திங்கள், 12 பிப்ரவரி, 2024

"திங்க"க்கிழமை  :  உடுப்பி பக்கோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 உடுப்பி பக்கோடா


தேவையான பொருள்கள்:



மைதா மாவு.   -   1 1/2கப்

தயிர்(புளிப்பான இருப்பது சிறப்பு) - 1 கப்

பச்சை மிளகாய்  -  2

இஞ்சி. - சிறு துண்டு

கறிவேப்பிலை. - சிறிதளவு 

உப்பு  -  1 டீ ஸ்பூன்

பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை:



மைதா மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொண்டு அதில் உப்பு, பொடியாக அரிந்த இஞ்சி,  பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, தயிரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க கொஞ்சமாக சமையல் எண்ணையை ஊற்றி பிசையலாம்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, அடுப்பை மிதமாக எரிய விடவும். 


எண்ணை காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு வெந்ததும் எடுத்து விடலாம். கடலை மாவு பக்கோடா போல சுலபமாக கிள்ளிப் போட வராது. கையில் எண்ணை தொட்டுக் கொண்டு கிள்ளிப் போட வேண்டும். 

உப்பு பிஸ்கெட் போல சுவையாக இருக்கும். சூடாக சாப்பிடும் பொழுது சுவை அதிகம். 


பின்கதை சுருக்கம்:

சமீபத்தில் கர்நாடக யாத்திரையில் உடுப்பியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு டீ குடிக்க கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு பலரும் போண்டா சாப்பிடுவதை பார்த்து, நாங்களும் ஆர்டர் செய்து, மங்களூர் போண்டாவிற்காக காத்திருந்தோம், புதினா சட்னியோடு வந்தது இந்த மைதா போண்டா. சர்க்கரை சேர்த்திருந்தார்கள் போலிருக்கிறது, லேசாக தித்தித்தது. இதன் செய்முறை தெரியும் என்பதால்,எ.பி.க்கு அனுப்ப வீட்டில் செய்தேன். அவர்கள் போண்டா சைஸுக்கு போட்டதை,நான் பக்கோடாவாக்கி விட்டேன்.

மைதா பக்கோடா என்றே போட்டிருக்கலாம். உடுப்பி பக்கோடா என்பது ஒரு தூண்டில் ஹிஹி! நன்றி! 

29 கருத்துகள்:

  1. டகடகவென்று முடிச்சிட்டீங்களே!

    எண்ணை காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாகக் கிள்ளிப்போட்டு -- ங்கற இடத்திலே தான் சந்தேகம். You mean, மொத்த மாவுலேந்து கொஞ்சம் கொஞ்சமா பிய்த்துப் போட்டு? அல்லது மொத்த மாவுலேந்து கொஞ்சம் எடுத்திண்டு உருட்டிப் போட்டு?..

    ரொம்ப காய்ந்து மொறுமொறுக்காமல் பதமா செளசெளன்னு
    இருந்தா, கூட கொஞ்சம் உ ள்ளே போகும். ரொம்ப காய்ந்தாலும் லேசா கசக்கும் இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீ.வி. சார். மறு மறுப்பதாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். செள செள என்றிருந்தால் பல்லில் ஈஷிக்கொள்ளும். அதிகம் காய்ந்தால் எல்லாமே கசக்கத்தான் செய்யும். நன்றி.

      நீக்கு
    2. *மொறுமொறுப்பாக இருந்தால்தான்

      நீக்கு
  2. திங்க(ள்) ஒன்றும் இல்லை என்ற கவலை இனி இல்லை. பா வே மேடம் இனி தொடர்ந்து தருவார்.
    மைசூர் போண்டாவுக்கும் உடுப்பி பக்கோடாவிற்கும் 6 வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. மங்களூர் போண்டா உளுந்தில் செய்யப்படுவது
      உடுப்பி போண்டா மைதாவில் செய்யப்படுவது
      2. மங்களூர் போண்டாவிற்கு மிளகு சேர்ப்போம்
      உடுப்பி போண்டாவிற்கு பச்சை மிளகாய் சேர்ப்போம்.
      3. மங்களூர் போண்டாவிற்கு உளுந்தை ஊற வைத்து அரைப்பதால் தயிர் சேர்க்கத் தேவையில்லை.
      உடுப்பி போண்டா தயிர் விட்டுதான் பிசைய வேண்டும்.
      4. மங்களூர் போண்டா, உளுந்து வடையின் உடன்பிறப்பு. அதனால் ரசத்தில், தயிரில் ஊறப்போடலாம்.
      உடுப்பி போண்டாவை அப்படியெல்லாம் செய்ய முடியாது.
      யோசித்து நாலு பாயிண்ட் தளர்த்தி விட்டேன்:)) பார்த்து மார்க்கு போடுங்க சார்.

      நீக்கு
    2. . மங்களூர் போண்டா உளுந்தில் செய்வது
      உடுப்பி போண்டா மைதா மாவில் செய்யப்படுவது.
      2. மங்களூர் போண்டாவில் காரத்திற்கு மிளகு சேர்ப்போம்.
      உடுப்பி போண்டாவில் அந்த வேலையைச் செய்வது பச்சை மிளகாய்
      3. மங்களூர் போண்டா உளுந்து வடையின் உடன்பிறப்பு. அதனால் ரசம், தயிர் இவைகளில் ஊறப்போடலாம்.
      உடுப்பி போண்டாவை அப்படியெல்லாம் செய்தால் யெக்!
      4. மங்களூர் போண்டாவிற்கு உளுந்தை ஊற வைத்து அரைப்பதால் நோ நீட் ஆஃப் தயிர்.
      உடுப்பி போண்டா தயிரில்தான் மாவை பிசைய வேண்டும்.
      எப்படியோ நாலு பாயிண்டுகள் தேர்த்தி விட்டேன். பார்த்து மார்க் போடுங்க சார்.

      நீக்கு
    3. மைசூர் போண்டாவும் மங்களூர் போண்டாவும் ஒன்றா? இதுவரை வேறு என்றல்லவா நினைத்தேன்.
      Jayakumar

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    நலமா? திங்கள் பதிவுக்கான தங்களின் உடுப்பி பக்கோடா செய்முறை படங்களுடன் அருமையாக உள்ளது.

    ஆம்... மைதா போண்டா சற்றே இனிப்புச்சுவையுடன் இருக்கும். (இங்குள்ள இட்லி சாம்பார் போல்.) நாங்களும் இங்கு வந்த புதிதில் சாப்பிட்டுள்ளோம். பின் மைதா சேர்க்க வேண்டாமென்பதால் மைதா சேர்த்த உணவுகளை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை. இன்று தங்கள் கைவண்ணத்தில் இந்த போண்டா பெயர் மாற்றத்துடன் நன்றாக உள்ளது. நானும் இது போல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பானுக்கா செய்முறை பார்த்ததும் இது இந்த ஊர் போண்டா ஆயிற்றே சர்க்கரை வேற சேர்ப்பாங்களேன்னு நினைத்தேன். கிள்ளிப் போட்டு பக்கோடா போல செய்தது சூப்பர்.

    நாமகரணத்தை ரசித்தேன் பானுக்கா. இப்படித்தான் புதிய புதிய பெயர் வைச்சு கொஞ்சம் வித்தியாசப்படுத்தி ஈர்க்கலாம்!!!

    படங்களே சொல்கின்றன நன்றாக வந்திருக்க்கு!!!..

    நானும் சின்னதா போட்டுவிடுவேன் சர்க்கரை சேர்க்காமல் ப மி, இஞ்சி சேர்த்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. உடுப்பி பக்கோடா செய்முறை விளக்கமும், படங்களும் நன்றாக இருக்கிறது. மாலை நேரத்தில் நன்றாக இருக்கும்.

    கோதுமை மாவிலும் நாங்கள் செய்து சாப்பிடுவோம் மழை காலத்தில்
    அதுனுடன் கொஞ்சம் பச்சரிசி மாவு கலந்து பிசைந்து செய்வேன். இவை திடீர் பக்கோடா வகையில் செய்யகூடியவை.

    பதிலளிநீக்கு
  8. பக்கோடா நன்றாக இருக்கிறது.படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  9. எளிய முறையில் செய்முறை விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  10. White flour என்பதால் மிகவும் யோசனை..

    ஒரு சில Biscuits தவிர அதன் பக்கமே போவது இல்லை...

    பதிலளிநீக்கு
  11. ஓ...! மைதாவுக்கு பதிலாக கோமதி அக்கா சொல்லியிருப்பது போல கோதுமை மாவில் செய்து பாருங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  12. உடுப்பி பக்கோடா செய்முறை நன்று. கேரளத்திலும் தட்டுத் கடைகளில் கிடைக்கிறது. ஆனால் பெயர் வேறு. பக்குவடா. மைதா கடலைமாவு என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!