கேள்வி பதில்கள் :
கே. சக்ரபாணி, சென்னை 28 :
ஃபுட்பாலில் கோல் விழாமல் தடுத்து நிறுத்துபவர் கோல்கீப்பர் அப்படி என்றால் கிரிக்கெட்டில் விக்கட்விழாமல் தடுப்பவர்தான் விக்கட்கீப்பரா?
# நல்ல வேளை ஹவுஸ் கீப்பர் உங்கள் நினைவுக்கு வரவில்லை.
@CGSenu :
⚽
கோல்கீப்பர் கையில் கையுறை,
பந்தை பார் – பாயுது வளை!
இடது வலது குதிக்குறாரு,
தப்பிச்சா மட்டும் தூக்குறாரு! 😤
🏏
விக்கெட் கீப்பர் பாக்குறான் ஃபோக்கஸ்,
பந்துனு வந்ததும் பாட்ஸ்மேன் லோக்கஸ்!
சில்லுனு புடிக்கிறான், ஸ்டம்பிங் ரெடி,
“Appeal daaa!” – umpire steady! 🗣️👀
🥁
ஒருத்தன் கோல் வச்சுக்க மாட்டான்,
இன்னொருத்தன் விக்கெட் வச்சுக்க மாட்டான்!
“Keeper” னு பேர் இருவருக்கும் சேம் நேம்!
ஆனா நம்ம விளையாட்டு வித்தியாசம், game!
& அடேய் Senu பதில் கேட்டா கானா பாட்டு பாடுறியா !!
முன்பெல்லாம் வெளியூர்களுக்கு பஸ்ஸிலோ. ரெயிலிலிலோ. செல்லும்போதோ தண்ணீருக்காக கூஜா என்ற ஒன்று. உபயோகிப்பார்கள் உங்கள் சிறுவயதில் அதேபோல். கூஜா தூக்கியிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?
# நிறையவே பார்த்திருக்கிறேன். நாங்களே எடுத்துச் சென்றதும் உண்டு.
& கூஜா என்றாலே அந்தக் காலத்து அதாவது இருபதாம் நூற்றாண்டு மக்களுக்கு நினைவுக்கு வருவது வெண்கல அல்லது பித்தளை கூஜா. அந்த வடிவத்தின் பெயர்தான் கூஜா. தண்ணீர் பாட்டில்கள் புழக்கத்திற்கு வராத காலத்தில் அதுதான் பயணிகளின் தண்ணீர் சேமிப்பான்.
இப்போதும் என் வீட்டில் நெய் வைத்திருக்கும் பாத்திரம் : எவர்சில்வர் கூஜா!
@CGSenu :
பார்த்திருக்கேன்! நிறைய!
ஏனென்றா… அந்த கூஜா என்பது ஒரு "பயணத்தின் அடையாளம்" மாதிரி இருந்தது.
ரயில் பெரிய ஸ்டேஷனில் அதிக நேரம் நிக்கும்.
உணவு அருந்தும்போது விக்கல் வந்தா - விக்கும் ஆள் கூஜா தேடுவார்!
அந்த இடத்துல தண்ணி குடிக்க அப்பா கூஜா கொடுப்பார் –
“கொஞ்சம் குடிச்சுட்டு, குடு" என்று வாங்கி திரும்ப ஸ்டேஷன் பைப்பில் தண்ணி நிரப்பி வச்சுடுவாரு! 😄
= = = = = = = =
KGG பக்கம் :
ஏப்ரல் மாதத்து போட்டியான " மீன் " தலைப்பிற்கு சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றுள்ளார்கள்.
எல்லோருக்கும் நன்றி.
ஒரு சிறு விளக்கம்.
இந்தப் போட்டிகள் எல்லாமே உங்களுக்குள் - அல்லது உங்கள் சொந்த பந்தங்களுக்குள் - ஒளிந்திருக்கின்ற படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வரவும், அதை மேம்படுத்தவும்தான்.
நாங்கள் முன்பே சொன்னது போல - மீன் - நீங்கள் எடுத்த படம் ( மற்றவர்கள் இணையத்தில் வெளியிட்ட படங்கள் அல்ல. ) அல்லது நீங்கள் / உங்கள் சொந்தங்கள் வரைந்த படம், அல்லது மீன் பற்றி ஒரு நான்கு வரிக் கவிதை, இப்படி இருந்தால் போட்டிக்கு அனுப்பலாம்.
மீன் பற்றிய குறிப்புகள் - இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை, மற்றும் இணையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட படங்கள் இவை எல்லாம் போட்டியில் சேர்த்துக்கொள்ள இயலாது.
இப்போது போட்டிக்கு வந்துள்ள படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.
படங்களில், அந்தப் படத்தின் அடையாள எண் குறிப்பிடப்பட்டுள்ளன.
" மீன் " என்ற தலைப்புக்கு ஏற்ற ஏதேனும் ஐந்து படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து, கருத்துரைப் பகுதியில், நீங்கள் தேர்வு செய்கின்ற படங்களின் எண்ணைக் குறிப்பிடவும்.
நன்றி.
கைவேலை படைப்பு.
வரையப்பட்ட படைப்பு

வரையப்பட்ட படைப்பு
வரையப்பட்ட படைப்பு
வரையப்பட்ட படைப்பு
வரையப்பட்ட படைப்பு
பேப்பரில் உருவாக்கப்பட்ட மீன்.
எல்லோரும் தவறாமல், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மீன் படங்களுக்கு வோட்டுப் போடவும்.
சந்தேகம் எதுவும் இருந்தால், கருத்துரை பகுதியில் கேட்கவும்.
இந்த ஒரு வாரத்திற்குள், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்தப் பதிவில் வோட்டுப் போடலாம்.
நன்றி.
= = = = = = = = = = = = =
ஒரு படத்துக்கு மட்டும்தான் ஓட்டா? ஏனென்றால் இரண்டு மூன்று படங்கள் பிடித்திருக்கிறது. அதனால் ஓட்டிற்கு பதிலாக மார்க் போடலாமே.
பதிலளிநீக்குஎவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடலாம்.
நீக்குமார்க் சேர்த்துப் போட்டாலும் ஆட்சேபனை இல்லை. ஆனால் மார்க் அடிப்படையில் தேர்வு கிடையாது. உங்களுக்குப் பிடித்த 3 படங்களை பட்டியல் இட்டால், அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வோட்டு விழுந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்வோம். வோட்டு எண்ணிக்கை : ஏப்ரல் 29 ஆம் தேதி.
நீக்கு// " மீன் " என்ற தலைப்புக்கு ஏற்ற ஏதேனும் ஐந்து படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து, கருத்துரைப் பகுதியில், நீங்கள் தேர்வு செய்கின்ற படங்களின் எண்ணைக் குறிப்பிடவும். // பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளோம்!
நீக்கு301 இல் இருந்து வரிசையா எல்லாமும் ஜோர் ஜோர் 305 வரை. 305 இல் உள்ள மீன்கள் பேய், பிசாசு மாதிரிப் பூச்சாண்டி காட்டுதுங்க. இங்கே வரைஞ்சு அனுப்பி இருக்கிறவங்க அநேகமா நன்றாகவே வரைஞ்சிருக்காங்க. நானும் வரைஞ்சு அனுப்ப நினைச்சுத் தான் கடைசியில் தேதியை மறந்துட்டேன். கமலா மாதிரிப் பின்னாலேயும் அனுப்பலாம்னு இருந்தால் ஒருவேளை வரைஞ்சு அனுப்பி இருக்கலாம்.
நீக்கு/நானும் வரைஞ்சு அனுப்ப நினைச்சுத் தான் கடைசியில் தேதியை மறந்துட்டேன்./
நீக்குகமலாவும் அப்படித்தான்..! கடைசிபொழுதில் காலநேரமறியாமல் கரையில் இழுத்துப்போட்ட மீனாக துடித்து, "ஆறை" நோக்கி ஓடி, பிற நட்பு மீன்களுடன் சேர்வதற்கும் ஆறு(ற்று)க்குள் உள்ளது எந்த நல்ல மீனென்று தேடத் தெரியாமல் தவித்து, ஒரு வழியாக போட்டிக(டலை)ளை வந்தடைவதற்குள் பட்ட பாடு அந்த மதுரை மீனாட்சிதான் அறிவாள். :))
:)))
நீக்கு:))
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
அவனருள் வேண்டுவோம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குகௌ அண்ணே இந்த முறை போட்டி ரொம்ப டஃப் கேட்டோ!!!!
பதிலளிநீக்குகீதா
கேக்கலை !
நீக்குஹாஹாஹாஹா.....'
நீக்குசரி அதை திருத்தி, பார்த்தீங்களா!
கீதா
அதுவும் இல்லை!
நீக்குபாட்டரி தீர்ந்திருக்கும்.
நீக்குJayakumar
:)))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அருமை. முதல் பதிலில் உள்ள இந்தப் படத்தைதான் இரண்டொரு நாட்களாக எங்கள் குழந்தைகள் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சோனு அளித்த பதில் நன்றாக உள்ளது.
என்னிடமும் அம்மா எங்கள் திருமண சீர்வரிசைக்காக தந்த இரண்டு கூஜாக்கள் உள்ளன. அது போக எவர்சில்வர் கூஜா வேறு உள்ளது. இப்போது பாட்டில்களில் தரம் தாழ்ந்து/ உயர்ந்து என போகும் காலத்தில் இந்த பழைய மாடல் கூஜாவை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. அந்த காலத்தில் கூஜா இல்லாமல் பயணங்கள் இல்லை. உண்மை. பதில்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎனக்கு இந்தக் கூஜா எல்லாம் சீரோடு வந்தது. அந்தக் காலத்தில் பெரும்பான்மை கல்யாணச் சீர்களில் இந்தக் கூஜா இல்லாமல் சீர் இருக்காது.
பதிலளிநீக்குஎன்னிடமும் எவர்சில்வர் கூஜாக்கள் உண்டு. முதலில் பால் வாங்கப் பயன் படுத்தினேன். ஊர் மாறியதில் பாக்கெட் பால் ஆனதால் அப்புறம் எண்ணை வைத்துக் கொண்டிருந்தேன். எண்ணை வைத்துக் கொண்டால் பராமரிப்பது கொஞ்சம் கஷ்டம் அந்த மூடும் பிரி இடுக்குகளில் எல்லாம் பிசுக்கு சேர்ந்து கொள்ளும். அதைத் தேய்த்து எடுப்பதற்குள்.....அதன் பின் பயணங்களிலும் பயன்படுத்தியிருக்கிறேன். நல்ல கனமாக இருக்கும். இப்ப பரணில்....ஹிஹிஹி
கீதா
:))))
நீக்குCG Senu டி ராஜேந்தர் பாணியில் பதிலளிக்கு முயற்சித்திருப்பது எல்லாம் நம்ம கௌ அண்ணாவின் வேலைதான் என்பது நமக்குப் புரிந்தாலும் புரியாதது போல இங்குக் கருத்திடுவதை கௌ அண்ணாவுக்கும் புரியும் என்றாலும் அவரும் புரியாதது போல நைசாகக் கடந்து செல்வார் என்பதையும் நாம் புரிந்து கொண்டாலும் புரியாதது போல!!!!!!!!!......
பதிலளிநீக்குகீதா
நான் அவனில்லை.
நீக்குவிக்கட்கீப்பர் மற்றும் கூஜா பற்றிய
பதிலளிநீக்குகேள்விகளுக்கு சரியான பதில்
அளித்து அசத்திவிட்டீர்கள்.
கூஜா படம் போடுவீர்கள் என எதிர்பார்த்தேன்
கே. சக்ரபாணி
படம் எடுத்தேன், ஆனால் போடவில்லை!
நீக்கு313 318
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன் மனைவியின் செலெக்ஷன் 301, 309, 312
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு312, 318
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு315 மட்டும் அவ்வளவாப் பிடிக்கலை. என்ன இருந்தாலும் ஓர் உயிர். :(
பதிலளிநீக்கு:((
நீக்குஉங்கள் வோட்டு எந்தெந்த படங்களுக்கு?
நீக்கு301 to 305 ok .
நீக்குமச்சாவதார மீன் அருமை. முதல் படம் ஏதேனும் த்ரில்லர் சீரியலில் வருதோ?
பதிலளிநீக்கு'அனு'ப்பியவர் சொன்னால்தான் தெரியும்.
நீக்குஆகா. . புரிந்து கொண்டேன். "அனுப்பிரியவர்" தான்தான் என சொல்லாமலே தெரிந்து விட்டது. படம் அருமை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் போட்டிக்கு என் தேர்வாக 301,302, 303, 307. வரைந்தவர்கள், கைவேலை செய்தவர்கள் அனைவருமே நன்றாக செய்துள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 307 ஐ பார்த்ததும் என் பேத்தி வரைந்தது நினைவுக்கு வருகிறது. அதை நான் அனுப்பாதது அவளுக்கு மிக வருத்தம். அவளின் தேர்வு 317 - ஆம் எண். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி
நீக்குகேள்வி, பதில்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபோட்டிக்கு வந்த மீன் படங்கள் நன்றாக இருக்கிறது.
வரையப்பட்ட மீன்கள், காகித மீன் எல்லாம் நன்றாக இருக்கிறது.
முதல் படமும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்கு