வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

வெள்ளி வீடியோ : அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா

இன்றும் ஒரு டி எம் எஸ் பாடல்.  காஞ்சி காமாட்சி உனைக் காணும் திருக்காட்சி 

எழுதியவர் யாரன்று தெரியாது.  ஆனால் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் வரிகள், டி எம் எஸ்ஸின் குழையும் குரல்.

காஞ்சிக் காமாட்சி
உனைக் காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் ஓட்டும்
அருள் நிலவு முகம் காட்டும்
நெஞ்சின் இருள் ஓட்டும்
அருள் நிலவு முகம் காட்டும் எழில்
காஞ்சிக் காமாட்சி
உனைக் காணும் திருக்காட்சி

ஆசையினால் ஆடி துன்பம்
அடைந்ததெல்லாம் கோடி
ஆசையினால் ஆடி துன்பம்
அடைந்ததெல்லாம் கோடி
பாசத்தினால் கூவி உன்னை
பாடுகின்றேன் தேவி
பாசத்தினால் கூவி உன்னை
பாடுகின்றேன் தேவி திரு
காஞ்சிக் காமாட்சி
உனைக் காணும் திருக்காட்சி

பலர் வெறுத்தார் என்னை என்று
பழிப்பதுண்டோ அன்னை
பலர் வெறுத்தார் என்னை என்று
பழிப்பதுண்டோ அன்னை
கலைமகளே தாயே மெய்
கருணை கடல் நீயே
கலைமகளே தாயே மெய்
கருணை கடல் நீயே தெய்வ
காஞ்சிக் காமாட்சி
உனைக் காணும் திருக்காட்சி

எழுதி விட்டார் யாரோ
கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
எழுதி விட்டார் யாரோ
கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
அழுது விட்டேன் சும்மா நீ
அன்பு செய்வாய் அம்மா
அழுது விட்டேன் சும்மா நீ
அன்பு செய்வாய் அம்மா
அம்மா காஞ்சிக் காமாட்சி
உனைக் காணும் திருக்காட்சி

=================================================================
1989 ம் வருடம் கே ஆர் விஜயா - நம்பியார் ஜோடியாக நடித்து வெளிவந்த படம் 'பாட்டுக்கு ஒரு தலைவன்.

இப்ராஹிம் ராவுத்தரின் கதையை லியாகத் அலிகான் இயக்க, கங்கை அமரன் பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.  நம்பியார் மகனாக விஜயகாந்தும், அவர் ஜோடியாக ஷோபனாவும் நடித்திருந்தார்கள்!

மனோவும் ஜிக்கியும் பாடிய பாடல்.  நீண்ட நாட்கள் கழித்து ஜிக்கிக்கு ஒரு பாடல் கொடுத்திருந்தார் இளையராஜா.

இளையராஜா இசையில் மனோவின் குரலில் சரணங்கள் சிறப்பு கவனம் பெறும் பாடல்.  ஆரம்பத்தில், இடையில்,  முடிவில் எங்கும் இளையராஜா....

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்

நினைத்தது... யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான்தானே

மனதில் ஒன்று விழுந்ததம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினை பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே.....   [ நினைத்தது யாரோ ]

பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவும் இல்லை
மூடிய போது விடியவும் இல்லை
கடலை தேடும் காவிரிபோல்
கலந்திடவேண்டும் உன் மடிமேல்
இது புது சொந்தம் அன்பே     [ நினைத்தது யாரோ ]


43 கருத்துகள்:

  1. காஞ்சிபுரத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக வசித்தவன். கேட்கணுமா? டி எம் எஸ்ஸின் எடுப்பான குரலில் நெகிழ்ச்சியும் கலந்த பாடல். ஏற்கனவே பல தடவைகள் கேட்டிருக்கிறேன் என்றாலும் இப்பொழுதும் கேட்டேன். மனதுக்கு நெருக்கமான பக்தி உணர்வு மேலிட்டது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று காஞ்சிபுரம் சென்று வந்தேன் ஜீவி ஸார்.  காமாட்சி அம்மனை தரிசிக்க நேரமில்லாமல் போனது.

      நீக்கு
    2. அப்படியா? இப்பொழுதெல்லாம் ஏகக்கூட்டம். அற நிலையத் துறையின்
      குறுக்கீடுகள் வேறு.
      காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஒருபுறம் குமரக்கோட்டம் என்றால் இன்னொரு பக்கம் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கச்சபரேஸ்வர் கோயில். பழமையும்
      பெருமையும் கொண்ட ஆலயம்.

      நீக்கு
    3. ஆம்.  அது அறமில்லாத  வசூல் துறையாக மாறி கனகாலம் ஆகிறது!  கோவில்களுக்கு என்று தனியாகத்தான் ட்ரிப் வைக்கவேண்டும்.  மற்ற அலுவல்களுடன் கலக்க முடியவில்லை.

      நீக்கு
  2. இரண்டாவது பாடல் அருமை. மனோவின் இழைந்த குரலும் அதற்கு இசைந்த ஜிக்கியின் ஏற்ற இறக்க நெளிவு சுழிவுகளும் கங்கை அமரனின் வரிகளுக்கு
    இளைய ராஜாவின் இணங்கிய இசையும் ரொம்பப் பிடித்திருந்தன.
    ஷோபனாவின் முக அழகு அடக்கமான குத்துவிளக்குப் பிரகாசம்.
    உங்கள் வெள்ளி தேர்வுகளும் வழக்கம் போல் அட்டகாசம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இரண்டாவது பாடலுக்கும் பாசிட்டிவ் வரவேற்பு வழங்கியதற்கு நன்றி!

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. முதல் பாடலை 1982 ல் கேட்ட நினைவு..

    தமிழ் நம்பியின் கை வண்ணம் என்று நினைக்கின்றேன்..

    இப்போதெல்லாம் ஆந்திர கோஷ்டி கானம் போன்று ஆகி விட்டன தமிழ்ப்பாடல்கள்..

    பதிலளிநீக்கு
  5. ஆசையினால் ஆடி துன்பம்
    அடைந்ததெல்லாம் கோடி..
    பாசத்தினால் கூவி உன்னை
    பாடுகின்றேன் தேவி..

    அடடா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலர் வெறுத்தார் என்னை என்று வெறுப்பதுண்டோ அன்னை..

      நீக்கு
  6. 1991 ல் காஞ்சி காமாக்ஷியை தரிசித்தது..

    அதன்பிறகு பாவியேன் பார்த்தறியேன்..

    பதிலளிநீக்கு
  7. நினைத்தது யாரோ நீதானே
    தினம் உன்னை பாட நான்தானே..

    நினைத்தது யாரோ நீதானே
    தினம் உன்னை பாட நான்தானே..

    நீதானே என் கோயில்
    உன் நாதம் என் நாவில்
    ஊர்வலம் போவோம் பூந்தேரில்..

    பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. பாடல் எழுதியவனை மறந்துவிடுகிறது தமிழகம்
    வசனம் எழுதியவனை வைத்துக் கொண்டாடுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை அமைத்தவனைக் கொண்டாடுகிறது என்றால் உங்கள் பதில் மாறுமா ஸ்ரீராம்?

      நீக்கு
    2. உயிர் கொடுப்பவர் அவர்தானே...  ஆனாலும் எழுதியவரை மறப்பது அநியாயம் என்பதை நானே பலமுறை சொல்லித்தானே வருகிறேன்!

      நீக்கு
  10. காலை வணக்கம். இன்றைய இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்தவையே.

    பதிலளிநீக்கு
  11. முதல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. வெள்ளிப். பாடல்கள் இரண்டுமே அருமையான பாடல்கள்.
    ' காஞ்சிக் காமாட்சி' எங்கள் வீட்டில் முன்பு அநேகம் ஒலிக்கும் பாடல் . கேட்கவே பக்தி சொட்டும்.

    பதிலளிநீக்கு
  13. இர்ண்டு பாடல்களுமே கேட்டதில்லை ஸ்ரீராம்.

    இப்போதுதான் கேட்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் அருமையாக இருக்கு. எப்படி இந்தப் பாடல் நான் கேட்காமல் விட்டுப் போச்சு. வரிகள் அருமை, எங்க ஊர் கோயிலில் ஒலித்த நினைவில்லையே!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இரண்டாவது பாட்டு ஜிக்கியா அது!! இந்தப் பாடல் பாடுறப்ப கூட குரல் இனிமைதான் இல்லையா...

    இந்தப் பாட்டு எப்படி விட்டுப் போச்சுன்னு பார்த்தா அதானே பார்த்தேன் வருஷம் 1989! படமும் தெரியலை பாட்டும் தெரியலை.

    மனோ குரல் - எஸ் பிபி போலவே பல இடங்களில்!

    பாடிக் கொண்டே இருந்தால்தான் இப்படி நல்ல குரல் இருக்கும் காலம் ஏறிக் கொண்டே போனாலும்!

    கங்கை அமரன் நிறைய நல்ல பாடல்கள் எழுதியுள்ளார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜிக்கிதான்.  நல்ல பாடகிதான்,  ஆனாலும் எனக்கு இந்தப் பாடலில் பெண் குரல் ஜானகியம்மாவோ, சுசீலாம்மாவோ பாடி இருக்கலாம் என்று தோன்றும்.

      நீக்கு
  16. இரண்டு பாடலும் கேட்டு இருக்கிறேன். முதல் பாடல் அடிக்கடி கேட்ட மனதை உருக வைக்கும் பாடல். ஜிக்கி குரல் இனிமையாக இருந்தது.
    மனோ குரலும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டேன். மிகவும் நன்றாக உள்ளது. வரிகளும் அருமை.

    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன். ஆனால், படம் பெயர் கூடத் தெரியாது. இன்று தான் அதில் பாடியவர்கள் விபரங்களும், இசை, மற்றும் எழுதியவர் பற்றி தெரிந்து கொண்டேன். இன்றைய பகிர்வாக இரண்டு பாடல்களுமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. இரு பாடல்களிலும் முதல் பாடல் கேட்டிருக்கிறேன். ரசித்த ரசிக்கும் பாடல்.

    இரண்டாவது பாடல் கேட்டதில்லை. படம் பற்றியும் தெரியவில்லை. அப்போது நான் கேரளத்தில் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம் மற்றும் சின்னதாக வேலை செய்து கொண்டிருந்த சமயம்.

    இப்போது பாடலைக் கேட்டேன். மிக நன்றாக இருக்கிறது, ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!