இன்று டி எம் எஸ் பாடிய ஒரு பாடல். கோவைக்கூத்தன் எழுதிய பாடலுக்கு டி எம் எஸ் இசை அமைத்து தானே பாடி இருக்கிறார்.
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் உன்னை அல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
முருகா முருகா முருகா
================================================================================================
படம் : மீண்டும் கோகிலா. வெளியான ஆண்டு : 1981 நடிகர்கள் கமலஹாசன், ஸ்ரீதேவி, தீபா, பாடல் கண்ணதாசன். இசை இளையராஜா. குரல்கள் S P பாலசுப்ரமணியம்- எஸ் ஜானகி. திரையில் கமல்-ஸ்ரீதேவி. பாடல் அமைந்திருக்கும் ராகம் : சுத்த சாவேரி.
குறிப்பு : ஆரம்ப ஹம்மிங் முதல் பாடல் முழுவதும் இளையராஜா ராஜாங்கம். குறிப்பக வயலினும், புல்லாங்குழலும். இளையராஜா இசை மகா ஸ்பெஷல். நானொரு பக்கம் ஏனடி வெட்கம் சொல்லும்போதும், அதைத் தொடர்ந்து பல்லவிவியில் ராதா எங்கே நான் அங்கே சொல்லும்போதும் ஆஹா SPB.
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
ராதா ராதா நீ எங்கே
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்..
கண்ணா கண்ணா நீ எங்கே
காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையில் மேகலை நடனமாடிடும்
ஊக்கத்தில் ஓடி வந்தேன்
ராதா ராதா நீ எங்கே
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல்,
பதிலளிநீக்கு'அழகென்ற சொல்லுக்கு முருகா'... கேட்டிராதவர் யாரிருப்பார்?.
இரண்டாவது பாடலும் அப்படித்தான். பலமுறை கேட்டுப் பழகிப் போனது தான்.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குஒரு குட்டிப் பரிந்துரை:
பதிலளிநீக்குபாடல் கேட்க ரம்யமாக இருந்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பாடல் வரிகளை நீங்கள் அனுபவிக்கும் சுகத்திற்கு நேர் மாறாக இருந்தால் பாடல் காட்சி முடியும் வரை சற்றே இமைகளை மூடிக் கொண்டால் போதும்.
ஆமாம். இது நான் எப்போதுமே பரிந்துரைப்பது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வில் முதல் தனிப்பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். டி. எம். எஸ் அவர்களின் குரலில் இனிமையான பாடல். முருகனை, அவன் அழகை கேட்கும் போதெல்லாம் மகிழ்வடையாத நாளில்லை. இன்றைய தெய்வீக பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகு என்றாலே அழகுதானே... நன்றி கமலா அக்கா.
நீக்கு
பதிலளிநீக்குஅழகென்ற சொல்லுக்கு முருகா.. காங்கோ கோவிலில் பல சனிக்கிழமை காலைகளில் பாடியிருக்கிறேன். எழுதியவர் யாரென்று இன்று தெரிந்தது. கோவைக்கூத்தன்!
அடடே... பாடி இருக்கிறீர்களா? அதென்ன சனிக்கிழமைகளில்?
நீக்குஅங்கே தலைநகரிலிருக்கும் ஹிந்து கோவிலில் தமிழ் சமூகத்தினர் சிலர் சனிக்கிழமை காலை 9 மணிவாக்கில் சந்திப்போம். கோவிலில் பஜனை. பின்னர் பிரசாதம். ஆளுக்கொரு பாடலாக சிலர் பாடுவோம். நான் பெரும்பாலும் முருகன் பாடல்களாகவே பாடியிருக்கிறேன். சின்னவயசில் கேட்டவை.. இந்தப் பாடலைப் பாடுகையில் மனம் இழைவதைக் கவனித்திருக்கிறேன்.
நீக்குஅழகென்ற சொல்லுக்கு முருகா!! எவ்வளவு கேட்டிருப்பேன். ரசித்த பாடல்.
பதிலளிநீக்குஎழுதியவரின் பெயர் இதுவரை அறியாத பெயர்.
கீதா
ஆமாம். எல்லோர் நினைவிலும் ஊஞ்சலாடும் பாடல்.
நீக்குராதா ராதா பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன். ஹையோ ஆமாம் அதே அதே ஸ்ரீராம், ராஜாங்கம்!!!
பதிலளிநீக்குஎஸ்பிபி ராதா ராதா என்று தொடங்கும் போதே ஒரு குழைவு தெரிகிறதா குரலில்??!! உங்களுக்குத் தெரியாம இருக்குமா!!!!!!!!!!!!!!!!
பல்லவி சரணங்களுக்கு இடையில் கூட அருமையான இசை. சுத்த சாவேரியை எப்படிக் கையாண்டிருக்கிறார்!!!! அப்புறம் வரும் ராதா ராதா நான் இங்கே ...குழைவு அந்தக் குரல்!!
ராஜா இடைப்பட்ட வாத்யங்களின் இசைக்கும் கூட நோட்ஸ் எழுதும் பழக்கம் உள்ளவர் இப்பவும். சும்மா வாயால பாடியோ, ஏற்கனவே இருக்கும் மென்பொருள்களில் இருந்து loops எடுத்டுப் போட்டோ செய்பவர் இல்லை.
இதே ராகத்தில் அமைந்த கோயில்மணி ஓசை தன்னை ....அந்த சுத்த சாவேரியும் எப்படி இருக்கு பாருங்க. இரண்டும் ஒரே ராகம் கையாண்ட விதம்!!!
ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்
கீதா
ரசனை.. ரசனை.. அதுதான் உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்விக்கிறது.
நீக்கு// பல்லவி சரணங்களுக்கு இடையில் கூட அருமையான இசை. //
// ராஜா இடைப்பட்ட வாத்யங்களின் இசைக்கும் கூட நோட்ஸ் எழுதும் பழக்கம் உள்ளவர் //
ஆமாம். இதை நானும் சொல்ல நினைத்தேன். நேரமின்மை சுருக்கமாக எழுத வைத்து விட்டது.
இரண்டும் அருமையான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்குமுதலாவது பக்தி பலமுறை கேட்டபாடல் . கேட்கும்போதே உள்ளம் குளிரும்.
பதிலளிநீக்குஇரண்டாவதும் கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்.
நன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடல் இன்று கூட கேட்டேன். அருமையான பாடல்.
பதிலளிநீக்குஇரண்டாவதும் பாடலும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குமுதலாவது எத்தனையோ முறை கேட்ட பாடல் .. கேட்கும் போதே உள்ளம் சிலிர்க்கும்...
பதிலளிநீக்குஇரண்டாவதும் கேட்டிருக்கிறேன்.. ரசித்திருக்கின்றேன்..
அருமையிலும் அருமை..
ஆமாம்.
நீக்குதிரு ஐயாறு சென்று விட்டு இப்போது தான் வந்தேன்..
பதிலளிநீக்குஓய்வெடுங்கள்.
நீக்கு/// காலடி ஓசையிலே ஏழிசை கேட்டு வந்தேன்.. ///
பதிலளிநீக்குதாசன் -
கண்ணதாசன்..
ஏழிசையா, யாழிசையா?
நீக்குகாலடி ஓசை கேட்டதில்
நீக்குயாழிசையா
ஏழிசையா - குழம்பி விட்டது மனம்!..
உருக வைத்த முருகனின் பாடல்! முன்பு கேட்டதுண்டு. இப்போது கேட்டு ரசித்து கீழே வந்தால் மீண்டும் கோகிலா. கல்லூரி நாட்களில் பல முறை பார்த்த படம். மீண்டும் மீண்டும் கோகிலா என்று சொல்லிப் போவோம். கமலின் சேட்டைகளை இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. அந்தப் படத்தில்.
பதிலளிநீக்குபாடலும் அருமையான பாடல். அதையும் ரசித்தேன்.
துளசிதரன்
இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்களே. தொடரட்டும் பாடல் பதிவுகள்.
பதிலளிநீக்கு