புதன், 28 பிப்ரவரி, 2024

வரலாற்றுப் பாடத்தில் இன்றும் உங்களுக்கு நினைவில் உள்ளவை எவை?

 

சென்ற வாரம் யாரும் எங்களைக் கேள்விகள் கேட்காததால், நாங்கள் கேட்கிறோம் உங்களை : 

1) கீழ்க்கண்டவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்த சட்னி எது? ஏன்? 

a ) பொட்டுக்கடலை, தேங்காய் சட்னி 

b ) புதினா கார சட்னி 

c ) வேர்க்கடலை சட்னி ( எனக்குப் பிடிக்காது) 

d ) சிவப்புச் சட்னி (தக்காளி / மிளகாய்?) 

e ) வேறு ஏதாவது ..இருந்தால்  குறிப்பிடவும் .. 

2) உங்களுக்குத் தெரிந்த நல்லவர், ரொம்ப நல்லவர், ரொம்ப ரொம்ப நல்லவர் யார் யார்?  

3) சமீபத்தில் ஞாபக மறதியால் நீங்கள் சங்கடப்பட்ட சம்பவம் எது? 

4) பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் படித்த வரலாறு பாடத்தில் இன்றும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் பக்கங்கள் என்ன? ( நான் படித்த காலத்தில் எனக்குப் பிடிக்காத பாடம் வரலாறு பாடம் மட்டுமே. 'இதை எல்லாம் தெரிந்துகொண்டு யாருக்கு என்ன லாபம்' என்று நினைத்துக்கொள்வேன். மொகலாய மன்னர்கள் வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ள B H A J S A A என்று நெட்டுரு செய்து வைத்துக்கொண்டு பரிட்சை எழுதிய நாட்கள் நினைவில் உள்ளது. குப்தர்கள் காலத்தை ஏன் பொற்காலம் என்கிறோம் - என்ற கேள்வியும் ஞாபகம் உள்ளது) 

= = = = = = = =

KGG பக்கம் : 

JTS படித்த காலத்தில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிந்து தி மு க ஆட்சி வந்தது. அந்த காலகட்டத்தில் எனக்கு பதின்ம வயது நடந்துகொண்டிருந்ததால் அரசியலில் பெரிய ஆர்வம் எதுவும் கிடையாது. ஆனாலும் காமராஜர் தோற்றது மனதுக்கு வருத்தமாக இருந்தது. நாகையில் இருந்த நாட்களில் எனக்கு வோட்டுப் போடும் வயது வரவில்லை என்பதால் தேர்தல் காலத்தில் நடக்கும் அமளிகளை ஒரு பார்வையாளனாக மட்டும் பார்த்து ரசித்தது உண்டு. 

அந்தக் காலத்தில் - அப்பாவும் அம்மாவும் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்கள். அவர்களுடைய வோட்டு எப்பொழுதும் ஏர் பூட்டிய இரட்டைக் காளை சின்னத்திற்குத்தான். 

1967 தேர்தலுக்கு முன்பு, எங்கள் வீட்டில் நாங்கள் வாங்கிய பத்திரிக்கைகளில் வருகின்ற அரசியல் கட்டுரைகளை - முக்கியமாக காங்கிரஸ் ஆதரவு கட்டுரைகளை - யாராவது ஒருவர் படிக்க, மற்றவர்கள் அவர் படிப்பதை கேட்டு விவாதங்கள் நடத்துவார்கள். 

பள்ளிக்கூடத்திற்கு லீவு விடுவார்கள் என்பதற்காக JTS படித்த காலத்தில், பாலிடெக்னிக் மாணவர்களுடன் சேர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் - ஒருநாள் ' இந்தி ஒழிக' கோஷம் போட்டு ஊர்வலமாக சென்று, ஸ்கூலுக்கு பத்துநாட்கள் லீவு விட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும் சந்தோஷமாக வீடு திரும்பினோம்! 

எனக்குத் தெரிந்த வரையில், அண்ணாதுரை ஆட்சிக் காலம் நன்றாகத்தான் இருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எப்படியோ இருந்தவர், ஆட்சிக்கு வந்தபின் பொறுப்பு உணர்ந்து நன்றாக செயல்படத் தொடங்கினார். எவ்வளவோ நல்ல விஷயங்களை அமல் படுத்த திட்டங்கள் பல தொடங்கினார். ஆட்சிக்கு வந்த இரண்டே வருடங்களில் அவர் இறந்துபோனது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் - என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 

எங்கள் Blog பதிவுகளில் அரசியல் மற்றும் மத சம்பந்தமான எதிர்மறை கருத்துகள் இடம்பெறக் கூடாது என்பது எங்கள் கொள்கை என்பதால் இதற்கு மேல் இங்கே அரசியல் எழுதவில்லை. 

= = = = = = =

49 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹா திங்களோன்னு நினைச்சிட்டேன்!!!! கௌ அண்ணா, இத்தனை சட்னி சொன்னீங்க, சின்ன வெங்காயச் சட்னிய விட்டுப்புட்டீங்களே!!!!

    சட்னியில் நிறைய இருக்கே கொத்தமல்லி சட்னி, எள்ளுச் சட்னி/தொகையல் னு ....வெந்தயச்சட்னி/தொகையல் கூட இருக்கு

    நம்ம வீட்டில்/எனக்கும் எல்லாமே பிடிக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலைலயே பசியா? சட்னி கேள்விக்கு பட்னு பதில் வருது

      நீக்கு
    2. ஹாஹாஅஹாஅ....நெல்லை....

      இன்று சமையல் சிம்பிள். ஸோ இப்பவே வந்துட்டுட்டு விட்ட பதிவுகள் எல்லாம் பார்த்து முதல் ஆஜ்ர வைச்சுட்டுப் போயிடலாம் அப்பால ராக்கோழி (துளசி!!!! ஹாஹாஹாஹாஹா) மெதுவா முழிச்சு வந்து பதிவுக்கு கருத்து தரப்ப.....திரும்ப வரலாம்னு...

      கீதா

      நீக்கு
    3. சூரிய நமஸ்காரம் மற்ற பயிற்சிகள் செஞ்சதும் கொஞ்சம் பசிக்கும்தான்....நெல்லை. சுகர் நல்லா மெயின்டைன் ஆகுது...சாப்பாடும் சிம்பிளா வைச்சுக்கிட்டு மாலை 6 மணிக்கு மேல எதுவும் சாப்பிடாம இருந்தா...

      கீதா

      நீக்கு
  2. புதன் கேள்விகள் வரலைன்றீங்க. நல்ல நல்ல திட்டங்களை மனதில் வைத்திருப்பதால் ஒருவர் நல்ல அரசியல்வாகி ஆகமுடியுமா? யார் செயல்படுத்துவார்கள் என்பது கூடத் தெரியாமல் கொள்ளைக் கும்பலை வளர்த்தவர் நல்ல அரசியல்வாதி ஆக முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நல்ல திட்டங்களை மனதில் வைத்திருப்பதால் ஒருவர் நல்ல அரசியல்வாகி ஆகமுடியுமா? யார் செயல்படுத்துவார்கள் என்பது கூடத் தெரியாமல் கொள்ளைக் கும்பலை வளர்த்தவர் நல்ல அரசியல்வாதி ஆக முடியுமா?//

      ரொம்பக் கஷ்டம் நெல்லை. சுத்தி இருக்கறவங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தலைவரின் நல்ல திட்டங்களை மனதில் கொள்ளாமல்.... தனிமனிதன் நல்ல திட்டங்களோடு நாட்டை ஆளவ்து எல்லாம் ஒருநாள் முதல்வன் போலத்தான்...சினிமாவில் தான் நடக்கும்!

      கீதா

      நீக்கு
  3. நம்மைவி நல்லவர்களை நாம் சந்தித்திருப்போம். Recognise ம் பண்ணுவௌம். நாம் அவ்வளவு நல்லவன் கிடையாது என்று ஒத்துக்கொள்ளும் மனநிலை மாத்திரம் வராது

    பதிலளிநீக்கு
  4. பொதுவாஎனக்கு அபூர்வமாத்தான் சட்னி பிடிக்கும். கடைல ரவா தோசை போன்றவைகளுக்கு தேங்காய் சட்னி, சாம்பார் கலந்து தொட்டுக்கொள்ளப் பிடிக்கும். பொங்கலுக்கு தேங் சட்னியும் இட்லிக்கு கொத் சேர்த்து நீர்க்க அரைத்த தேங்காய் சட்னி யும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  5. பள்ளிக்கூட நாட்களில் வரலாறு ஆர்வமில்லை. பிறகு வரலாறு படிப்பதில் ஆர்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றபடி இவர் ஆட்சி பொற்காலம் என்ற அனுமானங்களில் நம்பிக்கை இல்லை

      நீக்கு
  6. உங்களுக்குத் தெரிந்த நல்லவர், ரொம்ப நல்லவர், ரொம்ப ரொம்ப நல்லவர் யார் யார்? //

    இப்படி நான் judgement க்குப் போவதில்லை. முத்திரை குத்துவதும் இல்லை. எல்லோரும் நல்லவர்களே.
    மனிதர்கள் என்றால் எல்லாரிடமும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தைப் பொருத்து ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வாங்க. முன்பு ஒரு மாதிரி பேசியவர் இன்றோ இல்லை அப்புறமோ அப்படியேதான் இருப்பார் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு பாடம் கற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொண்டு evolve ஆகிக் கொண்டு செல்வார்கள்தான்.

    எனவே யாரையும் வகைப்படுத்துவதில்லை.

    அப்படி evolve ஆகாமல் எப்போதும் பழைசைப் பற்றிப் பேசிக் கொண்டு அதை மனதில் சுமந்துகிட்டு எதிர்மறையாக நம்மைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பவங்ககிட்டருந்து நான் கொஞ்சம் விலகி இருப்பதை விரும்புவேன். ஆனால் அவர்களை மோசம் என்று முத்திரை குத்துவது இல்லை. அது அவங்களுடைய மனப்பக்குவம் அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு இந்தக் கேள்விக்கான பதிலை போட்டுட்டு வெங்கட்ஜி பதிவு பார்த்ததும் அங்க சும்மா லுக் விட்டா அங்கு இன்றைய வாசகம் இந்தக் கேள்விக்கான பதில்!!!

      கீதா

      நீக்கு
  7. என்ன ஐட்டம் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து பிடித்த சட்னி வகை மாறுபடும். இட்லிக்கு சரவணபவன் கார சட்னி, மெது தோசைக்கு தேங்காய் சட்னி, மசால் தோசைக்கு வேர்க்கடலை சட்னி, குழிப்பணியாரத்திற்கு புதினா சட்னி என்று பிடித்த சட்னி வகைகள் மாறுபடும். பொங்கலுக்கு
    வெங்காய சாம்பாரும் கடப்பாவும், கொத்சும், பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாவும் பிடிக்கும். கார அடைக்கு வெல்லம் தான் பிடிக்கும், அவியல் பிடிக்காது. சட்னி வகைகள் இல்லை என்றால் இட்லிக்கு மிளகாய்ப்பொடி பிடிக்கும்.

    இது இல்லாம புட்டுக்கு, கொண்டைக்கடலைக்கறி, ஆப்பம் தேங்காய்ப்பால் ஷ்டியூ (காரட் , பட்டாணி, பீன்ஸ், பச்சைமிளகாய் சேர்த்து) பிடிக்கும். இடியாப்பத்திற்கு சொதி அல்லது குருமா பிடிக்கும உப்புமாவிற்கு சாஸ் தான். (சேச்சுவான், அல்லது ஸ்வீட் & ஸ்பைசி). கடைசியாக பழைய சோத்துக்கு சின்ன வெங்காயம் மோர் மிளகாய், வத்தல் குழம்பு, என்பவை பிடிக்கும்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  8. 3 - ஹாஹாஹா ஒன்றா ரெண்டா மறதிகள்....எதைச் சொல்வது....எதை விடுவது!!!!! ஆனா அது மண்டையில் ஓடும் விஷயங்கள் பொருத்து. வாழ்க்கை அனுபவங்களைப் பொருத்தும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அண்ணா வரலாறு பற்றி எனக்கும் உங்களின் அதே மன நிலைதான் இருந்தது. இதெல்லாம் படிச்சு யாருக்கு என்ன லாபம் என்று. ஆனால் எதுவுமே வீண் பாடம் இல்லை என்பது கல்லூரி படிக்கறப்ப தெரிந்தது. ஆனால் ஒன்று, வரலாற்றில் நடந்தவற்றை மட்டுமே பேசிக் கொண்டு இருக்காம, இப்போது என்ன தேவை என்பதைப் பார்த்து முன்னேறிச் செல்வது நல்லது என்பது என் தனிப்பட்டக் கருத்து. நடந்தவை நடந்த்தவை அதைத் தெரிந்துகொள்ளலாம் ஆனால் அதை மட்டுமே பேசி அரற்றிக் கொண்டு இருப்பது நல்ல முன்னேற்றம் இல்லை இது நாட்டிற்கும் சரி குடும்பத்திற்கும் சரி...என்பது என் தனிப்பட்டக் கருத்து. We have to move on towards good things....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றில் அதாவது முன்பு நடந்த நிகழ்வுகளின் அனுபவங்களில் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு நல்ல விஷயங்களை நோக்கி முன்னேற்றிச் செல்லுதல்

      கீதா

      நீக்கு
  10. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. மொகலாய வம்சம் எதுவும் பிடிக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடிக்காது. ஆனால் மார்க் வாங்க வேண்டுமே!

      நீக்கு
  12. 1967 கால கட்டை அரசியல் அலசல் நன்று.

    பதிலளிநீக்கு
  13. தங்கை ராஜ்யஸ்ரீ மீது பாசம் வைத்திருந்த ஹர்ஷர்...

    அக்கா குந்தவையைக் கொண்டாடிய ராஜராஜன்..

    தாயை வணங்கிய சத்ரபதி சிவாஜி...

    இவர்களுக்கு
    ஈடு இணை உண்டா!..

    பதிலளிநீக்கு
  14. சட்னிகள் விதம் விதமாக - தில்லியில் கிடைக்கும் சட்னிகள் வேறு விதமானவை - பச்சை சட்னி, சிவப்பு சட்னி என்றே பல இடங்களில் பெயர் வைத்திருப்பார்கள்! பச்சை சட்னி எனப்படும் புதினா, கொத்தமல்லி வகையறாக்கள் சேர்த்த சட்னி எனக்குப் பிடிக்கும். நம் ஊர் சட்னி வகைகளில் வேர்க்கடலை சட்னி.

    பதிலளிநீக்கு
  15. சட்னி பொதுவாக காரமாக இருந்தால் பிடிக்கும்.

    நல்லவர்கள் என யாரைக் குறிப்பிடுவது அனைவரும் நல்லவர்களே. முரண்பட்டால் சற்று விலகி இருப்பேன்.

    வரலாறு பாடமும் பிடித்தமான பாடமாகத்தான் இருந்தது.சோழர் ,அசோகன் காலங்கள் அப்போது படிக்கும்போது மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  16. மதன் அவர்களது -
    வந்தார்கள் வென்றார்கள் -
    என்னிடம் இருந்தது..

    இப்போது சென்ற இடம் தெரியவில்லை..

    காங்கிரஸ் ஆட்சியில் மொகலாயர் பற்றி பள்ளி மாணவர்க்குத் தெரிய வந்ததே பெரிய அதிர்ஷ்டம்!..

    பதிலளிநீக்கு
  17. ஆம், அரசியல் மற்றும் பிற மத எதிர்ப்பு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. பேசவும் எழுதவும் தான் வேறு ஏராளமான விஷயங்கள் உள்ளதே. கனி இருப்பக் காய் கவராது இருப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கனி இருப்பக் காய் கவராது இருப்போம்.///

      கனி - கனி தான்
      காய் - காய் தான்..

      காயைக் கனி என்று சொல்லமுடியாதே..

      நீக்கு
  18. தோசைக்கு ஒரு வகையாய் , இடலிக்கு ஒரு மாதிரி, ஊர்களுக்கு கொண்டு போவது என்றால் அதற்கு ஒரு விதமான சட்னி அரைப்போம்.
    சட்னிகள் எல்லாமே மிதமான காரத்தில் இருந்தால் பிடிக்கும்.

    வரலாறு பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தவள்.

    எல்லோரும் நல்லவர்களே.

    நான் நேற்று குழம்பை அடுப்பில் வைத்து விட்டு தீயை குறைத்து வைத்து இருப்பதாய் நினைத்து கொண்டு ஹாலுக்கு வந்து விட்டேன், மறந்து போய் பெரிய அளவில் அடுப்பை வைத்து இருக்கிறேன்.
    குழம்பு வத்தி அடிபிடித்து வாசம் வந்த பின்தான் போனேன் குழம்பு போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அது போன்று நிகழ்ந்துள்ளது. இண்டக்ஷன் ஸ்டவ்வில் குழம்பை சூடுபடுத்த வைத்துவிட்டு - காலிங் பெல் அடித்தவுடன் வாசல் கதவைத் திறந்து - பிறகு வேறு வேலைகள் பார்த்து --- வந்தால் குழம்பு = கரிக்குழம்பு ஆகிவிட்டது! ( கறிக் குழம்பு அல்ல!)

      நீக்கு
  19. என் பதில்கள் கீழே
    1) கீழ்க்கண்டவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்த சட்னி எது? ஏன்?

    a ) பொட்டுக்கடலை, தேங்காய் சட்னி

    b ) புதினா கார சட்னி

    c ) வேர்க்கடலை சட்னி ( எனக்குப் பிடிக்காது)

    d ) சிவப்புச் சட்னி (தக்காளி / மிளகாய்?)

    e ) வேறு ஏதாவது ..இருந்தால் குறிப்பிடவும் ..
    சந்தேகமே இல்லாமல் தேங்காய் சட்னிதான். இட்லியோ தோசையோ பொங்கலோ தேங்காய் சட்னிதான் சரியான தோஸ்த். சிறு வயதில் சப்பாத்திக்குக் கூட தேங்காய் சட்னிதான் எனக்கு.....வேறு சைட் டிஷ் இருந்தாலும்.

    2) உங்களுக்குத் தெரிந்த நல்லவர், ரொம்ப நல்லவர், ரொம்ப ரொம்ப நல்லவர் யார் யார்?
    சிறு வயதில் ஆர்.எஸ்.எஸில் இரு வருடங்கள் இருந்தேன். அந்த சங்க ப்ரசாரக்காக என் ஊரில் இருந்த கந்தசாமி அய்யா போல ஒரு நல்லவரை 50 வருடங்களாக நான் பார்க்கவில்லை. அவருக்குக் கிடைக்கும் சொல்ப சம்பளமான 100 ரூபாயில் அவர் செலவு போக மிச்சம் பிடித்து எங்கள் activityகளுக்காக செலவு செய்வார். தன்னலம் என்பதே அறியாதவர்.


    4) பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் படித்த வரலாறு பாடத்தில் இன்றும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் பக்கங்கள் என்ன? ( நான் படித்த காலத்தில் எனக்குப் பிடிக்காத பாடம் வரலாறு பாடம் மட்டுமே. 'இதை எல்லாம் தெரிந்துகொண்டு யாருக்கு என்ன லாபம்' என்று நினைத்துக்கொள்வேன். மொகலாய மன்னர்கள் வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ள B H A J S A A என்று நெட்டுரு செய்து வைத்துக்கொண்டு பரிட்சை எழுதிய நாட்கள் நினைவில் உள்ளது. குப்தர்கள் காலத்தை ஏன் பொற்காலம் என்கிறோம் - என்ற கேள்வியும் ஞாபகம் உள்ளது)
    அசோகர் மரம் நட்டார், சத்திரங்கள் கட்டினார், etc. என்று ஒரு டெம்ப்ளேட் வைத்துக் கொண்டு அசோகர்/ராஜராஜச் சோழன் என்று பெயரை மட்டும் மாற்றிக் கொள்வேன். அந்த டெம்ப்ளேட் இன்னும் நினைவில் உள்ளது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!