புதன், 7 பிப்ரவரி, 2024

தொலைக்காட்சி வராத வரை வர்ணனை தேவையாக இருந்தது. இப்போதும் அவசியமா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

கிரிக்கெட் வர்ணனை ஆங்கிலம்,தமிழ் எந்த மொழியில் ரசிப்பீர்கள்? பிடித்த வர்ணனையாளர் யார்?

b). தொலைக்காட்சி வராத வரை வர்ணனை தேவையாக இருந்தது. இப்போதும் அவசியமா?

# 1. தமிழில். பெயர் தெரியாத உற்சாக நபர். 

2. நம் உணர்வுகளை அவர்களும் சொல்லுவது ஒரு மகிழ்ச்சி. மேலும் நமக்கு ஆட்ட நுணுக்கங்கள் அவ்வளவாகத் தெரியாதல்லவா ?

& 1) எனக்கும் தமிழ் வர்ணனைதான் பிடிக்கும். பிடித்த வர்ணனையாளர்  அந்தக் காலத்தில் ராமமூர்த்தி மற்றும் அந்தக் கால வல்லுனர் கே எஸ் எஸ் மணி அசோக் லேலண்ட் நிறுவனத்தில் எனது பக்கத்து டிபார்ட்மெண்டில்பணிபுரிந்தார். அடிக்கடி அவருடன் பேசியுள்ளேன். எங்கள் அலுவலக பெர்சனல் மேனேஜர் ஆக பணிபுரிந்த விஸ்வநாதன் என்பவர் சென்னையில் கிரிக்கட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். 

b) இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் சவுண்ட் மியூட் பண்ணி வைத்துவிட்டு ஆட்டத்தை மட்டும் பார்ப்பேன். 

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) எதுக்கெடுத்தாலும் பெண்களைக் குறை சொல்லுவோரை என்ன பண்ணலாம்?

2) எதுக்கெடுத்தாலும் தன்னுடைய கணவனை அல்லது மனைவியை குறை சொல்பவர்களை என்ன பண்ணலாம்? 

3) எதுக்கெடுத்தாலும் தன்னுடைய மாமியாரைக் குறை சொல்பவர்களை என்ன பண்ணலாம் ? 

4) எதுக்கெடுத்தாலும் தன்னுடைய மருமகளைக் குறை சொல்பவர்களை என்ன பண்ணலாம் ? 

5) எதை எடுத்தாலும் அதில் குறை காண்பவர்களை என்ன செய்யலாம்? 

= = = = = = = =

KGG பக்கம் : 

கணக்குப் பாட ஆசிரியர் தேவதாஸ் (சென்ற வாரம் தேவராஜ் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன் - மன்னிக்கவும்) பற்றியும் அவர் வைத்த சர்ப்ரைஸ் டெஸ்ட் பற்றியும் சொல்லியிருந்தேன். 

மறுநாள் வகுப்பில், அவர் நாங்கள் எழுதிய டெஸ்ட் பரீட்சை தாள்களை மதிப்பீடு செய்து வந்து எங்களுக்குக் கொடுத்தார். 

எதிர்பார்த்தபடி எல்லோருமே ஃபெயில் மார்க்! 

அதிக பட்ச மார்க் 35%  (எனக்கு 32%) 

குறைந்த மார்க் 0 

பரிட்சை பேப்பர்களைக் கொடுத்தபின் அவர் சொன்னது :

" இந்த பரிட்சையில் 25% க்கு மேலே மார்க் வாங்கியவர்கள் கவலைப்படவேண்டாம். உங்களை ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் எடுக்கவைக்கிறேன். 

20 முதல் 25 மார்க் எடுத்தவர்களை நிச்சயம் பாஸ் செயவைப்பேன். 

10 முதல் 20 மார்க் வரை எடுத்தவர்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாகப் படித்தால் பாஸ் செய்துவிடலாம். 

சிங்கிள் டிஜிட் மார்க் எடுத்தவர்கள் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். என்ன சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் என்னிடம் கேளுங்கள் - அப்போதுதான் பாஸ் செய்ய இயலும்" 

இதைச் சொன்னவர், கரும்பலகையில், அல்ஜீப்ரா ஃபார்முலா எல்லாவற்றையும் அழகாக எழுதினார். (a+b) ^2 முதல் 20 formulas (என்று ஞாபகம்). 

அதற்குப்பின் அவர் சொன்னதுதான் மிகவும் முக்கியமானது. 

இந்த ஃபார்முலா எல்லாவற்றையும் உங்கள் நோட்டில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரு தனி தாளிலும் எழுதி, அதை உங்கள் பையில் எப்போதும் வைத்திருங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தத் தாளை எடுத்து, ஃபார்முலா எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யுங்கள். 

இன்றிலிருந்து ஒரு வாரம் உங்கள் எல்லோருக்கும் டைம் தருகிறேன். 

பிறகு வருகின்ற வகுப்புகளில், முதல் ஐந்து நிமிடங்கள், உங்களுக்குக் கேள்வி நேரம். 

வகுப்பில் உள்ள எந்த மாணவரும் மற்றொரு மாணவரை, எந்த ஃபார்முலா வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்கப்பட்ட மாணவருக்கு அந்த ஃபார்முலா தெரியவில்லை என்றால், கேட்ட மாணவர் அந்த ஃபார்முலாவை சரியாகச் சொல்லிவிட்டு, தெரியாத மாணவருக்கு இம்பொசிஷன் கொடுக்கவேண்டும். மறுநாள் அந்த மாணவர் இம்பொசிஷன் எழுதிக்கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, அதை பார்க்காமல் சரியாக ஆசிரியரிடம் சொல்லவேண்டும். 

இந்த உபாயம் மிகவும் நன்றாக வேலை செய்தது. இரண்டு மாதங்களுக்குள் எங்கள் எல்லோருக்குமே எல்லா ஃபார்முலாவும் நன்கு மனப்பாடம் ஆகிவிட்டது. 

ஃபைனல் THSLC பரிட்சையில் கணக்குப் பாடத்தில் நான் 70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றேன். 

= = = = = = = = =

53 கருத்துகள்:

  1. நாலு வகை குறை சொல்வோரையும்
    என்ன பண்ணலாம் என்றால் என்ன சொல்வது? A, B, C, D
    என்று விதவித 'என்ன பண்ணலாம்களை' வரிசை படுத்தினீர்கள் என்றால் அவரவருக்குப் பிடித்ததை சொல்வதை விட நீங்கள் வரிசைபடுத்தும் 'என்ன பண்ணலாம்'களே
    வேடிக்கையாய் இருக்கும்.

    உதாரணமாக, மருமகளை குறைசொல்லும் மாமியாரை அதிகாலை எழுந்தவுடன், சாமி படத்திற்கு முன் நிற்கச் சொல்லி, குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - பாடலை இரண்டு தடவைகள் பாடச் சொல்லலாம். இப்படி ஒவ்வொண்ணுக்கு. ஒரு சாம்பிள் 'என்ன பண்ணலாமை' யாராவது சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஐந்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.
    ஆடிட் டிபார்ட்மெண்டில் போட்டு விடலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் அருமை. கிரிகெட் ரசிகர்களுக்கு தொலைக்காட்சியில் நேரலையாக வந்த பின் வானொலியில் நேர்முக வர்ணனை இல்லாமல் போனாலும், அது ஒரு குறையாக தெரியாது நேரடியாக பார்த்து ரசிக்கும் நிறைவுக்கு குறைவேது?

    சிலரின் நிறைகள், மற்றவர்களுக்கு ஒரு பெருங்குறையாக கண்களை உறுத்தலாம். சிலரின் குறைகள் மற்றவர் பார்வையில், நிறையாகவும், மனதுக்கு நிறைவாகவும் தோணலாம். மற்றவர்களிடம் குறை கண்டு பிடிப்பவர்கள் பெரும்பாலும் பொதுவாக அவர்களின் குறைகளை மட்டுமே அலசுவார்கள். சிலர் மற்றவர்களும் உள்ள குறை நிறை இவை எதைப்பற்றியும் கவலையுறாத குறைபாட்டோடு இருப்பார்கள்.(ஆண்டவன் விட்ட வழியென..)

    ஆகா.... இந்த கருத்தில்தான் என்ன குறைவு என்றோ, இதில்தான் எவ்வளவு குறைகள் எனவோ, நீங்கள் நினைப்பதற்குள் கருத்தைத் தந்த நிறைவுடன் ஓடி விடுகிறேன். :)))) யாரையும் குறைச்சொல்ல அல்ல.. ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இப்போதும் வர்ணனை தேவையா? - கண்டிப்பாகத் தேவை, அக்கா. பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு இந்த வர்ணனைகள் அவர்களையும் மனதில் கண்டு களிக்க உதவும். பார்வைத் திறன் இல்லாத திருப்பதி மகேஷ் பல ஊர்களுக்கும் பயணித்து தன் அனுபவங்களையும் இடங்களையும் வர்ணித்து எழுதுவது என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல அதை மிகவும் நேர்மறையாக்கிக் கொள்வது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. 1. முதலில் எல்லாம் எனக்குச் சற்றுக் கோபம் வரும் இப்போதெல்லாம் .....வேண்டாம் அந்த வசனம்/பழமொழி இங்கு!!!! ஊகித்துக்கொள்ளுங்கள்! அப்படியானவர்களிடம் இருந்து விலகி இருக்க எண்ணுவேன். பெண்களே பெண்களைக் குறைசொன்னாலும்.

    2. நாம எதுக்கு என்ன பண்ணனும்? அவங்க விஷயம். அது ஆரோக்கியமான உறவு இல்லை.

    3 & 4 - இன்றைய மகள்/மருமகள் நாளைய மாமியார்..பெண்களே பெண்களுக்கு எதிரி.

    5- கண்டிப்பாக இவர்களுக்கு counselling தேவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 - ஏனென்றால் தாங்களும் சந்தோஷமாக இல்லாமல் கூட இருக்கறவங்களையும் சந்தோஷமாக வைச்சுக்காம....

      கீதா

      நீக்கு
    2. இவர்களிடமிருந்து எல்லோரும் விலகி இருக்கவே விரும்புவாங்க. உறவுகள் நட்புகள் இல்லாமல் இப்படியானவர்கள் கஷ்டப்படுவாங்க.

      கீதா

      நீக்கு
    3. நாம ஒன்றுமே செய்ய வேண்டாம் அவங்களே அவங்களுக்கு ஒருகுழி தோண்டிக்கறாங்க.

      கீதா

      நீக்கு
    4. விவரமான பதில்கள். நன்றி.

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. /// ஃபைனல் THSLC பரிட்சையில் கணக்குப் பாடத்தில் நான் 70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றேன். ///

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  8. குறை செல்வதைக் குறியாது சென்றால்

    குறை சொல்வதே குறைந்து விடும்..

    பதிலளிநீக்கு
  9. நல்ல கணக்கு வாத்தியார். மாணவர்களின் திறனை கணக்குப் பண்ணி கணக்கு எடுத்திருக்கிறார். நீங்களும் (மாணவர்களும்) அவரைக் கணக்குப் பண்ணியிருப்பீங்க..

    (a+b) ^2 முதல் 20 formulas //

    அண்ணே நான் அப்பால வாரேன்!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பிறரது குறைகளை காணும்போது தனது குறைகள் மறைந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  11. கணக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறை மிகவும் நன்று. இப்படியான ஆசிரியர்கள் அமைவது வரம்.

    கேள்வி பதில்கள் நன்று. தமிழ் வர்ணனை நெய்வேலி நகரில் இருந்த சமயம் ரேடியோவில் கேட்டதோடு சரி. இப்போது கிரிக்கெட் பார்ப்பது அரிதாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  12. பெண்களைக் குறை சொல்பவர்களை...... அவங்க செய்யும் வேலைகள் முழுமையாக ஒரு வாரம் செய்யச் சொல்லணும். அப்புறம் அதற்கு அடுத்த இரு வாரங்கள் அவரைத் தனியாக வெளி உணவு ஆர்டர் செய்யாமல் வீட்டை மேனேஜ் பண்ணிக்கச் சொல்லணும்.

    அப்புறம் பெண்களின் மதிப்பு தெரிந்துவிடும்

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியர்களால்தான் மாணவன் உருவாகிறான்

    பதிலளிநீக்கு
  14. கும்பாபிஷேக வர்ணனைகளில் கூட குழப்படி..

    தமிழை உச்சரிப்பதில் தகராறு..

    கடுப்பாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  15. பாலாலயம், ப்ராண ப்ரதிஷ்டை, கும்பாபிஷேகம், கலசாபிஷேகம்,
    களபாபிஷேகம்

    இவையெல்லாம் ஏதுமறியாதவர்களிடம் சிக்கிக் கொண்டன..

    பதிலளிநீக்கு
  16. பொலிவு, பொழிவு வித்தியாசம் அறியாத மூடர்களும் இருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  17. தினமலரின் தமிழ்ப் பற்றைப் பற்றித் தெரிந்திருக்குமே..

    பதிலளிநீக்கு
  18. ஆகா எனில் ஆகாதது என்று பொருள்..

    ஆஹா!..

    நாம தான் டம்ளன் ஆச்சே!..

    பதிலளிநீக்கு
  19. தொலைக்காட்சி வந்தாலும் ரேடியோவில் கேட்ட திருப்தி இருப்பது இல்லை, இன்னும் ரேடியோ கேட்கும் அன்பர்கள் இருக்கிறார்களே என்னப்போல!

    குறை சொல்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
    நிறையை கண்டு பழகி விட்டால் குறை தெரியாது.
    ஆனால் அவர்கள் குறைகள் தான் கண் முன் நிற்கும் சிலருக்கு

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

    வள்ளுவரே சொல்லிவிட்டார், தன் குற்றம் தெரியாது அடுத்தவர் குற்றம் தான் தெரியும். நம் குற்றம் தெரிந்து விட்டால் மற்றவரை குற்றம் சொல்லமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  20. //சிங்கிள் டிஜிட் மார்க் எடுத்தவர்கள் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். என்ன சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் என்னிடம் கேளுங்கள் - அப்போதுதான் பாஸ் செய்ய இயலும்" //

    நல்ல ஆசிரியர் இப்படி ஆசிரியர்கள் இருந்தால் கணக்கில் பாஸ் செய்து விடலாம். என் கணக்கு ஆசிரியரும்(உமா டீச்சர்) குறைந்த மதிப்பெண் வாங்கிய என்னை எவ்வளவு மார்க் வாங்கினால் பாஸ் என்று சொல்வார்களோ அத்தனை மார்க் பெற வைத்தார்.(என் கணவரும் சொல்லி தந்தார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏ எம் ஐ இ கணக்குப் பாடத்தில் பாஸ் செய்ய எனக்கு கணக்கு சொல்லித் தந்தவர், என்னுடைய தம்பியின் மனைவி. அவர் பி எஸ் சி மாத்ஸ்.

      நீக்கு
  21. சிறு திருத்தம்.

    என்னை எவ்வளவு மார்க் வாங்கினால் பாஸ் என்று சொல்வார்களோ அதை விட இரண்டு மார்க் கூடுதலாக பெற வைத்தார்.(என் கணவரும் சொல்லி தந்தார்)

    பதிலளிநீக்கு
  22. அந்தக் க்ணக்கு ஆசிரியர் போல் உள்ள ஆசிரியர்களிடம் கணக்கு பயில பாக்கியம் கிடைத்தவர்களுக்குக் கணக்கு ஒருபோதும் ஒரு பிரச்சனை ஆயிருக்காதுதான். உங்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டியது இறை அருள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. குறை சொல்பவர்களை என்ன செய்யலாம் ? நல்ல அலசல் பல பதில்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!