போகும் நிலை எனும் போது போய்த்தானே ஆக வேண்டும்!

      நன்றி ஜீவி அண்ணா. எங்க ஊரை நினைவு வைத்திருப்பதற்கு!

      கீதா

      நீக்கு
  13. இந்தக் காயை என்னுடைய சின்ன வயதில், 'புளிச்சகாய்' என்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதோ ஒருமுறை தின்று பார்த்ததும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இது புள்ளிச்சாய் ன்னு சொல்வாங்களா! ஆமாம் அது புளிப்புதான் ஆனால் பழமாகக் கிடைப்பது சில க்டைகளில் அதுவும் இங்கு சில department கடைகளில் பார்த்திருக்கிறேன் வாங்கியிருக்கிறேன். பழம் கிடைச்சா வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. நிறைய பயன்கள் உண்டு இதற்கு.

      மிக்க நன்றி கௌ அண்ணா.

      கீதா

      நீக்கு
  14. வித்யாசமாக இருக்கிறது செய்முறை விளக்கம் நன்று.

    அந்த புகைப்படத்தில் 8 பழங்கள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி. கோமதிக்கா சரியா சொல்லியிருக்காங்க கமலாக்காவும். 9 இருக்கு கில்லர்ஜி. ஒன்று மற்றொன்றின் மீது மேலே இருக்கு. பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கப் பதிவு செய்முறை , படங்கள், மற்றும் விளக்கமான கட்டுரையுடன் அருமையாக உள்ளது தங்களின் வழக்கமான அருமையான எழுத்து நடையை ரசித்தேன். நானும் முதலில் விளாம்பழம் என்றுதான் நினைத்தேன்.

    எலுமிச்சை சாதம் மாதிரி, நார்த்தங்காய் சாதமும் பண்ணலாம். முன்பு சில தடவை பண்ணியுள்ளேன். அதுவும் நன்றாக இருக்கும். ஆனால், இப்போது வீட்டில் எல்லோருக்கும் அது பிடிக்க வேண்டுமே..! நான் எலுமிச்சை சாதத்திற்கும் சமயத்தில் இப்படித்தான் மி. வ. உ. ப. க. ப என வறுத்துப் பொடித்துப் போடுவேன்.

    அதுபோல் இன்று விளாம்பழத்தை வைத்து நீங்கள் செய்துள்ள கலவன் சாதமோ என நினைத்தேன். பிறகு நீங்கள் சொல்லி வருகையில் இதன் பெயரை வித்தியாசமாக உணர்ந்தேன். நான் இதுவரை இந்தப்பழத்தை பார்த்ததில்லை. ஆனால் இந்தப் புளிப்பு எனக்கு உடம்புக்கு ஆகாது. இங்கு எங்காவது இந்தப்பழம் கிடைத்தால் செய்து பார்க்கிறேன். இப்போது நீங்கள் அறிமுகப்படுத்தி இந்தப்பழத்தை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளாம்பழத்தை வைத்தும் செய்யலாம், ஆனால் வெல்லம் சேர்க்க வேண்டும் கொஞ்சம். கொஞ்சம் தித்திப்பு கூடுதலாக இருக்கும். விளாம்பழ கேசரி, அல்வா எல்லாம் நன்றாக இருக்கும்.

      ஆமாம் கமலாக்கா நார்த்தங்காய் சாதம் செய்யலாம் நன்றாக இருக்கும். பச்சை நார்த்தாங்காயில் செய்வதைப் போல உலர் நார்த்தாங்காய் இருக்கு இல்லையா அதைச் சின்னதாகக் கிள்ளிப் போட்டு கலந்து செய்தால் - உப்பு பார்த்துப் போட வேண்டும் - வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும்.

      ஆமாம் இப்படி வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் பல கலவை சாதங்களுக்கும் தூவி விடலாம் நன்றாக இருக்கும். நீங்களும் அப்படிச் செய்வது சூப்பர் கமலாக்கா.

      புளிப்பு உங்க உடம்புக்கு ஆகாது என்றால் இதைத் தவிர்த்துவிடுங்க. ரிஸ்க் வேண்டாம். பழம் கிடைச்சா பாருங்க அதுவும் சின்ன துண்டு சாப்பிட்டுப் பாருங்க....ஒத்துக் கொண்டால் சாப்பிடுங்க இல்லைனா வேண்டாம் கமலாக்கா.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  16. தட்டில் 9 பழம் இருக்கிறது கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      ஆம் ஒன்பதுதான் உள்ளது. நானும் இப்போதுதான் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து எண்ணினேன். எனக்கும் ஒரு தட்டு பழ கலவன் சாதம் பார்சல் அனுப்பி வைக்கவும்.:))))

      பழத்தின் வாக்கே இப்படித்தானா ? இல்லை, நீங்கள் பாதியாக அரிந்து வைத்திருக்கிறீர்களா? நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆமாம் கோமதிக்கா 9 இருக்கு...இந்தாங்க பிடிங்க ஒரு ப்ளேட் விளிம்பிப்பழயோதரை!!!!

      கமலாக்கா அதே அதே உங்களுக்கும் அனுப்பறேன். நீங்க ஒரே ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டுவிட்டு மத்தவங்களுக்குக் கொடுத்திருங்க!!! புளிப்பு!

      பழமே/காயே அப்படித்தான் இருக்கும் இரு பக்கமும் முனைகளுடன் நடுவில் குண்டாக இப்படி விளிம்புகளுடன். ஆங்கிலத்தில் பழம் என்று பெயரில் இருந்தாலும் இங்கு படத்தில் உள்ளவை காய்கள்தான். பழுக்கத் தொடங்கிய நிலையில். முழுவதும் மஞ்சளாக எலுமிச்சம் பழ நிறத்தில் இருந்தால் பழம். அதுவும் நல்ல பெரிதாக இருந்தால் இனிப்பாக இருக்கும்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  17. விளிம்பிப்பழயோதரையை விளம்பியிருக்கிறேன்! ENJOY!//

    விளம்பிய விளம்பிப்பழயோதரை சூப்பர்.
    படங்கள் எல்லாம் அருமை.
    கோவையில் எப்போதும் கிடைக்கும். இங்கு கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன். வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்களா? அதை சொல்லவில்லையே நீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் கோவையிலும் பார்த்ததுண்டு. ஆனால் அதிகமாகக் கண்ணில் பட்டதில்லை. வாங்கியதில்லை. பழமுதிர் நிலையங்களில் பார்த்ததுண்டு. எப்படியோ மிஸ் செய்துவிட்டேன்.

      ஆமாம் அக்கா வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. நம் வீட்டில் புதுசா எது செய்தாலும் சாப்பிடுவாங்க. அதனாலதான் என்னால் நிறைய கற்றுக் கொண்டு செய்ய முடிகிறது நானாகவும் இப்படி மனதில் தோன்றுவதைச் செய்ய முடிகிறது. என் அம்மா ரொம்ப புதுசு புதுசா செய்வாங்க. என் மாமியார் வீட்டில் புதிதாகச் செய்வதைச் சாப்பிடுவாங்க.

      இன்று கூட பனீர் khurchan செய்தேன். paneer khurchan ன்னு பஞ்சாபில் அசைவத்துல செய்வாங்க....அது அங்கு ரொம்பப் பிரபலம். சமீபத்தில் தில்லி/குருகிராமம் பயணத்தில் தெரிந்து கொண்டது. பேசிக்கொண்டிருந்த போது அந்த ஊர் செய்முறைகள் வேறு என்னென்ன பிரபலம் என்று கேட்ட போது இதைச் சொன்னாங்க. ஆனா அவங்க வீட்டில் பக்கா சைவம். செய்ததில்லை. ஆனால் அப்ப அவர்கள் வீட்டில் பணி புரியும் பெண்ணிடம் தெரிந்து கொண்டேன். அவள் கணவர் சின்னதாகத் தள்ளுவண்டியில் உணவு செய்து விற்கிறார். அவர்கள் அசைவத்தில் சமைப்பதை பனீரிலும் செய்யலாம் என்றார். அதைத்தான் இன்று பனீரில் செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. ஆனால் படங்கள் எடுக்கவில்லை. காலை அவசரத்தில். அடுத்த முறை செய்யும் போது எடுக்க வேண்டும்.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  18. கீதா! புதிய முயற்சி மிக அருமையாக வந்திருக்கிறது! இங்கே தஞ்சையில் அங்கங்கே பார்க்கிறேன். அதனால் வாங்கி செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா. தஞ்சாவூரிலும் கிடைக்கிறதா. செய்து பாருங்க மனோ அக்கா. செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க மனோ அக்கா. நீங்க எல்லாம் கிச்சன் கில்லாடிகள்!

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  19. விளிம்பி புளியோதரை வித்தியாசமான முயற்சி வாழ்த்துகள்.

    நாங்கள் சலட், ஊறுகாய், கறிகளில் கலப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பாருங்க சலர், ஊறுகாய், கறிகளில் சேர்க்கறீங்க !!! மாதேவி நேரம் கிடைத்தால் நீங்க யாழ் உணவுக் குறிப்புகள் கொடுக்கலாமே! எனக்கு ரொம்பப் பிடிக்கும் யாழ் உணவு. கிட்டத்தட்ட கேரளத்து உணவு போலத்தான் இருக்கும். உங்க ப்ளாக்ல சிலது பார்த்திருக்கிறேன்.

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  20. சில கருத்துகள் ஒளிந்து கொண்டுவிட்டன....பார்த்து கொண்டு வந்து போடுங்க ஆசிரியர்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம், இங்குஎ எல்லாத்தையும் இட்டாந்ததுக்கு!!

      கீதா

      நீக்கு
  21. வித்தியாசமான முயற்சி. ஸ்டார் ஃப்ரூட் தில்லியிலும் கிடைக்கிறது - ஆனால் பெரும்பாலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து விற்பவர்கள் - வேகவைத்த கிழங்கைச் சுற்றி அலங்காரமாக வைத்திருப்பார்கள். ஆனால் இவற்றை வீடுகளில் சமைப்பது இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. இங்கும் கூட இதை வைத்து என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. நம் வீட்டில் யாரும் செய்ததில்லை. நான் ஒவ்வொரு முறை வாங்கிய போதும் (விலை குறைவாக இருக்கும் சமயம். விலை கூடுதல்) ஏதேனும் ஒரு செய்முறை பதிவில் குறிப்பிட்டிருப்பதில் - செய்வதுண்டு. அப்படி இதைச் செய்து பார்த்தேன்.

      பச்சை ஷிம்லா ஆப்பிள் - புளிப்பாக இருக்குமே அதில் கூடப் புளிக்குப் பதில் அதைப் போட்டு புளியோதரை போன்று செய்யலாம்.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!