வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

வெள்ளி வீடியோ : எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும்

 இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது..

ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
ஆணவச் சூரனை கீறி கிழித்திட வேலோடு
பன்னிரு கையன் அமர்ந்திருக்கிற இடம் திருச்செந்தூரு

கோவணச் சண்முகச் சாமியின் கால்களில் பாலோடும்
அவன் குங்குமத் தாமரைக் கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
ஆதி பராசக்தி தாய் அவள் தந்த அமுதோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த 
இடம் ஒரு பூவாகும்..(ஆயிரம்)

நம்பிதொழுகிற நெஞ்சின் கவலைகள் தூளாகும்
மனம் நாடபிறந்த அவன் ஞானசுந்தரி களியாகும்
கோயில்படிகளில் வேலும் மயிலும் விளையாடும்
அந்த கூத்துக்கு தகுந்த மாதிரி சேவல் இசைபாடும்

சின்னப் பொடியன் என்றெண்ணப் பிரமன் சிறையானான்.
தந்தை கொஞ்சிக் குனிந்திட மந்திரம் சொல்லிக் குருவானான்
வண்ணக் குமரிகள் நெஞ்சுக்கு நல்ல துணையானான்
பல குன்றுகளில் சிறு தண்டுடன் நின்று தவமானான்..



=============================================================================================================

1966 ல் வெளியான படம் 'நான் ஆணையிட்டால்'.

சத்யா மூவிஸ் ஆர் எம் வீரப்பன் தயாரிப்பில், சாணக்யா இயக்கத்தில், எம் ஜி ஆர், கே ஆர் விஜயா,  ,நம்பியார் நடித்த படம்.  அந்த வருடம் பொங்கல் அன்றே வெளியாகியிருக்க வேண்டிய படம் எம் ஜி ஆரின் இன்னொரு படமான 'அன்பே வா' பொங்கல் சமயத்தில் வெளியானதைத் தொடர்ந்து சற்றே தாமதமாக பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வெளியானது.

எல்லாமே சரியாய் இருக்கிறது என்று விமர்சகர்கள் கருதினாலும் சாணக்யாவின் இயக்கத்தை குறை சொல்லி இருந்தார்களாம்.

கண்ணதாசன் எம் ஜி ஆர் பிணக்கில் இருந்த நேரம் போலும்.  பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு மற்றும் வித்வான் லக்ஷ்மணன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

இன்றைய பாடலான 'பாட்டு வரும்..  பாட்டு வரும்..' பாடலை வாலி எழுதி இருக்கிறார்.  டி எம் சௌந்தர்ராஜன், பி சுசீலா குரல்களில் பாடல் ஒலிக்கிறது.

பாட்டு வரும் 

பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்

அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும் 
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் பாட்டு வரும்

பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும்

பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதைக் கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே

பாட்டு வரும் பாட்டு வரும் 
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

31 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சூலமங்கல சகோதரிகளின் இந்தப் பாடல் மட்டும் இன்னும் சரியாகப் புரிவதில்லை..
    ஏனெனில் துரித நடை தாளக்கட்டு..
    இந்தப் பாடலின் சிறப்பே வல்லின ஒற்றுகளின் அழுத்தம் தான்..

    இங்கே ஒற்றுகள் பல விடுபட்டிருக்கின்ற்ன - நனீனத் தமிழ் போலும்!..

    சின்னப்பொடியன் என்றென்ன பிரமிக்கச் சிலையானான்

    தந்தை குனிந்திட மந்திரம் சொல்லி உருவானான்

    வண்ணகுமரிகள் நெஞ்சத்து நல்ல துணையானான்

    பல குன்றுகளின் சிறுதண்டுடன் நின்றுதவமானான்

    - என்று இருப்பது கீழே உள்ள மாதிரி வர வேண்டும்!..


    சின்னப் பொடியன் என்றெண்ணப் பிரமன் சிறையானான்.

    தந்தை கொஞ்சிக் குனிந்திட மந்திரம் சொல்லிக் குருவானான்

    வண்ணக் குமரிகள் நெஞ்சுக்கு நல்ல துணையானான்

    பல குன்றுகளில் சிறு தண்டுடன் நின்று தவமானான்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இனிமையான பாடல்.

    இரண்டாவது திரைப்பட பாடலும், கேட்டிருக்கிறேன். அப்போது இந்த பாடலை ஒலி பரப்பாத வானொலிகள் ஏது? ஆனால் படம் வெற்றியா என்பது தெரியாது. அன்பே வா இன்றும் மறக்க முடியாத படம். நிறைய தடவைகள் தொலைக்காட்சியில் பார்த்தாகி விட்டது. அந்தப்படத்தின் வெற்றிக்கு முன் இது சற்றே குறைந்து விட்டதோ என்னவோ?

    இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  4. /// கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்

    அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்

    ஆதி பராசக்தி தாய் அவள் தந்த அருளோடும்

    அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும்///


    கோவணச் சண்முகச் சாமியின் கால்களில் பாலோடும்
    அவன் குங்குமத் தாமரைக் கண்களில் சங்கத்தமிழ் ஓடும்

    ஆதி பராசக்தி தாய் அவள் தந்த அமுதோடும்
    அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு இடங்களையும் நீங்கள் சொல்லி இருப்பதை எடுத்து மாற்றி இருக்கிறேன்.

      நீக்கு
  5. /// இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
    அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்
    எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
    எனக்கது போதும் வேறென்ன வேண்டும்.. ///

    இதல்லவோ தமிழ் .


    டகர டப்பாக்களால் நெருங்கக் கூட முடியாது..

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது பாடல் கேட்க நன்றாக இருக்கும். வாலியின் வரிகள் நன்று.

    பதிலளிநீக்கு
  7. அந்தக்காலப் பாடல்களில் தமிழ் அழகுக் கோலமிட்டுக்கொண்டிருந்தது
    இந்தப் பொல்லாத காலத்தில் தமிழ் ஓலமிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்.
    பகிர்வுக்கு நன்றி.
    இரண்டாவது பாடல் எம் ஜி.ஆர் பிறந்த நாள் அன்று தொலைக்காட்சியில் வைத்தார்கள் தேன் கிண்ணத்தில்.

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடலை நிறையக் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். கேட்டதுமே ஆடத் தோன்றும் ஒரு பாடல்! இப்பவும் கேட்டு ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாளம் போட்டு ஆடவைக்கும் மெட்டு! காவடியை வைத்துக் கொண்டு ஆடுவாங்க ஆண் பிள்ளைகள். பால் குடம் போன்று குடம் வைத்துக் கொண்டு ஆடுவாங்க பெண் பிள்ளைகள் அப்ப ஊர்ல இருந்தப்ப சில போட்டிகளில்

      கீதா

      நீக்கு
    2. ஆம். இனிய பாடல். நன்றி கீதா.

      நீக்கு
  10. இன்று அதிசயமாக இரண்டாவது பாடல்கள் வரிகள் பார்த்ததுமே பாட்டு மனதில் ஓடத் தொடங்கிவிட்டது!

    அப்படினாக்க நிறைய கேட்டிருக்கிறேன்னு அர்த்தமாக்கும்!!!! ஹாஹாஹாஹா.....பெரும்பாலும் மதிய வேளைகளில் அப்ப சிலோன் வானொலியில் போடுவாங்க..

    அருமையான பாடல், பாடல் வரிகள்! படம் இப்போதுதான் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் ஏற்கெனவே இந்தப் பாடலை ஏறெகனவே கேட்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி கீதா,

      நீக்கு
  11. வாலியின் வரிக்ளும் மெல்லிசை மன்னரின் மெட்டும் என்ன அருமை இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கீ.சா மேடம் இப்பொழுது பதிவுகளுக்கு வருவதில்லையே... என்ன காரணம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று கூட பதிவு வெளியிட்டிருக்கிறார்...  சற்றே உடல் நலமில்லை தம்பதியர் இருவருக்கும்.

      நீக்கு
  13. முதல் பாட்டு பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன். அருமையான பாடல். யுட்யூபில் இருக்கிறதை நோட் செய்து கொண்டேன்.

    இரண்டாவது பாடலும் தமிழ்நாட்டில் இருந்த வரை இலங்கை வானொலி அலைவரிசை வந்து கொண்டிருந்த வேளைகளில் கேட்டு ரசித்த பாடல் என்பதோடு படமும் பார்த்திருக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. பதிவு செய்திருக்கும் பாடல்கள் கேட்டு ரசித்தவை - முதல் பாடல் தவிர. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!