முன்னறிவிப்பு :
அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க.
முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்"
= = = = = = = = = =
சாந்திக்கு ஃபோன் செய்தான் ராஜா. “ சாந்தி உன் தயவால எங்கள் கிரிக்கெட் குழு இந்த ஊர் சாம்பியன்ஸ் ஆகிவிட்டோம். இனிமேல அடுத்த ஊர் சாம்பியன்ஸ் கூட விளையாடவேண்டும். அது கோபியின் ஊரு. அந்த ஊர் பிட்ச் எல்லாம் கோபிக்கு அத்துபடி. அதனால அங்கேயும் எங்க டீம் ஜெயிக்க சான்ஸ் அதிகம் “
“ இரு – இரு! என் தயவாலயா! அப்படி என்ன நான் தயவு செய்தேன்? “
“
அதாவது நீ அடிக்கடி அலைபேசி அழைப்பு விடுத்து, என் மனதை ‘அலை’பாய விடாமல் இருந்ததால் என்னால் ஆட்டத்தில் முழு கவனம்
செலுத்த முடிந்தது. “
“ ஓஹோ அப்படி போகுதா சங்கதி? அப்பிடின்னா
நான் இனிமேலே நீ டிஸ்டிரிக்ட் லெவல் ஐ பி எல் பிளேயர் ஆகும்வரை உனக்கு ஃபோன்
பண்ணாம இருக்கட்டுமா!”
“ அம்மா தாயே – அப்படி எல்லாம் எதுவும்
முடிவு எடுத்துவிடாதே! அப்புறம் இந்த ராஜா வீசுகிற பந்துகளின் வேகம் குறைந்து,
நான் வீசுகிற பந்துகளில், டெய்ல் என்டர் கூட சிக்சர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்!
டெய்லி ஈவினிங் ஒரு தடவையாவது எனக்கு ஃபோன் செய்து, ‘விட்டமின் K டோஸ்’ ஒன்று எனக்குக்
கொடு. அது போதும் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒன்பது விக்கெட் எடுக்க. “
“ என்ன திடீரென்று மெடிக்கல் ஃபீல்ட்ல
இறங்கிட்டே! விட்டமின் பத்தி எல்லாம்
பேசறே! விட்டமின் கே எதுக்கு, அது என்ன செய்யும்? “
“ Meta AI கிட்ட கேட்டுப் பார். “
சற்று நேரம் கழித்து சாந்தியிடமிருந்து
ஃபோன்.
“ விட்டமின் கே பத்தி படிச்சுப்
பார்த்தேன். ஒண்ணும் புரியல!”
“ ஹி ஹி நான் சொன்ன விட்டமின் கே, - வீடியோ
கிஸ் “
“ அட ச் சீ “
= = = = = = = = =
ராஜாவுக்கு கோபியிடமிருந்து ஃபோன். “ டேய் ராஜா ஒரு வாரத்திற்கு உங்க
வீட்டுல லீவு சொல்லிடு. நம்ம குழு தொடர்ந்து ஆட வேண்டியது இருக்கு. “
ராஜா சாந்திக்கு திரும்பவும் போன் செய்தான். “ சாந்தி. நான் திரும்பத் திரும்ப ஃபோன் செய்வது
உனக்கு தொந்தரவாக இல்லைதானே?”
“ கோபம்தான் வருது”
“ கோபமா! ஏன் கோபம்? “
“ தொந்தரவா இருக்குதா என்று கேட்கிறாயே – அதனால்தான்!. நான் ஃபோன்
செய்வது உனக்கு எப்பவாவது தொந்தரவா இருந்ததா? “
“ இல்லை – ஒவ்வொரு தடவையும் என் ஃபோன்ல ‘D சாந்தி காலிங்’ என்று பார்க்கும்போது மனசு றெக்கை கட்டிப் பறக்கும் –
வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா என்று தோன்றும்”
“ நான் A சாந்திதானே! D சாந்தி என்றால் என்ன?”
“ டார்லிங் சாந்தி “
“ ஆஹா! கல்யாணத்திற்குப் பிறகும் D சாந்தி என்று போனில் அப்படியே வைத்திருப்பாயா ? “
“ நிச்சயமா. அப்படித்தான் வைத்திருப்பேன். “
“ அப்போவும் நான் டார்லிங்கா இருப்பேனா! “
“ D அப்படியே
இருக்கும் டீ ஆனா “
“ ஆனா ? “
“ அந்த D க்கு வேற
விளக்கம்”
“ அது என்ன?”
“ டெவில் “
“ டேய் இருடா – உன்னுடைய பாஸ் புக்ல உனக்கு ஒரு A+ போட்டுட்டு வரேன். “
“ எதுக்கு A+ அவ்வளவு மார்க்கா
? “
“ அடுத்த தடவை பார்க்கும்போது அடி கொடுக்கணும் – அதுக்குத்தான். சரி
எதுக்கு கால் பண்ணினே அதைச் சொல்லு. “
“ இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டங்கள் இருக்கு. அதனால
உன்னை இன்னும் ஒரு வாரத்திற்குப் பார்க்க முடியாது. நேரம் கிடைக்கும்போது ஃபோன்
செய்கிறேன். பை “
= = = = = = = =
ராஜா, தன்னுடைய வீட்டில், “ அப்பா நான் ஒரு வாரத்திற்கு வெளியூர் டூர். தொடர்ந்து கிரிக்கெட் போட்டி இருக்கு. கடையை நீங்களும், மாப்பிள்ளை சாரும் பார்த்துக்குங்க. ரொம்ப முக்கியமான செய்தி எதுவும் இருந்தால், எனக்கு ஃபோனில் செய்தி அனுப்புங்க” என்று சொன்னான்.
மாப்பிள்ளை சாரிடமும், தானும்,
அப்பாவும் இல்லாத நேரத்தில் கடை நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டான்.
மாப்பிள்ளை, “ என்ன தம்பி உங்க கூட சாந்தியும் வராங்களா” என்று கேட்டார்.
“ சாந்தியா! சரியா போச்சு போங்க. நான் போறது கிரிக்கெட் போட்டிகள்
விளையாட. சாந்தியை என்னோடு வர கூப்பிட்டேன் என்றால், அழகர் மாமா என் முதுகில டின்
கட்டிடுவார்”
மாப்பிள்ளை வாய்விட்டு சிரித்தார்.
= = = = = = = = = =
தொடர்ந்து ஒரு வாரம் நாக் அவுட் போட்டிகள் நான்கைந்து ஊர்களில் என்பது திட்டம்.
கோபியின் ஊர் குழுவோடு போட்டியில் ஜெயித்தாகிவிட்டது.
வழக்கம்போல் ராஜாவின் ஃபோன் அவுட் ஆஃப் ரீச். ஆனாலும் அவ்வப்போது ராஜா
சாந்திக்கு செய்தி அனுப்பியபடி இருந்தான்.
சாந்தியிடமிருந்து, உடனடியாக வாழ்த்து செய்திகள் வரும்.
நாக் அவுட் போட்டிகளில் ஜெயித்தவுடன் சாந்திக்கு ஃபோன் செய்தான்
ராஜா.
“ சாந்தி நாக் அவுட் போட்டிகளில் எல்லாம் ஜெயித்துவிட்டோம். இனி
டிஸ்டிரிக்ட் லெவல் போட்டி மட்டும்தான். அதில் எல்லா அணிகளையும் ஜெயித்துவிட்டோம்
என்றால், நாங்கள்தான் ஸ்டேட் சாம்பியன்ஸ். “
டிஸ்டிரிக்ட் லெவல் போட்டி, மாவட்ட தலைநகரில்!
அந்தப் போட்டியைக் காண வந்தவர்களில் முக்கியமான ஆள் மஞ்சு. கோபியின்
தங்கை.
“ ஹாய் மஞ்சு! வாட் அ சர்ப்ரைஸ்! இங்கே எங்கே வந்தே?” என்று கேட்டான்
கோபி.
“ பிசினஸ் விசிட்தான். ஒரு விளம்பரப் படம் எடுக்க தீம் தேவைப்படுது. அது
பற்றி யோசிக்க வந்தேன். “
தன் தங்கை மஞ்சுவை ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் கோபி.
மஞ்சு, ஜீன்ஸ் டீஷர்ட்டில் சிக் என்று கண்ணைக் கவர்ந்தாள்.
“ ராஜா மீட் மை சிஸ்டர் மஞ்சு. Arts
& Ads கம்பெனியின் பிசினஸ் பார்ட்னர் &
மாடல் “
“ வாவ் ! ப்யூடிஃபுல்! பிளீஸுடு டு மீட் யு! “ மஞ்சுவுடன் கை குலுக்கினான்
ராஜா. தன்னையும் மஞ்சுவுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டான்.
டிஸ்டிரிக்ட் லெவல் போட்டியில் ராஜா கோபி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
வெற்றியைக் கொண்டாட ஹோட்டலுக்கு சென்றார்கள் மூவரும்.
முதலில் என்ன ஆர்டர் செய்யலாம்? என்று கோபி ராஜாவிடம் கேட்டான்.
ராஜா சற்று யோசித்து, ' கோபி
மஞ்சூரியன் ' என்று சொன்னான். மூவரும் சிரித்தார்கள்.
மஞ்சு சர்வரிடம் "இடியாப்பம், பாயா இருக்கிறதா?" என்று கேட்டாள்.
சர்வர் பதில் சொல்லும் முன் கோபி குறிக்கிட்டான். "மஞ்சு நாம் இருப்பது பக்கா வெஜ் ஹோட்டல்"
அவனை லட்சியம் செய்யாத மஞ்சு "இறா தொக்கு, பரோட்டா வித் சுக்கா இருக்கா?"
சர்வர் "கொத்து இடியாப்பம் இருக்கு மேடம்" என்றார். சற்று வயதானவர்.
இப்போது கோபிக்கும் ராஜாவுக்கும் சந்தேகம் வந்துவிட, "மஞ்சு இது..."
"கட்டாயம் வெஜ் ஹோட்டல்தான். பயப்படாதீங்க.. இப்பல்லாம் வெஜ் சாப்பிடறவங்களுக்கும் இப்படி ஆசை வந்தடுதுதுன்னோ, நான் வெஜ் சாப்பிடறவங்களையும் இந்த ஹோட்டல்களுக்கு இழுக்கவோ இப்படி எல்லாம் சோயாவெல்லாம் சேர்த்து வெஜ்லேயே செய்யறாங்க.. என் பிரெண்டு ஸ்ரீராம்னு ஒருத்தர், பிளாக்கர், இதைப் பற்றியெல்லாம் படங்களோடு போட்டு நாக்குல நயாகரா உண்டு பண்ணியிருக்கார்"
சர்வர் கொண்டு வந்து வைத்த தட்டைப் பார்த்தவண்ணம் ராஜா கேட்டான்.
"ஓ.. அவங்களுக்கும் ஏதாவது விளம்பரப்படம் பண்ணி இருக்கீங்களா?"
"இல்ல.. அவங்க அதைப் பத்தியெல்லாம் கேட்கல..."
“ மஞ்சு – உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா? “
“ அதுக்கு முன்னாடி, நான் உங்க கிட்ட
ஒண்ணு கேட்கிறேன் – என் அண்ணாவை எப்படி கூப்பிடுகிறீர்கள்? “
“ டேய் கோபி – வாடா போடா .. இப்படித்தான்
“
“ அவனுடைய தங்கைக்கு மட்டும் என்ன
மரியாதை?”
“ அதானே! அப்போ ‘அடியே மஞ்சூ வாடீ .. போடீ
..’ என்று சொல்லட்டுமா ! “
“ இது ரொம்ப ஓவர் – ‘மஞ்சு, நீ, வா , போ’ .. அது போதும். “
“ சரி. “
“ இப்போ கேட்கவேண்டியத்தைக் கேட்கலாம். “
“ எங்கள் செல்வ மீனா டெக்ஸ்டைல்ஸ்
நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப் படம் நீங்க – அதாவது உங்க கம்பெனி எடுத்துக்
கொடுக்கவேண்டும். “
“ ஜமாய்ச்சுடுவோம். பட்ஜெட் எவ்வளவு என்று
தீர்மானிச்சுட்டீங்களா? “
“ அதெல்லாம் பேசி முடிவு செய்து,
ஒப்பந்தம் போட்டுடலாம். “
“ சரி. எங்க பிசினஸ் டீம், சேல்ஸ் டீம்
எல்லாத்துடனும் வந்து உங்களை சந்திக்கிறோம். செல்வமீனா டெக்ஸ்டைல்ஸ்ல நாளைக்கு உங்களையும்
உங்க அப்பாவையும் வந்து பார்த்துப் பேசுகிறோம். இந்த விளம்பரப் படம் பற்றி, உங்கள்
அப்பா அம்மா தவிர வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள். காரணம் பிறகு விவரமாக
சொல்கிறேன். “
· * * *
ஊருக்குத் திரும்பிய பின், மஞ்சு கேட்டுக் கொண்டதால், ராஜா,
விளம்பரப்படம் தயாரிப்பு ஏற்பாடுகள் பற்றி சாந்தி உட்பட யாருக்கும்
தெரிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்? தான் ஊருக்குத் திரும்பி வந்ததைக் கூட சாந்திக்கு
தெரியப்படுத்தவில்லை ராஜா. தெரிந்தால், உடனே செல்வ மீனா கடை மாடிக்கு
வந்துவிடுவாளோ என்ற பயம்தான் காரணம். மஞ்சு விளம்பரக் கம்பெனி மீட்டிங் முடிந்த
பிறகு, சாந்தியை கடை மாடி சந்திப்புக்கு அழைக்கலாம் என்று நினைத்தான் ராஜா.
*** *****
மறுநாள் மாலை நேரத்தில், Arts & Ads கம்பெனியின் வர்த்தக
பிரிவிலிருந்து இரண்டு பேர், விற்பனைப் பிரிவிலிருந்து இரண்டு பேர் மற்றும்
தன்னுடைய உதவியாளர் கீதா ஆகியோருடன் செல்வமீனாவுக்கு வந்து சேர்ந்தாள் மஞ்சு.
ராஜாவும் செல்வமும் அவர்களை வரவேற்று,
மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.
மாப்பிள்ளை சாரிடம், ராஜா “ சார் என்னுடைய
மொபைல் போனை உங்களிடம் விட்டுட்டு மேலே போகிறேன். யார் வந்தாலும், நான் எங்கே
இருக்கிறேன், என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்பதை சொல்லாதீர்கள். மாடிக்கு
யாரையும் அனுப்பாதீர்கள். முக்கியமானவர்கள் யாராவது கேட்டால், கடை ஆடிட் மீட்டிங்
நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் யாருக்கும் அனுமதி கிடையாது என்று
சொல்லிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
வந்தவர்களுக்கு கடை வாசலில் உள்ள அல்வா
கடையிலிருந்து சூடான அல்வா, கடைவீதியில் இருந்த மணிராம் சேட் கடையிலிருந்து
ஸ்பெஷல் மிக்சர், ஃபில்டர் காபி என்று ஸ்வீட் காரம் காபி உபசாரம் நடந்தது.
வந்திருந்த குழுவினர், என்ன மாதிரியான
விளம்பரப் படம், எவ்வளவு நேரம் ஓட வேண்டும், எந்த வகை வாடிக்கையாளரைக்
கவரவேண்டும், எந்தெந்த ஊர்களில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்படும் என்பது போன்ற
விவரங்களைக் கேட்டு அதற்கான படிவங்களில் பதிந்துகொண்டார்கள்.
ஒப்பந்தம் தயாரானது. மஞ்சுவின் உதவியாளர்
கீதா தான் கொண்டுவந்திருந்த மடிக் கணினியில் தட்டச்சு செய்து, கொண்டு வந்திருந்த
பிரிண்டர் மூலம் இரண்டு நகல்கள் எடுத்தார். இரண்டிலும் இரண்டு பக்க ஆட்களும்
கையெழுத்து போட்டனர். இரண்டு தரப்பினரும் ஆளுக்கு ஒரு ஒப்பந்தம் வைத்துக்கொண்டனர்.
ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான நிபந்தனை:
' விளம்பரப் படம் எடுத்து முடிக்கும் வரை அதைப் பற்றிய தகவல் எதையும் எந்த
மூன்றாம் நபருக்கும் ஒப்பந்ததாரர் தெரிவிக்கக் கூடாது. விளம்பரப் படம் லான்ச்
செய்வதற்கு இரண்டு வாரம் முன்பு rush ப்ரிவியூவின் போது நெருங்கிய சொந்தங்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும்
மட்டும் சொல்லலாம்’
கடை போட்டியாளர்கள் மற்றும் போட்டி விளம்பரக் கம்பெனிகளுக்கு விஷயம்
தெரிந்தால் அவர்கள் இந்தக் கம்பெனி விளம்பர யுக்தியைக் காப்பி அடித்துவிடக் கூடும்
என்பதால் இந்த ஏற்பாடு.
* * * * *
அழகர் வீட்டு மாடியில் கோபி திரும்ப வந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன.
சாந்தி அதை கவனித்தாள். ‘அப்போ ராஜாவும் திரும்ப வந்திருக்க வேண்டுமே? ‘ என்று
நினைத்தாள் சாந்தி. ‘ ஏன் ராஜா இது பற்றி ஒன்றும் செய்தி அனுப்பவில்லை? கோபியிடம்
கேட்போமா?’ என்று ஒரு நொடி யோசித்தாள் சாந்தி. ஆனால் ஆரம்பம் முதலே கோபி மீது ஒரு
நல்ல அபிப்பிராயம் கிடையாது சாந்திக்கு. ‘சரியான அசடு; சரியான வழிச்சல் பேர்வழி’
என்ற அபிப்பிராயம்தான் அவளுக்கு கோபி பற்றி இருந்தது.
‘ சரி ஒன்று செய்வோம். இன்றைக்கு சாயந்திரம் செல்வ மீனாவுக்கு ஒரு
சர்ப்ரைஸ் விசிட் செய்து, ராஜாவை திகைக்க வைப்போம் ‘ என்று முடிவெடுத்தாள் சாந்தி.
= = = = = = =
மாடியில் ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது செல்வ
மீனாவுக்கு வந்து சேர்ந்தாள் சாந்தி.
மாடிப்படி நோக்கி சென்றவளை தடுத்து நிறுத்தியது, மாப்பிள்ளை சாரின்
குரல். “ சாந்திம்மா – எங்கே இந்தப் பக்கம்? “
“ ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று வந்தேன். மாடியிலதானே
இருக்கார்? “
“ அம்மா – தப்பா நெனச்சுக்காதே – மாடியில் ஆடிட் மீட்டிங் நடந்துகிட்டு
இருக்கு. எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. நீ நாளைக்கு வாயேன்!”
சாந்திக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
“ சார் – நான் அவருக்கு ஃபோன் பண்ணட்டுமா? “
“ இல்லை அம்மா ராஜாவின் ஃபோன் என்கிட்டதான் இருக்கு. ராஜா சொல்லச்
சொன்னதைத்தான் நான் சொன்னேன். “
கோபத்துடன் விருட்டென வெளியே நடந்தாள் சாந்தி.
= = = = = = = = =
மாலையில் சாந்தி ஆர்வத்துடன் வெளியில் சென்றதையும், சற்று நேரத்தில் கோபமாக திரும்பி வந்து, வாசல்
கேட்டை சத்தமாக மூடியதையும் பார்த்தான் கோபி. நடந்தது என்னவாக இருக்கும் என்பதை
யூகித்தான் கோபி. மஞ்சு செல்வ மீனா விளம்பர ஒப்பந்தத்திற்காக ஊருக்கு
வந்திருக்கிறாள் என்பது கோபிக்குத் தெரியும். அப்படி குழுவினருடன் வரும்பொழுது
அந்தக் குழுவினர்களோடுதான் அவள் தங்குவாள். மஞ்சு கம்பெனி வியாபாரம் சம்பந்தமாக
மீட்டிங்கில் இருக்கும்போது, தன்னுடைய மொபைல் போனை ஆஃப் செய்து வைத்திருப்பாள்
என்பதும் அவனுக்குத் தெரியும்.
உடனே அவனுடைய குயுக்தி மூளை செயல்பட்டது.
மாடிப்படியில் இறங்கி வந்துகொண்டே, சத்தமாக “ ஹாய் மஞ்சு! எப்படி இருக்கே
? பக்கத்துல ராஜா இருக்கானா? அவன் கிட்ட போனைக் கொடு” என்றான்.
வீட்டின் உள்ளே செல்லவிருந்த சாந்தி திடுக்கிட்டு நின்றாள். அதை ஓரக்
கண்ணால் கவனித்தபடியே கோபி, “ டேய் ராஜா! நீ சொல்லலைனா எனக்குத் தெரியாதா? நீ
மஞ்சு கூடத்தான் இருப்பேனு எனக்குத் தெரியும். எல்லாம் எப்பிடி போய்க்கிட்டு
இருக்கு?“ என்று சொல்லிக்கொண்டே கேட்டைத் திறந்துகொண்டு வெளியே சென்றான் கோபி.
சாந்திக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஃபோனை கட் செய்து மேஜை மேல் எறிந்தாள். ‘ ஓஹோ இதைத்தான் போன வாரம், ஒரு
சூப்பர் ஃபிகர் கூட சுற்றுவதாக சொன்னானா ராஜா? சமீபத்தில் நடந்த அவளுக்குத் தெரிந்த விஷயங்களை யோசிக்க யோசிக்க அவளுக்கு அழுகை
வந்தது.
வேறெதுவும் செய்யத்தோன்றாமல் நைட்டிக்கு மாறி கட்டிலுக்குச் சென்றவள் தலையணையை இறுக்கக்கட்டிக் கொண்டு கொஞ்சம் கண்ணீர் விட்டபடி யோசித்துக் கொண்டிருந்தாள். யோசனைகள் எங்கெங்கோ ஓடின. ஏதேதோ கணக்குப் போட்டன. அப்படியே உறங்கிப்போனாள்.
= = = = = = = = =
ஒப்பந்த மீட்டிங் முடிந்த பிறகு, வந்திருந்த குழுவினரை அனுப்பி
வைத்துவிட்டு, தன்னுடைய மொபைல் போனை, மாப்பிள்ளை சாரிடம் வாங்கிக் கொள்ள வந்தான்
ராஜா.
மாப்பிள்ளை, அவனிடம் “ தம்பீ மீட்டிங் நடந்துகிட்டு இருக்கும்போது
சாந்திம்மா வந்தாங்க. அவங்க கிட்ட மாடியில ஆடிட் மீட்டிங் நடக்குது, இப்போ
ராஜாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம், நாளைக்கு வாம்மான்னு சொன்னேன். அவங்க கோபமா
திரும்பிப் போயிட்டாங்க” என்று சொன்னார்.
‘கோபமா! என்ன கோபம்? ஏன் கோபம்?’ ராஜாவுக்குக் குழப்பமாக இருந்தது.
(தொடரும்)
= = = = = = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமுந்தைய பகுதிகள் படிக்கவில்லை என்பதால் கதைப்போக்கு குறித்து தெரியவில்லை. நேரம் எடுத்து படிக்க வேண்டும்..
முன்னறிவிப்பு :
நீக்குஅப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க.
இப்போது தான் முந்தைய பகுதிகள் அனைத்தும் படித்தேன்.
நீக்குவாங்க வெங்கட்.. தொடர்கதையின் விட்டுப்போன பதிவுகளைப் படிக்க பொறுமை இருக்கிறதா?!!
நீக்கு// இப்போது தான் முந்தைய பகுதிகள் அனைத்தும் படித்தேன். //
நீக்குஅடடே...
இன்றைக்கு கதைப் பகுதி நிறைய. கதை வேகமாகச் செல்ல ஆரம்பித்திருக்கிறது.
பதிலளிநீக்குஇன்னொரு பெண்ணின் படத்தைப் போடலாம் என நினைத்து புதிய கேரக்டர் கதையில் வந்திருக்காது.
வாங்க நெல்லை... இரண்டாவது வரி புரியவில்லை!
நீக்குசாந்தி படத்துக்காக ஏஐ ஐ நாடி வேறு முகம் கொண்ட பெண் படம் வந்ததால் மஞ்சு கேரக்டர் வந்ததா?
நீக்குஸ்கை இதற்கு விளக்கம் கொடுப்பாரா என்று தெரியவில்லை. பார்ப்போம்.
நீக்குஅய்யா ஸ்கை -- இந்தக் கருத்தை கவனிக்கவும். முடிந்தால் அடுத்த வாரம் தமன்னா படம் சேர்த்து ஒரு புதிய கேரக்டர் கதையில் கொண்டு வரவும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை ஸ்வாரஸ்யமாக செல்கிறது. ராஜா வாழ்வில், தீடிரென ஒரு மஞ்சு வந்து இப்படி சேர்ந்து ஹோட்டலுக்கெல்லாம் சென்று கோபி மஞ்சூரியன் சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகி விட்டானே என்ற கவலை எனக்கே வரும் போது, சாந்திக்கு வராதா?
சாந்தியுடன் இக்காலத்திற்கேற்ப இவ்வளவு பொடி வைத்தும், தமாஷாகவும் பேசும் ராஜா, சாந்தி தன் வீட்டு மாடியில் குடியிருக்கும், கோபியை அவள் பார்த்து விட்டால், அடுத்து தன்னைத்தான் தேடி வருவாளென அறிய மாட்டானா? சாந்தியின் சந்தேகச் செடிக்கு நீர் ஊற்றுவது போல, அவளை ஏன் தவிர்க்க வேண்டும்.?அவளிடம் மட்டுமாவது மஞ்சுவைப் பற்றி சொல்லியிருக்கலாம் இல்லையா? (ஆனாலும், வீண் சந்தேகம் கொள்ளாமல், கதையின் கடைசி வார்த்தைகளை நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.:)) ) இந்த கருத்துக்களைப் படிக்கும் கதாசிரியர் ஸ்கை வானத்தில் மேகங்களுக்கிடையே ஒளிந்து நின்று கொண்டு நமுட்டு சிரிப்பாக சிரிப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது.:))))
பார்க்கலாம் அடுத்த செவ்வாய்க்குள் ராஜா தன் செவ்வாயை திறந்து சாந்தியை சாந்தமுறச் செய்கிறானா என்று...! கற்பனைப் பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ராஜா சாந்தியை தவிர்க்க நினைப்பதாக அவர் குறிப்பிடவில்லையே... தொந்தரவு இல்லாமல் சந்திப்பு நிகழ யோசித்திருக்கிறான் என்பதாகத்தான் ஸ்கை சொல்கிறார்... நான் சரியா, கமலா அக்கா சரியா என்று ஸ்கைதான் சொல்லவேண்டும்!
நீக்குஅக்கா, நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் அவர் வரிகளில் சொல்லிவிட்டார்!
நீக்குஇதில் சந்தேகமே இல்லை கமலாக்கா. ராஜா க்ளியராகத்தானே இருக்கிறான். சாந்திக்கும் இது காதலில் இருக்கும் நார்மலான பெண்களுக்கு வரும் சந்தேகம். மஞ்சுவின் கதாபாத்திரம் உள்ள வந்தால்தானே தொடர்கதையில் கொஞ்சம் பகுதிகள் சேர்த்து சுவாரசியம் கூட்ட முடியும் என்று ஸ்கைக்குள் இருக்கும் கௌ அண்ணா நினைத்திருக்கலாம்!!!!!!!
கீதா
நான் கேட்க நினைத்து மறக்கும் ஒன்று....இங்கு இருக்கறவங்கள்ல, எனக்குத் தெரிந்து நம்ம ஸ்ரீராம் தான் தான் விரும்பிய பெண்ணை மணந்தவர். பாஸுக்கு இப்படிச் சந்தேகம் எல்லாம் வந்ததா என்று ஸ்ரீராமிடம் கேட்க நினைத்து விட்டுப் போச்சு.
நீக்குஇப்படி ஏதாச்சும் சின்னதா வந்துச்சா ஸ்ரீராம்?!!!!!!
கீதா
அப்போ வந்தது. விபரீதமா ஒன்று நடந்தது. அப்புறம் பெரிதாக எதுவுமில்லை. வார்த்தைகளில் மட்டும் குத்துப்படுவேன்.
நீக்குகீதா, அதெல்லாம் பரமரகசியம், இல்லைனா, எதுக்கு கீதா பழைய கதை? என்று அல்லது அப்படி எல்லாம் சந்தெகத்துக்கு இடமே நான் கொடுத்ததில்லை நான் ரொம்ப நல்ல பையன், நான் என்ன ராஜா வா!!!!! என்று ஸ்ரீராம் சொன்னாலும் சொல்லலாம்!!
நீக்குகீதா
ஆஅ! சொல்லிட்டீங்களா!!!! ஸ்ரீராம். நான் கருத்து அடிச்சு அனுப்பறதுக்குள்ள உங்க கருத்து டாண்!
நீக்குஓஹோ!!!!
கீதா
அவசரப்பட்டு உளறிட்டேனோ....
நீக்கு// மஞ்சுவின் கதாபாத்திரம் உள்ள வந்தால்தானே தொடர்கதையில் கொஞ்சம் பகுதிகள் சேர்த்து சுவாரசியம் கூட்ட முடியும் என்று ஸ்கைக்குள் இருக்கும் கௌ அண்ணா நினைத்திருக்கலாம்!!!!!!!// ஹலோ என்ன இது! நான் பாட்டுக்க செவனேன்னு இருக்கேன் - எதுக்கு இந்த கொலை வெறி கும்மாளம்!!
நீக்குஹாஹாஹாஹா இதுக்குத்தானே இப்படி எல்லாம் கமென்ட் போடுறேன், கௌ அண்ணா!!!!!
நீக்குகீதா
ஸ்ரீராம், சிரித்துவிட்டேன்!! சரி சரி பாஸ்கிட்ட கேட்டுக்க மாட்டேன்!
நீக்குகீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா... முருகா..
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
சரணம் முருகா !!
நீக்குமுதல் வாரத்தில் இலகுவாக இருந்தது கதை..
பதிலளிநீக்குஅப்ப இப்ப?
நீக்குஆஹா சரிதான், கோபியின் வில்லத்தனம் தொடங்கிவிட்டது!
பதிலளிநீக்குசாந்தி இந்த விஷயத்தில் சராசரிப் பெண் என்று கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது!
இந்த ஊடல் கொஞ்சம் தொடரும் என்று நினைக்கிறேன். பார்ப்போம் எப்படி ராஜா சமாளிக்கிறான், சாந்தியின் வருத்தம் கோபம் தணிகிறது என்று!
கீதா
கோபி வில்லனாகத் தொடர்வானா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. மஞ்சு அவன் தங்கை. பெயர் கெட்டு விடாதா?
நீக்குஅப்புறம் ஒரு விஷயம்... சாந்தியை விட மஞ்சு அழகா இருப்பது போல தோன்றுகிறது! ஹிஹிஹி... சமயங்களில் இப்படிதான் அவசரப்பட்டு ஒன்று வாங்கி விட்டு அப்புறம் அடுத்து வருவது நல்லாயிருக்கேன்னு ஏங்குவோம்! மனுஷ சுபாவம்.
பெயர் கூட! சாந்தி பழைய பஞ்சாங்க பெயர். மஞ்சு மாடர்னா இருக்கு!
// "கட்டாயம் வெஜ் ஹோட்டல்தான். பயப்படாதீங்க.. இப்பல்லாம் வெஜ் சாப்பிடறவங்களுக்கும் இப்படி ஆசை வந்தடுதுதுன்னோ, நான் வெஜ் சாப்பிடறவங்களையும் இந்த ஹோட்டல்களுக்கு இழுக்கவோ இப்படி எல்லாம் சோயாவெல்லாம் சேர்த்து வெஜ்லேயே செய்யறாங்க.. என் பிரெண்டு ஸ்ரீராம்னு ஒருத்தர், பிளாக்கர், இதைப் பற்றியெல்லாம் படங்களோடு போட்டு நாக்குல நயாகரா உண்டு பண்ணியிருக்கார்"// மஞ்சுவின் பிரெண்டு என்றால் இப்படி எல்லாம் எங்க அபிமான சாந்தியை கிண்டல் செய்வதா! toooooo bad!
நீக்குஸ்ரீராம், கண்டிப்பா தொடரப் போவதில்லை அது உறுதி!
நீக்குஸ்ரீராம் உங்களுக்கு மஞ்சு பிடிச்சிருச்சுன்னு சொல்லுங்க!
ராஜா கிளியராதான் இருக்கான் அப்புறம் என்ன!! ராஜாக்குத்தானே அது பழைய பஞ்சாங்கபெயரா இல்லை மஞ்சு மாடர்ன் பெயரான்னு எல்லாம் தோன்ற வேண்டும்! நமக்கென்ன!!
என்ன சொல்றீங்க கௌ அண்ணா?
கீதா
கண்டிப்பா பாஸ்கிட்ட போவாது, ஸ்ரீராம்!! ஒரு வேளை அனுஷ்காவைத்தான் மஞ்சுன்னு சொல்லிருக்கிறாரோ!!? அதாவது இக்கதையில் அனுஷ் மஞ்சு கதாபாத்திரத்தில்?????!!!
நீக்குகீதா
ஸ்ரீராம்.. சரியான பாயின்டைப் பிடிச்சிட்டீங்க. கத்தரி ஒரு கடைல வாங்கினப்பறம் இன்னும் ஃப்ரெஷ்ஷா விலை மலிவா கொஞ்சம் தள்ளி பார்க்க நேருகிறபோது ஏற்படும் ஏமாற்றம் ராஜா படத்தைப் பார்த்தால்தானே யார் அவனுக்கு வொர்த் என அனுமானிக்கமுடியும்
நீக்குஅது பொருள்!!!! ஓ அப்ப காதலிலும் வரும்னு சொல்றீங்க.
நீக்குஎனக்கு இக்கதையில் அப்படித் தோணலை.
ஆனா சொல்ல முடியாது, இந்தக் கருத்தெல்லாம் பார்த்து அடுத்த வாரக் கதைய மாத்தினாலும் மாத்திடுவாங்க!! அதான் அந்த ஸ்கை எழுத்தாளர்கள்!!!!
கீதா
“ Meta AI கிட்ட கேட்டுப் பார். “
பதிலளிநீக்குசற்று நேரம் கழித்து சாந்தியிடமிருந்து ஃபோன்.
“ விட்டமின் கே பத்தி படிச்சுப் பார்த்தேன். ஒண்ணும் புரியல!”
“ ஹி ஹி நான் சொன்ன விட்டமின் கே, - வீடியோ கிஸ் “
“ அட ச் சீ “//
ஹாஹாஹா....கௌ அண்ணா உங்களுக்குக் கேஜிஜியைத் தெரியுமோ? குரோம்பேட்டைக் குறும்பனைத் தெரியுமோ!!!!!!! அவருடைய நடை உங்களுக்குத் தெரியாமலா போகும்!!?
கீதா
// வீடியோ கிஸ் //
நீக்குநான் "விடாம கிஸ்" னு நினச்சேன்!
அடப் பாவிகளா! யாரோ எழுதிய வசனத்துக்கு என் காலை வாருகிறீர்களே!
நீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்!!! நானும் நினைத்தேன் அதுவும் நீங்க ஒரு கவிதை பகிர்ந்திருந்திருந்தீங்களே!!!! முத்த டே என்று விடாமல்.....தருவதாக!!!
நீக்குஅது ஏன் கோட் பண்ணலையோ!!! ஓ ராஜாக்கு ஸ்ரீராமைத் தெரியாதே!! மஞ்சுக்குமட்டும்தானே தெரியும்.
கீதா
ஸ்ரீராம் வருகிறார், கீதா (சரி இது வேறு யாரோன்னு சொல்லிடுவீங்க தெரியும்!!) வரா.....ம்ம்ம்ம்ம் நடத்துங்க!
பதிலளிநீக்குகீதா
எனக்கே ஆச்சரியமா இருக்கு.. மஞ்சு என் ப்ரெண்டான்னு த்ரில்லாயிட்டேன். (பாஸ் கிட்ட சொல்லிடாதீங்க..) ஒருவேளை ஸைலண்ட் ஃபாலோயரோ?
நீக்குதெரிஞ்சுருச்சு இதுக்காக அடிச்ச கமென்ட் மேலே போயிடுச்சு.
நீக்குகீதா
ஒன்றே ஒன்று, போன வாரத்தின் தொடர்ச்சி சரியாக லிங்க் ஆகவில்லையோ என்று தோன்றியது.
பதிலளிநீக்குசாந்திக்கு டவுட் வருதே. தான் சொன்ன பரிந்துரை ராஜாவுக்குப் பிடிக்கலையோ என்று? அதைப் பத்தி சாந்தி ராஜாவிடம் கேட்கலையா? திரும்ப டக்குனு ராஜா ஃபோன் செய்யும் போது சாந்தி எடுத்து சாதாரணமாகப் பேசுகிறாளே. அந்த டவுட் ?
ஹிஹிஹிஹி....
கீதா
சில விஷயங்களை கேட்க முடியாமல் மனசோட போயிடும். அந்த வகையா இருக்கலாம்னு தோணுது. அப்புறம் தானா க்ளியராயிடுவாங்க...
நீக்குஅது சரி!! அனுபவஸ்தர் சொல்றப்ப நாங்க யாருப்பா குறுக்கே!!!!ஹாஹாஹா
நீக்குகீதா